12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 24/10/2019
அணைவு வேதியியல்
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
இரண்டாம் நிலை இணைதிறனை நிறைவு செய்யும் தொகுதிகள் _______________ எனப்படும்.
மைய உலோக அயனி
ஈனிகள்
அணைவு அயனி
அணைவுச் சேர்மம்
2.
மைய உலோக அயனியின் முதன்மை இணைதிறனை நிறைவு செய்வது ______________
நேர் அயனிகள்
எதிர் அயனிகள்
நடுநிலை மூலக்கூறுகள்
மேற்கண்ட அனைத்தும்
3.
மைய உலோக அயனியின் இரண்டாம் நிலை இணை திறன் என்பது அதன் _____________
அணு எண்
ஆக்சிஜனேற்ற எண்
நிறை எண்
அணைவு எண்
4.
பின்வருவனவற்றுள் பாராகாந்தத்தன்மை உடையது எது?
[Zn(NH3)4]2+
[Co(NH3)6]3+
[Ni(H2O)6]2+
[Ni(CN)4]2-
5.
[Pt(Py)(NH3)(Br)(Cl)] என்ற அணைவுச் சேர்மத்திற்கு சாத்தியமான வடிவ மாற்றியங்கள் எத்தனை?
3
4
0
15
6.
[Pt(NH3)2Cl2] என்ற அணைவுச் சேர்மம் பெற்றுள்ள மாற்றியம் __________
அணைவு மாற்றியம்
இணைப்பு மாற்றியம்
ஒளிசுழற்சி மாற்றியம்
வடிவ மாற்றியம்
7.
பின்வருவனவற்றுள் அதிகபட்ச Δ0 எண் மதிப்பை பெற்றுள்ள அணைவு அயனி எது?
[Co(CN)6]3-
[Co(C2O4)]3-
[Co(H2O)6]3+
[Co(NH3)6]3+
8.
பின்வருவனவற்றுள் 1.73BM காந்த திருப்புத்திறன் மதிப்பினைப் பெற்றுள்ளது எது?
TiCl4
[CoCl6]4-
[Cu(NH3)4]2+
[Ni(CN)4]2-
9.
[Fe(H2O)5NO]SO4 அணைவுச் சேர்மத்தில் இரும்பின் ஆக்சிஜனேற்ற நிலை மற்றும் ஈனி NO ன் மின்சுமை ஆகியன முறையே __________
முறையே +2 மற்றும் 0
முறையே +3 மற்றும் 0
முறையே +3 மற்றும் -1
முறையே +1 மற்றும் +1
10.
இரட்டை உப்புகள் மற்றும் அணைவுச் சேர்மங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் யாவை?
11.
பின்வரும் அணைவுச் சேர்மங்களுக்கு IUPAC பெயர் தருக.
i) Na2[Ni(EDTA)]
II) [Ag(CN)2]
iii) [Co(en)3]2(SO4)3
iv) [Co(ONO)(NH3)5]2+
v) [Pt(NH3)2Cl(NO2)]
12.
சிஸ் பிளாட்டின் புற்றுநோய் கட்டிகளுக்கு எதிரான மருந்துப்பொருளாக எவ்வாறு பயன்படுகிறது?
13.
புகைப்படத் தொழிலில் அணைவுச் சேர்மத்தின் பயன் யாது?
14.
VB கொள்கையின் வரம்புகள் யாவை?
15.
படிகப்புல பிளப்பு ஆற்றல் என்றால் என்ன? விளக்குக.
16.
[Ti(H2O)6]3+ நிறமுடையது ஆனால் [Sc(H2O)6]3+ நிறமற்றது விளக்குக.
17.
பின்வரும் அணைவுச் சேர்மங்களை அவைகளின் மோலார் கடத்துத் திறனின் ஏறு வரிசையில் எழுதுக.
(i) Mg[Cr(NH3)(Cl)5]
(ii) [Cr(NH3)5Cl]3[CoF6]2
(iii) [Cr(NH3)3Cl3]
18.
பல முனை ஈனிகள் என்றால் என்ன?
19.
அணைவுக் கோளம் என்றால் என்ன?
20.
முதன்மை இணைதிறன் என்றால் என்ன?
21.
நான்முகி அணைவுகள் வடிவ மாற்றியங்களைப் பெற்றிருப்பதில்ல ஏன்?
22.
மருத்துவத்துறையில் பயன்படும் அணைவுச் சேர்மத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு தருக. மேலும் உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்த அணைவுச் சேர்மங்களுக்கு இரு எடுத்துக்காட்டுகள் தருக.
23.
d2sp3
24.
sp
25.
Fe2(CO)9
26.
கரைப்பனேற்ற மாற்றியம்
27.
அயனியாதல் மாற்றியம்
1.
(b)
ஈனிகள்
2.
(b)
எதிர் அயனிகள்
3.
(d)
அணைவு எண்
4.

5.
மூன்று மாற்றியங்கள். ஏதேனும் ஒரு ஈனியை குறிப்பாகக் கொண்டால் (உதாரணமாக Py) மற்ற மூன்று ஈனிகள் (NH3, Br- nyAne CI-) ஆகியன (Py) ஐப்பொருத்து அமைவதன் அடிப்படையில் மூன்று வடிவ மாற்றியங்கள் உருவாகின்றன.
6.

வடிவ மாற்றியம்
7.
அனைத்து அணைவுச் சேர்மங்களிலும், மைய உலோக அயனி Co3+ ஆகும். கொடுக்கப்பட்டுள்ள ஈனிகளில் CN- ஆனது வலிமையான ஈனி, இது அதிக படிக புலப்பிளவை ஏற்படுத்துகிறது.
Δ0
8.

9.
\(\left[\mathrm{Fe}\left(\mathrm{H}_2 \mathrm{O}\right)_5^{+} \mathrm{NO}\right]^{2+} \mathrm{SO}_4{ }^{2-}\)
முறையே +1 மற்றும் +1
10.
| வ.எண். | இரட்டை உப்புகள் | அணைவுச் சேர்மங்கள் |
|---|---|---|
| 1 | பொதுவாக இது இரு சமமோல் எளிய உப்பு விகிதங்களைக் கொண்டிருக்கும். | இரு எளிய உப்புக்களின் சமமோல் அல்லது சமமோல்கள் அற்ற விகிதங்களை கொண்டிருக்கும். |
| 2 | கரைசலில் இரட்டை உப்புகள் அதன் உட்கூறு அயனிகளாக பிரிகையடைகின்றன. | அணைவு அயனிகள் அதன் உட்கூறு அயனிகளாக பிரிகையடைவதில்லை. |
| 3 | இவை அயனிச் சேர்மங்களாகும் மேலும் இவற்றில் ஈதல் சகப்பிணைப்பு காணப்படுவதில்லை. | இவை திண்ம மற்றும் நீரிய கரைசலில் காணப்படும்; நீர் கரைசலில், அணைவு அயனி மேற்கொண்டு அயனிகளாக பிரிவதில்லை. |
| 4 | இரட்டை உப்புகளின் பண்புகள், அவற்றின் மூல (பகுதி) உப்புகளை ஒத்திருக்கும். | அணைவு உப்புக்களின் பண்புகள் அவற்றின் மூல (பகுதி) உப்புக்களை ஒத்திருக்காது. |
| 5 | இரட்டை உப்பில், உலோக அயனி அதன் சாதாரண இணைதிறனையே பெற்றிருக்கும். | அணைவு உப்பில், உலோக அயனி இருவித இணைதிறன்களான முதன்மை மற்றும் இரண்டாம் நிலை இணை திறன்களை ஈடுசெய்யும். |
| 6 | நீர்க்கரைசலில் இது உட்கூறு அயனிகளாக முற்றிலும் பிரிகையுற்று தனது தனித் தன்மையை இழக்கிறது. | நீர் கரைசலில், அணைவு அயனியானது, தனது தனித் தன்மையை இழப்பதில்லை மேலும் அணைவு அயனியின் உட்கூறுகள் தனித்தனியே எளிய அயனிகளாக பிரிகையுறுவதில்லை. |
| (எ.கா) \(\mathrm{FeSO}_4 \cdot\left(\mathrm{NH}_4\right)_2 \mathrm{SO}_4 \cdot 6 \mathrm{H}_2 \mathrm{O}\) | (எ.கா) \(\mathrm{K}_4\left[\mathrm{Fe}(\mathrm{CN})_6\right), \mathrm{K}_3\left[\mathrm{Fe}(\mathrm{SCN})_6\right)\) |
11.
1. சோடியம் 2, 21, 211, 2111 (ஈத்தேன் 1, 2 டைஐல்டைநைட்ரிலோ) டெட்ரா அசிட்டேட்டோ நிக்கலேட் II
2. அயோடேட் டை சயனிடோ K-C- அர்ஜென்டேட் (I) அயனி
3. ட்ரிஸ் ஈத்தேன் (1, 2 - டைஅமீன்) கோபால்ட் (III) சல்பேட்
4. பென்டா அம்மைன்நைட்ரிட்டோ K-O- கோபால்ட் (III) அயனி
5. டைஅம்மைன்குளோரிடோநைட்ரோ -k-N பிளாட்டினம் (II)
12.
(i) சிஸ் பிளாட்டின் Cis [Pt (NH3)2 Cl2] ஒரு தள சதுர அணைவுச் சேர்மமாகும்.
(ii) இதில் இரு ஒத்த தொகுதிகள் ஒரே பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.
(iii) இது பிளாட்டினத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு எதிர் புற்றுநோய் மருந்தாகும்.
(iv) இம் மருந்து நீராற் பகுத்தல் அடைந்து DNA உடன் வினைபட்டு பல குறுக்கு இணைப்புகளை ஏற்படுத்துகின்றன.
(v) இதன் காரணமாக, DNA இரட்டிப்பாதல் மற்றும் நகலெடுத்தல் தடுக்கப்படுகிறது.
(vi) இதன் விளைவாக செல் வளர்ச்சி தடுக்கப்பட்டு இறுதியில் அழிக்கப்படுகிறது.
(vii) செல்லுலர் புரோட்டீன்களுடன் குறுக்கு இணைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் செல்பிரிதலையும் (மெட்டாசிஸ்) தடுக்கிறது.
13.
(i) புகைப்படத் தொழிலில், புகைப்படச் சுருள் மேம்படுத்தப்படும் போது சோடியம் தயோ சல்பேட் கரைசலால் கழுவப்படுகிறது.
(ii) எதிர் பிம்பம் நிலைநிறுத்தப்படுகிறது.
(iii) சிதைவடையாத AgBr ஆனது சோடியம் டைதயோசல்பேட்டா அர்ஜென்டேட் (I) என்ற கரையக்கூடிய அணைவுச் சேர்மத்தினை உருவாக்குகிறது.
(iv) புகைப்படச்சுருளை நீரைக் கொண்டு கழுவுவதன் மூலம் இதனை பிரிக்கலாம்.
AgBr + 2 Na2S2O3 ⟶ Na3 [Ag(S2O3)2] + 2 NaBr
14.
VB கொள்கையின் வரம்புகள்:
1. அணைவுச் சேர்மங்களின் நிறங்களை இக்கொள்கை விளக்கவில்லை.
2. இது சுழற்சியால் ஏற்படும் காந்தத் திருப்புத் திறனை மட்டுமே கருத்திற்கொண்டது. காந்தத் திருப்புத் திறனின் பிற கூறுகளை கருத்திற்கொள்ளவில்லை.
3. ஒரே உலோகத்தின் அணைவுச் சேர்மங்களில் சில, உள் ஆர்பிட்டால் அணைவுகளாகவும் மற்ற சில சேர்மங்கள், ஆர்பிட்டால் அணைவுகளாகவும் காணப்படுகின்றன. ஏன் இவ்வாறு மாறுபட்ட அணைவுகள் உருவாகின்றன என்பதற்கு உரிய விளக்கத்தினை இக்கொள்கை தரவில்லை.
4. எடுத்துக்காட்டு:
\(\left[\mathrm{Fe}(\mathrm{CN})_6\right]^{4-}\)ஆனது டையாகாந்தப்பண்புடையது (குறை சுழற்சி அணைவு) ஆனால் \(\left[\mathrm{FeF}_6\right]^{4-}\) ஆனது பாரா காந்தத்தன்மையுடையது (உயர் சுழற்சி அணைவு).
15.
1. ஆய அச்சுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் மடல்களைப் பெற்றிருக்கும் (dxy, dyz மற்றும் dzx) ஆர்பிட்டால்களைக் காட்டிலும் dx²-y2மற்றும் dz² ஆர்பிட்டால்கள் அச்சுகளின் வழியே அமைந்திருப்பதால் அதிக விலக்கு விசைக்கு உட்படுகின்றன.
2. மேலும் அவைகளின் ஆற்றலும் அதிகரிக்கின்றன. இவ்வாறாக சம ஆற்றலுடைய d- ஆர்பிட்டால்கள் இந்நிலையில் இருவகைகளாக பிரிக்கின்றன. இச்செயல்முறை படிகபுலப்பிளப்பு எனப்படும். இவ்விருவகை ஆர்பிட்டால்களுக்கிடையே உள்ள ஆற்றல் வேறுபாடு படிகப்புலபிளப்பு ஆற்றல் எனப்படும்.
16.
\(\begin{array}{l|l}
{ }_{22} \mathrm{Ti}-{ }_{18}[\mathrm{Ar}] 4 \mathrm{~s}^2 3 \mathrm{~d}^2 & { }_{21} \mathrm{Sc}-{ }_{18}[\mathrm{Ar}] 4 \mathrm{~s}^2 3 \mathrm{~d}^1 \\
{ }_{19} \mathrm{Ti^{3+}}-{ }_{18}[\mathrm{Ar}] 3 \mathrm{~d}^1 & { }_{18} \mathrm{Sc}^{3+}{ -}_{18}[\mathrm{Ar}] 3 \mathrm{~d}^0
\end{array}\)
(i) [Ti(H2O)6]3+, அணைவுச் சேர்மத்தில் மைய உலோக அயனி Ti3+ ஆனது d1 எலக்ட்ரான் அமைப்பினைப் பெற்றுள்ளது. இது ஈனி புலத்தில் t2g ஆர்பிட்டால் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
(ii) இந்த அணைவுச் சேர்மத்தின் மீது வெண்மைநிற ஒளி விழும் போது d எலக்ட்ரான் ஒளியினை உட்கவர்ந்து உயர் ஆற்றல் மட்டத்திற்கு கிளர்வுறுகிறது. நிறமாலைத் தரவுகளிலிருந்து உட்கவர் பெருமம் மதிப்பு eg ஆகும்.
(iii) இது படிக புலப் பிளப்பு ஆற்றல் (\(\Delta^o\)) 239.7 KJ mol-1 20000-1 cm இணையானதாகும். இந்த உட்கவர்தலால், பிரதிபலிக்கப்படும் நிறம் ஊதாநிறம்.
(iv) இவ்வாறு \(\left[\mathrm{Ti}\left(\mathrm{H}_2 \mathrm{O}\right)_6\right]^{3+}\) ல் d-d இடப்பெயர்ச்சி நடைபெறுகிறது.
(v) ஆனால், \(\left(\mathrm{Sc}\left(\mathrm{H}_2 \mathrm{O}\right)_6\right]^{3+}\) Sc3+ ன் எலக்ட்ரான் அமைப்பு 3d° ஆகும். இதில் d-d இடப்பெயர்ச்சி நடைபெறாது. எனவே நிறமற்றதாக உள்ளது.
17.
i) \(
\mathrm{Mg}\left[\mathrm{Cr}\left(\mathrm{NH}_3\right) \mathrm{Cl}_5\right] \rightleftharpoons \mathrm{Mg}^{2+}+\left[\mathrm{Cr}\left(\mathrm{NH}_3\right)_5 \mathrm{Cl}_5\right]^{2-} \) (2 அயனிகள்)
ii) \(\left[\mathrm{Cr}\left(\mathrm{NH}_3\right)_5 \mathrm{Cl}\right]_3\left[\mathrm{CoF}_6\right]_2 \rightleftharpoons\left[\mathrm{Cr}\left(\mathrm{NH}_3\right)_5 \mathrm{Cl}\right]_3^{6+}+\left[\mathrm{CoF}_6\right]_2^{6-}\) (2 அயனிகள்)
iii) [Cr(NH3)3 Cl3] - அயனியுறுவதில்லை.
iii > ii > i
18.
ஒரு ஈனி ஒன்றுக்கு மேற்பட்ட அணுக்கள் மூலம் மைய உலோக அயனியுடன் பிணைக்கப்பட்டிருந்தால் அந்த ஈனி பல முனை ஈனி எனப்படும்.
19.
ஒரு அணைவுச் சேர்மத்தின், அணைவு அயனியில் உள்ள மைய உலோக அணு / அயனி மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஈனிகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் கோளம் அணைவுக்கோளம் எனப்படும்.
20.
மைய உலோக அயனியின் ஆக்சிஜனேற்ற எண் அதன் முதன்மை இணைதிறன் எனப்படும்.
21.
மைய உலோகத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு முனை ஈனிகள் (வழங்கி அணுக்கள்) முப்பரிமாண புறவெளியில் வெவ்வேறு வகைகளில் அமையாமல் ஒரே வகையில் அமைவதால் நான்முகி அணைவுகள் வடிவ மாற்றியங்களை பெற்றிருப்பதில்லை.
22.
மருத்துவப் பயன்:
1. Ca - EDTA அணைவானது காரீயம் மற்றும் கதிர்வீச்சு நச்சினை உடலிலிருந்து நீக்கி குணப்படுத்த பயன்படுகிறது.
2. சிஸ் - பிளாட்டின் - புற்றுநோய்க்கட்டி எதிர் மருந்து புற்றுநோய் மருத்துவத்தில்.
உயிரியல் முக்கியத்துவம்:
1. ஹீமோகுளோபின் (RBC) நுரையீரலில் இருந்து ஆக்ஸிஜனை திசுக்களுக்கும், CO₂ நுரையீரலுக்கும் பரிமாற்றம் செய்கிறது.
2. குளோரோபில் - தாவரங்களின் ஒளிச்சேர்க்கை வினையில் முக்கிய பங்காற்றுகிறது.
23.
எண்முகி
24.
நேர்க்கோடு
25.
இணைப்பு பாலம் உடைய கார்பனைல்
26.
கரைப்பான் மூலக்கூறுகளை ஈனிகளுடன் பரிமாறுதல்
27.
கரைசலில் வெவ்வேறு அயனிகளை உருவாக்குதல்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards