12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 06/12/2019
மின் வேதியியல்
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
லெட் சேமிப்புக்கலனை மின்னேற்றம்(charging) செய்யும் போது _____________
எதிர்மின்முனையில் PbSO4 ஆனது Pb ஆக ஒடுக்கமடைகிறது
நேர்மின்முனையில் PbSO4 ஆனது PbO2 ஆக ஆக்ஸிஜனேற்றமடைகிறது
நேர்மின்முனையில் PbSO4 ஆனது Pb ஆக ஒடுக்கமடைகிறது
எதிர்மின்முனையில் PbSO4 ஆனது Pb ஆக ஆக்ஸிஜனேற்றமடைகிறது
2.
1A மின்னூட்டத்தை பயன்படுத்தி மின்னாற்பகுக்கும் போது 60 விநாடிகளில் , எதிர்மின்முனையில் விடுவிக்கப்படும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை (எலக்ட்ரானின் மின்சுமை = \(1.6\times10\) -19C)
\(6.22\times10^{23}\)
\(6.022\times10^{20}\)
\(3.75\times10^{20}\)
\(7.48\times10^{23}\)
3.
பின்வரும் வினை நிகழ எவ்வளவு ஃபாரடே மின்னூட்டம் தேவைப்படும்? \(MnO_{4}^{-} \rightarrow Mn^{2+}\)
5F
3F
1F
7F
4.
298 K வெப்பநிலையில் 0.5 mol dm-3 செறிவுடைய AgNO3 கரைசலின் மின்பகுளிக் கடத்துத்திறன் மதிப்பு \(5.76\times10^{-3} S cm^{-1}\) எனில், அதன் மோலார் கடத்துத்திறன் மதிப்பு ___________
2.88 S cm2 mol-1
11.52 S cm2 mol-1
0.086 S cm2 mol-1
28.8 S cm2 mol-1
5.
பின்வரும் அரைக்கல வினைகளை கருதுக
Mn2+ + 2e- \(\rightarrow\) Mn Eo = -1.18V Mn2+ \(\rightarrow\) Mn3+ + e- Eo = -1.51V
3Mn2+ \(\rightarrow\) Mn + 2Mn3+
என்ற வினையின் Eo மதிப்பு மற்றும் முன்னோக்கு வினையின் சாத்தியக்கூறு முறையே
2.69V மற்றும் தன்னிச்சையானது
- 2.69 V மற்றும் தன்னிச்சையற்றது
0.33V மற்றும் தன்னிச்சையானது
4.18 V மற்றும் தன்னிச்சையற்றது
6.
கால்வானிக் மின்கலத்தில் நிகழும் நிகர வினையானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
2 Cr (s) + 3Cu2+ (aq) → 2Cr3+ (aq) + 3Cu (s)
மின்கல குறியீட்டை பயன்படுத்தி மின்கலத்தை விளக்குக, மேலும் அரை வினைகளை எழுதுக.
7.
25oC வெப்பநிலையிலுள்ள 0.1 M காப்பர் சல்பேட் கரைசலில் காப்பர் மின்முனை மூழ்கவைக்கப்பட்டுள்ளது. காப்பரின் மின்முனை மின்னழுத்தத்தை கணக்கிடுக. [குறிப்பு : \(E^{0}_{Cu^{2+}|Cu}\)=0.34 ].
8.
முறையே நிக்கல் நைட்ரேட் மற்றும் குரோமியம் நைட்ரேட் கரைசல்களை கொண்டுள்ள இரண்டு தனித்தனி மின்னாற்பகுப்புக் கலன்களில் ஒரே அளவுள்ள மின்னோட்டம் செலுத்தப்படுகிறது. முதல் மின்கலத்தில் 2.935 கிராம் Ni வீழ்படிவாகிறது எனில் மற்றொரு மின்கலத்தில் வீழ்படிவாகும் குரோமியத்தின் அளவு என்ன?
கொடுக்கப்பட்டுள்ளது : நிக்கல் மற்றும் குரோமியத்தின் மோலார் நிறைகள் முறையே 58.74 மற்றும் 52 கிராம் மோல்-1.
9.
எரிபொருள் மின்கலத்தில் H2 மற்றும் O2 வினை புரிந்து மின்னோட்டத்தை உருவாக்குகின்றன. இந்த செயல்முறையில், H2 வாயு நேர்மின்முனையில் ஆக்ஸிஜனேற்றமடைகிறது, எதிர்மின்முனையில் O2 ஒடுக்கமடைகிறது. 25oC வெப்பநிலை மற்றும் 1 atm அழுத்தத்தில் 44.8 லிட்டர் H2 வாயு 10 நிமிடங்களுக்கு செலுத்தப்படுகிறது. உருவாக்கப்பட்ட சராசரி மின்னோட்ட அளவு யாது? மொத்த மின்னோட்டத்தையும் Cu2+ லிருந்து Cu ஐ மின்வீழ்படிவாக்கலுக்கு பயன்படுத்தினால், எவ்வளவு கிராம் காப்பர் வீழ்படிவாகும்?
10.
Fe3+ அயனிகள் திட்ட நிலைமைகளில் புரோமைடை புரோமினாக ஆக்ஸிஜனேற்றம் அடையச் செய்யுமா? கொடுக்கப்பட்டது: \(E^{0}_{Fe^{3+}|Fe^{2+}}=0.771\) \(E^{0}_{Br_{2}|Br^{-}}=1.09 V\).
11.
கால்வானிக் மின்கலத்தில் நேர்மின்முனையானது எதிர்குறி கொண்டதாகவும் எதிர்மின்முனையானது நேர்குறி கொண்டதாகவும் கருதப்படுகிறது ஏன்?
12.
மின்னாற்பகுத்தல் பற்றிய ஃபாரடே விதிகளைக் கூறு.
13.
H2 - O2 எரிபொருள் மின்கலத்தின் செயல்பாடுகளை விளக்குக.
14.
15.
டேனியல் மின்கல கட்டமைப்பை விளக்குக. கலவினையை எழுதுக.
16.
25°C. வெப்பநிலையில் 0.025M செறிவுடைய நீர்த்த கால்சியம் குளோரைடு கரைசலின் மோலார் கடத்துத்திறனை கணக்கிடுக. கால்சியம் குளோரைடு கரைசலின் நியம கடத்துத்திறன் மதிப்பு 12.04 × 10-2 Sm-1.
17.
அளவிலா நீர்த்தலில் Al3+ மற்றும் SO42- ஆகிய அயனிகளின் அயனிக் கடத்துத்திறன் மதிப்புகள் முறையே 189 மற்றும் 160 மோ செ.மீ2 சமானம்-1. அளவிலா நீர்த்தலில் Al2 (SO4)3 மின்பகுளியின் சமான மற்றும் மோலார் கடத்துத்திறனை கணக்கிடுக.
18.
நீண்ட காலத்திற்கு காப்பர் சல்பேட்டை இரும்புக் கலனில் சேமித்து வைக்க இயலுமா? கொடுக்கப்பட்டது: (\(E^{0}_{Cu^{2+}|Cu}=0.34 V\) மற்றும் \(E^{0}_{Fe^{2+}|Fe}= -0.44V\))
19.
0.1M HCl மற்றும் 0.1 M KCl இந்த இரண்டு கரைசல்களில் எது அதிக \(\Lambda_{\mathrm{m}}^{\mathrm{o}}\) கடத்துத்திறனை கொண்டது? ஏன்?
1.
நேர்முனையில் PbSO4 ஆனது Pb ஆக ஒடுக்கமடைகிறது மின்னேற்றம் அடையும் போது நேர் மின்வாய்
\(\mathrm{PbSO}_4(\mathrm{~s})+2 \mathrm{e}^{-} \rightarrow \mathrm{Pb}(\mathrm{s})+\mathrm{SO}_4^{-2} \text { (aq) }\)
எதிர் மின்வாய்
\(\left.\mathrm{PbSO}_4(\mathrm{~s})+2 \mathrm{H}_2 \mathrm{O}(\mathrm{l}) \rightarrow \mathrm{PbO}_2(\mathrm{~s})+\mathrm{SO}_4^{2-}(\mathrm{aq})+2 \mathrm{e}^{-}\right)\)
2.
3.75 \(\times\) 1020
Q = It
= 1A \(\times\) 60s
96500 C மின்சுமை = 6.022 \(\times\) 1023 எலக்ட்ரான்
60 C மின்சுமை \(=\frac{6.022 \times 10^{23}}{96500} \times 960\)
= 3.744 \(\times\) 1020 எலக்ட்ரான்
3.
7MnO4 + 5e- \(\rightarrow\) Mn2 + 4H2O
தேவைப்படும் 5 மோல் எலக்ட்ரான்கள் அதாவது 5F மின்சுமை
4.
11.52 Sc m2 mol-1
\(\begin{aligned}
\wedge=\frac{\kappa}{\mathrm{M}} \times 10^{-3} \mathrm{~mol}^{-1} \mathrm{dm}^3
\end{aligned}\)
\(\begin{aligned}
=\frac{5.76 \times 10^{-3} \mathrm{Scm}^{-1} \times 10^{-3}}{0.5} \mathrm{~mol}^{-1} \mathrm{dm}^3
\end{aligned}\)
\(\begin{aligned}
=\frac{5.76 \times 10^{-3} \times 10^{-3} \times 10^6}{0.5} \mathrm{Scm}^{-1} \mathrm{~mol}^{-1} \mathrm{~cm}^3\end{aligned}\)
\(\begin{aligned}
=11.52 \mathrm{Scm}^2 \mathrm{~mol}^{-1}
\end{aligned}\)
5.
- 2.69 V மற்றும் தன்னிச்சையற்றது
Mn2+ + 2e- \(\rightarrow\) Mn(Eored) = -1.18 V
\(\begin{aligned} 2\left[\mathrm{Mn}^{2+} \rightarrow \mathrm{Mn}^{3+}+\mathrm{e}^{-}\right]\left(\mathrm{E}^{\circ}\right)=-1.51 \mathrm{~V} \end{aligned}\)
\(\begin{aligned} 3 \mathrm{Mn}^{2+} \rightarrow \mathrm{Mn}^{3+}+2 \mathrm{Mn}^{3+} \mathrm{E}_{\text {cell }}^{\circ}=? \end{aligned}\)
\(\begin{aligned} \mathrm{E}_{\text {cell }}^{\circ}=\left(\mathrm{E}_{\text {ox }}^{\circ}\right)+\left(\mathrm{E}_{\text {red }}^{\circ}\right) \end{aligned}\)
= - 1.51 - 1.18 = -2.69
மற்றும் தன்னிச்சையானதால் Eo எதிர் குறியானதால் \(\Delta\)G நேர்க்குறி மற்றும் முன்னோக்கு மின்கலவினை தன்னிச்சையானது அல்ல.
6.
நேர்மின்வாய் ஆக்ஸிஜனேற்றம் : 2Cr (s) → 2Cr3+ (aq) + 6e- .... (1)
எதிர்மின்வாய் ஒடுக்கம்: 3Cu2+ (aq) + 6e- → 3Cu (s) ....(2)
மின்கலக் குறியீடு
Cr (s)|Cr3+ (aq) || Cu2+ (aq)|Cu (s)
7.
கொடுக்கப்பட்டது:
[Cu2+] = 0.1M; \(E^{0}_{Cu^{2+}|Cu}\)= 0.34 V
மின்கலவினை: \(Cu^{2+}_{(aq)}+2e^{-}\rightarrow Cu_{(s)}\)
\(E_{cell}=E^{0}-\frac{0.0591}{n}log\frac{[Cu]}{[Cu^{2+}]}\)
\(=0.34-\frac{0.0591}{2}log\frac{1}{0.1}\)
Ecell= 0.34 - 0.0296
= +0.31 V
8.
பாரடே இரண்டாம் விதிப்படி:
\(\begin{aligned}
\frac{\mathrm{m}_{\mathrm{Ni}}}{\mathrm{E}_{\mathrm{Ni}}}=\frac{\mathrm{m}_{\mathrm{cr}}}{\mathrm{E}_{\mathrm{cr}}}
\end{aligned}\)
\(\begin{aligned}
N i^{2+}(a q)+2 e^{-} \rightarrow N i(s)
\end{aligned}\)
\(\begin{aligned}
\mathrm{Cr}^{3+}(a q)+3 e^{-} \rightarrow \mathrm{Cr}(s)
\end{aligned}\)
| Ni | Cr |
| mNi = 2.935 g | mcr = x |
| \(\mathrm{E}_{\mathrm{Ni}}=\frac{58.74}{2}\) | \(\mathrm{E}_{\mathrm{cr}}=\frac{52}{3}\) |
| = 29.37 g eq-1 | = 17.33 g eq-1 |
\(\begin{aligned}
\frac{2.935}{29.37}=\frac{x}{17.33}
\end{aligned}\)
\(\begin{aligned}
x=\frac{2.935 \times 17.33}{29.37}
\end{aligned}\)
= 1.732 g
9.
நேர்மின்வாயில் ஆக்சிஜனேற்றம்:
\(2H_{2}(g)+4OH^{-}(aq)\rightarrow 4H_{2}O(l)+4e^{-}\)
1atm அழுத்தத்தில் ஒரு மோல் ஹைட்ரஜன் வாயு பெற்றுள்ள கன அளவு 22.4 லிட்டர்
\(\therefore\) உருவாகும் ஹைட்ரஜன் வாயுவின் மோல்களின் எண்ணிக்கை =
= 2 மோல்கள்
எனவே 2 மோல் ஹைட்ரஜன் வாயு 4 மோல் . அதாவது 4F மின்சுமையை உருவாக்கும்.
Q = It என நாம் அறிவோம்
\(I=\frac{Q}{t}\)
t = 10 min = 10 \(\times\) 60 sec = 600s

= \(\frac{4\times96500 C}{10\times 60 s}\)
I = 643.33 A
காப்பரில் மின்படிதல்
\(Cu^{2+}(aq)+2e^{-}\rightarrow Cu(s)\)
படிதலுக்கு தேவைப்படும் மின்சுமை 2F ஆகும்.
ஒரு மோல் காப்பர் ie., 63.5 g
மொத்த மின்னோட்டமும் எரிமின்கலமியக்க பயன்படுத்தப்பட்டால் 4F வும் மின்னாற்பகுத்தலுக்கு பயன்படுத்தப்பட்டால் \(2\times 63.5\) அதாவது 127.0 g காப்பர் எதிர்மின்வாயில் படியும்.
10.
அரைகல வினைகளாவன:
\(\begin{aligned} 2 \mathrm{Br}^{-} \rightarrow \mathrm{Br}_2+2 e^{-} ; E_{\text {oxd }}^0=-1.09 \mathrm{~V} \end{aligned}\) .....(1)
\(\begin{aligned} 2 \mathrm{Fe}^{3+}+2 e^{-} \rightarrow 2 \mathrm{Fe}^{2+} ; E_{\text {red }}^0=+0.771 \mathrm{~V} \end{aligned}\) .....(2)
(1) மற்றும் (2) ஐ கூட்ட
\(\begin{gathered}
2 \mathrm{Fe}^{3+}+2 \mathrm{Br}^{-} \rightarrow 2 \mathrm{Fe}^{2+}+Br_2; \space E^0_\frac{Fe^{3+}}{Fe^{2+}}=?
\end{gathered}\) ....(3)
\(\begin{gathered} \mathrm{E}_{\text {cell }}^0=\mathrm{E}_{\text {oxd }}^0+E^0_\frac{Fe^{3+}}{Fe^{2+}}
\end{gathered}\)
= (-1.09 + 0.771) V
= - 0.319 V
\(\therefore\) E0cell ஆனது எதிர்குறியீடு உடையது; எனவே \(\Delta\)G + ve, எனவே மின்கல வினையானது தன்னிச்சையானது அல்ல. எனவே Fe3+ ஆனது Br- ஐ -ve Br2 ஆக ஆக்ஸிஜனேற்றம் செய்யாது.
11.
நேர்மின்வாய் ஆக்ஸிஜனேற்றம்:
கால்வானிக் மின்கலத்தில் நேர்மின்முனை உலோகம், உலோக அயனிகளாகவும், எலக்ட்ரான்களாகவும் ஆக்ஸிஜனேற்றமடைகின்றன.
உலோக அயனிகள் கரைசலுக்குள் நுழைகின்றன. மேலும், எலக்ட்ரான்கள் நேர்மின்முனை வழியே வெளிச்சுற்றிற்கு பாய்கின்றன.
ஜிங்க் மின்முனையில் எலக்ட்ரான்கள் விடுவிக்கப்படுவதால், எதிர்குறியை (-ve) பெறுகிறது.
Zn(s) → Zn2+(aq) + 2e-
(எலக்ட்ரான் இழப்பு - ஆக்ஸிஜனேற்றம்)
எதிர்மின்வாய் ஒடுக்கம்:
எலக்ட்ரான்கள் மின்சுற்று வழியே ஜிங்க் பட்டையிலிருந்து காப்பர் பட்டைக்கு பாய்கின்றன.
கரைசலிலுள்ள Cu2+ அயனிகள் எலக்ட்ரான்களை ஏற்றுக்கொண்டு காப்பர் உலோகமாக ஒடுக்கமடைகின்றன.
காப்பர் மின்முனை எலக்ட்ரான்களை உட்கொள்ளப்படுவதால் நேர்க்குறியை (+ve) பெறுகிறது.
\(C u^{2+}{ }_{(a q)}+2 e^{-} \rightarrow C u_{(s)}\)
(எலக்ட்ரான் ஏற்பு - ஒடுக்கம்)
12.
முதல் விதி:
மின்னாற்பகுத்தலின்போது மின்முனைகளில் விடுவிக்கப்படும் பொருளின் நிறையானது (m) மின்கலத்தின் வழியே பாயும் மின்னோட்டத்தின் அளவிற்கு (Q) நேர் விகிதத்திலிருக்கும்.
m \(\alpha\) Q
m \(\alpha\) It
m = z It
Z = பொருளின் மின்வேதிச் சமானம்
I = மின்னோட்டம்
t = மின்னோட்டம் பாயும் காலம்
இரண்டாம் விதி :
ஒரே அளவு மின்னோட்டத்தை வெவ்வேறு மின்பகுளி வெவ்வேறு மின்பகுளிக் கரைசல்களின் வழியே செலுத்தும்போது, மின்முனைகளில் விடுவிக்கப்படும் பொருளின் அளவானது அவற்றின் மின்வேதிச் சமானங்களுக்கு நேர்விகிதத்திலிருக்கும்.
m \(\alpha\) Z
\(\frac{\mathrm{m}_1}{\mathrm{Z}_1}=\frac{\mathrm{m}_2}{\mathrm{Z}_2}\)
m = விடுவிக்கப்படும் உலோகத்தின் நிறை
Z = மின்வேதிச் சமானம்
13.
எரிபொருள் மின்கலத்தில் ஹைட்ரஜன், எரிபொருளாகவும், ஆக்ஸிஜன், ஆக்ஸிஜனேற்றியாகவும், 200°C வெப்பநிலை மற்றும் 20-40 atm அழுத்தத்தில் பராமரிக்கப்படும் நீர்த்த KOH கரைசல் மின்பகுளியாகவும் செயல்படுகின்றன. Ni மற்றும் NiO ஆகியவற்றைக் கொண்டுள்ள நுண்துளைகளையுடைய கிராஃபைட் மின்முனையானது வினையுறா மின்முனையாக செயல்படுகிறது.
ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் வாயுக்கள் முறையே நேர்மின்முனை மற்றும் எதிர்மின்முனைகளில் குமிழிகளாக செலுத்தப்படுகின்றன. நேர்மின்முனையில் ஆக்ஸிஜனேற்றம் நிகழ்கிறது.
\(2 \mathrm{H}_2(\mathrm{~g})+4 \mathrm{OH}^{-}(\mathrm{aq}) \rightarrow 4 \mathrm{H}_2 \mathrm{O}(\mathrm{l})+4 e^{-}\)
எதிர்மின்முனையில் ஒடுக்கம் நிகழ்கிறது
\(\mathrm{O}_2(g)+2 \mathrm{H}_2 \mathrm{O}(\mathrm{l})+4 e^{-} \rightarrow 4 \mathrm{OH}^{-}(a q)\)
ஒட்டுமொத்த வினை
\(2 \mathrm{H}_2(g)+\mathrm{O}_2(g) \rightarrow 2 \mathrm{H}_2 \mathrm{O}(\mathrm{l})\)
மேற்கண்ட வினையானது ஹைட்ரஜனின் எரிதல் வினையை ஒத்துள்ளது. எனினும், அவை நேரடியாக வினைபுரிவதில்லை. அதாவது ஆக்ஸிஜனேற்றம் மற்றும் ஒடுக்கம் வினைகள் முறையே நேர்மின்முனை மற்றும் எதிர்மின்முனைகளில் தனித்தனியாக நிகழ்கின்றன. H2 - O2 எரிபொருள் மின்கலத்தைப் போலவே புரப்பேன் -O2 மற்றும் மீத்தேன் -O2, போன்ற எரிபொருள் கலன்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
14.
15.
டேனியல் மின்கலம் ஒரு கால்வானிக் மின்கலமாகும். இது ஒரு வோல்டாயிக் மின்கலம் ஆகும்.
இது இரண்டு அரை மின்கலங்களைக் கொண்டுள்ளது.
அ) ஆக்ஸிஜனேற்ற அரை மின்கலன்
முகவையிலுள்ள நீர்த்த ஜிங்க் சல்பேட் கரைசலில் ஜிங்க் உலோகப்பட்டை மூழ்க வைக்கப்பட்டுள்ளது.
ஒடுக்க அரை மின்கலன்
முகவையிலுள்ள நீர்த்த காப்பர் சல்பேட் கரைசலில் காப்பர் உலோகப் பட்டை மூழ்க வைக்கப்பட்டுள்ளது.
அரை மின்கலங்களை இணைத்தல்
ஜிங்க் மற்றும் காப்பர் பட்டைகள் வெளிப்புறமாக ஒரு கம்பி மூலம் இணைக்கப்படுகின்றன. இதனூடே ஒரு இணைப்பியும் (k) ஒரு மின்மூலமும் இணைக்கப்பட்டுள்ளன. (எடுத்துக்காட்டு: வோல்ட் மீட்டர்).
எதிர்மின்முனைப் பகுதி மற்றும் நேர்மின்முனைப் பகுதிகளிலுள்ள மின்பகுளிக் கரைசல்கள், தலைகீழாக கவிழ்த்து வைக்கப்பட்டுள்ள U வடிவ குழாய் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த U வடிவ குழாயில், அகார்-அகார் ஜெல்லுடன் KCl, Na2 SO4 போன்ற வினையுறா மின்பகுளிகள் கலந்த பசை வைக்கப்பட்டுள்ளது. இது உப்பு பாலமாக செயல்படுகிறது.
இணைப்பி (k) மூலம் மின்சுற்றை மூடும்போது, எலக்ட்ரான்கள் ஜிங்க் பட்டையிலிருந்து காப்பர் பட்டைக்கு பாய்கின்றன. இதற்கு காரணம் அந்தந்த மின்முனைகளில் நிகழும் ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினைகளே ஆகும்.

நேர்மின்வாய் ஆக்ஸிஜனேற்றம்
i) ஜிங்க் பட்டை நேர்மின்முனை என்றழைக்கப்படுகிறது.
ii) ஜிங்க் மின்முனையில் ஆக்ஸிஜனேற்றம் நிகழ்கிறது.
iii) ஜிங்க் ஆனது Zn2+ அயனிகளாகவும், எலக்ட்ரான்களாகவும் ஆக்ஸிஜனேற்றமடைகின்றன.
iv) இந்த Zn2+அயனிகள் கரைசலுக்குள் நுழைகின்றன.
v) எலக்ட்ரான்கள் கம்பியின் வழியே வெளிச்சுற்றிற்கு பாய்கின்றன. பின்னர் அவை காப்பர் பட்டைக்குள் நுழைகின்றன.
vi) ஜிங்க் மின்முனையில் எலக்ட்ரான்கள் விடுவிக்கப்படுவதால், எதிர்குறியை (-ve) பெறுகிறது.
\(\mathrm{Zn}_{(\mathrm{s})} \rightarrow \mathrm{Zn}_{(\mathrm{aq})}^{2+}+2 \mathrm{e}^{-}\) (எலக்ட்ரான் இழப்பு -ஆக்ஸிஜனேற்றம்)
எதிர்மின்வாய் ஒடுக்கம் :
காப்பர் பட்டை - எதிர்மின்வாய்வாக செயல்படுகிறது.
ஆக்ஸிஜன் ஒடுக்கம் நடைபெறுகிறது.
மின்சுற்று வழியே ஜிங்க் பட்டையிலிருந்து காப்பர் பட்டைக்கு பாய்கின்றன.
கரைசலிலுள்ள Cu2+ அயனிகள் எலக்ட்ரான்களை ஏற்றுக்கொண்டு காப்பர் உலோகமாக ஒடுக்கமடைகின்றன.
இவை காப்பர் மின்முனையின் மீதே படிகின்றன.
காப்பர் மின்முனை எலக்ட்ரான்களை உட்கொள்ளப்படுவதால் நேர்க்குறியை (+ve) பெறுகிறது.
\(C u_{(a q)}^{2+}+2 e^{-} \rightarrow C u_{(s)}\)
(எலக்ட்ரான் ஏற்பு - ஒடுக்கம்)
உப்புப்பாலம் :
இரண்டு அரை மின்கலன்களிலுள்ள மின்பகுளிக் கரைசல்கள் உப்புப்பாலத்தை பயன்படுத்தி இணைக்கப்படுகின்றன.
இரண்டு மின்நடுநிலைத்தன்மையை பகுதிகளிலும் பராமரிக்க, வினையுறா எதிரயனிகள் Cl- (உப்புப் பாலத்தில் வைக்கப்பட்டுள்ள KCI லிருந்து) உப்புப் பாலத்திலிருந்து நேர்மின்முனைப்பகுதிக்குள் நுழைகின்றன.
எதிர்மின்முனை ஒடுக்கத்தால் எதிர்மின்முனை கரைசல் அதிகளவு SO42- அயனியை கொண்டுள்ளது.
மின் நடுநிலைத் தன்மையை பராமரிக்க K+அயனிகள் உப்புப்பாலத்திலிருந்து எதிர்மின்முனைப்பகுதிக்குள் நகருகின்றன.
மின்சுற்று முழுமையடைதல்:
எதிர்மின்சுமை கொண்ட ஜிங்க் மின்முனையிலிருந்து, நேர்மின்சுமை கொண்ட காப்பர் மின்முனையை நோக்கி வெளிச்சுற்றின் வழியே எலக்ட்ரான்கள் பாய்கின்றன.
அதே நேரத்தில், எதிரயனிகள் நேர்மின்முனைப் பகுதியை நோக்கியும், நேரயனிகள் எதிர்மின்முனைப் பகுதியை நோக்கியும் நகருகின்றன.
இதனால் மின்சுற்று முழுமையடைகிறது.
மின்முனைகள் அழிதல்:
டேனியல் மின்கலமானது செயல்பட, ஜிங்க் மின்முனையில் நிறை தொடர்ந்து குறைகிறது, ஆனால் காப்பர் மின்முனையின் நிறை தொடர்ந்து அதிகரிக்கிறது.
எனவே ஜிங்க் மின்முனையானது முற்றிலுமாக Zn2+ அயனிகளாக மாறும் வரையிலோ அல்லது மொத்த Cu2+ அயனிகளும் உலோக காப்பராக மாறும் வரையிலோ மின்கலன் வேலை செய்யும்.
Zn(s) + CuSO4(aq) \(\rightarrow\) ZnSO4(aq) + Cu(s)
கால்வானிக் மின்கல குறியீடு
\(Z n_{(s)}\left|Z n_{(a q)}\right| C u^{2+}_{(a q)}| C u_{(s)}\)
16.
மோலார் கடத்துத்திறன் = \(\wedge_m = \frac{\kappa(Sm^{-1})\times10^{-3}}{M}\) mol-1m3
\(\frac{(12.04)\times10^{-2} Sm^{-1}) \times 10^{-3} (mol^{-1}m^3)}{0.025}\)
481.6 × 10-2 Sm2mol-1
17.
அ) சமான கடத்துத்திறன்
\(\begin{aligned}
\lambda_{\infty} \mathrm{Al}_2\left(\mathrm{SO}_4\right)_3 & =\frac{1}{3} \lambda_{\infty} \mathrm{Al}^{3+}+\frac{1}{2} \lambda_{\infty} \mathrm{SO}_4^{2-}
\end{aligned}\)
\(\begin{aligned}
=\left(\frac{1}{3} \times 189\right)+\frac{1}{2}(160)
\end{aligned}\)
= 63 + 80
= 143 மோ.செ.மீ2 சமானம்-1
ஆ) மோலார் கடத்துத்திறன்
\(\mu_{\infty} \mathrm{Al}_2\left(\mathrm{SO}_4\right)_3=2 \mu_{\infty} \mathrm{Al}^{3+}+3 \mu_{\infty} \mathrm{SO}_4{ }^{2-}\)
= 2(189) + 3 (160)
= 378 + 480
= 858 மோ.செ.மீ2 சமானம்-1
18.
\(\begin{aligned}
\left(\mathrm{E}_{\mathrm{ox}}^0\right)_{\mathrm{FFe}^{2+}}=+0.44 \mathrm{~V}
\end{aligned}\)
\(\begin{aligned}
\left(\mathrm{E}_{\mathrm{red}}^0\right)_{\mathrm{Cu}^{2+} |\mathrm{Cu}}=+0.34 \mathrm{~V}
\end{aligned}\)
இந்த +Ve emf மதிப்புகள் இரும்பு ஆக்ஸிஜனேற்றமடைகிறது எனவும் காப்பர் ஒடுக்கமடைகிறது எனவும் தெரிவிக்கின்றன. (எனவே) இரும்புக் கலனில் காப்பர் சல்பேட்டை சேமித்து வைக்க இயலாது.
19.
HCI ன் கடத்துத்திறன் அதிகமாகும்;
ஏனெனில் அனைத்து அயனிகளிலும் H+ அயனியானது பெரும இயங்கு திறனை பெற்றிருக்கும். (mobility)
25°C ல் : H+ = 36.23 m2s-1V-1
கடத்துத்திறனானது இவற்றை பொறுத்தது:
1) மின்பகுளியின் தன்மை
2) செறிவு
3) அயனிகளின் இயங்கு திறன்
4) வெப்பநிலை
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards