12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 03/10/2019
வேதிவினை வேகவியல்
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
ஒரு முதல் வகை வினைக்கு 99% வினை முடிவடைய ஆகும் காலம் 90% வினை முடிவடையும் காலத்தைப் போல் இரு மடங்கு என நிரூபி.
2.
ஒரு முதல் வகை வினையின் அரை வாழ் காலம் 10 நிமிடங்கள் என்றால் ஒரு மணி நேரம் கழிந்த பின் வினைபடு பொருள் எத்தனை சதவீதம் எஞ்சியிருக்கும்?
3.
ஒரு முதல் வகை வினையின் வினைவேக மாறிலி மதிப்பு 1.54x10-3s-1 என்றால் அதன் அரை வாழ் கால மதிப்பு என்ன?
4.
ஒரு எஸ்டரின் நீராற்பகுப்பு வினையானது அவ்வினையில் உருவாகும் கார்பாக்சிலிக் அமிலத்தை சோடியம் ஹைட்ராக்ஸைடிற்கு எதிராக தரம் பார்த்தல் மூலம் கண்காணிக்கப்படுகிறது. வெவ்வேறு கால இடைவெளிகளில் எஸ்டரின் செறிவானது பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளது.
| நேரம் (min) | 0 | 30 | 60 | 90 |
| எஸ்டரின் செறிவு mol L-1 |
0.85 | 0.80 | 0.754 | 0.71 |
மேற்கொண்டுள்ள வினை ஒரு முதல் வகை வினை எனக்காட்டுக.
5.
2NO(g)+Cl2(g)➝ 2NOCl(g) என்ற வினைக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் ஒவ்வொரு வினை ஒட்டுமொத்த வினைவகை மற்றும் ஒட்டுமொத்த வினைவகை ஆகியனவற்றின் மதிப்புகளைக் காண்க.
| சோதனை எண் | துவக்கச் செறிவு | துவக்க வினை வேகம் | |
| NO | Cl2 | NOCl mol L-1 s-1 | |
| 1. | 0.1 | 0.1 | 7.8x10-5 |
| 2. | 0.2 | 0.1 | 3.12x10-4 |
| 3. | 0.2 | 0.3 | 9.63x10-4 |
6.
பூஜ்ய வகை வினைக்கு மூன்று எடுத்துக்காட்டுகள் தருக.
7.
வினை வேகம் மற்றும் வினை வேக மாறிலி ஆகியவற்றிற்கு இடையேயான வேறுபாடுகளைத் தருக.
8.
ஒரு முதல் வகை வினையானது 99.9% நிறைவடைய தேவையான நேரமானது, அவ்வினை பாதியளவு நிறைவடைய தேவையான நேரத்தைப் போல தோராயமாக பத்து மடங்கு எனக் காட்டுக,
9.
பூஜ்ய வகை வினைக்கு இரு எடுத்துக்காட்டுகள் தருக.
10.
ஆர்ஹீனியஸ் சமன்பாட்டினை எழுதி அதில் இடம் பெற்றுள்ளவற்றை விளக்குக.
1.
t99%⇒[Ao] = 100%; [A] = 100 - 99 = 1%
t90%⇒[Ao] = 100%; [A] = 100-90 = 10%
\(t=\frac { 2.303 }{ K } log\frac { [{ A }_{ o }] }{ [A] } \)
\({ t }_{ 99\% }=\frac { 2.303 }{ K } log\frac { 100 }{ 1 } \)
\({ t }_{ 99\% }=\frac { 2.303 }{ K } log{ 10 }^{ 2 }\)
\({ t }_{ 99\% }=\frac { 2.303 }{ K } \times 2\quad \quad ----(1)\)
\({ t }_{ 90\% }=\frac { 2.303 }{ K } log10\)
\({ t }_{ 90\% }=\frac { 2.303 }{ K } \times 1\quad \quad ---(2)\)
(1)ஐ (2) ஆல் வகுக்க.
\(\frac { { t }_{ 99\% } }{ { t }_{ 90\% } } =\frac { \frac { 2.303 }{ K } \times 2 }{ \frac { 2.303 }{ K } \times 1 } \)
\(\frac { { t }_{ 99\% } }{ { t }_{ 90\% } } =\frac { 2 }{ 1 } \)
\(\therefore \quad { t }_{ 90\% }=2{ t }_{ 90\% }\)
2.
t1/2 = 10 நிமிடங்கள்; t = 1 மணி நேரம் = 60 நிமிடங்கள் = 6 x 10 நிமிடங்கள்
t1/2 = 6t1/2
\(100\%\overset { { 1 }^{ { t }_{ 1/1 } } }{ \longrightarrow } 50\%\overset { 2^{ { t }_{ 1/1 } } }{ \longrightarrow } 25\%\overset { { 3 }^{ { t }_{ 1/2 } } }{ \longrightarrow } 12.5\%\overset { { 4 }^{ { t }_{ 1/2 } } }{ \longrightarrow } 6.25\%\overset { { 5 }^{ { t }_{ 1/2 } } }{ \longrightarrow } 3.125\%\overset { { 6 }^{ { t }_{ 1/2 } } }{ \longrightarrow } 1.5625\%\\ \)
எனவே ஒரு மணி நேரத்திற்கு பின் 1.5625% வினைபடு பொருள் எஞ்சியிருக்கும்.
3.
K = 1.54 x 10-3S-1; t1/2 = ?
\({ t }_{ 1/2 }=\frac { 0.6932 }{ K } \)
\(=\frac { 0.6932 }{ 1.54\times { 10 }^{ -3 } } \)
\({ t }_{ 1/2 }=450\) விநாடிகள்.
4.
\(k=\frac { 2.303 }{ t } log\frac { [{ A }_{ o }] }{ [A] } \)
\({ k }_{ 1 }=\frac { 2.303 }{ 30 } log\frac { 0.85 }{ 0.80 } =\frac { 2.303 }{ 30 } log1.0625\)
\(=\frac { 2.303 }{ 30 } \times 0.0263=2.021\times { 10 }^{ -3 }\) நிமி-1
\({ k }_{ 2 }=\frac { 2.303 }{ 60 } log\frac { 0.85 }{ 0.754 } =\frac { 2.303 }{ 60 } log1.127\)
\(=\frac { 2.303 }{ 30 } \times 0.0520=1.998\times { 10 }^{ -3 }\) நிமி-1
\({ k }_{ 3 }=\frac { 2.303 }{ 90 } log\frac { 0.85 }{ 0.71 } =\frac { 2.303 }{ 90 } log1.197\)
\(\frac { 2.303 }{ 90 } \times 0.0782=2.0\times { 10 }^{ -3 }\)நிமி-1
மூன்று k மதிப்புகளும் ஏறக்குறைய சமம். எனவே k மதிப்பு ஒரு மாறிலி. எனவே மேற்கண்ட வினை ஒரு முதல் வகை வினை ஆகும்.
5.
2NO(g)+Cl2(g) ➝ 2NOCl(g)
வினை வேகம்1 = K [NO]m[Cl2]n
7.8 x 10-5 = K[0.1]m[0.1]n ----(1)
வினை வேகம்2 = K [NO]m[Cl2]n
3.12 x 10-4=K[0.2]m[0.1]n ----(2)
வினை வேகம்3 = K [NO]m[Cl2]n
9.36 x 10-4=K[0.2]m[0.3]n ----(3)
(2) ஐ (1) ஆல் வகுக்க,
\(\frac { 3.12\times { 10 }^{ -4 } }{ 7.8\times { 10 }^{ -5 } } =\frac { { k[0.2] }^{ m }{ [0.1] }^{ n } }{ k{ [0.1] }^{ m }{ [0.1] }^{ n } } \)
\(0.4\times 10={ \left( \frac { 0.2 }{ 0.1 } \right) }^{ m }\)
4 = 2m
22 = 2m
ஃ m = 2
எனவே NO வைப் பொறுத்து வினைவகை 2 ஆகும்.
(3) ஐ (2) ஆல் வகுக்க
\(\frac { 9.36\times { 10 }^{ -4 } }{ 3.12\times { 10 }^{ -4 } } =\frac { { k[0.2] }^{ m }{ [0.3] }^{ n } }{ k{ [0.2] }^{ m }{ [0.1] }^{ n } } \)
\(3={ \left( \frac { 0.3 }{ 0.1 } \right) }^{ n }\)
31 = 3n
ஃ n = 1
எனவே Cl2 ஐ பொறுத்து வினை வகை 1 ஆகும்.
ஃ ஒட்டுமொத்த வினை வகை
= m + n = 2 + 1 = 3 ஆகும்
6.
i) H2 மற்றும் Cl2 ஆகியவற்றிற்கு இடையேயான ஒளி வேதி வினை
H2(g)+Cl(g) ⟶ HCl(g)
ii) சூடான பிளாட்டினம் புறப்பரப்பில் N2O சிதைவடைதல்
N2O(g) ⇌ N2(g) +\(\frac{1}{2}\)O2(g)
iii) அசிட்டோன் அயோடினேற்றமடையும் வினை. அயோடினைப் பொறுத்து பூஜ்ய வகை வினை
CH2COCH3+I2 \(\overset { { H }^{ + } }{ \longrightarrow } \) I CH2COCH3+HI
7.
| வ.எண் | வினை வேகம் | வினை வேக மாறிலி |
| 1 | எந்த ஒரு நேரத்திலும் வினைபடு பொருள்கள் வினை விளைப் பொருட்களாக மாற்றப்படும் வேகத்தினை இது குறிப்பிடுகின்றது. | இது ஒரு விகித மாறிலியாகும். |
| 2 | வினைபடு பொருட்களின் செறிவு குறைவு அல்லது வினை விளை பொருட்களின் செறிவு அதிகரிப்பால் இது அளந்தறியப்படுகிறது. | ஒரு வினையில் ஈடுபடும் ஒவ்வொரு வினைபடு பொருளின் செறிவும் 1 mol L-1 ஆக உள்ள போது அத்தருணத்தில் வினையின் வேகமானது அவ்வினையின் வினைவேக மாறிலிக்குச் சமமாகிறது. |
| 3 | இது வினைபடு பொருட்களின் துவக்கச் செறிவினைப் பொறுத்து அமையும். | இது வினைபடு பொருட்களின் துவக்கச் செறிவினைப் பொறுத்து அமையாது. |
8.
[A0] = 100; என்க
t = t99.9%;[A] = (100-99.9) = 0.1
\(k=\frac { 2.303 }{ t } log\left( \frac { \left[ { A }_{ 0 } \right] }{ \left[ A \right] } \right) \)
t99.9%\(=\frac { 2.303 }{ k } log\left( \frac { 100 }{ 0.1 } \right) \)
t99.9%\(=\frac { 2.303 }{ k } log1000\)
t99.9%\(=\frac { 2.303 }{ k } (3)\)
t99.9%\(=\frac { 6.909 }{ k } \)
t99.9%\(=10\times \frac { 0.69 }{ k } \)
t99.9% = 10t1/2
9.
பூஜ்ய வகை வினைக்கு இரு எடுத்துக்காட்டுகள்:
1. H2 மற்றும் Cl2 ஆகியவற்றிற்கு இடையேயான ஒளி வேதிவினை
\({ H }_{ 2(g) }+{ Cl }_{ 2(g) }\overset { hv }{ \longrightarrow } 2HC{ l }_{ (g) }\)
2. சூடான பிளாட்டினம் புறப்பரப்பில் N2O சிதைவடைதல்.
\({ N }_{ 2 }{ O }_{ (g) }\leftrightharpoons { N }_{ 2(g) }+\frac { 1 }{ 2 } { O }_{ 2(g) }\)
10.
K = \(A{ e }^{ \frac { -Ea }{ RT } }\)
K = வினைவேக மாறிலி
A = அதிர்வெண் காரணி
Ea = கிளர்வு ஆற்றல்
R = வாயு மாறிலி
T = தனி வெப்பநிலை Kல்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards