12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/11/2019
அயனிச் சமநிலை
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
வலிமை மிகு அமிலம் மற்றும் வலிமை குறைந்த காரத்திலிருந்து உருவாகும் உப்பின் நீராற்பகுத்தல் மாறிலி மற்றும் நீராற்பகுத்தல் வீதம் ஆகியவற்றிற்கான சமன்பாடுகளை தருவி.
2.
அமிலங்கள் மற்றும் காரங்கள் பற்றிய லெளரி–ப்ரான்ஸ்டட் கொள்கையை விளக்குக.
3.
0.1M CH3COOH கரைசலின் pH மதிப்பை கணக்கிடுக. அசிட்டிக் அமிலத்தின் பிரிகை மாறிலி மதிப்பு \(1.8\times10^{-5}\).
4.
ஒரு வலிமை குறைந்த மின்பகுளியின் 0.10M செறிவுடைய கரைசல் 25oC ல் 1.20% வரை பிரிகையடைகிறது என கண்டறியப்பட்டுள்ளது. அமிலத்தின் பிரிகை மாறிலி மதிப்பை காண்க .
5.
0.001M HCl கரைசலின் pH மதிப்பை கணக்கிடுக
6.
\(2 \times 10^{-3}\) M, H3O+ அயனிச் செறிவைக் கொண்டுள்ள ஒரு பழரசத்தில் OH– அயனிச் செறிவை கணக்கிடுக. கரைசலின் தன்மையை கண்டறிக.
7.
0.1 M அம்மோனியம் அசிட்டேட் கரைசலின் நீராற்பகுப்பு வீதம் மற்றும் pH மதிப்பை கணக்கிடுக.
\(K_{a}=K_{b}=1.8\times10^{-5}\) எனக் கொடுக்கப்பட்டுள்ளது.
8.
HCN இன் Ka மதிப்பு 10-9 எனில் 0.4M HCN கரைசலின் pH மதிப்பு என்ன?
9.
நீரின் அயனிப் பெருக்கம் வரையறு. அறை வெப்ப நிலையில் அதன் மதிப்பை தருக.
10.
11.
ஒரு ஆய்வக உதவியாளர், 25oC வெப்ப நிலையில், கணக்கிடப்பட்ட அளவுள்ள HCl வாயுவை சேர்த்து \([H_{3}O^{+}]=4\times10^{-5}M\) செறிவு கொண்ட கரைசலை தயாரித்தார். அந்தக் கரைசல் நடுநிலைத்தன்மை கொண்டதா (அல்லது) அமிலத்தன்மை கொண்டதா (அல்லது) காரத்தன்மை கொண்டதா?
12.
CuSO4 கரைசலுடன் நீர்த்த அம்மோனியாவை சேர்க்கும் போது, டெட்ராஅம்மைன்காப்பர் (II) அணைவு உருவாவதால் கரைசல் அடர் நீல நிறமாக மாறுகிறது.
\(\left[\mathrm{Cu}\left(\mathrm{H}_2 \mathrm{O}\right)_4\right]^{2+}(\mathrm{aq})+4 \mathrm{NH}_3(\mathrm{aq}) \rightleftharpoons\left[\mathrm{Cu}\left(\mathrm{NH}_3\right)_4\right]^{2+}(\mathrm{aq})\),
H2O மற்றும் NH3 ஆகியவற்றில் எது வலிமைமிகு லூயி காரம்?
13.
HClO4 மூலக்கூறின் அமிலத்தன்மைக்கான காரணம் கூறு. ப்ரான்ஸ்டட் – லெளரி கொள்கையின் அடிப்படையில், அதன் இணை காரத்தை கண்டறிக.
14.
பின்வரும் நீரிய கரைசல்களில் நிகழும் வினைகளில் இணை அமில-கார இரட்டைகளை கண்டறிக.
i) \(HS^{-}(aq)+HF\rightleftharpoons F^{-}(aq)+H_{2}S(aq)\)
ii) \(HPO_{4}^{2-}+SO_{3}^{2-}\rightleftharpoons PO_{4}^{3-}+HSO_{3}^{-}\)
iii) \(NH_{4}^{+}+CO_{3}^{2-}\rightleftharpoons NH_{3}+HCO_{3}^{-}\)
15.
Ca3(PO4)2 இன் கரைதிறன் பெருக்கத்திற்கான சமன்பாட்டை எழுதுக.
1.
ஒரு வலிமை மிகு அமிலம் HCI மற்றும் ஒரு வலிமை குறைந்த காரம் NH4OH ஆகியவை வினைபுரிந்து NH4Cl உப்பு மற்றும் நீர் ஆகியவை உருவாகும் வினையை கருதுவோம்.
\(\begin{array}{r}
\mathrm{HCl}(\mathrm{aq})+\mathrm{NH}_4 \mathrm{OH}(\mathrm{aq}) \rightleftharpoons \mathrm{NH}_4 \mathrm{Cl}(\mathrm{aq})+\mathrm{H}_2 \mathrm{O}(1) \mathrm{NH}_4 \mathrm{Cl}(\mathrm{aq}) \rightarrow \mathrm{NH}_4^{+}+\mathrm{Cl}^{-}(\mathrm{aq})
\end{array}\)
NH4+ அயனியானது, NH4OH எனும் வலிமை குறைந்த காரத்தின் இணைஅமிலமாகும். மேலும், இது நீரிலிருந்து உருவாக்கப்பட்ட OH- அயனியுடன் வினைபுரிந்து அயனியுறா NH4OH காரத்தை உருவாக்கும் திறனைப் பெற்றுள்ளது.
\(\mathrm{NH}_{4(\mathrm{aq})}^{+}+\mathrm{H}_2 \mathrm{O}_{(\mathrm{l})} \rightleftharpoons \mathrm{NH}_4 \mathrm{OH}_{(\mathrm{aq})}+\mathrm{H}_{(\mathrm{aq})}^{+}\)
இத்தகைய திறனை CI அயனி பெறவில்லை, எனவே [H+] > [OH-]; கரைசலானது அமிலத்தன்மையை பெற்றுள்ளது, மேலும் அதன் pH மதிப்பு 7 ஐவிட குறைவாக உள்ளது.
வலிமைமிகு காரம் மற்றும் வலிமை குறைந்த அமிலத்தின் உப்பு நீராற்பகுத்தலில் விவாதிக்கப்பட்டதைப் போன்றே, இந்த நேர்விலும், kh மற்றும் Kb க்கு இடையேயுள்ள தொடர்பை நம்மால் நிறுவ முடியும்.
Kh.Kb = Kw
(அல்லது)
\(\begin{aligned}
\mathrm{k}_{\mathrm{h}}=\frac{\mathrm{K}_{\mathrm{w}}}{\mathrm{k}_{\mathrm{b}}}
\end{aligned}\)
\(\begin{aligned}
\mathrm{NH}_4^{+}(\mathrm{aq})+\mathrm{H}_2 \mathrm{O} \rightleftharpoons \mathrm{NH}_4 \mathrm{OH}(\mathrm{aq})+\mathrm{H}^{+}(\mathrm{aq})
\end{aligned}\)
(1-h) (h) (h)
\(\begin{aligned}
\mathrm{K}_{\mathrm{h}} & =\frac{\left[\mathrm{NH}_4 \mathrm{OH}\right]\left[\mathrm{H}^{+}\right]}{\left[\mathrm{NH}_4^{+}\right]} \\
\end{aligned}\)
\(\begin{aligned}
=\frac{\mathrm{hc} \times \mathrm{hc}}{(1-\mathrm{h}) \mathrm{c}}
\end{aligned}\)
\(\begin{aligned}
K_h=\frac{h^2 \mathrm{c}}{1-\mathrm{h}}
\end{aligned}\)
h<< 1 எனில் Kh \( \simeq\) h2c
\(h^2=\frac{K_h}{C}\) (அல்லது) \(h=\sqrt{\frac{K_h}{C}}\) (அல்லது) \(\mathrm{h}=\sqrt{\frac{\mathrm{K}_{\mathrm{w}}}{\mathrm{K}_{\mathrm{b}} \cdot c}}\)
மேலும்
\(\left[\mathrm{H}^{+}\right]=\sqrt{\mathrm{Kh} . c}\) (அல்லது)\( \left[\mathrm{H}^{+}\right]=\sqrt{\frac{\mathrm{K}_{\mathrm{w}} \cdot \mathrm{c}}{\mathrm{K}_{\mathrm{b}}}}\)
2.
அமிலம் என்பது மற்றொரு பொருளுக்கு ஒரு புரோட்டானை வழங்கக்கூடிய ஒரு பொருளாகும். காரம் என்பது மற்றொரு பொருளிலிருந்து ஒரு புரோட்டானை ஏற்கக்கூடிய ஒரு பொருளாகும். அதாவது, அமிலம் என்பது ஒரு புரோட்டான் வழங்கி மற்றும் காரம் என்பது ஒரு புரோட்டான் ஏற்பி.
ஹைட்ரஜன் குளோரைடை நீரில் கரைக்கும்போது, அது, நீர் மூலக்கூறுக்கு ஒருபுரோட்டானை வழங்குகிறது. அதாவது, HCl ஒரு அமிலமாகவும், H2O ஒரு காரமாகவும் நடந்துகொள்கின்றன. அமிலத்திலிருந்து காரத்திற்கு புரோட்டான் மாற்றப்படும் நிகழ்வை பின்வருமாறு குறிப்பிடலாம்.
HCl + H2O \(⇌\) H3O+ +Cl-
அம்மோனியாவை நீரில் கரைக்கும்போது, அது நீரிலிருந்து ஒரு புரோட்டானை ஏற்றுக்கொள்கிறது. இந்த நேர்வில், அம்மோனியா (NH3) மூலக்கூறு ஒரு காரமாகவும், H2O மூலக்கூறு அமிலமாகவும் செயல்படுகின்றன. வினையானது பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது.
H2O + NH3 \(⇌\) NH4+ + OH-
இதன் மறுதலை வினையை பின்வரும் சமநிலையில் கருதுவோம்.

H3O+ஆனது CI - க்கு ஒரு புரோட்டானை வழங்கி HClஐ உருவாக்குகிறது.
அதாவது, விளைபொருட்களும் அமிலம் மற்றும் காரங்களாக செயல்படுகின்றன. பொதுவாக,லௌரி - ப்ரான்ஸ்டட் (அமிலம் - கார) வினையை பின்வருமாறு எழுதப்படுகிறது.
அமிலம்1 + காரம்2 \(⇌\) அமிலம்2 + காரம்1
ஒரு புரோட்டானை வழங்கிய பிறகு எஞ்சியுள்ள பகுதி ஒரு காரமாகும் (காரம்1). மேலும் இது ப்ரான்ஸ்டட் அமிலத்தின் (அமிலம்1) இணைகாரம் என்றழைக்கப்படுகிறது. அதாவது ஒரு புரோட்டானால் மட்டும் வேறுபடும் வேதிக்கூறுகள் இணை அமில - கார இரட்டைகள் என்றழைக்கப்படுகின்றன.

HCI மற்றும் Cl -,H2O மற்றும் H3O+ஆகியன இரண்டும், வெவ்வேறு இணைஅமில - கார இரட்டைகளாகும். அதாவது, Cl - என்பது HCL அமிலத்தின் இணைகாரம் (அல்லது) HCI என்பது Cl - அயனியின் இணை அமிலம் ஆகும். இதேபோல H3O+ என்பது H2Oவின் இணை அமிலமாகும்.
லௌரி ப்ரான்ஸ்டட் கொள்கையின் வரம்புகள்:
BF3, AlCl3 போன்ற புரோட்டான்களை வழங்க இயலாத சேர்மங்களும் அமிலங்கள் போல செயல்படுவதை இக்கொள்கை விளக்கவில்லை.
3.
pH = -log[H+]
வலிமை குறைந்த அமிலங்களில்
\([H^{+}]=\sqrt{K_{a}\times C}\)
= \(\sqrt{1.8\times10^{-5}\times0.1}\)
= \(1.3\times10^{-3}M\) \(pH=-log(1.34\times10^{-3})\)
= 3 - log1.34
= 3 - 0.1271
= 2.8729 \(\simeq \) 2.87
4.
கொடுக்கப்பட்டது \(\alpha\) = 1.20% = \(\frac{1.20}{100}=1.2\times10^{-2}\)
\(K_{a}=\alpha^{2}c\)
\(=(1.2\times10^{-2})^{2}(0.1)=1.44\times10^{-4}\times10^{-1}\)
= \(1.44\times10^{-5}\)
5.
\(\underset{0.001M}{HCl}\overset{H_{2}O}{\rightleftharpoons}\underset{0.001M}{H_{3}O^{+}}+\underset{0.001M}{Cl^{-}}\)
10-3M HCl யில் உள்ள [H3O+] செறிவுடன் ஒப்பிடும் போது, நீரின் சுய அயனியாக்கத்திலிருந்து உருவாகும் [H3O+] (10-7 M) செறிவு ஒதுக்கத்தக்கது.
எனவே [H3O+] = 0.001 mol dm–3
pH = -log10[H3O+]
= -log10(0.001)
= -log10(10-3) =3
6.
கொடுக்கப்பட்டது H3O+ = \(2 \times 10^{-3}\)M
\(K_{w}=[H_{3}O^{+}][OH^{-}]\)
\(\therefore [OH^{-}]=\frac{K_{w}}{[H_{3}O^{+}]}=\frac{1\times10^{-14}}{2\times10^{-3}}=5\times10^{-12}M\)
\(2\times10^{-3}>>5\times10^{-12}\)
அதாவது [H3O+]>>[OH-], எனவே பழச்சாறு அமிலத்தன்மை கொண்டது
7.
அம்மோனியம் அசிட்டேட் ஆனது வலிமை குறை காரம் NH4 OH மற்றும் வலிமை குறை அமிலம் CH3COOH ஆகியவற்றின் உப்பாகும்.
i) \(\begin{aligned}
& \mathrm{h}=\sqrt{\mathrm{Kh}}=\sqrt{\frac{\mathrm{Kw}}{\mathrm{K}_{\mathrm{a}} \cdot \mathrm{K}_{\mathrm{b}}}}
\end{aligned}\)
\(\begin{aligned}
\mathrm{h}=\sqrt{\frac{1 \times 10^{-14}}{1.8 \times 10^{-5} \times 1.8 \times 10^{-5}}}
\end{aligned}\)
\(\begin{aligned}
=\frac{1 \times 10^{-7}}{1.8 \times 10^{-5}}=0.7453 \times 10^{-2}
\end{aligned}\)
ii) \(\begin{aligned}
\mathrm{pH} & =\frac{1}{2} \mathrm{pK}_{\mathrm{w}}+\frac{1}{2} \mathrm{pK}_{\mathrm{a}} \frac{1}{2} \mathrm{pK}_{\mathrm{b}}
\end{aligned}\)
\(\begin{aligned}
\mathrm{K}_{\mathrm{a}} & =\mathrm{K}_{\mathrm{b}}=1.8 \times 10^{-5}
\end{aligned}\)
\(\begin{aligned}
\mathrm{~K}_{\mathrm{a}} & =\mathrm{K}_{\mathrm{b}}, \mathrm{pK}_{\mathrm{a}}=\mathrm{pK}_{\mathrm{b}}
\end{aligned}\)
\(\begin{aligned}
\therefore \mathrm{pH} & =\frac{1}{2} \mathrm{~K}_{\mathrm{w}}=\frac{1}{2} \times 14=7
\end{aligned}\)
pH = 7
8.
Ka = 10-9, C = 0.4 M, pH = ?
\(\begin{aligned}
{\left[\mathrm{H}^{+}\right] } & =\sqrt{\mathrm{K}_{\mathrm{a}}-\mathrm{c}}
\end{aligned}\)
\(\begin{aligned}
=\sqrt{10^{-9} \times 0.4}=\sqrt{4 \times 10^{-10}}
\end{aligned}\)
\(\begin{aligned}
=2 \times 10^{-5}
\end{aligned}\)
pH = -log10[H+]
= -log(2 \(\times\) 10-5)
=[log 2 - 5log 10]
= 5 - log 2 = 5 - 0.3010 = 4.6990
9.
Kw = [H3O+][OH-1] = 1 \(\times\) 10-14 (25°C)
தூய நீரின் ஹைட்ரஜன் மற்றும் ஹைட்ராஸில் அயனிகளின் செறிவுகளின் பெருக்கற்பலன் நீரின் அயனிப்பெருக்கம் எனப்படும். 25°Cல் அதன் மதிப்பு 1 \(\times\) 10-14 mol2 L-2 ஆகும்.
10.
11.
[H3O+] = 4 \(\times\) 10-5M
pH = -log10[H3O+] log1010 = 1
\(\begin{aligned}
& \mathrm{pH}=-\log _{10}\left[4 \times 10^{-5}\right]
\end{aligned}\)
\(\begin{aligned}
\mathrm{pH}=-\log _{10}[4]-\log _{10}\left[10^{-5}\right]
\end{aligned}\)
\(\begin{aligned}
\mathrm{pH}=-\log 4+5 \log _{10} 10
\end{aligned}\)
= 5 - log10 4
= 5 - 0.6021
= 4.3979
pH மதிப்பு 7விடக் குறைவாக இருக்கும்போது கரைசலானது அமிலமாக இருக்கும்.
12.
லூயி கொள்கைப்படி, ஓர் எலக்ட்ரான் இரட்டையை வழங்கும் சேர்மம் லூயி காரம் எனப்படும்.
நீரிலுள்ள ஆக்ஸிஜனை விட, NH3யிலுள்ள, நைட்ரஜன் ஆனது குறைந்த எலக்ட்ரான் கவர் தன்மையுடையது. ஆக்ஸிஜன் அணு மீதுள்ள பிணைப்புறா எலக்ட்ரான் இரட்டையை விட, நைட்ரஜன் மீதுள்ள பிணைப்புறா எலக்ட்ரான் இரட்டையானது பங்கிடுதலுக்கு அதிகமாக கிடைக்கிறது. எனவே H2O வை விட NH3 ஒரு வலிமையான காரமாகும்.
13.
\(\mathrm{HClO}_4 \rightleftharpoons \mathrm{H}^{+}+\mathrm{ClO}_4^{-}\)
ப்ரான்ஸ்டட் அமிலம் புரோட்டான் இணைகாரம் HCIO4 ஆனது ஒரு புரோட்டானை வழங்கவல்லது. எனவே HCIO4 ஓர் அமிலம். அதன் இணைகாரம் CIO4-ஆகும்.
14.
\(\text { i) } \mathrm{HS}_{(\mathrm{aq})}^{-}+\mathrm{HF}_{(\mathrm{aq})} \rightleftharpoons \mathrm{F}_{(\mathrm{aq})}^{-}+\mathrm{H}_2 \mathrm{~S}_{(\mathrm{aq})}\)
காரம் 2 அமிலம் 1 காரம்1 அமிலம் 2
\(\text { ii) } \mathrm{HPO}_4{ }^{2-}+\mathrm{SO}_3^{2-} \rightleftharpoons \mathrm{PO}_4^{3-}+\mathrm{HSO}_3^{-}\)
அமிலம் 1 காரம் 2 காரம் 1 அமிலம் 2
\(\text { iii) } \mathrm{NH}_4^{+}+\mathrm{CO}_3^{2-} \rightleftharpoons \mathrm{NH}_3+\mathrm{HCO}_3^{-}\)
அமிலம் 1 காரம் 2 காரம் 1 அமிலம் 2
a) HS-(aq) & H2S(aq) b) HF(aq) & F-(aq)
b) HPO42- & PO43- b) SO32- & HSO-3
a) NH4+ & NH3 b) CO32- & HCO-3
15.
\(\begin{array}{rl}
\mathrm{Ca}_3\left(\mathrm{PO}_4\right)_2(\mathrm{~s}) \rightleftharpoons 3 \mathrm{Ca}^{2+}(\mathrm{aq})+2 \mathrm{PO}_4^{3-}(\mathrm{aq}) \\
\end{array}\)
S 3S 2S
\(\begin{array}{rl}
\mathrm{~K}_{\mathrm{sP}} & =\left[\mathrm{Ca}^{2+}\right]^3\left[\mathrm{Po}_4^{3-}\right]^2
\end{array}\)
\(\begin{array}{rl}
\mathrm{~K}_{\mathrm{sp}} & =(3 \mathrm{~S})^3(2 \mathrm{~S})^2
\end{array}\)
\(\begin{array}{rl}
=27 \mathrm{~s}^3 4 \mathrm{~s}^2
\end{array}\)
\(\begin{array}{rl}
\mathrm{~K}_{\mathrm{sp}} & =108 \mathrm{~s}^5
\end{array}\)
மாற்றுமுறை:
Ksp = mm. nn(s)m+n
\(=3^3 \cdot 2^2 \cdot_{(\mathrm{s})}\space^{3+2}=27 \times 4 \times \mathrm{s}^5\)
= 108 s5
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards