12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 09/09/2019
நிகழ்தகவு பரவல்கள்
12ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
ஈருறுப்பு பரவலின் சராசரி 4 மற்றும் திட்டவிலக்கமானது 2 ஆக இருப்பின் பரவலை தீர்மானித்து மேலும் P(x=15) கண்டுபிடி.
2.
மூன்று குழந்தைகள் கொண்ட ஒரு குடும்பத்தில் சரியாக இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதற்கான நிகழ்தகவினைக் காண்க.
3.
பெர்னோலி முயற்சி: வரையறு.
4.
பிழையற்ற ஐந்து நாணயங்கள் ஒரே சமயத்தில் சுண்டப்படுகின்றன. அவற்றில் சரியாக 3 தலைகள் பெறுவதற்கான நிகழ்தகவு காண்க.
5.
கிராம கூட்டுறவு சங்கத்தின் வாயிலாகக் கொள்முதல் செய்யப்படும் பாலின் அளவு 800 லிட்டர் மற்றும் திட்டவிலக்கம் 100 லிட்டர் ஆகும். ஒரு நாள் 800 லிட்டர் முதல் 1000 லிட்டர் வரை கூட்டுறவு சங்கத்தின் வாயிலாகக் கொள்முதல் செய்வதற்கான விகிதசாரத்தினைக் கணக்கிடுக.
6.
இரட்டை குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்பு 80 பிறப்புகளில் ஒன்று எனக் கொண்டால், ஒரு நாளில் பிறக்கும் 30 குழந்தைகளில் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட இரட்டையர் பிறப்பதற்கான நிகழ்தகவினைக் கணக்கிடுக.
7.
ஈருறுப்புப் பரவலின் சராசரி மதிப்பு 20 எனவும், திட்டவிலக்கத்தின் மதிப்பானது 4 எனவும் கொண்டால், ‘n’ இன் மதிப்பினைக் காண்க.
8.
ஒரு கூறில் இருந்து எடுத்த 125 உலர்ந்த மின்கலங்கள் அதனுடைய ஆயுட்காலம் எத்தனை மணி நேரம் என்பதனை சோதனை முடிவுகளில் சராசரியாக 12 மணி நேரம் மற்றும் அதன் திட்ட விலக்கம் 3 மணி நேரம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதன் தரவுகள் இயல்நிலைப் பரவலைக் கொண்டது எனில், எத்தனை சதவீத மின்கலங்கள்
(i) 13 மணி நேரத்திற்கும் அதிகமாக
(ii) 5 மணி நேரத்திற்கும் குறைவாக
9 மணி நேரத்திற்கும் 14 மணி நேரத்திற்கும் இடைப்பட்ட நேரத்தில் ஒளிரும் என்பதனைக் கணக்கிடுக.
9.
ஈருறுப்புப் பரவலின் விலக்கப்பெருக்குத் தொகைகளை தருவி.
10.
புள்ளியியல் வகுப்பில் பயிலும் மாணவர்களின் உயரமானது இயல்நிலை பரவலை பின்பற்றி சராசரி 172 செ.மீ மற்றும் மாறுபாடு 25 செ.மீ பெற்றுள்ளது, எனில் 165 செ.மீ மற்றும் 181 செ.மீ க்கும் இடைப்பட்ட உயரத்தில் இருக்கும் மாணவர்களின் விகிதமானது.
0.954
0.601
0.718
0.883
11.
சராசரியாக ஒரு தேர்வில் 40% மாணவர்கள் தோல்வி அடைகின்றனர். ஒரு குழுவிலுள்ள 6 மாணவர்களில் குறைந்தபட்சம் 4 நபர் வெற்றி அடைவதற்கான நிகழ்தகவானது _____.
0.5443
0.4543
0.5543
0.4573
12.
f(x)=\(\left( \frac { 1 }{ \sqrt { 72\pi } } \right) \frac { e^{ -(x-10)^{ 2 } } }{ 72 } \) -∞ < x < ∞ என்ற இயல்நிலை பரவலின் பண்பளவைகளானது.
(10,6)
(10,36)
(6,10)
(36,10)
13.
Z என்பது திட்ட இயல்நிலை மாறி எனில் Z = -0.5 லிருந்து Z = -3.0 வரை அமையும் உருப்படிகளின் விகிதமானது_____.
0.4987
0.1915
0.3072
0.3098
14.
இயல்நிலைப் பரவலைக் கண்டுபிடித்தவர் _____.
லாப்லேஸ்
டீ மாய்வர்
காஸ்
அனைத்தும்
1.
சராசரி =n p=4
பரவற்படி =npq=3
\(4 q =3 \Rightarrow q=\frac{3}{4} \)
\(p =1-{q}=1-\frac{3}{4}=\frac{1}{4} \)
\(n p =4 \Rightarrow n\left(\frac{1}{4}\right)=4 \Rightarrow n=16\)
ஈருறுப்புப் பரவல்
\(\mathrm{P}(\mathrm{X}=x) =\mathrm{nC}_x \mathrm{p}^x \mathrm{q}^{\mathrm{n}-x} \)
\(=16 \mathrm{C}_x\left(\frac{1}{4}\right)^x\left(\frac{3}{4}\right)^{16-x}\)
\(P(X=15) =16 C_{15}\left(\frac{1}{4}\right)^{15}\left(\frac{3}{4}\right)
\)
\(=16 C_1 \frac{3}{4^2 \times 4^{14}} \)
\(=16\left(\frac{3}{16 \times 4^{14}}\right)=\frac{3}{4^{14}}
\)
2.
X என்ற சமவாய்ப்பு மாறியானது, பெண் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது
p = பெண் குழந்தைகளை தேர்ந்தெடுப்பதற்கான நிகழ்தகவு = 1/2
\( \mathrm{q}=1-\mathrm{p}=1-\frac{1}{2}=\frac{1}{2}, \quad \mathrm{n}=3\)
\( \mathrm{P}(\mathrm{X}=x)=\mathrm{nC}_x \mathrm{p}^x \mathrm{q}^{\mathrm{n}-x} \)
\( \mathrm{P}(\mathrm{X}=2)=3 C_2\left(\frac{1}{2}\right)^2\left(\frac{1}{2}\right)^1 \)
\(=3\left(\frac{1}{4}\right)\left(\frac{1}{2}\right)=\frac{3}{8}=0.375
\)
3.
ஒரு சமவாய்ப்பு சோதனை இரண்டு விளைவுகளை ஏற்படுத்தும். அவ்விளைவானது இரு வகைப்படும் அவை வெற்றி (S) மற்றும் தோல்வி (F) ஆகும். அதனுடைய நிகழ்தகவுகள் முறையே p மற்றும் q எனக் குறிக்கப்படும். அது பெர்னோலி சோதனை (அல்லது முயற்சி) என்று அழைக்கப்படும்
4.
n = 5, தலை பெறுவதற்கான நிகழ்தகவு p = q = 1/2
X என்ற சமவாய்ப்பு மாறியானது , கிடைக்கும் தலைகளின் எண்ணிக்கையைக் குறிப்பதாகக் கொண்டால், n முயற்சியில் கிடைக்கும் வெற்றியின் நிகழ்தகவு சார்பானது p = q = 1/2.
3 தலைகள் மட்டும் கிடைப்பதற்கான நிகழ்தகவு =5Cx\(\left( \frac { 1 }{ 2 } \right) ^{ x }\left( \frac { 1 }{ 2 } \right) ^{ 5-x }\)
=5C3\(\left( \frac { 1 }{ 2 } \right) ^{ 3 }\left( \frac { 1 }{ 2 } \right) ^{ 5-3 }\)
=5C3\(\left( \frac { 1 }{ 2 } \right) ^{ 5 }\)
=\(\frac { 5 }{ 16 } \).
5.
சராசரி μ = 800 மற்றும் திட்டவிலக்கம் σ = 100, நாள் ஒன்றுக்கு கொள்முதல் செய்யப்படும் பாலின் அளவு 800 லிட்டருக்கும், 1000 லிட்டருக்கும் இடையில் இருப்பதற்கான நிகழ்தகவு
P(800 < X < 1000)
\(=P\left(\frac{800-800}{100}<z<\frac{1000-800}{100}\right)\)
= P(0 < Z < 2) = 0.4772
எனவே பாலின் அளவு 800 லிட்டருக்கும், 1000 லிட்டருக்கும் இடையில் கொள்முதல் செய்யும் சங்கங்களின் சதவீதம் 47.72 ஆகும்.
6.
P(இரட்டை குழந்தைகள்) = p = 1/80 = 0.0125 மற்றும் n = 30
λ = np = 30 × 0.0125 = 0.375
X ஆனது பாய்சான் பரவலை பின்பற்றுகிறது
p(x)=\(\frac { { e }^{ -\lambda }{ \lambda }^{ x } }{ x! } \)
P(2 அல்லது அதற்கு மேல்) = 1 - [p (x = 0) + p (x =1)]=1-\(\left[ \frac { { e }^{ -0.375 }(0.375)^{ 0 } }{ 0! } +\frac { e^{ -0.375 }(0.375)^{ 1 } }{ 1! } \right] \)
= 1 - e-0.375 [1+0.375]
= 1- (0.6873 × 1.375)
= 0.055
7.
ஈருறுப்புப் பரவலின் பண்பளவைகள் n மற்றும் p ஆகும்.
ஈருறுப்புப் பரவலின் சராசரியின் மதிப்பு np = 20
திட்டவிலக்கம் = \(\sqrt { npq } \)=4
∴ npq = 16
⇒ \(\frac { npq }{ np } =\frac { 16 }{ 20 } =\frac { 4 }{ 5 } \)
q=\(\frac { 4 }{ 5 } \)
⇒ p=1-q = 1-\(\left( \frac { 4 }{ 5 } \right) =\frac { 1 }{ 5 } \)
np=20
n=\(\frac { 20 }{ p } \)
n=100
8.
உலர் மின்கலங்களின் ஆயுட்காலம் X என்க. இது இயல்நிலைப் பரவலைப் பின்பற்றி சராசரி 12 மற்றும் திட்டவிலக்கம் 3 மணி என்க.
(i) 13 மணி நேரத்திற்கும் மேலாக
P(X > 13)
X = 13 எனில்
Z =\(\frac { X-\mu }{ \sigma } =\frac { 13-12 }{ 3 } \)=0.333
P(X > 13) = P(Z > 0.333) = 0.5 - 0.1293 = 0.3707
13 மணி நேரத்திற்கும் மேலாக ஆயுட்காலம் கொண்ட உலர் மின்கலங்களின் எதிர்பார்க்கப்படும் சதவீதம் =125 × 0.3707 =46.34%
(ii) 5 மணி நேரத்திற்கும் குறைவாக P(X < 5)
X = 5 எனில், Z=\(\frac { X-\mu }{ \sigma } =\frac { 5-12 }{ 3 } \)=-2.333
P(X < 5) = P(Z < -2.333) = P(Z > 2.333)
= 0.5 - 0.4901 = 0.0099
5 மணி நேரத்திற்கும் குறைவாக ஆயுட்காலம் கொண்ட உலர் மின்கலங்களின் எதிர்பார்க்கப்படும் சதவீதம் 125 × 0.0099 =1.23%.
(iii) 9 மற்றும் 14 மணி நேரத்திற்கு இடையில் X = 9 எனில்,
Z =\(\frac { X-\mu }{ \sigma } =\frac { 9-12 }{ 3 } \)=-1
X = 14 எனில்,
Z =\(\frac { X-\mu }{ \sigma } =\frac { 14-12 }{ 3 } \)=0.667
P(9 < X < 14) = P(-1 < Z < 0.667)
= P(0 < Z < 1) + P(0 < Z < 0.667)
= 0.3413 + 0.2486
= 0.5899
9 மற்றும் 14 மணி நேரத்திற்கிடையில் ஆயுட்காலம் கொண்ட உலர் மின்கலங்களின் எதிர்பார்க்கப்படும் சதவீதம் 125 x 0.5899 =73.73%
9.
ஈருறுப்புப் பரவலின் சராசரி
\(\mathrm{E}(\mathrm{X}) =\sum_{x=0}^n x\left(\begin{array}{l}
n \\
x
\end{array}\right) p^x q^{n-x} \)
\( =p \sum_{x=1}^n x \cdot\left(\frac{n}{x}\right)\left(\begin{array}{r}
n-1 \\
x-1
\end{array}\right) p^{x-1} q^{n-x} \)
\( =n p(q+p)^{n-1} \quad[\text { since } p+q=1] \)
\(=n p \)
\(E(X) =n p
\)
ஈருறுப்புப் பரவலின் சராசரி என்பது np ஆகும்
\(\operatorname{Var}(X)=E\left(X^2\right)-\{E(X)\}^2 \)
இங்கு \( E\left(X^2\right)=\sum_{x=0}^n x^2\left(\begin{array}{l}
n \\
x
\end{array}\right) p^x q^{n-x} \)
\(=\sum_{x=0}^n\{x(x-1)+x\}\left(\begin{array}{l}
n \\
x
\end{array}\right) p^x q^{n-x} \)
\(=\sum_{x=0}^n\{x(x-1)\}\left(\begin{array}{l}
n \\
x
\end{array}\right) p^x q^{n-x}+\sum_{x=0}^n x\left(\begin{array}{l}
n \\
x
\end{array}\right) p^x q^{n-x}
\)
\(=\sum_{x=2}^n\{x(x-1)\} p^2\left(\frac{n(n-1)}{x(x-1)}\right)\left(\begin{array}{c}
n-2 \\
x-2
\end{array}\right) p^{x-2} q^{n-x} +\sum_{x=0}^n x\left(\begin{array}{l}
n \\
x
\end{array}\right) p^x q^{n-x} \)
\(=n(n-1) p^2\left\{\sum_{x=2}^n\left(\begin{array}{c}
n-2 \\
x-2
\end{array}\right) p^{x-2} q^{n-x}\right\}+n p \)
\(=n(n-1) p^2(q+p)^{(n-2)}+n p \)
\(=n(n-1) p^2+n p
\)
∴மாறுபாடு \( =E\left(X^2\right)-\{E(X)\}^2 \)
\(=n^2 p^2-n p^2+n p-n^2 p^2
\)
=n p(1-p)=n p q
ஈருறுப்புப் பரவலின் சராசரி np மற்றும் மாறுபாடு npq ஆகும்.
10.
\(\mu=172, \sigma^2=25 \Rightarrow \sigma=5\)
\(Z=\frac{X-\mu}{\sigma}=\frac{165-172}{5}=-1.4\)
\(Z=\frac{181-172}{5}=1.8\)
\(\mathrm{P}(165<\mathrm{X}<181)=\mathrm{P}(-1.4<\mathrm{Z}<1.8) \)
\(=\mathrm{P}(-1.4<\mathrm{Z}<0)+\mathrm{P}(0<\mathrm{Z}<1.8) \)
=0.4192+0.4641=0.8833=0.883
11.
\(\mathrm{q}=\frac{40}{100}= 0.4, \mathrm{p}=0.6, \mathrm{n}=6 \)
\(P(X \geq 4)= \mathrm{P}(\mathrm{X}=4)+\mathrm{P}(\mathrm{X}=5)+\mathrm{P}(\mathrm{X}=6) \)
\(= 6 \mathrm{C}_4(0.4)^2(0.6)^4+ 6 \mathrm{C}_5(0.4)^1(0.6)^5+6 \mathrm{C}_6(0.6)^6 \)
\(= (0.6)^4[15(0.16)+6(0.4)(0.6) + (0.36)]\)
= 0.1296[2.4+1.44+0.36] = 0.5443
12.
\( \mu=10 \)
\( 2 \sigma^2=72 \Rightarrow \sigma^2=36 \)
\( N\left(\mu, \sigma^2\right)=(10,36)
\)
13.
\(\mathrm{P}(-3 <\mathrm{Z}<-0.5) \)
\(= \mathrm{P}(0<\mathrm{Z}<3)-\mathrm{P}(0<\mathrm{Z}<0.5)\)
=0.4987-0.1915=0.3072
14.
(b)
டீ மாய்வர்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards