12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 06/12/2019
அன்றாட வாழ்வில் வேதியியல்
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
குளோராக்சைலெனோல் மற்றும் டெர்பினால் கலவையானது _____ ஆக பயன்படுகிறது
புறத்தடுப்பான்
காய்ச்சல் மருந்து
எதிர் உயிரி
வலிநிவாரணி
2.
போர்வைகள் (செயற்கை கம்பளி) செய்ய பயன்படும் பலபடி _______.
பாலிஸ்டைரீன்
PAN
பாலிஎஸ்டர்
பாலித்தீன்
3.
தூக்கத்தை தூண்டும் மருந்துப் பொருளாக பயன்படுவது ___________
பாராசிட்டமால்
பைதியோனால்
குளோரோகுயின்
ஈக்வனில்
4.
பின்வருவனவற்றுள் எது நியோப்ரீனின் ஒற்றைப்படி மூலக்கூறு?

\(CH_2=CH -C \equiv CH\)
CH2 =CH −CH=CH2

5.
டெரிலீன் என்பது எதற்கு எடுத்துக்காட்டு ?
பாலிஅமைடு
பாலித்தீன்
பாலிஎஸ்டர்
பாலிசாக்கரைடு
6.
சர்க்கரை நோயாளிகளுக்கான இனிப்புகள் தயாரிக்க பயன்படும் இனிப்புச் சுவையூட்டி எது?
7.
உணவு பதனப்பொருட்கள் என்பவை யாவை?
8.
புறத்தடுப்பான்கள் எவ்வாறு கிருமிநாசினிகளிடமிருந்து வேறுபடுகின்றன?
9.
வலிநிவாரணியாகவும், காய்ச்சல் மருந்தாகவும் பயன்படும் ஒரு சேர்மத்தின் பெயரைக் குறிப்பிடுக.
10.
எதிர் உயிரிகள் என்றால் என்ன?
11.
டெட்டாலின் புறைத்தடுப்பான் பண்பிற்கு காரணமான வேதிப்பொருள் எது?
12.
இரப்பரின் வல்கையாக்கல் பற்றி குறிப்பு வரைக .
13.
டெரிலீன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
14.
போதை தரும், போதை தராத மருந்துப் பொருட்கள் என்றால் என்ன? எடுத்துக்காட்டுகள் தருக
15.
சோப்புகள் மற்றும் டிடர்ஜெண்ட்களின் அழுக்கு நீக்கும் செயல்பாட்டின் வழிமுறையை விளக்குக.
16.
மன அமைதிப்படுத்திகள் உடலில் எவ்வாறு செயல்புரிகின்றன?
17.
தொகுப்பு டிடர்ஜெண்ட்கள் பற்றி குறிப்பு வரைக .
18.
வெப்பத்தால் இளகும் மற்றும் வெப்பத்தால் இறுகும் பிளாஸ்டிக்குகள் வேறுபடுத்துக.
19.
1.
(a)
புறத்தடுப்பான்
2.
(b)
PAN
3.
(d)
ஈக்வனில்
4.
(a)

5.
(c)
பாலிஎஸ்டர்
6.
சுக்ரலோஸ் பயன்படுத்தப்படுகிறது. சர்க்கரைப் பதிலீடுகளான சார்பிட்டால், சைலிட்டால் மற்றும் மேனிட்டால் ஆகியன இனிப்புச் சுவையுடையன. அவை இன்சுலின் அல்லாமல் வளர்சிதை மாற்றத்திற்கு உட்படுகின்றன. செயற்கை இனிப்புச் சுவையூட்டிகளான அஸ்பார்டேம், அலிட்டேம் மற்றும் சாக்கரின் போன்றவையும் பயன்படுத்தப்படுகின்றன. இவை புறக்கணிக்கத்தக்க ஊட்டசத்து மதிப்புடையவை.
7.
நுண்ணுயிரிகளின் வளர்ச்சி காரணமாக, நொதித்தல், அமிலமாக்கல் அல்லது மற்ற உணவுக் கெட்டுப்போகும் செயல்முறைகளை தடுக்கவோ, ஒடுக்கவோ செய்யும் திறன் படைத்த வேதிப்பொருட்கள்,
பதனப்பொருட்கள் எனப்படும். இவை உணவை கெட்டுப்போகச் செய்யும் நுண்ணுயிர்களை அழிக்கும் பொருட்டு உணவில் சேர்க்கப்படும் பொருட்களாகும்.
எ.கா:
சோடியம் பென்சோவேட், NaCl, அசிட்டிக் அமிலம், சோடியம் மெட்டாபைசல்பைட். பொட்டாசியம் மெட்டாபைசல்பைட் etc.,
8.
| புறத்தடுப்பான் | கிருமிநாசினி |
| நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை தடுக்கும் மருந்தாக உயிருள்ள திசுக்களின் மீது பயன்படுகிறது. | நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை தடுக்கும் மருந்தாக உயிரற்ற பொருட்களின் மீது பயன்படுத்தப்படும் வேதிப்பொருளாகும். |
| எல்லா புறத்தடுப்பான் கிருமி நாசினியாக பயன்படுத்தலாம். | எல்லா கிருமிநாசினிகளும் புறத்தடுப்பான்களாக பயன்படுவதில்லை. |
| இவற்றை உட்கொள்ளப்படுவதோ விழுங்கப்படுவதோ இல்லை. | இவற்றை ஊசிகளின் மூலமாக உட்செலுத்தவோ, விழுங்கவோ படுகிறது. |
| எ.கா. போவிடோன் அயோடின் | எ.கா. H2O2 குளோரின் சேர்மங்கள் |
புறைத்தடுப்பான் என்பன, உயிருள்ள திசுக்களின் மீது பயன்படுத்தப்படும் மருந்துகளாகும். கிருமிநாசினிகள் என்பன, தரை போன்ற உயிரற்ற பொருட்களின் மீது பயன்படுத்தப்படும் அதே வேதிப்பொருட்களாகும்.
9.
ஆஸ்பிரின்
10.
1.அநேக நுண்ணுயிரிகள் (பாக்டீரியா, பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகள் சில வேதிப்பொருட்களை வெளிப்படுத்துகின்றன.
2. இவ்வேதிப்பொருட்கள் மற்ற நுண்ணுயிரிகள் வளர்ச்சி, வளர்சிதை மாற்றத்தை தடுக்கும் தன்மையுடைய வேதிகள் நுண்ணுயிரி எதிரிகள் எனப்படுகின்றன .
11.
குளோராக்சைலெனோல் மற்றும் டெர்பினால்
12.
சார்லஸ் குட் இயர் என்பவர் இயற்கை இரப்பர் மற்றும் சல்பர் சேர்ந்த கலவையை சூடான அடுப்பின் மீது தற்செயலாக விட்டார். அந்த இரப்பரானது வலிமையானதாகவும், நீளும் தன்மை கொண்டதாகவும் மாறியதைக் கண்டு அவர் ஆச்சரியமடைந்தார். குட் இயர் இந்த செயல்முறையை “இரப்பர் உருவூட்டல்" அல்லது வல்கையாக்கல் என்றழைத்தார். இயற்கை இரப்பரை, 5 - 3.% சல்பருடன் சேர்த்து -100 150°C வெப்பநிலையில் வெப்பப்படுத்தும்போது சிஸ் -1.4 பாலிஐசோபிரீன் சங்கிலிகள் டைசல்பைடு பிணைப்புகளால்(-S-S) குறுக்க பிணைக்கப்படுகின்றன.
வல்கனைசேஷனுக்கு பயன்படுத்தப்படும் சல்பரின் அளவை கட்டுப்படுத்துவதன் மூலமாக இரப்பரின் இயற் பண்புகளை மாற்றியமைக்க முடியும். 1 முதல் 3 % வரை சல்பரைக் கொண்டுள்ள இரப்பரானது மிருதுவானதாகவும், நீளும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.3 முதல் 10% வரை சல்பரைப் பயன்படுத்தும்போது இரப்பரானது கடினமானதாக ஆனால், நெகிழும் தன்மை கொண்டதாக மாறுகிறது.
13.
(i) ஒற்றைப்படிகள் எத்திலீன் கிளைக்கால் மற்றும் டெரெப்தாலிக் அமிலம் (அல்லது டைமெத்தில் டெரெப்தாலேட்) ஆகியன ஒற்றைப்படிகளாக உள்ளன.
(ii) வினையூக்கி ஜிங்க் அசிட்டேட் மற்றும் ஆன்டிமனி ட்ரையாக்சைடு
(iii) வெப்பநிலை : 500 K
(iv) விளைபொருள் : டெரிலீன்
பயன்கள் : பஞ்சு அல்லது கம்பளி இழைகளுடன் கலத்தலிலும் பாதுகாப்பு தலைக்கவசங்களில் கண்ணாடி பொருளாகவும் பயன்படுகிறது.
14.
போதை தரும் வலி நிவாரணிகள்: [ஓபியாய்டுகள்]
இவை போதை தரக்கூடிய வலிநிவாரணிகளாகும். இவை வலியை நீக்கி தூக்கத்தை கொடுக்கின்றன.
கடுமையான வலியிலிருந்து, நிவாரணம் அளிக்க குறைந்த காலம் அல்லது நீண்ட காலத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக அறுவை சிகிச்சைக்கு பிறகு உண்டாகும் வலி, இறுதி நிலை புற்று நோய் வலிக்கு பயன்படுகிறது.
எ.கா: மார்ஃபின், கோடின்
போதை தராத வலி நிவாரணி:
இவை போதை ஏற்படுத்தாத நிவாரணிகளாகும். இவை, சுய உணர்வு நிலையை பாதிக்காமல் வலியை குறைக்கின்றன.
குறிப்பிட்ட இடத்திலுள்ள வலி தூண்டல்களை குறைத்து வலியை நீக்குகின்றன. இவை குறுகிய கால நிவாரணியாகவும், தலைவலி, தசைவலி, சிராய்ப்பு அல்லது மூட்டு அழற்சி போன்ற மிதமான வலியை போக்கவும் பயன்படுகிறது.
எ.கா: ஆஸ்பிரின், பாராசிட்டமால், புரூஃபென் இதில் இரு வகைகள் உள்ளன.
அ) அழற்சி எதிர்ப்பு மருந்துகள்:
எ.கா: ஆஸ்பிரின், புரூஃபென்
ஆ) ஸ்டீராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு
மருந்துகள்:
(NSAIDs) எ.கா: புரூஃபென்
15.
சோப்புகளின் அழுக்கு நீக்கும் செயல்பாடானது சோப்பில் உள்ள கார்பாக்ஸிலேட் அயனியின் (பால்மிடேட் அயணி) அமைப்புடன் நேரடியாக தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.
ஹைட்ரோகார்பன் பகுதியானது முனைவற்ற பகுதியாகவும் கார்பாக்ஸில் பகுதி முனைவுற்ற பகுதியாகவும் உள்ளது.
முனைவுற்ற பகுதியானது நீர்விரும்பும் தன்மை கொண்டது. ஆனால் முனைவற்ற பகுதியானது நீர்வெறுக்கும் தன்மை கொண்டது. நீர்வெறுக்கும் முனைவற்ற பகுதியானது எண்ணெய் மற்றும் பிசுக்கில் கரைகிறது. ஆனால் நீரில் கரைவதில்லை. நீர்விரும்பும் கார்பாக்ஸிலேட் தொகுதியானது நீரில் கரைகிறது. தூசித் துகள்கள் அல்லது எண்ணெய் பிசுக்கு ஆகியன துணிகளில் அழுக்காக ஒட்டிக்கொண்டுள்ளன. துணிகளில் எண்ணெய் அல்லது பிசுக்கு ஒட்டிக்கொண்டுள்ள பகுதியில் சோப்புகளை சேர்க்கும்போது, சோப்பின் ஹைட்ரோகார்பன் பகுதியானது பிசுக்கில் கரைகிறது. எதிர்மின் சுமைகொண்ட கார்பாக்ஸிலேட் முனையானது பிசுக்கின் மேற்பகுதியில் நீட்டிக்கொண்டுள்ளது.
அதே நேரத்தில் எதிர்மின்சுமை கொண்ட கார்பாக்ஸிலேட் தொகுதிகள் நீரினால் வலுவாக சூழப்படுகின்றன. இதன் காரணமாக சிறிய நுண்கொழுப்புப் பொருள் (micelles) துளி உருவாகிறது. மேலும், பிசுக்கானது திடப் பொருளிலிருந்து வெளியேற்றப்பட்டு மிதக்கிறது. நீரில் அலசும்போது இந்த மிசெல்லானது நீருடன் வெளியேறுகிறது. இதனால் துணிகளிலிருந்து விடுபட்டு நுண்கொழுப்பு பொருட்கள் நீரில் கழுவி நீக்கப்படுகின்றன. நுண்கொழுப்பு பொருட்களின் மேற்பரப்பானது எதிர்மின், சுமையை பெற்றிருப்பதால் துகள்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து பெரிய குமிழாக மாறுவதில்லை. நீருக்கும். நீரில் கரையாத பிசுக்கிற்கும் இடையே குழம்பாக்கும் காரணியாக செயல்படும் தன்மையை பொறுத்தே சோப்பின் அழுக்கு நீக்கும் தன்மை அமைகிறது.
டிடர்ஜெண்டுகளின் அழுக்கு நீக்கும் செயல்பாடானது அழுக்கு நீக்கிகளின் அழுக்கு நீக்கும் செயல்பாட்டை ஒத்துள்ளது. நேரயனி டிடர்ஜெண்டுகளின் அமைப்பானது.
16.
இவை நரம்பு மண்டலத்தை தாக்கும் மருந்துகளாகும். வேலியம், டையசிபாம் போன்றவை மூளையிலுள்ள டோபமைன் எனும் நரம்புத் தூண்டல் கடத்தியை முடக்குவதன் மூலம் மைய நரம்பு மண்டலத்தின் மீது செயல்புரிகின்றன.
இவை, காமா அமினோ பியூட்ரிக் அமிலம் (GABA) என்ற நரம்புத் தூண்டல் கடத்தியின் செயல்பாட்டை தூண்டுகிறது. இதனால் மூளையில் நரம்பு உந்துதல் பரிமாற்றம் தடுக்கப்பட்டு பதற்றம் குறைகிறது. இவற்றின் பக்க விளைவுகள் பார்பிட்ரேட்டுகளைப் போல் உள்ளன. அதாவது தூக்கம் அயர்வு, நிலையற்ற நடைபோன்றவை.
17.
தொகுப்பு டிடர்ஜெண்ட்கள் என்பவை ஆல்கைல் ஹைட்ரஜன் சல்பேட்டுகளின் சோடியம் உப்புகள் அல்லது நீண்ட சங்கிலி ஆல்கைல் பென்சீன் சல்ஃபானிக் அமிலங்களின் சோடியம் உப்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட விளைபொருட்களாகும். மூன்று வகையான டிடர்ஜெண்ட்கள் உள்ளன.
சோப்புகள்:
அ) எதிரயனி டிடர்ஜெண்ட்கள் :
இவை சல்போனேற்றப்பட்ட நீண்ட சங்கிலி ஆல்கஹால் அல்லது ஹைட்ரோகார்பன்களின் சோடியம் உப்புகள் ஆகும். இவற்றின் மூலக்கூறின் எதிரயனி பகுதி சுத்தப்படுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளது. எ.கா. சோடியம் லாரைல் சல்பேட் (SDS)
பயன்: வீட்டு உபயோகத்திலும் மற்றும் பல்பொடியிலும் பயன்படுத்தப்படுகிறது.
ஆ) நேரயனி டிடர்ஜெண்ட்கள் :
இவை அசிட்டேட்டுகள், குளோரைடுகள் அல்லது புரோமைடுகள் அயனிகளாகக் கொண்ட அமீன்களான நான்கு (4o) அமோனியம் உப்புகள். இவற்றின் மூலக்கூறின் நேரயனி பகுதி சுத்தப்படுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளது.
எ.கா.: N- ஹெக்சாடெக்கைல்ட்ரைமெத்தில் அமோனியம் குளோரைடு
இ) அயனித் தன்மையற்ற டிடர்ஜெண்ட்கள் :
இவற்றில் எந்த அயனியும் இல்லை. இவை உயிர் மூலக்கூறு நிறை ஆல்கஹாலின் எஸ்டர்களாகும்.
எ.கா. பென்டாஎரித்ரிட்டால் ஸ்டியரேட்
பயன்: பாத்திரம் கழுவுவதிலும் பயன்படுகிறது.
18.
வெப்பத்தால் இளகும் பலபடி :
1. வெப்பத்தால் நெகிழும் பலபடி
2. இவற்றை வெப்பப்படுத்தும்போது இளகி குளிர்விக்கும் போது இறுகுகின்றது.
3. இவற்றை மறுவடிவமைப்பிற்கு உட்படுத்தலாம்.
எ.கா : பாலித்தீன் ,PVC, பாலிஸ்டைரீன்
வெப்பத்தால் இறுகும் பலபடி :
1.இவை வெப்பப்படுத்தும் போது இளகாமல், உருகும் தன்மையற்ற பொருளாக மாறுகின்றன.
எ.கா: பேக்கலைட் மெலமைன் பார்மால்டிஹைடு
19.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards