12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 24/10/2019
கூறெடுப்பு முறைகளும் புள்ளியியல் அனுமானித்தலும்
12ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
பருத்தி நூலின் வலிமை (அறுந்தன்மை) அறிய 100 அளவீடுகள் கொண்ட ஒரு தொகுதியினைத் தெரிவு செய்து அவற்றின் சராசரி மற்றும் திட்ட விலக்கம் முறையே 7.4 கிராம் மற்றும் 1.2 கிராம் எனில், பருத்தி நூலின் சராசரி வலிமையின் 95% நம்பிக்கை இடைவெளியை காண்க.
2.
கீழ்க்கண்ட கேண்டல்- பாபிங்டன் ஸ்மித் சமவாய்ப்பு எண் அட்டவணையைப் பயன்படுத்தி.
| 23 | 15 | 75 | 48 | 59 | 01 | 83 | 72 | 59 | 93 | 76 | 24 | 97 | 08 | 86 | 95 | 23 | 03 | 67 | 44 |
| 05 | 54 | 55 | 50 | 43 | 10 | 53 | 74 | 35 | 08 | 90 | 61 | 18 | 37 | 44 | 10 | 96 | 22 | 13 | 43 |
| 14 | 87 | 16 | 03 | 50 | 32 | 40 | 43 | 62 | 23 | 50 | 05 | 10 | 03 | 22 | 11 | 54 | 36 | 08 | 34 |
| 38 | 97 | 67 | 49 | 51 | 94 | 05 | 17 | 58 | 53 | 78 | 80 | 59 | 01 | 94 | 32 | 42 | 87 | 16 | 95 |
| 97 | 31 | 26 | 17 | 18 | 99 | 75 | 53 | 08 | 70 | 94 | 25 | 12 | 58 | 41 | 54 | 88 | 21 | 05 | 13 |
1550 முதல் 8000 வரையிலான 4 இலக்க எண் கொண்ட 10 சமவாய்ப்பு மாதிரியை தேர்ந்தெடுக்க.
3.
மாற்று கருதுகோள் - வரையறு.
4.
புள்ளியியல் அனுமானத்தின் இரண்டு பகுதிகளை எழுதுக?
5.
முறைப்படுத்திய கூறெடுப்பின் குறைகள் இரண்டினைக் கூறுக.
6.
எளிய சமவாய்ப்பு கூறெடுப்பின் நன்மைகள் எவையேனும் இரண்டினை எழுதுக.
7.
திட்டப்பிழை என்றால் என்ன?
8.
கூறு அளவை (Statistic) அல்லது மாதிரிப்பண்பளவை என்றால் என்ன?
9.
முழுமைத் தொகுதி என்றால் என்ன?
10.
அதிக எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட ஒரு முழுமைத் தொகுதியிலிருந்து 100 மாணவர்கள் கொண்ட ஒரு மாதிரி தெரிவு செய்யப்படுகிறது. மாணவர்களின் சராசரி உயரம் 162 செ.மீ மற்றும் திட்டவிலக்கம் 8 செ.மீ. முழுமைத்தொகுதியின் சராசரி உயரம் 160 செ.மீ எனில் அதன் திட்டப்பிழையைக் காண்க
11.
ஒரு கூறின் அளவு 50 உடைய ஒரு மாதிரியின் திட்டவிலக்கம் 6.3. அதற்குரிய முழுமைத்தொகையின் திட்டவிலக்கம் 6 எனில் மாதிரியின் திட்டப்பிழை காண்க.
12.
திட்டவிலக்கம் 10 மற்றும் மாதிரியைப் பொறுத்து திட்டப்பிழை 3 எனில் மாதிரியின் அளவைக் காண்க.
13.
400 தனிநபர்களைக் கொண்ட ஒரு கூறில் உள்ளவர்களின் சராசரி உயரம் 67.47 அங்குலம் எனில், அக்கூறானது சராசரி உயரம் 67.39 அங்குலமும் திட்ட விலக்கம் 1.30 அங்குலமும் கொண்ட முழுமைத் தொகுதியிலிருந்து எடுக்கப்பட்டதாக கருதலாமா?
14.
(i) 900 பேர் கொண்ட ஒரு கூறின் சராசரி 3.4 செ.மீ ஆகவும், திட்டவிலக்கம் 2.61 செ.மீ ஆகவும் உள்ளது. சராசரி 3.25 செ.மீ மற்றும் திட்ட விலக்கம் 2.62 செ.மீ கொண்ட ஒரு பெரிய முழுமைத் தொகுதியிலிருந்து அக்கூறு எடுக்கப்பட்டதா? என சோதிக்க.
(ii) இயல் நிலையில் உள்ள ஒரு முழுமைத் தொகுதியின் சராசரி தெரியாத நிலையில், உண்மை சராசரியின் 95% மற்றும் 98% நம்பிக்கை எல்லைகளை காண்க.
15.
முறைப்படுத்திய கூறெடுப்பை தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
16.
கூறுசராசரியின் திட்டப்பிழையானது _____.
\(\frac { \sigma }{ \sqrt { 2n } } \)
\(\frac { \sigma }{ n } \)
\(\frac { \sigma }{ \sqrt { n } } \)
\(\frac { { \sigma }^{ 2 } }{ \sqrt { n } } \)
17.
இரண்டாவது வகைப்பிழை என்பது________ஆகும்.
H0 தவறு எனில் ஏற்பது
H0 உண்மை எனில் ஏற்பது
H0 உண்மை எனில் மறுப்பது
H0 தவறு எனில் மறுப்பது
18.
\(P[|\hat { \theta } -\theta |<\varepsilon ]\rightarrow \infty ,\varepsilon >0,\) எனில் \(\hat { \theta } \) என்பது \(\theta \)-ன் ________ உடைய மதிப்பீட்டு அளவையாகும்.
திறன்தன்மை
நிறைவுத்தன்மை
பிழையற்ற தன்மை
நிலைத்தன்மை
19.
கூறு அளவையைப் பயன்படுத்தி முழுமைத் தொகுதி பண்பளவைக்கான மிக சிறந்த மதிப்பை பெற முற்படும் முறையே ______.
மதிப்பீட்டு முறை
மதிப்பீட்டு அளவை
பிழற்சியான மதிப்பீடு
திட்டப் பிழை
20.
_________ யில் ஒரு சீரற்ற முழுமைத் தொகுதியானது சீரான துணை முழுமைத் தொகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது.
நிகழ்தகவு சாரா கூறெடுப்பு முறை
எளிய சமவாய்ப்பு கூறெடுப்பு முறை
படுகை வாய்ப்பு கூறெடுப்பு முறை
முறைப்படுத்திய கூறெடுப்பு முறை
21.
கீழ்க்காண்பவற்றில் எது நிகழ்தகவு கூறெடுப்பு வகையைச் சார்ந்தது.
நோக்கமுள்ள மாதிரித்தேர்வு
கருத்து கணிப்புமுறை
எளிய சமவாய்ப்பு கூறெடுப்பு
ஏதுவான முறை
22.
23.
கூறுகளிலிருந்து கணக்கிடப்பட்ட எந்தவொரு புள்ளியியல் அளவைகளும் _________ எனப்படும்.
தொகுதிப் பண்பளவை
கூறு பண்பளவை
முடிவுள்ள அளவை
எண்ணத்தக்கதற்ற அளவை
24.
ஒரு முழுமைத் தொகுதியின் முடிவுறு உட்கணத்தை ________ என கூறலாம்
கூறு
முழுமைத்தொகுதி
முழுமை
முழுமைக் கணிப்பு
25.
முடிவுறு அல்லது முடிவுறா __________ என்பது அதில் உள்ள முடிவுறு அல்லது முடிவுறா உறுப்புகளின் எண்ணிக்கையைப் பொறுத்தாகும்.
முழுமைத்தொகுதி
முழுமைக்கணிப்பு
தொகுதிப் பண்பளவை
மேற்கூறிய எதுவுமில்லை
1.
மாதிரியின் அளவு= 100, \(\bar { x } \) = 7.4, σ -ன் மதிப்பு தெரியாத
நிலையில் உள்ளது. ஆனால் \(\hat { \sigma } \) = s = 1.2
\(\breve { \sigma } =s\quad { Z }_{ \frac { \alpha }{ 2 } }=1.96\)
\(S.E=\frac { \breve { \sigma } }{ \sqrt { n } } =\frac { s }{ \sqrt { n } } =\frac { 1.2 }{ \sqrt { 100 } } =0.12\)
95% நம்பிக்கை இடைவெளியில் முழுமைத்தொகுதியின் சராசரியானது
\(\bar { x } -{ Z }_{ \frac { \alpha }{ 2 } }\frac { \sigma }{ \sqrt { n } } <\mu <\bar { x } +{ Z }_{ \frac { \alpha }{ 2 } }\frac { \sigma }{ \sqrt { n } } \)
\(7.4-(1.96\times 0.12)\le \mu \le 7.4+(1.96\times 0.12)\)
\(7.4-0.2352\le \mu \le 7.4+0.2352\)
\(7.165\le \mu \le 7.635\)
முழுமைத்தொகுதியின் சராசரி வலிமைத் திறனாது (7.165,7.635) என்ற 95% நம்பிக்கை இடைவெளிக்குள் உள்ளது.
2.
கொடுக்கப்பட்ட 2 இலக்க எண்களைக் கொண்ட சமவாய்ப்பு அட்டவணையிலிருந்து 1550 முதல் 8000 வரையிலான 4 இலக்கம் கொண்ட 10 மாதிரிகளை தேர்ந்தெடுக்க முதலில் இரண்டு இலக்க எண்களை மற்ற இரண்டிலக்க எண்களும் இணைந்து 4-இலக்க எண்களாக மாற்ற வேண்டும். அதாவது, அட்டவணையின் 5-வது மற்றும் 6-வது நிரல்களை நிழலிட்டவாறு இணைத்து முதல் ஐந்து மாதிரியையும் 8வது மற்றும் 9வது நிரல்களை இணைத்து அடுத்த ஐந்து மாதிரிகளையும் கொண்டு தேவையான 10 மாதிரிகளைத் தேர்ந்தெடுக்கலாம். கீழ்கண்ட அட்டவணையில் இரு நிரல்களை இணைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட சமவாய்ப்பு மாறிகளைக் காணலாம்.
எனவே, தேவையான 10 மாதிரிகளை கீழ்க்கண்டவாறு எழுதலாம்.
| 5901 | 4310 | 5032 | 5194 | 1899 |
| 7259 | 7435 | 4362 | 1758 | 5308 |
3.
இன்மை கருதுகோளுக்கு நிரப்புப் பண்பாக (complementary) அதாவது எதிராக அமையும் கருதுகோள் “மாற்று கருதுகோள்” எனப்படும். இதனை வழக்கமாக H1 என்று குறிப்பிடுகிறோம்.
4.
புள்ளியியல் அனுமானத்திற்கான செயல்பாட்டில் (i) மதிப்பிடுதல் (ii) கருதுகோள் சோதனை எனும் இரண்டு முக்கிய பகுதிகள் உள்ளன
5.
குறைகள் :
1. முறைப்படுத்திய கூறெடுப்பானது சமவாய்ப்பு முறையில் தெரிவு செய்யப்படுவதில்லை.
2. முழுமைத்தொகுதியின் அளவு N ஆனது மாதிரித்தொகுதி அளவு n இன் பெருக்கற் பலனாக இல்லாதிருப்பின் இடைவெளி k-இன் மதிப்பானது முழு எண்ணாக இருக்க வாய்ப்பில்லை. இவ்வாறான தருணங்களில் கூறுகளைத் தெரிவு செய்வது கடினம்.
6.
நிறைகள் :
1. தனிப்பட்ட நபரின் விருப்பு, வெறுப்பு தவிர்க்கப்படுகிறது
2. இது சிக்கனமான முறையாகும் ஏனெனில், பொருள் விரையம், காலவிரையம் மற்றும் அதிக உழைப்பு விரையமாவதை தவிர்க்கிறது.
7.
ஒரு புள்ளியியல் அளவையின் கூறெடுப்பு பரவலின் திட்டவிலக்கமே திட்டப்பிழை எனப்படும்.
8.
கூறுகளிலிருந்து கணக்கிடப்பட்ட எந்தவொரு புள்ளிவிவர அளவையும் கூறு பண்பளவை (Statistic) அல்லது மாதிரிப் பண்பளவை என்று அழைக்கப்படும்.
9.
முழுமைத் தொகுதி என்பது ஆய்விற்கு தேவையான அனைத்து கூறுகள் அல்லது அனைத்து உறுப்புகளின் தொகுப்பைக் குறிக்கும்.
10.
கொடுக்கப்பட்ட விவரத்தின்படி மாதிரிகளின் எண்ணிக்கை n = 100, \(\bar { x } \) =162 செ.மீ, s = 8 செ.மீ.
மாதிரி சராசரி \(\mu \)= 160 செ.மீ.
திட்டப்பிழை \(S.E=\frac { \hat { \sigma } }{ \sqrt { n } } =\frac { s }{ \sqrt { n } } =\frac { 8 }{ \sqrt { 100 } } =0.8\)
(முழுமைத் தொகுதியின் திட்டவிலக்கம் தரப்படாத நிலையில் \(\hat { \sigma } \) = s எனக் கொள்வோம்)
எனவே, சராசரி உயரம் 160 செ.மீ உள்ள பெரிய குழுவிலுள்ள மாணவர்களின் திட்டப்பிழை 0.8 ஆகும்.
11.
கூறின் அளவு n = 50
மாதிரியின் திட்டவிலக்கம் S.D s = 6.3
முழுமைத் தொகுதியின் திட்டவிலக்கம் S.D σ = 6
மாதிரியின் திட்டப்பிழை
\(S.E=\sqrt { \frac { { \sigma }^{ 2 } }{ 2n } } =\frac { 6 }{ \sqrt { 2(50) } } =\frac { 6 }{ \sqrt { 100 } } =0.6\)
∴ மாதிரியின் திட்டப்பிழை S.D = 6
12.
திட்டவிலக்கம் \(\sigma\) =10, S.E. \(\bar { X } \) =3, S.E =\(\frac { \sigma }{ \sqrt { n } } \)
எனவே, \(3=\frac { 10 }{ \sqrt { n } } \Rightarrow \sqrt { n } =\frac { 10 }{ 3 } \)
இருபுறமும் வர்க்கப்படுத்த, \(n={ \left( \frac { 10 }{ 3 } \right) }^{ 2 }\frac { 100 }{ 9 } \)=11.11\(\cong \)11,
∴ தேவையான மாதிரியின் அளவு n = 11.
13.
கூறின் அளவு n = 400
கூறு சராசரி \(\bar x \)= 67.47
முழுமைத்தொகுதி சராசரி μ = 67.39
முழுமைத்தொகுதி திட்டவிலக்கம் S.D σ = 1.30
இன்மை கருதுகோள் H0:μ = 67.39
மாற்று கருதுகோள் H1:μ ≠ 67.39
கூறுபண்பளவை சோதனை
\(\mathrm{Z} =\frac{\bar{x}-\mu}{\frac{\sigma}{\sqrt{n}} \sim \mathrm{N}(0,1)} \)
\(\mathrm{Z} =\frac{67.47-67.39}{\frac{1.30}{\sqrt{400}}}=\frac{0.08}{0.065} \)
\(|\mathrm{Z}| =1.2308\)
மறுக்கும் அளவு 5 % மிகைகாண் நிலை
\(Z_{a / 2}=1.96 \)
|Z|=1.2308<1.96
முடிவு: கணக்கிடப்பட்ட மதிப்பானது அட்டவணை மதிப்பை விட குறைவாக உள்ளது. அதாவது, Z < Zα/2 .5% மிகைகாண் நிலையில் இன்மை கருதுகோள் H0 ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
எனவே கூறானது முழுமைத் தொகுதியிலிருந்து எடுக்கப்பட்டதாகும்,
14.
(i) கணக்கின்படி
கூறு அளவு : n =900, கூறு சராசரி \(\bar { x } \) = 3.4 செ.மீ,
கூறு திட்டவிலக்கம் SD s = 2.61 செ.மீ
முழுமைத்தொகுதி சராசரி μ= 3.25 செ.மீ, முழுமைத் தொகுதியின் திட்ட விலக்கம் SD σ = 2.61 செ.மீ
இன்மை கருதுகோள் H0 : μ = 3.25 செ.மீ சராசரி μ= 3.25 மற்றும் செ.மீ SD σ = 2.61 செ.மீ உடைய முழுமைத் தொகுதியிலிருந்து கூறு எடுக்கப்பட்டிருக்கிறது.
மாற்று கருதுகோள்: H1:μ≠3.25 செ.மீ (இருமுனைச் சோதனை l) அதாவது சராசரி μ = 3.25 செ.மீ மற்றும் திட்ட விலக்கம் σ = 2.61 செ.மீ கொண்ட முழுமைத் தொகுதியிலிருந்து கூறு எடுக்கப்படவில்லை.
கூறுபண்பளவை சோதனைக்கு ஏற்பக் கணக்கிடல்
\(Z=\frac { 3.4-3.25 }{ \frac { 2.61 }{ \sqrt { 900 } } } =\frac { 0.15 }{ 0.087 } =1.724\)
\(\therefore\)Z=1.724
கணக்கிடப்பட்ட ∴ Z=1.724 மற்றும் அட்டவணை மதிப்பு \({ Z }_{ \frac { \alpha }{ 2 } }=1.96\)
இவற்றை ஒப்பிடுகையில் \(Z<{ Z }_{ \frac { \alpha }{ 2 } }\\ \)அதாவது 1.724 < 1.96
முடிவு: கணக்கிடப்பட்ட 5% மதிப்பானது, அட்டவணை மதிப்பை விட குறைவாக உள்ளது. அதாவது 5% மிகைகாண் நிலையில் \(Z<{ Z }_{ \frac { \alpha }{ 2 } }\\ \) ஆக உள்ளதால். இன்மை கருதுகோள் ஆனது ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
எனவே , சராசரி μ = 3.25 செ.மீ மற்றும் திட்ட விலக்கம், σ = 2.61 செ.மீ. உடைய முழுமைத் தொகுதியிலிருந்து கூறானது எடுக்கப்பட்டது என முடிவு செய்யப்படுகிறது.
(ii) நம்பிக்கை எல்லைகள் (Confidence limits)
முழுமைத் தொகுதியின் சராசரி μ விற்கான 95% நம்பிக்கை எல்லைகள்:
\(\bar { x } -{ Z }_{ \frac { \alpha }{ 2 } }SE\le \mu \le \bar { x } +{ Z }_{ \frac { \alpha }{ 2 } }SE\)
\(3.4-(1.96\times 0.087)\le \mu \le 3.4+(1.96\times 0.087)\)
\(3.229\le \mu \le 3.571\)
முழுமைத் தொகுதியின் சராசரி μ விற்கான 98% நம்பிக்கை எல்லைகள்:
\(\bar { x } -{ Z }_{ \frac { \alpha }{ 2 } }SE\le \mu \le \bar { x } +{ Z }_{ \frac { \alpha }{ 2 } }SE\)
\(3.4-(2.33\times 0.087)\le \mu \le 3.4+(2.33\times 0.087)\)
\(3.197\le \mu \le 3.603\)
எனவே , μ- இன் 95% நம்பிக்கை இடைவெளி (3.229,3.571) மற்றும் 98% நம்பிக்கை இடைவெளி (3.197,3.603) ஆகும்.
15.
முதல் கூறெடுப்பானது சமவாய்ப்பு முறையில் முதல் k அலகுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டு, முதல் கூறிலிருந்து ஒவ்வொரு k ஆவது உறுப்புகளை அடுத்த கூறுகளாக தெரிவு செய்யப்பட்டு பெறப்படும் கூறெடுப்பு, முறைப் படுத்திய கூறெடுப்பு அல்லது முறை சார்ந்த மாதிரி எடுத்தல் முறை என அழைக்கப்படுகிறது.
முழுமைத் தொகுதியிலுள்ள உறுப்புகளின் முழுபட்டியலும் இருக்கும்போது முறைப்படுத்திய கூறெடுப்பு முறை பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இம்முறையைப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக உறுப்புகளை ஏறுவரிசையிலோ, அகரவரிசையிலோ, புவியியல் அடிப்படையிலோ அல்லது இதுபோன்ற மற்ற ஏனைய வரிசைகளிலிருந்து ஏதாவது ஒரு வரிசையில் அமைத்தல் வேண்டும். இம்முறையில் மாதிரிகளைத் தெரிவு செய்யும் போது, முதல் உறுப்பை சமவாய்ப்பு முறையில் தெரிவு செய்து பிறகு மற்றைய உறுப்புகளை நாம் வரையறுத்த வடிவத்திற்கு உட்பட்டு முதல் உறுப்பு சார்ந்த முறையாகவும் தொடர்ச்சியாகவும் தெரிவு செய்யப்படுகின்றன. இம்முறையில் முழுமைத் தொகுதி யிலுள்ள ஒவ்வொரு kஆவது உறுப்பு மாதிரியில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இங்கு k என்பது மாதிரி எடுத்தலின் இடைவெளி ஆகும். இடைவெளி k என்பது முழுமைத் தொகுதியின் அளவுக்கும் (N) மாதிரிகளின் அளவுக்கும் (n) உள்ள விகிதமாகும்.
கூறு இடைவெளி k = N/n
உதாரணத்திற்கு : 6,000 உறுப்புகளைக் கொண்ட ஒரு முழுமைத் தொகுதியிலிருந்து 20 உறுப்புகளைக் கொண்ட ஒரு மாதிரியை முறைப்படுத்திய கூறெடுப்பு முறையில் தேர்வு செய்வதாக எடுத்துக்கொள்வோம். முதலில் 1 முதல் 6000 வரையிலான எண்களை அனைத்து 6000 உறுப்புகளுக்கும் குறியிட வேண்டும்.
மாதிரி இடைவெளி \(k=\frac{N}{n}=\frac{6000}{20}=300 .\)
மாதிரி இடைவெளி k= 300 என்பது 6000 உறுப்புகள் கொண்ட முழுமைத் தொகுதியிலுள்ள ஒவ்வொரு 300 மாதிரியிலும் ஒரு மாதிரியைத் தெரிவு செய்யலாம். முதல் மாதிரி 50 வது எண்ணாகத் தெரிவு செய்வோமாயின் மற்ற உறுப்புகளை முதல் உறுப்பிலிருந்து இடைவெளி 300 ஐக் கூட்டிப் பெற வேண்டும் அதாவது (k=300) 50, 350, 650, 950, 1250, 1550, 1850, 2150, 2450, 2750, 3050, 3350, 3650, 3950, 4250, 4550, 4850, 5150, 5450, 5750. இவ்வெண்களை உறுப்புகளாக கொண்ட மாதிரிகளை முழுமைத் தொகுதியிலிருந்து தெரிவு செய்யலாம்.
16.
(c)
\(\frac { \sigma }{ \sqrt { n } } \)
17.
(a)
H0 தவறு எனில் ஏற்பது
18.
(d)
நிலைத்தன்மை
19.
(a)
மதிப்பீட்டு முறை
20.
(c)
படுகை வாய்ப்பு கூறெடுப்பு முறை
21.
(c)
எளிய சமவாய்ப்பு கூறெடுப்பு
22.
(b)
23.
(b)
கூறு பண்பளவை
24.
(a)
கூறு
25.
(a)
முழுமைத்தொகுதி
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards