12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 14/11/2019
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
கூற்று : பீனால் ஆனது எத்தனாலை விட அதிக அமிலத்தன்மை உடையது.
காரணம் : பீனாக்ஸைடு அயனியானது உடனிசைவால் நிலைப்புத்தன்மை பெறுகிறது.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணமானது கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி மேலும் காரணமானது கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
2.
ஆஸ்பிரின் என்பது _______.
அசிட்டைல் சாலிசிலிக் அமிலம்
பென்சாயில் சாலிசிலிக் அமிலம்
குளோரோபென்சாயிக் அமிலம்
ஆந்த்ரனிலிக் அமிலம்
3.
ஒரு வாயுவானது, ஒரு திண்ம உலோக பரப்பின்மீது பரப்பு கவரப்படுதல் என்பது தன்னிச்சையான மற்றும் வெப்பம் உமிழ் நிகழ்வாகும், ஏனெனில் ____________
ΔH அதிகரிக்கிறது
ΔS அதிகரிக்கிறது
ΔG அதிகரிக்கிறது
ΔS குறைகிறது
4.
சேர்மம் A என்பது _______.
ஹெப்டனாயிக் அமிலம்
2-அயோடோஹெக்ஸேன்
ஹெப்டேன்
ஹெப்டனால்
5.
பின்வரும் அரைக்கல வினைகளை கருதுக
Mn2+ + 2e- \(\rightarrow\) Mn Eo = -1.18V Mn2+ \(\rightarrow\) Mn3+ + e- Eo = -1.51V
3Mn2+ \(\rightarrow\) Mn + 2Mn3+
என்ற வினையின் Eo மதிப்பு மற்றும் முன்னோக்கு வினையின் சாத்தியக்கூறு முறையே
2.69V மற்றும் தன்னிச்சையானது
- 2.69 V மற்றும் தன்னிச்சையற்றது
0.33V மற்றும் தன்னிச்சையானது
4.18 V மற்றும் தன்னிச்சையற்றது
6.
நைட்ரோபென்சீன் ஆனது அடர் HNO3 / H2SO4 உடன் 80-100°C ல் வினைபுரிந்து கொடுக்கும் விளைபொருள் எது?
1,4 – டைநைட்ரோ பென்சீன்
2,4,6 – ட்ரைநைட்ரோ பென்சீன்
1,2 – டைநைட்ரோ பென்சீன்
1,3 – டைநைட்ரோ பென்சீன்
7.
பின்வருவனவற்றுள் எது லெளரி– ப்ரான்ஸ்டட் அமிலமாகவும், காரமாகவும் செயல்பட முடியும்?
HCl
SO42−
HPO42−
Br-
8.
பீனைல் மெத்தனல், அடர் NaOH உடன் வினைப்பட்டு X மற்றும் Y எனும் இரண்டு விளைபொருட்களைத் தருகிறது. சேர்மம் X ஆனது உலோக சோடியத்துடன் வினைப்பட்டு ஹைட்ரஜன் வாயுவை வெளியேற்றுகிறது, எனில் X மற்றும் Y ஆகியவை முறையே _______.
சோடியம் பென்சோயேட் மற்றும் பீனைல்
சோடியம் பென்சோயேட் மற்றும் பீனைல் மெத்தனால்
பீனைல் மெத்தனால் மற்றும் சோடியம் பென்சோயேட்
இவற்றில் ஏதுமில்லை
9.
திட கார்பன்டை ஆக்சைடு ஒரு _______ படிகமாகும்.
முனைவற்ற மூலக்கூறு
முனைவுற்ற மூலக்கூறு
ஹைட்ரஜன் பிணைப்பில் பிணைக்கப்பட்ட மூலக்கூறு
உலோக
10.
லாந்தனைடு குறுக்கத்தின் விளைவு பின்வரும் எதற்கு காரணமாகிறது?
Zr மற்றும் Y இரண்டும் ஏறத்தாழ ஒரே அணு ஆரங்களைப் பெற்றுள்ளன
Zr மற்றும் Nb இரண்டும் ஒரே ஆக்சிஜனேற்ற நிலையைப் பெற்றுள்ளன
Zr மற்றும் Hf இரண்டும் ஏறத்தாழ ஒரே அணு ஆரங்களைப் பெற்றுள்ளன.
Zr மற்றும் Zn இரண்டும் ஒரே ஆக்சிஜனேற்ற நிலையைப் பெற்றுள்ளன.
11.
குளோரின் வாயுவின் நிறம் _________.
நிறமற்றது
பழுப்பு
பசுமை கலந்த மஞ்சள்
இளம்பச்சை
12.
அணைவுச் சேர்மங்களின் நிறங்களை விளக்கும் கொள்கை ___________
இணை திற பிணைப்புக் கொள்கை
வெர்னர் கொள்கை
படிக புலக் கொள்கை
மூலக்கூறு ஆர்பிட்டால் கொள்கை
13.
A \(\rightarrow \)B+C+D என்ற ஒரு படுத்தான வினையில், துவக்க அழுத்தம் P0. 't' நேரத்திற்குப் பின் 'P'. P0, P மற்றும் t ஆகியவற்றைப் பொருத்து வினைவேக மாறிலி _____________
\(K=\left( \frac { 2.303 }{ t } \right) log\left( \frac { 2{ P }_{ 0 } }{ 3{ P }_{ 0 }-P } \right) \)
\(K=\left( \frac { 2.303 }{ t } \right) log\left( \frac { 2{ P }_{ 0 } }{{ P }_{ 0 }-P } \right) \)
\(K=\left( \frac { 2.303 }{ t } \right) log\left( \frac {3{ P }_{ 0 }-P }{2{ P }_{ 0 } } \right) \)
\(K=\left( \frac { 2.303 }{ t } \right) log\left( \frac { 2{ P }_{ 0 } }{3{ P }_{ 0 }-P } \right) \)
14.
வைரத்தில் உள்ள கார்பன் அணுக்கள் ஒவ்வொன்றும் மற்றதனுடன் பிணைந்துள்ளதன் வடிவம் _________.
நான்முகி
அறுங்கோணம்
எண்முகி
இவை எதுவுமல்ல
15.
எலிங்கம் வரைபடத்தை பொறுத்து, பின்வருவனவற்றுள் சரியாக இல்லாத கூற்று எது?
கட்டிலா ஆற்றல் மாற்றம் நேர்க்கோட்டில் அமைந்துள்ளது. நிலைமையில் மாற்றம் ஏற்படும் போது நேர்கோட்டிலிருந்து விலகல் ஏற்படுகிறது.
CO2 உருவாதலுக்கான வரைபடமானது கட்டிலா ஆற்றல் அச்சிற்கு ஏறத்தாழ இணையாக உள்ளது.
CO ஆனது எதிர்க்குறி சாய்வு மதிப்பினைப் பெற்றுள்ளது. எனவே வெப்பநிலை அதிகரிக்கும் போது CO அதிக நிலைப்புத் தன்மை உடையதாகிறது.
உலோக ஆக்சைடுகள் நேர்க்குறி சார்பு மதிப்பானது, வெப்பநிலை அதிகரிக்கும் போது அவைகளின் நிலைப்புத்தன்மை குறைவதைக் காட்டுகிறது
16.
ஒத்த தொகுதிகளைக் கொண்டுள்ள ஈரிணைய ஆல்கஹால்களைத் தயாரிக்க ஒரு தகுந்த வினை பொருளைத் தருக.
17.
எதிர் உயிரிகள் என்றால் என்ன?
18.
ஹார்மோன்கள் என்றால் என்ன? எடுத்துக்காட்டுகள் தருக.
19.
பின்வருவனவற்றிற்கு காரணம் கூறு
i. அனிலீன் பிரீடல் கிராப்ட் வினைக்கு உட்படுவதில்லை
ii. அலிபாட்டிக் அமீன்களை விட அரோமேட்டிக் அமீன்களின் டையசோனியம் உப்புகள் அதிக நிலைப்புத் தன்மை கொண்டது.
iii. அனிலீனின் pKb மதிப்பு மெத்திலமீனை விட அதிகம்
iv. காப்ரியல் தாலிமைடு தொகுப்பு வினை ஓரிணைய அமீன்களை தொகுப்பதற்கானது.
v. எத்தில்மீன் நீரில் கரையும் ஆனால் அனிலீன் கரையாது.
vi. அமைடுகளை விட அமீன்கள் அதிக காரத்தன்மை உடையது.
vii. அரோமேட்டிக் எலக்ட்ரான்கவர் பதிலீட்டு வினைகளில் அமினோ தொகுதி o – மற்றும் p – வழிநடத்தும் தொகுதியாக இருப்பினும் அனிலீனின் நைட்ரோ ஏற்றம் செய்யும் வினைகளில் m – நைட்ரோ அனிலீன் கணிசமான விளைபொருளாக கிடைக்கிறது.
20.
அசிட்டோனுடன் பென்சால்டிஹைடின் ஆல்டால் குறுக்கவினையில் உருவாகும் முதன்மையான விளைபொருளின் அமைப்பு வாய்ப்பாட்டை எழுதுக.
21.
A, B மற்றும் C ஆகியவற்றை கண்டறிக.

22.
படிக திடப்பொருள் என்றால் என்ன?
23.
சலவைத்தூள் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
24.
N3+3H2 ⟶ 2NH3 என்ற வினையின் வினைவேக சமன்பாட்டை எழுதுக.
25.
டைமீத்தைல் கிளையாக்ஸைமின் ஆல்கஹால் கலந்த கரைசலைப் பயன்படுத்தி Ni2+ கண்டறியப்படுகிறது இவ்வினையில் உருவாகும் ரோஜா சிவப்பு நிற அணைவுச் சேர்மத்தின் வாய்ப்பாட்டினை எழுதுக.
26.
Ti3+ , Mn2+ அயனியில் காணப்படும் இணையாகாத எலக்ட்ரான்களின் எண்ணிக்கையைக் கண்டறிக மேலும் அவைகளின் காந்ததிருப்பு திறன் மதிப்புகளைக் (μs) கண்டறிக.
27.
பின்வரும் சேர்மங்களில் காணப்படும் இனக்கலப்பாதலைக் கண்டறிக.
அ) BrF5
ஆ) BrF3
28.
CO ஒரு ஒடுக்கும் காரணி. ஒரு எடுத்துக்காட்டுடன் இக்கூற்றை நிறுவுக.
29.
இரும்பை அதன் தாதுவான Fe2O3 யிலிருந்து பிரித்தெடுப்பதில் சுட்ட சுண்ணாம்புவின் பயன்பாடு யாது?
30.
4 – மெத்தில் பென்ட் -2- ஈன் -1- ஆல் ஐ தரும் ஆல்டிஹைடு, கார்பாக்சிலிக் அமிலம் மற்றும் எஸ்டர் ஆகியனவற்றின் வடிவமைப்புகளைத் தருக.
31.
\(1.5\times10^{-3}\) M Ba (OH)2 கரைசலின் pH மதிப்பை கணக்கிடுக.
32.
உலோகங்களுடன் கந்தக அமிலத்தின் வினை யாது?
33.
பின்வரும் வினைகளை அடிப்படை வினைகளாகக் கருத்திற்கொண்டு அவ்வினைகளுக்கான வினை வேகத்தினைக் குறிப்பிடும் சமன்பாடுகளை எழுதுக.
i) 3A+5B2➝4CD
ii) X2+Y2 ➝2xy
34.
எலிங்கம் வரைபடம் பற்றி எழுது.
35.
பருமனறி பகுப்பாய்வில் அணைவுச் சேர்மங்களின் பயன்களை சுருக்கமாக விளக்குக.
36.
0.1M KCl கரைசலை பயன்படுத்தி கண்டறியப்பட்ட மின்கடத்து கலனின் மின்தடை 190 \(\Omega \) (0.1M KCl கரைசலின் நியம கடத்துத்திறன் மதிப்பு 1.3 Sm-1). அதே கலனில் 0.003M செறிவுள்ள சோடியம் குளோரைடு கரைசலை நிரப்பும் போது, அளவிடப்பட்ட மின்தடை மதிப்பு 6.3K\(\Omega\) இவை இரண்டும் ஒரே குறிப்பிட்ட வெப்பநிலையில் கண்டறியப்பட்ட அளவீடுகளாகும். NaCl கரைசலின் நியம மற்றும் மோலார் கடத்துத்திறன் மதிப்புகளை கணக்கிடுக.
37.
வினைவேக மாற்றம் பற்றிய இடைநிலைச் சேர்மம் உருவாதல் கொள்கையை ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக.
38.
வினையுறா மின்முனைகளைப் பயன்படுத்தி உருகிய NaCl ஐ மின்னாற்பகுத்தல் பற்றி விளக்குக.
39.
d - தொகுதி தனிமங்கள் f - தொகுதி தனிமங்களை விட அதிக ஆக்சிஜனேற்ற நிலைகளை கொண்டிருப்பதேன்?
40.
எத்தில் புரோமைடு மற்றும் புரப்பைல் புரோமைடு ஆகிய இரு சேர்மங்கள் சிதைவடையும் வினைகளும் முதல் வகை வினைகளாகும். மேலும் இவ்விரு வினைகளும் ஒரே அதிர்வெண் காரணி A மதிப்பினைப் பெற்றுள்ளன. 390oC ல் எத்தில் புரோமைடு சிதைவுறும் வினையின் வினைவேக மாறிலி மதிப்பும் சமம். எத்தில் புரோமைடு சிதைவுறும் வினையின் கிளர்வு ஆற்றல் மதிப்பு 230 KJ mol-1 எனில் புரப்பைல் புரோமைடு சிதைவுறும் வினையின் கிளர்வு ஆற்றல் மதிப்பினைக் கணக்கிடுக.
41.
அணைவுச் சேர்மங்களின் வகைப்பாட்டினை விவரி?
42.
நுரை மிதப்பு முறையினை விளக்கு.
43.
பிராங்கல் குறைபாடு பற்றி குறிப்பு வரைக.
1.
(a)
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணமானது கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
2.
(a)
அசிட்டைல் சாலிசிலிக் அமிலம்
3.
(d)
ΔS குறைகிறது
4.
(a)
ஹெப்டனாயிக் அமிலம்
5.
- 2.69 V மற்றும் தன்னிச்சையற்றது
Mn2+ + 2e- \(\rightarrow\) Mn(Eored) = -1.18 V
\(\begin{aligned} 2\left[\mathrm{Mn}^{2+} \rightarrow \mathrm{Mn}^{3+}+\mathrm{e}^{-}\right]\left(\mathrm{E}^{\circ}\right)=-1.51 \mathrm{~V} \end{aligned}\)
\(\begin{aligned} 3 \mathrm{Mn}^{2+} \rightarrow \mathrm{Mn}^{3+}+2 \mathrm{Mn}^{3+} \mathrm{E}_{\text {cell }}^{\circ}=? \end{aligned}\)
\(\begin{aligned} \mathrm{E}_{\text {cell }}^{\circ}=\left(\mathrm{E}_{\text {ox }}^{\circ}\right)+\left(\mathrm{E}_{\text {red }}^{\circ}\right) \end{aligned}\)
= - 1.51 - 1.18 = -2.69
மற்றும் தன்னிச்சையானதால் Eo எதிர் குறியானதால் \(\Delta\)G நேர்க்குறி மற்றும் முன்னோக்கு மின்கலவினை தன்னிச்சையானது அல்ல.
6.
(d)
1,3 – டைநைட்ரோ பென்சீன்
7.
HPO42- ஆனது ஒரு புரோட்டானை ஏற்று H2PO4- ஐ உருவாக்கும்.
அது ஒரு புரோட்டானை இழக்கும் போது PO4-3 உருவாகும்.
8.
(c)
பீனைல் மெத்தனால் மற்றும் சோடியம் பென்சோயேட்
9.
(b)
முனைவுற்ற மூலக்கூறு
10.
(c)
Zr மற்றும் Hf இரண்டும் ஏறத்தாழ ஒரே அணு ஆரங்களைப் பெற்றுள்ளன.
11.
(c)
பசுமை கலந்த மஞ்சள்
12.
(c)
படிக புலக் கொள்கை
13.
\( \mathrm{a} \alpha \mathrm{P}_0 \\ (a+2 x) \alpha \mathrm{P} \\ \frac{\mathrm{a}}{(a+2 x)}=\frac{\mathrm{P}_0}{\mathrm{P}} \\ x=\frac{\left(\mathrm{P}-\mathrm{P}_0\right) \mathrm{a}}{2 \mathrm{P}_0} \\ (a-x)=a-\left(\frac{\left(\mathrm{P}-\mathrm{P}_0\right) \mathrm{a}}{2 \mathrm{P}_0}\right) \\ (a-x)=a\left\{\frac{3 \mathrm{P}_0-\mathrm{P}}{2 \mathrm{P}_0}\right\} \\ \mathrm{k}=\left(\frac{2.303}{\mathrm{t}}\right) \log \frac{\left[\mathrm{A}_0\right]}{[\mathrm{A}]} \\ \mathrm{k}=\left(\frac{2.303}{\mathrm{t}}\right) \log \left(\frac{\mathrm{a}}{\mathrm{a}-x}\right) \)
14.
(a)
நான்முகி
15.
(b)
CO2 உருவாதலுக்கான வரைபடமானது கட்டிலா ஆற்றல் அச்சிற்கு ஏறத்தாழ இணையாக உள்ளது.
16.

17.
1.அநேக நுண்ணுயிரிகள் (பாக்டீரியா, பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகள் சில வேதிப்பொருட்களை வெளிப்படுத்துகின்றன.
2. இவ்வேதிப்பொருட்கள் மற்ற நுண்ணுயிரிகள் வளர்ச்சி, வளர்சிதை மாற்றத்தை தடுக்கும் தன்மையுடைய வேதிகள் நுண்ணுயிரி எதிரிகள் எனப்படுகின்றன .
18.
ஹார்மோன்கள் என்பது ஒரு திசுவினால் சுரக்கப்பட்டு, இரத்த ஓட்டத்தில் கலக்கப்படும் கரிம சேர்மமாகும்.
(எ.கா. பெப்டைடு அல்லது ஸ்டீராய்டு) மேலும் இது மற்ற செல்களில் உடலியல் தூண்டல்களைத் தூண்டுகிறது.
(எ.கா. வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றம்). இது செல்களுக்கிடைப்பட்ட சமிக்ஞை மூலக்கூறாகும்.
எ.கா: டெஸ்டோஸ்டிரோன், தைராக்சின், ஈஸ்ட்ரோஜன், இன்சுலின், ஆக்ஸிடோசின் etc.
19.
I. அனிலீன் ஃபிரீடல் கிராப்ட் வினைக்கு உட்படுவதில்லை:
அனிலீன் ஃபிரீடல் கிராப்ட் வினைக்கு உட்படுவதில்லை; அனிலீன் ஃபிரீடல் கிராப்ட்ஸ் வினைகளுக்கு (அல்கைலேற்றம், அசிட்டைலேற்றம்) இயற்கையில் அனிலீன் காரத்தன்மையுடையது; மேலும் அது அதன் தனித்த இரட்டை எலக்ட்ரான்களை லூயி அமிலமான AICI3 க்கு வழங்கி ஒரு கூட்டுச் சேர்மத்தை உருவாக்குகிறது. இந்த கூட்டுச்சேர்மம் நடைபெறவிருக்கும் எலக்ட்ரான் கவர் பதிலீட்டு வினையை தடைசெய்கிறது.
II. அலிபாட்டிக் அமீன்களை விட அரோமேட்டிக் அமீன்களின் டையசோனியம் உப்புக்கள் அதிக நிலைப்புத் தன்மை கொண்டவை:
இதற்கு காரணம் உடனிசைவாகும்.
அமீன் டையுசோனியம் அபனியின் மீதான நேர்மின்கமை பென்சீன் வளையம் முழுமைக்கும் விரவும் தன்மையை பெற்றிருப்பதால் அரீன்டையசோனியம் உப்புகள் நிலைப்புத் தன்மையைப் பெறுகின்றன.
III. அனிலீன் மதிப்பு PKb மெத்திலமீனை விட அதிகம்:
PKb மெத்திலமீன் 3.35; PKb அனிலின் 9.376. அனிலீனில் N மீது உள்ள தனித்த எலக்ட்ரான் இரட்டை பென்சீன் வளையம் முழுவதும் உள்ளடங்காத தன்மையைப் பெற்றுள்ளது. எனவே N மீதான எலக்ட்ரானின் அடர்த்தி குறைகிறது. எனவே மெத்திலமீனைவிட அனிலீனின் காரத்தன்மை குறைவாகும். இதன் காரணமாக, அனிலீனின் PKb மதிப்பு மெத்திலமீனை விட அதிகமாகும்.
IV. காப்ரியல் ஃப்தாலிமைடுை தொகுப்பு வினை ஓரிணைய அமீன்களை தொகுப்பதற்கானது.
தாலிமைடிலிருந்து உருவாகும் எதிர் அயனியுடன் அரைல் ஹேலைடுகள் சுருக்கவர்பொருள் பதியீட்டு வினைக்கு (SN2) உட்படுவதில்லை. அலிபாட்டிக் அமீன்கள் SN2 வழிமுறைக்கு உட்படுகின்றன. இம்முறையில் 1° அமீனானது தூயவடிவில் பெறப்படுகிறது. மற்ற அமீன்கள் SN2 வழிமுறைக்கு உட்படுவதில்லை.
V. எத்திலமீன் நீரில் கரையும்; ஆனால் அனிலீன் கரையாது.
எத்திலமீன் நீரில் கரைவதற்கு காரணம், அது நீர்மூலக்கூறுகளுடன் H பிணைப்புகளை ஏற்படுத்துகிறது. நீரிய கரைசலில், பதிலிடப்பட்ட அம்மோனியம் அயனியானது ஆல்கைல் தொகுதியில் எலக்ட்ரான் வெளியிடும் (+1) வினைவால் மட்டுமல்ல, நீர் மூலக்கூறுகளின் கரைப்பானேற்ற விளைவாலும் நிலைப்புத்தன்மை அடைகிறது. அயனியின் உருவளவு பெரிதெனில், கரைப்பானேற்ற விளைவு குறைவாகும்
அனிலீன் நீருடன் அதிகளவில் H- பிணைப்பை ஏற்படுத்துவதில்லை, காரணம், பெரிய நீர்வெறுக்கும் C6H5 தொகுதி இருப்பதாகும்.
VII. அமைடுகளை விட அமீன்கள் அதிக காரத்தன்மை உடையது:
ஏனெனில் அமைடுகளில் உள்ள கார்பனைல் தொகுதியானது அதிக எலக்ட்ரான் கவர் தன்மையுடையது இது, எலக்ட்ரான்களை தன்பக்கம் இழுக்கும் அதிக திறன் கொண்டது. இது அமைடு நைட்ரஜன் (-CONH2) மீதுள்ள தனித்த இரட்டை எலக்ட்ரான்களை, ஒரு புரோட்டானை ஏற்பதற்கு குறைவாக அனுமதிக்கிறது.
VII. அரோமேட்டிக் எலக்ட்ரான் கவர் பதியீட்டு வினைகளில் அமினோ தொகுதி மற்றும் p - வழி நடத்தும் தொகுதியாக இருப்பினும் அனிலீனின் நைட்ரோரற்றம் செய்யும் வினைகளில் . நைட்ரோ அனியின் கணிசமான விளைபொருளாக கிடைக்கிறது.
வலிமை மிகு அமில ஊடகத்தில், அனிலீன் புரோட்டோனேற்றம் அடைந்து அனிலினியம் அயனியை உருவாக்குகிறது. இது வழிநடத்தும் தொகுதியாகும். எனவே அனிலின் உருவாகிறது.
20.
21.
22.
நீண்ட எல்லை வரையில் ஒழுங்காகக் கட்டமைக்கப்பட்டுள்ள உட்கூறுகளைக்கொண்ட திடப்பொருட்கள் என வரையறுக்கப்படுகிறது.
23.
குளோரின் வாயுவை உலர்ந்த கால்சியம் ஹைட்ராக்சைடு கரைசல் வழியாக செலுத்தும்போது சலவைத்தூள் உருவாகிறது.
Ca(OH)2 + Cl2 ⟶ CaOCl2 + H2O
24.
வினை வேகம் \(\\ =-\frac { d[{ N }_{ 2 }] }{ dt } =-\frac { 1 }{ 3 } \frac { d\left[ { H }_{ 2 } \right] }{ dt } =+\frac { 1 }{ 2 } \frac { d[{ NH }_{ 3 }] }{ dt } \)
25.
(i) Ni2+ அயனி டைமீத்தைல் கிளையாக்ஸைம் என்ற ஈனியுடன் இணைந்து பிஸ் (டைமீத்தைல் கிளையாக்ஸைம்) நிக்கல் (II) என்ற அணைவுச் சேர்மத்தை உருவாக்குகிறது.
(ii) இது ஒரு சிவப்பு நிற நடுநிலை அணைவுச் சேர்மம் ஆகும்.
(iii) இவ்வினை பண்பறி பகுப்பாய்வில் நிக்கலின் உறுதிச் சோதனையாகவும் பருமனறி பகுப்பாய்வில் நிக்கலை அளந்தறியவும் பயன்படுகிறது.
26.
Ti ன் எலக்ட்ரான் அமைப்பு = 3d24s2
Ti3+ ன் எலக்ட்ரான் அமைப்பு = 3d1
இவற்றில் தனித்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை = 1
சுழற்சியின் காந்ததிருப்புத்திறன் \({ \mu_s }_{ }=\sqrt { n (n +2) } \)
\(=\sqrt { 1 (1 +2) } \)
= \(\sqrt { 3 } \) = 1.732 BM
Mn ன் எலக்ட்ரான் அமைப்பு = 3d24s2
Mn2+ ன் எலக்ட்ரான் அமைப்பு = 3d5
இவற்றில் தனித்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை = 5
சுழற்சியின் காந்ததிருப்புத்திறன் \({ \mu_s }_{ }=\sqrt { n (n +2) } \)
\(=\sqrt { 5(5+2) } \) = \(\sqrt { 35 } \) = 5.92 BM
27.
அ) BrF5

புரோமின் அணுவில் உள்ள பிணைப்பு எலக்ட்ரான் 7 + ஃபுளுரின் அணுவின் எண்ணிக்கை (5) = 12
x = \(\frac{12}{2}\) = 6
இனக்கலப்பு: sp3d2
வடிவமைப்பு: சதுரபிரமீடு
ஆ) BrF3

புரோமின் அணுவில் உள்ள பிணைப்பு எலக்ட்ரான் 7 + ஃபுளுரின் அணுவின் எண்ணிக்கை (5) = 12
x = \(\frac{10}{2}\) = 5
இனக்கலப்பு: sp3d2
வடிவமைப்பு: முக்கோண இருபிரமீடு; (T-வடிவம்)
28.
i) CO ஒரு வலிமை மிகு ஒடுக்கும் காரணியாகும்.
ii) உலோக ஆக்ஸைடை உலோகமாக ஒடுக்குகிறது
CO + Fe2O3 ⟶ 2Fe + 3CO2
29.
மேற்கண்டுள்ள பிரித்தெடுத்தலில், ஒரு காரத்தன்மை உடைய இளக்கியான சுண்ணாம்புக்கல் (CaCO3) பயன்படுத்தப்படுகிறது. இத்தாதுவில் காணப்படும் சிலிக்கா கனிமக் கழிவானது அமிலத்தன்மையை பெற்றிருப்பதால், சுண்ணாம்புக்கல் அதனுடன் இணைந்து கால்சியம் சிலிக்கேட் எனும் கனிமக் கசடினைத் தருகிறது.
CaO(S)+ SiO2(S) ⟶ CaSiO3(S)
இளக்கி கனிமக்கழிவு கனிமக் கசடு
30.

31.
Ba(OH)2 வை வலிமை மிகு காரமாக கருதுக: நார்மாலிட்டி = மோலாரிட்டி \(\times\) அமிலத்துவம்
\(\begin{aligned}
& {\left[\mathrm{OH}^{-}\right]=1.5 \times 10^{-3} \times 2=3 \times 10^{-3}}
\end{aligned}\)
\(\begin{aligned}
\mathrm{pOH} & =-\log _{10}\left[\mathrm{OH}^{-}\right]
\end{aligned}\)
pOH = -log10 [OH-]
= - log(3 \(\times\) 10-3)
= -[log 3-3 log 10]
= 3 - log 3
pOH = 3 - 0.4771
= 2.5229
pH = 14 - poH
= 14 - 2.5229 = 11.4771
pH = 11.48
32.
(i) நீர்த்த கந்தக அமிலம் உலோகங்களுடன் வினைபுரிந்து உலோக சல்பேட் மற்றும் ஹைட்ரஜன் வாயுவைத் தருகிறது.
Zn + H2SO4 ⟶ ZnSO4 + H2↑
(ii) சூடான அடர் கந்தக அமிலம் உலோகங்களுடன் வினைபுரிந்து உலோக சல்பேட் மற்றும் கந்தக டை ஆக்சைடு வாயுவைத் தருகிறது
Cu + 2H2SO4 ⟶ CuSO4 + 2H2O + SO2 ↑
(iii) கந்தக அமிலம் உயரிய உலோகங்களான தங்கம், வெள்ளி, மற்றும் பிளாட்டினம் ஆகியவற்றுடன் வினைபுரிவதில்லை.
33.
i. வினைவேகம் \(=-\frac { 1 }{ 3 } \frac { d[A] }{ dt } =-\frac { 1 }{ 5 } \frac { d[{ B }_{ 2 }] }{ dt } =\frac { 1 }{ 4 } \frac { d[CD] }{ dt } \)
ii. வினைவேகம் \(=\frac { -d[{ X }_{ 2 }] }{ dt } =\frac { -d[{ Y }_{ 2 }] }{ dt } =\frac { 1 }{ 2 } \frac { d[XY] }{ dt } \)
34.
1. பல்வேறு உலோக ஆக்சைடுகள் உருவாகும் வினைகளுக்கு வெப்பநிலையினைப் பொறுத்து அவ்வினைகளின் திட்ட கட்டிலா ஆற்றல் மதிப்பில் ஏற்படும் மாறுபாடுகளை வரைபடமாகக் குறிப்பிடுவது எலிங்கம் வரைபடம் எனப்படுகிறது.
2. ஒரு வினையில் ஏற்படும் கிப்ஸ் கட்டிலா ஆற்றல் மாற்றம் ∆G என்பது
∆G = ∆H - T∆S
∆H = என்தல்பி மாற்றம் T = கெல்வின் அலகில் வெப்பநிலை ∆S = என்ட்ரோபி மாற்றம்
3. ஒரு சமநிலைச் செயல்முறைக்கு சமநிலைமாறியின் மதிப்பினைக் கொண்டு ∆G0 மதிப்பானது பின்வருமாறு கணக்கிடப்படுகிறது.
∆G0 = RT ln Kp
4. பல்வேறு வெப்பநிலைகளில் உலோக ஆக்சைடுகளின் ஒடுக்க வினைகளை சமநிலை செயல்முறையாகக் கருதி அவ்வினைகளின் ∆G0 மதிப்புகளை மேற்கண்ட சமன்பாட்டினை பயன்படுத்தி ஹெரால்ட் எலிங்கம் கண்டறிந்தார்.
5. X அச்சில் வெப்பநிலையையும், Y அச்சில் உலோக ஆக்சைடுகள் உருவாகும் வினைக்கான ∆G0 மதிப்புகளையும் எடுத்துக்கொண்டு எலிங்கம் ஒரு வரைபடத்தை உருவாக்கினார்.
6. உருவான வரைபடம் ∆S மதிப்பை சாய்வாகவும், ∆H மதிப்பை வெட்டுத்துண்டாகவும் உடைய நேர் கோடாகும்.
35.
(i) சில உலோக அயனிகளை அணைவுச் சேர்மமாக்குவதன் மூலம் துல்லியமாக அளந்தறியலாம்.
(ii) (எ.கா) நிக்கல் குளோரைடில் உள்ள Ni2+ அயனியானது, ஆல்கஹாலில் கரைக்கப்பட்ட டைமீத்தைல் கிளையாக்ஸைம் உடன் வினைப்படுத்தப்பட்டு [Ni(DMG)2] என்ற கரையாத அணைவுச் சேர்மமாக மாற்றப்பட்டு துல்லியமாக அளந்தறியப்படுகிறது.
(iii) EDTA என்பது ஒரு கொடுக்கினைப்பு ஈனி. இது பருமனறி பகுப்பாய்வின் மூலம் அநேக உலோக அயனிகளை அளந்தறிய பயன்படுகிறது. (எ.கா): Zn2+, Pb2+, Ca2+, Co2+, Ni2+, Cu2+
(iv) ஒன்றுக்கு மேற்பட்ட உலோக அயனிகள் உள்ள கரைசலில் ஒரு உலோகத்தை அளந்தறியும் போது, மற்றொரு உலோக அயனி குறுக்கிடாமல் தடுக்கும் மறைப்புக் காரணியாக EDTA பயன்படுகிறது.
36.
கொடுக்கப்பட்டது
k = 1.3 Sm-1 (0.1 M KCl கரைசலுக்கு)
R = 190 \(\Omega\)
\(\left ( \frac{1}{A} \right )\)=k.R = (1.3 Sm-1) (190 \(\Omega\))
= 247 m-1
\(k_{(NaCl)}=\frac{1}{R_{(NaCl)}}\left ( \frac{l}{A} \right )\)
\(=\frac{1}{6.3 K\Omega}(247 m^{-1}) \) 6.3K\(\Omega\) = 6.3 \(\times\) 103 \(\Omega\)
= 39.2 \(\times\) 10-3 Sm-1
\(\Lambda_{m}=\frac{\kappa \times 10^{-3}mol^{-1}m^{3}}{M}\)
\(=\frac{39.2\times 10^{-3}(Sm^{-1})\times 10^{-3}(mol^{-1})m^{3}}{0.003}\)
\(\Lambda_{m}=13.04\times 10^{-3}Sm^{2}mol^{-1}\)
37.
வினைவேக மாற்றிகள், குறைந்த கிளர்வு ஆற்றலைக் கொண்ட புதிய பாதையை உருவாக்குகின்றன.
ஒரு படித்தான வினைவேக மாற்ற வினைகளில் ஒரு வினைவேகமாற்றியானது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வினைபடு பொருட்களுடன் இணைந்து ஒரு இடைநிலை சேர்மத்தை உருவாக்குகிறது.
இந்த இடைநிலைச் சேர்மமானது, மற்றொரு வினைபடுபொருளுடன் வினைப்பட்டோ அல்லது தாமாக சிதைந்தோ வினைபொருட்களை உருவாக்குகின்றன.
மேலும் வினைவேகமாற்றியானது மீள் உருவாக்கம் பெறுகிறது.
\(\begin{aligned} \mathrm{A}+\mathrm{B} \xrightarrow{\mathrm{C}} \mathrm{AB} \end{aligned}\) ....(1)
A + C \(\rightarrow\) AC (இடைநிலை சேர்மம்) ....(2)
C என்பது வினைவேக மாற்றி
AC + B \(\rightarrow\) AB + C ....(3)
(2) மற்றும் (3) ஆம் வினைகளுக்கான கிளர்வுறு ஆற்றல்கள், வினை (1) ஐவிட குறைவாக உள்ளன. எனவே, இடைநிலைச் சேர்மம் உருவாதல் மற்றும் சிதைதல் மூலம் வினையின் வேகம் அதிகரிக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டு 1:
ஃபிரீடல் கிராஃப்ட் வினையின் வினைவழிமுறை.
நீரற்ற AlCl3
\(\mathrm{C}_6 \mathrm{H}_6+\mathrm{CH}_3 \mathrm{Cl} \xrightarrow{} \mathrm{C}_6 \mathrm{H}_5 \mathrm{CH}_3+\mathrm{HCl}\)
வினைவேக மாற்றியின் செயல்பாடு
\(\mathrm{CH}_3 \mathrm{Cl}+\mathrm{AlCl}_3 \rightarrow\left[\mathrm{CH}_3\right]^{+}\left[\mathrm{AlCl}_4\right]^{-}\)
(இடைநிலை)
இது ஒரு இடைநிலைச் சேர்மமாகும்.
\(\mathrm{C}_6 \mathrm{H}_6+\left[\mathrm{CH}_3^{+}\right]\left[\mathrm{AlCl}_4\right]^{-} \rightarrow \mathrm{C}_6 \mathrm{H}_5 \mathrm{CH}_3+\mathrm{AlCl}_3+\mathrm{HCl}\)
எடுத்துக்காட்டு 2:
\(2 \mathrm{KClO}_3 \xrightarrow{\mathrm{MnO}_2} 2 \mathrm{KCl}+3 \mathrm{O}_2\)
MnO2 முன்னிலையில் KCIO3 யின் வெப்பச்சிதைவு வினை பின்வருமாறு நிகழ்கிறது.
2KClO3 → 2KCl + 3O2, வினையில் நிகழும் படிகளை பின்வருமாறு எழுதலாம்.
\(2 \mathrm{KClO}_3+6 \mathrm{MnO}_2 \rightarrow 6 \mathrm{MnO}_3+2 \mathrm{KCl}\)
இது ஒரு இடைநிலைச் சேர்மமாகும்.
\(6 \mathrm{MnO}_3 \rightarrow 6 \mathrm{MnO}_2+3 \mathrm{O}_2\)
எடுத்துக்காட்டு 3:
\(2 \mathrm{H}_2+\mathrm{O}_2 \xrightarrow{\mathrm{Cu}} 2 \mathrm{H}_2 \mathrm{O}\)
Cu முன்னிலையில் H2, மற்றும் O2, ஆகியன வினைபுரிவதால் நீர் உருவாகும் வினையை பின்வருமாறு எழுதலாம்.
\(2 \mathrm{Cu}+\frac{1}{2} \mathrm{O}_2 \rightarrow \mathrm{Cu}_2 \mathrm{O}\)
இது ஒரு இடைநிலைச் சேர்மமாகும்.
\(\mathrm{Cu}_2 \mathrm{O}+\mathrm{H}_2 \rightarrow \mathrm{H}_2 \mathrm{O}+2 \mathrm{Cu}\)
சிறப்புகள்:
வினைவேக மாற்றியின் தேர்ந்து செயலாற்றும் தன்மை
வினைவேகமாற்றியின் செறிவு அதிகரிப்பை பொறுத்து வினையின் வேகம் அதிகரித்தல். ஆகியவற்றை இக்கொள்கை விளக்குகிறது.
வரம்புகள்:
வினைவேகமாற்ற நச்சு மற்றும் உயர்த்திகளின் செயல்பாடுகளை இடைநிலைச் சேர்மக் கொள்கையால் விளக்க இயலவில்லை.
பலபடித்தான வினைவேகமாற்ற வினைகளின் வினைவழிமுறையை இக்கொள்கையால் விளக்க இயலவில்லை.
38.

மின்னாற்பகுப்புக் கலனில் இரண்டு இரும்பு மின்முனைகள் உருகிய சோடியம் குளோரைடினுள் மூழ்க வைக்கப்பட்டுள்ளன. மேலும் அவை DC மின்மூலத்துடன் சாவியின் உதவியால் இணைக்கப்பட்டுள்ளன. மின்மூலத்தின் எதிர் முனையுடன் இணைக்கப்பட்டுள்ள மின்முனையானது எதிர்முனை என்றழைக்கப்படுகிறது.
மின்மூலத்தின் நேர் முனையுடன் இணைக்கப்பட்டுள்ள மின்முனையானது நேர்மின்முனை என்றழைக்கப்படுகிறது. சாவி கொண்டு மூடிய உடன் வெளிப்புற DC மின்மூலமானது, எதிர்மின்முனை வழியே எலக்ட்ரான்களை பாய்ச்சுகிறது. அதே நேரத்தில், நேர்மின்முனை வழியே எலக்ட்ரான்களை இழுக்கிறது.
கலவினைகள்
Na+ அயனிகள் எதிர்மின்முனையை நோக்கி கவரப்படுகின்றன. அங்கு அவை எலக்ட்ரான்களுடன் இணைந்து, திரவ சோடியமாக ஒடுக்கமடைகின்றன.
எதிர்மின்முனை (ஒடுக்கம் ):
Na+(l) + e- \(\rightarrow\) Na(l) E0 = -2.71 V
இதேபோல, CI- அயனிகள் நேர்மின்முனையை நோக்கி கவரப்படுகின்றன, அங்கு அவை அவற்றின் எலக்ட்ரான்களை இழந்து ஆக்ஸிஜனேற்றமடைந்து குளோரின் வாயுவாக மாறுகின்றன.
நேர்மின்முனை (ஆக்ஸிஜனேற்றம்) :
2Cl-(l) \(\rightarrow\) Cl2(g) + 2e-
E0 = - 1.36 V
ஒட்டுமொத்த வினை,
2Na+ (l) + 2Cl-(l) \(\rightarrow\) 2Na(l) + Cl2(g),
E0 = -4.07 V
மேற்காண் வினை தன்னிச்சையற்றது என்பதை எதிர்குறி E° மதிப்பு காட்டுகிறது. எனவே, உருகிய சோடியம் NaCl ன் மின்னாற்பகுத்தலை நிகழ்த்த 4.07 V ஐ விட அதிகமான மின்னழுத்தத்தை நாம் செலுத்த வேண்டும்.
மின்னாற்பகுப்புக் கலனில், கால்வானிக் மின்கலத்தில் நிகழ்வதைப்போலவே நேர்மின்முனை ஆக்ஸிஜனேற்றமும், எதிர்மின்முனையில் ஒடுக்கமும் நிகழ்கின்றன. ஆனால் மின்முனைகளின் குறி எதிரெதிரானது. அதாவது மின்னாற்பகுப்புக் கலனில் எதிர்மின்முனையின் குறி -ve மற்றும் நேர்மின்முனையின் குறி +ve.
39.
(i) d - தொகுதி தனிமங்கள் அதிக எண்ணிக்கையான எலக்ட்ரான்களை கொண்டுள்ளன
(ii) குறைந்த செயலுறு அணுக்கரு சுமையினால் அவை அனைத்தும் பிணைப்பில் ஈடுபடுவதால், அதிக எண்ணிக்கையிலான ஆக்சிஜனேற்ற நிலை காணப்படுகிறது
(iii) f - தொகுதி தனிமங்களின் f - ஆர்பிட்டால்களின் சீர்மையற்ற திரை மறைப்பு, அதிக செயலுறு அணுக்கரு சுமையினால் குறைவான எலக்ட்ரான்களே பிணைப்பில் ஈடுபடுகின்றன.
(iv) எனவே குறைவான எண்ணிக்கையிலான ஆக்சிஜனேற்ற நிலை காணப்படுகிறது
40.
log K = log A-\(\frac{Ea}{2.303\ RT}\)
390oC ல் அதாவது 593 K ல் எத்தில் புரோமைடு சிதைவுறும் வினைக்கு
\(log\ K=log A-\frac { 230\times { 10 }^{ 3 } }{ 2.303\times 8.314\times 663 } ----(1)\)
320oC ல் அதாவது 593 K ல் புரப்பைல் புரோமைடு சிதைவுறும் வினைக்கு
\(log\ K=log\ A-\frac { 230\times { 10 }^{ 3 } }{ 2.303\times 8.314\times 593 }----(2)\)
இரு வினைகளின் k மதிப்புகளும் சமம். எனவே (1)=(2)
\(log\ A=-\frac { 230\times { 10 }^{ 3 } }{ 2.303\times 8.314\times 663 } =logA-\frac { Ea }{ 2.303\times 8.314\times 593 } \)
\({ E }_{ a }=\frac { 230\times { 10 }^{ 3 }\times 593 }{ 663 } \)
\(\therefore { E }_{ a }=205716J\quad { mol }^{ -1 }\)
\(\therefore { E }_{ a }=205.716KJ\quad { mol }^{ -1 }\)
41.
அணைவுச் சேர்மங்கள் கீழ்கண்டவாறு இரண்டாக வகைப்படுத்தப்படுகின்றன.
1. அணைவின் மீதுள்ள மின் சுமை
ஒரு அணைவுச் சேர்மத்தில் உள்ள அணைவு அயனியானது
(i) நிகர நேர்மின்சுமையைப் பெற்றிருந்தால், அந்த அணைவுச் சேர்மம் நேரயணி அணைவு எனப்படும்.
(எ.கா) [Ag (NH3)2]+
(ii) நிகர எதிர் மின்சுமையைப் பெற்றிருந்தால், அந்த அணைவுச் சேர்மம் எதிரயணி அணைவு எனப்படும்.
(எ.கா) [Ag (CN)2]-
(iii) எவ்வித நிகர மின்சுமையும் பெறவில்லையெனில், அந்த அணைவுச் சேர்மம் நடுநிலை அணைவு எனப்படும்.
(எ.கா) [Ni(CO)4]
2. ஈனிகளின் தன்மை
(i) மைய உலோக அணு / அயனியோடு ஒரே ஒரு வகை ஈனிகள் மட்டும் ஈதல் சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்டிருந்தால் அந்த அணைவுச் சேர்மம் ஓரின ஈனி அணைவு எனப்படும்.
(எ.கா) [Ag (NH3)2]+
(ii) மைய உலோக அணு / அயனியோடு ஒன்றிற்கு மேற்பட்ட வகை ஈனிகள் பிணைக்கப்பட்டிருந்தால் அந்த அணைவுச் சேர்மம் பல் இன ஈனி அணைவு எனப்படும்.
(எ.கா) [Co (NH3)5Cl]2+
42.
1. இம்முறை சல்பைடு தாதுக்களான கலீனா (PbS) ஜிங்க் பிளண்ட் (ZnS) போன்றவற்றை அடர்ப்பிக்க பயன்படுகிறது.
2. உலோகத் தாதுத் துகள்கள் எண்ணெயில் அதிக அளவில் நனைவதால் அவைகளைக் கனிமக் கழிவுகளிலிருந்து பிரித்தெடுக்க இயலும்.
3. நன்கு தூளாக்கப்பட்ட தாது பைன் எண்ணெய், யூக்கலிப்டஸ் எண்ணெய் போன்ற நுரை உருவாக்கும் காரணிகளுடன் கலக்கப்படுகின்றன.
4. சேகரிப்பானாக செயல்பட சிறிதளவு சோடியம் ஈத்தைல் சாந்தேட் சேர்க்கப்படுகிறது.
5. கலவையின் வழியே காற்று செலுத்தப்பட்டு நுரை உருவாக்கப்படுகிறது.
6. சேகரிப்பான் மூலக்கூறுகள் தாதுத் துகள்களுடன் இணைந்து அவற்றை நீர் விலக்கும் தன்மையுடையதாக மாற்றுகிறது.
7. இதன் விளைவாக தாதுத் துகள்கள் எண்ணெயில் நன்கு நனைந்து, நுரையுடன் சேர்ந்து புறப்பரப்பை அடைகின்றன.
8. நுரையானது வழித்தெடுக்கப்பட்டு, உலர்த்தப்பட்டு செறிவான தாது பெறப்படுகிறது.
9. நீரில் நனையும் கனிம கழிவுத்துகள்கள் அடிப்பகுதியில் தங்கி விடுகின்றன.
10. பிரித்தெடுக்க விரும்பும் ஒரு உலோகத்தின் சல்பைடு தாதுவில் மற்ற பிற உலோக சல்பைடுகள் மாசுகளாக காணப்பட்டால் சோடியம் சயனைடு, சோடியம் கார்பனேட் போன்றவை குறைக்கும் காரணிகளாக பயன்படுகின்றன.
11. குறைக்கும் காரணிகள் மற்ற பிற உலோக சல்பைடுகள் எண்ணெயில் நனைந்து நுரைத்து வருவதைத் தடுக்கின்றன.
12. (எ.கா) கலீனாவில் (PbS) காணப்படும் மாசுப்பொருள் ZnS ஆனது, குறைக்கும் காரணி சோடியம் சயனைடுடன் வினைபுரிந்து Na2[Zn(CN)4] என்ற அணைவுச் சேர்மமாக ஜிங்சல்பைடின் புறப்பரப்பில் உருவாகிறது. எனவே ZnS ன் நுரைக்கும் தன்மை குறைக்கப்படுகிறது.
43.
(i) படிக அணிக்கோவைத் தளத்தில் இடம் பெற வேண்டிய ஒரு அயனி அவ்விடத்தில் அமையாமல் மற்றொரு இடைச்செருகல் நிலையில் அமைவதால் ∴பிராங்கல் குறைபாடு தோன்றுகிறது.
(ii) உருவ அளவில் அதிக வேறுபாடு காணப்படும் நேர் மற்றும் எதிர் அயனிகளைக் கொண்டுள்ள அயனிப் படிகங்களில் இக்குறைபாடு காணப்படுகிறது.
(iii) ஷாட்கி குறைபாட்டினைப் போல் அல்லாமல் இக்குறைபாடு படிக அடர்த்தியில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.
எடுத்துக்காட்டு
சில்வர் புரோமைடு இந்நேர்வில் சிறிய உருவளவுள்ள Ag+ அயனியானது.
அணிக்கோவைப் புள்ளிகளில் இடம் பெறாமல் இடைச்செருகல் நிலைகளில் காணப்படுகிறது
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards