12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 06/12/2019
p-தொகுதி தனிமங்கள் - II
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
அம்மோனியா மூலக்கூறின் வடிவமைப்பு _________.
நான்முகி
பிரமிடு
சதுரத்தளம்
எண்முகி
2.
நைட்ரிக் அமிலத்தை வணிக ரீதியாக தயாரிக்கும் முறை _______.
ஹேபர் முறை
டெக்கான் முறை
தொடு முறை
ஆஸ்வால்ட் முறை
3.
நீரைப் போன்றே அம்மோனியாவும் சிறந்த அயனியுறும் கரைப்பானாக செயல்படுவதன் காரணம் அதன் மின்கடத்தாப் பொருள்மாறிலி மதிப்பு ______.
குறைவு
அதிகம்
பூஜ்யம்
ஒன்று
4.
யூரியாவை நீராற்பகுத்தால் கிடைப்பது _______.
NO2
HNO3
NH3
N2O
5.
அதி குளிர்நிலை அறுவைசிகிச்சைக்குத் தேவையான குறைந்த வெப்பநிலையை உருவாக்கப் பயன்படுவது _________.
திரவ ஆக்சிஜன்
திரவ நைட்ரஜன்
திரவ ஹைட்ரஜன்
திரவ அம்மோனியா
6.
சேமிக்கப்பட்ட நைட்ரிக் அமிலம் மஞ்சள் நிறமாக மாறுகிறது. ஏன்?
7.
அதிகளவு குளோரினுடன் அம்மோனியாவின் வினை யாது?
8.
ஹேலஜன் இடைச் சேர்மங்கள் உருவாக நிபந்தனைகள் யாவை?
9.
HF அமிலம் கண்ணாடி பாட்டில்களில் சேமிக்கப்படுவதில்லை. ஏன்?
10.
இராஜதிராவகம் என்றால் என்ன? தங்கத்தின் மீது அதன் வினை யாது?
11.
உலோகங்களுடன் கந்தக அமிலத்தின் வினை யாது?
12.
பாஸ்பரஸ் ஆக்சைடுகளின் அமைப்புகளை விவரி
13.
ஆஸ்வால்ட் முறை மூலம் நைட்ரிக் அமிலத்தின் வணிக ரீதியிலான தயாரிப்பினை விவரி.
1.
(b)
பிரமிடு
2.
(d)
ஆஸ்வால்ட் முறை
3.
(b)
அதிகம்
4.
(c)
NH3
5.
(b)
திரவ நைட்ரஜன்
6.
(i) தூய நைட்ரிக் அமிலம் நிறமற்றது
(ii) புகையும் நைட்ரிக் அமிலம் நைட்ரஜனின் ஆக்சைடுகளை கொண்டுள்ளது.
(iii) இது சூரிய ஒளிபடும் போதோ அல்லது வெப்பப்படுத்தும் போதோ சிதைவடைந்து நைட்ரஜன் டை ஆக்சைடு, நீர் மற்றும் ஆக்சிஜனாக மாற்றுகிறது.
4HNO3 ⟶ 4NO2 + 2H2O + O2
இவ்வினையின் காரணமாக நைட்ரிக் அமிலம் அல்லது அதன் அடர்க்கரைசல் மஞ்சள் நிறமாக மாறுகிறது.
7.
அதிகளவு குளோரினுடன் அம்மோனியா வினைபுரிந்து வெடிக்கும் தன்மையுடைய நைட்ரஜன் ட்ரைக் குளோரைடைத் தருகிறது.
2NH3 + 6Cl2 ⟶ 2NCl3 + 6HCl
8.
(i) மைய அணு பெரிய ஹேலஜன் அணுவாக அமைய வேண்டும்.
(ii) இரண்டு ஹேலஜன் அணுக்களிடையே மட்டுமே உருவாகிறது
(iii) இரண்டிற்கும் மேற்பட்ட வெவ்வேறு ஹேலஜன் இணைந்து இச்சேர்மங்கள் உருவாவதில்லை
(iv) மிகச் சிறிய உருவளவு மற்றும் அதிக எலக்ட்ரான் கவர்திறன் பெற்றிருப்பதால் புளுரின் அணுவால் மைய அணுவாக செயல்பட இயலாது.
9.
HF அமிலம் கண்ணாடியில் உள்ள சிலிக்கா மற்றும் சிலிகேட்டுகளுடன் வினைபுரிந்து, கண்ணாடியை அரிக்கிறது. எனவே HF அமிலம் கண்ணாடி பாட்டில்களில் சேமிக்கப்படுவதில்லை
SiO2 + 4HF ⟶ SiF4 + 2H2O
Na2SiO3 + 6HF ⟶ Na2SiF3 + 3H2O
10.
(i) மூன்று பங்கு அடர் ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் ஒரு பங்கு அடர் நைட்ரிக் அமிலம் கலந்த கலவை இராஜதிராவகம் எனப்படும்.
(ii) இது தங்கம், பிளாட்டினம் போன்ற உலோகங்களை கரைக்க பயன்படுகிறது
Au + 4H+ + NO-3 + 4Cl- ⟶ AuCl-4 + NO + 2H2O
11.
(i) நீர்த்த கந்தக அமிலம் உலோகங்களுடன் வினைபுரிந்து உலோக சல்பேட் மற்றும் ஹைட்ரஜன் வாயுவைத் தருகிறது.
Zn + H2SO4 ⟶ ZnSO4 + H2↑
(ii) சூடான அடர் கந்தக அமிலம் உலோகங்களுடன் வினைபுரிந்து உலோக சல்பேட் மற்றும் கந்தக டை ஆக்சைடு வாயுவைத் தருகிறது
Cu + 2H2SO4 ⟶ CuSO4 + 2H2O + SO2 ↑
(iii) கந்தக அமிலம் உயரிய உலோகங்களான தங்கம், வெள்ளி, மற்றும் பிளாட்டினம் ஆகியவற்றுடன் வினைபுரிவதில்லை.
12.
பாஸ்பரஸ் ட்ரை ஆக்சைடு P4O6:
(i) பாஸ்பரஸ் ட்ரை ஆக்சைடில் நான்கு பாஸ்பரஸ் அணுக்கள் நான்முகியின் மூலைகளிலும், ஆறு ஆக்சிஜன் அணுக்கள் விளிம்புகளிலும் அமைந்துள்ளன.
(ii) P-O பிணைப்பு நீளம் 165.6 pm. இது ஒற்றை பிணைப்பு நீளத்தை (184 pm) விடக் குறைவாகும்.
(iii) pπ - dπ பிணைப்பின் காரணமாக இதில் குறிப்பிடத்தகுந்த அளவு
இரட்டைப் பிணைப்புத் தன்மை உருவாகிறது.
பாஸ்பரஸ் பென்டாக்சைடு P4O10:
(iv) ஒவ்வொரு பாஸ்பரஸ் அணுவும் மூன்று ஆக்சிஜன் அணுக்களுடன் மூன்று பிணைப்புகளையும், கூடுதலாக ஒரு ஆக்சிஜன் அணுவுடன் ஈதல் சகப்பிணைப்பு நீளம் 143 pm
(v) இது எதிர்பார்க்கப்பட்ட ஒற்றை பிணைப்பு நீளத்தை விட குறைவு
(vi) ஆக்சிஜன் அணுவின் நிரம்பிய p ஆர்பிட்டால்களும், பாஸ்பரஸின் காலியான d ஆர்பிட்டாலும் மேற்பொதிவதே இதற்கு காரணம்.
13.
(i) ஹேபர் முறையில் உருவான அம்மோனியா பத்து மடங்கு காற்றுடன் கலக்கப்படுகிறது
(ii) இக்கலவை வெப்பப்படுத்தப்பட்டு, வினைவேகமாற்றி வைக்கப்பட்டுள்ள தனி அறையினுள் செலுத்தப்பட்டு பிளாட்டினம் கம்பி வலையுடன் தொடர்பு உண்டாக்கப்படுகிறது
(iii) வெப்பநிலை 1275 K க்கு உயர்த்தப்படும்போது, உலோக வினையூக்கியானது அம்மோனியாவை விரைவாக ஆக்சிஜனேற்றம் செய்து NO வாயுவை உருவாக்குகிறது.
(iv) பின்னர் NO, நைட்ரஜன் டை ஆக்சைடாக ஆக்சிஜனேற்றம் அடைகிறது
4NH3 + 5O2 ⟶ 4NO + 6H2O +120KJ
2NO + O2 ⟶ 2NO2
(v) நைட்ரஜன் டை ஆக்சைடு வாயு வரிசையாக அமைக்கப்பட்டுள்ள பரப்பு கோபுரங்களின் வழியாக செலுத்தப்படுகிறது.
(vi) NO2 வாயு நீருடன் வினைபட்டு நைட்ரிக் அமிலத்தை தருகிறது
(vii) உருவாக்கப்பட்ட நைட்ரிக் அமிலம் காற்று செலுத்தி வெளுக்கப்படுகிறது
6NO2 + 3H2O ⟶ 4HNO3 + 2NO + H2O
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards