12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 03/10/2019
உலோகவியல்
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
அலுமினியத்தின் மின்னாற் உலோகவியலை விளக்குக.
2.
புலத்தூய்மையாக்கல் முறையினை ஒரு எடுத்துக்காட்டுடன் விவரி.
3.
உருக்குதல் பற்றி விவரி.
4.
காற்றில்லாச் சூழலில் வறுத்தல் என்றால் என்ன?
5.
காந்த பிரிப்பு முறை பற்றி எழுது.
6.
கார வேதிக் கழுவுதல் பற்றி எழுது.
7.
சயனைடு வேதிக் கழுவுதல் என்றால் என்ன?
8.
(அ) எலிங்கம் வரைபடத்தினை பயன்படுத்தி பின்வரும் நிகழ்வுகளுக்கான நிபந்தனைகளை கண்டறிக.
i . மெக்னீசியாவை அலுமினியத்தைக் கொண்டு ஒடுக்குதல்
ii. மெக்னீசியத்தைக் கொண்டு அலுமினாவை ஒடுக்குதல்.
(ஆ) T ஏறத்தாழ 1200K வெப்பநிலையில் Fe2O3 யைக் கார்பனைக் கொண்டு ஒடுக்க இயலுமா?
9.
வாயு நிலைமைத் தூய்மையாக்கலுக்கான அடிப்படைத் தேவைகளை தருக.
10.
பின்வருவனவற்றை தகுந்த உதாரணங்களுடன் விளக்குக.
(அ) மாசு
(ஆ) கசடு
1.
அலுமினியத்தின் மின்வேதிபிரிப்புமுறை ஹால் ஹெரால்டு முறை எனப்படும்.
எதிர்மின்வாய்
இம்முறையில் கார்பன் மேல் பூச்சு பூசப்பட்ட ஒரு இரும்புத் தொட்டியில் மின்னாற் பகுத்தல் நிகழ்த்தப்படுகிறது. இது எதிர்மின் வாயிலாக செயல்படுகிறது.
நேர்மின்வாய்
மின்பகுளியில் அமிழ்த்தி வைக்கப்பட்டுள்ள கார்பன் தண்டுகள் நேர்மின்வாயாகச் செயல்படுகின்றன.
மின்பகுளி
1. பாக்சைட்டிலிருந்து பெறப்பட்ட 20% அலுமினாக் கரைசல் உருகிய நிலையில் உள்ள கிரையோலைட்டுடன் கலக்கப்பட்டு மின்பகு கலனில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
2. 10% கால்சியம் குளோரைடு கரைசல் மின்பகுகரைசலுடன் சேர்க்கப்படுகிறது. இங்கு கால்சியம் குளோரைடானது கலவையின் உருகுநிலையை குறைக்கப் பயன்படுகிறது.
வெப்பநிலை
1. உருகிய கலவையான 1270 K வெப்பநிலைக்கு மேல் இருக்குமாறு பராமரிக்கப்படுகிறது.
2. இச்செயல்முறையில் நிகழும் வேதிவினைகள் பின்வருமாறு
3. அலுமினாவின் அயனியாக்கம்
Al2O3 ➝ 2Al3+ + 3O2-
4. எதிர்மின்வாயில் நிகழும் வினை
2Al3+ (உருகிய நிலை) + 6e- ➝ 2Al(1)
5. நேர்மின்வாயில் நிகழும் வினை
6O2- (உருகிய நிலை) ➝ 3O2 + 12e-
5. கார்பன் நேர்மின்வாயாக செயல்படுவதால் அதில் பின்வரும் வினைகளும் நிகழ்கிறது.
C(S) + O2- (melt) ➝ CO + 2e-
C(S) + 2O2- (melt) ➝ CO2 + 4e-
6. மேற்கண்ட இரு வினைகளின் காரணமாக மின்னாற் பகுத்தலின்போது நேர்மின்வாய் மெதுவாக கரைகிறது.
7. எதிர்மின்வாய் தூய அலுமினியம் வீழ்படிவாகி மின்பகு கலனின் அடிப்பகுதியில் தங்குகிறது.
8. மின்னாற்பகுத்தலின் நிகர வினை:
4Al3+ (உருகிய நிலை) + 6O2- (உருகிய நிலை) + 3C(S) ➝ 4Al(1) + 3CO2(g)
2.
1. புலத்தூய்மையாக்கல் முறையானது பின் படிகமாக்கல் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.
2. தூய்மையற்ற நிலையில் உள்ள உலோகத்தை உருக்கி பின் திண்மமாக்கும் போது, மாசுக்கள் உருகுநிலையில் உள்ள பகுதியில் தங்குகின்றன. அதாவது மாசுக்கள் திண்ம நிலை உலோகத்தில் கரைவதைக் காட்டிலும் உருகிய நிலையில் உள்ள உலோகத்தில் அதிக அளவில் கரைகின்றன.
3. இம்முறையில் தூய்மையற்ற உலோகம் ஒரு தண்டு வடிவில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
4. தண்டின் ஒரு முனையானது நகர்ந்து செல்லும் தூண்டு வெப்பப்படுத்தியைப் பயன்படுத்தி வெப்பப்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக தண்டின் அப்பகுதியில் உள்ள உலோகம் உருகுகிறது.
5. வெப்பப்படுத்தியினை மெதுவாக மறுமுனையினை நோக்கி நகர்த்திச் செல்லும் போது தூய உலோகம் படிகமாகிறது அதே நேரத்தில் வெப்பப்படுத்தி நகர்த்தப்பட்டதால் புதிதாக உருவான உருகிய நிலை புலத்திற்கு (பகுதிக்கு) மாசுக்கள் இடம்பெயர்கின்றன.
6. வெப்பப்படுத்தியை மேலும் நகர்த்தும் போது, மாசுக்களைக் கொண்டுள்ள உருகிய நிலைப்பகுதியானது அதனுடன் சேர்ந்து நகர்கிறது.
7. இச்செயல்முறையானது பலமுறை மீண்டும் ஒரே திசையில் நிகழ்த்தப்பட்டு, தேவையான தூய்மைத் தன்மையுடைய உலோகம் பெறப்படுகிறது. உலோகம் ஆக்சிஜனேற்றம் அடைவதை தடுக்க இச்செயல்முறையானது, மந்த வாயு சூழலில் நிகழ்த்தப்படுகிறது.
8. ஜெர்மானியம் (Ge), சிலிக்கான் (Si), மற்றும் காலியம் (Ga) போன்ற குறைகடத்திகளாகப் பயன்படும் தனிமங்கள் இம்முறையில் தூய்மைப்படுத்தப்படுகின்றன.
3.
1. ஒரு உருக்கு உலையில் அடர்ப்பிக்கப்பட்ட தாது ஒரு இளக்கி மற்றும் தகுந்த ஒடுக்கும் காரணியுடன், உலோகத்தின் உருகு நிலையை விட அதிக வெப்பநிலையில் உருக்கப்படுகிறது.
2. கனிமக் கழிவுடன் சேர்ந்து எளிதில் உருகும் கசடினை உருவாக்கும் வேதிப்பொருள் இளக்கி எனப்படும்.
3. (எ.கா.) சுட்ட சுண்ணாம்பு CaO.
4. கார்பன், கார்பன் மோனாக்சைடு, அலுமினியம் ஆகியன தகுந்த ஒடுக்கும் காரணிகள் ஆகும்.
5. இரும்பு ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடால் பின்வருமாறு ஒடுக்கப்படுகிறது.
Fe2O3(S) + 3CO(g) ⟶ 2Fe(S) + 3CO2(g) ↑
6. இத்தாதுவில் உள்ள அமிலத்தன்மையுடைய சிலிக்கா கனிமக் கழிவு, காரத்தன்மையுடைய இளக்கி சுட்ட சுண்ணாம்பினால் கால்சியம் சிலிக்கேட் எனும் கனிமக் கசடாக நீக்கப்படுகிறது.
CaO(S) + SiO2(S) ⟶ CaSiO3(S)
இளக்கி கனிமக்கழிவு கனிமக் கசடு
4.
1. அடர்ப்பிக்கப்பட்ட தாது, காற்றில்லாச் சூழலில் வன்மையாக வெப்பப்படுத்தப்படுகிறது.
2. இந்நிகழ்வில் நீரேற்றம் பெற்ற ஹைட்ராக்சைடுகளில் காணப்படும் படிக நீரானது ஆவியாக வெளியேறுகிறது.
3. கரிமச் சேர்மங்கள் ஏதேனும் இருப்பின் அவைகளும் வெளியேறி, தாது நுண் துளைகளுடன் காணப்படுகிறது.
4. இம்முறையில் தாதுக்களை கட்டுப்படுத்தப்பட்ட அளவு காற்றினை செலுத்தியும் வறுக்கலாம்.
5. இம்முறையில் கார்பனேட் தாதுக்களை வறுக்கும்போது கார்பன் டை ஆக்சைடு வெளியேறுகிறது.
PbCO3 \(\underrightarrow { ∆ }\) PbO + CO2 ↑
CaCO3 \(\underrightarrow { ∆ }\) CaO + CO2 ↑
6. படிக நீரைக் கொண்ட தாதுக்களிலிருந்து நீரானது, நீராவியாக வெளியேறுகிறது.
Al2O3.2H2O \(\underrightarrow { ∆ }\) Al2O3(S)+2H2O(g) ↑
5.
1. இம்முறை பெர்ரோ காந்தத் தன்மையுடைய தாதுக்களை அடர்ப்பிக்க பயன்படுகிறது.
2. தாது மற்றும் மாசுக்களின் காந்தப் பண்புகளில் காணப்படும் வேறுபாட்டினை அடிப்படையாகக் கொண்டது.
3. காந்தத் தன்மையற்ற வெள்ளீயக்கல் தாதுவை, காந்தத்தன்மை உடைய மாசு உல்ப்ரமைட்டிலிருந்து பிரித்தெடுக்க இம்முறை பயன்படுகிறது.
4. இதைப்போலவே காந்தப் பண்புடைய குரோமைட், பைரோலுசைட், தாதுக்களை காந்தப் பண்பற்ற மண் வகை மாசுக்களிலிருந்து பிரித்தெடுக்கலாம்.
5. நன்கு தூளாக்கப்பட்ட தாது இரு சுழல் சக்கரங்களைக் கொண்ட மின்காந்த பிரிப்பானின் நகரும் பட்டை மீது விழுமாறு செய்யப்படுகிறது.
6. சக்கரங்களில் ஒன்று காந்தத் தன்மை உடையது.
7. தாது நகரும் பட்டை வழியே காந்தத் தன்மையுடைய சூழல் சக்கரத்தை அடையும்போது, காந்தத் தன்மையுடைய பகுதிப் பொருட்கள் காந்தப்புலத்தால் ஈர்க்கப்பட்டு படத்தில் காட்டியவாறு சக்கரத்திற்கு அருகில் குவியலாக விழுகின்றன.
8. காந்தத் தன்மையற்ற தாதுவின் பிற பகுதிகள் சூழல் சக்கரத்திற்கு அப்பால் விழுகின்றன.

6.
1. தாது நீர்ம காரங்களுடன் வினைபட்டு கரையும் அணைவுச் சேர்மம் உருவாகிறது.
2. பாக்சைட் தாது சோடியம் ஹைட்ராக்சைடு அல்லது சோடியம் கார்பனேட் கரைசலுடன் 35 atm அழுத்தம் மற்றும் 470 - 520 K வெப்பநிலையில் வினைபுரிந்து கரையும் தன்மையுடைய சோடியம் மெட்டா அலுமினேட்டைத் தருகிறது.
3. இரும்பு ஆக்சைடு மற்றும் டைட்டேனியம் ஆக்சைடு போன்ற மாசுக்கள் கரையாமல் தங்கி விடுகின்றன.
Al2O3(S) + 2NaOH(aq) + 3H2O(l) ⟶ 2Na [Al(OH)4](aq)
4. சூடான கரைசல் வடிகட்டப்பட்டு, குளிர்விக்கப்பட்டு, நீர்க்கப்படுகிறது.
5. இக்கரைசல் வழியே CO2 வாயு செலுத்தப்பட்டு நடுநிலையாக்கப்படுவதால் நீரேற்றமடைந்த Al2O3 வீழ்ப்படிவாகிறது.
2Na[Al(OH)4](aq) + CO2(g) ⟶ Al2O3.XH2O(S) + 2NaHCO3(aq)
6. வீழ்படிவு வடிகட்டப்பட்டு சுமார் 1670K வெப்பநிலையில் வெப்பப்படுத்தும் போது தூய அலுமினா Al2O3 பெறப்படுகிறது.
7.
1. நன்கு தூளாக்கப்பட்ட தங்கத்தின் தாது நீர்த்த சோடியம் சயனைடு கரைசலுடன் காற்றினைச் செலுத்தி கழுவப்படுகிறது.
2. தங்கம் கரையக்கூடிய அணைவாக மாறுகிறது.
3. அலுமினோ சிலிக்கேட் கனிமக் கழிவு கரையாமல் அப்படியே தங்குகிறது.
4Au(S) + 8CN-(aq) + O2(g) + 2H2O(l) ⟶ 4[Au(CN)2]-(aq) + 4OH-(aq)
4. ஆக்சிஜன் நீக்கப்பட்ட கழுவிய கரைசல் துத்தநாகத்துடன் வினைபடும்போது தங்கம் பெறப்படுகிறது.
5. இதில் தங்கம் அதன் தனிம நிலைக்கு (பூஜ்ய ஆக்சிஜனேற்ற நிலை) ஒடுக்கப்படுகிறது.
6. இச்செயல்முறை தனிம நிலைக்கு ஒடுக்கி வீழ்ப்படிவாக்கல் எனப்படுகிறது.
Zn(S) + 2[Au(CN)2]-(aq) ⟶ [Zn(CN)4]2-(aq) + 2Au(S)
8.
(அ) i) Al2O3 உருவாதல் மற்றும் MgO உருவாதல் எலிங்கம் வரைபடம் சுமார் 1500°C அளவில் வெட்டுகின்றன. இவ்வெப்பநிலைக்கு மேல், MgO-வரைபடமானது அலுமினியம் வரைபடத்திற்கு மேலுள்ளது. எனவே 1500°Cக்கு மேல் அலுமினியம் ஆனது மெக்னீசியாவை ஒடுக்கும் என எதிர்பார்க்கலாம்.
ii) MgO உருவாதலின் எலிங்கம் வரைபடம், Al2O3 ஐவிட MgO அதிக நிலைப்புத் தன்மை உடையது. எனவே அலுமினாவை மெக்னீசியம் ஒடுக்கும்.
ஆ) ஏறத்தாழ 1200K வெப்பநிலையில் Fe2O3 யைக் கார்பனைக் கொண்டு ஒடுக்க இயலுமா?
ஏறத்தாழ 1200K வெப்பநிலையில், கார்பனின் எலிங்கம் வரைபடம், Fe2O3 உருவாதலின் வரை படத்தை விட கீழே உள்ளது. எனவே 1200Kல் Fe2O3 ஐ கார்பனைக் கொண்டு ஒடுக்க இயலும்.
9.
இம்முறையில் உலோகத்துடன் சேர்ந்து எளிதில் ஆவியாகும் சேர்மத்தை உருவாக்கும் ஒரு காரணியுடன் உலோகம் வினைப்படுத்தப்படுகிறது. பின் எளிதில் ஆவியாகும் சேர்மத்தை சிதைத்து தூய உலோகம் பெறப்படுகிறது.
10.
(அ) மாசு அல்லது கனிமக் கழிவு:
பொதுவாக, தாதுக்களுடன் உலோகத் தன்மையற்ற மாசுகள் பாறைப் பொருட்கள் மற்றும் மண் மாசுகள் போன்றவை இரண்டறக் கலந்துக் காணப்படும். இத்தகைய மாசுகள் அனைத்தும் சேர்த்துக் கனிமக் கழிவு (gangue) என அழைக்கப்படுகிறது.
(ஆ) கசடு:
உருக்கி பிரித்தலில், சிலிக்காவுடன் இளக்கி சேர்த்து கனிமக்கசடை தருகிறது.
CaO(S) + SiO2(S) ⟶ CaSiO3(S)
இளக்கி + கனிமக்கழிவு ⟶ கசடு
கனிமக்கசடு எளிதில் உருகக் கூடியதாகும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards