12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
விவரி: மருந்து இலக்குகளாக நொதிகள் அல்லது பூட்டு சாவி மாதிரி தொகுப்பு.
2.
அனிசோலின் பின்வரும் வினைகளை எழுதுக.
(i) ஹேலோஜனேற்றம்,
(ii) நைட்ரோ ஏற்றம்,
(iii) ப்ரீடல் கிராப்ட்ஸ் வினை.
3.
கீழ்கண்ட மாற்றங்களை எவ்வாறு நிகழ்த்துவாய் ?
i ) பீனால் \(\longrightarrow \) சாலிசிலால்டிஹைடு
ii ) பீனால்\(\longrightarrow \) பீனால்ப்தலீன்
iii ) கிளைகால் \(\longrightarrow \) 1, 4 டையாக்சேன்
4.
நைலான் -6,6 தயாரித்தல் மற்றும் பயன்களை எழுதுக.
5.
H2 - O2 எரிபொருள் மின்கலத்தின் செயல்பாடுகளை விளக்குக.
6.
7.
டேனியல் மின்கல கட்டமைப்பை விளக்குக. கலவினையை எழுதுக.
8.
கோல்ராஷ் விதியை கூறு. அளவிலா நீர்த்தலில் ஒரு வலிமை குறைந்த மின்பகுளியின் மோலார் கடத்துத்திறன் நிர்ணயித்தலில் கோல்ராஷ் விதி எவ்வாறு பயன்படுகிறது?
9.
ரீமர்-டீமன் வினை பற்றி குறிப்பு எழுதுக.
10.
மின்பகுளிக் கடத்துத்திறனை பாதிக்கும் காரணிகளில் ஏதேனும் மூன்றினை எழுதுக.
11.
பியூனா -N பற்றி எழுதுக.
12.
இணைமாற்றியம் (மெட்டாமெரிசம்) என்றால் என்ன? 2 – மீத்தாக்ஸிபுரப்பேனின் இணைமாற்றியங்களுக்கான IUPAC வடிவமைப்புகளைத் தருக.
13.
தன்னிழப்பு பாதுகாப்பு பற்றி குறிப்பு வரைக .
14.
இரப்பரின் வல்கையாக்கல் பற்றி குறிப்பு வரைக .
15.
போதை தரும், போதை தராத மருந்துப் பொருட்கள் என்றால் என்ன? எடுத்துக்காட்டுகள் தருக
16.
மின்பகுளிக் கடத்துத்திறன் அளவிடுதலில் DC மின்னோட்டத்திற்கு பதிலாக AC மின்னோட்டம் பயன்படுத்தப்படுகிறது. ஏன்?
17.
கால்வானிக் மின்கலத்தில் நேர்மின்முனையானது எதிர்குறி கொண்டதாகவும் எதிர்மின்முனையானது நேர்குறி கொண்டதாகவும் கருதப்படுகிறது ஏன்?
18.
ஓம் விதியைக் கூறு.
19.
டௌ முறை- குறிப்பு வரைக.
20.
பீனால்ப்தலீன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது ?
21.
22.
மலேரியா நிவாரணிகள் இரண்டை கூறுக.
23.
மக்கும் பலபடிகள் என்றால் என்ன? எடுத்துக்காட்டுகள் தருக.
24.
புறத்தடுப்பான்கள் எவ்வாறு கிருமிநாசினிகளிடமிருந்து வேறுபடுகின்றன?
25.
எதிர் உயிரிகள் என்றால் என்ன?
26.
0.1M HCl மற்றும் 0.1 M KCl இந்த இரண்டு கரைசல்களில் எது அதிக \(\Lambda_{\mathrm{m}}^{\mathrm{o}}\) கடத்துத்திறனை கொண்டது? ஏன்?
1.
அனைத்து உயிரின அமைப்புகளில் நிகழும் உயிர்வேதி வினைகள் அனைத்தும் நொதிகளால் தான் வினையூக்கம் பெறுகின்றன. எனவே, அமைப்பின் இயல்பான செயல்பாட்டிற்கு நொதிகளின் செயல்பாடு மிக அத்தியாவசியமானது. அவற்றின் இயல்பான நொதிச் செயல்பாடு தடுக்கப்பட்டால், அமைப்பானது பாதிக்கப்படும். பொதுவாக, இந்த தத்துவமானது பல்வேறு நோயுண்டாக்கும் நுண்ணுயிரிகளை அழிக்க பயன்படுத்தப்படுகிறது. நொதி வினையூக்க வினைகளில், கிளர்வு மையம் மற்றும் வினைப்பொருள் ஆகியவற்றில் காணப்படும் அமினோ அமிலங்களுக்கிடையேயான ஹைட்ரஜன் பிணைப்பு, வான் டெர் வால்ஸ் விசைகள் போன்ற வலிமை குறைந்த இடையீடுகளின் வாயிலாக வினைப்பொருளானது நொதியின் கிளர்வு மையத்துடன் பிணைக்கப்படுகிறது. வினைப்பொருளின் வடிவமைப்பை ஒத்த மருந்து மூலக்கூறானது உட்செலுத்தப்படும்போது, அதுவும் நொதியுடன் பிணைந்து அதன் செயல்பாட்டை முடக்குகிறது. அதாவது, மருந்துப் பொருட்கள் நொதி வினையூக்கி தடுப்பான்களாக செயல்படுகின்றன. இவ்வகை தடுப்பான்கள் போட்டித் தன்மையுள்ள தடுப்பான்கள் (Competitive inhibitors) என்றழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, p-அமினோபென்சாயிக் அமிலத்தின் (PABA) வடிவமைப்பை ஒத்த அமைப்பு கொண்ட சல்ஃபனிலமைடு எனும் எதிர் உயிரி மருந்தானது பாக்டீரியா வளர்ச்சியை தடுக்கிறது. ஃபோலிக் அமிலம் எனும் துணைநொதியை உற்பத்தி செய்யும் பொருட்டு பல பாக்டீரியாக்களுக்கு PABA தேவைப்படுகிறது. சல்ஃபனிலமைடு எதிர்உயிரியை உட்செலுத்தும்போது, பாக்டீரியாக்களில் PABAவை ஃபோலிக் அமிலமாக மாற்றமடையும் உயிர்வேதி தொகுப்பில் முக்கிய பங்காற்றும் டைஹைட்ரோப்டிரோயேட் சிந்தடேஸ் (DHPS) எனும் நொதிக்கு போட்டித் தன்மையுள்ள தடுப்பானாக செயல்படுகிறது. இது ஃபோலிக் அமில பற்றாக்குறையை உருவாக்குகிறது, இதன் விளைவாக பாக்டீரியாவின் வளர்ச்சி தடைசெய்யப்பட்டு அவை கொல்லப்படுகின்றன.
சில நொதிகளில், தடுப்பான் மூலக்கூறானது கிளர்வு மையங்களில் பிணையாமல் வேறு சில மையங்களில் சென்று பிணைகிறது. இந்த மையங்கள் பொதுவாக பிறமையங்கள் (allosteric site) என குறிப்பிடப்படுகின்றன. இவை நொதியிலுள்ள கிளர்வு மையங்களின் வடிவங்களை மாற்றமடையச் செய்கின்றன. இதன் விளைவாக வினைப்பொருள் மூலக்கூறுகள் நொதியுடன் பிணைய இயலாமல் போகிறது. இவ்வகை தடுப்பான்கள் பிறமைய தடுப்பான்கள் (allosteric inhibitors) என்றழைக்கப்படுகின்றன.
மருந்து இலக்குகளாக உணர்வேற்பிகள் :
பல மருந்துகள், உணர்வேற்பி என்றழைக்கப்படும் குறிப்பிட்ட மூலக்கூறுடன் பிணைந்து அவற்றின் உடலியல் விளைவுகளை உண்டாக்குகின்றன. செல்லில் துலங்கலை தூண்டுவதே இந்த உணர்வேற்பிகளின் முக்கிய வேலையாகும். பெரும்பாலான உணர்வேற்பிகள் செல் சவ்வுகளுடன் இணைந்தே காணப்படுகின்றன. மேலும் இவற்றின் கிளர்வு மையங்கள் செல் சவ்வின் வெளிப்பகுதியில் வெளியே தெரியும்படி அமைந்துள்ளன. செல்களுக்கு தகவல்களை தாங்கிச் செல்லும் வேதித்தூதுவர்கள் இந்த உணர்வேற்பிகளின் கிளர்வு மையங்களுடன் பிணைகின்றன. இதன் மூலம் தகவல் செல்லினுள் தகவல் கடத்தப்படுகிறது. இந்த உணர்வேற்பிகள் ஒரு குறிப்பிட்ட வேதிக் தூதுவர்க்கு மட்டும் தேர்ந்து செயலாற்றுகின்றன. ஒரு தகவலை நாம் தடுக்க வேண்டுமெனில், உணர்வேற்பியின் கிளர்வு மையத்துடன் பிணையும் தன்மை கொண்ட ஒரு மருந்துப் பொருள் பிணைந்து உணர்வேற்பியின் இயல்பான செயல்பாட்டை தடுக்க வேண்டும். இத்தகைய மருந்துகள் எதிர்வினையூக்கிகள் (antagonists) என்றழைக்கப்படுகின்றன. இதற்கு மாறாக, சில மருந்துப்பொருட்கள் உணர்வேற்பிகளில் இயற்கையான வேதித்தூதுவர்களுக்கு பதிலாக பிணைகின்றன. இவ்வகை மருந்துகள் முதன்மை இயக்கிகள் (agonists) என்றழைக்கப்படுகின்றன. மேலும் வேதித்தூதுவர்களின் பற்றாக்குறை ஏற்படும்போது இவை பயன்படுத்தப்படுகின்றன.
2.
(i ) ஹேலோஜனேற்றம் வினைவேக மாற்றி இல்லாத சூழ்நிலையிலும் அனிசோல் அசிட்டிக் அமிலத்தில் கலந்த புரோமினுடன் புரோமினேற்றம் அடைகிறது. இதில் பாரா புரோமோ அனிசோல் முக்கிய விளைபொருளாகக் கிடைக்கிறது.
(ii )நைட்ரோ ஏற்றம்:
அனிசோல் நைட்ரோ ஏற்ற கலவை (அடர் H2SO4 / அடர் HNO3 உடன் வினைபட்டு ஆர்த்தோ நைட்ரோ அனிசோல் மற்றும் பாரா நைட்ரோ அனிசோலின் கலவையாக கொடுக்கிறது.
(iii ) ப்ரீடல் கிராப்ட்ஸ் வினை
நீரற்ற AlCl3 முன்னிலையில் அனிசோல் ப்ரீடல் கிராப்ட்ஸ் வினைக்கு உட்படுகிறது.
3.
i ) பீனால் \(\longrightarrow \) சாலிசிலால்டிஹைடு
ii ) பீனால்\(\longrightarrow \) பீனால்ப்தலீன்
iii ) கிளைகால் \(\longrightarrow \) 1, 4 டையாக்சேன்
4.
நைலான் 6-6 சமஅளவு மோல் எண்ணிக்கையில் அடிப்பிக் அமிலம் மற்றும் ஹெக்ஸா மெத்திலீன் டையமீன் கலந்து நைலான் உப்பு பெறப்படுகிறது. இந்த உப்பை வெப்பப்படுத்தும்போது நீர் மூலக்கூறு வெளியேறுவதனால் அமைடு பிணைப்புகள் உருவாகி நைலான்-6,6 கிடைக்கிறது.
இது ஜவுளித்துறையிலும், அட்டைகள் தயாரிப்பிலும் பயன்படுகிறது.
5.
எரிபொருள் மின்கலத்தில் ஹைட்ரஜன், எரிபொருளாகவும், ஆக்ஸிஜன், ஆக்ஸிஜனேற்றியாகவும், 200°C வெப்பநிலை மற்றும் 20-40 atm அழுத்தத்தில் பராமரிக்கப்படும் நீர்த்த KOH கரைசல் மின்பகுளியாகவும் செயல்படுகின்றன. Ni மற்றும் NiO ஆகியவற்றைக் கொண்டுள்ள நுண்துளைகளையுடைய கிராஃபைட் மின்முனையானது வினையுறா மின்முனையாக செயல்படுகிறது.
ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் வாயுக்கள் முறையே நேர்மின்முனை மற்றும் எதிர்மின்முனைகளில் குமிழிகளாக செலுத்தப்படுகின்றன. நேர்மின்முனையில் ஆக்ஸிஜனேற்றம் நிகழ்கிறது.
\(2 \mathrm{H}_2(\mathrm{~g})+4 \mathrm{OH}^{-}(\mathrm{aq}) \rightarrow 4 \mathrm{H}_2 \mathrm{O}(\mathrm{l})+4 e^{-}\)
எதிர்மின்முனையில் ஒடுக்கம் நிகழ்கிறது
\(\mathrm{O}_2(g)+2 \mathrm{H}_2 \mathrm{O}(\mathrm{l})+4 e^{-} \rightarrow 4 \mathrm{OH}^{-}(a q)\)
ஒட்டுமொத்த வினை
\(2 \mathrm{H}_2(g)+\mathrm{O}_2(g) \rightarrow 2 \mathrm{H}_2 \mathrm{O}(\mathrm{l})\)
மேற்கண்ட வினையானது ஹைட்ரஜனின் எரிதல் வினையை ஒத்துள்ளது. எனினும், அவை நேரடியாக வினைபுரிவதில்லை. அதாவது ஆக்ஸிஜனேற்றம் மற்றும் ஒடுக்கம் வினைகள் முறையே நேர்மின்முனை மற்றும் எதிர்மின்முனைகளில் தனித்தனியாக நிகழ்கின்றன. H2 - O2 எரிபொருள் மின்கலத்தைப் போலவே புரப்பேன் -O2 மற்றும் மீத்தேன் -O2, போன்ற எரிபொருள் கலன்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
6.
7.
டேனியல் மின்கலம் ஒரு கால்வானிக் மின்கலமாகும். இது ஒரு வோல்டாயிக் மின்கலம் ஆகும்.
இது இரண்டு அரை மின்கலங்களைக் கொண்டுள்ளது.
அ) ஆக்ஸிஜனேற்ற அரை மின்கலன்
முகவையிலுள்ள நீர்த்த ஜிங்க் சல்பேட் கரைசலில் ஜிங்க் உலோகப்பட்டை மூழ்க வைக்கப்பட்டுள்ளது.
ஒடுக்க அரை மின்கலன்
முகவையிலுள்ள நீர்த்த காப்பர் சல்பேட் கரைசலில் காப்பர் உலோகப் பட்டை மூழ்க வைக்கப்பட்டுள்ளது.
அரை மின்கலங்களை இணைத்தல்
ஜிங்க் மற்றும் காப்பர் பட்டைகள் வெளிப்புறமாக ஒரு கம்பி மூலம் இணைக்கப்படுகின்றன. இதனூடே ஒரு இணைப்பியும் (k) ஒரு மின்மூலமும் இணைக்கப்பட்டுள்ளன. (எடுத்துக்காட்டு: வோல்ட் மீட்டர்).
எதிர்மின்முனைப் பகுதி மற்றும் நேர்மின்முனைப் பகுதிகளிலுள்ள மின்பகுளிக் கரைசல்கள், தலைகீழாக கவிழ்த்து வைக்கப்பட்டுள்ள U வடிவ குழாய் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த U வடிவ குழாயில், அகார்-அகார் ஜெல்லுடன் KCl, Na2 SO4 போன்ற வினையுறா மின்பகுளிகள் கலந்த பசை வைக்கப்பட்டுள்ளது. இது உப்பு பாலமாக செயல்படுகிறது.
இணைப்பி (k) மூலம் மின்சுற்றை மூடும்போது, எலக்ட்ரான்கள் ஜிங்க் பட்டையிலிருந்து காப்பர் பட்டைக்கு பாய்கின்றன. இதற்கு காரணம் அந்தந்த மின்முனைகளில் நிகழும் ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினைகளே ஆகும்.

நேர்மின்வாய் ஆக்ஸிஜனேற்றம்
i) ஜிங்க் பட்டை நேர்மின்முனை என்றழைக்கப்படுகிறது.
ii) ஜிங்க் மின்முனையில் ஆக்ஸிஜனேற்றம் நிகழ்கிறது.
iii) ஜிங்க் ஆனது Zn2+ அயனிகளாகவும், எலக்ட்ரான்களாகவும் ஆக்ஸிஜனேற்றமடைகின்றன.
iv) இந்த Zn2+அயனிகள் கரைசலுக்குள் நுழைகின்றன.
v) எலக்ட்ரான்கள் கம்பியின் வழியே வெளிச்சுற்றிற்கு பாய்கின்றன. பின்னர் அவை காப்பர் பட்டைக்குள் நுழைகின்றன.
vi) ஜிங்க் மின்முனையில் எலக்ட்ரான்கள் விடுவிக்கப்படுவதால், எதிர்குறியை (-ve) பெறுகிறது.
\(\mathrm{Zn}_{(\mathrm{s})} \rightarrow \mathrm{Zn}_{(\mathrm{aq})}^{2+}+2 \mathrm{e}^{-}\) (எலக்ட்ரான் இழப்பு -ஆக்ஸிஜனேற்றம்)
எதிர்மின்வாய் ஒடுக்கம் :
காப்பர் பட்டை - எதிர்மின்வாய்வாக செயல்படுகிறது.
ஆக்ஸிஜன் ஒடுக்கம் நடைபெறுகிறது.
மின்சுற்று வழியே ஜிங்க் பட்டையிலிருந்து காப்பர் பட்டைக்கு பாய்கின்றன.
கரைசலிலுள்ள Cu2+ அயனிகள் எலக்ட்ரான்களை ஏற்றுக்கொண்டு காப்பர் உலோகமாக ஒடுக்கமடைகின்றன.
இவை காப்பர் மின்முனையின் மீதே படிகின்றன.
காப்பர் மின்முனை எலக்ட்ரான்களை உட்கொள்ளப்படுவதால் நேர்க்குறியை (+ve) பெறுகிறது.
\(C u_{(a q)}^{2+}+2 e^{-} \rightarrow C u_{(s)}\)
(எலக்ட்ரான் ஏற்பு - ஒடுக்கம்)
உப்புப்பாலம் :
இரண்டு அரை மின்கலன்களிலுள்ள மின்பகுளிக் கரைசல்கள் உப்புப்பாலத்தை பயன்படுத்தி இணைக்கப்படுகின்றன.
இரண்டு மின்நடுநிலைத்தன்மையை பகுதிகளிலும் பராமரிக்க, வினையுறா எதிரயனிகள் Cl- (உப்புப் பாலத்தில் வைக்கப்பட்டுள்ள KCI லிருந்து) உப்புப் பாலத்திலிருந்து நேர்மின்முனைப்பகுதிக்குள் நுழைகின்றன.
எதிர்மின்முனை ஒடுக்கத்தால் எதிர்மின்முனை கரைசல் அதிகளவு SO42- அயனியை கொண்டுள்ளது.
மின் நடுநிலைத் தன்மையை பராமரிக்க K+அயனிகள் உப்புப்பாலத்திலிருந்து எதிர்மின்முனைப்பகுதிக்குள் நகருகின்றன.
மின்சுற்று முழுமையடைதல்:
எதிர்மின்சுமை கொண்ட ஜிங்க் மின்முனையிலிருந்து, நேர்மின்சுமை கொண்ட காப்பர் மின்முனையை நோக்கி வெளிச்சுற்றின் வழியே எலக்ட்ரான்கள் பாய்கின்றன.
அதே நேரத்தில், எதிரயனிகள் நேர்மின்முனைப் பகுதியை நோக்கியும், நேரயனிகள் எதிர்மின்முனைப் பகுதியை நோக்கியும் நகருகின்றன.
இதனால் மின்சுற்று முழுமையடைகிறது.
மின்முனைகள் அழிதல்:
டேனியல் மின்கலமானது செயல்பட, ஜிங்க் மின்முனையில் நிறை தொடர்ந்து குறைகிறது, ஆனால் காப்பர் மின்முனையின் நிறை தொடர்ந்து அதிகரிக்கிறது.
எனவே ஜிங்க் மின்முனையானது முற்றிலுமாக Zn2+ அயனிகளாக மாறும் வரையிலோ அல்லது மொத்த Cu2+ அயனிகளும் உலோக காப்பராக மாறும் வரையிலோ மின்கலன் வேலை செய்யும்.
Zn(s) + CuSO4(aq) \(\rightarrow\) ZnSO4(aq) + Cu(s)
கால்வானிக் மின்கல குறியீடு
\(Z n_{(s)}\left|Z n_{(a q)}\right| C u^{2+}_{(a q)}| C u_{(s)}\)
8.
கோல்ராஷ் விதி:
அளவிலா நீர்த்தலில், ஒரு மின்பகுளியின் வரம்புநிலை மோலார் கடத்துத்திறன் மதிப்பானது, அதன் பகுதிக்கூறு அயனிகளின் வரம்புநிலை மோலார் கடத்துத்திறன்களின் கூடுதலுக்கு சமமாக இருக்கும். அதாவது நேரயனிகள் ஒரு திசையிலும், எதிரயனிகள் அதற்கு எதிர்திசையிலும் ஒன்றையொன்று சாராமல் நகர்வதால் மோலார் கடத்துத்திறன் கிடைக்கிறது.
NaCl, போன்ற ஒற்றை-ஒற்றை இணைதிற மின்பகுளிக்கு கோல்ராஷ் விதியானது பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது.
\(\left ( \Lambda^{0}_m \right )_{NaCl}=\left ( \lambda ^{0}_m \right )_{Na^{+}}+\left ( \lambda^{0}_m \right )_{Cl^-}\)
பொதுவாக அளவிலா நீர்த்தலில் Ax By எனும் வாய்ப்பாடு கொண்ட ஒரு மின்பகுளியின் மோலார் கடத்துத்திறனை கோல்ராஷ் விதிப்படி பின்வருமாறு எழுதலாம்.
\(\left ( \Lambda^{0}_m \right )_{A_xB_y}=X\left ( \lambda ^{0}_m \right )_{A^{y+}}+Y\left ( \lambda^{0}_m \right )_{B^{x-}}\)
ஆ) கோல்ராஷ் விதியின் பயன்கள்.
அளவிலா நீர்த்தலில் ஒரு வலிமைகுறைந்த மின்பகுளியின் மோலார் கடத்துத்திறனை சோதனை மூலம் நிர்ணயித்தல் என்பது சாத்தியமே இல்லாத ஒன்றாகும். எனினும், அதே மதிப்பை கோல்ராஷ் பயன்படுத்தி கணக்கிட முடியும்.
எடுத்துக்காட்டாக, HCl, NaCl மற்றும் CH3COONa, போன்ற வலிமைமிகு மின்பகுளிகளின் சோதனை மூலம் கண்டறியப்பட்ட மோலார் கடத்துத்திறன் மதிப்புகளிலிருந்து CH3 COOH அமிலத்தின் மோலார் கடத்துத்திறன் மதிப்பை கணக்கிட முடியும்.
\(\begin{aligned}
\Lambda_{\mathrm{CH}_3 \mathrm{COONa}}^{\mathrm{o}} & =\lambda_{\mathrm{Na}^{+}}^0+\lambda_{\mathrm{CH}_3 \mathrm{COO}^{-}}^0
\end{aligned}\) ...(1)
\(\begin{aligned}
\Lambda_{\mathrm{HCl}}^0 & =\lambda_{\mathrm{H}+}^0+\lambda_{\mathrm{Cl}^{-}}^0
\end{aligned}\) ...(2)
\(\begin{aligned}
\Lambda_{\mathrm{NaCl}}^0 & =\lambda_{\mathrm{Na}^{+}}^0+\lambda_{\mathrm{Cl}^{-}}^0
\end{aligned}\) ...(3)
சமன்பாடு (1) + சமன்பாடு (2) - சமன்பாடு (3) கொடுப்பது,
\(\begin{aligned}
& \left(\Lambda_{\mathrm{CH}_3 \mathrm{COONa}}^0\right)+\left(\Lambda_{\mathrm{HCl}}^0\right)-\left(\Lambda_{\mathrm{NaCl}}^0\right)=\lambda_{\mathrm{H}+}^0+\lambda_{\mathrm{CH}_3 \mathrm{CoO}^{-}}^0 \\
\end{aligned}\)
\(\begin{aligned}
& =\Lambda_{\mathrm{CH}_3 \mathrm{COOH}}^0
\end{aligned}\)
9.
10.
மின்பகுளிக் கடத்துத்திறனை பாதிக்கும் காரணிகள்:
(i ) அதிக மின்காப்பு மாறிலியை கொண்ட கரைப்பானில் கொண்டுள்ளது.
(ii ) வெப்பநிலை அதிகரிக்கும்போது மின்பகுளிக் கரைசலின் கடத்துத்திறனும் அதிகரிக்கிறது.
(iii ) பாகுநிலைத்தன்மை குறையும்போது கடத்துத்திறன் அதிகரிக்கிறது.
(iv ) ஒரு கரைசலின் மோலார் கடத்துத்திறன் மதிப்பு நீர்த்தலின் போது அதிகரிக்கிறது.
11.
இது அக்ரிலோ நைட்ரைல் மற்றும் பியூட்டா -1,3- டையின் இணைந்த பல்லின பலபடி ஆகும்.
இது நெளிக்குழல்கள் தயாரிக்கவும் தண்ணீர் தொட்டியின் உள்பூச்சாகவும் பயன்படுகிறது.
12.
ஈதர்கள் ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டைப் பெற்றிருக்கும். ஆனால், ஆக்ஸிஜன் அணுவோடு பொருந்தி இருக்கும் ஆல்கைல் தொகுதி வேறுபட்டு இருக்கும். இதனையே மெட்டாமெரிஸம் என்கிறோம்.
2 - மீத்தாக்சி புரப்பேனின் மெட்டாமெர்கள்:
C2H5 - O - C2H5 - டை எத்தில் ஈதர்
CH3 - O - CH2 - CH3 மெத்தில்-n-புரோப்பைல் ஈதர்
13.
எதிர்முனைப் பாதுகாப்பு : மின்முலாம் பூசுதலைப் போலல்லாமல், இந்த தொழில்நுட்ப உத்தியில் பாதுகாக்கப்படவேண்டிய உலோகம் முழுவதும் பாதுகாப்பு உலோகத்தை பூசவேண்டிய அவசியமில்லை. மாறாக, Mg அல்லது ஜிங்க் போன்ற இரும்பைவிட எளிதில் அரிமானமடையும் உலோகங்களை தன்னிழப்பு நேர்மின்முனையாக பயன்படுத்த முடியும். இரும்பு எதிர்மின்முனையாக செயலாற்றுகிறது. எனவே இரும்பு பாதுகாக்கப்படுகிறது. ஆனால் Mg அல்லது Zn அரித்தலுக்கு உள்ளாகின்றன.
14.
சார்லஸ் குட் இயர் என்பவர் இயற்கை இரப்பர் மற்றும் சல்பர் சேர்ந்த கலவையை சூடான அடுப்பின் மீது தற்செயலாக விட்டார். அந்த இரப்பரானது வலிமையானதாகவும், நீளும் தன்மை கொண்டதாகவும் மாறியதைக் கண்டு அவர் ஆச்சரியமடைந்தார். குட் இயர் இந்த செயல்முறையை “இரப்பர் உருவூட்டல்" அல்லது வல்கையாக்கல் என்றழைத்தார். இயற்கை இரப்பரை, 5 - 3.% சல்பருடன் சேர்த்து -100 150°C வெப்பநிலையில் வெப்பப்படுத்தும்போது சிஸ் -1.4 பாலிஐசோபிரீன் சங்கிலிகள் டைசல்பைடு பிணைப்புகளால்(-S-S) குறுக்க பிணைக்கப்படுகின்றன.
வல்கனைசேஷனுக்கு பயன்படுத்தப்படும் சல்பரின் அளவை கட்டுப்படுத்துவதன் மூலமாக இரப்பரின் இயற் பண்புகளை மாற்றியமைக்க முடியும். 1 முதல் 3 % வரை சல்பரைக் கொண்டுள்ள இரப்பரானது மிருதுவானதாகவும், நீளும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.3 முதல் 10% வரை சல்பரைப் பயன்படுத்தும்போது இரப்பரானது கடினமானதாக ஆனால், நெகிழும் தன்மை கொண்டதாக மாறுகிறது.
15.
போதை தரும் வலி நிவாரணிகள்: [ஓபியாய்டுகள்]
இவை போதை தரக்கூடிய வலிநிவாரணிகளாகும். இவை வலியை நீக்கி தூக்கத்தை கொடுக்கின்றன.
கடுமையான வலியிலிருந்து, நிவாரணம் அளிக்க குறைந்த காலம் அல்லது நீண்ட காலத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக அறுவை சிகிச்சைக்கு பிறகு உண்டாகும் வலி, இறுதி நிலை புற்று நோய் வலிக்கு பயன்படுகிறது.
எ.கா: மார்ஃபின், கோடின்
போதை தராத வலி நிவாரணி:
இவை போதை ஏற்படுத்தாத நிவாரணிகளாகும். இவை, சுய உணர்வு நிலையை பாதிக்காமல் வலியை குறைக்கின்றன.
குறிப்பிட்ட இடத்திலுள்ள வலி தூண்டல்களை குறைத்து வலியை நீக்குகின்றன. இவை குறுகிய கால நிவாரணியாகவும், தலைவலி, தசைவலி, சிராய்ப்பு அல்லது மூட்டு அழற்சி போன்ற மிதமான வலியை போக்கவும் பயன்படுகிறது.
எ.கா: ஆஸ்பிரின், பாராசிட்டமால், புரூஃபென் இதில் இரு வகைகள் உள்ளன.
அ) அழற்சி எதிர்ப்பு மருந்துகள்:
எ.கா: ஆஸ்பிரின், புரூஃபென்
ஆ) ஸ்டீராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு
மருந்துகள்:
(NSAIDs) எ.கா: புரூஃபென்
16.
ஒரு உலோக கம்பியின் நியம மின்தடையை அளவிடும்போது DC மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. இங்கு மின்கடத்துக் கலன்வழியே DC மின்சாரத்தை செலுத்தும்போது, கலனில் எடுத்துக்கொள்ளப்பட்ட கரைசல் மின்னாற்பகுத்தலுக்கு உள்ளாகிறது. எனவே மின்னாற்பகுத்தலை தடுக்கும் பொருட்டு AC மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது.
17.
நேர்மின்வாய் ஆக்ஸிஜனேற்றம்:
கால்வானிக் மின்கலத்தில் நேர்மின்முனை உலோகம், உலோக அயனிகளாகவும், எலக்ட்ரான்களாகவும் ஆக்ஸிஜனேற்றமடைகின்றன.
உலோக அயனிகள் கரைசலுக்குள் நுழைகின்றன. மேலும், எலக்ட்ரான்கள் நேர்மின்முனை வழியே வெளிச்சுற்றிற்கு பாய்கின்றன.
ஜிங்க் மின்முனையில் எலக்ட்ரான்கள் விடுவிக்கப்படுவதால், எதிர்குறியை (-ve) பெறுகிறது.
Zn(s) → Zn2+(aq) + 2e-
(எலக்ட்ரான் இழப்பு - ஆக்ஸிஜனேற்றம்)
எதிர்மின்வாய் ஒடுக்கம்:
எலக்ட்ரான்கள் மின்சுற்று வழியே ஜிங்க் பட்டையிலிருந்து காப்பர் பட்டைக்கு பாய்கின்றன.
கரைசலிலுள்ள Cu2+ அயனிகள் எலக்ட்ரான்களை ஏற்றுக்கொண்டு காப்பர் உலோகமாக ஒடுக்கமடைகின்றன.
காப்பர் மின்முனை எலக்ட்ரான்களை உட்கொள்ளப்படுவதால் நேர்க்குறியை (+ve) பெறுகிறது.
\(C u^{2+}{ }_{(a q)}+2 e^{-} \rightarrow C u_{(s)}\)
(எலக்ட்ரான் ஏற்பு - ஒடுக்கம்)
18.
மாறாத வெப்பநிலையில், ஒரு மின்கலத்தின் வழியே பாயும் மின்னோட்டமானது (I), அந்த மின்சாரத்தின் மின்னழுத்த வேறுபாட்டிற்கு (V) “ நேர் விகிதத்திலிருக்கும்
\(\mathrm{I} \infty \mathrm{V}\\ I=\frac{V}{R}(\text { I }) V=I R \)
இங்கு R = மின்கலத்தின் மின் தடையாகும்.
19.
20.
21.
22.
1. குயிநைன்
2. பிரிமெத்தமின்
3. பிரிமாக்குயின்
4. குளோரோகுயின்
23.
இயற்கை பலபடிகளைப் போன்று, சில செயற்கைப் பலபடிகளும் மண்ணிலுள்ள நுண்ணுயிரிகளினால் சிதைவுறுகின்றன. இவ்வாறான பலபடிகள் மக்கும் பலபடிகள் எனப்படும். எ.கா: PHB, PHBV, PGA, PLA, PCL மற்றும் நைலான்-2-நைலான்-6
இவை சுற்றுச்சூழல் மாசுக்களை ஏற்படுத்துவதில்லை.
24.
| புறத்தடுப்பான் | கிருமிநாசினி |
| நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை தடுக்கும் மருந்தாக உயிருள்ள திசுக்களின் மீது பயன்படுகிறது. | நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை தடுக்கும் மருந்தாக உயிரற்ற பொருட்களின் மீது பயன்படுத்தப்படும் வேதிப்பொருளாகும். |
| எல்லா புறத்தடுப்பான் கிருமி நாசினியாக பயன்படுத்தலாம். | எல்லா கிருமிநாசினிகளும் புறத்தடுப்பான்களாக பயன்படுவதில்லை. |
| இவற்றை உட்கொள்ளப்படுவதோ விழுங்கப்படுவதோ இல்லை. | இவற்றை ஊசிகளின் மூலமாக உட்செலுத்தவோ, விழுங்கவோ படுகிறது. |
| எ.கா. போவிடோன் அயோடின் | எ.கா. H2O2 குளோரின் சேர்மங்கள் |
புறைத்தடுப்பான் என்பன, உயிருள்ள திசுக்களின் மீது பயன்படுத்தப்படும் மருந்துகளாகும். கிருமிநாசினிகள் என்பன, தரை போன்ற உயிரற்ற பொருட்களின் மீது பயன்படுத்தப்படும் அதே வேதிப்பொருட்களாகும்.
25.
1.அநேக நுண்ணுயிரிகள் (பாக்டீரியா, பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகள் சில வேதிப்பொருட்களை வெளிப்படுத்துகின்றன.
2. இவ்வேதிப்பொருட்கள் மற்ற நுண்ணுயிரிகள் வளர்ச்சி, வளர்சிதை மாற்றத்தை தடுக்கும் தன்மையுடைய வேதிகள் நுண்ணுயிரி எதிரிகள் எனப்படுகின்றன .
26.
HCI ன் கடத்துத்திறன் அதிகமாகும்;
ஏனெனில் அனைத்து அயனிகளிலும் H+ அயனியானது பெரும இயங்கு திறனை பெற்றிருக்கும். (mobility)
25°C ல் : H+ = 36.23 m2s-1V-1
கடத்துத்திறனானது இவற்றை பொறுத்தது:
1) மின்பகுளியின் தன்மை
2) செறிவு
3) அயனிகளின் இயங்கு திறன்
4) வெப்பநிலை
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards