12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 06/12/2019
உயிரியல் மூலக்கூறுகள்
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
பின்வரும் அமினோ அமிலங்களில் எது சீர்மையுடையது?
அலனின்
லியுசின்
புரோலின்
கிளைசீன்
2.
பின்வருவனவற்றுள் எவை எபிமர்கள் ஆகும்?
D(+)-குளுக்கோஸ் மற்றும் D(+)-காலக்டோஸ்
D(+)-குளுக்கோஸ் மற்றும் D(+)-மான்னோஸ்
(அ) மற்றும் (ஆ) இரண்டுமல்ல
(அ) மற்றும் (ஆ) இரண்டும்
3.
பின்வரும் கூற்றுகளில் எது சரியானது அல்ல?
ஓவால்புமின் என்பது முட்டை வெண்கருவிலுள்ள ஓர் எளிய உணவு
இரத்த புரதங்களான த்ராம்பின் மற்றும் பைபிரினோஜென் ஆகியன இரத்தம் உறைதலில் பங்கேற்கின்றன.
இயல்பிழத்தலினால் புரதங்களின் வினைதிறன் அதிகரிக்கிறது
இன்சுலின் மனித உடலில் சர்க்கரையின் அளவை பராமரிக்கிறது.
4.
5.
நீர்த்த கரைசல்களில் அமினோ அமிலங்கள் பெரும்பாலும் ________ அமைப்பில் உள்ளன .
NH2-CH(R)-COOH
NH2-CH(R)-COO-
H3N+-CH(R)-COOH
H3N+-CH(R)-COO-
6.
பின்வரும் சர்க்கரையானது, D – சர்க்கரையா? அல்லது L – சர்க்கரையா?

7.
α-D (+) குளுக்கோபைரனோஸின் அமைப்பை வரைக
8.
ஹார்மோன்கள் என்றால் என்ன? எடுத்துக்காட்டுகள் தருக.
9.
பின்வருவனவற்றை மோனோசாக்கரைடுகள், ஒலிகோசாக்கரைடுகள் மற்றும் பாலிசாக்கரைடுகள் என வகைப்படுத்துக.
i) ஸ்டார்ச்
ii) ஃபிரக்டோஸ்
iii) சுக்ரோஸ்
iv) லாக்டோஸ்
v) மால்டோஸ்
10.
கார்போஹைட்ரேட்டுகள் பொதுவாக ஒளிசுழற்றும் தன்மையை பெற்றுள்ளன. ஏன்?
11.
அலனினின் சுவிட்டர் அயனி அமைப்பை எழுதுக
12.
பின்வரும் குறைபாட்டு நோய்களை உருவாக்கும் வைட்டமின்களின் பெயர்களை எழுதுக.
i) ரிக்கட்ஸ்
ii) ஸ்கர்வி
13.
எவ்வகையான பிணைப்புகள் DNA விலுள்ள ஒற்றை அலகுகளை ஒன்றாக இருத்தி வைத்துள்ளன ?
14.
DNA மற்றும் RNA க்கு இடையே உள்ள ஏதேனும் மூன்று வேறுபாடுகளை எழுதுக.
15.
புரதங்களின் முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை அமைப்புகளை வேறுபடுத்துக.
16.
17.
வைட்டமின்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன?
18.
புரதங்களின் இயல்பிழத்தல் பற்றி குறிப்பு வரைக.
19.
பெப்டைடு பிணைப்பு பற்றி சிறுகுறிப்பு வரைக.
1.
(d)
கிளைசீன்
2.
(a)
D(+)-குளுக்கோஸ் மற்றும் D(+)-காலக்டோஸ்
3.
(c)
இயல்பிழத்தலினால் புரதங்களின் வினைதிறன் அதிகரிக்கிறது
4.
(d)
5.
(d)
H3N+-CH(R)-COO-
6.
இது ஒரு L-சர்க்கரை என்று குறிப்பிடப்படும்.
இவற்றில் Cல் உள்ள H மற்றும் OHஆனது L-கிளிசரால்டிஹைடின் C2 கார்பனை போன்று ஒரே அமைப்பில் அமைந்துள்ளது
7.
8.
ஹார்மோன்கள் என்பது ஒரு திசுவினால் சுரக்கப்பட்டு, இரத்த ஓட்டத்தில் கலக்கப்படும் கரிம சேர்மமாகும்.
(எ.கா. பெப்டைடு அல்லது ஸ்டீராய்டு) மேலும் இது மற்ற செல்களில் உடலியல் தூண்டல்களைத் தூண்டுகிறது.
(எ.கா. வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றம்). இது செல்களுக்கிடைப்பட்ட சமிக்ஞை மூலக்கூறாகும்.
எ.கா: டெஸ்டோஸ்டிரோன், தைராக்சின், ஈஸ்ட்ரோஜன், இன்சுலின், ஆக்ஸிடோசின் etc.
9.
i) ஸ்டார்ச் - பாலிசாக்கரைடு
ii) ஃபிரக்டோஸ் - மோனோசாக்கரைடு
iii) சுக்ரோஸ் - ஒலிகோசாக்கரைடு
iv) லாக்டோஸ் - ஒலிகோசாக்கரைடு
v) மால்டோஸ் - ஒலிகோசாக்கரைடு
10.
அநேகமாக, அனைத்து கார்போஹைட்ரேட்டுகளும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சீர்மையற்ற கார்பன் அணுக்களை பெற்றிருப்பதால் அவை ஒளி சுழற்றும் தன்மையை பெற்றுள்ளன.
சீர்மையற்ற கார்பன் எண்ணிக்கையை பொறுத்து மாற்றுகளின் எண்ணிக்கை அணுக்களின் ஒளிச்சுழற்று அமைகிறது, அதாவது 2n மாற்றுகள் இங்கு n = சீர்மையற்ற கார்பன் அணுக்களின் மொத்த எண்ணிக்கை.
குளுக்கோஸில் 4* -C உள்ளன. எனவே இது 24 = 16 மாற்றுகளை பெற்றுள்ளது.
11.
12.
| நோய் | குறைபாடு வைட்டமின் |
| ரிக்கட்ஸ் | வைட்டமின் -D (கோலேகால்சிஃபெரால் D3 எர்கோகால்சிஃபெரால்-D2) |
| ஸ்கர்வி | வைட்டமின்-C (அஸ்கார்பிக் அமிலம்) |
13.
வாட்சன் மற்றும் கிரிக் ஆகியோரால் வரையறுக்கப்பட்ட DNA அமைப்பானது, மூலக்கூறின் முப்பரிமாண அமைப்பு மாதிரியை முன்மொழிந்தனர்.
ஒற்றைப் பிணைப்புகள் கொண்ட DNA மூலக்கூறுகள் பாஸ்போடைஎஸ்டர் பிணைப்புகளைக் கொண்டு இணைந்துள்ளன. இந்த நியூக்ளிக் அமிலங்களில் (5' மற்றும் 3' கார்பன்) என்ற இரண்டு வகையான பென்டோஸ் சர்க்கரைகள் காணப்படுகின்றன.
14.
| DNA | RNA | |
| 1 | இது முக்கியமான உட்கரு மைட்டோகாண்ட்ரியா மற்றும் பசுங்கணிகங்களில் காணப்படுகின்றன . | இது முக்கியமான சைட்டோபிளாசம் உட்கருத்திரள் மற்றும் ரிபோசோம்களில் காணப்படுகிறது . |
| 2 | இது டிஆக்ஸிரிபோஸ் சர்க்கரையை கொண்டுள்ளது. | இது ரிபோஸ் சர்க்கரையை கொண்டுள்ளது . |
| 3 | காரஇணைகள் A = T மற்றும் G = C | காரஇணைகள் A = U மற்றும் C = G |
| 4 | இவை இரட்டை இழை மூலக்கூறுகள் | இவை ஒற்றை இழை மூலக்கூறுகள் |
| 5 | இதன் வாழ்நாள் அதிகம் | இதன் வாழ்நாள் குறைவு . |
| 6 | இது நிலைப்புத்தன்மை கொண்டது. காரங்களால் எளிதில் நீராற்பகுப்படைவதில்லை. | இது நிலைப்புத்தன்மை அற்றது காரங்களால் எளிதில் நீராற்பகுப்படைகின்றன |
| 7 | இதுதானாகவே இரட்டிப்படைதல் நிகழ்த்தும். | இது தானாகவே இரட்டிப்படைய முடியாது. இது DNA மூலக்கூறுகளால் உருவாக்கப்பட்டது. |
15.
புரதங்களின் முதல் நிலை அமைப்பு:
அமினோ அமிலங்களால் ஆன பாலிபெப்டைடு சங்கிலிகளாகும்.
அமினோ அமிலங்களுக்கு இடையே உருவாகும் பெப்டைடு பிணைப்பு ஆகும்.
நேரான சங்கிலி அமைப்பு.
புரதங்களின் இரண்டாம் நிலை அமைப்பு:
α-சுருள் மற்றும் β இழைகள் அல்லது தாள்கள் உருவாக்கும் பெப்டைடு சங்கிலி.
பாலிபெப்டைடு சங்கிலியில் உள்ள அமினோ அமிலங்கள் கார்பனைல் (-C=O) ஆக்சிஜனுக்கும் மற்றும் அமின்களுக்கும் (NH2) இடையே உருவாகும் ஹைட்ரஜன் பிணைப்பு மூலமாக ஒழுங்கான வடிவத்தை உருவாக்குகிறது.
α-சுருள் அல்லது β தாள் அமைப்பு
16.
17.
நீர் அல்லது கொழுப்பில் கரையும் தன்மையின் அடிப்படையில் வைட்டமின்கள் வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. இரண்டு
அ) கொழுப்பில் கரையும் வைட்டமின்கள்:
இந்த வைட்டமின்கள், கொழுப்பு உணவுடன் எடுத்துக்கொள்ளும்போது சிறப்பாக உறிஞ்சப்பட்டு கொழுப்பு திசுக்கள் மற்றும் கல்லீரலில் சேமிக்கப்படுகின்றன. இந்த வைட்டமின்கள் நீரில் கரைவதில்லை, எனவே இவை கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் என்றழைக்கப்படுகின்றன. வைட்டமின் A,D,E & K ஆகியன கொழுப்பில் கரையும் வைட்டமின்களாகும்.
ஆ) நீரில் கரையும் வைட்டமின்கள்:
வைட்டமின்கள் B(B1, B2, B3, B5, B6, B7, B9 & B₁₂) மற்றும் C ஆகியன நீரில் எளிதாக கரைகின்றன. கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் போலல்லாமல் இவற்றை சேமிக்க இயலாது. அதிகப்படியாக உள்ள வைட்டமின்கள் உடலில் சேமிக்கப்படாமல் சிறுநீரின் வழியாக வெளியேற்றப்படுகின்றன. எனவே, இவ்வகை வைட்டமின்கள் தொடர்ந்து உணவின் வழியாக நம் உடலுக்குள் செலுத்தப்பட வேண்டும்.
18.
ஒவ்வொரு புரதமும், தனிச்சிறப்பு வாய்ந்த முப்பரிமாண அமைப்பைக் கொண்டுள்ளன. இந்த முப்பரிமாண அமைப்புகளில், டைசல்பைடு பிணைப்பு, ஹைட்ரஜன் பிணைப்பு, நீர்விலக்கும் மற்றும் நிலைமின்னியல் இடையீடுகள் காணப்படுகின்றன. புரதங்களை உயர் வெப்பநிலைகளுக்கு உட்படுத்துவதாலோ,யூரியா போன்ற வேதிப்பொருட்களுடன் சேர்ப்பதாலோ, pH மற்றும் கரைசலின் அயனி வலிமையை மாற்றுவது போன்ற செயல்களால் இந்த இடையீடுகளை சிதைக்க முடியும். இவை முப்பரிமாண அமைப்பை பகுதியளவோ அல்லது முற்றிலுமாகவோ இழக்கச் செய்கின்றன. ஒரு புரதம், அதன் முதல்நிலை அமைப்பு பாதிக்கப்படாமல், உயர்நிலை அமைப்பை மட்டும் இழக்கும் நிகழ்வு இயல்பிழத்தல் என்றழைக்கப்படுகிறது. ஒரு புரதத்தின் இயல்பிழத்தலின்போது அதன் உயிரியல் செயல்பாடுகளும் முற்றிலுமாக இழக்கப்படுகிறது.
முதல்நிலை அமைப்பானது நிலையாக இருப்பதால், சில புரதங்களின் இயல்பிழத்தலை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர முடியும். தன்னிச்சையாகவோ அல்லது சேப்ரான்கள் என்றழைக்கப்படும் சிறப்புவகை நொதிகளின் (புரதங்கள் சரியாக மடிய உதவி புரியும் புரதங்கள்) உதவியுடனோ புரதங்கள் தங்களின் பழைய நிலையை அடைய முடியும்.
எடுத்துக்காட்டு : வெப்பத்தின் காரணமாக முட்டை வெண்கரு கெட்டிப்படுதல்.
19.
பெப்டைடு பிணைப்பு:
அமினோ அமிலங்கள் பெப்டைடு பிணைப்புகளால் சகப்பிணைக்கப்பட்டுள்ளன. முதல் அமினோ அமிலத்தின் கார்பாக்ஸில் தொகுதியானது இரண்டாம் அமினோ அமிலத்தின் அமினோ தொகுதியுடன் வினைப்பட்டு, அமினோ அமிலங்களுக்கிடையே அமைடு பிணைப்பு உருவாகிறது. இந்த அமைடு பிணைப்பானது பெப்டைடு பிணைப்பு என்றழைக்கப்படுகிறது. இதன் காரணமாக இறுதியில் கிடைக்கப்பெறும் சேர்மமானது டைபெப்டைடு என்றழைக்கப்படுகிறது. இந்த டைபெப்டைடுடன் மற்றொரு அமினோ அமிலம் இரண்டாம் பெப்டைடு பிணைப்பின் மூலம் இணையும்போது ட்ரைபெப்டைடு உருவாகிறது.
இதே போல டெட்ரா பெப்டைடு, பென்டா பெப்டைடு போன்றவற்றை நம்மால் உருவாக்க முடியும். அதிக எண்ணிக்கையிலான அமினோ அமிலங்கள் இதே முறையில் ஒன்றிணையும்போது பாலிபெப்டைடு பெறப்படுகிறது. இதில் இணைந்துள்ள அமினோ அமிலங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் பாலிபெப்டைடுகள் எனவும், அமினோ அமிலங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் (செயல்திறன் கொண்ட மூலக்கூறுகள்) எனவும் அழைக்கப்படுகிறது.
ஒரு பெப்டைடின் அமினோ முனையானது N- முனை என முனையானது C- முனை என்றழைக்கப்படுகிறது. பொதுவாக அறியப்படுகிறது. அதே சமயம் கார்பாக்ஸி புரத தொடர் வரிசையானது N- முனையில் தொடங்கி C- முனைக்கு எழுதப்படுகிறது. பக்கச் சங்கிலிகளை (R-தொகுதிகள்) தவிர்த்து மற்ற அணுக்கள் முதன்மைச் சங்கிலி அல்லது பாலி பெப்டைடின் முதுகெலும்பு என்றழைக்கப்படுகிறது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards