12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 20/01/2020
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
பின்வரும் வினைகளை நிறைவு செய்க.




2.
படிகத்தின் அலகுக்கூட்டின் அடர்த்தியை எவ்வாறு கணக்கிடலாம்?
3.
i) 1S22S22P63S23P63d3 என்ற எலக்ட்ரான்கள் அமைப்பு உடைய அயனி எது?
ii) பருமனறி பகுப்பாய்வில் Na2Cr2O7 ஐ விட K2Cr2O7 பயன்படுத்தப்படுகிறது. ஏன்?
iii) V2O5 வினைவேக மாற்றியாக செயல்படுவதேன்?
4.
ஆஸ்வால்ட் முறை மூலம் நைட்ரிக் அமிலத்தின் வணிக ரீதியிலான தயாரிப்பினை விவரி.
5.
ஒரு முதல் வகை வினைக்கு 25oC ல் வினைவேக மாறிலி மதிப்பு 3.46x10-5s-1 மற்றும் 35oC ல் வினைவேக மாறிலி மதிப்பு 13.50x10-5s-1 எனில் அவ்வினைக்கான கிளர்வு ஆற்றல் Ea மற்றும் அதிர்வெண் காரணி A ஆகியவற்றின் மதிப்பினைக் கணக்கிடுக.
6.
கார்பனின் புறவேற்றுமை வடிவங்களை விளக்குக
7.
படிக புலக் கொள்கையின் முக்கிய கோட்பாடுகளை எழுதவும்.
8.
காப்பர் அதன் தாதுவிலிருந்து எவ்வாறு பிரித்தெடுக்கப்படுகிறது?
9.
மின்னாற் தூய்மையாக்கலின் தத்துவத்தினை ஒரு உதாரணத்துடன் விளக்குக.
10.
பின்வரும் வினையில் வினைபொருள் X மற்றும் Y யைக் கண்டறிக.

11.
25oC வெப்பநிலையிலுள்ள 0.1 M காப்பர் சல்பேட் கரைசலில் காப்பர் மின்முனை மூழ்கவைக்கப்பட்டுள்ளது. காப்பரின் மின்முனை மின்னழுத்தத்தை கணக்கிடுக. [குறிப்பு : \(E^{0}_{Cu^{2+}|Cu}\)=0.34 ].
12.
போதை தரும், போதை தராத மருந்துப் பொருட்கள் என்றால் என்ன? எடுத்துக்காட்டுகள் தருக
13.
கிளைசீன் மற்றும் அலனின் ஆகியவற்றிலிருந்து உருவாக வாய்ப்புள்ள அனைத்து டைபெப்டைடுகளின் வடிவங்களையும் வரைக.
14.
‘A’ என்ற சேர்மத்தின் டைபுரோமோ பெறுதியை KCN உடன் வினைப்படுத்தி அமில நீராற்பகுப்பிற்கு உட்படுத்தி வெப்பப்படுத்தும் போது CO2 ஐ வெளியிட்டு ஒரு காரத்துவ அமிலம் ‘B’ ஐ தருகிறது. “B” ஐ திரவ NH3 மற்றும் உடன் வெப்பப்படுத்தி பிறகு Br2 /KOH உடன் வினைப்படுத்த சேர்மம் “C” ஐ கொடுக்கிறது. “C” ஐ NaNO2/HCl உடன் மிக குறைந்த வெப்பநிலையில் வினைப்படுத்தி ஆக்சிஜனேற்றம் செய்யும் போது ஒரு காரத்துவ அமிலம் “D” ஐ தருகிறது. D –ன் மூலக்கூறு நிறை 74 எனில் A, B, C மற்றும் D ஐ கண்டுபிடி.
15.
Ag2CrO4 ன் கரைதிறன் பெருக்க மதிப்பு \(1.1\times10^{-12}\) ஆகும். 0.1M K2CrO4 கரைசலில் Ag2CrO4 ன் கரைதிறன் என்ன ?
16.
அலுமினியமானது கனச்சதுர நெருங்கிப் பொதிந்த அமைப்பில் படிகமாகிறது. அதன் உலோக ஆரம் 125pm அலகுகூட்டின் விளிம்பு நீளத்தைக் கணக்கிடுக.
17.
துத்தநாகத்தைக் காட்டிலும், குரோமியத்தின் முதல் அயனிக்கும் ஆற்றல் மதிப்பு குறைவு ஏன்?
18.
எலிங்கம் வரைபடத்தின் வரம்புகள் யாவை?
19.
A, B மற்றும் C ஆகியவற்றை கண்டறிக.

20.
ஹைப்போ ஃபுளுரஸ் அமிலத்தில் (HOF) ஆக்சிஜனின் ஆக்சிஜனேற்ற எண்ணைக் கண்டறிக.
1.
1. 
2.

3.

4.

2.
1. ஒரு கனசதுர அலகுக்கூட்டின் நீளத்தினை பயன்படுத்தி, அதன் அடர்த்தியை (ρ) பின்வருமாறு கணக்கிடலாம்.
அலகுக்கூட்டின் அடர்த்தி
அலகுக்கூட்டின் நிறை = ஒரு அலகுக்கூட்டில் உள்ள மொத்த அணுக்களின் எண்ணிக்கை x ஒரு அணுவின் நிறை ......(2)
ஒரு அணுவின் நிறை
\(m=\frac { M }{ { N }_{ A } } \quad .....3\)
(3) ஐ (2)ல் பிரதியிட
ஃ அலகுக்கூட்டின் நிறை \(=n\times \frac { M }{ { N }_{ A } } \quad ....(4)\)
ஒரு கனசதுர அலகுக்கூட்டிற்கு, அதன் அனைத்து விளிம்பு நீளங்களும் சமம், அதாவது a=b=c
அலகுக்கூட்டின் கனஅளவு = a x a x a = a3 ...(5)
(4) மற்றும் (5) ஐ (1) ல் பிரதியிட
அலகுக்கூட்டின் அடர்த்தி \(\rho =\frac { nM }{ { a }^{ 3 }{ N }_{ A } } ....6\)
n, M, a ஆகிய மதிப்பிலிருந்து அலகுக்கூட்டின் அடர்த்தி ρ மதிப்பினை அறியலாம்.
3.
i) Cr3+ அயனி
ii) வளிமண்டலத்திலிருந்து ஈரத்தை Na2Cr2O7 உறிஞ்சுகிறது.
iii) V2O5 வினைபடு பொருளுடன் வினைபுரிந்து நிலைத் தன்மையற்ற இடைநிலைச் சேர்மங்களை உருவாக்குகிறது. அவை சிதைவடைந்து விளைபொருளைத் தருகிறது.
4.
(i) ஹேபர் முறையில் உருவான அம்மோனியா பத்து மடங்கு காற்றுடன் கலக்கப்படுகிறது
(ii) இக்கலவை வெப்பப்படுத்தப்பட்டு, வினைவேகமாற்றி வைக்கப்பட்டுள்ள தனி அறையினுள் செலுத்தப்பட்டு பிளாட்டினம் கம்பி வலையுடன் தொடர்பு உண்டாக்கப்படுகிறது
(iii) வெப்பநிலை 1275 K க்கு உயர்த்தப்படும்போது, உலோக வினையூக்கியானது அம்மோனியாவை விரைவாக ஆக்சிஜனேற்றம் செய்து NO வாயுவை உருவாக்குகிறது.
(iv) பின்னர் NO, நைட்ரஜன் டை ஆக்சைடாக ஆக்சிஜனேற்றம் அடைகிறது
4NH3 + 5O2 ⟶ 4NO + 6H2O +120KJ
2NO + O2 ⟶ 2NO2
(v) நைட்ரஜன் டை ஆக்சைடு வாயு வரிசையாக அமைக்கப்பட்டுள்ள பரப்பு கோபுரங்களின் வழியாக செலுத்தப்படுகிறது.
(vi) NO2 வாயு நீருடன் வினைபட்டு நைட்ரிக் அமிலத்தை தருகிறது
(vii) உருவாக்கப்பட்ட நைட்ரிக் அமிலம் காற்று செலுத்தி வெளுக்கப்படுகிறது
6NO2 + 3H2O ⟶ 4HNO3 + 2NO + H2O
5.
T1 = 25oC+273 = 298K; K1 = 3.46x10-5s-1
T2 = 35oC+273 = 308K; K2 = 13.50x10-5s-1
R = 8.314 JK-1 mol-1 ; Ea = ?; A = ?
\(log\frac { { k }_{ 2 } }{ { k }_{ 1 } } =\frac { Ea }{ 2.303R } \left( \frac { { T }_{ 2 }-{ T }_{ 1 } }{ { T }_{ 1 }{ T }_{ 2 } } \right) \)
\(log\frac { 13.5\times { 10 }^{ -5 } }{ 3.46\times { 10 }^{ -5 } } =\frac { Ea }{ 2.303\times 8.314 } \times \left( \frac { 308-298 }{ 298\times 308 } \right) \)
\(log3.90=\frac { Ea }{ 19.147 } \left( \frac { 10 }{ 91784 } \right) \)
\({ E }_{ a }=\frac { 19.147\times 91784 }{ 10 } \times log3.980\)
\(=\frac { 19.147\times 91784\times 0.5911 }{ 10 } \)
\({ E }_{ a }={ 103879\quad Jmol }^{ -1 }\)
\(\\ { E }_{ a }=103.879\quad KJ\quad { mol }^{ -1 }\)
\(log\ K=log\ A-\frac { Ea }{ 2.303RT } \)
\(log\ A=log\ 3.46\times { 10 }^{ -5 }+\frac { 103879 }{ 2.303\times 8.314\times 298 } \)
\(\\ logA=log3.46+log{ 10 }^{ -5 }+18.21\)
= log 3.46 - 5log10 +18.21
= 0.5391-5+18.21
log A = 13.7491
ஃ A = 13.7491ன் எதிர் மடக்கை
A = 5.611x1013
6.
(i) கார்பன் பல்வேறு புறவேற்றுமை வடிவங்களில் காணப்படுகிறது.
(ii) கிராஃபைட் மற்றும் வைரம் ஆகியன பொதுவாக காணப்படும் புறவேற்றுமை வடிவங்களாகும்
(iii) கிராஃபீன், ஃபுல்லரீன்கள் மற்றும் கார்பன் நானோ குழாய்கள் ஆகியன முக்கியமான புறவேற்றுமை வடிவங்களாகும்
கிராஃபைட்:
(i) இது சாதாரண வெப்ப அழுத்த நிலையில் அதிக நிலைப்புத் தன்மை கொண்ட கார்பனின் புறவேற்றுமை வடிவமாகும்.
(ii) இது sp2 இனக்கலப்படைந்த கார்பன் அணுக்களால் ஆன இருபரிமாண, தட்டையான, தாள் போன்ற அறுங்கோண வலையாகும்.
(iii) இதில் C-C பிணைப்பு நீளம் 1.41 Ao, இது பென்சீனில் காணப்படும் C-C பிணைப்பு நீளத்தை (1.40 Ao) ஒத்துள்ளது.
(iv) ஒவ்வொரு கார்பன் அணுவும், தன் இணைதிறன் கூட்டில் உள்ள நான்கு எலக்ட்ரான்களில் மூன்றை பயன்படுத்தி சுற்றியுள்ள மற்ற மூன்று கார்பன் அணுக்களுடன் மூன்று σ பிணைப்புகளை உருவாக்குகிறது.
(v) இனக்கலப்பில் ஈடுபடாத p - ஆர்பிட்டாலில் உள்ள நான்காவது எலக்ட்ரான் π பிணைப்பை உருவாக்குகிறது.
(vi) இந்த π எலக்ட்ரான்கள் முழுத்தாள் அமைப்பின் மீது உள்ளடங்காத் தன்மையைப் பெற்று கிராஃபைட்டின் மின்கடத்துத் திறனுக்கு காரணமாகிறது. எனவே கிராஃபைட் மின்சாரத்தைக் கடத்துகிறது
(vii) அடுத்தடுத்த கார்பன் தாள்கள் வலிமை குறைந்த வாண்டர்வால்ஸ் விசைகளால் ஒருங்கே இறுக்கி வைக்கப்பட்டுள்ளன. அடுத்தடுத்த தாள்களுக்கு இடைப்பட்ட தூரம் 3.40 Ao. இதுவே கிராஃபைட்டின் மிருதுவான தன்மைக்கும், வழுக்கும் தன்மைக்கும் காரணமாகும். எனவே கிராஃபைட் தனித்தோ அல்லது எண்ணெய்களுடன் கலந்தோ உயவுப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
வைரம்:
(i) கார்பன் அணுக்கள் sp3 இனக்கலப்பில் உள்ளன.
(ii) ஒவ்வொரு கார்பன் அணுவும் அதனைச் சுற்றியுள்ள நான்கு வெவ்வேறு கார்பன் அணுக்களுடன் 1.54Ao பிணைப்பு நீளமுள்ள C-C ஒற்றை பிணைப்புகளால் நான்முகி பிணைக்கப்பட்டுள்ளன. எனவே வைரம் மிகக்கடினமானது
(iii) கார்பனின் நான்கு இணைதிற எலக்ட்ரான்களும் பிணைப்பில் ஈடுபட்டுள்ளன. தனி எலக்ட்ரான் ஏதும் இல்லாததால் வைரம் மின் கடத்துதிறனைப் பெறவில்லை.
(iv) மிகக் கடினமான படிகமாக இருப்பதால், கடினமான கருவிகளை கூர்மையாக்கவும், கண்ணாடிகளை வெட்டவும், துளைப்பான்களாக செய்யவும், பாறைகளைத் துளையிடவும் வைரம் பயன்படுகிறது.
ஃபுல்லரீன்கள்:
(i) ஃபுல்லரீன்கள் புதியதாக தொகுக்கப்பட்ட கார்பனின் புறவேற்றுமை வடிவங்களாகும்
(ii) கிராஃபைட் மற்றும் வைரத்தைப் போல அல்லாமல் ஃபுல்லரீன்கள் C32, C50, C60, C70, C76 போன்ற தனித்த மூலக்கூறுகளாக உள்ளன.
(iii) இம்மூலக்கூறுகள் கூண்டு வடிவ அமைப்புகளைக் கொண்டுள்ளன.
(iv) பக்மின்ஸ்டர் ஃபுல்லரீன்கள் அல்லது பக்கிபால் எனப்படுவது C60 என்ற மூலக்கூறு வாய்ப்பாடுகளுடன் கால் பந்து போன்ற அமைப்பைப் பெற்றுள்ளது.
இது 20 ஆறணு வளையங்களும், 12 ஐந்தணு வளையங்களும் இணைந்த வளைய அமைப்பை பெற்றுள்ளது
(v) ஒவ்வொரு கார்பன் அணுவும் sp2 இனக்கலப்பு அடைந்து மூன்று σ பிணைப்புகளையும், ஒரு உள்ளடங்கா π பிணைப்பையும் உருவாக்கி இம்மூலக்கூறுகளுக்கு அரோமேட்டிக் தன்மையை பெற்றுத் தருகின்றன
(vi) C-C ஒற்றை பிணைப்பு நீளம் 1.44 Ao
(vii) C = C இரட்டை பிணைப்பு நீளம் 1.38 Ao
கார்பன் நானோ குழாய்கள்:
(i) கார்பன் நானோ குழாய்கள் புதிதாக கண்டறியப்பட்ட கார்பனின் புறவேற்றுமை வடிவங்களாகும்.
(ii) இவை கிராஃபைட் போன்ற குழாய் அமைப்பையும், ஃபுல்லரீன் முனைகளையும் கொண்டுள்ளன
(iii) அச்சின் வழியாக இந்த நானோ குழாய்கள், எஃகை விட அதிக வலிமை கொண்டவையாக உள்ளன
(iv) இவை மின்சாரத்தைக் கடத்துகின்றன
(v) இவை நானோ மின்னணுவியல் வினைவேக மாற்றம், பலபடிகள் மற்றும் மருந்துகள் உருவாக்கம் ஆகியவற்றில் பயன்படுகின்றன.
கிராஃபீன்:
(i) இது கிராஃபைட்டின் ஒற்றைத்தளத் தாள் ஆகும்.
(ii) sp2 இனக்கலப்பு அடைந்த கார்பன் அணுக்களால் ஒற்றைத்தள தாள் வடிவமைப்பைப் பெற்றுள்ளது.
(iii) கார்பன் அணுக்கள் தேன்கூடு போன்ற படிக அமைப்பில் நெருக்கமாக பொதிக்கப்பட்டுள்ளன.
7.
(i) மைய உலோக அணு மற்றும் ஈனிகளுக்கு இடையேயான பிணைப்பு முற்றிலும் அயனித்தன்மை உடையது என கருதப்பட்டது. எலக்ட்ரான் அடர்வினை மிகுதியாகக் கொண்ட ஈனிகளுக்கும், குறை எலக்ட்ரான் தன்மையுடைய மைய உலோக அயனிக்கும் இடையே ஏற்படும் நிலை மின்னியல் கவர்ச்சி விசையினால் இப்பிணைப்பு ஏற்படுகிறது.
(ii) மைய உலோக அணு / அயனி மற்றும் ஈனிகள் மின்சுமை பெற்றிருந்தால் அவை புள்ளி மின்சுமைகளாகவும், நடுநிலைத்தன்மை பெற்றிருந்தால் மின் இரு முனைகளாகவும் கருதப்படுகின்றன.
(iii) அணைவுச் சேர்மம் உருவாதல் தொடர்ச்சியான பின்வரும் கருத்தியலான படிகளை உள்ளடக்கியது.
படிநிலை - 1: தனித்த வாயுநிலையில், மைய உலோகம் அயனியின் ஐந்து 'd' ஆர்பிட்டாலுக்கும் சம ஆற்றலுடையவைகளாக உள்ளன. ஆரம்பத்தில், மைய உலோக அயனியின் எலக்ட்ரான்களுக்கும் ஈனிகளின் எலக்ட்ரான்களுக்கும் இடையே ஏற்படும் விலக்கு விசையால் அனைத்து ஐந்து 'd' ஆர்பிட்டால்களின் ஆற்றலும் அதிகரிக்கிறது.
படிநிலை - 2: மைய உலோக அயனியை பிணைப்பின் திசையில் ஈனிகள் அணுகுகின்றன. எண்முகி புலத்தில் மைய உலோக அயனி ஆய அச்சுகள் சந்திக்கும் ஆதிப்புள்ளியில் உள்ளது. ஆறு ஈனிகளும் +x, -x, +y, -y, +z மற்றும் -z ஆகிய திசைகளில் மைய உலோக அயனியை அணுகுகின்றன.
அச்சின் மீது மடல்களைக் கொண்ட dx2 - y2 மற்றும் dz2 ஆர்பிட்டால்கள் அதிக விலக்கு விசைக்கு உட்படுவதால் அவற்றின் ஆற்றல் அதிகரிக்கிறது. அச்சின் இடையே மடல்களைக் கொண்ட dxy, dyz மற்றும் dzx ஆர்பிட்டால்கள் குறைந்த விலக்கு விசைக்கு உட்படுவதால் அவற்றின் ஆற்றல் குறைகிறது. இவ்வாறாக சம ஆற்றலுடைய ஐந்து d ஆர்பிட்டால்கள் இரு வகைகளாக (eg, t2g) என பிரிகின்றன. இச்செயல்முறை படிகப்புல பிளப்பு எனப்படுகிறது.
படிநிலை - 3: இந்நிலை வரையில் அணைவுச் சேர்மம் உருவாவதற்கு சாதகமான சூழல் இல்லை. எனினும், ஈனிகள் மேலும் அணுகும் போது, எதிர்மின்சுமையுடைய ஈனிகளின் எலக்ட்ரான்களுக்கும், நேர்மின் சுமையுடைய உலோக அயனிகளுக்கும் இடையே கவர்ச்சி விசை ஏற்படுகிறது. இதனால் நிகர ஆற்றல் குறைவு ஏற்படுகிறது. இந்த ஆற்றல் குறைவு அணைவு உருவாவதற்கு காரணமாக அமைகிறது.
(i) நான்முகி அணைவுச் சேர்மங்களில் கனசதுரத்துடன் ஒன்று விட்டு ஒன்றாக அமைந்துள்ள மூலைகளிலிருந்து கனசதுரத்தின் முதன்மை மூலைவிட்டம் வழியே நான்கு ஈனிகளும் மைய உலோக அயனியை அணுகுகின்றன. இப்புலத்தில் எந்த ஒரு d ஆர்பிட்டாலும் ஈனிகள் அணுகும் திசையிலேயே அமைவதில்லை. எனினும் dxy, dyz, dzx ஆகியன dx2 - y2, dz2 ஆர்பிட்டால்களை விட ஈனிகள் அணுகும் திசைக்கு அருகாமையில் அமைந்துள்ளன. எனவே dxy, dyz, dzx ஆகியவற்றின் ஆற்றல் அதிகரித்து dx2 - y2, dz2 ஆற்றல் குறைகிறது.
(ii) எனவே எண்முகி படிக புலத்தோடு ஒப்பிடும்போது, இப்புலத்தில் படிக புலப்பிளப்பானது தலைகீழ் மாற்றமடைந்து, பிளப்பு ஆற்றலின் அளவு குறைவாக உள்ளது. இரு புலங்களுக்கு இடையேயான படிக புலப்பிளப்பு ஆற்றல்களின் தொடர்பு \({ \triangle }_{ t }=\frac { 4 }{ 9 } { \triangle }_{ 0 }\) ஆகும்.
8.
1. முக்கிய தாது: காப்பர் பைரைட்
2. அடர்ப்பித்தல்: நுரை மிதப்பு முறை
3. அடர்ப்பிக்கப்பட்ட தாது எதிர் அனல் உலையில் அமிலத்தன்மையுடைய இளக்கியான சிலிக்காவுடன் வெப்பப்படுத்தப்படுகிறது.
4. உருவாகும் காரத்தன்மையுடைய பெரஸ் ஆக்சைடு, சிலிக்காவுடன் இணைந்து பெரஸ் சிலிக்கேட் எனும் கனிமக் கசடினைத் தருகிறது.
5. எஞ்சியுள்ள உலோக சல்பைடுகள் Cu2S மற்றும் FeS ஒன்றுடன் ஒன்று கரைந்து காப்பர் மட்டி உருவாகிறது.
2CuFeS2(s) + O2(g) ➝ 2FeS(l) + Cu2S(l) + 2SO2(g)
2FeS(l) + 3O2(g) ➝ 2FeO(l) + 2SO2(g)
FeO(s) + SiO2(s) ➝ FeSiO3(s)
கனிமக்கழிவு இளக்கி கனிமக் கசடு
6. கனிமக் கழிவுகளிலிருந்து காப்பர் மட்டி பிரிக்கப்பட்டு மாற்று உலையில் இடப்படுகிறது.
7. மட்டியில் உள்ள FeS முதலில் FeO ஆக ஆக்சிஜனேற்றமடைகிறது.
8. FeO சிலிக்காவுடன் கனிமக் கசடாக நீக்கப்படுகிறது.
9. எஞ்சியுள்ள காப்பர் சல்பைடு மேலும் ஆக்சிஜனேற்றத்திற்கு உட்பட்டு காப்பர் ஆக்சைடாக மாற்றப்படுகிறது.
10. காப்பர் ஆக்சைடு, மற்றும் காப்பர் சல்பைடு வினைபுரிந்து காப்பரைத் தருகின்றன.
2Cu2S(l,s) + 3O2(g) ➝ 2Cu2S(l,s) + 2SO2(g)
2Cu2O(l) + Cu2S(l) ➝ 6Cu(l) + SO2(g)
11. உருகிய காப்பர் திண்மமாக்கும்போது SO2 வாயு வெளியேறுவதால் அதன் தோற்ற அமைப்பில் கொப்புளங்கள் போல் காணப்படுகிறது. இந்தக் காப்பர் கொப்புளக்காப்பர் எனப்படுகிறது.
மின்னாற் தூய்மையாக்கல்:
எதிர்மின்வாய்: தூய காப்பர் தகடு
நேர்மின்வாய்: தூய்மையற்ற காப்பர் தண்டு
மின்பகுளி: CuSO4 கரைசல் + நீர்த்த H2SO4
மின்சாரத்தை செலுத்தும்போது தூய காப்பர் எதிர்மின்வாயில் படிகிறது.
9.
பண்படா உலோகமானது மின்னாற்பகுத்தல் மூலம் தூய்மை செய்யப்படுகிறது.
நேர்மின்வாய் : தூய்மையற்ற உலோகத் தண்டு.
எதிர்மின்வாய்: தூய உலோகத் தகடு
மின்பகுளி : மின்னாற் பகுத்தலானது
பிரித்தெடுக்கப்பட வேண்டிய உலோகத்தின் உப்புகளைக் கொண்ட நீர்க்கரைசலைக் கொண்டுள்ள மின்பகு கலத்தில் நிகழ்த்தப்படுகிறது.
மின்னாற் பகுத்தல் நிகழ்த்தும் போது, பிரித்தெடுக்கப்பட வேண்டிய உலோகம் நேர்மின் வாயிலிருந்து கரைந்து கரைசலில் சென்று எதிர்மின்வாயில் வீழ்படிவாகிறது.
1. மின்னாற்பகுத்தலின் போது குறைவான எலக்ட்ரோ நேர்மின் தன்மை உடைய மாசுக்கள் நேர்மின் வாயின் அடியில் தங்குகின்றன. அவை ஆனோடு மாசு என அழைக்கப்படுகிறது.
2. சில்வரை மின்னாற்பகுத்தல் முறையில் தூய்மையாக்கலை உதாரணமாகக் கொண்டு இச்செயல்முறையினைப் புரிந்து கொள்ளலாம்.
எதிர் மின்வாய் : தூய சில்வர்
நேர்மின்வாய் : தூய்மையற்ற சில்வர்
மின்பகுளி : அமிலத்தன்மையுள்ள சில்வர் நைட்ரேட்கரைசல்
3. மின்வாய்களின் வழியே மின்சாரத்தைச் செலுத்தும் போது சில்வர் அனு எலக்ட்ரான்களை இழந்து கரைசலுக்குள் செல்கின்றது. நேர்மின் தன்மையுடைய சில்வர் அயனிகள் எதிர்மின்வாயில் சென்று மின்னிறக்கம் அடைந்து மின்வாயில் படிகிறது.
4. காப்பர், ஜிங்க் போன்ற பிற உலோகங்களுக்கு இதே முறையை பின்பற்றித் தூய்மையாக்கப்படுகின்றன.
10.

11.
கொடுக்கப்பட்டது:
[Cu2+] = 0.1M; \(E^{0}_{Cu^{2+}|Cu}\)= 0.34 V
மின்கலவினை: \(Cu^{2+}_{(aq)}+2e^{-}\rightarrow Cu_{(s)}\)
\(E_{cell}=E^{0}-\frac{0.0591}{n}log\frac{[Cu]}{[Cu^{2+}]}\)
\(=0.34-\frac{0.0591}{2}log\frac{1}{0.1}\)
Ecell= 0.34 - 0.0296
= +0.31 V
12.
போதை தரும் வலி நிவாரணிகள்: [ஓபியாய்டுகள்]
இவை போதை தரக்கூடிய வலிநிவாரணிகளாகும். இவை வலியை நீக்கி தூக்கத்தை கொடுக்கின்றன.
கடுமையான வலியிலிருந்து, நிவாரணம் அளிக்க குறைந்த காலம் அல்லது நீண்ட காலத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக அறுவை சிகிச்சைக்கு பிறகு உண்டாகும் வலி, இறுதி நிலை புற்று நோய் வலிக்கு பயன்படுகிறது.
எ.கா: மார்ஃபின், கோடின்
போதை தராத வலி நிவாரணி:
இவை போதை ஏற்படுத்தாத நிவாரணிகளாகும். இவை, சுய உணர்வு நிலையை பாதிக்காமல் வலியை குறைக்கின்றன.
குறிப்பிட்ட இடத்திலுள்ள வலி தூண்டல்களை குறைத்து வலியை நீக்குகின்றன. இவை குறுகிய கால நிவாரணியாகவும், தலைவலி, தசைவலி, சிராய்ப்பு அல்லது மூட்டு அழற்சி போன்ற மிதமான வலியை போக்கவும் பயன்படுகிறது.
எ.கா: ஆஸ்பிரின், பாராசிட்டமால், புரூஃபென் இதில் இரு வகைகள் உள்ளன.
அ) அழற்சி எதிர்ப்பு மருந்துகள்:
எ.கா: ஆஸ்பிரின், புரூஃபென்
ஆ) ஸ்டீராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு
மருந்துகள்:
(NSAIDs) எ.கா: புரூஃபென்
13.
14.
மூலக்கூறுநிறை 74 உடைய ஒரு கார்பாக்சிலிக் அமிலம், CH3CH₂COOH ஆகும். எனவே (D) புரப்பனாயிக் அமிலம்
D-ன் வாய்பாடு CnH2+nCOOH
மூலக்கூறுநிறை CnH2n+ 1 COOH எனில் மூலக்கூறுநிறை=74
12n + 2n + 1 + 12 + 32 + 1 = 74
14n + 46 = 74
14n = 74 - 46 = 28, n = 2
எனவே (C) n - புரப்பைலமீன் ஆகும்.
(B) யை திரவ NH3 உடன் வெப்பப்படுத்தி பிறகு Br₂/KOH உடன் வினைப்படுத்தி (C) பெறப்படுகிறது. இது ஹாஃப்மன் இறக்கவினை நடைபெறுவதை குறிப்பிடுகிறது.
எனவே வினையானது,
எனவே (B) பியூட்டனாயிக் அமிலம் ஆகும்.
கீழ்கண்டவாறு (A)ஐ KCN உடன் வினைப்படுத்தி, தொடர்ந்து நீராற்பகுத்து, வெப்பப்படுத்தி (B) பெறப்படுகிறது.
15.
\(\mathrm{Ag}_2 \mathrm{CrO}_4(\mathrm{~s}) \rightleftharpoons 2 \mathrm{Ag}^{+}(\mathrm{aq})+\mathrm{CrO}_4^{2-}(\mathrm{aq})\)
(S) 2S S
\(\begin{aligned}
& \mathrm{K}_2 \mathrm{CrO}_4 \rightleftharpoons 2 \mathrm{k}^{+}+\mathrm{CrO}_4^{2-}
\end{aligned}\)
0.1 M 2\(\times\)0.1 M 0.1 M
[Ag+] = 2S
\(\begin{aligned}
{\left[\mathrm{CrO}_4{ }^{2-}\right]=(\mathrm{S}+0.1) \simeq 0.1}
\end{aligned}\)
\(\begin{aligned}
\mathrm{~K}_{\mathrm{sp}}=\left[\mathrm{Ag}^{+}\right]^2\left[\mathrm{CrO}_4^{2-}\right]
\end{aligned}\)
\(\begin{aligned}
1.1 \times 10^{-12}=(2 \mathrm{~S})^2(0.1)
\end{aligned}\)
\(\begin{aligned}
1.1 \times 10^{-12}=0.4 \mathrm{~S}^2
\end{aligned}\)
\(\begin{aligned}
0.4 \mathrm{~S}^2=1.1 \times 10^{-12}
\end{aligned}\)
\(\begin{aligned}
\mathrm{~S}^2=\frac{1.1 \times 10^{-12}}{0.4}=2.75 \times 10^{-12}
\end{aligned}\)
\(\begin{aligned}
\mathrm{~S}=\sqrt{2.75 \times 10^{-12}}
\end{aligned}\)
\(\begin{aligned}
\mathrm{~S}=1.658 \times 10^{-6} \mathrm{M}
\end{aligned}\)
16.
\( \mathrm{r} =\frac{\mathrm{a} \sqrt{2}}{4}, \mathrm{r}=125 \mathrm{pm}, \mathrm{a}=? \\ =\frac{4 \times 1.25 \times 10^{-8}}{1.414} \\ =3.536 \times 10^{-8} \mathrm{~cm} \\ =353 \mathrm{pm} \)
17.
குரோமியத்தின் (24) எலக்ட்ரான் அமைப்பு 3d54s1. தனது வெளிக்கூட்டிலுள்ள எலக்ட்ரானை இழந்து சரிபாதி நிரம்பிய நிலைத்த எலக்ட்ரான் அமைப்பை பெறுகிறது. இதனால் குரோமியத்தின் முதல் அயனியாதல் என்தால்பி துத்தநாகத்தை விட குறைவாகும். Zn(30) ன் எலக்ட்ரான் அமைப்பு 3d104s1(நிலையான எலக்ட்ரான் அமைப்பு) தனது வெளிக்கூட்டிலுள்ள ஒரு எலக்ட்ரானை இழந்தால் 3d¹0 4s' என்ற அமைப்பை பெறுகிறது. இந்த அமைப்பு நிலைப்பு தன்மை உள்ளது இல்லை. ஆதலால் துத்தநாகத்தைக் காட்டிலும் குரோமியத்தின் முதல் அயனியாக்கும் ஆற்றல் மதிப்பு குறைவாக உள்ளது.
18.
1. எலிங்கம் வரைபடம் வெப்ப இயக்கவியல் கொள்கைகளை மட்டுமே கருத்திற்கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இது ஒரு வினை நிகழ்வதற்கான வெப்ப இயக்கவியல் சாத்தியத்தன்மை குறித்த தகவலை மட்டுமே தருகிறது. இது ஒரு வினை எவ்வளவு வேகத்தில் நிகழும் என்ற விவரத்தினை தருவதில்லை. மேலும் துணை வினை நிகழ்வதற்கான சாத்தியங்களை பற்றி எந்த ஒரு விவரத்தினையும் தருவதில்லை.
2. வினைபடு பொருட்கள், வினை விளை பொருட்களுடன் வேதிச் சமநிலையில் இருப்பதாக கருதி ΔG ஆனது எலிங்கம் வரைபடத்தில் விளக்கப்பட்டுள்ளது. இது எப்போதும் உண்மையல்ல.
19.
20.
ஆக்ஸிஜனேற்ற எண் (F) = -1
ஆக்ஸிஜனேற்ற எண் (H) = +1
ஆக்ஸிஜனேற்ற எண் 0ல் HOF = x
(-1) + x + (-1) = 0
x = 0
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards