12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 06/12/2019
கூறெடுப்பு முறைகளும் புள்ளியியல் அனுமானித்தலும்
12ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
2.
தமிழ்நாட்டிலுள்ள ஒரு பள்ளியில், 1000 மாணவர்களைக் கொண்ட ஒரு மாதிரியில் அவர்களது சராசரி எடை 119 பவுண்டுகளாக (lbs) உள்ளது. தமிழ்நாட்டிலுள்ள மொத்த மாணவர்களின் சராசரி எடை 120 பவுண்டுகளாகவும், (lbs) திட்டவிலக்கம் 30 பவுண்டுகளாவும் (lbs) இருக்குமானால், சராசரிக்கான திட்டப்பிழையைக் கணக்கிடுக
3.
எளிய சமவாய்ப்பு கூறெடுப்பின் நன்மைகள் எவையேனும் இரண்டினை எழுதுக.
4.
அதிக எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட ஒரு முழுமைத் தொகுதியிலிருந்து 100 மாணவர்கள் கொண்ட ஒரு மாதிரி தெரிவு செய்யப்படுகிறது. மாணவர்களின் சராசரி உயரம் 162 செ.மீ மற்றும் திட்டவிலக்கம் 8 செ.மீ. முழுமைத்தொகுதியின் சராசரி உயரம் 160 செ.மீ எனில் அதன் திட்டப்பிழையைக் காண்க
5.
ஒரு கூறின் அளவு 50 உடைய ஒரு மாதிரியின் திட்டவிலக்கம் 6.3. அதற்குரிய முழுமைத்தொகையின் திட்டவிலக்கம் 6 எனில் மாதிரியின் திட்டப்பிழை காண்க.
6.
7.
கீழ்க்கண்ட டிப்பெட்டின் சமவாய்ப்பு எண் அட்டவணையை பயன்படுத்தி காவேரி தெருவில் உள்ள 83 வீடுகளிலிருந்து 15 வீடுகள் கொண்ட ஒரு சமவாய்ப்பு மாதிரியை தெரிவு செய்க.
| 2952 | 6641 | 3992 | 9792 | 7969 | 5911 | 3170 | 5624 |
| 4167 | 9524 | 1545 | 1396 | 7203 | 5356 | 1300 | 2693 |
| 2670 | 7483 | 3408 | 2762 | 3563 | 1089 | 6913 | 7991 |
| 0560 | 5246 | 1112 | 6107 | 6008 | 8125 | 4233 | 8776 |
| 2754 | 9143 | 1405 | 9025 | 7002 | 6111 | 8816 | 6446 |
8.
மின்விளக்குகள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 169 விளக்குகள் கொண்ட கூறின் சராசரி ஆயுட்காலம் 1350 மணி நேரம், அதன் திட்ட விலக்கம் 100 மணி நேரம் எனில், மின் விளக்குகளின் சராசரி ஆயுட்கால இடைவெளிகளை 90% நம்பிக்கை இடைவெளியில் காண்க.
9.
கீழ்க்கண்ட கேண்டல்- பாபிங்டன் ஸ்மித் சமவாய்ப்பு எண் அட்டவணையைப் பயன்படுத்தி.
| 23 | 15 | 75 | 48 | 59 | 01 | 83 | 72 | 59 | 93 | 76 | 24 | 97 | 08 | 86 | 95 | 23 | 03 | 67 | 44 |
| 05 | 54 | 55 | 50 | 43 | 10 | 53 | 74 | 35 | 08 | 90 | 61 | 18 | 37 | 44 | 10 | 96 | 22 | 13 | 43 |
| 14 | 87 | 16 | 03 | 50 | 32 | 40 | 43 | 62 | 23 | 50 | 05 | 10 | 03 | 22 | 11 | 54 | 36 | 08 | 34 |
| 38 | 97 | 67 | 49 | 51 | 94 | 05 | 17 | 58 | 53 | 78 | 80 | 59 | 01 | 94 | 32 | 42 | 87 | 16 | 95 |
| 97 | 31 | 26 | 17 | 18 | 99 | 75 | 53 | 08 | 70 | 94 | 25 | 12 | 58 | 41 | 54 | 88 | 21 | 05 | 13 |
1550 முதல் 8000 வரையிலான 4 இலக்க எண் கொண்ட 10 சமவாய்ப்பு மாதிரியை தேர்ந்தெடுக்க.
10.
அவசர மருத்துவ சிகிச்சை வாகன சேவை வழங்கும் ஒரு நிறுவனம், தங்களுக்கு கிடைக்கப்பெறும் அவசர அழைப்பின் போது சராசரியாக 8.9 நிமிடங்களில் அழைப்பிடத்தை சென்றடைவதாக கூறுகிறது. அவர்களின் கூற்றை சோதிக்க, எடுக்கப்பட்ட 50 அவசர அழைப்பின் மாதிரி தேர்வுகளில் அதன் சராசரி 9.3 நிமிடங்கள், திட்டவிலக்கம் 1.6 நிமிடங்கள் என அறியப்படுகிறது. 5% மிகைகாண் நிலையில் நிறுவனத்தின் கூற்று சரியானதா?
11.
இயல்நிலை பரவலில் உள்ள ஒரு தொழிற்சாலை ஊழியர்களின் ஊதியங்களின் சராசரி μ மற்றும் மாறுபாட்டளவை 25 என்க. 50 பணியாளர்கள் கொண்ட ஒரு கூறில் உள்ளவர்களின் மொத்த ஊதியம் ரூ.2,550 என்க. கருதுகோள், μ = 52, என்பதையும் அதற்கு மாறான கருதுகோள் μ = 49 யையும் 1% மிகைகாண் நிலையில் சோதனை செய்க.
12.
ஒரு மகிழுந்து தயாரிக்கும் நிறுவனம் தற்போது உபயோகத்தில் உள்ள மகிழுந்தை விட எரிபொருள் சிக்கனப்படுத்தும் நோக்கில் புதிய ஆறு உருளைத் திறன் உள்ள மகிழுந்தை அறிமுகம் செய்கிறது. 50 புதிய மகிழுந்துகள் மாதிரியாக எடுத்து அதன் பெட்ரோல் உபயோகம் குறித்து சோதனை செய்யப்பட்ட போது அது சராசரியாக ஒரு லிட்டருக்கு 10 கி.மீ மற்றும் அதன் திட்ட விலக்கம் 3.5 கி.மீ என அறியப்பட்டது. புதிய மகிழுந்தின் சராசரி பெட்ரோல் உபயோகம் லிட்டருக்கு 9.5 கி.மீ என்ற நிறுவனத்தின் அறிவிப்பை ஏற்றுக்கொள்ளலாமா என்பதை 5% மிகைகாண் நிலையில் சோதிக்க.
13.
கூறெடுப்பு சாரா பிழையைப் பற்றி விளக்குக.
14.
கூறெடுப்பு சார்ந்த பிழையைப் பற்றி விளக்குக.
15.
கூறுசராசரியின் திட்டப்பிழையானது _____.
\(\frac { \sigma }{ \sqrt { 2n } } \)
\(\frac { \sigma }{ n } \)
\(\frac { \sigma }{ \sqrt { n } } \)
\(\frac { { \sigma }^{ 2 } }{ \sqrt { n } } \)
16.
முழுமைத் தொகுதி பண்பளவையைக் குறித்த கருதுகோள் அல்லது கூற்றை உண்மை அல்லது அதற்கு மாறாக எடுத்துக்கொள்வது_______ ஆகும்.
கருதுகோள்
புள்ளியியல் அளவை
கூறு
முழுமைக் கணிப்பு
17.
முழுமைத் தொகுதி பண்பளவை கொடுக்கப்பட்ட இரு எண்களுக்கிடையே அமைந்துள்ளது என எதிர்பார்க்கப்படும் இடைவெளி பண்பளவையின் _______ இடைவெளியாகும்.
புள்ளி மதிப்பீடு
இடைவெளி மதிப்பீடு
திட்டப்பிழை
நம்பிக்கை
18.
மதிப்பீட்டு அளவையானது மாதிரி புள்ளியியல் அளவையின்_________ஐ மதிப்பிட பயன்படுகிறது
முழுமைத்தொகுதி பண்பளவை
பிழையான மதிப்பீட்டு
மாதிரி அளவு
முழுமைக் கணிப்பு
19.
கூறு அளவையைப் பயன்படுத்தி முழுமைத் தொகுதி பண்பளவைக்கான மிக சிறந்த மதிப்பை பெற முற்படும் முறையே ______.
மதிப்பீட்டு முறை
மதிப்பீட்டு அளவை
பிழற்சியான மதிப்பீடு
திட்டப் பிழை
1.
2.
\(\mathrm{n} =1000, \bar{x}=120 \mathrm{lbs} \)
\(\hat{\sigma} =\mathrm{s}=30 \mathrm{lbs}, \varphi=119 \mathrm{lbs} \)
\(\mathrm{S} . \mathrm{E} =\frac{\hat{\sigma}}{\sqrt{n}}=\frac{s}{\sqrt{n}}=\frac{30}{\sqrt{1000}} =\frac{30}{31.623}=0.9487
\)
3.
நிறைகள் :
1. தனிப்பட்ட நபரின் விருப்பு, வெறுப்பு தவிர்க்கப்படுகிறது
2. இது சிக்கனமான முறையாகும் ஏனெனில், பொருள் விரையம், காலவிரையம் மற்றும் அதிக உழைப்பு விரையமாவதை தவிர்க்கிறது.
4.
கொடுக்கப்பட்ட விவரத்தின்படி மாதிரிகளின் எண்ணிக்கை n = 100, \(\bar { x } \) =162 செ.மீ, s = 8 செ.மீ.
மாதிரி சராசரி \(\mu \)= 160 செ.மீ.
திட்டப்பிழை \(S.E=\frac { \hat { \sigma } }{ \sqrt { n } } =\frac { s }{ \sqrt { n } } =\frac { 8 }{ \sqrt { 100 } } =0.8\)
(முழுமைத் தொகுதியின் திட்டவிலக்கம் தரப்படாத நிலையில் \(\hat { \sigma } \) = s எனக் கொள்வோம்)
எனவே, சராசரி உயரம் 160 செ.மீ உள்ள பெரிய குழுவிலுள்ள மாணவர்களின் திட்டப்பிழை 0.8 ஆகும்.
5.
கூறின் அளவு n = 50
மாதிரியின் திட்டவிலக்கம் S.D s = 6.3
முழுமைத் தொகுதியின் திட்டவிலக்கம் S.D σ = 6
மாதிரியின் திட்டப்பிழை
\(S.E=\sqrt { \frac { { \sigma }^{ 2 } }{ 2n } } =\frac { 6 }{ \sqrt { 2(50) } } =\frac { 6 }{ \sqrt { 100 } } =0.6\)
∴ மாதிரியின் திட்டப்பிழை S.D = 6
6.
7.
மாதிரி அளவு 15 உள்ள ஒரு மாதிரியை டிப்பெட்டின் சமவாய்ப்பு அட்டவணையிலிருந்து பல வழிகளில் தெரிவு செய்யலாம். முழுமைத் தொகுதியின் அளவு 83 (இரண்டு இலக்க எண்) ஆதலால் தொகுதியிலுள்ள 83 வீடுகளுக்கும் கதவு எண்கள் 1 முதல் 83 வரை உள்ள எண்களைக் கொண்டு குறியிட வேண்டும். இப்போது இரண்டாம் நிரலிலிருந்து எண்களைத் தெரிவு செய்யத் தொடங்குவோம். அவை 66,74,52,39,15,34,11,14,13,27,61,79,72,35,60 ஒருவேளை நாம் எடுக்கும் எண் 83 ஐ விட அதிகம் எனில் அவ்வெண்ணை விடுத்து 1 முதல் 83 வரை உள்ள அடுத்த எண்ணைத் தெரிவு செய்யவேண்டும்.
| 2952 | 6641 | 3992 | 9792 | 7969 | 5911 | 3170 | 5624 |
| 4167 | 9524 | 1545 | 1396 | 7203 | 5356 | 1300 | 2693 |
| 2670 | 7483 | 3408 | 2762 | 3563 | 1089 | 6913 | 7991 |
| 0560 | 5246 | 1112 | 6107 | 6008 | 8125 | 4233 | 8776 |
| 2754 | 9143 | 1405 | 9025 | 7002 | 6111 | 8816 | 6446 |
8.
கணக்கின்படி: n =169, \(\bar { x } \)=1350 மணி, σ= 100 மணி மிகைக்காண் (100-90)% =10% ஆகும். ∝ is 0.1, 10% இல் மிகைக்காண் \({ Z }_{ \frac { \alpha }{ 2 } }\)=1.645
\(S.E.=\frac { \sigma }{ \sqrt { n } } =\frac { 100 }{ \sqrt { 169 } } =7.69\)
முழுமைத்தொகுதியின் சராசரியின் 90% நம்பிக்கை எல்லைகள்
\(\bar { x } -{ Z }_{ \frac { \sigma }{ 2 } }<\mu <\bar { x } +{ Z }_{ \frac { \sigma }{ 2 } }SE\)
\(1350-(1.645\times 7.69)\le \mu < 1350 + (1.645 × 7.69)\)
\(1337.35\le \mu \le 1362.65\)
மின் விளக்கு சராசரி ஆயுட்காலமானது 90% நம்பிக்கை இடைவெளியில் அமைகிறது. (1337.35, 1362.65) என்று அமைகிறது.
9.
கொடுக்கப்பட்ட 2 இலக்க எண்களைக் கொண்ட சமவாய்ப்பு அட்டவணையிலிருந்து 1550 முதல் 8000 வரையிலான 4 இலக்கம் கொண்ட 10 மாதிரிகளை தேர்ந்தெடுக்க முதலில் இரண்டு இலக்க எண்களை மற்ற இரண்டிலக்க எண்களும் இணைந்து 4-இலக்க எண்களாக மாற்ற வேண்டும். அதாவது, அட்டவணையின் 5-வது மற்றும் 6-வது நிரல்களை நிழலிட்டவாறு இணைத்து முதல் ஐந்து மாதிரியையும் 8வது மற்றும் 9வது நிரல்களை இணைத்து அடுத்த ஐந்து மாதிரிகளையும் கொண்டு தேவையான 10 மாதிரிகளைத் தேர்ந்தெடுக்கலாம். கீழ்கண்ட அட்டவணையில் இரு நிரல்களை இணைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட சமவாய்ப்பு மாறிகளைக் காணலாம்.
எனவே, தேவையான 10 மாதிரிகளை கீழ்க்கண்டவாறு எழுதலாம்.
| 5901 | 4310 | 5032 | 5194 | 1899 |
| 7259 | 7435 | 4362 | 1758 | 5308 |
10.
கூறு அளவு n = 50
கூறு சராசரி \(\bar { x } \)=9.3 நிமிடங்கள்
கூறு திட்டவிலக்கம் s = 1.6 நிமிடங்கள்
முழுமைத் தொகுதி சராசரி μ=8.9 நிமிடங்கள்
இன்மை கருதுகோள் H0:μ=8.9
மாற்று கருதுகோள் H1:μ≠8.9(Two tail)
மிகைகாண் நிலை = α=0.05
கூறுபண்பளவை சோதனைக்கு \(Z=\frac { x-\mu }{ \frac { \sigma }{ \sqrt { n } } } \sim N(0,1)\)
\(Z=\frac { 9.3-8.9 }{ \frac { 1.6 }{ \sqrt { 50 } } } =\frac { 0.4 }{ 0.2263 } =1.7676\)
கணக்கிடப்பட்ட மதிப்பு Z=1.7676
5% மிகைகாண் நிலையில் தீர்மானமதிப்பு \({ Z }_{ \frac { \alpha }{ 2 } }\)=1.96
முடிவு: கணக்கிடப்பட்ட மதிப்பானது அட்டவணை மதிப்பை விட குறைவாக உள்ளது. அதாவது, Z <\({ Z }_{ \frac { \alpha }{ 2 } }\) 5% மிகைகாண் நிலையில் இன்மை கருதுகோள் ஏற்கப்படுகிறது எனவே நோயுற்றோரை ஏற்றிச் செல்லும் வண்டி சேவை சராசரி 8.9 நிமிடங்களில் அவசர அழைப்பிடத்தை சேரும் என்ற கூற்று உண்மையாகிறது.
11.
கூறு அளவு n = 50 ஊழியர்கள்
மொத்த ஊதியம் Σx=2250
கூறு சராசரி
முழுமைத் தொகுதி சராசரி μ=52
முழுமைத் தொகுதி மாறுபாட்டளவை σ2=25
முழுமைத் தொகுதி திட்ட விலக்கம் SD =σ=25
இன்மை கருதுகோள் H0:μ=52
மாற்று கருதுகோள் H1:μ≠52 (இரு முனை)
மிகைகாண் நிலை α =0.01
கூறுபண்பளவை சோதனை \(Z=\frac { \bar { x } -\mu }{ \frac { \sigma }{ \sqrt { n } } } \sim N(0,1)\)
\(Z=\frac { 51-52 }{ \frac { 5 }{ \sqrt { 50 } } } =\frac { -1 }{ 0.7071 } =-1.4142\)
மாற்று கருதுகோள் இருமுனை சோதனையாகும், எனவே |Z|= 1.4142 எனப் பெறுகிறோம்.
தீர்மான மதிப்பு 1% மிகைகாண் நிலையில் \({ Z }_{ \frac { \alpha }{ 2 } }\)=2.58
முடிவு: கணக்கிடப்பட்ட மதிப்பானது அட்டவணை மதிப்பைவிட குறைவாக உள்ளது Z>\({ Z }_{ \frac { \alpha }{ 2 } }\), 1% மிகைகாண் நிலையில் இன்மை கருதுகோள் H0 ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
எனவே கூறு சராசரிக்கும் தொகுதி சராசரி μ= 52, திட்ட விலக்கம் σ = 5 -க்கும் குறிப்பிடத்தக்க வித்தியாசம் இல்லை என்பதால் m = 49 என்பது நிராகரிக்கப்படுகிறது.
12.
கொடுக்கப்பட்ட விவரங்களிலிருந்து, கூறு அளவு n=50, கூறு சராசரி \(\bar { x } \)=10கி.மீ,
கூறின் திட்டவிலக்கம் s=3.5 கி.மீ
முழுமைத்தொகுதி சராசரி μ=9.5 கி.மீ
முழுமைத்தொகுதியின் திட்டவிலக்கம் σ கொடுக்கப்படவில்லையாதலால் σ=s எனக் கொள்வோம்.
இது பெருங்கூறாதலால் Z-சோதனையைப் பயன்படுத்தலாம். சோதனை அளவை Z ஆனது திட்ட இயல்நிலை மாறியாகும்.
இன்மை கருதுகோள், கூறு சராசரிக்கும் முழுமைத் தொகுதி சராசரிக்கும் இடையே குறிப்பிடத்தக்க சிறப்பான வித்தியாசம் இல்லை அதாவது H0 : μ = 9.5 என்பதாகும்.
மாற்று எடுகோள் : கூறு சராசரி மற்றும் நிறுவனத்தின் சராசரிக்கும் வித்தியாசம் உள்ளது. அதாவது H1 : μ ≠ 9.5 (இருமுனை சோதனை)
மிகைகாண் நிலை ∝ = 5% = 0.05
கூறுபண்பளவைச் சோதனை கணக்கிடுதல்
\(Z=\frac { \bar { x } -\mu }{ \frac { \sigma }{ \sqrt { n } } } \sim N(0,1);Z=\frac { 10-9.5 }{ \frac { 3.5 }{ \sqrt { 50 } } } \sim N(0,1)=\frac { 0.5 }{ 0.495 } =1.01\)
கணக்கிடப்பட்ட Z-ன் மதிப்பு Z = 1.01 மற்றும் எதிர்பார்க்கப்படும் மதிப்பு அல்லது அட்டவணை மதிப்பு \({ Z }_{ \frac { \alpha }{ 2 } }\)=1.96. கணக்கிடப்பட்ட மதிப்பை அட்டவணை மதிப்போடு ஒப்பிடும்போது Z<\({ Z }_{ \frac { \alpha }{ 2 } }\) அதாவது 1.01<1.96.
அதாவது 1.01 < 1.96.
முடிவு: கணக்கிடப்பட்ட Z மதிப்பானது அட்டவணை மதிப்பை \({ Z }_{ \frac { \alpha }{ 2 } }\) விட குறைவாக உள்ளதால் Z<\({ Z }_{ \frac { \alpha }{ 2 } }\). 5% மிகைகாண் நிலையில் இன்மை கருதுகோள் H0 ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஆகவே நிறுவனத்தின் அறிவிப்பின்படி புதிய மகிழுந்தின் எரிபொருள் பயன்பாடு 9.5 கி.மீ/லி என்பதை ஏற்றுக்கொள்ளலாம்.
13.
கூறெடுப்பு சாரா பிழைகள் (Non-Sampling Errors) :
களப்பணி ஆய்வில் விவரங்களைச் சேகரிக்கும் போது, மதிப்பிடும் போது அல்லது கருவிகளைக் (நாடா, அளவுகோல்) கொண்டு அளவிடும் போதும் ஆய்வாளர்களுக்கிடையே விவரங்கள் வேறுபடுகிறது. இவ்வாறாக மனித காரணிகளால் எழும் பிழைகள் கூறெடுப்பு சாரா பிழைகளாகும் இப்பிழை ஏற்படுவதற்கான காரணங்களாவன:
(a) ஆய்வு மேற்கொள்பவரின் அல்லது பதிலளிப்பவரின் அலட்சியம் மற்றும் கவனக்குறைவு.
(b) மாதிரி கணிப்பில் ஈடுபடும் ஆய்வாளர்களின் அனுபவமின்மை மற்றும் தகுதி குறைவு.
(c) தவறான வினாப்பட்டியல் அமைப்பு.
(d) தவறான புள்ளிவிவர அளவைகளைப் பயன்படுத்துவது.
(e) மாதிரி கணக்கெடுத்தல் முடிவடையாத ஆய்வு.
14.
கூறெடுப்பு சார்ந்த பிழைகள் (Sampling Errors) :
கூறுகளை வாய்ப்பு முறையில் தெரிவு செய்வதிலும், அவற்றின் விவரங்களை சேகரிப்பதிலும் ஏற்படும் பிழைகள் கூறெடுப்பு சார்ந்த பிழைகள் எனப்படும். இப்பிழைகள் கூறினைத் தேர்ந்தெடுக்கும் முறையினை உள்ளடக்கியதாகும். இப்பிழை தற்செயலாகவும், சார்பற்றதாகவும், பாரபட்சம் இல்லாமலும் ஏற்படலாம். கூறெடுப்பு சார்ந்த பிழைகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள் பின்வருமாறு
(a) குறைபாடுள்ள உத்தியின் மூலம் சரியான கூறுக்கு பதில், தகுதியற்ற கூறு தேர்வு செய்யப்படும் போது.
(b) ஆய்வாளர் கூறெடுத்தலின் போது உகந்த உறுப்பு கிடைக்காதபோது அதற்கு பதிலாக தமக்கு தேவையான உறுப்பினைத் தெரிவு செய்யும்போது.
(c) நில அளவீடுகளின்போது எல்லைக்கோட்டினைக் கூறில் தேர்ந்தெடுப்பதா அல்லது தவிர்ப்பதா என்பது ஒவ்வொரு ஆய்வாளரைப் பொறுத்ததாகும். இவ்வாறு கூறெடுப்பது, தவறான வரையறை கொண்ட மாதிரி அலகுகள் (Faulty demarcation of sampling) எனப்படுகிறது.
15.
(c)
\(\frac { \sigma }{ \sqrt { n } } \)
16.
(a)
கருதுகோள்
17.
(b)
இடைவெளி மதிப்பீடு
18.
(a)
முழுமைத்தொகுதி பண்பளவை
19.
(a)
மதிப்பீட்டு முறை
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards