12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 30/09/2019
தாவரவியல் - சுற்றுச்சூழல் பிரச்சனைகள்
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
புவியியல் சார் தகவல் அமைப்பின் நோக்கம் யாது?
2.
வேளாண் பறக்கும் இயந்திரம் (அல்லது) உயிரி கண்காணிப்பின் பயன்கள் யாவை?
3.
வேளாண் பறக்கும் இயந்திரம் என்றால் என்ன?
4.
சமூகத்திற்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டினால் ஏற்படும் பயன்கள் யாவை?
5.
"கார்பன் வழித்தடம்" என்றால் என்ன?
6.
காடழிப்பிற்கான காரணங்கள் யாவை?
7.
வேளாண் காடுகளை சமூகக் காடுகளிலிருந்து வேறுபடுத்துக.
8.
கார்பன் கவரப்படுதல் மற்றும் சேகரித்தல் (CCS) என்றால் என்ன?
9.
வணிக வேளாண் காடு வளர்ப்பு மூலம் வளர்க்கப்படும் நான்கு தாவர எடுத்துக்காட்டுகளைத் தருக.
10.
ஓசோன் துளை என்றால் என்ன?
1.
1. பூமிப்பரப்பின் மீதுள்ள ஒரு பொருளின் நிலையை நிர்ணயிக்க உதவும் செயற்கைக்கோள் வழிகாட்டும் அமைப்பாகும்.
2. புவியின் மீதுள்ள ஓர் அமைவிடத்தை மக்கள் துல்லியமாகக் கண்டுணரப் பயன்படும் சம இடைவெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள பூமி மீது சுற்றி வரும்.
3. நட்சத்திரக் கூட்டம் போன்ற 30 செயற்கைக்கோள் ஒருங்கமைந்த கட்டமைப்பாகும்.
4. எ.கா: சுரங்கம், வான்பயணம், வேளாண் மற்றும் கடல்சார் சூழல் தொகுப்பு.
2.
1. நீர்ப்பாசன பிரச்சனைகள், மண்ணின் மாற்றங்கள், பூச்சி மற்றும் பூஞ்சை தாக்கங்கள் முதலிய தொல்லைகளை கூரிய பார்வையால் தெளிவுபடுத்த உதவுகிறது.
2. பாதுகாப்பான, சிக்கனமான, அபாயங்களற்ற பூச்சி மருந்து, உரங்கள் பயன்படுத்துவதற்கு பயன்படும் எளிய முறையாகும்.
3.
1. பயிர் பெருக்கம் மற்றும் பயிர் வளர்ச்சியைக் கண்காணிக்கும் வேளாண்மைக்கு உதவும் ஒரு ஆளில்லா வானூர்தியாகும்.
2. விவசாயிகள் தங்களது நிலங்களை வானிலிருந்து கண்காணிக்கும் வாய்ப்பினை வழங்குகிறது.
3. நீர்ப்பாசன பிரச்சனைகள், மண்ணின் மாற்றங்கள், பூச்சி மற்றும் பூஞ்சைத் தாக்கங்கள் முதலிய தொல்லைகளை கூரிய பார்வையால் தெளிவுபடுத்த உதவுகிறது.
4. பாதுகாப்பான, சிக்கனமான, அபாயங்களற்ற பூச்சி மருந்து, உரங்கள் பயன்படுத்துவதற்கு பயன்படும் எளிய முறையாகும்.
4.
1. ஒரு ஆரோக்கியமான சுற்றுச்சூழல்
2. உயிர்ப்பன்மத் தொகுப்பினைப் பராமரித்தல்.
3. குறைந்தளவு வளங்கள் பயன்பாடு.
4. குறைந்த அளவு வாயு வெளியேற்றம் மற்றும் குறைந்த அளவு சுற்றுச் சூழல் சேதம். ஆகிய பயன்கள் ஏற்படுகின்றன.
5.
விவசாயம், தொழிற்சாலைகள், காடழிப்பு, கழிவு நீக்கம், தொல்படிவ எரிபொருளை எரித்தல் போன்ற மானுட நடவடிக்கைகள் மூலம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பசுமை இல்ல வாயுப் பொருட்களை மொத்தமாக உருவாக்குதல் கார்பன் வழித்தடம் எனப்படுகிறது.
6.
1. காடுகள் விவசாயத் தோட்டங்கள் மற்றும் கால்நடை வளர்ப்பு நிலங்களாக மாற்றப்படுவதில் ஆகியன முக்கிய காரணமாகும்.
2. மரத்துண்டுகளுக்காக வெட்டப்படுதல்.
7.
| வேளாண் காடுகள் | சமூகக் காடுகள் | |
| 1. | ஒரு நிலப்பகுதியில் காணப்படும் மரங்கள், பயிர்கள் மற்றும் கால்நடைகளின் ஒருங்கிணைப்பாகும். | சமூகக் காடுகள் உள்ளூர் சமூகத்தால் பராமரிக்கப்படுகின்றது. |
| 2. | இதன் முக்கிய நோக்கம் மரங்கள் பயிர்கள், கால்நடைகளின் ஒருங்கிணைப்பாகும். | சமூகக் காடுகளின் நோக்கம் வளிக்கார்பன் சேகரிப்பு மாற்றங்களைக் குறைத்தல், மாசுபாடு நீக்கம், காடழிப்பு, காடுகள் மீட்டெடுப்பு மற்றும் இளைஞர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பு ஆகியவற்றை குறிக்கும். |
8.
1. கார்பன் கவரப்படுதல் மற்றும் சேமிப்பு என்பது வளிமண்டலத்தின் கார்பன் -டை-ஆக்ஸைடை உயிரித்தொழில்நுட்பம் மூலமாக கைப்பற்றி ஒரு கிலோமீட்டர் அல்லது அதற்குக் கீழான ஆழத்தில் நிலத்தடிப் பாறைகளுக்கிடையே உட்செலுத்திச் சேமிக்கும் முறையாகும்.
2. இது புவி வெப்பமாதலை மட்டுப்படுத்தும் ஓர் அணுகு முறையாகும்.
3. கார்பன், பெருங்கடல்களில் திரவச் சேமிப்பாகவும் உலோக ஆக்ஸைடைப் பயன்படுத்தி கார்பன்-டை-ஆக்ஸைடை குறைத்தல் மூலம் திடமான கார்பனேட்டாக மாற்றி உலர் (or) திடச் சேமிப்பாகவும் சேமித்து வைக்கப்படுகிறது.
9.
வணிக ரீதியாக வளர்க்கப்படும் வேளாண் காடுகளில் தாவரச் சிற்றினங்களான கேசுரைனா, யூக்ளிப்டஸ், மலை வேம்பு, தேக்கு, கடம்பு ஆகியவை அடங்கும்.
இவை மரம் சார்ந்த தொழிற்சாலைகளில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
10.
1. சில வகையான வேதிப் பொருட்கள் வளிமண்டலத்தில் வெளியிடப்படும் போது ஓசோன் படலம் தொடர்ந்து பாதிப்பிற்குள்ளாகிறது.
2. குறிப்பாக குளிர்சாதனப் பெட்டியிலிருந்து வெளியேறும் குளோரோஃபுளோரோ கார்பன், ஏரோசால், தொழிற்சாலையில் அழுக்கு நீக்கும் வேதிப்பொருட்கள் போன்றவை பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
3. ஓசோனின் அடர்வு குறைந்த பகுதிகள் அபாயகரமான ஓசோன் துளை என அழைக்கப்படுகின்றன.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards