12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 06/12/2019
அணைவு வேதியியல்
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
ஈத்தீனின் பலபடியாக்கல் வினையில் பயன்படும் வினைவேக மாற்றி ______________
சிக்லர் - நட்டா வினை வேக மாற்றி
சீசஸ் உப்பு
வில்கின்சன் வினை வேக மாற்றி
மேக்னஸ் பச்சை உப்பு
2.
ஆல்கீன்களின் ஹைட்ரஜனேற்ற வினைகளில் பயன்படும் வினைவேக மாற்றி _______________
சிக்லர் - நட்டா வினை வேக மாற்றி
சீசஸ் உப்பு
வில்கின்சன் வினை வேக மாற்றி
மேக்னஸ் பச்சை உப்பு
3.
தாலோ நீலம் என்ற ஆழ்ந்த நீல நிற அணைவு நிறமியின் மைய உலோக அயனி _____________
Ni2+
Co3+
Cu2+
Ag+
4.
வலிமை குறைந்த ஈனி எது?
NO2-
NH3
CO
SCN-
5.
வலிமை குறைந்த ஈனி எது?
I-
CN-
Cl-
S2-
6.
நிலைப்புத் தன்மை மாறிலி (β) என்றால் என்ன?
7.
அணைவு எண் வரையறு.
8.
இரண்டாம் நிலை இணைதிறன் என்றால் என்ன?
9.
முதன்மை இணைதிறன் என்றால் என்ன?
10.
மைய உலோக அயனி என்றால் என்ன?
11.
பல்வேறு உயிரியல் அமைப்புகளில் பயன்படும் உலோக அணைவுகள் பற்றி எழுதுக.
12.
நான்முகி படிக புலத்தில், d - ஆர்பிட்டாலின் படிக புலப் பிளப்பினை குறிப்பிடும் வரைபடம் காண்க.
13.
ஒரு முக மாற்றியம் (Facial isomer) மற்றும் நெடுவரை (Meridional isomer) மாற்றியம் பற்றி எழுதுக.
14.
எண்முகி அணைவுச் சேர்மங்களில் காணப்படும் வடிவ மாற்றியம் பற்றி எழுதுக.
15.
தள சதுர அணைவுச் சேர்மங்களில் காணப்படும் வடிவ மாற்றியம் பற்றி எழுதுக.
16.
பின்வரும் அணைவுச் சேர்மங்களின் வாய்ப்பாடுகளைத் தருக.
i) டிரிஸ் (எத்திலீன் டை அமின்) குரோமியம் (III) குளோரைடு
ii) பொட்டாசியம் டெட்ரா சயனிடோ நிக்கலேட் (II)
iii) அம்மீன் புரோமிடோ குளோரிடோ நைட்ரிட்டோ - kN பிளாட்டினேட் (II) அயனி
iv) டைகுளோரிடோ பிஸ் (ஈத்தேன் - 1, 2 - டைஅமின்) பிளாட்டினம் (IV) நைட்ரேட்
v) ஹெக்ஸா அக்வா மாங்கனீசு (II) பாஸ்பேட்
17.
படிக புலக் கொள்கையின் முக்கிய கோட்பாடுகளை எழுதவும்.
18.
அணைவுச் சேர்மங்களில் காணப்படும் கட்டமைப்பு மாற்றியங்களை விளக்குக.
19.
IUPAC முறையில் அணைவுச் சேர்மங்களுக்கு பெயரிடுதலின் படிகளை விளக்குக.
1.
(a)
சிக்லர் - நட்டா வினை வேக மாற்றி
2.
(c)
வில்கின்சன் வினை வேக மாற்றி
3.
(c)
Cu2+
4.
(d)
SCN-
5.
(b)
CN-
6.
(i) பிரிகைச் சமநிலை மாறிலி அல்லது நிலைப்புத் தன்மை மாறிலியின் (∝) தலைகீழ் மதிப்பு, உருவாதல் சமநிலை மாறிலி அல்லது நிலைப்புத் தன்மை மாறிலி (β) எனப்படும்.
\(\beta =\frac { 1 }{ \alpha } \)
(ii) α மதிப்பு குறையும் போது β மதிப்பு உயர்கிறது. அணைவுச் சேர்மத்தின் நிலைப்புத் தன்மையும் அதிகரிக்கிறது.
7.
ஒரு அணுவில், மைய உலோக அணு / அயனியுடன் இணைக்கப்பட்டுள்ள ஈனிகளுடைய வழங்கி அணுக்களின் எண்ணிக்கை அந்த உலோக அணுவின் அணைவு எண் எனப்படும்.
8.
மைய உலோக அயனியின் அணைவு எண் அதன் இரண்டாம் நிலை இணைதிறன் எனப்படும்.
9.
மைய உலோக அயனியின் ஆக்சிஜனேற்ற எண் அதன் முதன்மை இணைதிறன் எனப்படும்.
10.
(i) ஈனிகள் வழங்கும் எலக்ட்ரான் இணைகளை ஏற்கும் உலோக அயனி மைய உலோக அயனி எனப்படும்.
(ii) மைய உலோக அயனிகள் எலக்ட்ரான் இணை ஏற்பிகள்.
(iii) மைய உலோக அயனிகள் லூயி அமிலங்களாகும்.
உதாரணம் :
\({ K }_{ 4 }\left[ Fe(CN)_{ 6 } \right] \) என்ற அணைவுச் சேர்மத்தில் \(Fe^{ 2+ }\) மைய உலோக அயனி ஆகும் .
11.
(i) RBC இரத்த சிவப்பணு ஆனது ஹீம் தொகுதியைக் கொண்டுள்ளது. இது Fe2+, போர்ஃபிரின் அணைவாகும். இச்சேர்மம் நுரையீரலில் இருந்து ஆக்சிஜனை திசுக்களுக்கும், அங்கிருந்து கார்பன் டை ஆக்ஸைடை நுரையீரலுக்கும் பரிமாற்றம் செய்கிறது.
(ii) தாவரங்கள் மற்றும் பாசிகளில் காணப்படும் பச்சை நிறமிப் பொருளான குளோரோபில் Mg2+ அயனி மற்றும் மாற்றமடைந்த போர்ஃபிரின் ஈனி கார்பன் வளையம் எனப்படுகிறது. CO2 மற்றும் நீரை சூரிய ஒளி முன்னிலையில் கார்போஹைட்ரேட் மற்றும் ஆக்சிஜனாக மாற்றும் தாவரங்களின் ஒளிச்சேர்க்கை வினையில் குளோரோபில் முக்கிய பங்காற்றுகிறது.
(iii) உலோகத்தினை கொண்டுள்ள ஒரே வைட்டமின் சயனோ கோபாலமீன் எனப்படும் வைட்டமின் B12 ஆகும். இது Co+ அயனியும், போர்ஃபிரின் போன்றதொரு ஈனியும் கொண்ட அணைவுச் சேர்மமாகும்.
(iv) உயிரியல் செயல்பாடுகளை நெறிப்படுத்தும் செயல்முறைகளில் பல்வேறு நொதிகள் (என்சைம்கள்) பயன்படுகின்றன. இவை பெரும்பாலும் உலோக அணைவுச் சேர்மங்களாகும்.
(எ.கா) கார்பாக்சி பெப்டிடேஸ் என்ற புரோடியஸ் நொதி செரித்தலில் முக்கிய பங்காற்றுகிறது. இந்நொதியில் துத்தநாகத்துடன் புரோட்டின் ஈனி ஈதல் சகப்பிணைப்பில் ஈடுபட்டுள்ளது.
12.
13.
(i) [MA2B3]n+ வகை எண்முகி அணைவுச் சேர்மங்களும் வடிவ மாற்றியங்களைப் பெற்றுள்ளன.
(ii) ஒரே மாதிரியான ஈனிகள் (A) எண்முகியின் ஒரு முக்கோண முகத்தின் மூன்று மூலைகளில் இடம் பெற்று, மற்ற மூன்று ஈனிகள் (B) அதற்கு நேர் எதிராக அமைந்துள்ள முக்கோண முகத்தில் இடம் பெற்றிருக்குமானால் அம்மாற்றியம் ஒரு முக மாற்றியம் facial isomer or fac isomer எனப்படும்.
(iii) மூன்று ஒத்த ஈனிகள் ஒரு எண்முகியின் ஒரு உச்சியிலிருந்து மற்றொரு உச்சிக்கு கற்பனையாக வரையப்படும் ஒரு அரைவட்ட நெடுவரையில் அமைந்திருந்தால் அம்மாற்றியம் நெடுவரை மாற்றியம் எனப்படும்.
(iv) ஒவ்வொரு மூன்று ஈனித் தொகுதிகளும் எண்முகியின் நெடுவரையில் (meridian) அமைந்திருப்பதாக கருதப்படுவதால் இம்மாற்றியம் நெடு வரை மாற்றியம் (meridional isomer) எனப்படுகிறது.
14.
(i) [MA2B4]n+, [M(XX)2B2]n+ ஆகிய எண்முகி அணைவுச் சேர்மங்கள் சிஸ் - டிரான்ஸ் மாற்றியங்களைக் கொண்டுள்ளன. இங்கு A மற்றும் B ஒரு முனை ஈனிகள், மேலும் XX என்பது ஒரே மாதிரியான இரு வழங்கி அணுக்களை உடைய இரு முனை ஈனியாகும்.
(ii) மேற்கண்ட படத்தில் (1, 2), (1, 3) (1, 4) (1, 5), (2, 3) (2, 5), (2, 6) (3, 4) (3, 6), (4, 5), (4, 6) மற்றும் (5, 6) ஆகியன ஒத்தநிலைகளாகும். இந்நிலைகளில் ஏதேனும் ஒன்றில் ஒரே மாதிரியான இரண்டு தொகுதிகள் காணப்பட்டால் அது சிஸ் மாற்றியம் எனப்படும்.
(iii) இதைப்போலவே (1, 6), (2, 4) மற்றும் (3, 5) ஆகியன ஒத்த நிலைகளாகும். இந்நிலைகளில் ஏதேனும் ஒன்றில் ஒரே மாதிரியான இரண்டு தொகுதிகள் காணப்பட்டால், ஆன்டி டிரான்ஸ் மாற்றியம் எனப்படும்.
(ex) [Co (NH3)4Cl2]+
15.
(i) பல் இன ஈனி அணைவுகளில், மாறுபட்ட ஈனிகள் மைய உலோக அணுவைச் சுற்றி முப்பரிமாண புறவெளியில் வெவ்வேறு வகைகளில் அமைவதால் வடிவ மாற்றியம் ஏற்படுகிறது.
(ii) [MA2B2]n+ மற்றும் [MA2BC]n+ ஆகிய சதுரதள அணைவுச் சேர்மங்களில் ஒத்தத் தொகுதிகள் ஒரே பக்கத்தில் காணப்பட்டால் சிஸ் மாற்றியம் எனவும், எதிர் எதிர் பக்கங்களில் காணப்பட்டால் டிரான்ஸ் மாற்றியம் எனவும் அழைக்கப்படுகிறது.
(iii) X மற்றும் Y ஆகிய இருவேறு வழங்கி அணுக்களை உடைய XY என்ற இரு முனை ஈனி கொண்ட [M(xy)2]n+ என்ற தள சதுர அணைவுச் சேர்மமும், சிஸ், டிரான்ஸ் மாற்றியங்களைப் பெற்றுள்ளது.
(iv) A, B, C & D என்ற நான்கு வேறுவகை ஈனிகளைக் கொண்ட [MABCD]n+ என்ற தள சதுர அணைவுச் சேர்மமும், ஏதேனும் ஒரு ஈனியைக் குறிப்பாகக் கொண்டு, மற்ற மூன்று ஈனிகளை வெவ்வேறு முறைகளில் அமைப்பதன் மூலம், சிஸ், டிரான்ஸ் மாற்றியங்களை பெற்றுள்ளது.
16.
i) [Cr (en)3] Cl3
ii) K2 [Ni (CN)4]
iii) [Pt (NH3) BrCl NO2]-
iv) [Pt (en)2 Cl2] (NO3)2
v) [Mn (H2O)6]3 (PO4)2
17.
(i) மைய உலோக அணு மற்றும் ஈனிகளுக்கு இடையேயான பிணைப்பு முற்றிலும் அயனித்தன்மை உடையது என கருதப்பட்டது. எலக்ட்ரான் அடர்வினை மிகுதியாகக் கொண்ட ஈனிகளுக்கும், குறை எலக்ட்ரான் தன்மையுடைய மைய உலோக அயனிக்கும் இடையே ஏற்படும் நிலை மின்னியல் கவர்ச்சி விசையினால் இப்பிணைப்பு ஏற்படுகிறது.
(ii) மைய உலோக அணு / அயனி மற்றும் ஈனிகள் மின்சுமை பெற்றிருந்தால் அவை புள்ளி மின்சுமைகளாகவும், நடுநிலைத்தன்மை பெற்றிருந்தால் மின் இரு முனைகளாகவும் கருதப்படுகின்றன.
(iii) அணைவுச் சேர்மம் உருவாதல் தொடர்ச்சியான பின்வரும் கருத்தியலான படிகளை உள்ளடக்கியது.
படிநிலை - 1: தனித்த வாயுநிலையில், மைய உலோகம் அயனியின் ஐந்து 'd' ஆர்பிட்டாலுக்கும் சம ஆற்றலுடையவைகளாக உள்ளன. ஆரம்பத்தில், மைய உலோக அயனியின் எலக்ட்ரான்களுக்கும் ஈனிகளின் எலக்ட்ரான்களுக்கும் இடையே ஏற்படும் விலக்கு விசையால் அனைத்து ஐந்து 'd' ஆர்பிட்டால்களின் ஆற்றலும் அதிகரிக்கிறது.
படிநிலை - 2: மைய உலோக அயனியை பிணைப்பின் திசையில் ஈனிகள் அணுகுகின்றன. எண்முகி புலத்தில் மைய உலோக அயனி ஆய அச்சுகள் சந்திக்கும் ஆதிப்புள்ளியில் உள்ளது. ஆறு ஈனிகளும் +x, -x, +y, -y, +z மற்றும் -z ஆகிய திசைகளில் மைய உலோக அயனியை அணுகுகின்றன.
அச்சின் மீது மடல்களைக் கொண்ட dx2 - y2 மற்றும் dz2 ஆர்பிட்டால்கள் அதிக விலக்கு விசைக்கு உட்படுவதால் அவற்றின் ஆற்றல் அதிகரிக்கிறது. அச்சின் இடையே மடல்களைக் கொண்ட dxy, dyz மற்றும் dzx ஆர்பிட்டால்கள் குறைந்த விலக்கு விசைக்கு உட்படுவதால் அவற்றின் ஆற்றல் குறைகிறது. இவ்வாறாக சம ஆற்றலுடைய ஐந்து d ஆர்பிட்டால்கள் இரு வகைகளாக (eg, t2g) என பிரிகின்றன. இச்செயல்முறை படிகப்புல பிளப்பு எனப்படுகிறது.
படிநிலை - 3: இந்நிலை வரையில் அணைவுச் சேர்மம் உருவாவதற்கு சாதகமான சூழல் இல்லை. எனினும், ஈனிகள் மேலும் அணுகும் போது, எதிர்மின்சுமையுடைய ஈனிகளின் எலக்ட்ரான்களுக்கும், நேர்மின் சுமையுடைய உலோக அயனிகளுக்கும் இடையே கவர்ச்சி விசை ஏற்படுகிறது. இதனால் நிகர ஆற்றல் குறைவு ஏற்படுகிறது. இந்த ஆற்றல் குறைவு அணைவு உருவாவதற்கு காரணமாக அமைகிறது.
(i) நான்முகி அணைவுச் சேர்மங்களில் கனசதுரத்துடன் ஒன்று விட்டு ஒன்றாக அமைந்துள்ள மூலைகளிலிருந்து கனசதுரத்தின் முதன்மை மூலைவிட்டம் வழியே நான்கு ஈனிகளும் மைய உலோக அயனியை அணுகுகின்றன. இப்புலத்தில் எந்த ஒரு d ஆர்பிட்டாலும் ஈனிகள் அணுகும் திசையிலேயே அமைவதில்லை. எனினும் dxy, dyz, dzx ஆகியன dx2 - y2, dz2 ஆர்பிட்டால்களை விட ஈனிகள் அணுகும் திசைக்கு அருகாமையில் அமைந்துள்ளன. எனவே dxy, dyz, dzx ஆகியவற்றின் ஆற்றல் அதிகரித்து dx2 - y2, dz2 ஆற்றல் குறைகிறது.
(ii) எனவே எண்முகி படிக புலத்தோடு ஒப்பிடும்போது, இப்புலத்தில் படிக புலப்பிளப்பானது தலைகீழ் மாற்றமடைந்து, பிளப்பு ஆற்றலின் அளவு குறைவாக உள்ளது. இரு புலங்களுக்கு இடையேயான படிக புலப்பிளப்பு ஆற்றல்களின் தொடர்பு \({ \triangle }_{ t }=\frac { 4 }{ 9 } { \triangle }_{ 0 }\) ஆகும்.
18.
(i) ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டையும், அணைவில் இடம் பெற்றுள்ள அணுக்களுக்கிடையேயான பிணைப்புகளில் மாறுபடுவதால் வெவ்வேறு அமைப்பு வாய்ப்பாடுகளையும் பெற்றுள்ள அணைவுச் சேர்மங்கள் கட்டமைப்பு மாற்றியங்கள் எனப்படுகின்றன.
(ii) அவை நான்காக வகைப்படுத்தப்படுகின்றன.
1. இணைப்பு மாற்றியங்கள்:
(i) இரு வழி பிணைப்புறும் ஈனி தன்னிடம் உள்ள வெவ்வேறு வழங்கி அணுக்கள் மூலம் மைய உலோக அயனியுடன் பிணைப்பை ஏற்படுத்தும் போது இணைப்பு மாற்றியங்கள் ஏற்படுகின்றன.
(எ.கா). [Co (NH3)5 NO2]2+ - நைட்ரிட்டோ ஈனி N - பிணைப்பு.
[CO (NH3)5 ONO]2+ - நைட்ரிட்டோ ஈனி - O - பிணைப்பு
2. அணைவு மாற்றியங்கள்:
(i) அணைவுச் சேர்மங்களில் உள்ள நேர் மற்றும் எதிர் அயனிகள் இரண்டும் அணைவு அயனிகளாக காணப்பட்டால் அணைவு மாற்றியங்கள் ஏற்படுகிறது.
(ii) ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஈனிகள் நேர் மற்றும் எதிர் அணைவு உட்பொருள்களுக்கிடையே பரிமாற்றம் அடைவதால் வெவ்வேறு அணைவு மாற்றியங்கள் உருவாகின்றன.
(எ.கா) [Co (NH3)6] [Cr (CN)6] & [Cr(NH3)6] [Co (CN)6]
3. அயனியாதல் மாற்றியங்கள்:
(i) அயனியுறும் எதிர்மாறு அயனி ஈனிகளாக செயல்பட்டால் அத்தகைய அணைவுகளில் அயனியாதல் மாற்றியங்கள் ஏற்படுகிறது.
(ii) இத்தகைய எதிர்மாறு அயனிகள், அணைவு உட்பொருளில் உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஈனிகளுடன் பரிமாற்றம் அடையும் போது அயனியாதல் மாற்றியங்கள் உருவாகின்றன.
(எ.கா) [Co (NH3)4 Br2] Cl & [Co (NH3)4 Cl Br] Br
4. கரைப்பானேற்ற மாற்றியங்கள்:
(i) படிக அணுக்கோவைத் தளத்தில் தனித்த நிலையில் காணப்படும் நீர், ஆல்கஹால், அம்மோனியா போன்ற கரைப்பான் மூலக்கூறுகள், அணைவு உட்பொருளில் உள்ள ஈனிகளுடன் பரிமாற்றம் அடைவதால் கரைப்பானேற்ற மாற்றியங்கள் உருவாகின்றன.
(ii) கரைப்பானானது நீர் மூலக்கூறுகளாக இருந்தால், இவை நீரேற்ற மாற்றியங்கள் எனப்படும்.
(எ.கா) [Cr (H2O)6] Cl3 ; [Cr (H2O)5 Cl] Cl2 H2O ; [Cr (H2O)4Cl2] Cl 2H2O
19.
i) அணைவு அயனி எளிய அயனியோ அல்லது அணைவு அயனியோ என்பதை பொறுத்து அல்லாமல், நேர் அயனி முதலில் பெயரிடப்பட வேண்டும். அதன் பின்னர் எதிர் அயனிக்குப் பெயரிட வேண்டும்.
ii) எளிய அயனிகள் அயனிச் சேர்மங்களில் வழக்கமாக எவ்வாறு பெயரிடப்படுகிறதோ அவ்வாறே அணைவுச் சேர்மங்களிலும் பெயரிடப்பட வேண்டும்.
iii) அணைவு அயனியை பெயரிடும் போது முதலில் ஈனிகளுக்கு பெயரிட வேண்டும் அதைத் தொடர்ந்து மைய உலோக அணு / அயனிக்குப் பெயரிட வேண்டும். அணைவு அயனி ஒன்றுக்கு மேற்பட்ட வகை ஈனிகளைப் பெற்றிருந்தால், அவற்றை ஆங்கில அகர வரிசையின் அடிப்படையில் பெயரிட வேண்டும்.
(அ) ஈனிகளைப் பெயரிடுதல்:
(i) எதிர் ஈனிகளின் பெயர்கள் 'O'என்ற எழுத்தில் முடிவடைய வேண்டும். நேர் ஈனிகளின் பெயர்கள் 'ium' என முடிய வேண்டும்.
(ii) நடுநிலை ஈனிகளுக்கு அவைகளின் மூலக்கூறு பெயர்களே பயன்படுத்தப்படுகின்றன. சில விதிவிலக்குகள் H2O (அக்வா), NH3 (அம்மீன்) etc..,
(iii) இரு முனை வழி பிணைப்பை ஏற்படுத்தும் ஈனிகளில் ஒன்றிற்கும் மேற்பட்ட அணுக்கள் வழியாக ஈதல் சகப்பிணைப்பு உருவாக வாய்ப்பு இருப்பதால், அதனை குறிக்க K - பயன்படுகிறது.
(iv) அணைவு உட்பொருளானது ஒன்றிற்கு மேற்பட்ட ஒரே வகையான ஈனிகளைப் பெற்றிருந்தால், ஈனியின் எண்ணிக்கையை குறிப்பிட அதன் பெயருக்கு முன் டை, டிரை, டெட்ரா, போன்ற கிரேக்க முன்னொட்டுகள் சேர்க்கப்படுகின்றன.
(v) ஈனியின் பெயரிலேயே கிரேக்க முன்னொட்டுகள் காணப்படின், அத்தகைய ஈனிகளின் எண்ணிக்கையை குறிப்பிட மாற்று முன்னொட்டுகளான பிஸ், டிரிஸ், டெட்ராகிஸ் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.
ஆ) மைய உலோக அணுவிற்கு பெயரிடுதல்:
(i) நேரயனி / நடுநிலை அணைவுகளில் மைய உலோக அணு / அயனிக்குப் பெயரிட அத்தனிமங்களின் வழக்கமான பெயரே எவ்வித மாற்றமின்றி பயன்படுத்தப்படுகிறது.
(ii) எதிரயனி அணைவுகளில் உலோகங்களின் பெயரோடு 'ate' என்ற பின்னொட்டு சேர்த்து எழுதப்படுகின்றது. அவ்வாறு எழுதும் போது உலோகங்களுக்கு கிரேக்க / லத்தீன் பெயர் இருப்பின் அவற்றை பயன்படுத்த வேண்டும்.
(iii) உலோக அணுவின் பெயரைத் தொடர்ந்து அடைப்புக்குறியினுள் அதன் ஆக்சிஜனேற்ற எண் ரோம எண்ணுருவில் எழுதப்படுகிறது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards