12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 24/10/2019
செயல்முறைகள் ஆராய்ச்சி
12ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
S1, S2, S3, S4 என்ற நான்கு தொழிற்சாலைகளிலிருந்து D1, D2, D3 என்ற கிடங்களுக்கு அனுப்பப்படும் பொருள்களுக்கான செலவு, அளிப்பு மற்றும் தேவை விவரங்கள் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆரம்பத் தீர்வினை வடமேற்கு மூலை முறையை பயன்படுத்தி காண்க. இந்த தீர்வுக்கான மொத்த செலவையும் காண்க
2.
கொடுக்கப்பட்டுள்ள அணிக்கான உகந்த வியூகத்தை
(i) மீச்சிறுவின் மீப்பெரு மற்றும்
(ii) மீப்பெருவின் மீச்சிறு ஆகியவற்றை பயன்படுத்தி காண்க.
3.
வடமேற்கு மூலை முறையைப் பயன்படுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள போக்குவரத்து கணக்கின் அடிப்படைத் தீர்வைக் காண்க.
இங்கு Oi மற்றும் Dj என்பன i ஆவது ஆதி மற்றும் j ஆவது சேருமிடம் முறையே ஆகும்.
4.
கீழே கொடுக்கப்பட்டுள்ள போக்குவரத்து கணக்கின் ஆரம்பத் தீர்வைக் காண்க.
5.
ஒரு பல்பொருள் அங்காடியின் தலைவரின் கீழ் பணிபுரியும் நான்கு பணியாளர்கள் நான்கு வேலைகளை செய்ய வேண்டும். ஒவ்வொரு பணியாளரும் ஒவ்வொரு வேலையையும் முடிக்கும் வேலைத்திறனில் மாறுபட்டுள்ளனர். ஒவ்வொரு பணியாளரும் ஒவ்வொரு
வேலையையும் முடிக்க ஆகும் நேரம் (மணியில்) கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
மொத்த நேரத்தை குறைக்குமாறு ஒவ்வொரு பணியாளருக்கும் எவ்வாறு பணிகளை ஒதுக்க வேண்டும்.
6.
கீழ்க்கண்ட ஒதுக்கீட்டு கணக்கை தீர்க்க. சிற்றறைகளிலுள்ள மதிப்பானது A, B, C மற்றும் D என்ற வேலைகளை I, II, III, IV என்ற இயந்திரங்களுக்கு ஒதுக்கீடு செய்ய ஆகும் செலவு.
7.
வோகலின் தோராய முறையை பயன்படுத்தி பின்வரும் போக்குவரத்து கணக்கின் ஆரம்ப அடிப்படை சாத்தியமானத் தீர்வை காண்க.
8.
வடமேற்கு மூலை முறையை பயன்படுத்தி பின்வரும் போக்குவரத்து கணக்கின் ஆரம்ப அடிப்படை சாத்தியமானத் தீர்வை காண்க.
9.
வோகலின் தோராய முறையை கொண்டு கீழ்க்கண்ட போக்குவரத்து கணக்கின் அடிப்படை ஆரம்பத் தீர்வை காண்க.
10.
கீழே கொடுக்கப்பட்டுள்ள அளித்தல் கட்டுப்பாடு அணி
மீப்பெருவின் மீச்சிறு விதிப்படி சிறந்த மாற்று நடவடிக்கையை காண்க
11.
ஒரு வியாபாரி மூன்று மாற்று நடவடிக்கைகளைத் தேர்வு செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு மாற்று நடவடிக்கைக்கும் இயலக் கூடிய நான்கு நிகழ்வுகள் உள்ளன. ஒவ்வொரு செயல்-நிகழ்வு சேர்கைக்கான நிபந்தனை பங்களிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வியாபாரி மீச்சிறுவின் மீப்பெரு கோட்பாட்டினை பின்பற்றுகிறார் எனில் அவர் எந்த மாற்று நடவடிக்கையை தேர்ந்தெடுக்கிறார் என்பதை கண்டுபிடிக்கவும்.
12.
ஒதுக்கீடு கணக்கிற்கும், போக்குவரத்து கணக்கிற்கும் இடையேயான வேறுபாடு என்ன ?
13.
ஒதுக்கீடு கணக்கு என்றால் என்ன?
14.
சமநிலை போக்குவரத்து கணக்கு என்பதன் பொருள் யாது?
15.
போக்குவரத்து கணக்கின் ஏற்புடையத் தீர்வு மற்றும் சிதைவற்ற தீர்வு என்றால் என்ன?
16.
போக்குவரத்து கணக்குகள் என்றால் என்ன?
17.
சூழ்நிலைகளில் தீர்மானம் மேற்கொள்வதின் வகை____.
நிச்சயமான
நிச்சயமற்ற
இடர்பாடு
மேலே கூறிய அனைத்தும்
18.
தீர்மான கோட்பாடு எதனோடு தொடர்புடையது
கிடைக்கக்கூடிய தகவல்களின் அளவு
நம்பகத்தன்மை கொண்ட தீர்மானத்தை அளவீடு செய்வது
வரிசைத் தொடர் பிரச்சினைகளுக்கு உகந்த தீர்மானங்களை தேர்ந்தெடுப்பது
மேற்கூறிய அனைத்தும்
19.
மூன்று வேலைகள் மற்றும் நான்கு வேலையாட்கள் உள்ளடக்கிய ஒதுக்கீட்டு கணக்கில் சாத்தியமான ஒதுக்கீடுகளின் எண்ணிக்கை _____.
4
3
7
12
20.
ஒரு ஒதுக்கீடு கணக்கின் தீர்வானது உகந்த தீர்வாக இருக்க _____.
ஒவ்வொரு நிரை மற்றும் நிரலில் ஒதுக்கீடு இல்லை
ஒவ்வொரு நிரை மற்றும் நிரலானது ஒன்றுக்கு மேற்பட்ட ஒதுக்கீடு
ஒவ்வொரு நிரை மற்றும் நிரலானது ஒன்றுக்கு குறைவான ஒதுக்கீடு
ஒவ்வொரு நிரை மற்றும் நிரலில் ஒரே ஒரு ஒதுக்கீடு
21.
ஒதுக்கீட்டு கணக்கில் தீர்மான மாறி xij-ன் மதிப்பு _______.
1
0
1 அல்லது 0
மேற்கூறிய எதுவுமில்லை
22.
23.
வடமேற்கு மூலை என்பதனைக் குறிப்பது _______.
மேல் இடது மூலை
மேல் வலது மூலை
கீழ் வலது மூலை
கீழ் இடது மூலை
24.
வோகலின் தோராய முறையில் உள்ள பெனாலிட்டி என்பது அந்த நிரை/நிரலிலுள்ள எதன் வித்தியாசத்தை குறிக்கிறது.
மிகப்பெரிய இரண்டு எண்கள்
மிகப்பெரிய மற்றும் மிகச்சிறிய எண்கள்
மிகச்சிறிய இரண்டு எண்கள்
இவற்றில் ஏதுவுமில்லை
25.
சீரற்ற தீர்வில் ஒதுக்கீட்டு அறைகளின் எண்ணிக்கை ஆனது.
m+n–1 -க்கு சமம்
m+n+1-க்கு சமம்
m+n–1-க்கு சமமற்றது
m+n+1-க்கு சமமற்றது
26.
1.
கொடுக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை
மொத்த தேவைகள் = மொத்த இருப்புகள் = 34.
எனவே கொடுக்கப்பட்ட கணக்கானது சமநிலை போக்குவரத்து கணக்காகும்.
போக்குவரத்து விவரம்
S1⟶ D1, S2⟶ D1, S2⟶ D2, S3⟶ D2, S3⟶ D3, S4⟶ D3
மொத்த போக்குவரத்து செலவு
= (5 x 2) + (2 x 3) + (6 x 3) + (3 x 4) + (4 x 7) + (14 x 2)
= 10+ 6+ 18+ 12 + 28 + 28 = ரூ.102
2.
(i) மீச்சிறுவின் மீப்பெரு மதிப்பு
(40, - 20, – 40) ன் மீப்பெரு மதிப்பு = 40
எனவே S1 என்ற வியூகம் சிறந்தது.
(ii) மீப்பெருவின் மீச்சிறு
(60, 10, 150) ன் மீச்சிறு மதிப்பு = 10
எனவே S2 என்ற வியூகம் சிறந்தது.
3.
கொடுக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை
அதாவது, மொத்த இருப்புகள் = மொத்த தேவைகள் . எனவே கொடுக்கப்பட்ட கணக்கானது சமநிலை போக்குவரத்து கணக்காகும்.
முதல் ஒதுக்கீடு :
இரண்டாம் ஒதுக்கீடு:
மூன்றாவது ஒதுக்கீடு:
நான்காம் ஒதுக்கீடு:
ஐந்தாவது ஒதுக்கீடு:
இறுதி ஒதுக்கீடு:
போக்குவரத்து விவரம் :O1⟶ D1, O1⟶ D2, O2⟶ D2, O2⟶ D3, O3⟶ D3, O3⟶ D3.
மொத்த போக்குவரத்து செலவு = (6×6)+(8×4)+(2×9)+(14×2)+(1×6)+(4×2) = ரூ.128
4.
இங்கு, மொத்த அளிப்புகள் = 5+8+7+14=34, மொத்த தேவைகள் = 7+9+18=34
அதாவது, மொத்த அளிப்புகள் = மொத்த தேவைகள் கொடுக்கப்பட்ட கணக்கானது சமநிலை போக்குவரத்து கணக்காகும்.
∴ எனவே , ஆரம்ப அடிப்படை ஏற்புடையத் தீர்வு உள்ளது.
மேலே கூறப்பட்ட அட்டவணையில் வடமேற்கு மூலையில் உள்ள சிற்றறை (1, A) யைத் தேர்ந்தெடுத்து அதிகபட்ச சாத்தியமான ஒதுக்கீடுகளைச் செய்யவும்.
அதாவது (5,7) இன் சிறும மதிப்பு 5
குறைக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை,
தற்போது (2, A) என்ற சிற்றறை வடமேற்கு மூலையில் உள்ளது.
அங்கு (8,2) இன் சிறும மதிப்பான 2 அலகுகளை ஒதுக்கீடு செய்யவும்.
x12 = சிறும (2,8) = 2
குறைக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை,
தற்போது (2, B) என்ற சிற்றறை வடமேற்கு மூலையில் உள்ளது.
அங்கு (6,9)ன் சிறும மதிப்பான 6 அலகுகளை ஒதுக்கீடு செய்யவும்.
x22 = சிறும (6,9) = 6
குறைக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை ,
தற்போது (3,B) என்ற சிற்றறை வடமேற்கு மூலையில் உள்ளது.
அங்கு (7,3)ன் சிறும மதிப்பான 3 அலகுகளை ஒதுக்கீடு செய்யவும்.
x32 = சிறும (7,3) = 3
குறைக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை ,
தற்போது (3,C) என்ற சிற்றறை வடமேற்கு மூலையில் உள்ளது.
அங்கு (4,18) -ன் சிறும மதிப்பான 4 அலகுகளை ஒதுக்கீடு செய்யவும்.
x33 = சிறும (4,18) = 4
குறைக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை மற்றும் இறுதி ஒதுக்கீடு, x44 = 14
அனைத்து ஒதுக்கீடுகளைக் கொண்ட அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து விவரம் 1⟶ A, 2 ⟶ A, 2 ⟶ B, 3 ⟶ B, 3 ⟶ C, 4 ⟶ C
மொத்த போக்குவரத்து செலவு = (5×2) + (2×3) +(6×3)+(3×4)+(4×7) + (14×2) = ரூ. 102
5.
நிரல்களின் எண்ணிக்கையும், நிரைகளின் எண்ணிக்கையும் சமமாக உள்ளது. எனவே கொடுக்கப்பட்ட கணக்கானது சமச்சீரான ஒதுக்கீடு கணக்காகும்.
படி 1:
ஒவ்வொரு நிரையிலும் உள்ள மீச்சிறு மதிப்பை அந்த நிரையில் உள்ள எல்லா மதிப்பிலும் கழிக்க வேண்டும்.
படி 2:
ஒவ்வொரு நிரலிலும் உள்ள மீச்சிறு மதிப்பை அந்த நிரலில் உள்ள எல்லா மதிப்பிலும் கழிக்க வேண்டும்.
நேர்க்கோடுகளின் எண்ணிக்கை < நிரைகளின் எண்ணிக்கை, நேர்க்கோடுகள் வெட்டாத மதிப்புகளின் மீச்சிறு மதிப்பு 1. எனவே, அவற்றுடன் 1ஐ கழிக்க மற்றும் இரு கோடுகள் வெட்டும் மதிப்புடன் எனவே, 1ஐ கூட்டுக.
அனைத்து ஒதுக்கீடுகளும் செய்யப்பட்டு உள்ளன.
உகந்த ஒதுக்கீடு மற்றும் மொத்த நேரம்
6.
இங்கு நிரல்களின் எண்ணிக்கையும், நிரைகளின் எண்ணிக்கையும் சமமாக உள்ளன. எனவே , கொடுக்கப்பட்ட கணக்கானது சமச்சீரான ஒதுக்கீடு கணக்காகும்.
தற்போது அதன் தீர்வைக் காணலாம்.
படி 1: ஒவ்வொரு நிரையில் உள்ள மீச்சிறு மதிப்பை அந்த நிரையில் உள்ள அனைத்து மதிப்புகளிலிருந்தும் கழிக்க வேண்டும்.
ஒவ்வொரு நிரல் மற்றும் நிரையில் குறைந்தபட்சம் ஒரு பூஜ்யமாவது இருக்கிறதா என்பதை பார்க்க. இல்லையெனில் படி 2 க்கு செல்க.
படி 2: படி (1)-ல் கிடைத்த அணியில், ஒவ்வொரு நிரலில் உள்ள மீச்சிறு மதிப்பை அந்த நிரலில் உள்ள அனைத்து மதிப்புகளிலிருந்தும் கழிக்க வேண்டும்.
ஒவ்வொரு நிரை மற்றும் நிரலிலும் குறைந்தபட்சம் ஒரு பூஜ்ஜியம் உள்ளதால் ஒதுக்கீடுகளை செய்யலாம்.
படி 3 (ஒதுக்கீடு):
ஒவ்வொரு நிரையாக ஒரே ஒரு பூஜ்யம் உள்ளதா என சோதிக்கவும். முதல் மூன்று நிரைகளிலும் ஒன்றுக்கு மேற்பட்ட பூஜ்ஜியங்கள் உள்ளன. நிரை D-ல் ஒரே ஒரு பூஜ்ஜியம் உள்ளது. அந்த பூஜ்யத்தை 口 ஆல் குறியிடுக. 口 குறியிட்ட நிரலிலுள்ள மற்ற அனைத்து பூஜ்யங்களையும் × ஆல் குறியிடுக.
படி 4:
ஒவ்வொரு நிரலாக ஒரே ஒரு பூஜ்யம் உள்ளதா என சோதிக்கவும். நிரல் I-ல் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் நிரல் II-க்குச்
செல்லவும். அங்கு ஒரே ஒரு பூஜ்ஜியம் உள்ளது. அந்த பூஜ்யத்தை 口 ஆல் குறியிடுக.口 குறியிட்ட நிரையில் உள்ள மற்ற அனைத்து பூஜ்யங்களையும் × ஆல் குறியிடுக.
படி 5:
மீண்டும் ஒவ்வொரு நிரையாக மேற்கண்ட முறையை தொடரவும். நிரை A-ல் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிரை B –ல் ஒரே ஒரு பூஜ்ஜியம் உள்ளது. அந்த பூஜ்யத்தை 口-ஆல் குறியிடுக.口 குறியிட்ட நிரையில் உள்ள மற்ற அனைத்து பூஜ்யங்களையும் ×ஆல் குறியிடுக.
அனைத்து ஒதுக்கீடுகளும் செய்யப்பட்டுள்ளன. உகந்த ஒதுக்கீடு மற்றும் மொத்த செலவு (சிறுமசெலவு):
உகந்த ஒதுக்கீடு செலவு(சிறும செலவு) = ரூ.38
7.
கொடுக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை
மொத்த தேவைகள் = மொத்த இருப்புகள் = 100
எனவே கொடுக்கப்பட்ட கணக்கானது சமநிலை போக்குவரத்து கணக்காகும்.
முதல் ஒதுக்கீடு :
இரண்டாம் ஒதுக்கீடு :
மூன்றாம் ஒதுக்கீடு :
அனைத்து ஒதுக்கீடுகளும் ஒரே அட்டவணையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து விவரம்:
O1 → D1, O1 → D3, O2 → D1, O2 → D2, O3 → D2, and O2 → D4
மொத்த போக்குவரத்து செலவு
= 10(5) + 20(3) + 20(4) + 20 (5) + 10(4) + 20(2)
= 50 + 60 + 80 + 100 + 40 + 40 = Rs. 370
8.
கொடுக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை
அதாவது, மொத்த அளிப்புகள் = மொத்த தேவைகள் கொடுக்கப்பட்ட கணக்கானது சமநிலை போக்குவரத்து கணக்காகும்.
முதல் ஒதுக்கீடு :
இரண்டாம் ஒதுக்கீடு:
மூன்றாம் ஒதுக்கீடு:
நான்காம் ஒதுக்கீடு:
ஐந்தாம் ஒதுக்கீடு:
இறுதி ஒதுக்கீடு :
போக்குவரத்து விவரம் :
O1⟶ D1, O1⟶ D2, O2⟶ D3, O3⟶ D2, O3⟶ D4
மொத்த போக்குவரத்து செலவு
\( = (30 \times 6)+(5 \times 5)+(28 \times 11)+ (7 \times 9)+(25 \times 7)+(25 \times 13) \)
= 180 + 25 + 308 + 63 + 175 + 325
= Rs. 1076
9.
இங்கு ∑ai=∑bj=80 அதாவது, மொத்த இருப்புகள் = மொத்த தேவைகள். எனவே கொடுக்கப்பட்ட கணக்கானது சமநிலை போக்குவரத்து கணக்காகும்.
முதல் ஒதுக்கீடு :
இரண்டாவது ஒதுக்கீடு:
மூன்றாவது ஒதுக்கீடு:
நான்காவது ஒதுக்கீடு:
ஐந்தாவது ஒதுக்கீடு:
ஆறாவது ஒதுக்கீடு:
அனைத்து ஒதுக்கீடுகளும் ஒரே அட்டவணையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
போக்குவரத்து விவரம்
A ⟶ I, A ⟶ II, A ⟶ III, A ⟶ IV, B ⟶ I, C ⟶ IV, D⟶ II
மொத்த போக்குவரத்து செலவு
= (6×5) + (6×1) + (17×3) + (5×3) + (15×3) + (12×3) + (19×1)
= 30 + 6 + 51 + 15 + 45 + 36 + 19
= ரூ.202
10.
(27, 25, 23, 32) இன் மீச்சிறு மதிப்பு = 23. எனவே E3 என்பது சிறந்த மாற்று நடவடிக்கையாகும்
11.
(–10,–4, 0) இன் மீப்பெரு மதிப்பு = 0. எனவே Z என்ற மாற்று நடவடிக்கையை வியாபாரி தேர்ந்தெடுப்பார் .
12.
போக்குவரத்து கணக்கில் மொத்த போக்குவரத்துச் செலவை குறைக்கும் வகையில் ஒவ்வொரு ஆதியிலிருந்து ஒவ்வொரு சேரும் இடத்திற்கு அனுப்பக் கூடிய பொருள்களின் அளவை தீர்மானிப்பதாகும். அதே சமயம் ஒதுக்கீட்டு கணக்கில் மொத்த ஒதுக்கீட்டு செலவை குறைக்கும் வகையில் ஒரு வேலையை ஒரு இயந்திரத்திற்கு ஒதுக்கீடு செய்ய ஆகும் செலவு ஆகும்.
ஒதுக்கீட்டு கணக்கில் ஒவ்வொரு நிரை மற்றும் நிரலிலும் ஒரே ஒரு ஒதுக்கீடு மட்டுமே செய்யப்பட வேண்டும். ஆனால் போக்குவரத்து கணக்கில் எந்தவொரு நிரை மற்றும் நிரலிலும் ஒன்றுக்கு மேற்பட்ட ஒதுக்கீடுகள் இருக்கலாம்.
ஒதுக்கீடு கணக்கில் நிரல்களின் எண்ணிக்கையும் நிரைகளின் எண்ணிக்கையும் சமமாக இருக்க வேண்டும். ஆனால் போக்குவரத்து கணக்கில் அவ்வாறு இருக்க தேவையில்லை.
13.
ஒதுக்கீட்டு கணக்கு என்பது போக்குவரத்து கணக்கின் ஒரு தனிப்பட்ட கணக்காகும் .‘m’ வேலைகள் மற்றும் ‘n’ இயந்திரங்கள் (மனிதர்கள்) இருப்பதாக எடுத்துக் கொள்வோம். வேலைகளின் எண்ணிக்கையும் இயந்திரங்களின் எண்ணிக்கையும் சமமாக இருக்க வேண்டும். ஒரு இயந்திரத்திற்கு ஒரு வேலை என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும். i என்ற வேலையை j என்ற இயந்திரத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டால் ஆகும் செலவு Cij (i =1,2,…,m and j = 1,2,…,n). நமது நோக்கமானது மொத்த ஒதுக்கீட்டு செலவை குறைக்குமாறு ஒவ்வொரு இயந்திரத்திற்கும் ஒரே ஒரு வேலையை மட்டும் ஒதுக்கீடு செய்வதாகும்.
14.
மொத்த அளிப்புகள் = மொத்த தேவைகள் கொடுக்கப்பட்ட கணக்கானது சமநிலை போக்குவரத்து கணக்காகும்.
15.
ஏற்புடையத் தீர்வுகள்:
கட்டுப்பாடுகளைப் பூர்த்தி செய்யக்கூடிய குறை குறியற்ற xij(i=1,2,..,m, j=1,2,…n) இன் மதிப்புகள் போக்குவரத்து கணக்குகளின் ஏற்புடையத் தீர்வுகளாகும். xij(i=1,2,..,m, j=1,2,…n) இன் மதிப்புகள் போக்குவரத்து கணக்குகளின் ஏற்புடையத் தீர்வுகளாகும்.
சிதைவற்ற அடிப்படை ஏற்புடையத் தீர்வு:
சிதைவற்ற அடிப்படை தீர்வு என்பது போக்குவரத்து கணக்கின் ஏற்புடையத் தீர்வில் சரியாக m+n-1 ஒதுக்கீடுகள் ஒன்றை ஒன்று சாரா நிலையில் அமைந்ததாகும். இங்கு m, n என்பது முறையே நிரை மற்றும் நிரலைக் குறிக்கிறது.
16.
மொத்த போக்குவரத்துச் செலவை குறைக்கும் வகையில் ஒவ்வொரு ஆதியிலிருந்து ஒவ்வொரு சேரும் இடத்திற்கு அனுப்பக் கூடிய பொருள்களின் அளவை தீர்மானிப்பது போக்குவரத்து கணக்காகும்.
17.
(d)
மேலே கூறிய அனைத்தும்
18.
(d)
மேற்கூறிய அனைத்தும்
19.
(b)
3
20.
(d)
ஒவ்வொரு நிரை மற்றும் நிரலில் ஒரே ஒரு ஒதுக்கீடு
21.
(c)
1 அல்லது 0
22.
(c)
23.
(a)
மேல் இடது மூலை
24.
(c)
மிகச்சிறிய இரண்டு எண்கள்
25.
(a)
m+n–1 -க்கு சமம்
26.
(a)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards