12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 06/12/2019
நிகழ்தகவு பரவல்கள்
12ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
கிராம கூட்டுறவு சங்கத்தின் வாயிலாகக் கொள்முதல் செய்யப்படும் பாலின் அளவு 800 லிட்டர் மற்றும் திட்டவிலக்கம் 100 லிட்டர் ஆகும். ஒரு நாள் 800 லிட்டர் முதல் 1000 லிட்டர் வரை கூட்டுறவு சங்கத்தின் வாயிலாகக் கொள்முதல் செய்வதற்கான விகிதசாரத்தினைக் கணக்கிடுக.
2.
ஒரு வழிப்போக்கன் பிடித்த மீனின் எடையானது தோராயமாக இயல்நிலைப் பரவலைப் சார்ந்து சராசரியாக 2.25 கிலோ மற்றும் திட்டவிலக்கம் 0.25 கிலோ பெற்றுள்ளது. மீனின் எடையானது 2 கிலோவை விட குறைவாக இருப்பதற்கான சதவீதம் என்ன?
3.
புதிய தொழிற்சாலையில் 900 மின்விளக்குகள் பொருத்தப்படுகிறது. இயல்நிலை பரவலை கொண்ட அதனுடைய சராசரி வாழ்நாள் என்பது 125 நாள்களாகும் மற்றும் திட்டவிலக்கமானது 18 நாள்களாகும். 95க்கும் குறைவான நாள்களில் பயனற்று போகும் என்று எதிர்பார்க்கப்படும் விளக்குகள் எத்தனை?
4.
இரட்டை குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்பு 80 பிறப்புகளில் ஒன்று எனக் கொண்டால், ஒரு நாளில் பிறக்கும் 30 குழந்தைகளில் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட இரட்டையர் பிறப்பதற்கான நிகழ்தகவினைக் கணக்கிடுக.
5.
இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையினைக் கணக்கிடுவதற்கு ஒரு சதுர கட்டத்தில் ஒரு துளி இரத்த மாதிரி சீராக பரப்பப்படுகிறது. நுண்ணோக்கியின் வழியாக கண்காணித்ததில் சராசரியாக 8 சிவப்பு அணுக்கள் ஒரு சதுரத்தில் இருப்பதாக உறுதி செய்யப்படுகிறது. அவ்வாறு இருப்பின் சரியாக 5 சிவப்பு அணுக்கள் ஒரு சதுரத்தில் இருப்பதற்கான நிகழ்தகவு என்ன?
6.
வைட்டமின் A குறைபாடுள்ள 5 எலிகளை ஒரே கூண்டில் இருந்து எடுக்கப்பட்டு அதற்கு அளவாக கேரட் ஊட்டப்படுகிறது. நோயிலிருந்து மீண்டு வருவது என்பது நேர்மறை எதிர்வினையாகும். அதனுடைய நிகழ்தகவானது 0.73 ஆகும். அவ்வாறெனில் குறைந்தபட்சம் மூன்று எலிகள் குறைபாடுகளில் இருந்து மீண்டு வருவதற்கான நிகழ்தகவினை கூறுக.
7.
A என்ற விளையாட்டு வீரர் மற்றும் B எனும் விளையாட்டு வீரர் இருவரும் சரிசமமான மேசை பந்தாட்ட வீரர்களாவர். கீழ்வருவனவற்றுள் எந்த நிகழ்வுகளுக்கு அதிகமான சாத்தியக்கூறுகள் இருக்கிறது:
(a) A எனும் வீரர் B எனும் வீரரைத் தோற்கடிப்பதற்குச் சரியாக நான்கு முறை விளையாடும் விளையாட்டில் மூன்று முறை வெற்றி பெற வேண்டும் அல்லது
(b) A எனும் வீரர் B என்ற வீரரைத் தோற்கடிப்பதற்குச் சரியாக எட்டு முறை விளையாடும் விளையாட்டில் ஐந்து முறை வெற்றி பெறவேண்டும்.
8.
இயல்நிலைப் பரவலின் சராசரி 30 மற்றும் திட்டவிலக்கம் 5 எனில்
(i) 26 ≤ X ≤ 40
(ii) X > 45 ஆகிய பரப்பினை காண்க.
9.
வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சராசரியாக ஒரு நிமிடத்திற்கு இரண்டு ஆகும். ஒரு நிமிடத்தில் (i) வாடிக்கையாளர் எவரும் வரவில்லை (ii) 3 அல்லது அதற்கு மேல் வாடிக்கையாளர் வருவதற்கான நிகழ்தகவினைக் கண்டறிக.
10.
பாய்சான் பரவலின் சராசரி மற்றும் மாறுபாட்டை வருவி.
11.
1/5 சதவீத பிளேடுகள் பழுதானவை என்று பிளேடுகளின் உற்பத்தியாளர் தெரிவிக்கிறார். ஒவ்வொரு அட்டை பெட்டியிலும் 10 பிளேடு அடைத்து விற்பனைக்கு வருகிறது. சரக்குப் பெட்டியில் இருக்கும் 1,00,000 பாக்கெட்டுகளை பாய்சான் பரவலைக் கொண்டு தோராயமாக எத்தனை பாக்கெட்டுகள்
(i) பழுதற்ற பிளேடுகள்
(ii) பழுதுள்ள ஒரு பிளேடு
(iii) பழுதுள்ள இரண்டு பிளேடுகள்
கொண்டிருக்கும் என்பதனை கணக்கிடுக. (e-0.02 =.9802)
12.
ஒரு காப்பீட்டு நிறுவனம், 0.1 சதவீத மக்கள் மட்டுமே ஒவ்வொரு வருடமும் விபத்துக்கு உட்படுகிறார்கள் என்பதைக் கணிக்கின்றனர். காப்பீடு செய்துள்ள 10,000 பாலிசிதாரர்களை சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் அடுத்து வரக்கூடிய ஆண்டில் 5-க்கு மிகாமல் வாடிக்கையாளர்கள் விபத்துக்குள்ளாவதற்கான நிகழ்தகவு என்ன? ( e-10 =.000045)
13.
14.
பாய்சான் பரவலின் பண்புகளைக் குறிப்பிடுக.
15.
புள்ளிவிவர ஆய்வில் தொலை தூரத்தில் இருப்பவர்களின் உரையாடல்களின் நேரமானது இயல்நிலை பரவலைப் பின்பற்றி சராசரி 240 நொடிகளாகவும், திட்ட விலக்கம் 40 நொடிகளாகவும் உள்ளதாக அறியப்படுகிறது, எனில் 180 நொடிகளுக்கும் குறைவாக உரையாடல் நேரத்தை முடிப்பவர்களின் விகிதமானது ___.
0.214
0.094
0.933
0.067
16.
சராசரி 70 மற்றும் திட்டவிலக்கம் 10 எனக் கொண்ட இயல்நிலைப் பரவலை சமவாய்ப்பு மாறி X தழுவுகிறது. X ஆனது 72 மற்றும் 84-க்கு இடையில் உள்ளபோது அதன் நிகழ்தகவானது ____.
0.683
0.954
0.271
0.340
17.
பின்வருவனவற்றுள் எவை பாய்சான் பரவலை உருவாக்காது?
10 நிமிட இடைவெளியில் பெறப்படும் தொலைபேசி அழைப்புகள்
பெட்ரோல் நிலையத்திற்கு வந்து சேரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை
கனஅடி மண்ணில் காணப்படும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை
ஒரு பக்கத்தின் அச்சுப் பிழைகளின் எண்ணிக்கை
18.
ஈருறுப்புப் பரவலின் பண்பளவைகளான சராசரியின் மதிப்பு 4 மற்றும் மாறுபாடு 4/3 எனில் P(X ≥ 5) இன் மதிப்பானது _____.
(2/3)6
(2/3)5(1/3)
(1/3)6
4(2/3)6
19.
ஒவ்வொரு சோதனையிலும் வெற்றி என்பது தோல்விக்கான வாய்ப்பைப் போல் இருமடங்கு எனில் அடுத்து வரும் 6 முயற்சிகளில் குறைந்த பட்சம் நான்கு முறை வெற்றி பெறுவதற்கான வாய்ப்பானது______.
240/729
489/729
496/729
251/729
1.
சராசரி μ = 800 மற்றும் திட்டவிலக்கம் σ = 100, நாள் ஒன்றுக்கு கொள்முதல் செய்யப்படும் பாலின் அளவு 800 லிட்டருக்கும், 1000 லிட்டருக்கும் இடையில் இருப்பதற்கான நிகழ்தகவு
P(800 < X < 1000)
\(=P\left(\frac{800-800}{100}<z<\frac{1000-800}{100}\right)\)
= P(0 < Z < 2) = 0.4772
எனவே பாலின் அளவு 800 லிட்டருக்கும், 1000 லிட்டருக்கும் இடையில் கொள்முதல் செய்யும் சங்கங்களின் சதவீதம் 47.72 ஆகும்.
2.
சராசரி μ = 2.25 மற்றும் திட்டவிலக்கம் σ = 0.25. மீனின் எடை 2 கிலோக்கு குறைவாக இருப்பதற்கான நிகழ்தகவு P(X < 2.0).
x = 2.0 எனில், Z =\(\frac { X-\mu }{ \sigma } =\frac { 2.0-2.25 }{ 0.25 } \)=-1.0
P(Z< -1.0) = P(Z >1.0) = 0.5 - 0.3413 = 0.1587
ஆகையால் 15.87% மீன்களின் எடை 2 கிலோவிற்கும் குறைவாக இருக்கும்.
3.
சராசரி 125 மற்றும் திட்டவிலக்கம் 18 கொண்ட மின்விளக்குகளின் வாழ்நாள்.
(i) 95 நாள்களுக்கும் குறைவாக X = 95 எனில்,
Z =\(\frac { X-\mu }{ \sigma } =\frac { 95-125 }{ 18 } \)=-1.667
P(X < 95) = P(Z < -1.667)
= P(Z > 1.667)
= 0.5 - P(0 < Z < 1.67)
= 0.5 - 0.4525
= 0.0475
900 மின்விளக்குகளில் 95 நாள்களுக்குள்ளாகப் பயனற்றுப்போகும் மின் விளக்குகளின் எதிர்பார்க்கப்படும் எண்ணிக்கை 900 × .0475 = 43 விளக்குகள்.
4.
P(இரட்டை குழந்தைகள்) = p = 1/80 = 0.0125 மற்றும் n = 30
λ = np = 30 × 0.0125 = 0.375
X ஆனது பாய்சான் பரவலை பின்பற்றுகிறது
p(x)=\(\frac { { e }^{ -\lambda }{ \lambda }^{ x } }{ x! } \)
P(2 அல்லது அதற்கு மேல்) = 1 - [p (x = 0) + p (x =1)]=1-\(\left[ \frac { { e }^{ -0.375 }(0.375)^{ 0 } }{ 0! } +\frac { e^{ -0.375 }(0.375)^{ 1 } }{ 1! } \right] \)
= 1 - e-0.375 [1+0.375]
= 1- (0.6873 × 1.375)
= 0.055
5.
இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை சமவாய்ப்பு மாறி X என்க .
சராசரி λ = 8 சிவப்பு அணுக்கள் / ஒரு சதுரத்திற்கு P (ஒரு சதுரத்தில் சரியாக 5 சிவப்பணுக்கள்)
=P(X = 5) =\(\frac { { e }^{ -\lambda }{ \lambda }^{ x } }{ x! } =\frac { e^{ -8 }8^{ 5 } }{ 5! } \)
=\(\frac { 0.000335\times 32768 }{ 120 } \)
=0.0916
ஒரு சதுரத்தில் சரியாக 5 சிவப்பணுக்கள் இருப்பதற்கான நிகழ்தகவு 0.0916. அதாவது ஒரு சதுரத்தில் சரியாக 5 சிவப்பணுக்கள் இருப்பதற்கான வாய்ப்பு 9.16% ஆகும்.
6.
குறைபாடுகளில் இருந்து மீண்டு வரும் எலிகளின் எண்ணிக்கையை சமவாய்ப்பு மாறி X என்க.
p = எலிகள் மீண்டு வருவதற்கான நிகழ்தகவு
p =0.73
\(\mathrm{q}=1-\mathrm{p}=1-0.73=0.27, \mathrm{n}=5\)
\(\mathrm{P}(\mathrm{X}=x)=\mathrm{nC}_x \mathrm{p}^x \mathrm{q}^{\mathrm{n}-x}\)
\( P(X \geq 3)= P(X=3)+P(X=4)+P(X=5) \)
\(= 5 C_3(0.73)^3(0.27)^2+ 5 C_4(0.73)^4(0.27)+5 C_5(0.73)^5 \)
\(=(0.73)^3[10(0.0729)+0.9855+ 0.5329] \)
=(0.389017)(2.2474)=0.8743
7.
p = q =\(\frac { 1 }{ 2 } \)
(a) விளையாடும் விளையாட்டில் மூன்று முறை வெற்றி பெறுவதற்கான நிகழ்தகவு
=\(\left( \frac { 4 }{ 3 } \right) \left( \frac { 1 }{ 2 } \right) ^{ 3 }\left( \frac { 1 }{ 2 } \right) ^{ 4-3 }\)
=\(\frac { 1 }{ 4 } \)=25%
(b) A எனும் வீரர் B என்ற வீரரை தோற்கடிப்பதற்காக சரியாக எட்டு முறை விளையாடும் விளையாட்டில் ஐந்து முறை வெற்றி பெறுவதற்கான நிகழ்தகவு
\(=\left( \frac { 8 }{ 5 } \right) \left( \frac { 1 }{ 2 } \right) ^{ 5 }\left( \frac { 1 }{ 2 } \right) ^{ 8-5 }\)
=\(\\ \frac { 7 }{ 32 } \)=21.875%
எனவே , முதல் நிகழ்ச்சி அதிக சாத்தியமுடையதாக உள்ளது.
8.
இங்கு சராசரி μ= 30 மற்றும் திட்டவிலக்கம் σ = 5
(i) X = 26 எனில், Z=(X−μ)/σ = (26 – 30)/5 = –0.8 மற்றும் X = 40 எனில், Z =\(\frac { 40-30 }{ 5 } \)=2
ஆகையால்,
P(26 < X < 40) ) = P(-0.8 ≤ Z < 2)
= P(-0.8 ≤ Z ≤ 0) + p(0 ≤ Z ≤ 2)
= P(0 ≤ Z ≤ 0.8) + P(0 ≤ Z ≤ 2)
= 0.2881 + 0.4772 (அட்டவணையிலிருந்து)
= 0.7653

(ii) X ≥ 45 எனும் போது நிகழ்தகவு X = 45 எனில்,
Z =\(\frac { X-\mu }{ \sigma } =\frac { 45-30 }{ 5 } \)=3
P( X ≥ 45) = P(Z ≥ 3)
= 0.5 - 0.49865
= 0.00135

9.
வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை சமவாய்ப்பு மாறி X என்க.
சராசரி \( \lambda=2\)
\(\mathrm{P}(\mathrm{X}=x)=\frac{e^{-\lambda} \lambda^x}{x !}\)
(i) \(\mathrm{P}(\mathrm{X}=0)=\frac{e^{-2} 2^0}{0 !}=\mathrm{e}^{-2}=0.1353\)
(ii) \( P(X \geq 3)= 1-[P(X<3)]\)
\(= 1-[P(X=0)+P(X=1)+ P(X=2)]\)
\( =1-\left[\frac{e^{-2} 2^0}{0 !}+\frac{c^{-2} 2^1}{1 !}+\frac{e^{-2} 2^2}{2 !}\right] \)
\( =1-\mathrm{e}^{-2}[1+2+2] \)
=1-(0.1353)(5)
=1-0.6765=0.3235
10.
சராசரி \(=\mathrm{E}(\mathrm{X})=\sum_{x=0} x P(x, \lambda) \)
\( =\sum_{x=0}^{\infty} x \frac{e^{-\lambda} \lambda^x}{x !} \)
\( =\lambda e^{-\lambda} \sum_{x=1}^{\infty} \frac{\lambda^{x-1}}{(x-1) !} \)
\(=\lambda e^{-\lambda}\left[1+\lambda+\frac{\lambda^2}{2 !}+\ldots\right] \)
\( =\lambda e^{-\lambda} e^\lambda=\lambda \)
\(\mathrm{E}\left(\mathrm{X}^2\right) =\sum_{x=0}^{\infty} x^2 P(x, \lambda) \)
\( =\sum_{x=0}^{\infty}\{x(x-1)+x\} P(x, \lambda) \)
\(=\sum_{x=0}^{\infty}\{x(x-1)+x\} \frac{e^{-\lambda} \lambda^x}{x !}\)
\( =e^{-\lambda} \sum_{x=0}^{\infty} x(x-1) \frac{\lambda^x}{x !}+\sum_{x=0}^{\infty} x \frac{e^{-\lambda} \lambda^x}{x !} \)
\( =\lambda^2 e^{-\lambda} \sum_{x=2}^{\infty} \frac{\lambda^{x-2}}{(x-2) !}+E(X) \)
\( =\lambda^2 e^{-\lambda}\left[1+\lambda+\frac{\lambda^2}{2 !}+\ldots\right]+\lambda \)
\( =\lambda^2 e^{-\lambda} e^\lambda+\lambda=\lambda^2+\lambda \)
மாறுபாட்டளவை \((\mathrm{X})=\mathrm{E}\left(\mathrm{X}^2\right)-[\mathrm{E}(\mathrm{X})]^2\)
\(=\lambda^2+\lambda-\lambda^2=\lambda\)
11.
P = 1/5/100 = 1/500 =0.002 n = 10. λ = np = 0.02
p(x) =\(\frac { { e }^{ -\lambda }{ \lambda }^{ x } }{ x! } =\frac { e^{ -0.02 }(0.02)^{ x } }{ x! } \)
(i) பழுதற்ற பிளேடுகளைக் கொண்ட அட்டை பெட்டிகளின் எண்ணிக்கை
= N × p(0) = 1,00,000 × e-0.02
= 98020
(ii) பழுதுள்ள ஒரு பிளேடு கொண்ட அட்டைப் பெட்டிகளின் எண்ணிக்கை
= N × p(1) = 1,00,000 × 0.9802 × 0.02
= 1960
(iii) பழுதுள்ள இரண்டு பிளேடுகள் கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கை
= N × p(2) = 1,00,000 × .0002
= 20
12.
p = வாடிக்கையாளர் ஒருவர் ஒரு வருடத்தில் விபத்துக்குள்ளாவதற்கான நிகழ்தகவு
= 0.1/100 = 1/1000
இங்கு n = 10,000
ஆகையால், λ=np =10000\(\left( \frac { 1 }{ 1000 } \right) \)=10
5-க்கு மிகாமல் வாடிக்கையாளர்கள் விபத்துக்குள்ளாவதற்கான நிகழ்தகவு
P(x≤5) = P(X=0)+P(X=1)+P(X=2)+P(X=3)+P(X=4)+P(X=5)
=e-10\(\left[ 1+\frac { 10 }{ 1! } +\frac { { 1 }0^{ 2 } }{ 2! } +\frac { { 10 }^{ 3 } }{ 3! } +\frac { { 10 }^{ 4 } }{ 4! } +\frac { 10^{ 5 } }{ 5! } \right] \)
=0.06651
13.
14.
சராசரி மற்றும் மாறுபாட்டளவை சமமாக உள்ள ஒரே பரவல், பாய்சான் பரவல் மட்டுமே.
15.
\( \mu=240, \sigma=40 \)
\( Z=\frac{X-\mu}{\sigma}=\frac{180-240}{40}=-1.5\)
\(P(X < 180) =P(Z<-1.5)=0.5-P(0<Z<1.5) \)
=0.5-0.4332=0.0668 \simeq 0.067
16.
μ = 70, σ = 10
\(\mathrm{Z}=\frac{x-\mu}{\sigma}=\frac{72-70}{10}=0.2\)
\(Z=\frac{84-70}{10}=1.4\)
\(\mathrm{P}(72<\mathrm{X}<\mathrm{8} 4) =\mathrm{P}(0.2<\mathrm{Z}<1.4) \)
\( =\mathrm{P}(0<\mathrm{Z}<1.4)-\mathrm{P}(0<\mathrm{Z}<0.2) \)
=0.4192-0.0793=0.339 =0.34
17.
(b)
பெட்ரோல் நிலையத்திற்கு வந்து சேரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை
18.
சராசரி = np = 4, மாறுபாடு = npq = 4/3
\(\Rightarrow 4 q =\frac{4}{3} \Rightarrow q=\frac{1}{3} \)
\(p=1-q =1-\frac{1}{3}=\frac{2}{3} \)
\(n p =4 \Rightarrow n\left(\frac{2}{3}\right)=4 \Rightarrow n=6 \)
\(P(X \geq 5) =P(X=5)+P(X=6) \)
\( =6 C_5\left(\frac{2}{3}\right)^5\left(\frac{1}{3}\right)+6 C_6\left(\frac{2}{3}\right)^6 \)
\( =\frac{2^5}{3^6}[6+2]=4\left(\frac{2}{3}\right)^6 \)
19.
\( p=2 q \Rightarrow p=2(1-p)=2-2 p \)
\( 3 p=2 \Rightarrow p=\frac{2}{3} \)
\( q=1-p=1-\frac{2}{3}=\frac{1}{3} \)
\( \mathrm{n}=6 \)
\( P(X \geq 4)=\mathrm{P}(\mathrm{X}=4)+\mathrm{P}(\mathrm{X}=5)+\mathrm{P}(\mathrm{X}=6) \)
\( =6 C_4\left(\frac{2}{3}\right)^4\left(\frac{1}{3}\right)^2+6 C_5\left(\frac{2}{3}\right)^5\left(\frac{1}{3}\right)+6 C_6\left(\frac{2}{3}\right)^6 \)
\( =\frac{2^4}{3^6}\left[6 C_2+6 C_1 2+2^2\right] \)
\(=\frac{16}{729}[15+12+4]=\frac{496}{729}\)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards