12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
கீழ்கண்ட சேர்மங்களின் IUPAC பெயர்களை எழுதுக.
(i) \(\left[\mathrm{Cr}\left(\mathrm{Pph}_{3}\right)(\mathrm{CO})_{5}\right]\)
(ii) \(\left[\mathrm{Co}\left(\mathrm{CO}_{3}\right)\left(\mathrm{NH}_{3}\right)_{4}\right] \mathrm{Cl}\)
2.
'நின்றொளிர்தல்' என்றால் என்ன?
3.
மைய உலோக அயனி என்றால் என்ன?
4.
இணைப்பு மாற்றியம் என்றால் என்ன? ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக.
5.
PCl5 ஐ வெப்பப்படுத்தும் போது நிகழ்வது யாது?
6.
கந்தக அமிலத்தின் பயன்களைத் தருக.
7.
ஏன் ஃபுளுரின் எப்போதும் -1 ஆக்சிஜனேற்ற நிலையினைப் பெற்றுள்ளது? விளக்குக.
8.
மந்த இணை விளைவு என்றால் என்ன?
9.
இணைப்பு பாலம் இல்லாத கார்பனைல்கள் பற்றி குறிப்பு வரைக.
10.
ஹோல்ம்ஸ் முன்னறிவிப்பான் பற்றி குறிப்பு வரைக
11.
12.
[Ti(H2O)6]3+ நிறமுடையது ஆனால் [Sc(H2O)6]3+ நிறமற்றது விளக்குக.
13.
பின்வரும் அணைவுச் சேர்மங்களை அவைகளின் மோலார் கடத்துத் திறனின் ஏறு வரிசையில் எழுதுக.
(i) Mg[Cr(NH3)(Cl)5]
(ii) [Cr(NH3)5Cl]3[CoF6]2
(iii) [Cr(NH3)3Cl3]
14.
கந்தக அமிலம் ஒரு நீர் நீக்கும் காரணி - என்பதனைத் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
15.
ஹீலியத்தின் பயன்களைத் தருக.
16.
பிற ஹாலஜன்களைக் காட்டிலும் ஃபுளுரின் அதிக வினைத் திறனுடையது ஏன்?
17.
\(\left[ Fe(H_{ 2 }O)_{ 6 } \right] ^{ 3+ }\) என்ற அணைவுச் சேர்மத்திற்கு CFSE கணக்கிடுக .
18.
Xe- ன் சேர்மங்களை ஐந்திணை எழுதுக ஆகியவற்றின் இனக்கலப்பு மற்றும் அமைப்பு ஆகியவற்றை எழுதுக.
19.
20.
ஆஸ்வால்ட் முறை மூலம் நைட்ரிக் அமிலத்தின் வணிக ரீதியிலான தயாரிப்பினை விவரி.
21.
உலோகக் கார்பனைல்களில் காணப்படும் பிணைப்பின் தன்மையினை விளக்குக.
22.
23.
[Cr(NH3)6]3+ ஆனது ஏன் பாராகாந்தத் தன்மையுடையது எனவும்,[Ni(CN)4]2- ஆனது ஏன் டையாகாந்தத் தன்மையுடையது எனவும் VB கொள்கையின் அடிப்படியில் விளக்குக.
24.
பின்வரும் அணைவுச் சேர்மங்களுக்கு IUPAC பெயர் தருக.
i) Na2[Ni(EDTA)]
II) [Ag(CN)2]
iii) [Co(en)3]2(SO4)3
iv) [Co(ONO)(NH3)5]2+
v) [Pt(NH3)2Cl(NO2)]
1.
(i) பென்டா கார்பனைல் ட்ரை பினைல் பாஸ்பேன் குரோமியம் (0)
(ii) டெட்ரா அம்மைன் கார்பனேட்டோ கோபால்ட் (III) குளோரைடு
2.
வெண்பாஸ்பரஸ் காற்றில் ஆக்சிஜனேற்றமடைவதன் காரணமாக இருளில் ஒளிர்கிறது. இருளில் வெளிர்பச்சை கலந்த மஞ்சள் நிறம் வெளிப்படுகிறது. இது நின்றொளிர்தல் எனப்படுகிறது. இந்த மெதுவான ஆக்சிஜனேற்ற வினையின் விளைபொருள் P2O3 ஆகும்.
3.
(i) ஈனிகள் வழங்கும் எலக்ட்ரான் இணைகளை ஏற்கும் உலோக அயனி மைய உலோக அயனி எனப்படும்.
(ii) மைய உலோக அயனிகள் எலக்ட்ரான் இணை ஏற்பிகள்.
(iii) மைய உலோக அயனிகள் லூயி அமிலங்களாகும்.
உதாரணம் :
\({ K }_{ 4 }\left[ Fe(CN)_{ 6 } \right] \) என்ற அணைவுச் சேர்மத்தில் \(Fe^{ 2+ }\) மைய உலோக அயனி ஆகும் .
4.
1. இரு வழி பிணைப்புறு ஈனி தன்னிடம் உள்ள வெவ்வேறு வழங்கி அணுக்களின் மூலம் மைய உலோக அயனியுடன் பிணைப்பினை ஏற்படுத்தும் போது இத்தகைய மாற்றியங்கள் ஏற்படுகின்றன.
2. எடுத்துக்காட்டில், நைட்ரைட் அயனியானது, 2+ மைய உலோக அயனியான Co²+ உடன் நைட்ரஜன் அணு வழியே பிணைப்பினை ஏற்படுத்துவதால் ஒரு அணைவுச் சேர்மமும், ஆக்ஸிஜன் அணு வழியே பிணைப்பினை ஏற்படுத்துவதால் மற்றொரு அணைவுச் சேர்மமும் உருவாகின்றன.
(எ.கா) [Co(NH3)5 NO2]2+
இரு வழி பிணைப்புறு ஈனிகள்:
\(\mathrm{NO}_2^{-}, \mathrm{CN}^{-}, \mathrm{CO} \& \mathrm{SCN}^{-}\)
எடுத்துக்காட்டு:
\(\left[\mathrm{Co}\left(\mathrm{NH}_3\right)_5 \mathrm{NO}_2\right] \mathrm{Cl}_2-\) மஞ்சள் ; \(\text { [ } \left.\mathrm{Co}\left(\mathrm{NH}_3\right)_5 \mathrm{ONO}\right] \mathrm{Cl}_2 \) - சிவப்பு
3. இடம் மாற்றியம், உப்பு மாற்றியம் என்றும் அழைக்கப்படும்
5.
PCl5 (g) \(\underrightarrow { \Delta } \) PCl3 (g) + Cl(2)(g)
PCl5 சிதைவடைந்து PCl3 மற்றும் Cl2 ஐ கொடுக்கிறது.
6.
கந்தக அமிலம் :
1. அம்மோனியம் சல்பேட் மற்றும் சூப்பர் பாஸ்பேட் போன்ற உரங்களை பெருமளவில் தயாரிக்கவும் மேலும் HCl, HNO3 போன்ற வேதிப் பொருள்கள் தயாரிப்பிலும் பயன்படுகிறது
2. இது உலர்த்தும் காரணியாக பயன்படுகிறது மேலும், நிறமிப்பொருட்கள் வேதிப்பொருட்கள் போன்ற தயாரிப்பிலும் பயன்படுகிறது.
7.
1. ஃபுளுரின் அதிக எலக்ட்ரான் கவர்திறன் கொண்ட தனிமமாகும். எனவே இது நேர் ஆக்ஸிஜனேற்ற நிலையை பெற்றிருப்பதில்லை.
2. ஃபுளுரினில் ஒரு தனித்த இணையுறாத எலக்ட்ரான் உள்ளதால் இது 1 ஆக்ஸிஜனேற்ற நிலையைப் பெற்றுள்ளது.
8.
இடைநிலைத் தனிமங்களைத் தொடர்ந்து வரும் கனமான தனிமங்களில் உள்ள வெளிக்கூட்டு ns2 எலக்ட்ரான்கள் மந்தத்தன்மை கொண்டவைகளாக உள்ளன மேலும் பிணைப்பில் பங்கெடுக்க இயல்பாக முனைவதில்லை. இந்த விளைவு மந்த இணை விளைவு என அறியப்படுகிறது. 14,15,16 ஆம் தொகுதிகளிலும் இந்த விளைவு காணப்படுகிறது.
9.
இத்தகைய கார்பனைல்களில், கார்பனைல்கள் இணைப்பு பால பிணைப்பில் ஈடுபடாது. இவைகளில் இரண்டு வகைகள் உள்ளன.
முனைய கார்பனைல் ஈனிகளை மட்டும் பெற்றிருப்பவை.
எடுத்துக்காட்டு:
[Ni(CO)4], [Fe(CO)5] மற்றும் [Cr(CO)6]
முனைய கார்பனைல் ஈனிகள் மற்றும் உலோக உலோக பிணைப்பு இரண்டையும் பெற்றிருப்பவை Mn2(CO)10
எடுத்துக்காட்டு:
(CO)5 Mn-Mn(CO)5
பிற எடுத்துக்காட்டுகள் TE2 (CO)10 மற்றும் Re2(CO)10
10.
(i) கப்பல்களில், கால்சியம் கார்பைடு மற்றும் கால்சியம் பாஸ்பைடு கலவை வைக்கப்பட்டுள்ள, துளையிடப்பட்ட கலனை கடலில் வீசி எறியும்போது, கடல்நீருடன் வினைபுரிந்து அவை அசிட்டிலீன் மற்றும் பாஸ்பீன் வாயுக் கலவையை வெளியேற்றுகிறது
(ii) வெளியேற்றப்பட்ட பாஸ்பீன் வாயு தீப்பற்றி எரிந்து அசிட்டிலீனையும் எரிய வைக்கும்
(iii) இவ்வாறு எரியும் வாயுக்கள் தொடர்ந்து வரும் கப்பல்களுக்கு சமிக்கையாக செயல்படுகின்றன
(iv) இது ஹோல்ம்ஸ் முன்னறிவிப்பான் என அறியப்படுகிறது.
11.
12.
\(\begin{array}{l|l}
{ }_{22} \mathrm{Ti}-{ }_{18}[\mathrm{Ar}] 4 \mathrm{~s}^2 3 \mathrm{~d}^2 & { }_{21} \mathrm{Sc}-{ }_{18}[\mathrm{Ar}] 4 \mathrm{~s}^2 3 \mathrm{~d}^1 \\
{ }_{19} \mathrm{Ti^{3+}}-{ }_{18}[\mathrm{Ar}] 3 \mathrm{~d}^1 & { }_{18} \mathrm{Sc}^{3+}{ -}_{18}[\mathrm{Ar}] 3 \mathrm{~d}^0
\end{array}\)
(i) [Ti(H2O)6]3+, அணைவுச் சேர்மத்தில் மைய உலோக அயனி Ti3+ ஆனது d1 எலக்ட்ரான் அமைப்பினைப் பெற்றுள்ளது. இது ஈனி புலத்தில் t2g ஆர்பிட்டால் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
(ii) இந்த அணைவுச் சேர்மத்தின் மீது வெண்மைநிற ஒளி விழும் போது d எலக்ட்ரான் ஒளியினை உட்கவர்ந்து உயர் ஆற்றல் மட்டத்திற்கு கிளர்வுறுகிறது. நிறமாலைத் தரவுகளிலிருந்து உட்கவர் பெருமம் மதிப்பு eg ஆகும்.
(iii) இது படிக புலப் பிளப்பு ஆற்றல் (\(\Delta^o\)) 239.7 KJ mol-1 20000-1 cm இணையானதாகும். இந்த உட்கவர்தலால், பிரதிபலிக்கப்படும் நிறம் ஊதாநிறம்.
(iv) இவ்வாறு \(\left[\mathrm{Ti}\left(\mathrm{H}_2 \mathrm{O}\right)_6\right]^{3+}\) ல் d-d இடப்பெயர்ச்சி நடைபெறுகிறது.
(v) ஆனால், \(\left(\mathrm{Sc}\left(\mathrm{H}_2 \mathrm{O}\right)_6\right]^{3+}\) Sc3+ ன் எலக்ட்ரான் அமைப்பு 3d° ஆகும். இதில் d-d இடப்பெயர்ச்சி நடைபெறாது. எனவே நிறமற்றதாக உள்ளது.
13.
i) \(
\mathrm{Mg}\left[\mathrm{Cr}\left(\mathrm{NH}_3\right) \mathrm{Cl}_5\right] \rightleftharpoons \mathrm{Mg}^{2+}+\left[\mathrm{Cr}\left(\mathrm{NH}_3\right)_5 \mathrm{Cl}_5\right]^{2-} \) (2 அயனிகள்)
ii) \(\left[\mathrm{Cr}\left(\mathrm{NH}_3\right)_5 \mathrm{Cl}\right]_3\left[\mathrm{CoF}_6\right]_2 \rightleftharpoons\left[\mathrm{Cr}\left(\mathrm{NH}_3\right)_5 \mathrm{Cl}\right]_3^{6+}+\left[\mathrm{CoF}_6\right]_2^{6-}\) (2 அயனிகள்)
iii) [Cr(NH3)3 Cl3] - அயனியுறுவதில்லை.
iii > ii > i
14.
C12H22O11 + H2SO4 ⟶ 12C + H2SO4.11H2O
HCOOH + H2SO4 ⟶ CO + H2SO4.H2O
(COOH)2 + H2SO4 ⟶ CO + CO2 + H2CO3H2O
15.
1. மின்வில் முறையில் உலோகங்களை ஓட்டும் செயல்முறையில் மந்த வினைபுரியா சூழலை ஏற்படுத்துகிறது
2. குறைவான கொதிநிலையைக் கொண்டிருப்பதால் கிரையோஜெனிக் நுட்பங்களில் பயன்படுகிறது.
3. காற்றை விட லேசானது என்பதால் காற்றில் மிதக்கும் பலூன்களில் நிரப்பப் பயன்படுகிறது.
16.
1. ஃபுளுரின் மற்ற ஹாலஜனை விட அதிக எலக்ட்ரான் கவர் தன்மையைப் பெற்றுள்ளது.
2. ஃபுளுரினைத் தவிர மற்ற ஹாலஜன்கள் நேர் ஆக்ஸிஜனேற்றம் உடையது.
3. இது அதிக எலக்ட்ரான் நாட்ட பண்பு உடையது.
உதாரணம் :
Cl2 O → +1
OF2 → -1
17.
| உயர்சுழற்சி அணைவு | தாழ்சுழற்சி அணைவு | |||||
சமச்சீர் புலத்தில் எலக்ட்ரான் அமைப்பு d5
|
||||||
| எலக்ட்ரான் அமைப்பு (உயர் சுழற்சி அணைவு ) t32g e2g CFSE = {[3-(-0.4)+2(0.6)] \(\Delta _{ 0 }\) +0*P }-{0} = 0 |
எலக்ட்ரான் அமைப்பு (குறை சுழற்சி அணைவு ) t52g e0g CFSE = {[5-(-0.4)+2(0.6)] \(\Delta _{ 0 }\) +2*P }- {0} = -2\(\Delta _{ 0 }\)+2P = (-2*14000) + (2*30000) = 32000 cm-1 CFSE அதிக நேர்குறி மதிப்பினைப் பெற்றுள்ளது. இதிலிருந்து தாழ்சுழற்சி அணைவு உருவாக வாய்ப்பில்லை என அறிய முடிகிறது. |
|||||
| \(\left[ Fe\left( CN \right) _{ 6 } \right] ^{ 3+ }\)ன் இயல்பு | உயர்சுழற்சி | |||||
| மைய உலோக அயனியின் எலக்ட்ரான் அமைப்பு | t32g e2g | |||||
| காந்தப்பண்பு | இணையாகாத தனித்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை =5; எனவே பாரா காந்தத்தன்மை உடையது. |
|||||
| காந்த திருப்புத் திறன் (சுழற்சி மட்டும் பொருத்தமைவது ) | \(\alpha =\sqrt { n(n+2) } =\sqrt { 5(5+2) } =5.916\quad BM\) | |||||
18.
| சேர்மம் | இனக்கலப்பு | வடிவமைப்பு |
| \(XeF\) | \({ sp }^{ 3 }d\quad \) | நேர்க்கோடு |
| \(XeF_{ 4 }\) | \(sp^{ 3 }d^{ 2 }\) | தள சதுரம் |
| \(XeF_{ 6 }\) | \(sp^{ 3 }d^{ 3 }\) | ஒழுங்கற்ற எண்முகி |
| \(XeOF_{ 2 }\) | \({ sp }^{ 3 }d\quad \) | T வடிவம் |
| \(XeOF_{ 4 }\) | \(sp^{ 3 }d^{ 2 }\) | சதுர பிரமிடு |
| \(XeO_{ 3 }\) | \(sp^{ 3 }\) | பிரமிடு |
19.
20.
(i) ஹேபர் முறையில் உருவான அம்மோனியா பத்து மடங்கு காற்றுடன் கலக்கப்படுகிறது
(ii) இக்கலவை வெப்பப்படுத்தப்பட்டு, வினைவேகமாற்றி வைக்கப்பட்டுள்ள தனி அறையினுள் செலுத்தப்பட்டு பிளாட்டினம் கம்பி வலையுடன் தொடர்பு உண்டாக்கப்படுகிறது
(iii) வெப்பநிலை 1275 K க்கு உயர்த்தப்படும்போது, உலோக வினையூக்கியானது அம்மோனியாவை விரைவாக ஆக்சிஜனேற்றம் செய்து NO வாயுவை உருவாக்குகிறது.
(iv) பின்னர் NO, நைட்ரஜன் டை ஆக்சைடாக ஆக்சிஜனேற்றம் அடைகிறது
4NH3 + 5O2 ⟶ 4NO + 6H2O +120KJ
2NO + O2 ⟶ 2NO2
(v) நைட்ரஜன் டை ஆக்சைடு வாயு வரிசையாக அமைக்கப்பட்டுள்ள பரப்பு கோபுரங்களின் வழியாக செலுத்தப்படுகிறது.
(vi) NO2 வாயு நீருடன் வினைபட்டு நைட்ரிக் அமிலத்தை தருகிறது
(vii) உருவாக்கப்பட்ட நைட்ரிக் அமிலம் காற்று செலுத்தி வெளுக்கப்படுகிறது
6NO2 + 3H2O ⟶ 4HNO3 + 2NO + H2O
21.
(i) உலோக கார்பனைல்களில் காணப்படும் உலோக அணு மற்றும் கார்பனைல் ஈனி ஆகியவற்றிற்கு இடையே காணப்படும் பிணைப்பு இரு கூறுகளை உள்ளடக்கியது,
(ii) முதல் கூறு கார்பனைல் ஈனியின் கார்பன் அணு, மைய உலோக அயனியின் காலியான d - ஆர்பிட்டாலுக்கு எலக்ட்ரான் இணையினை வழங்கி M ⇽ CO சிக்மா பிணைப்பினை உருவாக்குகிறது.
(iii) இந்த சிக்மா பிணைப்பு உருவாவதால், உலோக ஆர்பிட்டால்களில் எலக்ட்ரான் அடர்த்தி அதிகரித்து, மைய உலோக அணுவில் எலக்ட்ரான் செறிந்து காணப்படுகிறது.
(iv) இவ்வாறு அதிகரிக்கப்பட்ட எலக்ட்ரான் அடர்த்தியை ஈடு செய்யும் பொருட்டு உலோகத்தின் நிரப்பப்பட்ட d ஆர்பிட்டால்கள் கார்பனைல் ஈனியின் காலியான π* ஆர்பிட்டாலுடன் இடையீடு செய்து, எலக்ட்ரான் அடர்த்தியை மீண்டும் ஈனிக்கு பரிமாற்றம் செய்கிறது. இந்த இரண்டாவது கூறு π பின் பிணைப்பு (back bonding) எனப்படுகிறது.
(v) எனவே உலோக கார்பனைல்களில் ஈனிகளிலிருந்து உலோக அயனிக்கு சிக்மா பிணைப்பு வழியாகவும் மற்றும் உலோகத்திலிருந்து ஈனிக்கு π பின் பிணைப்பு வழியாகவும் எலக்ட்ரான் அடர்த்தியின் நகர்வு ஏற்படுகிறது.
(vi) உலோக கார்பனைல்களில் வலுவான M ⇽ CO பிணைப்பு காணப்படுவதற்கு மேற்கண்ட கூட்டு விளைவே காரணமாகிறது.
(vii) இந்நிகழ்வு, பின்வரும் வரைபடத்தில் தரப்பட்டுள்ளது.
22.

23.
a) \(
{\left[\mathrm{Cr}\left(\mathrm{NH}_3\right)_6\right]^{3+}} \)
\( { }_{24} \mathrm{Cr}-\quad{ }_{18}[\mathrm{Ar}] 4 s^1 3 \mathrm{~d}^5 \\
{ }_{21} \mathrm{Cr}^{3+}-\quad{ }_{18}[\mathrm{Ar}] 3 \mathrm{~d}^3
\)

\(d ^ 2sp ^ 3\) இனக்கலப்பு (எண்முகி)
n = 3
பாராகாந்தத் தன்மையுடையது
\(\begin{aligned}
\mu_{\mathrm{s}} & =\sqrt{\mathrm{n}(\mathrm{n}+2)} \mathrm{BM} \\
& =\sqrt{3(3+2)}=\sqrt{15}=3.87 \mathrm{BM}
\end{aligned}\)
b) \(\left[\mathrm{Ni}(\mathrm{CN})_4\right]^{2-}\)
\( { }_{28} \mathrm{Ni}-{ }_{18}[\mathrm{Ar}] 4 \mathrm{~s}^2 3 \mathrm{~d}^8 \\
{ }_{26} \mathrm{Ni}^{2+}-{ }_{18}[\mathrm{Ar}] 3 \mathrm{~d}^8
\)

CN- ஒரு வலிமை மிகு ஈனியாகும். எனவே 3d எலக்ட்ரான்களை இரட்டையாக்குகிறது
[Ni (CN) 4 ]2-

dsp² இனக்கலப்பு (தளசதுரம்)
n = 0
டையாகாந்தத் தன்மையுடையது
\(mu_{s} = 0\)
24.
1. சோடியம் 2, 21, 211, 2111 (ஈத்தேன் 1, 2 டைஐல்டைநைட்ரிலோ) டெட்ரா அசிட்டேட்டோ நிக்கலேட் II
2. அயோடேட் டை சயனிடோ K-C- அர்ஜென்டேட் (I) அயனி
3. ட்ரிஸ் ஈத்தேன் (1, 2 - டைஅமீன்) கோபால்ட் (III) சல்பேட்
4. பென்டா அம்மைன்நைட்ரிட்டோ K-O- கோபால்ட் (III) அயனி
5. டைஅம்மைன்குளோரிடோநைட்ரோ -k-N பிளாட்டினம் (II)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards