12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 03/01/2020
அணைவு வேதியியல்
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
இரத்த சிவப்பணு மற்றும் குளோரோபில் ஆகியவற்றில் காணப்படும் ஈனி ___________
EDTA
DMG
போர்பைரின்
en
2.
K4 [Fe(CN)6] என்ற அணைவின் மைய உலோக அயனியின் முதன்மை இணைதிறன் ____________
+2
+3
+4
+6
3.
மைய உலோக அயனியும், ஈனிகளும் வலிமையாக பிணைக்கப்பட்டுள்ள கோளம் ______________ எனப்படும்.
உட்புறக்கோளம்
அயனியாகும் கோளம்
அணைவுக் கோளம்
மேற்கண்ட எதுவுமில்லை.
4.
மைய உலோக அயனியின் முதன்மை இணைதிறனை நிறைவு செய்வது ______________
நேர் அயனிகள்
எதிர் அயனிகள்
நடுநிலை மூலக்கூறுகள்
மேற்கண்ட அனைத்தும்
5.
முகப்பு மற்றும் நெடுவரை (facial and mer) மாற்றியங்களைப் பெற்றிருப்பது எது?
[Co(en)3]3+
[Co(NH3)4(cl)2]+
[Co(NH3)3(Cl)3]
[Co(NH3)5Cl]SO4
6.
[Pt(NH3)2Cl2] என்ற அணைவுச் சேர்மம் பெற்றுள்ள மாற்றியம் __________
அணைவு மாற்றியம்
இணைப்பு மாற்றியம்
ஒளிசுழற்சி மாற்றியம்
வடிவ மாற்றியம்
7.
IUPAC வழிமுறைகளின்படி, [Co(en)2(ONO)Cl]Cl என்ற அணைவுச் சேர்மத்தின் பெயர் _____________
குளோரோபிஸ்எத்திலின்டைஅமீன்நைட்ரிடோகோபால்ட் (III) குளோரைடு
குளோரிடோபிஸ்(ஈத்தேன் – 1,2 டை அமீன்)நைட்ரிட்டோ - κ -O கோபால்டேட் (III) குளோரைடு
குளோரிடோபிஸ்(ஈத்தேன் – 1,2 டை அமீன்)நைட்ரோ - κ -O கோபால்டேட் (II) குளோரைடு
குளோரிடோபிஸ்(ஈத்தேன் – 1,2 டை அமீன்)நைட்ரைட்டோ - κ -O கோபால்ட் (III) குளோரைடு
8.
பின்வரும் அணைவுச் சேர்மங்களின் வாய்ப்பாடுகளைத் தருக.
i) டிரிஸ் (எத்திலீன் டை அமின்) குரோமியம் (III) குளோரைடு
ii) பொட்டாசியம் டெட்ரா சயனிடோ நிக்கலேட் (II)
iii) அம்மீன் புரோமிடோ குளோரிடோ நைட்ரிட்டோ - kN பிளாட்டினேட் (II) அயனி
iv) டைகுளோரிடோ பிஸ் (ஈத்தேன் - 1, 2 - டைஅமின்) பிளாட்டினம் (IV) நைட்ரேட்
v) ஹெக்ஸா அக்வா மாங்கனீசு (II) பாஸ்பேட்
9.
அணைவுச் சேர்மங்களில் காணப்படும் கட்டமைப்பு மாற்றியங்களை விளக்குக.
10.
K4[Mn(CN)6]அணைவின், மைய உலோக அயனியின் ஆக்சிஜனேற்ற நிலை, அணைவு எண், ஈனியின் தன்மை, காந்தப் பண்பு, மற்றும் எண்முகி படிக புலத்தில் எலக்ட்ரான் அமைப்பு ஆகியனவற்றைத் தருக
11.
பின்வரும் பெயருடைய அணைவுச் சேர்மங்களுக்கு உரிய வாய்ப்பாட்டினைத் தருக.
அ) பொட்டாசியம் ஹெக்சாசயனிடோபெர்ரேட் (II)
ஆ) பென்டாகார்பனைல் இரும்பு (o)
இ) பென்டாஅம்மைன்நைட்ரிடோ -K-N-கோபால்ட் (III) அயனி
ஈ) ஹெக்ஸாஅம்மைன்கோபால்ட் (III) சல்பேட்
உ) சோடியம் டெட்ராபுளூரிடோடை ஹைராக்ஸிடோகுரமேட் (III)
12.
இரண்டாம் நிலை இணைதிறன் என்றால் என்ன?
13.
[Co(NH3)5Cl]SO4 மற்றும் [Co(NH3)5SO4]Cl ஆகிய அணைவுச் சேர்மங்களை வேறுபடுத்தி அறிய உதவும் ஒரு சோதனையைக் கூறுக.
14.
\([Ag(NH_{ 3 })_{ 2 }]^{ + }\)என்ற அணைவுச் சேர்மத்தின் நிலைப்பு மாறிலி 1.7x 107 எனில் 0.2M NH3 கரைசலில் \(\cfrac { \left[ { Ag }^{ + } \right] }{ \left[ Ag\left( NH_{ 3 } \right) _{ 2 } \right] ^{ + } } \) விகிதத்தினைக் கண்டறிக.
15.
நான்முகி படிக புலத்தில், d - ஆர்பிட்டாலின் படிக புலப் பிளப்பினை குறிப்பிடும் வரைபடம் காண்க.
16.
[Ni(H2O)6]2+ ன் நீர்க்கரைசல் பச்சை நிறமுடையது ஆனால் [Ni(CN)4]2-ன் கரைசல் நிறமற்றது விளக்குக.
17.
[Ni(CN)4]2- டையா காந்தத் தன்மை உடையது ஆனால் [NiCl4]2- பாரா காந்தத் தன்மையுடையது- படிக புலக் கொள்கையினைப் பயன்படுத்தி விளக்குக.
18.
ஈனியின் தன்மையை பொறுத்து வேறுபட்ட ஒன்றைக் கண்டறிக.
அ) அக்வா
ஆ) கார்பனைல்
இ) நைட்ரோசைல்
ஈ) நைட்ரேட்டோ
19.
i) VB கொள்கைப்படி அணைவில் மைய உலோக அயனியும், ஈனியும் அயனிப்பிணைப்பின் மூலம் பிணைக்கப்பட்டுள்ளது.
ii) ஈனிகள் வழங்கும் எலக்ட்ரான் இரட்டைகளை மைய உலோக அயனி ஏற்றுக்கொள்கிறது.
iii) ஈனிகள் லூயி அமிலங்களாக செயல்படுகிறது.
iv) அணைவுக் கோளத்தின் மீதுள்ள மின்சுமை அணைவுக் கோளத்தின் உள்ளேயுள்ள மொத்த மின்சுமைக்கு சமம்.
அ) (i) & (ii)
ஆ) (i) & (iii)
இ) (ii) & (iii)
ஈ) (iii) & (iv)
20.
i) நைட்ரேட் ஈனியில் இணைப்பு மாற்றியம் சாத்தியமல்ல.
ii) அணைவு மாற்றியம், நேர் மற்றும் எதிர் அயனிகள் இரண்டுமே அணைவு அயனிகளாக கொண்ட அணைவுச் சேர்மங்களில் காணப்படுகிறது.
iii) அயனியுறும் எதிர்மாறு அயனிகள் ஈனிகளாக செயல்படும் அணைவுச் சேர்மங்களில் அயனியாதல் மாற்றியம் காணப்படுகிறது.
iv) கரைப்பானேற்ற மாற்றியத்தில் ஆல்கஹால் கரைப்பானாக இருப்பின் அது நீரேற்ற மாற்றியம் எனப்படும்.
அ) (i) & (ii)
ஆ) (ii) & (iii)
இ) (iii) & (iv)
ஈ) (i) & (iv)
21.
i) அணைவு உட்பொருள் மைய உலோக அயனியையும், ஈனிகளையும் உள்ளடக்கியது.
ii) K4 [Fe(CN)6] என்ற சேர்மத்தின் அணைவு உட்பொருள் [Fe(CN)6]4-
iii) அணைவு உட்பொருளினுள் அடங்கியுள்ள தொகுதிகள் அயனியுறும்.
iv) அணைவு உட்பொருள் சேர்மத்தின் வடிவத்திற்கு காரணமல்ல.
அ) (i) & (ii)
ஆ) (i) & (iii)
இ) (ii) & (iii)
ஈ) (iii) & (iv)
22.
கூற்று(A) : ஓரின ஈனி அணைவுச் சேர்மங்களில் வடிவ மாற்றியங்கள் காணப்படுகின்றன.
காரணம்(R) : மைய உலோக அயனியைச் சுற்றி ஈனிகள் முப்பரிமாண புறவெளியில் வெவ்வேறு வகைகளில் அமைவதால் வடிவ மாற்றியம் ஏற்படுகிறது.
i) A மற்றும் R இரண்டுமே சரி, R ஆனது A யினை விளக்குகிறது.
ii) A சரி ஆனால் R தவறு
iii) A தவறு ஆனால் R சரி
iv) A மற்றும் R இரண்டுமே சரி, ஆனால் R ஆனது A யினை விளக்கவில்லை.
1.
(c)
போர்பைரின்
2.
(a)
+2
3.
(c)
அணைவுக் கோளம்
4.
(b)
எதிர் அயனிகள்
5.
(c)
[Co(NH3)3(Cl)3]
6.

வடிவ மாற்றியம்
7.
(d)
குளோரிடோபிஸ்(ஈத்தேன் – 1,2 டை அமீன்)நைட்ரைட்டோ - κ -O கோபால்ட் (III) குளோரைடு
8.
i) [Cr (en)3] Cl3
ii) K2 [Ni (CN)4]
iii) [Pt (NH3) BrCl NO2]-
iv) [Pt (en)2 Cl2] (NO3)2
v) [Mn (H2O)6]3 (PO4)2
9.
(i) ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டையும், அணைவில் இடம் பெற்றுள்ள அணுக்களுக்கிடையேயான பிணைப்புகளில் மாறுபடுவதால் வெவ்வேறு அமைப்பு வாய்ப்பாடுகளையும் பெற்றுள்ள அணைவுச் சேர்மங்கள் கட்டமைப்பு மாற்றியங்கள் எனப்படுகின்றன.
(ii) அவை நான்காக வகைப்படுத்தப்படுகின்றன.
1. இணைப்பு மாற்றியங்கள்:
(i) இரு வழி பிணைப்புறும் ஈனி தன்னிடம் உள்ள வெவ்வேறு வழங்கி அணுக்கள் மூலம் மைய உலோக அயனியுடன் பிணைப்பை ஏற்படுத்தும் போது இணைப்பு மாற்றியங்கள் ஏற்படுகின்றன.
(எ.கா). [Co (NH3)5 NO2]2+ - நைட்ரிட்டோ ஈனி N - பிணைப்பு.
[CO (NH3)5 ONO]2+ - நைட்ரிட்டோ ஈனி - O - பிணைப்பு
2. அணைவு மாற்றியங்கள்:
(i) அணைவுச் சேர்மங்களில் உள்ள நேர் மற்றும் எதிர் அயனிகள் இரண்டும் அணைவு அயனிகளாக காணப்பட்டால் அணைவு மாற்றியங்கள் ஏற்படுகிறது.
(ii) ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஈனிகள் நேர் மற்றும் எதிர் அணைவு உட்பொருள்களுக்கிடையே பரிமாற்றம் அடைவதால் வெவ்வேறு அணைவு மாற்றியங்கள் உருவாகின்றன.
(எ.கா) [Co (NH3)6] [Cr (CN)6] & [Cr(NH3)6] [Co (CN)6]
3. அயனியாதல் மாற்றியங்கள்:
(i) அயனியுறும் எதிர்மாறு அயனி ஈனிகளாக செயல்பட்டால் அத்தகைய அணைவுகளில் அயனியாதல் மாற்றியங்கள் ஏற்படுகிறது.
(ii) இத்தகைய எதிர்மாறு அயனிகள், அணைவு உட்பொருளில் உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஈனிகளுடன் பரிமாற்றம் அடையும் போது அயனியாதல் மாற்றியங்கள் உருவாகின்றன.
(எ.கா) [Co (NH3)4 Br2] Cl & [Co (NH3)4 Cl Br] Br
4. கரைப்பானேற்ற மாற்றியங்கள்:
(i) படிக அணுக்கோவைத் தளத்தில் தனித்த நிலையில் காணப்படும் நீர், ஆல்கஹால், அம்மோனியா போன்ற கரைப்பான் மூலக்கூறுகள், அணைவு உட்பொருளில் உள்ள ஈனிகளுடன் பரிமாற்றம் அடைவதால் கரைப்பானேற்ற மாற்றியங்கள் உருவாகின்றன.
(ii) கரைப்பானானது நீர் மூலக்கூறுகளாக இருந்தால், இவை நீரேற்ற மாற்றியங்கள் எனப்படும்.
(எ.கா) [Cr (H2O)6] Cl3 ; [Cr (H2O)5 Cl] Cl2 H2O ; [Cr (H2O)4Cl2] Cl 2H2O
10.
மைய உலோக அயனியின் ஆக்சிஜனேற்ற நிலை = +2 (i.e) MN2+
அணைவு எண் : 6
ஈனியின் தன்மை: (CN-) எதிர் ஈனி
காந்தப் பண்பு : பாராகாந்தம்
எண்முகி படிகபுலத்தில் எலக்ட்ரான் அமைப்பு:
தாழ்சுழற்சி : \( \mathrm{t}_{2 \mathrm{~g}}^5 \mathrm{e}_{\mathrm{g}}{ }^0
\)
உயர்சுழற்சி : \(\mathrm{t}^3{ }_{2 g} \mathrm{e}_{\mathrm{g}}{ }^2
\)
11.
அ) K4 [Fe (CN)6]
ஆ) [Fe(CO)5]
இ) [Co (NH3)5 (NO2)]2+
ஈ) [Co(NH3)6]2 (SO4)3
உ) Na3 [CrF4 (OH)2]
12.
மைய உலோக அயனியின் அணைவு எண் அதன் இரண்டாம் நிலை இணைதிறன் எனப்படும்.
13.
இவை இரண்டும் அயனியாதல் மாற்றுகளாகும்.
(i) Co(NH3)5Cl]SO4 ஆனது BaCl2 கரைசலுடன் வெண்ணிற வீழ்படிவை தருகிறது. ஆனால் AgNO3 உடன் இல்லை.
(ii) [Co (NH3)5 SO4] Cl ஆனது AgNO3 கரைசலுடன் தயிர் போன்ற வெண்ணிற வீழ்படிவை தருகிறது, ஆனால் BaCl2 உடன் அல்ல.
14.
Ag++ 2NH3 ⇌ [Ag(NH3)2]+
நிலைப்புத் தன்மை மாறிலி β = \(\frac { { \left[ Ag{ \left( { NH }_{ 3 } \right) }_{ 2 } \right] }^{ + } }{ { \left[ { Ag }^{ + } \right] \left[ { NH }_{ 3 } \right] }^{ 2 } } \)
[Ag (NH3)2]+ ⇌ Ag+ + 2NH3
நிலைப்புத் தன்மை மாறிலி \(\alpha =\frac { { \left[ { Ag }^{ + } \right] \left[ { NH }_{ 3 } \right] }^{ 2 } }{ { \left[ Ag{ \left( { NH }_{ 3 } \right) }_{ 2 } \right] }^{ + } } \)
∴ \(\beta =\frac { 1 }{ \alpha } \)
β = 1.7 x 107 α = ?
∴ \(\alpha =\frac { 1 }{ \beta } \)
\(=\frac { 1 }{ 1.7\times { 10 }^{ 7 } } \)
\(\alpha =\frac { 1 }{ 1.7\times { 10 }^{ 7 } } =5.88\times { 10 }^{ -8 }\)
15.
16.
(i) [Ni(H2O)6]2+,

H₂O ஒரு வலிமை குறைந்த ஈனி எனவே எலக்ட்ரான்கள் இணையாவதில்லை. இரு இணையாகாத எலக்ட்ரான்கள் உள்ளன. இதனால் d-d இடப்பெயர்ச்சி நடைபெறும் சேர்மம் நிறத்தை (பச்சை) பெறுகிறது.
(ii) [Ni(CN)4]2-
[Ni(CN)4]2- இதில் CN- வலிமை மிகு ஈனி. இதனால் 3d- எலக்ட்ரான்கள் இணையாக்கப்படுகின்றன. எனவே தனித்த இணையாகாத எலக்ட்ரான்கள் இல்லை. இதனால் d-d இடப்பெயர்ச்சி நடைபெறாது. எனவே நிறமற்றதாக உள்ளது.

17.
| அணைவுச் சேர்மம் | [Ni(CN)4]2- | ||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| மைய உலோக அணு மற்றும் அதன் வெளிக்கூட்டு எலக்ட்ரான் அமைப்பு | Ni2+; 3d8 , 4s0 | ||||||||||||||||||
| உலோக அணு அயனியின் வெளிக்கூட்டு ஆர்பிட்டால்கள் |
|
||||||||||||||||||
| ஈனியின் தன்மை | CN- வலிமையான ஈனி உலோகத்தின் 3d எலக்ட்ரான்களை இணையாக்குகிறது. |
||||||||||||||||||
| ஈனியின் முன்னிலையில் மைய உலோக அணு / அயனியின் வெளிக்கூட்டு ஆர்பிட்டால்கள் |
|
||||||||||||||||||
| இனக்கலப்பு | அணைவு எண் - 4 இனக்கலப்பு - dsp2 |
||||||||||||||||||
| அணைவில் உள்ள மைய உலோக அயனியின் இனக்கலப்பு ஆர்பிட்டால்கள் |
|
||||||||||||||||||
| வடிவம் | தளச்சதுரம் | ||||||||||||||||||
| காந்தப்பண்பு | தனித்த எலக்ட்ரான்கள் எண்ணிக்கை = 0; எனவே, டையாகாந்தப்பண்புடையது. |
||||||||||||||||||
| காந்தத் திருப்புத் திறன் | \({ \mu }_{ s }=\sqrt { n(n+2) } =0\) | ||||||||||||||||||
| அணைவுச் சேர்மம் | [NiCl4]2- | ||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| மைய உலோக அயனி மற்றும் அதன் வெளிக்கூட்டு எலக்ட்ரான் அமைப்பு | Ni2+; 3d8, 4s0 | ||||||||||||||||||
| மைய உலோக அயனியின் வெளிக்கூட்டு ஆர்பிட்டால்கள் |
|
||||||||||||||||||
| ஈனியின் தன்மை | Cl- வலிமை குறைந்த ஈனி; எனவே 3d எலக்ட்ரான்களை இணை செய்யாது. |
||||||||||||||||||
| அணைவு எண் | 4 | ||||||||||||||||||
| இனக்கலப்பு | sp3 | ||||||||||||||||||
| அணைவில் உள்ள மைய உலோக அயனியின் இனக்கலப்பு ஆர்பிட்டால்கள் |
|
||||||||||||||||||
| வடிவம் | நான்முகி | ||||||||||||||||||
| தனித்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை | 2 | ||||||||||||||||||
| காந்தப்பண்பு | பாராகாந்தப்பண்பு | ||||||||||||||||||
| காந்ததிருப்புத் திறன் | \({ \mu }_{ s }=\sqrt { n(n+2) } =\sqrt { 2(2+2) } =2.83B.M\) | ||||||||||||||||||
18.
ஈ) நைட்ரேட்டோ - இது ஒரு எதிர் மின் ஈனி, மற்றவை நடுநிலை ஈனி
19.
ஆ) (i) & (iii)
சரியான கூற்று:
(i) VB கொள்கைப்படி அணைவில் மைய உலோக அயனியும், ஈனியும் ஈதல் சகப்பிணைப்பின் மூலம் பிணைக்கப்பட்டுள்ளது.
(iii) ஈனிகள் லூயி காரங்களாக செயல்படுகிறது.
20.
( )
ஈ) (i) & (iv)
சரியான கூற்று:
i) நைட்ரேட் ஈனியில் இணைப்பு மாற்றியம் சாத்தியமே.
iv) கரைப்பானேற்ற மாற்றியத்தில் நீர் கரைப்பானாக இருப்பின் அது நீரேற்ற மாற்றியம் எனப்படும்.
21.
( )
ஈ) (iii) & (iv)
சரியான கூற்று:
iii) அணைவு உட்பொருளினுள் அடங்கியுள்ள தொகுதிகள் அயனியுறாது.
iv) அணைவு உட்பொருள் சேர்மத்தின் வடிவத்திற்கு காரணமாகிறது.
22.
iii) A தவறு ஆனால் R சரி
சரியான காரணம்:
மாறுபட்ட ஈனிகளைக் கொண்ட அணைவுச் சேர்மங்களில் வடிவ மாற்றியம் காணப்படுகின்றன.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards