12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 24/10/2019
அயனிச் சமநிலை
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
லெட் அயோடைடின் கரைதிறன் பெருக்க மதிப்பு \(3.2\times10^{-8}\) எனில், அதன் கரைதிறன் மதிப்பு __________
\(2\times10^{-3}\)M
\(4\times10^{-3}M\)
\(1.6\times10^{-5}M\)
\(1.8\times10^{-5}M\)
2.
சோடியம் ஃபார்மேட், அனிலீனியம் குளோரைடு மற்றும் பொட்டாசியம் சயனைடு ஆகியவற்றின் நீர்கரைசல்கள் முறையே ___________
அமிலம், அமிலம், காரம்
காரம், அமிலம், காரம்
காரம், நடுநிலை, காரம்
இவற்றில் ஏதுமில்லை
3.
பின்வருவனவற்றுள் லூயிஸ் காரமாக செயல்படாதது எது?
BF3
PF3
CO
F–
4.
பின்வரும் புளூரோ சேர்மங்களில் லூயிஸ் காரமாக செயல்படக்கூடியது எது?
BF3
PF3
CF4
SiF4
5.
H2O மற்றும் HF ஆகிய ப்ரான்ஸ்டெட் அமிலங்களின் இணை காரங்கள் _______________
முறையே OH– மற்றும் H2FH+ ஆகியன
முறையே H3O+ மற்றும் F– ஆகியன
முறையே OH– மற்றும் F– ஆகிய
முறையே H3O+ மற்றும் H2F+ ஆகியன
6.
ஒரு Ag2C2O4 இன் தெவிட்டிய கரைசலில் உள்ள Ag+ அயனிகளின் செறிவு \(2.24\times10^{-4} mol L^{-1}\) எனில், Ag2C2O4 இன் கரைதிறன் பெருக்க மதிப்பு ___________
\(2.42\times10^{-8} mol^{3} L^{-3}\)
\(2.66\times10^{-12} mol^{3} L^{-3}\)
\(4.5\times10^{-11} mol^{3} L^{-3}\)
\(5.619\times10^{-12} mol^{3} L^{-3}\)
7.
சிலவர் குரோமேட்டின் ஒரு குறிப்பிட்ட தெவிட்டிய கரைசலானது பின்வரும் செறிவுகளை கொண்டுள்ளது \([Ag^{+}]=5\times10^{-5}\) மற்றும் \([CrO_{4}]^{2-}=4.4\times10^{-4}M\).. \(Ag_{2}CrO_{4}\) ன் Ksp மதிப்பு என்ன?
8.
0.1 M அம்மோனியம் அசிட்டேட் கரைசலின் நீராற்பகுப்பு வீதம் மற்றும் pH மதிப்பை கணக்கிடுக.
\(K_{a}=K_{b}=1.8\times10^{-5}\) எனக் கொடுக்கப்பட்டுள்ளது.
9.
pH வரையறு.
10.
11.
லூயி அமிலங்கள் மற்றும் காரங்கள் என்றால் என்ன? ஒவ்வொன்றிற்கும் இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
12.
1 mL 0.1M லெட் நைட்ரேட் கரைசல் மற்றும் 0.5 mL 0.2 M NaCl கரைசல் ஆகியவற்றை ஒன்றாக கலக்கும் போது லெட் குளோரைடு வீழ்படிவாகுமா? வீழ்படிவாகாதா? என கண்டறிக. PbCl2 இன் Ksp மதிப்பு \(1.2\times10^{-5}\).
13.
0.1M திறனுடைய CH3COONa கரைசலின்
i) நீராற்பகுத்தல் வீதம்,
ii) நீராற்பகுத்தல் மாறிலி மற்றும்
iii) pH ஆகியவற்றைக் கணக்கிடுக.
(CH3COOH அமிலத்தின் pKa மதிப்பு 4.74).
14.
அமிலங்கள் மற்றும் காரங்கள் பற்றிய லெளரி–ப்ரான்ஸ்டட் கொள்கையை விளக்குக.
15.
10-7 M HCl ன் pH மதிப்பை கணக்கிடுக.
16.
Ag2CrO4 ன் கரைதிறன் பெருக்க மதிப்பு \(1\times10^{-12}\) ஆகும். 0.01M AgNO3 கரைசலில் Ag2CrO4 ன் கரைதிறனை கணக்கிடுக.
17.
ஆஸ்வால்ட் நீர்த்தல் விதிக்கான சமன்பாட்டைத் தருவி.
1.
\(\begin{aligned}
\mathrm{PbI}_{2(\mathrm{~s})} \rightleftharpoons \mathrm{Pb}^{2+}(\mathrm{aq})+2 \mathrm{I}^{-}(\mathrm{aq})\
\end{aligned}\)
\(\begin{aligned}
\mathrm{K}_{\mathrm{sp}}=(\mathrm{s})(2 \mathrm{~s})^2
\end{aligned}\)
\(\begin{aligned}
3.2 \times 10^{-8}=4 \mathrm{~S}^3
\end{aligned}\)
\(\begin{aligned}
S=\left(\frac{3.2 \times 10^{-8}}{4}\right)^{1 / 3}
\end{aligned}\)
\(\begin{aligned}
=\left(8 \times 10^{-9}\right)^{1 / 3}
\end{aligned}\)
\(\begin{aligned}
=2 \times 10^{-3} \mathrm{M}
\end{aligned}\)
2.
காரம், அமிலம், காரம்
HCOONa + H.OH \(\rightleftharpoons\) NaOH + H - COOH
வலிமைமிகு வலிமைகுறை
காரம் அமிலம்
காரத்தன்மை உடையது.
C6H5NH3Cl- + H.OH \(\rightleftharpoons\) H3O+ + C6H5-NH2 + Cl-
அமிலங்கள்
KCN + H -OH \(\rightleftharpoons\) KOH + HCN
காரம் வலிமைமிகு காரம் வலிமைகுறை அமிலம்
காரத்தன்மை, அமிலத்தன்மை, காரத்தன்மை என்பது சரி.
3.
BF3
BF3 \(\rightarrow\) எலக்ட்ரான் குறை \(\rightarrow\) லூயிஸ் அமிலம்
PF3 \(\rightarrow\) எலக்ட்ரான் மிகுதி \(\rightarrow\) லூயிஸ் காரம்
CO \(\rightarrow\) தனித்த எலக்ட்ரான் இரட்டைகள் \(\rightarrow\) லூயிஸ் காரம்
F-\(\rightarrow\) இணையாத எலக்ட்ரான் இணைகள் \(\rightarrow\) லூயிஸ் காரம்
4.
PF3
BF3 \(\rightarrow\) எலக்ட்ரான் குறை \(\rightarrow\) லூயிஸ் அமிலம் PF3 \(\rightarrow\)எலக்ட்ரான் மிகுதி \(\rightarrow\) லூயிஸ் காரம் CF4 \(\rightarrow\) நடுநிலை \(\rightarrow\)லூயிஸ் அமிலம் காரம் இரண்டும் அல்ல
SiF4 \(\rightarrow\) நடுநிலை \(\rightarrow\) லூயிஸ் அமிலம் அல்ல லூயிஸ் காரமும் அல்ல
5.
முறையே OH– மற்றும் F– ஆகிய

இணையான காரங்கள் முறையே OH- மற்றும் F- ஆகும்.
6.
\(\begin{aligned}
\mathrm{Ag}_2 \mathrm{C}_2 \mathrm{O}_4 \rightleftharpoons 2 \mathrm{Ag}^{+}+\mathrm{C}_2 \mathrm{O}_4^{2-}
\end{aligned}\)
\(\begin{aligned}
{\left[\mathrm{Ag}^{+}\right]=2.24 \times 10^{-4} \mathrm{~mol} \mathrm{~L}^{-1}}
\end{aligned}\)
\(\begin{aligned}
{\left[\mathrm{C}_2 \mathrm{O}_4^{2-}\right]=\frac{2.24 \times 10^{-4}}{2} \mathrm{molL}^{-1}}
\end{aligned}\)
\(\begin{aligned}
=1.12 \times 10^{-4} \mathrm{~mol} \mathrm{~L}^{-1}
\end{aligned}\)
\(\begin{aligned}
\mathrm{~K}_{\mathrm{sp}}=\left[\mathrm{Ag}^{+}\right]^2\left[\mathrm{C}_2 \mathrm{O}_4^{2-}\right]
\end{aligned}\)
\(\begin{aligned}
=\left(2.24 \times 10^{-4} \mathrm{~mol} \mathrm{~L}^{-1}\right)^2\left(1.12 \times 10^{-4} \mathrm{~mol} \mathrm{~L}^{-1}\right)
\end{aligned}\)
= 5.619 \(\times\) 10-12 mol3 L-3
7.
\(\begin{aligned}
\mathrm{Ag}_2 \mathrm{CrO}_4(\mathrm{~s}) \rightleftharpoons 2 \mathrm{Ag}^{+}(\mathrm{aq})+\mathrm{CrO}_4^{2-}(\mathrm{aq})
\end{aligned}\)
\(\begin{aligned}
\mathrm{K}_{\mathrm{sp}}=\left[\mathrm{Ag}^{+}\right]^2\left[\mathrm{CrO}_4^{2-}\right]
\end{aligned}\)
\(\begin{aligned}
=\left(5 \times 10^{-5}\right)^2\left(4.4 \times 10^{-4}\right)
\end{aligned}\)
\(\begin{aligned}
=1.1 \times 10^{-12}
\end{aligned}\)
8.
அம்மோனியம் அசிட்டேட் ஆனது வலிமை குறை காரம் NH4 OH மற்றும் வலிமை குறை அமிலம் CH3COOH ஆகியவற்றின் உப்பாகும்.
i) \(\begin{aligned}
& \mathrm{h}=\sqrt{\mathrm{Kh}}=\sqrt{\frac{\mathrm{Kw}}{\mathrm{K}_{\mathrm{a}} \cdot \mathrm{K}_{\mathrm{b}}}}
\end{aligned}\)
\(\begin{aligned}
\mathrm{h}=\sqrt{\frac{1 \times 10^{-14}}{1.8 \times 10^{-5} \times 1.8 \times 10^{-5}}}
\end{aligned}\)
\(\begin{aligned}
=\frac{1 \times 10^{-7}}{1.8 \times 10^{-5}}=0.7453 \times 10^{-2}
\end{aligned}\)
ii) \(\begin{aligned}
\mathrm{pH} & =\frac{1}{2} \mathrm{pK}_{\mathrm{w}}+\frac{1}{2} \mathrm{pK}_{\mathrm{a}} \frac{1}{2} \mathrm{pK}_{\mathrm{b}}
\end{aligned}\)
\(\begin{aligned}
\mathrm{K}_{\mathrm{a}} & =\mathrm{K}_{\mathrm{b}}=1.8 \times 10^{-5}
\end{aligned}\)
\(\begin{aligned}
\mathrm{~K}_{\mathrm{a}} & =\mathrm{K}_{\mathrm{b}}, \mathrm{pK}_{\mathrm{a}}=\mathrm{pK}_{\mathrm{b}}
\end{aligned}\)
\(\begin{aligned}
\therefore \mathrm{pH} & =\frac{1}{2} \mathrm{~K}_{\mathrm{w}}=\frac{1}{2} \times 14=7
\end{aligned}\)
pH = 7
9.
pH = - log10[H3O +]
ஒரு கரைசலின் pH என்பது அக்கரைசலில் உள்ள ஹைட்ரோனியம் அயனிகளின் மோலார் செறிவின், 10ஐ அடிப்படையாக கொண்ட எதிர்குறி மடக்கை மதிப்புகள் என வரையறுக்கப்படுகிறது.
10.
11.
லூயி அமிலம்: எலக்ட்ரான் இரட்டையை ஏற்றுக் கொள்ளும் சேர்மம் அமிலமாகும்.
எகா: Ag+, BF3; AlCl3
லூயி காரம்: எலக்ட்ரான் இரட்டையை வழங்கும் சேர்மம் காரமாகும்.
எகா: CI-; NH3, H2O
12.
\(PbCl_{2}^{(s)}\overset{H_{2}O}{\rightleftharpoons }Pb^{2+}(aq)+2Cl^{-}(aq)\)
அயனிப்பெருக்கம் = [Pb2+] [Cl-]2
மொத்த கனஅளவு = 1.5 mL
\(\underset{0.1M}{Pb(NO_{3})_2}\rightleftharpoons \underset{0.1M}{Pb^{2+}}+2NO_{3}^{-}\)
Pb2+ ன் மோல் எண்ணிக்கை = மோலாரிட்டி \(\times\) கரைசலின் கனஅளவு லிட்டரில்
= \(0.1\times1\times10^{-3}=10^{-4}\)

\(\underset{0.2M}{NaCl}\rightarrow \underset{0.2M}{Na^{+}}+\underset{0.2M}{Cl^{-}}\)
Cl– ன் மோல் எண்ணிக்கை = \(0.2\times 0.5\times10^{-3}=10^{-4}\)
\([Cl^{-}]=\frac{10^{-4}moles}{1.5\times10^{-3}L}=6.7\times10^{-2}M\)
அயனிப்பெருக்க மதிப்பு = \((6.7\times10^{-2})(6.7\times10^{-2})^{2}=3.01\times10^{-4}\)
அயனிப்பெருக்க மதிப்பு \(3.01\times10^{-4}\) ஆனது கரைதிறன் பெருக்க மதிப்பை \((1.2\times10^{-5})\) விட அதிகமாக இருப்பதால் PbCl2 வீழ்படிவாகிறது.
13.
(a) CH3COONa என்பது, ஒரு வலிமை குறைந்த அமிலம் (CH3COOH) மற்றும் ஒரு வலிமை மிகு காரம் (NaOH) ஆகியவற்றின் உப்பாகும். எனவே, நீராற்பகுத்தலின் காரணமாக கரைசலானது காரத் தன்மையை பெற்றுள்ளது
\(CH_{3}COO^{-}(aq)+H_{2}O(aq)\rightleftharpoons CH_{3}COOH(aq)+OH^{-}(aq)\)
pKa = 4.74
pKa = -logKa
i.e., Ka = antilog (-pKa)
= antilog (-4.74)
= antilog(-5 + 0.26)
= \(10^{-5}\times 1.8\)
[antilog 0.26 = 1.82 \(\simeq\) 1.8]
i) \(\sqrt{\frac{K_{w}}{K_{a}\times C}}\)
\(=\sqrt{\frac{1\times 10^{-14}}{1.8\times 10^{-5}\times 0.1}}\)
h = 7.5 \(\times\) 10-5
ii) \(K_{h}=\frac{K_{w}}{K_{a}}=\frac{1\times10^{-14}}{1.8\times10^{-5}}\)
= \(5.56\times10^{-10}\)
iii) \(pH=7+\frac{pK_{a}}{2}+\frac{logC}{2}\)
=\(7+\frac{4.74}{2}+\frac{log 0.1}{2}=7+2.37-0.5\)
= 8.87
14.
அமிலம் என்பது மற்றொரு பொருளுக்கு ஒரு புரோட்டானை வழங்கக்கூடிய ஒரு பொருளாகும். காரம் என்பது மற்றொரு பொருளிலிருந்து ஒரு புரோட்டானை ஏற்கக்கூடிய ஒரு பொருளாகும். அதாவது, அமிலம் என்பது ஒரு புரோட்டான் வழங்கி மற்றும் காரம் என்பது ஒரு புரோட்டான் ஏற்பி.
ஹைட்ரஜன் குளோரைடை நீரில் கரைக்கும்போது, அது, நீர் மூலக்கூறுக்கு ஒருபுரோட்டானை வழங்குகிறது. அதாவது, HCl ஒரு அமிலமாகவும், H2O ஒரு காரமாகவும் நடந்துகொள்கின்றன. அமிலத்திலிருந்து காரத்திற்கு புரோட்டான் மாற்றப்படும் நிகழ்வை பின்வருமாறு குறிப்பிடலாம்.
HCl + H2O \(⇌\) H3O+ +Cl-
அம்மோனியாவை நீரில் கரைக்கும்போது, அது நீரிலிருந்து ஒரு புரோட்டானை ஏற்றுக்கொள்கிறது. இந்த நேர்வில், அம்மோனியா (NH3) மூலக்கூறு ஒரு காரமாகவும், H2O மூலக்கூறு அமிலமாகவும் செயல்படுகின்றன. வினையானது பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது.
H2O + NH3 \(⇌\) NH4+ + OH-
இதன் மறுதலை வினையை பின்வரும் சமநிலையில் கருதுவோம்.

H3O+ஆனது CI - க்கு ஒரு புரோட்டானை வழங்கி HClஐ உருவாக்குகிறது.
அதாவது, விளைபொருட்களும் அமிலம் மற்றும் காரங்களாக செயல்படுகின்றன. பொதுவாக,லௌரி - ப்ரான்ஸ்டட் (அமிலம் - கார) வினையை பின்வருமாறு எழுதப்படுகிறது.
அமிலம்1 + காரம்2 \(⇌\) அமிலம்2 + காரம்1
ஒரு புரோட்டானை வழங்கிய பிறகு எஞ்சியுள்ள பகுதி ஒரு காரமாகும் (காரம்1). மேலும் இது ப்ரான்ஸ்டட் அமிலத்தின் (அமிலம்1) இணைகாரம் என்றழைக்கப்படுகிறது. அதாவது ஒரு புரோட்டானால் மட்டும் வேறுபடும் வேதிக்கூறுகள் இணை அமில - கார இரட்டைகள் என்றழைக்கப்படுகின்றன.

HCI மற்றும் Cl -,H2O மற்றும் H3O+ஆகியன இரண்டும், வெவ்வேறு இணைஅமில - கார இரட்டைகளாகும். அதாவது, Cl - என்பது HCL அமிலத்தின் இணைகாரம் (அல்லது) HCI என்பது Cl - அயனியின் இணை அமிலம் ஆகும். இதேபோல H3O+ என்பது H2Oவின் இணை அமிலமாகும்.
லௌரி ப்ரான்ஸ்டட் கொள்கையின் வரம்புகள்:
BF3, AlCl3 போன்ற புரோட்டான்களை வழங்க இயலாத சேர்மங்களும் அமிலங்கள் போல செயல்படுவதை இக்கொள்கை விளக்கவில்லை.
15.
H2O அயனியாவதிலிருந்து உருவாகும் [H3O]+ கருத்தில் கொள்ளாத போது
\([H_{3}O^{+}]=[HCl]=10^{-7}M\)
i.e., pH = 7, இது நடுநிலைக் கரைசலின் pH மதிப்பாகும். HCl கரைசலின் செறிவு எதுவாயினும் அக்கரைசல் அமிலத்தன்மை கொண்டது என்பதை நாம் அறிவோம். அதாவது pH மதிப்பு 7 ஐ விட குறைவாக இருத்தல் வேண்டும். இந்த நேர்வில் அமிலத்தின் செறிவு மிகக் குறைவு (10–7M) எனவே, நீரின் சுய அயனியாக்கத்திலிருந்து உருவாகும் \([H_{3}O]^{+}(10^{-7}M)\) செறிவை நாம் ஒதுக்க முடியாது.
எனவே, இதில் நீரின் சுய அயனியாக்கத்திலிருந்து உருவாகும் [H3O]+ செறிவை கருத்தில் கொள்ள வேண்டும்.
[H3O]+= 10-7 (நீரிலிருந்து) + [H3O]+ = (HCl அமிலத்திலிருந்து)
= 10-7(1+1) = \(2\times10^{-7}\)
pH = -log10 [H3O+]
\(=-log_{10}(2\times10^{-7}) = -[log2+log10^{-7}]\)
= -log2-(-7).log1010
= 7-log2
= 7-0.3010 = 6.6990
= 6.70
16.
\(\mathrm{Ag}_2 \mathrm{CrO}_4(\mathrm{~S}) \rightleftharpoons 2 \mathrm{Ag}^{+}(\mathrm{aq})+\mathrm{CrO}_4{ }^{2-}(\mathrm{aq})\)
(S) (2S) (S)
[Ag+] = 2S + 0.01
\(\simeq\)0.01
(\(\because\) 2S << 0.01)
\(\begin{aligned} {\left[\mathrm{CrO}_4{ }^{2-}\right]=\mathrm{S}} \end{aligned}\)
\(\begin{aligned} \mathrm{AgNO}_3(\mathrm{~s}) \rightleftharpoons \mathrm{Ag}^{+}(\mathrm{aq})+\mathrm{NO}_3^{-}(\mathrm{aq}) \end{aligned}\)
0.01 0.01 0.01
\(\begin{aligned} \mathrm{K}_{\mathrm{sp}}=\left[\mathrm{Ag}^{+}\right]^2\left[\mathrm{Cro}_4{ }^{2-}\right] \end{aligned}\)
\(\begin{aligned} 1 \times 10^{-12}=(0.01)^2(\mathrm{~s}) \end{aligned}\)|
\(\begin{aligned} \mathrm{S}=\frac{1 \times 10^{-12}}{10^{-4}}=1 \times 10^{-8} \mathrm{M} \end{aligned}\)
17.
(i) ஆஸ்வால்ட் நீர்த்தல் விதியானது, ஒரு வலிமை குறைந்த அமிலத்தின் பிரிகை மாறிலியை (Ka ) அதன் பிரிகை வீதம் (\(\alpha \)) மற்றும் செறியுடன் (c ) தொடர்புபடுத்துகிறது. ஒரு சேர்மத்தின் மொத்த மோல் எண்ணிக்கையில், சமநிலையில் பிரிகையடைந்த மோல்களின் பின்னம், பிரிகை விதம் (\(\alpha \)) என்றழைக்கப்படுகிறது.

ஒரு வலிமை குறைந்த அமிலம் , அதாவது அசிட்டிக் அமிலத்தை (CH3COOH), எடுத்துக்காட்டாக கொண்டு ஆஸ்வால்ட் நீர்த்தல் விதிக்கான சமன்பாட்டை நாம் வருவிப்போம். அசிட்டிக் அமிலத்தின் பிரிகையடைதலை பின்வருமாறு குறிப்பிடலாம்.
\(\mathrm{CH}_3 \mathrm{COOH} \rightleftharpoons \mathrm{H}^{+}+\mathrm{CH}_3 \mathrm{COO}^{-}\)
அசிட்டிக் அமிலத்தின் பிரிகை மாறிலி,
\(\mathrm{K}_{\mathrm{a}}=\frac{\left[\mathrm{H}^{+}\right]\left[\mathrm{CH}_3 \mathrm{COO}^{-}\right]}{\left[\mathrm{CH}_3 \mathrm{COOH}\right]}\) ......(1)
| CH3COOH | H+ | CH3COO- | |
| ஆரம்ப நிலை மோல்களின் எண்ணிக்கை | 1 | - | - |
| CH3COOH ன் பிரிகைவீதம் | \(\alpha \) | - | - |
| சமநிலையில் மோல்களின் எண்ணிக்கை | 1-\(\alpha \) | \(\alpha \) | \(\alpha \) |
| சமநிலைச் செறிவு | (1 - \(\alpha \)) C | \(\alpha \)C | \(\alpha \)C |
சமன்பாடு (1) இல் சமநிலைச் செறிவை பிரதியிட
\(\begin{aligned}
\mathrm{K}_{\mathrm{a}}=\frac{(\alpha \mathrm{C})(\alpha \mathrm{C})}{(1-\alpha) \mathrm{C}}
\end{aligned}\)
\(\begin{aligned}
\mathrm{K}_{\mathrm{a}}=\frac{\alpha^2 \mathrm{C}}{1-\alpha}
\end{aligned}\) .....(2)
வலிமை குறைந்த அமிலமானது மிகக் குறைந்தளவே பிரிகையடைகிறது என்பதை நாம் அறிவோம். எண் ஒன்றுடன் ஒப்பிடும்போது \(\alpha\) மதிப்பு மிகச்சிறியது. எனவே, சமன்பாட்டின் விகுதியிலுள்ள (1 - \(\alpha\)) \(\simeq\) 1. இப்போது சமன்பாடு (2) பின்வருமாறு எழுதலாம்.
\(\mathrm{K}_{\mathrm{a}}=\left(\alpha^2 \mathrm{C}\right)\)
\(\alpha^2=\mathrm{Ka} / \mathrm{C} ; \alpha=\sqrt{\frac{\mathrm{Ka}}{\mathrm{C}}}\)
"நீர்த்தல் அதிகரிக்கும் போது ஒரு வலிமை குறைந்த மின்பகுளியின் பிரிகை விதமும் அதிகரிக்கிறது”
இது ஆஸ்வால்ட் நீர்த்தல் விதி எனப்படும்.
மேலும்: [H+) = \(\alpha\)C மற்றும்
\(\begin{aligned}
{\left[\mathrm{H}^{+}\right]=\left[\frac{\sqrt{\mathrm{Ka}}}{\mathrm{C}}\right] \mathrm{C}=\sqrt{\frac{\mathrm{KaC}^2}{\mathrm{C}}}=\sqrt{\mathrm{Ka} \cdot \mathrm{C}}}
\end{aligned}\)
\(\begin{aligned}
\mathrm{Kb}=\alpha^2 \mathrm{C}, \quad \because \alpha=\sqrt{\frac{\mathrm{Kb}}{\mathrm{C}}} \text {, }
\end{aligned}\)
\(\begin{aligned}
{\left[\mathrm{OH}^{-}\right] \alpha \mathrm{C}=\sqrt{\frac{\mathrm{Kb}}{\mathrm{C}} \times \mathrm{C}}=\sqrt{\frac{\mathrm{KbC}^2}{\mathrm{C}}}}
\end{aligned}\)
\(\begin{aligned}
=\sqrt{\mathrm{KbC}}
\end{aligned}\)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards