12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
கீழ்கண்ட சேர்மங்களின் IUPAC பெயர்களை எழுதுக.
(i) \(\left[\mathrm{Cr}\left(\mathrm{Pph}_{3}\right)(\mathrm{CO})_{5}\right]\)
(ii) \(\left[\mathrm{Co}\left(\mathrm{CO}_{3}\right)\left(\mathrm{NH}_{3}\right)_{4}\right] \mathrm{Cl}\)
2.
\(\left[ PtCl_{ 2 }\left( { { NH }_{ 3 } } \right) _{ 2 } \right] \) சேர்மத்தின் சிஸ் டிரான்ஸ் ஐசோமர்களின் வடிவங்களை வரைக
3.
அயனியாதல் மாற்றியங்கள் என்றால் என்ன? ஒரு உதாரணத்துடன் விளக்குக
4.
சலவைத்தூள் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
5.
அணைவு எண் வரையறு.
6.
ஆர்கானின் பயன்களைத் தருக.
7.
ஹாலஜனிடைச் சேர்மங்கள் என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் தருக.
8.
ஏன் ஃபுளுரின் எப்போதும் -1 ஆக்சிஜனேற்ற நிலையினைப் பெற்றுள்ளது? விளக்குக.
9.
HF அமிலம் கண்ணாடி பாட்டில்களில் சேமிக்கப்படுவதில்லை. ஏன்?
10.
இராஜதிராவகம் என்றால் என்ன? தங்கத்தின் மீது அதன் வினை யாது?
11.
VB கொள்கையின் வரம்புகள் யாவை?
12.
[Ni(H2O)6]2+ ன் நீர்க்கரைசல் பச்சை நிறமுடையது ஆனால் [Ni(CN)4]2-ன் கரைசல் நிறமற்றது விளக்குக.
13.
14.
கந்தக அமிலம் ஒரு நீர் நீக்கும் காரணி - என்பதனைத் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
15.
ஹீலியத்தின் பயன்களைத் தருக.
16.
பின்வரும் சேர்மங்களில் ஹாலஜன்களின் ஆக்சிஜனேற்ற நிலையினைக் குறிப்பிடுக.
அ) OF2
ஆ) O2F2
இ) Cl2O3
ஈ) I2O4
17.
[Fe(en)2Cl2]Cl2 என்ற அணைவுச் சேர்மங்களுக்கு,
1. Feன் ஆக்ஸிஜனேற்ற எண்
2. இனக்கலப்பு மற்றும் அமைப்பு
3. காந்தத்தன்மை
4. வடிவ மாற்றியங்களின் எண்ணிக்கை
5. ஒளிசுழற்சி மாற்றிம் உண்டா?
6. IUPAC பெயர்
18.
19.
உலோக கார்பனைல்களின் வகைப்பாட்டினை விவரி.
20.
படிக புலக் கொள்கையின் முக்கிய கோட்பாடுகளை எழுதவும்.
21.
இணைதிற பிணைப்புக் கொள்கையின் முக்கிய கருதுகோள்களை எழுது.
22.
K4[Mn(CN)6]அணைவின், மைய உலோக அயனியின் ஆக்சிஜனேற்ற நிலை, அணைவு எண், ஈனியின் தன்மை, காந்தப் பண்பு, மற்றும் எண்முகி படிக புலத்தில் எலக்ட்ரான் அமைப்பு ஆகியனவற்றைத் தருக
23.
24.
பின்வரும் பெயருடைய அணைவுச் சேர்மங்களுக்கு உரிய வாய்ப்பாட்டினைத் தருக.
அ) பொட்டாசியம் ஹெக்சாசயனிடோபெர்ரேட் (II)
ஆ) பென்டாகார்பனைல் இரும்பு (o)
இ) பென்டாஅம்மைன்நைட்ரிடோ -K-N-கோபால்ட் (III) அயனி
ஈ) ஹெக்ஸாஅம்மைன்கோபால்ட் (III) சல்பேட்
உ) சோடியம் டெட்ராபுளூரிடோடை ஹைராக்ஸிடோகுரமேட் (III)
1.
(i) பென்டா கார்பனைல் ட்ரை பினைல் பாஸ்பேன் குரோமியம் (0)
(ii) டெட்ரா அம்மைன் கார்பனேட்டோ கோபால்ட் (III) குளோரைடு
2.
3.
அயனியுறும் எதிர்மாறு அயனியானது எளிய அயனி ஈனிகளாக செயல்படும் தன்மையினைப் பெற்றிருப்பின் அத்தகைய நேர்வுகளில் இம்மாற்றியம் ஏற்படுகிறது. இத்தகைய எதிர்மாறு அயனிகள், அணைவு உட்பொருளில் உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஈனிகளுடன் பரிமாற்றம் அடையும் போது அயனியாதல் மாற்றியங்கள் உருவாகின்றன.
உதாரணங்கள்:
(i) \(\left[ Cr\left( { NH }_{ 3 } \right) _{ 4 }ClBr \right] { NO }_{ 2 }\) மற்றும் \(\left[ Cr\left( { NH }_{ 3 } \right) _{ 4 }{ Cl\quad NO }_{ 2 } \right] Br\)
(ii) \(\left[ Cr\left( { NH }_{ 3 } \right) _{ 4 }{ Br }_{ 2 } \right] Cl\) மற்றும் \(\left[ Cr\left( { NH }_{ 3 } \right) _{ 4 }Cl\quad Br \right] Br\)
4.
குளோரின் வாயுவை உலர்ந்த கால்சியம் ஹைட்ராக்சைடு கரைசல் வழியாக செலுத்தும்போது சலவைத்தூள் உருவாகிறது.
Ca(OH)2 + Cl2 ⟶ CaOCl2 + H2O
5.
ஒரு அணுவில், மைய உலோக அணு / அயனியுடன் இணைக்கப்பட்டுள்ள ஈனிகளுடைய வழங்கி அணுக்களின் எண்ணிக்கை அந்த உலோக அணுவின் அணைவு எண் எனப்படும்.
6.
சூடான மின்னிழைகளில் ஆக்சிஜனேற்றம் ஏற்படுவதை ஆர்கான் தடுக்கிறது. இதனால் பல்புகளில் காணப்படும் மின்னிழைகளில் ஆயுள் நீடிக்கப்படுகிறது.
7.
ஒவ்வொரு ஹேலஜனும் மற்ற ஹேலஜன்களுடன் வினைபட்டு ஹேலஜன் இடைச்சேர்மங்கள் என்ற இடைச்சேர்மங்களை உருவாக்குகின்றன.
உதாரணம்: AB வகை BrF : AB, வகை = ICl3
8.
1. ஃபுளுரின் அதிக எலக்ட்ரான் கவர்திறன் கொண்ட தனிமமாகும். எனவே இது நேர் ஆக்ஸிஜனேற்ற நிலையை பெற்றிருப்பதில்லை.
2. ஃபுளுரினில் ஒரு தனித்த இணையுறாத எலக்ட்ரான் உள்ளதால் இது 1 ஆக்ஸிஜனேற்ற நிலையைப் பெற்றுள்ளது.
9.
HF அமிலம் கண்ணாடியில் உள்ள சிலிக்கா மற்றும் சிலிகேட்டுகளுடன் வினைபுரிந்து, கண்ணாடியை அரிக்கிறது. எனவே HF அமிலம் கண்ணாடி பாட்டில்களில் சேமிக்கப்படுவதில்லை
SiO2 + 4HF ⟶ SiF4 + 2H2O
Na2SiO3 + 6HF ⟶ Na2SiF3 + 3H2O
10.
(i) மூன்று பங்கு அடர் ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் ஒரு பங்கு அடர் நைட்ரிக் அமிலம் கலந்த கலவை இராஜதிராவகம் எனப்படும்.
(ii) இது தங்கம், பிளாட்டினம் போன்ற உலோகங்களை கரைக்க பயன்படுகிறது
Au + 4H+ + NO-3 + 4Cl- ⟶ AuCl-4 + NO + 2H2O
11.
VB கொள்கையின் வரம்புகள்:
1. அணைவுச் சேர்மங்களின் நிறங்களை இக்கொள்கை விளக்கவில்லை.
2. இது சுழற்சியால் ஏற்படும் காந்தத் திருப்புத் திறனை மட்டுமே கருத்திற்கொண்டது. காந்தத் திருப்புத் திறனின் பிற கூறுகளை கருத்திற்கொள்ளவில்லை.
3. ஒரே உலோகத்தின் அணைவுச் சேர்மங்களில் சில, உள் ஆர்பிட்டால் அணைவுகளாகவும் மற்ற சில சேர்மங்கள், ஆர்பிட்டால் அணைவுகளாகவும் காணப்படுகின்றன. ஏன் இவ்வாறு மாறுபட்ட அணைவுகள் உருவாகின்றன என்பதற்கு உரிய விளக்கத்தினை இக்கொள்கை தரவில்லை.
4. எடுத்துக்காட்டு:
\(\left[\mathrm{Fe}(\mathrm{CN})_6\right]^{4-}\)ஆனது டையாகாந்தப்பண்புடையது (குறை சுழற்சி அணைவு) ஆனால் \(\left[\mathrm{FeF}_6\right]^{4-}\) ஆனது பாரா காந்தத்தன்மையுடையது (உயர் சுழற்சி அணைவு).
12.
(i) [Ni(H2O)6]2+,

H₂O ஒரு வலிமை குறைந்த ஈனி எனவே எலக்ட்ரான்கள் இணையாவதில்லை. இரு இணையாகாத எலக்ட்ரான்கள் உள்ளன. இதனால் d-d இடப்பெயர்ச்சி நடைபெறும் சேர்மம் நிறத்தை (பச்சை) பெறுகிறது.
(ii) [Ni(CN)4]2-
[Ni(CN)4]2- இதில் CN- வலிமை மிகு ஈனி. இதனால் 3d- எலக்ட்ரான்கள் இணையாக்கப்படுகின்றன. எனவே தனித்த இணையாகாத எலக்ட்ரான்கள் இல்லை. இதனால் d-d இடப்பெயர்ச்சி நடைபெறாது. எனவே நிறமற்றதாக உள்ளது.

13.
14.
C12H22O11 + H2SO4 ⟶ 12C + H2SO4.11H2O
HCOOH + H2SO4 ⟶ CO + H2SO4.H2O
(COOH)2 + H2SO4 ⟶ CO + CO2 + H2CO3H2O
15.
1. மின்வில் முறையில் உலோகங்களை ஓட்டும் செயல்முறையில் மந்த வினைபுரியா சூழலை ஏற்படுத்துகிறது
2. குறைவான கொதிநிலையைக் கொண்டிருப்பதால் கிரையோஜெனிக் நுட்பங்களில் பயன்படுகிறது.
3. காற்றை விட லேசானது என்பதால் காற்றில் மிதக்கும் பலூன்களில் நிரப்பப் பயன்படுகிறது.
16.
ஃபுளுரின் - 1 ஆக்சிஜனேற்ற நிலையை மட்டுமே பெற்றுள்ளது. எனவே ஃபுளுரின் ஆக்சிஜனேற்ற நிலை
அ) OF2 ல் -1
-2 - 2x = 0
-2x = +2
x = 2/2
x = -1
ஆ) O2F2 ல் 2
2(+1)4 + 2x = 0
-2x = 2
x = -2/2
x = -1
இ) Cl2O3
2x + 3(-2) = 0
2x - 6 = 0
2x = +6
x = 6/2
x = +3
Cl2O3 ல் Cl ன் ஆக்சிஜனேற்ற நிலை +3
ஈ) I2O4
2x - 8 = 0
2x = +8
x = 8/2
x = +4
I2O4 ல் I ன் ஆக்சிஜனேற்ற நிலை +4
17.
1. Feன் ஆக்ஸிஜனேற்ற எண் : +3
2. இனக்கலப்பு : d2sp3 மற்றும் அமைப்பு : எண்முகி
3. காந்தத்தன்மை : பாராகாந்தத்தன்மை
4. வடிவ மாற்றியங்களின் எண்ணிக்கை : இரண்டு, சிஸ் மற்றும் டிரான்ஸ் வடிவம்
5. ஒளிசுழற்சி மாற்றியம் உண்டா? : ஆம், சிஸ் மாற்றியம் ஒளிசுழற்சி மாற்றியத்தைத் தரும்.
6. IUPAC பெயர் : டைகுளோரிடோ பிஸ் (ஈத்தேன்-1, 2-டை அமீன்) இரும்பு (III) குளோரைடு.
18.
19.
உலோக கார்பனைல்கள் இரு வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
1. உலோக அணுக்களின் எண்ணிக்கையை பொறுத்து வகைப்படுத்தல்.
அ) ஒற்றை அணுக்கரு கார்பனைல்கள்:
இவை ஒரே உலோக அணுவை பெற்றுள்ளது. (எ.கா) [Ni(Co)4]
ஆ) பல அணுக்கரு கார்பனைல்கள்:
(i) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உலோக அணுக்களைப் பெற்றுள்ளது.
(ii) இவை ஒரே விதமான அணுக்கள் அல்லது பலவிதமான அணுக்களைப் பெற்றவையாக இருக்கலாம்.
(எ.கா) [Co(CO)8] ; [MnCo (CO)9]
2. வடிவமைப்பினை பொறுத்து வகைப்படுத்தல்
அ) இணைப்பு பாலம் இல்லாத உலோக கார்பனைல்கள்
(i) இவை இணைப்பு கார்பனைல் தொகுதியற்றவை.
(ii) இவைகளில் முனைய கார்பனைல் தொகுதிகள் மட்டுமே உள்ளன.
(iii) முனைய கார்பனைல் ஈனிகள் மற்றும் உலோக - உலோக பிணைப்பு இரண்டையும் பெற்றிருப்பவை.
ஆ) இணைப்பு பாலம் உடைய கார்பனைல்கள்:
இவைகளில் முனைய கார்பனைல் ஈனிகள், இணைப்பு பால கார்பனைல் ஈனிகள் மற்றும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உலோக - உலோக பிணைப்புகள் ஆகியன காணப்படலாம்.
20.
(i) மைய உலோக அணு மற்றும் ஈனிகளுக்கு இடையேயான பிணைப்பு முற்றிலும் அயனித்தன்மை உடையது என கருதப்பட்டது. எலக்ட்ரான் அடர்வினை மிகுதியாகக் கொண்ட ஈனிகளுக்கும், குறை எலக்ட்ரான் தன்மையுடைய மைய உலோக அயனிக்கும் இடையே ஏற்படும் நிலை மின்னியல் கவர்ச்சி விசையினால் இப்பிணைப்பு ஏற்படுகிறது.
(ii) மைய உலோக அணு / அயனி மற்றும் ஈனிகள் மின்சுமை பெற்றிருந்தால் அவை புள்ளி மின்சுமைகளாகவும், நடுநிலைத்தன்மை பெற்றிருந்தால் மின் இரு முனைகளாகவும் கருதப்படுகின்றன.
(iii) அணைவுச் சேர்மம் உருவாதல் தொடர்ச்சியான பின்வரும் கருத்தியலான படிகளை உள்ளடக்கியது.
படிநிலை - 1: தனித்த வாயுநிலையில், மைய உலோகம் அயனியின் ஐந்து 'd' ஆர்பிட்டாலுக்கும் சம ஆற்றலுடையவைகளாக உள்ளன. ஆரம்பத்தில், மைய உலோக அயனியின் எலக்ட்ரான்களுக்கும் ஈனிகளின் எலக்ட்ரான்களுக்கும் இடையே ஏற்படும் விலக்கு விசையால் அனைத்து ஐந்து 'd' ஆர்பிட்டால்களின் ஆற்றலும் அதிகரிக்கிறது.
படிநிலை - 2: மைய உலோக அயனியை பிணைப்பின் திசையில் ஈனிகள் அணுகுகின்றன. எண்முகி புலத்தில் மைய உலோக அயனி ஆய அச்சுகள் சந்திக்கும் ஆதிப்புள்ளியில் உள்ளது. ஆறு ஈனிகளும் +x, -x, +y, -y, +z மற்றும் -z ஆகிய திசைகளில் மைய உலோக அயனியை அணுகுகின்றன.
அச்சின் மீது மடல்களைக் கொண்ட dx2 - y2 மற்றும் dz2 ஆர்பிட்டால்கள் அதிக விலக்கு விசைக்கு உட்படுவதால் அவற்றின் ஆற்றல் அதிகரிக்கிறது. அச்சின் இடையே மடல்களைக் கொண்ட dxy, dyz மற்றும் dzx ஆர்பிட்டால்கள் குறைந்த விலக்கு விசைக்கு உட்படுவதால் அவற்றின் ஆற்றல் குறைகிறது. இவ்வாறாக சம ஆற்றலுடைய ஐந்து d ஆர்பிட்டால்கள் இரு வகைகளாக (eg, t2g) என பிரிகின்றன. இச்செயல்முறை படிகப்புல பிளப்பு எனப்படுகிறது.
படிநிலை - 3: இந்நிலை வரையில் அணைவுச் சேர்மம் உருவாவதற்கு சாதகமான சூழல் இல்லை. எனினும், ஈனிகள் மேலும் அணுகும் போது, எதிர்மின்சுமையுடைய ஈனிகளின் எலக்ட்ரான்களுக்கும், நேர்மின் சுமையுடைய உலோக அயனிகளுக்கும் இடையே கவர்ச்சி விசை ஏற்படுகிறது. இதனால் நிகர ஆற்றல் குறைவு ஏற்படுகிறது. இந்த ஆற்றல் குறைவு அணைவு உருவாவதற்கு காரணமாக அமைகிறது.
(i) நான்முகி அணைவுச் சேர்மங்களில் கனசதுரத்துடன் ஒன்று விட்டு ஒன்றாக அமைந்துள்ள மூலைகளிலிருந்து கனசதுரத்தின் முதன்மை மூலைவிட்டம் வழியே நான்கு ஈனிகளும் மைய உலோக அயனியை அணுகுகின்றன. இப்புலத்தில் எந்த ஒரு d ஆர்பிட்டாலும் ஈனிகள் அணுகும் திசையிலேயே அமைவதில்லை. எனினும் dxy, dyz, dzx ஆகியன dx2 - y2, dz2 ஆர்பிட்டால்களை விட ஈனிகள் அணுகும் திசைக்கு அருகாமையில் அமைந்துள்ளன. எனவே dxy, dyz, dzx ஆகியவற்றின் ஆற்றல் அதிகரித்து dx2 - y2, dz2 ஆற்றல் குறைகிறது.
(ii) எனவே எண்முகி படிக புலத்தோடு ஒப்பிடும்போது, இப்புலத்தில் படிக புலப்பிளப்பானது தலைகீழ் மாற்றமடைந்து, பிளப்பு ஆற்றலின் அளவு குறைவாக உள்ளது. இரு புலங்களுக்கு இடையேயான படிக புலப்பிளப்பு ஆற்றல்களின் தொடர்பு \({ \triangle }_{ t }=\frac { 4 }{ 9 } { \triangle }_{ 0 }\) ஆகும்.
21.
(i) அணைவுச் சேர்மங்களில் உள்ள ஈனி ⟶ உலோக பிணைப்பு சகப்பிணைப்புத் தன்மை உடையது. இது ஈனி வழங்கும் எலக்ட்ரான் இரட்டைகளை ஈனியும், மைய உலோக அயனியும் சமமாக பங்கிடுவதால் ஏற்படுகிறது.
(ii) ஒவ்வொரு ஈனியும் குறைந்தபட்சம் ஒரு தனித்த இரட்டை எலக்ட்ரான்களைக் கொண்டுள்ள நிரப்பப்பட்ட ஆர்பிட்டாலைப் பெற்றிருக்க வேண்டும்.
(iii) ஈனிகள் வழங்கும் இணை எலக்ட்ரான்களை பெற்றுக் கொள்ள உலோக அயனி அதன் அணைவு எண்ணுக்குச் சமமான எண்ணிக்கையில் காலியான ஆர்பிட்டால்களைப் பெற்றிருக்க வேண்டும்.
(iv) மைய உலோக அணுவின் இந்த வெற்று ஆர்பிட்டால்கள் இனக்கலப்படைகின்றன.
(v) மைய உலோக அணுவின் இனக்கலப்படைந்த வெற்று ஆர்பிட்டால்களும், ஈனிகளின் நிரப்பப்பட்ட ஆர்பிட்டால்களும் நேர்கோட்டில் மேற்பொருந்தி உலோகம் மற்றும் ஈனிகளுக்கிடையே ஈதல் சிக்மா சகப்பிணைப்பினை ஏற்படுத்துகின்றன.
(vi) இனக்கலப்படைந்த ஆர்பிட்டால்கள் திசை பண்புடையவை. இவைகள் புறவெளியில் குறித்த திசையில் அமைவதால் அணைவு அயனிக்கு குறிப்பிட்ட வடிவம் உருவாகிறது.
(vii) எண்முகி அணைவுகளில் (n - 1) d ஆர்பிட்டால்கள் இனக்கலப்புக்கு உட்பட்டால் அவை உள் ஆர்பிட்டால் அணைவுகள், குறை சுழற்சி அணைவுகள் அல்லது இணை சுழற்சி அணைவுகள் எனப்படுகின்றன. nd ஆர்பிட்டால்கள் இனக்கலப்புக்கு உட்பட்டால், அவை வெளி ஆர்பிட்டால் அணைவுகள், உயர் சுழற்சி அணைவுகள் அல்லது தனித்த சுழற்சி அணைவுகள் எனப்படுகின்றன.
(viii) மைய உலோக அயனி தனித்த இணையாகாத எலக்ட்ரான்களை கொண்டிருந்தால், அச்சேர்மம் பாராகாந்தத் தன்மையுடையது. அனைத்து எலக்ட்ரான்களும் இரட்டைகளாகக் காணப்பட்டால், அச்சேர்மம் டையா காந்தத் தன்மையுடையது.
(ix) CO, CN-, en மற்றும் NH3 போன்ற ஈனிகள் மைய உலோக அணுவில் உள்ள எலக்ட்ரான்களை இணையாக்குவதால் அவை வலிமை புல ஈனிகள் எனப்படுகின்றன. F-, Cl-, Br- போன்ற ஈனிகள் மைய உலோக அணுவில் உள்ள எலக்ட்ரான்களை இணை செய்யாததால் அவை வலிமை குறை ஈனிகள் எனப்படுகின்றன.
(x) இனக்கலப்பு உலோக ஆர்பிட்டாலுக்கும், ஈனிகளின் ஆர்பிட்டாலுக்கும் இடையே மேற்பொருந்துதல் அதிகபட்சமாக இருந்தால், பிணைப்பும் வலிமையாக இருக்கும்.
22.
மைய உலோக அயனியின் ஆக்சிஜனேற்ற நிலை = +2 (i.e) MN2+
அணைவு எண் : 6
ஈனியின் தன்மை: (CN-) எதிர் ஈனி
காந்தப் பண்பு : பாராகாந்தம்
எண்முகி படிகபுலத்தில் எலக்ட்ரான் அமைப்பு:
தாழ்சுழற்சி : \( \mathrm{t}_{2 \mathrm{~g}}^5 \mathrm{e}_{\mathrm{g}}{ }^0
\)
உயர்சுழற்சி : \(\mathrm{t}^3{ }_{2 g} \mathrm{e}_{\mathrm{g}}{ }^2
\)
23.

24.
அ) K4 [Fe (CN)6]
ஆ) [Fe(CO)5]
இ) [Co (NH3)5 (NO2)]2+
ஈ) [Co(NH3)6]2 (SO4)3
உ) Na3 [CrF4 (OH)2]
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards