12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 06/12/2019
உலோகவியல்
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
கார்பனேட் தாதுவை காற்றில்லா சூழலில் வறுக்கும் போது வெளிப்படும் வாயு ____________
கார்பன் மோனாக்சைடு
கார்பன் டை ஆக்சைடு
சல்பர் டை ஆக்சைடு
நைட்ரஜன் டை ஆக்சைடு
2.
கலீனாவில் காணப்படும் மாசு ZnS ன் நுரைக்கும் தன்மையை குறைக்கும் பொருள் _________.
பைன் எண்ணெய்
யூகலிப்டஸ் எண்ணெய்
சோடியம் சயனைடு
சோடியம் ஈத்தைல் சாந்தேட்
3.
நுரை மிதப்பு முறையில் சோடியம் சயனைடு _________ ஆக பயன்படுகிறது.
சேகரிப்பான்
குறைக்கும் காரணி
நுரை உருவாக்கும் காரணி
இளக்கி
4.
புவி ஈர்ப்பு முறையில் அடர்ப்பிக்கப்படும் தாது வகை ________.
ஆக்சைடு தாது
சல்பைடு தாது
கார்பனேட் தாது
சல்பேட் தாது
5.
தாதுக்களுடன் உள்ள உலோகத் தன்மையற்ற மாசுகள், பாறைப்பொருட்கள் மற்றும் மண் மாசுகள் ஆகியன _________ என அழைக்கப்படுகின்றது.
கசடு
இளக்கி
கனிமக் கழிவு
கழிவு
6.
தங்கத்தின் பயன்பாடுகள் பற்றி எழுதுக.
7.
தாமிரத்தின் பயன்களை எழுது.
8.
உலோகத்தைத் தூய்மையாக்கும் உருக்கிப்பிரித்தல் முறை பற்றி எழுது.
9.
உலோகத்தை தூய்மையாக்கும் வாலை வடித்தல் முறை பற்றி எழுது.
10.
உலோகங்களை தூய்மையாக்கும் செயல்முறைகள் என்றால் என்ன?
11.
இரும்பின் பயன்களை எழுது.
12.
துத்தநாகத்தின் பயன்பாடுகள் யாவை?
13.
அலுமினியத்தின் பயன்பாடுகள் யாவை?
14.
வான் ஆர்கல் முறையில் சிர்கோனியம் / டைட்டேனியத்தை தூய்மையாக்குவது பற்றி எழுது.
15.
எலிங்கம் வரைபடத்திலிருந்து உற்று நோக்கி உணரப்படுபவை யாவை?
16.
எலிங்கம் வரைபடத்தின் பயன்பாட்டினை விளக்கு.
17.
உலோகவியலின் இயக்கவியல் தத்துவங்களை விளக்கு.
18.
காப்பர் அதன் தாதுவிலிருந்து எவ்வாறு பிரித்தெடுக்கப்படுகிறது?
19.
நுரை மிதப்பு முறையினை விளக்கு.
1.
(b)
கார்பன் டை ஆக்சைடு
2.
(c)
சோடியம் சயனைடு
3.
(b)
குறைக்கும் காரணி
4.
(a)
ஆக்சைடு தாது
5.
(c)
கனிமக் கழிவு
6.
1. தங்கம் ஒரு விலையுயர்ந்த உலோகமாகும்.
2. நாணயங்கள் தயாரிக்க பயன்படுகிறது.
3. சில நாடுகளில் பண மதிப்பானது தங்கத்தின் மதிப்பில் கணக்கிடப்படுகிறது.
4. தாமிரத்துடன் சேர்ந்த தங்க உலோகக் கலவை நகை தயாரிப்பில் அதிக அளவு பயன்படுகிறது.
5. பிற உலோகங்கள் மீது தங்க மின்முலாம் பூச பயன்படுகிறது.
6. தங்க முலாம் பூசப்பட்ட பொருள்கள், கைக்கடிகாரங்கள், செயற்கை மூட்டுகள், விலை குறைந்த நகைகள், பல் பாதுகாப்பில் பல் நிரப்புதல் மற்றும் மின் இணைப்புகள் ஆகியவற்றில் பயன்படுகிறது.
7. சோலார் செல்களின் திறனை அதிகரிக்கவும், வினைவேக மாற்றியாகவும் தங்க நானோ துகள்கள் பயன்படுகின்றன.
7.
1. மனிதர்களால் முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட உலோகம் தாமிரம் ஆகும்.
2. இதன் உலோகக் கலவையான வெண்கலத்தின் பயன்பாட்டினால் வெண்கலக் காலம் என்ற சகாப்தம் உருவானது.
3. தங்கம் மற்றும் பிற உலோகங்களோடு இணைந்து நாணயங்கள், நகை பொருட்கள் தயாரிக்க தாமிரம் பயன்படுகிறது.
4. தாமிரம் மற்றும் அதன் உலோக கலவைகள் ஆகியன மின்கம்பிகள், நீர் செல்லும் குழாய்கள் மற்றும் பல மின் பொருளின் பாகங்கள் தயாரிக்க பயன்படுகிறது.
8.
1. குறைந்த உருகுநிலைகளைக் கொண்ட உலோகங்களை அதிகக் உருகுநிலைகளைக் கொண்ட மாசுக்களிலிருந்து நீக்க இம்முறை பயன்படுகிறது.
2. (எ.கா.) டின், காரீயம், மெர்க்குரி, பிஸ்மத்
3. பண்படா உலோகம் வெப்பத்தினால் உருக்கி நீர்மமாக்கப்பட்டு ஒரு சாய்தள பரப்பின் வழியே ஓடுமாறு செய்து தூய்மைப்படுத்தப்படுகிறது.
4. பண்படா உலோகம் ஒரு எதிர் அனல் உலையின் சாய்வான அடிப்புறத்தில் வைக்கப்படுகிறது.
5. காற்றில்லாச் சூழலில் உலோகம் அதன் உருகு நிலையை விட அதிகமான வெப்பநிலையில் வெப்பப்படுத்தப்படுகிறது.
6. தூய உருகிய உலோகம் வழிந்தோடுகிறது.
7. மாசுக்கள் அப்படியே தங்கி விடுகின்றன.
8. உருகிய உலோகம் சேகரிக்கப்பட்டு திண்மமாக்கப்படுகிறது.
9.
1. குறைவான கொதிநிலையில் ஆவியாகும் துத்தநாகம், மெர்க்குரி போன்ற உலோகங்களை தூய்மையாக்க இம்முறை பயன்படுகிறது.
2. இம்முறையில் தூய்மையற்ற உலோகம் வெப்பப்படுத்தப்பட்டு ஆவியாக்கப்படுகிறது.
3. பின்னர் ஆவியானது குளிர்விக்கப்பட்டு தூய உலோகம் பெறப்படுகிறது.
10.
ஒரு உலோகம் அதன் தாதுவிலிருந்து பிரிக்கப்படும் போது காணப்படும் பொதுவாக வினைபுரியாத ஆக்சைடுகள், பிற உலோகங்கள், அலோகங்கள் போன்ற மாசுக்களை பண்படா உலோகத்திலிருந்து பிரித்தெடுக்கும் செயல்முறைகள் தூய்மையாக்கும் செயல்முறைகள் எனப்படும்.
11.
1. அதிக பயன்களைக் கொண்ட உலோகமான இரும்பு மற்றும் அதன் உலோகக் கலவைகள் பாலங்கள், இருசக்கர வாகனச் சங்கிலிகள், நறுக்க பயன்படும் உபகரணங்கள் மற்றும் துப்பாக்கி தோட்டா செலுத்தப்படும் குழாய்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
2. வார்ப்பிரும்பு குழாய்கள், வால்வுகள், எரிபொருள் காற்றழுத்த அடுப்புகள் தயாரிக்கப் பயன்படுகிறது.
3. இரும்பு, அதன் உலோகக் கலவைகள் மற்றும் சேர்மங்கள் காந்தங்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன.
4. அதிக அளவில் அரிமானத்திற்கு உட்படாததால் துருப்பிடிக்காத எஃகு, கட்டிடத் தொழில், தாங்கிகள், முனை மடிக்கும் உளிகள், வெட்டுக்கருவிகள், நகை பொருட்கள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பயன்படும் கருவிகள் தயாரிக்கப் பயன்படுகிறது.
5. நிக்கல் ஸ்டீல் கம்பி வடங்கள், மோட்டார் வாகன மற்றும் விமான பகுதிப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
6. குரோம்ஸ்டீல் வெட்டுக் கருவிகள் மற்றும் நொறுக்கும் எந்திரங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
12.
1. துத்தநாகம் எஃகு மற்றும் இரும்பு அமைப்புகள் அரிமானம் மற்றும் துருப்பிடிக்காமல் பாதுகாக்கும் துத்தநாகப்பூச்சில் (கால்வனைசேஷன்) பயன்படுகிறது.
2. துத்தநாகம் மோட்டார் வாகன அச்சு வார்ப்பு மற்றும் மின்சாதனப் பொருட்களில் பயன்படுகிறது.
3. துத்தநாக ஆக்சைடு பெயிண்ட், ரப்பர், அழகு சாதனப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், நெகிழிகள், மை, மின்கலன்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
4. துத்தநாக சல்பைடு ஒளிரும் பெயிண்ட், ஒளிரும் மின்விளக்குகள், மற்றும் X-கதிர் திரை ஆகியன தயாரிக்க பயன்படுகிறது.
5. துத்தநாக உலோகக் கலவையான பித்தளை அரிமானம் அடையாத தன்மையைப் பெற்றிருப்பதால் குழாய் வால்வுகள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் தயாரிக்க பயன்படுகிறது.
13.
1. அன்றாட வாழ்வில் பயன்படும் சமையல் கலன்கள், வெப்ப பரிமாற்றிகள் தயாரித்தலில் அலுமினியம் பயன்படுகிறது.
2. உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல கட்டும் பொருளாக அலுமினியத்தாள் பயன்படுகிறது.
3. காப்பர், மாங்கனீசு, மெக்னீசியம் மற்றும் சிலிக்கன் ஆகியவற்றுடன் சேர்ந்து குறைவான எடையுடைய வலிமை மிக்க உலோகக்கலவைகளை அலுமினியம் தருவதால் அவை ஆகாய விமானங்கள், மற்றும் பிற போக்குவரத்து வாகனங்களை வடிவமைப்பதில் பயன்படுகிறது.
4. எளிதாக அரிமானம் அடையாததால் அலுமினியம் வேதி உலைகள், மருத்துவ உபகரணங்கள், குளிர்சாதனப் பொருட்கள் மற்றும் வாயுக்களை எடுத்துச் செல்லும் குழாய்கள் ஆகியவற்றில் பயன்படுகிறது.
5. விலை குறைவான, நன்கு மின் கடத்தும் பண்பு கொண்ட அலுமினியம், இரும்பு உள்ளகத்துடன் கூடிய உயர் அழுத்த மின் கம்பிகளில் பயன்படுகிறது.
14.
1. இம்முறை உலோகச் சேர்மங்களின் வெப்பச் சிதைவினை பயன்படுத்தி தூய உலோகங்களை உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்டது.
2. (எ.கா.) டைட்டேனியம், சிர்கோனியம்
3. வெற்றிடமாக்கப்பட்ட ஒரு கலனில் தூய்மையற்ற டைட்டேனியம் 550K வெப்பநிலையில் அயோடினுடன் வெப்பப்படுத்தப்பட்டு ஆவியாகும் இயல்புடைய டைட்டேனியம் டெட்ரா அயோடைடு உருவாக்கப்படுகிறது.
4. அயோடினுடன் வினைபுரியாமல் மாசுக்கள் அப்படியே தங்குகின்றன.
Ti(S) + 2I2(S) ⟶ TiI4(ஆவி)
5. டங்ஸ்டன் மின்னிழை வழியே 1800K வெப்பநிலையில் எளிதில் ஆவியாகும் டைட்டேனியம் டெட்ரா அயோடைடு செலுத்தப்படும்போது சிதைவடைந்து தூய டைட்டேனியம் உருவாகிறது.
6. டைட்டேனியம் மின்னிழையில் படிகிறது.
7. அயோடின் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.
TiI4(ஆவி) ⟶ Ti(S) + 2I2(S)
15.
1. பெரும்பாலான உலோக ஆக்சைடுகள் உருவாகும் வினைகளின் சாய்வு, நேர்குறி மதிப்புடையது. காரணம், உலோக ஆக்சைடுகள் உருவாதலின் போது ஆக்சிஜன் வாயு பயன்படுவதால் அதன் ஒழுங்கற்றத் தன்மையில் குறைவு ஏற்படுகிறது. எனவே ∆S எதிர்குறி மதிப்பினை பெறுகிறது. இதனால் நேர்கோட்டின் சமன்பாட்டில் உள்ள T∆S ஆனது நேர்குறி மதிப்பினைப் பெறுகிறது.
2. கார்பன் மோனாக்சைடு உருவாதலுக்கான வரைபடம் எதிர்குறி சாய்வுடன் கூடிய நேர்கோடாகும். இந்நிகழ்வில் ஒரு மோல் ஆக்சிஜன் பயன்படும்போது இரு மோல் கார்பன் மோனாக்சைடு வாயு உருவாகிறது. எனவே ஒழுங்கற்ற தன்மை அதிகரித்து ∆S நேர்குறி மதிப்பு பெறுகிறது. இதிலிருந்து CO ஆனது அதிக வெப்பநிலையில் அதிக நிலைப்புத் தன்மை பெற்றுள்ளதை அறிய முடிகிறது.
3. வெப்பநிலை அதிகரிக்கும்போது, உலோக ஆக்சைடுகள் உருவாகும் வினைக்கான ∆G ன் மதிப்பு குறைவான எதிர்குறி மதிப்பினைப் பெற்று, ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் பூஜ்ய மதிப்பினை அடைகிறது. இவ்வெப்பநிலைக்குக் கீழ் ∆G மதிப்பு எதிர்குறியுடையது. மேலும் உலோக ஆக்சைடு நிலைப்புத் தன்மையுடையது. இவ்வெப்பநிலைக்கு மேல் ∆G நேர்குறி மதிப்பினை பெறுகிறது. பொதுவாக உயர் வெப்பநிலைகளில் உலோக ஆக்சைடுகள் குறைவான நிலைப்புத் தன்மையினைப் பெற்றுள்ளன, எனவே அவைகளைச் சிதைவுறச் செய்தல் எளிதானது.
4. நிலைமை மாற்றம் (உருகுதல், ஆவியாதல்) காரணமாக, ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் MgO, HgO போன்ற சில உலோக ஆக்சைடுகளின் சாய்வில் திடீரென மாற்றம் ஏற்படுகிறது.
16.
1. எலிங்கம் வரைபடம் ஒடுக்க வினைகள் நிகழும் வெப்பநிலை எல்லைகளை தீர்மானிப்பதற்கும், தகுந்த ஒடுக்கும் காரணிகளைத் தெரிவு செய்யவும் பயன்படுகிறது.
2. உலோக ஆக்சைடு, உலோகமாக ஒடுக்கப்படும் வினையை ஒடுக்கத்திற்கு பயன்படும் தனிமம் மற்றும் பிரிக்கப்படவேண்டிய உலோகம் இரண்டிற்கும் இடையே ஆக்சிஜனுடன் இணைந்து ஆக்சைடை உருவாக்குவதற்கான போட்டி வினையாக கருதலாம்.
3. உலோக ஆக்சைடு அதிக நிலைப்புத்தன்மையுடையது எனில் ஆக்சிஜன் உலோகத்தோடு இணைந்தே இருக்கும்.
4. ஒடுக்கத்திற்கு பயன்படும் தனிமத்தின் ஆக்சைடு அதிக நிலைப்புத் தன்மையுடையது எனில் உலோக ஆக்சைடில் உள்ள ஆக்சிஜன் ஒடுக்கத்திற்கு பயன்படும் தனிமத்துடன் இணைகிறது.
5. எலிங்கம் வரைபடத்திலிருந்து, கொடுக்கப்பட்ட வெப்பநிலையில் வெவ்வேறு உலோக ஆக்சைடுகளின் ஒப்பீட்டு நிலைப்புத் தன்மையினை அறிந்து கொள்ளலாம்.
6. Ag2O மற்றும் HgO ஆகியவை உருவாதலுக்கான வரைகோடுகள் எலிங்கம் வரைபடத்தின் மேற்பகுதியில் அமைந்துள்ளது. அவைகளின் சிதைவுறு வெப்பநிலைகள் முறையே 600 மற்றும் 700K ஆகும். எனவே இவை மிதமான வெப்பநிலைகளில் நிலைப்புத் தன்மையற்றவை. மேலும் எவ்வித ஒடுக்க காரணிகளையும் பயன்படுத்தாமல் வெப்பத்தின் மூலம் இவைகளைச் சிதைவடையச் செய்ய இயலும்.
7. எலிங்கம் வரைபடத்தை பயன்படுத்தி ஒரு உலோகத்தின் ஆக்சைடை மற்றொரு உலோகத்தால் ஒடுக்கம் செய்வதற்கான வெப்ப இயக்கவியல் சாத்தியத் தன்மையினை தீர்மானிக்க இயலும்.
8. எந்த ஒரு உலோகமும், எலிங்கம் வரைபடத்தில் அதற்கு மேற்புறம் வரைகோடுகளைப் பெற்றுள்ள உலோக ஆக்சைடுகளை ஒடுக்க இயலும்.
9. எடுத்துக்காட்டாக, எலிங்கம் வரைபடத்தில் குரோமியம் ஆக்சைடு உருவாதலுக்கான வரைகோடு அலுமினியத்திற்கு மேல் இடம் பெற்றுள்ளது. Al2O3 ஆனது Cr2O3 ஐ விட அதிக நிலைப்புத் தன்மையுடையது. எனவே குரோமிக் ஆக்சைடை ஒடுக்குவதற்கு அலுமினியத்தை பயன்படுத்த இயலும்.
10. எனினும் அலுமினியம் ஆக்சைடிற்கு கீழ்ப்புறத்தில் வரைக்கோட்டினை பெற்றுள்ள மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்றவற்றின் ஆக்சைடுகளை ஒடுக்க அலுமினியத்தை பயன்படுத்த இயலாது.
11. கார்பனின் நேர்கோடானது பெரும்பாலான உலோக ஆக்சைடுகளின் நேர்கோடுகளை வெட்டுகிறது. எனவே அத்தகைய அனைத்து ஆக்சைடுகளையும் போதுமான அதிக வெப்பநிலையில் கார்பனால் ஒடுக்க இயலும்.
17.
1. வெவ்வேறு ஒடுக்கும் காரணிகளை பயன்படுத்தி உலோக ஆக்சைடுகளிலிருந்து உலோகங்களை பிரித்தெடுக்கலாம்.
2. MxOy என்ற உலோக ஆக்சைடின் ஒடுக்கும் வினையைக் கருதுக.
\(\frac { 2 }{ Y }\) MxOy(s) ➝ \(\frac { 2X }{ Y } \) Ms + O2(g) .............1
3. மேற்கண்ட ஒடுக்க வினையை கார்பனைக் கொண்டு நிகழ்த்தலாம். இந்நிகழ்வில் ஒடுக்கும் காரணி கார்பன் CO அல்லது CO2 ஆக ஆக்சிஜனேற்றம் அடையலாம்.
C + O2 ➝ CO2(g) ............2
2C + O2 ➝ 2CO(g) ............3
4. கார்பன் மோனாக்சைடு ஒடுக்கியாக பயன்பட்டால் அது CO2 ஆக ஆக்சிஜனேற்றமடைகிறது.
2CO + O2 ➝ 2CO2 ............4
5. வெப்ப இயக்கவியல் கொள்கைகளின் படி தகுந்த ஒடுக்கம் காரணியினை தேர்வு செய்ய வேண்டும்.
6. ஒரு தனிச்சை வினைக்கு கட்டிலா ஆற்றல் மாற்றம் (∆G) கண்டிப்பாக எதிர்குறி மதிப்பினை பெற்றிருக்க வேண்டும்.
7. எனவே சமன்பாடு 1ல் கண்ட உலோக ஆக்சைடை கொடுக்கப்பட்ட ஒரு ஒடுக்கும் காரணியுடன் (சமன்பாடு 2, 3 அல்லது 4) சேர்த்து ஒடுக்க வேண்டுமெனில், இணைக்கப்பட்ட வினைகளின் (சமன்பாடுகள் 1 & 2, 1 & 3 அல்லது 1 & 4) கட்டிலா ஆற்றல் மாற்றம் ∆G எதிர்குறி மதிப்பினை பெற்றிருக்க வேண்டும்.
8. எனவே கட்டிலா ஆற்றல் மாற்றம் ∆G அதிக எதிர்குறி மதிப்பினை பெறும் வகையில் ஒடுக்கும் காரணி தெரிவு செய்யப்படுகிறது.
18.
1. முக்கிய தாது: காப்பர் பைரைட்
2. அடர்ப்பித்தல்: நுரை மிதப்பு முறை
3. அடர்ப்பிக்கப்பட்ட தாது எதிர் அனல் உலையில் அமிலத்தன்மையுடைய இளக்கியான சிலிக்காவுடன் வெப்பப்படுத்தப்படுகிறது.
4. உருவாகும் காரத்தன்மையுடைய பெரஸ் ஆக்சைடு, சிலிக்காவுடன் இணைந்து பெரஸ் சிலிக்கேட் எனும் கனிமக் கசடினைத் தருகிறது.
5. எஞ்சியுள்ள உலோக சல்பைடுகள் Cu2S மற்றும் FeS ஒன்றுடன் ஒன்று கரைந்து காப்பர் மட்டி உருவாகிறது.
2CuFeS2(s) + O2(g) ➝ 2FeS(l) + Cu2S(l) + 2SO2(g)
2FeS(l) + 3O2(g) ➝ 2FeO(l) + 2SO2(g)
FeO(s) + SiO2(s) ➝ FeSiO3(s)
கனிமக்கழிவு இளக்கி கனிமக் கசடு
6. கனிமக் கழிவுகளிலிருந்து காப்பர் மட்டி பிரிக்கப்பட்டு மாற்று உலையில் இடப்படுகிறது.
7. மட்டியில் உள்ள FeS முதலில் FeO ஆக ஆக்சிஜனேற்றமடைகிறது.
8. FeO சிலிக்காவுடன் கனிமக் கசடாக நீக்கப்படுகிறது.
9. எஞ்சியுள்ள காப்பர் சல்பைடு மேலும் ஆக்சிஜனேற்றத்திற்கு உட்பட்டு காப்பர் ஆக்சைடாக மாற்றப்படுகிறது.
10. காப்பர் ஆக்சைடு, மற்றும் காப்பர் சல்பைடு வினைபுரிந்து காப்பரைத் தருகின்றன.
2Cu2S(l,s) + 3O2(g) ➝ 2Cu2S(l,s) + 2SO2(g)
2Cu2O(l) + Cu2S(l) ➝ 6Cu(l) + SO2(g)
11. உருகிய காப்பர் திண்மமாக்கும்போது SO2 வாயு வெளியேறுவதால் அதன் தோற்ற அமைப்பில் கொப்புளங்கள் போல் காணப்படுகிறது. இந்தக் காப்பர் கொப்புளக்காப்பர் எனப்படுகிறது.
மின்னாற் தூய்மையாக்கல்:
எதிர்மின்வாய்: தூய காப்பர் தகடு
நேர்மின்வாய்: தூய்மையற்ற காப்பர் தண்டு
மின்பகுளி: CuSO4 கரைசல் + நீர்த்த H2SO4
மின்சாரத்தை செலுத்தும்போது தூய காப்பர் எதிர்மின்வாயில் படிகிறது.
19.
1. இம்முறை சல்பைடு தாதுக்களான கலீனா (PbS) ஜிங்க் பிளண்ட் (ZnS) போன்றவற்றை அடர்ப்பிக்க பயன்படுகிறது.
2. உலோகத் தாதுத் துகள்கள் எண்ணெயில் அதிக அளவில் நனைவதால் அவைகளைக் கனிமக் கழிவுகளிலிருந்து பிரித்தெடுக்க இயலும்.
3. நன்கு தூளாக்கப்பட்ட தாது பைன் எண்ணெய், யூக்கலிப்டஸ் எண்ணெய் போன்ற நுரை உருவாக்கும் காரணிகளுடன் கலக்கப்படுகின்றன.
4. சேகரிப்பானாக செயல்பட சிறிதளவு சோடியம் ஈத்தைல் சாந்தேட் சேர்க்கப்படுகிறது.
5. கலவையின் வழியே காற்று செலுத்தப்பட்டு நுரை உருவாக்கப்படுகிறது.
6. சேகரிப்பான் மூலக்கூறுகள் தாதுத் துகள்களுடன் இணைந்து அவற்றை நீர் விலக்கும் தன்மையுடையதாக மாற்றுகிறது.
7. இதன் விளைவாக தாதுத் துகள்கள் எண்ணெயில் நன்கு நனைந்து, நுரையுடன் சேர்ந்து புறப்பரப்பை அடைகின்றன.
8. நுரையானது வழித்தெடுக்கப்பட்டு, உலர்த்தப்பட்டு செறிவான தாது பெறப்படுகிறது.
9. நீரில் நனையும் கனிம கழிவுத்துகள்கள் அடிப்பகுதியில் தங்கி விடுகின்றன.
10. பிரித்தெடுக்க விரும்பும் ஒரு உலோகத்தின் சல்பைடு தாதுவில் மற்ற பிற உலோக சல்பைடுகள் மாசுகளாக காணப்பட்டால் சோடியம் சயனைடு, சோடியம் கார்பனேட் போன்றவை குறைக்கும் காரணிகளாக பயன்படுகின்றன.
11. குறைக்கும் காரணிகள் மற்ற பிற உலோக சல்பைடுகள் எண்ணெயில் நனைந்து நுரைத்து வருவதைத் தடுக்கின்றன.
12. (எ.கா) கலீனாவில் (PbS) காணப்படும் மாசுப்பொருள் ZnS ஆனது, குறைக்கும் காரணி சோடியம் சயனைடுடன் வினைபுரிந்து Na2[Zn(CN)4] என்ற அணைவுச் சேர்மமாக ஜிங்சல்பைடின் புறப்பரப்பில் உருவாகிறது. எனவே ZnS ன் நுரைக்கும் தன்மை குறைக்கப்படுகிறது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards