12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
நைட்ரோ கிளிசரின் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது ?
2.
கிளிசராலை எவ்வாறு அக்ரோலீனாக மாற்றுவாய் ?
3.
4.
அடிப்படை வினைகள் என்றால் என்ன? ஒரு வினையின் வினை வகை மற்றும் மூலக்கூறு எண் ஆகியனவற்றிற்கு இடையேயான வேறுபாடுகள் யாவை?
5.
ஒரு முதல் வகை வினையானது 99.9% நிறைவடைய தேவையான நேரமானது, அவ்வினை பாதியளவு நிறைவடைய தேவையான நேரத்தைப் போல தோராயமாக பத்து மடங்கு எனக் காட்டுக,
6.
ஜியோலைட்டுகள் பற்றி குறிப்பு வரைக.
7.
சங்கிலித் தொடராக்கம் என்றால் என்ன? கார்பனின் சங்கிலித் தொடராக்கப் பண்பினைப் பற்றி குறிப்பு எழுதுக.
8.
p தொகுதி தனிமங்களின் முதல் தனிமத்தின் முரண்பட்ட பண்புகள் பற்றி சிறுகுறிப்பு வரைக.
9.
எஸ்டராக்குதல் என்றால் என்ன? சான்று தருக
10.
சோப்பாகுதல் வினை பற்றி குறிப்பு எழுதுக.
11.
பேயரின் காரணியைப் பயன்படுத்தி கிளைக்காலில் எவ்வாறு தயாரிக்கலாம்?
12.
பூஜ்ய வகை வினைக்கு இரு எடுத்துக்காட்டுகள் தருக.
13.
ஆர்ஹீனியஸ் சமன்பாட்டினை எழுதி அதில் இடம் பெற்றுள்ளவற்றை விளக்குக.
14.
ஹைட்ரோ போரோ ஏற்ற வினை பற்றி குறிப்பு வரைக.
15.
சிலிக்கோன்களின் பயன்களைத் தருக.
16.
டைபோரேன் அமைப்பு பற்றி சிறு குறிப்பு வரைக.
17.
விக்டர் மேயர் ஆய்வினை விவரி.
18.
லூகாஸ் சோதனையைப் பற்றி எழுதுக.
19.
கிராபைட் மற்றும் வைரம் வேறுபடுத்துக.
20.
கனிம பென்சீன் எனப்படுவது யாது ? அது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
21.
ஒரு முதல் வகை வினைக்கான வினைவேக மாறிலியின் தொகைப்படுத்தப்பட்ட சமன்பாட்டினை வருவி.
22.
இரு மூலக்கூறு வினைகளுக்கான மோதல் கொள்கையினைச் சுருக்கமாக விளக்குக.
23.
A \(\rightarrow \)விளைபொருள் என்ற பூஜ்ய வகை வினைக்கான தொகைப்படுத்தப்பட்ட வேக விதியினை வருவிக்க.
1.
2.
\(\begin{matrix} \underset { | }{ CH_{ 2 }OH } \\ \underset { | }{ CHOH } \\ CH_{ 2 }OH \end{matrix}\quad \overset { KHSO_{ 4 } }{ \underset { -2H_{ 2 }O }{ \longrightarrow } } \quad \quad \left[ \begin{matrix} \underset { || }{ CH_{ 2 } } \\ \underset { || }{ C } \\ CHOH \end{matrix} \right] \longrightarrow \begin{matrix} \underset { || }{ CH_{ 2 } } \\ \underset { | }{ CH } \\ CHO \end{matrix}\)
Unstable Acrolein
கிளிசரால் KHSO4 உடன் நீர் நீக்க வினைக்கு உட்பட்டு அக்ரோலினைத் தருகிறது.
3.
4.
ஒரு வேதிவினையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வேதிக்கூறுகள் (வினைபடுபொருட்கள்) வினைபுரிந்து நேரடியாக விளைபொருட்களை ஒரே படியில் உருவாக்கினால் அவ்வினையானது அடிப்படை வினை எனப்படும். இதன் வேகவிதியில் அடுக்குக் குறியானது, சமன்பாட்டில் உள்ள வேதி வினைக்கூறு விகிதத்திற்கு சமமாக இருக்கும்
A + B → விளைபொருட்கள் எனில் வேகம்= k [A] [B]
ஃ இது ஓர் அடிப்படை வினையாகும்
| வ.எண் | வினை வகை | மூலக்கூறு எண் |
| 1. | சோதனை மூலம் கண்டறியப்பட்ட வேக விதியில் இடம் பெற்றுள்ள செறிவு உறுப்புகளின் அடுக்குகளின் கூடுதல் வினை வகை எனப்படும். | ஒரு அடிப்படை வினையில், இடம்பெறும் வினைபடு மூலக்கூறுகளின் மொத்த எண்ணிக்கை மூலக்கூறு எண் எனப்படும். |
| 2. | பூஜ்யமாகவோ, பின்னமாகவோ பிற முழு எண்களாகவோ இருக்கலாம். | இது எப்போதும் முழு எண் மதிப்பினை மட்டுமே பெறும். பூஜ்யமாகவோ, பின்ன எண்ணாகவோ இருக்க முடியாது. |
| 3 | ஒட்டு மொத்த வினைக்கும் வினை வகை வழங்கப்படுகிறது. | வினை வழிமுறையில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு படிநிலைக்கும் மூலக்கூறு எண் வழங்கப்படுகிறது |
5.
[A0] = 100; என்க
t = t99.9%;[A] = (100-99.9) = 0.1
\(k=\frac { 2.303 }{ t } log\left( \frac { \left[ { A }_{ 0 } \right] }{ \left[ A \right] } \right) \)
t99.9%\(=\frac { 2.303 }{ k } log\left( \frac { 100 }{ 0.1 } \right) \)
t99.9%\(=\frac { 2.303 }{ k } log1000\)
t99.9%\(=\frac { 2.303 }{ k } (3)\)
t99.9%\(=\frac { 6.909 }{ k } \)
t99.9%\(=10\times \frac { 0.69 }{ k } \)
t99.9% = 10t1/2
6.
(i) ஜியோலைட்டுகள் என்பவை அலுமினியம், சிலிக்கான் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றை ஒழுங்கான முப்பரிமாண கட்டுமான அமைப்பில் கொண்டுள்ள முப்பரிமாண படிகத் திண்மங்களாகும்.
(ii) இவை நீரேறிய சோடியம் அலுமினோ சிலிகேட்டுகளாகும்.
(iii) பொதுவான வாய்ப்பாடு Na2O.(AI2O3).x(SiO2).y(H2O) (x = 2 முதல் 10; y = 2 முதல் 6 வரை)
(iv) ஜியோலைட்டுகள் நுண்துளை அமைப்பைக் கொண்டுள்ளன. இத்துளைகளில் ஒன்றை நேர்மின் சுமை கொண்ட சோடியம் அயனிகளும், நீர் மூலக்கூறுகளும் தளர்வாக இருத்தி வைக்கப்பட்டுள்ளன. பங்கிடப்பட்ட ஆக்சிஜன் அணுக்களின் மூலம் Si மற்றும் Al அணுக்கள் நான்முகி அமைப்பில் ஒன்றுடன் ஒன்று ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
(v) ஜியோலைட்டுகள், களிமண் கனிமத்தை ஒத்துள்ளன. ஆனால் அவற்றின் படிகச் அமைப்பில் வேறுபடுகின்றன.
(vi) ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட தடங்கள் மற்றும் கூடுகளைக் கொண்ட, தேன்கூட்டு அமைப்பை ஒத்த முப்பரிமாண படிக அமைப்பை ஜியோலைட்டுகள் பெற்றுள்ளன. ஜியோலைட்டு கட்டமைப்பு நகராமல் இறுக்கமாக உள்ள போதும், நுண் துளைகளின் வழியாக நீர் மூலக்கூறுகள் உள்ளேயும், வெளியேயும் மிக எளிதாக நகர்கின்றன.
(vii) ஏறத்தாழ ஒரே சீராக அமைந்திருக்கும் நுண்துளைகளின் உருவளவு இக்கட்டமைப்பின் மற்றொரு ஜியோலைட்டுகள் நீரின் நிரந்தரக் கடினத் தன்மையை நீக்க பயன்படுகிறது.
7.
சங்கிலித் தொடராக்கம் என்பது, ஒரு தனிமத்தின் அணுச் சங்கிலி உருவாக்கும் திறன் ஆகும். சங்கிலித் தொடராக்கத்திற்கு பின்வரும் நிபந்தனைகள் அத்தியாவசியமானவையாகும்.
(i) தனிமத்தின் இணைதிறன் இரண்டோ அல்லது அதற்கு அதிகமாகவோ இருத்தல் வேண்டும்.
(ii) ஒரு தனிமம் அதே தனிம அணுவுடன் சுய பிணைப்பை ஏற்படுத்தும் திறனை கொண்டிருக்க வேண்டும்.
(iii) சுய பிணைப்பின் வலிமையானது, மற்ற தனிமங்களுடன் உருவாக்கும் பிணைப்புகளைப் போலவே வலிமையானதாக இருத்தல் வேண்டும்
(iv) மற்ற மூலக்கூறுகளுடன், சங்கிலித் தொடர் மூலக்கூறுகள் வேதிவினை மந்தத்தன்மை கொண்டிருத்தல் வேண்டும்.
கார்பன் அணுவானது மேற்கூறிய அனைத்து பண்புகளையும் பெற்றுள்ளது. மேலும் தங்களுக்குள் பிணைப்பை ஏற்படுத்தும் தன்மையையும் மற்றும் H, O, N, S, ஹேலஜன்கள் போன்ற பிற அணுக்களுடன் இணைந்து பல சேர்மங்களை உருவாக்கும் இயல்பினையும் பெற்றுள்ளது.
8.
1. 13ம் தொகுதியின் முதல் தனிமமான போரான் ஒரு உலோக போலியாகும். ஆனால் மற்ற தனிமங்கள் வினைதிறன் மிக்க உலோகங்களாகும்.
2. மேலும் போரான் ஆனது 14 ஆம் தொகுதியைச் சார்ந்த சிலிக்கானுடன் மூலைவிட்ட தொடர்பை பெற்றுள்ளது.
3. போரான் மற்றும் சிலிக்கானின் ஆக்சைடுகள் அவற்றின் அமிலப்பண்பில் ஒத்துள்ளன. இவை இரண்டும் எளிதில் நீராற்பகுப்படையும் சகப்பிணைப்பு ஹைட்ரைடுகளை உருவாக்குகின்றன.
4. இதே போல போரான் ட்ரைபுளூரைடைத் தவிர, இவ்விரு தனிமங்களின் ஹேலைடுகளும் எளிதில் நீராற்பகுப்படைகின்றன.
5. 14 ஆம் தொகுதியில், முதல் தனிமமான கார்பன் ஒரு அலோகமாகும். அதேசமயம், மற்ற தனிமங்கள் உலோக போலிகளாகவோ (சிலிக்கான்-ஜெர்மானியம்) அல்லது உலோகங்களாகவோ (டின்-லெட்) உள்ளன.
6. கார்பன் அணுவானது அது இடம்பெற்றுள்ள தொகுதியிலுள்ள மற்ற தனிமங்களைப் போலல்லாமல், C = C, C = O... போன்ற பல்பிணைப்புகளை உருவாக்கும் தன்மையைப் பெற்றுள்ளது. கார்பன் அணுவானது மற்றொரு கார்பன் அணுவுடனோ அல்லது மற்ற அணுக்களுடனோ நீண்ட சங்கிலித் தொடர் சேர்மங்களை உருவாக்கும் திறனைப் பெற்றுள்ளது.
7. இப்பண்பு சங்கிலித்தொடராக்கம் என அறியப்படுகிறது.
8. தொகுதியில் கீழாக செல்லும்போது சங்கிலித் தொடராக்கத் திறன் குறிப்பிடத்தகுந்த அளவில் குறைகிறது. (C >> Si > Ge = Sn > Pb).
9. 15 ஆம் தொகுதியிலும், முதல் தனிமமான நைட்ரஜனானது அத்தொகுதியிலுள்ள மற்ற தனிமங்களிலிருந்து வேறுபடுகிறது.
10. கார்பனைப் போன்றே நைட்ரஜன் அணுவும் பல்பிணைப்புகளை உருவாக்கும் தன்மையைப் பெற்றுள்ளது.
11. (N = N, C = N,= O போன்றவை.) தொகுதியிலுள்ள மற்ற தனிமங்களைப் போல அல்லாமல் நைட்ரஜன் ஒரு டையாகாந்தத் தன்மை கொண்ட வாயுவாகும்.
12. 16 ஆம் தொகுதியிலும் முதல் தனிமமான ஆக்ஸிஜனும் ஈரணு மூலக்கூறாக வாயு நிலையில் காணப்படுகிறது.
13. அது அதிக எலக்ட்ரான் கவர்திறன் தன்மையைக் கொண்டிருப்பதால் ஹைட்ரஜன் பிணைப்புகளை உருவாக்குகிறது.
14. 17 ஆம் தொகுதியின் முதல் தனிமமான புளூரின் அதிகபட்ச எலக்ட்ரான் கவர்திறன் கொண்ட தனிமமாகும். தொகுதியிலுள்ள மற்ற தனிமங்களுடன் ஒப்பிடும்போது இது முற்றிலும் வேறுபட்ட பண்புகளைப் பெற்றுள்ளது.
15. ஆக்ஸிஜனைப் போலவே புளூரினும் ஹைட்ரஜன் பிணைப்புகளை உருவாக்குகிறது.
16. புளூரின் -1 ஆக்ஸிஜனேற்ற நிலையை மட்டுமே காட்டுகிறது. ஆனால் மற்ற ஹேலஜன்கள் -1 நிலையுடன் +1, +3, +5 மற்றும் +7 ஆக்ஸிஜனேற்ற நிலைகளையும் காட்டுகின்றன.
17. புளூரின் வலிமை மிக்க ஒரு ஆக்ஸிஜனேற்றக் காரணியாகும், மேலும் ஹேலஜன்களில் புளூரின் மிக அதிக வினைத் திறன் கொண்ட தனிமமாகும்.
9.
ஆல்கஹால் ஒரு அமிலத்தின் முன்னிலையில் கார்பாக்சிலிக் அமிலங்களுடன் வினைபுரிந்து எஸ்டர்களைக் கொடுக்கும்.
10.
கொழுப்புகளை கார நீராற்பகுப்பிற்கு உட்படுத்தும் போது, கிளிசரால் உருவாகிறது. இவ்வினை சோப்பாகுதல் வினை எனப்படும்.
11.
எத்திலீனை குளிர்ந்த காரம் கலந்த பொட்டாசியம் பெர்மாங்கனேட்டை (பேயரின் காரணி) பயன்படுத்தி ஹைட்ராக்சிலேற்றம் செய்யும் போது எத்திலீன் கிளைக்கால் உருவாகிறது.
12.
பூஜ்ய வகை வினைக்கு இரு எடுத்துக்காட்டுகள்:
1. H2 மற்றும் Cl2 ஆகியவற்றிற்கு இடையேயான ஒளி வேதிவினை
\({ H }_{ 2(g) }+{ Cl }_{ 2(g) }\overset { hv }{ \longrightarrow } 2HC{ l }_{ (g) }\)
2. சூடான பிளாட்டினம் புறப்பரப்பில் N2O சிதைவடைதல்.
\({ N }_{ 2 }{ O }_{ (g) }\leftrightharpoons { N }_{ 2(g) }+\frac { 1 }{ 2 } { O }_{ 2(g) }\)
13.
K = \(A{ e }^{ \frac { -Ea }{ RT } }\)
K = வினைவேக மாறிலி
A = அதிர்வெண் காரணி
Ea = கிளர்வு ஆற்றல்
R = வாயு மாறிலி
T = தனி வெப்பநிலை Kல்
14.
(i) அறை வெப்பநிலையில், ஈதர் ஊடகத்தில் போரேன் ஆல்கீன்கள் மற்றும் ஆல்கைன்களுடன் சேர்க்கை வினைக்கு உட்படுகிறது. இவ்வினை ஹைட்ரோபோரோனேற்றம் என்றழைக்கப்படுகிறது.
(ii) இது தொகுப்பு கரிம வேதியியலில், குறிப்பாக எதிர் மார்கோனிகாவ் சேர்க்கை வினைகளில் அதிகம் பயன்படுகிறது.
B2H6+ 6 RCH = CHR ⟶ 2B (RCH - CH2 - R)3B
15.
1. சிலிகோன்கள் குறைந்த வெப்பநிலை உயர்வுப் பொருளாகவும் வெற்றிட பம்புகள், உயர் வெப்பநிலை எண்ணெய்த் தொட்டியில் பயன்படுகின்றன.
2. இவை நீர் வெறுக்கும் ஆடைகள் தயாரித்தலில் பயன்படுகின்றன.
3. இவை, மின் மோட்டார்கள் மற்றும் வீட்டு உபயோக பொருள்களில் மின்காப்பு பொருளாக பயன்படுகின்றன.
4. சிலிகோன்கள் சேகரிக்கப்பட்ட பெயிண்ட் மற்றும் எனாமல் அதிக வெப்பநிலை, சூரிய ஒளி, ஈரப்பதம் மற்றும் வேதிப் பொருள்கள் தாக்குதல் ஆகியவற்றை தாக்குபிடிக்கின்றன.
16.
1. இரண்டு BH2 அலகுகள் இரு H-பாலங்களால் இணைந்துள்ளது.
2. 8 B - H பிணைப்புகள். எனினும் 12 இணைதிற எலக்ட்ரான்கள் மட்டும் உள்ளன.
3. 4 B - H இயல்பு சகப்பிணைப்பு. இரு B-H-B பாலங்கள் 3C-2e- பிணைப்புகள்.
4. பிணைப்பு பால ஹைட்ரஜன்கள் ஒரே தளத்திலும், போரானின் நான்கு sp3 இனக்கலப்பு ஆர்பிட்டாலில், மூன்றில் ஒற்றை எலக்ட்ரான்கள் மற்றும் ஒன்று காலியான ஆர்பிட்டால் போரானின் பாதி நிரம்பிய இரண்டு எலக்ட்ரான்கள் இரண்டு ஹைட்ரஜன் அணுக்களுடன் சேர்ந்து 4 2C-2e- பிணைப்புகளை தரும். ஒரு போரானின் பாதி நிரம்பிய ஆர்பிட்டால் மற்றொரு போரானின் காலியான ஆர்பிட்டால் மற்றும் ஹைட்ரஜனின் 1s ஆர்பிட்டால் மேற்பொருந்தி B-H-B உருவாகிறது.
17.
விக்டர் மேயர் சோதனை:
வெவ்வேறு வகையான ஆல்கஹால்கள் உருவாக்கும் நைட்ரோ ஆல்கேன்கள், நைட்ரஸ் அமிலத்துடன் எத்தகைய வினைபுரியும் தன்மையைப் பெற்றுள்ளன என்பதனை அடிப்படையாகக் கொண்டது. மேலும் இம்முறை பின்வரும் படிநிலைகளை உள்ளடக்கியது.
(i) ஆல்கஹால்களை I 2/P உடன் வினைப்படுத்த ஆல்கைல் அயோடைடு உருவாக்குதல்
(ii) இவ்வாறு உருவான ஆல்கைல் அயோடைடை AgNO2 உடன் வினைப்படுத்தி நைட்ரோ ஆல்கேன்களை உருவாக்குதல்.
(iii) இறுதியாக நைட்ரோ ஆல்கேன்கள் HNO2 உடன் (NaNO2 / HCl கலவை) வினைப்படுத்தி பெறப்படும் விளைபொருளுடன் KOH சேர்க்கப்பட்டுக் கரைசல் காரத்தன்மை பெறச்செய்தல்.
முடிவு
(i) ஓரிணைய ஆல்கஹால்கள் சிவப்பு நிறத்தினைத் தருகின்றன.
(ii) ஈரிணைய ஆல்கஹால்கள் நீல நிறத்தைத் தருகின்றன.
(iii) மூவிணைய ஆல்கஹால்கள் எவ்வித நிறத்தையும் தருவதில்லை.
18.
லூகாஸ் சோதனை:
ஆல்கஹால்களை லூகாஸ் காரணியுடன் (அடர் HCl மற்றும் நீரற்ற ZnCl2 கலவை) அறை வெப்பநிலையில் வினைப்படுத்தும் போது, மூவிணைய ஆல்கஹால்கள் உடனடியாக ஆல்கைல் ஹாலைடுகளைத் தருகின்றன. இது வினை நிகழ்வு ஊடகத்தில் கரையாத் தன்மையினைப் பெற்றிருப்பதால் உடனடியாகக் கலங்கல் தன்மை உருவாகிறது. ஈரிணைய ஆல்கஹால்கள் 5 முதல் 10 நிமிடங்களில் ஆல்கைல் குளோரைடைத் தருவதால் கலங்கல் தன்மை தாமதமாக ஏற்படுகிறது. ஆனால் அறை வெப்பநிலையில் ஓரிணைய ஆல்கஹால்கள் லூகாஸ் காரணியும் எவ்வித வினையிலும் ஈடுபடாததால் கலங்கல் தன்மையினைத் தருவதில்லை.
19.
| கிராபைட் | வைரம் |
| இது மிருதுவானது | இது கடினமானது |
| \({ Sp }^{ 2 }\) இனக்கலப்புடையது | \({ Sp }^{ 3 }\) இனக்கலப்புடையது |
| ஒவ்வொரு கார்பனும் மூன்று C -C சிக்மா பிணைப்புடையது | ஒவ்வொரு கார்பனும் நான்கு C -C சிக்மா பிணைப்புடையது |
| மின்சாரத்தை கடத்தும் | மின்சாரத்தை கடத்தாது |
| அறுங்கோண தட்டையான தூள் அமைப்புடையது. | நான்முகி அமைப்புடையது |
| C -C பிணைப்பின் நீளம் \(1.41\overset { o }{ A } \) | C -C பிணைப்பின் நீளம் \(1.54\overset { o }{ A } \) |
| வலிமை குறைந்த வாண்டர் வால்ஸ் விசை உடையது | வலிமை மிகுந்த சகப்பிணைப்பு உடையது |
20.
குறைந்த வெப்பநிலைகளில், டைபோரேன், அதிகளவு அம்மோனியாவுடன் வினைபட்டு டைபோரேன் டைஅம்மோனேட் உருவாகிறது. ஆனால் உயர் வெப்பநிலைகளில் வெப்பப்படுத்தும் போது, இது போரசோல் எனும் சேர்மத்தை தருகிறது.
3B2H6+ 6NH3 \(\overset { -153k }{ \longrightarrow } \) 3B2H6 . 2NH3 (or ) \(3\left[ BH_{ 2 }\left( NH_{ 3 } \right) _{ 2 } \right] ^{ + }\left[ BH_{ 4 } \right] ^{ - }\)
21.
1. ஒரு வினையின் வினைவேகம், அவ்வினையில் ஈடுபடும் வினைபடு பொருட்களின் செறிவுகளின் முதல் படியினைப் பொறுத்து அமையுமானால், அவ்வினைகள் முதல் வகை வினைகள் எனப்படும்.
2. பின்வரும் முதல் வகை வினையைக் கருதுக.
A ⟶ விளை பொருள்
வினைவேகம் = K[A]1
K = முதல் வகை வினைவேக மாறிலி
\(-\frac { d[A] }{ dt } =K{ \left[ A \right] }^{ 1 }\)
\(-\frac { d[A] }{ dt } =k\quad dt\)
t = 0 முதல் t = t மற்றும் செறிவு எல்லை [Ao] முதல் [A] வரை மேற்கண்ட சமன்பாட்டினை தொகைப்படுத்த
\(\int _{ { A }_{ o } }^{ [A] }{ \frac { -d[A] }{ [A] } } =\int _{ o }^{ t }{ kdt } \)
\({ (-ln[A]) }_{ [{ A }_{ o }] }^{ [A] }={ K(t) }_{ o }^{ t }\)
\(-ln[A]-(-ln[{ A }_{ o }])=K(t-0)\)
\(-ln[A]+ln[{ A }_{ o }]=kt\)
\(ln[{ A }_{ o }]-ln[A]=kt\)
\(ln\frac { [{ A }_{ o }] }{ [A] } =kt\)
\(\therefore K=\frac { 1 }{ t } ln\frac { [{ A }_{ o }] }{ [A] } \)
இயற்கை மடக்கையில் உள்ள இச்சமன்பாட்டினை வழக்கமான 10 ஐ அடிமனமாகக் கொண்ட மடக்கைக்கு மாற்ற சமன்பாட்டினை 2.303 ஆல் பெருக்க வேண்டும்.
\(\therefore K=\frac { 2.303 }{ t } log\frac { [{ A }_{ o }] }{ [A] } \)
22.
1. மோதல் கொள்கையானது வாயுக்களின் இயக்கவியற்கொள்கையை அடிப்படையாகக் கொண்டது.
2. இக்கொள்கையின்படி, வினைபடு பொருட்களின் மூலக்கூறுகளுக்கிடையே மோதல் நிகழ்வதால் வேதி வினைகள் நிகழ்கின்றன.
\(\mathrm{A}_2(\mathrm{~g})+\mathrm{B}_2(\mathrm{~g}) \rightarrow 2 \mathrm{AB}(\mathrm{g})\)
3. A2 மற்றும் B2 ஆகிய மூலக்கூறுகளுக்கிடையே நிகழும் மோதலின் காரணமாக அவைகளுக்கிடையே வேதி வினை நிகழ்வதாக நாம் கருதினால், அவ்வினையின் வேகமானது ஒரு வினாடியில் அம்மூலக்கூறுகளுக்கிடையே நடைபெறும் மோதல்களின் எண்ணிக்கைக்கு நேர் விகிதத்திலிருக்கும்.
4. வினைவேகம் \(\infty\) ஒரு லிட்டர் கன அளவில் ஒரு வினாடியில் மோதலுறும் மூலக்கூறுகளின் எண்ணிக்கை (மோதல் வீதம்)
5. மோதல்களின் எண்ணிக்கையானது A2 மற்றும் B2 ஆகியனவற்றின் செறிவுகளுக்கு நேர்விகிதத்திலிருக்கும்.
மோதல் வீதம் \(\infty\) [A₂][B₂]
மோதல் வீதம் = Z[A₂][B₂]
இங்கு Z என்பது மாறிலி
5. வாயுக்களில் மோதல் வீதத்தினை வாயுக்களின் இயக்கவியற் கொள்கையின் அடிப்படையில் கணக்கிட இயலும். அறை வெப்பநிலை (298 K) ல் 1 atm மற்றும் அழுத்தத்தில் ஒவ்வொரு மூலக்கூறும் ஒரு வினாடியில் 109 மோதல்களுக்கு உட்படுவதாகக் கருதினால் அதாவது 10-9 வினாடியில் 1 மோதல் நடப்பதாகக் கருதுவோம்.
6. ஒவ்வொரு மோதலும் வினை நிகழ காரணமாக அமையுமேயானால் வினையானது 109 வினாடியில் நிறைவடைந்திருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் இவ்வாறு நிகழ்வதில்லை. இதிலிருந்து அனைத்து மோதல்களும் வினை நிகழ காரணமாக அமைவதில்லை என அறிய முடிகிறது.
7. வினை நிகழ வேண்டுமெனில், மோதலுறும் மூலக்கூறுகள் ஒரு குறிப்பிட்ட அளவு குறைந்தபட்ச ஆற்றலைப் பெற்றிருக்க வேண்டும் அவ்வாற்றல் கிளர்வு ஆற்றல் என அழைக்கப்படுகிறது.
கிளர்வு ஆற்றலை விட குறைவான ஆற்றலைக் கொண்டுள்ள மூலக்கூறுகளுக்கிடையே மோதல் நிகழும் போது அவைகள் எவ்வித மாற்றங்களுக்கும் உட்படுவதில்லை ஆதலால் அம்மோதலின் காரணமான வினையேதும் நிகழ்வதில்லை.
8. வினைநிகழ காரணமாக அமையும் மோதல்களின் விகிதம் (f).
\(f=e^{\frac{-E a}{R T}}\)
இங்கு (f) என்பது மோதல் காரணி எனப்படுகிறது.
9. இதன் எண் மதிப்பின் அளவினை புரிந்து கொள்ளும் பொருட்டு 300 K வெப்பநிலையில் 100 KJ mol-1 கிளர்வு ஆற்றலுடைய ஒரு வினைக்கு f ன் மதிப்பை கணக்கிடுவோம்
\(f=e^{\left(\frac{100 \times 10^3 / \mathrm{mol}^{-1}}{8.314 \mathrm{JK}^{-1} \times 300 \mathrm{Kol}^{-1}}\right)}=\mathrm{e}^{-40} \approx 4 \times 10^{-18}\)
10. எனவே, 1018 மோதல்கள் நிகழும் போது நான்கு மோதல்கள் மட்டுமே வினைபடுபொருட்களை வினைவிளைபொருளாக மாற்றுவதற்குத் தேவையான ஆற்றலைப் பெற்றுள்ளன. இந்த விகிதமானது வினைபடுபொருட்களின் திசைப்போக்கினைப் (Orientation) பொருத்து மேலும் குறையும் அதாவது வினைபடு பொருட்கள் வினை நிகழத் தேவையான ஆற்றலைப் பெற்றிருந்தாலும் வினை இடைநிலை உருவாக சாதகமான திசைப் போக்கில் வினைபடு பொருட்களின் மோதல் நிகழ்ந்தால் மட்டுமே அவை வினைபுரியும்.

11. தகுந்த திசைப்போக்குடன் அமைந்துள்ள வினை நிகழ காரணமாக உள்ள மோதல்களின் எண்ணிக்கையை இட அமைவக் காரணி p தருகிறது.
வினைவேகம் = \(\mathrm{px}^{\frac{-E_2}{R T}} \times \mathrm{Z}\left[\mathrm{A}_2\right]\left[\mathrm{B}_2\right]\)
வினைவேகம் \(=\mathrm{k}\left[\mathrm{A}_2\right]\left[\mathrm{B}_2\right]\)
இங்கு k என்பது வினைவேக மாறிலி சமன்பாடு (1) மற்றும் (2) ஐ ஒப்பிட, வினைவேக மாறிலி k ஆனது
\(\mathrm{k}=\mathrm{pZe}^{\frac{-E_{\mathrm{A}}}{\mathrm{RT}}}\)
23.
செறிவு எல்லை முழுமைக்கும் ஒரு வினையின் வினைவேகமானது, வினைபடு பொருட்களின் செறிவினைப் பொருத்து அமையவில்லை எனில் அவ்வினை பூஜ்ய வகை வினை என அழைக்கப்படுகிறது. இத்தகைய வினைகள் அரிதானவை பின்வரும் கருத்தியலான பூஜ்ய வகை வினையைக் கருத்தில் கொள்வோம்.
A →விளைபொருட்கள்
வினைவேகம் Rate = k[A]°
\( \frac{-d[A]}{d t}=k(1) \\ \Rightarrow-d[A]=k d t \)
t = 0 எனும் போது செறிவு [A] மற்றும், t = t எனும் போது செறிவு [A] என அமையும் எல்லையில் மேற்கண்டுள்ள சமன்பாட்டை தொகையிட
\(-\int_{\left[A_0\right]}^{[A]} \mathrm{d}[\mathrm{A}]=\mathrm{k} \int_0^{\mathrm{t}} \mathrm{dt}\)
\( -([\mathrm{A}])_{\left[A_0\right]}^{[A]}=k(t)_0^t \\ {\left[A_0\right]-[A]=k t} \\ k=\frac{\left[A_0\right]-[A]}{t} \mathrm{Y}=\mathrm{m} x+\mathrm{C} . [\mathrm{A}]=-\mathrm{kt}+\left[\mathrm{A}_0\right] \Rightarrow y=m x+c \)
[A] Vs நேரம். வரைபடமானது k என்ற சாய்வு மதிப்பினையும் [A] என்ற வெட்டுத்துண்டு மதிப்பினையும் பெற்றுள்ள ஒரு நேர்கோட்டினை தரும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards