12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 18/09/2019
உலோகவியல்
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
தங்கத்தின் பயன்பாடுகள் பற்றி எழுதுக.
2.
உலோகத்தைத் தூய்மையாக்கும் உருக்கிப்பிரித்தல் முறை பற்றி எழுது.
3.
உலோகத்தை தூய்மையாக்கும் வாலை வடித்தல் முறை பற்றி எழுது.
4.
உலோகத்தைப் பயன்படுத்தி ஒடுக்குதல் மூலம் ஒரு உலோகம் பிரித்தெடுத்தல் பற்றி எழுது.
5.
ஹைட்ரஜனைக் கொண்டு ஒடுக்குதல் மூலம் உலோகம் பிரித்தெடுத்தலை பற்றி எழுது.
6.
வறுத்தல் செயல்முறை பற்றி எழுது.
7.
உலோகம் பிரித்தெடுத்தலில் ஒடுக்கமடையச் செய்யும் முன்னர் தாதுவானது தேவைப்படும் உலோகத்தின் ஆக்சைடாக ஏன் மாற்றப்படுகிறது?
8.
வேதிக் கழுவுதல் என்றால் என்ன?
9.
தாதுக்களை அடர்ப்பித்தல் என்றால் என்ன?
10.
கனிமம் என்றால் என்ன?
11.
12.
இரும்பை அதன் தாதுவான Fe2O3 யிலிருந்து பிரித்தெடுப்பதில் சுட்ட சுண்ணாம்புவின் பயன்பாடு யாது?
13.
தூய உலோகங்களை அவைகளின் தாதுக்களிலிருந்து பிரித்தெடுக்கும் பல்வேறு படிநிலைகள் யாவை?
14.
கனிமம் மற்றும் தாது ஆகியவற்றிற்கிடையேயான வேறுபாடுகள் யாவை?
15.
1.
1. தங்கம் ஒரு விலையுயர்ந்த உலோகமாகும்.
2. நாணயங்கள் தயாரிக்க பயன்படுகிறது.
3. சில நாடுகளில் பண மதிப்பானது தங்கத்தின் மதிப்பில் கணக்கிடப்படுகிறது.
4. தாமிரத்துடன் சேர்ந்த தங்க உலோகக் கலவை நகை தயாரிப்பில் அதிக அளவு பயன்படுகிறது.
5. பிற உலோகங்கள் மீது தங்க மின்முலாம் பூச பயன்படுகிறது.
6. தங்க முலாம் பூசப்பட்ட பொருள்கள், கைக்கடிகாரங்கள், செயற்கை மூட்டுகள், விலை குறைந்த நகைகள், பல் பாதுகாப்பில் பல் நிரப்புதல் மற்றும் மின் இணைப்புகள் ஆகியவற்றில் பயன்படுகிறது.
7. சோலார் செல்களின் திறனை அதிகரிக்கவும், வினைவேக மாற்றியாகவும் தங்க நானோ துகள்கள் பயன்படுகின்றன.
2.
1. குறைந்த உருகுநிலைகளைக் கொண்ட உலோகங்களை அதிகக் உருகுநிலைகளைக் கொண்ட மாசுக்களிலிருந்து நீக்க இம்முறை பயன்படுகிறது.
2. (எ.கா.) டின், காரீயம், மெர்க்குரி, பிஸ்மத்
3. பண்படா உலோகம் வெப்பத்தினால் உருக்கி நீர்மமாக்கப்பட்டு ஒரு சாய்தள பரப்பின் வழியே ஓடுமாறு செய்து தூய்மைப்படுத்தப்படுகிறது.
4. பண்படா உலோகம் ஒரு எதிர் அனல் உலையின் சாய்வான அடிப்புறத்தில் வைக்கப்படுகிறது.
5. காற்றில்லாச் சூழலில் உலோகம் அதன் உருகு நிலையை விட அதிகமான வெப்பநிலையில் வெப்பப்படுத்தப்படுகிறது.
6. தூய உருகிய உலோகம் வழிந்தோடுகிறது.
7. மாசுக்கள் அப்படியே தங்கி விடுகின்றன.
8. உருகிய உலோகம் சேகரிக்கப்பட்டு திண்மமாக்கப்படுகிறது.
3.
1. குறைவான கொதிநிலையில் ஆவியாகும் துத்தநாகம், மெர்க்குரி போன்ற உலோகங்களை தூய்மையாக்க இம்முறை பயன்படுகிறது.
2. இம்முறையில் தூய்மையற்ற உலோகம் வெப்பப்படுத்தப்பட்டு ஆவியாக்கப்படுகிறது.
3. பின்னர் ஆவியானது குளிர்விக்கப்பட்டு தூய உலோகம் பெறப்படுகிறது.
4.
1. சோடியம், பொட்டாசியம், கால்சியம் போன்ற வினைத்திறன் மிக்க உலோகங்கள், உலோக ஆக்சைடுகளை உலோகமாக ஒடுக்க பயன்படுகின்றன.
Rb2O3 + 3Mg ⟶ 2Rb + 3MgO
TiO2 + 2Mg ⟶ Ti + 2MgO
ThO2 + 2Ca \(\underrightarrow { 1250K }\) Th + 2CaO
2. இம்முறைக்கு அலுமினோ வெப்ப ஒடுக்க முறையும் ஓர் எடுத்துக்காட்டாகும்.
5.
1. ஹைட்ரஜனை விட குறைவான எலக்ட்ரோ நேர்மின் தன்மை உடைய உலோகங்களான (Fe, Pb, Cu) போன்றவற்றின் ஆக்சைடுகளுக்கு இம்முறை பயன்படுகிறது.
Ag2O(S) + H2(g) ⟶ 2Ag(S) + H2O(1) ↑
2. நீர்வாயுவான கார்பன் மோனாக்சைடு மற்றும் ஹைட்ரஜன் கலவையைக் கொண்டு நிக்கல் ஆக்சைடு ஒடுக்கப்படுகிறது.
2NiO(S) + CO(g) + H2(g) ⟶ 2Ni(S) + CO2(g) + H2O(1) ↑
6.
1. வறுத்தல் செயல்முறை சல்பைடு தாதுக்களை ஆக்சைடுகளாக மாற்ற பயன்படும் ஒரு செயல்முறை ஆகும்.
2. அடர்ப்பிக்கப்பட்ட தாதுவானது தகுந்த உலையில் எடுக்கப்பட்டு உலோகத்தின் உருகுநிலையை விட குறைவான வெப்பநிலையில் அதிக அளவு ஆக்சிஜன் செலுத்தப்பட்டு ஆக்சிஜனேற்றமடையச் செய்யப்படுகிறது.
2PbS + 3O2 ⟶ 2PbO + 2SO2 ↑
3. ஆர்சனிக், சல்பர், பாஸ்பரஸ் போன்றவை அவைகளின் எளிதில் ஆவியாகும் ஆக்சைடுகளாக வெளியேற்றப்படுகின்றன.
4As + 3O2 ⟶ 2AS2O3
7.
1. அடர்ப்பிக்கப்பட்ட தாதுவில், உலோகமானது நேர் ஆக்சிஜனேற்ற நிலையில் காணப்படுகிறது. எனவே இதனை தனிம நிலைக்கு ஒடுக்கமடையச் செய்ய வேண்டும்.
2. வெப்ப இயக்கவியல் தத்துவங்களின் படி மற்ற உலோகச் சேர்மங்களுடன் ஒப்பிடும் போது, உலோக ஆக்சைடுகளை ஒடுக்குவது எளிதானது.
3. எனவே உலோகவியலில், ஒடுக்கமடையச் செய்யும் முன்னர் தாதுவானது தேவைப்படும் உலோகத்தின் ஆக்சைடாக முதலில் மாற்றப்படுகிறது.
8.
நன்கு தூள் செய்யப்பட்ட தாதுவினை தகுந்த கரைப்பானில் கரைத்து அதிலுள்ள உலோகத்தினை கரையும் உப்பாக அல்லது அணைவுச் சேர்மமாகவும், கனிமக் கழிவுகளை கரையாத பொருளாகவும் மாற்றும் நிகழ்வு வேதிக் கழுவுதல் எனப்படும்.
9.
தாதுக்களுடன் கூடிய உலோகத் தன்மையற்ற மாசுகள், பாறைப் பொருட்கள் மற்றும் மண் மாசுகளாகிய கனிமக் கழிவுகளை தாதுக்களிலிருந்து நீக்கும் செயல்முறை தாதுக்களை அடர்ப்பித்தல் எனப்படும்.
10.
ஒரு உலோகத்தை அதன் தனித்த நிலையிலோ அல்லது அதன் ஆக்சைடு, சல்பைடு போன்ற சேர்ம நிலைகளிலோ கொண்ட இயற்கையில் அகழ்ந்து எடுக்கப்பட்ட பொருள் கனிமம் எனப்படும்.
11.
12.
மேற்கண்டுள்ள பிரித்தெடுத்தலில், ஒரு காரத்தன்மை உடைய இளக்கியான சுண்ணாம்புக்கல் (CaCO3) பயன்படுத்தப்படுகிறது. இத்தாதுவில் காணப்படும் சிலிக்கா கனிமக் கழிவானது அமிலத்தன்மையை பெற்றிருப்பதால், சுண்ணாம்புக்கல் அதனுடன் இணைந்து கால்சியம் சிலிக்கேட் எனும் கனிமக் கசடினைத் தருகிறது.
CaO(S)+ SiO2(S) ⟶ CaSiO3(S)
இளக்கி கனிமக்கழிவு கனிமக் கசடு
13.
தூய உலோகங்களை அவைகளின் தாதுக்களிலிருந்து பிரித்தெடுக்கும் பல்வேறு படிநிலைகள்:
i. தாதுக்களை அடர்ப்பித்தல்
ii. பண்படா உலோகத்தைப் பிரித்தெடுத்தல்
iii. பண்படா உலோகத்தைத் தூய்மையாக்கல்
14.
| கனிமம் | தாது | |
| 1. | இயற்கையில் காணப்படும் அகழ்ந்து எடுக்கப்பட்ட ஒரு பொருளானது ஓர் உலோகத்தை அதன் தனித்த நிலையிலோ, அல்லது அதன் ஆக்சைடு, சல்பைடு போன்ற சேர்ம நிலைகளிலோ கொண்டிருப்பின், அந்தப் பொருள் கனிமம் எனப்படும். | அதிக சதவீதத்தில் உலோகத்தினை பெற்றுள்ள கனிமங்களிலிருந்து எளிதாகவும், பொருளாதார ரீதியாக சிக்கனமாகவும் உலோகங்களை பிரித்தெடுக்க இயலுமாயின் அத்தகைய கனிமங்கள் தாதுக்கள் எனப்படும். |
| 2. | அனைத்துக் கனிமங்களும் தாதுக்கள் அல்ல | அனைத்துத் தாதுக்களும் கனிமங்களாகும் |
| 3. | பாக்சைட் மற்றும் களிமண் ஆகியன அலுமினியத்தின் கனிமங்களாகும். | பாக்சைட் அலுமினியத்தின் தாது ஆகும் |
15.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards