12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 03/01/2020
திட நிலைமை
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
ஒரு fcc வகை படிகத்தில் A வகை அணுக்கள் மூலைகளிலும், B வகை அணுக்கள் முகப்பு மையத்திலும் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு அலகுக்கூட்டிலும் ஒரு மூலையில் உள்ள A வகை அணு நிரப்பப்படவில்லையெனில், அதன் எளிய வாய்பாடு யாது?
AB3
A3B
A7B24
A24B7
2.
முகப்பு மைய கனசதுர அலகுக்கூட்டில் முகப்பு மையத்தில் உள்ள அணுவின் பங்கு ______________
\(\frac{1}{2}\)
\(\frac{1}{4}\)
\(\frac{1}{8}\)
\(\frac{1}{16}\)
3.
மூலக்கூறு படிகங்களில் அதன் உட்கூறுகள் _______ மூலம் பிணைக்கப்பட்டுள்ளன.
வலிமை குறைந்த வாண்டர்வால்ஸ் விசை
வலிமையான நிலைமின்னியல் கவர்ச்சி விசை
ஹைட்ரஜன் பிணைப்பு
சகப்பிணைப்புகள்
4.
அயனிப்படிகங்கள் ______ நிலையில் மின்சாரத்தை கடத்துகின்றன ?
திண்ம படிக
திண்ம
படிக உருவற்ற
உருகிய
5.
ஒரு திடப்பொருளின், இயற்பண்புகளின் மதிப்புகள் அனைத்து திசைகளிலும் ஒரே மதிப்பினைப் பெற்றிருந்தால், அத்தன்மை ______ எனப்படும்.
திசையொப்புப் பண்பு
திசையொப்புப் பண்பற்ற தன்மை
புறவேற்றுமைத் தன்மை
மாற்றிய பண்பு
6.
உலோகக் குறையுள்ள குறைபாடு காணப்படும் படிகம் ______________
NaCl
FeO
ZnO
KCl
7.
ஒரு படிகத்தில் ஷாட்கி குறைபாடு பின்வரும் நிலையில் உணரப்படுகிறது.
சமமற்ற எண்ணிக்கையில் நேர் மற்றும் எதிர் அயனிகள் அணிக்கோவையில் இடம் பெறாதிருத்தல்
சமமான எண்ணிக்கையில் நேர் மற்றும் எதிர் அயனிகள் அணிக்கோவையில் இடம் பெறாதிருத்தல்
ஒரு அயனி அதன் வழக்கமான இடத்தில் இடம் பெறாமல் அணிக்கோவை இடைவெளியில் இடம் பெறுதல்
படிக அணிக் கோவையில் எந்த ஒரு அயனியும் இடம் பெறாத நிலை இல்லாதிருத்தல்
8.
NaCl படிகத்தின் மஞ்சள் நிறத்திற்கு காரணம் ______________
F மையத்தில் உள்ள எலக்ட்ரான்கள் கிளர்வுறுதல்
புறப்பரப்பில் உள்ள Cl- அயனிகளால் ஒளி எதிரொளிக்கப்படுதல்.
Na+ அயனிகளால் ஒளி விலகலடைதல்.
மேற்கண்ட அனைத்தும்.
9.
ஒரு வுஸ்டைட் மாதிரியின் இயைபு Fe0.93O1.00 இதில் இடம் பெற்றுள்ள இரும்பில் எத்தனை சதவீதம் Fe3+ அயனிகளாக உள்ளது?
16.05%
15.05%
18.05%
17.05%
10.
கூற்று: மோனோ கிளினிக் கந்தகம் என்பது மோனோ கிளினிக் படிக வகைக்கு ஒரு உதாரணம்.
காரணம் : மோனோ கிளினிக் படிக அமைப்பிற்கு, \(a\neq b\neq c\) மேலும் \(\alpha =\gamma ={ 90 }^{ 0 },\beta \neq { 90 }^{ 0 }\)
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமாகும்.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமல்ல
கூற்று சரி ஆனால் காரணம் தவறு
கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
11.
எளிய கனசதுர அமைப்பின் பொதிவு பின்னத்தை கணக்கிடுக.
12.
படிகங்களில் காணப்படும் மாசு குறைபாடுகள் பற்றி எழுதுக.
13.
படிக திண்மங்களை படிக வடிவமற்ற திண்மங்களிலிருந்து வேறுபடுத்துக.
14.
ஒரு குறிப்பிட்ட திண்மம் SC அமைப்பில் படிகமாகிறது. முதல்வகை X -கதிர் ( λ = 154 nm) எதிரொளிப்பு (200) தளத்திற்கு 16061. கோணத்தில் நிகழ்கிறது. கனசதுரத்தின் விளிம்பு நீளத்தை கணக்கிடு.
15.
நெருங்கிப் பொதிந்த கனசதுர (ccp) அமைப்பில் அலுமினியம் படிகமாகிறது. அதன் உலோக ஆரம் 125pm.
i) அதன் அலகுக்கூட்டின் விளிம்பு நீளத்தைக் கணக்கிடுக.
ii) 1cm, அலுமினியத்தில் எத்தனை அலகுக்கூடுகள் உள்ளன?
16.
திடப்பொருட்களின் பொதுப்பண்புகளை எழுதுக.
17.
KF ஆனது சோடியம் குளோரைடைப் போன்று fcc அமைப்பில் படிகமாகிறது. KF ன் அடர்த்தி 2.48gcm-3 எனில், KF-ல் உள்ள K+ மற்றும் F- அயனிகளுக்கிடையேயானத் தொலைவினைக் கண்டறிக.,
18.
பொருள் மைய கனச்சதுர அமைப்பில் பொதிவுத்திறன் சதவீதத்தினைக் கணக்கிடுக.
19.
படிகத்தின் தன்மையைப் பொறுத்து வேறுபட்ட ஒன்றைக் கண்டறிக
அ) நாஃப்தலீன்
ஆ) சிலிக்கன் கார்பைடு
இ) திட CO2
ஈ) யூரியா
20.
i) சகப்பிணைப்பு படிகங்களில் காணப்படும் அணுக்கள் முற்றிலும் சகப்பிணைப்புகளால் பிணைக்கப்பட்டுள்ளன.
ii) சகப்பிணைப்பு படிகங்கள் மிகக் கடினமானவை
iii) சகப்பிணைப்பு படிகங்கள் குறைந்த உருகுநிலை உடையவை.
iv) சகப்பிணைப்பு படிகங்கள் மிக அதிகமான வெப்ப மற்றும் மின் கடத்தும் தன்மையைப் பெற்றிருக்கின்றன.
அ) (i) & (ii)
ஆ) (ii) & (iii)
இ) (iii) & (iv)
ஈ) (i) & (iv)
21.
i) மூலக்கூறு படிகங்களில் காணப்படும் உட்கூறுகள் நடுநிலை மூலக்கூறுகள் ஆகும்.
ii) மூலக்கூறு படிகங்களில் உட்கூறுகள் வலிமையான நிலை மின்னியல் விசையால் பிணைக்கப்பட்டுள்ளன.
iii) மூலக்கூறு படிகங்கள் மென்மையானவை
iv) மூலக்கூறு படிகங்கள் மின்கடத்தும் தன்மையைப் பெற்றிருப்பதில்லை
அ) (i) & (ii)
ஆ) (i), (ii) & (iii)
இ) (ii) & (iv)
ஈ) (ii) மட்டும்
22.
கூற்று: முனைவுற்ற மூலக்கூறு படிகங்களில் அதன் உட்கூறுகள் முனைவுற்ற சகப்பிணைப்புகளால் பிணைக்கப்பட்டுள்ளன.
காரணம்: முனைவுற்ற மூலக்கூறு படிகங்களில் அதன் உட்கூறுகள் ஒப்பீட்டு அளவில் வலிமை குறைந்த இருமுனை - இருமுனை இடை விசைகளால் பிணைக்கப்பட்டுள்ளன.
i) A மற்றும் R இரண்டுமே சரி, R ஆனது Aயினை விளக்குகிறது.
ii) A சரி ஆனால் R தவறு
iii) A தவறு ஆனால் R சரி
iv) A மற்றும் R இரண்டுமே சரி, ஆனால் R ஆனது A யினை விளக்கவில்லை
23.
பொதிவுத்திறன் அல்லது பொதிவு பின்னம் வரையறு.
24.
திசையொப்பு பண்பற்ற தன்மை என்றால் என்ன?
1.
(c)
A7B24
2.
(a)
\(\frac{1}{2}\)
3.
(a)
வலிமை குறைந்த வாண்டர்வால்ஸ் விசை
4.
(d)
உருகிய
5.
(a)
திசையொப்புப் பண்பு
6.
(b)
FeO
7.
(b)
சமமான எண்ணிக்கையில் நேர் மற்றும் எதிர் அயனிகள் அணிக்கோவையில் இடம் பெறாதிருத்தல்
8.
(a)
F மையத்தில் உள்ள எலக்ட்ரான்கள் கிளர்வுறுதல்
9.
(b)
15.05%
10.
(a)
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமாகும்.
11.
விளிம்பு நீளம் 'a' கொண்ட கனசதுரத்தினைக் கருதுக.
கனசதுரத்தின் கன அளவு = a x a x a = a3.
கோளத்தின் ஆரம் 'r' என்க
படத்திலிருந்து a = 2r; r = \(\frac {a }{2}\)
ஆரம் r கொண்ட கோளத்தின் (அணு) கனஅளவு = \(\frac { 4 }{ 3 } { \pi r }^{ 3 }\)
\(=\frac { 4 }{ 3 } { \left( \frac { a }{ 2 } \right) }^{ 3 }\)
\(=\left( \frac { 4 }{ 3 } \right) \pi { \left( \frac { a }{ 2 } \right) }^{ 3 }\)
\(=\frac { 4 }{ 3 } \pi \frac { { a }^{ 3 } }{ 8 } \)
\(=\frac { { \pi a }^{ 3 } }{ 6 } \)
ஒரு எளிய கனசதுர அலகுக்கூட்டில் உள்ள மொத்த அணுக்களின் எண்ணிக்கை = 1
ஃ எளிய கனசதுர அலகுக்கூட்டில் உள்ள அணுக்களின் மொத்த கனஅளவு \(=1\times \frac { { \pi a }^{ 3 } }{ 6 } \)
பொதிவு பின்னம்
\(=\frac { \frac { { \pi a }^{ 3 } }{ 6 } }{ { a }^{ 3 } } \times 100\)
\(=\frac { 100\pi }{ 6 } =52.31%\)%
அதாவது எளிய கனசதுர நெருங்கிப் பொதிந்த அமைப்பில் கிடைக்கும் கன அளவில் 52.31% மட்டும் கோலங்களால் நிரப்பப்பட்டுள்ளது. மீதமுள்ள இடம் காலியாக உள்ளது. இந்த அமைப்பில் வெற்றிடம் அதிகமாக உள்ளதால் அணுக்களுக்கு இடையே வலுவான கவர்ச்சி ஏற்படும் வாய்ப்பு குறைவாக உள்ளது.
12.
1. படிகத்தில் குறைபாட்டினை ஏற்படுத்த ஒரு எளிய பொதுவான முறை அதனுடன் மாசுக்களை சேர்ப்பதாகும்.
2. சேர்க்கப்படும் மாசு அணுவின் இணைதிறன் சேரும் படிகத்தில் உள்ள அணுவின் இணைதிறனிலிருந்து வேறுபடுவதால், படிக அணிக்கோவைத் தளங்களில் வெற்றிடங்கள் உருவாக்கப்படுகின்றன.
3. சில்வர் குளோரைடு படிகத்தில் காட்மியம் குளோரைடை மாசுப்பொருளாக சேர்ப்பதால் உருவாகும் திடக் கரைசலில் Cd2+ அயனியானது படிகத்தில் Ag+ அயனி இருந்த இடத்தில் இடம் பெறுகிறது.
4. இதன் காரணமாக படிகத்தின் மின் நடுநிலைத்தன்மை பாதிக்கப்படுகிறது.
5. இதனை பராமரிக்கும் பொருட்டு அதற்கு இணையான எண்ணிக்கையில் Ag+ அயனிகள் படிக அணிக்கோவை தளத்திலிருந்து வெளியேறுகின்றன.
6. இதனால் படிக அணிக்கோவைத் தளத்தில் நேர் அயனி வெற்றிடங்கள் ஏற்படுகின்றன.
7. இத்தகைய படிகக் குறைபாடுகள் மாசுகுறைபாடுகள் எனப்படுகின்றன.
13.
| வ.எண் | படிக வடிவமுடைய திடப்பொருள் | படிக வடிவமற்ற திடப்பொருள் |
|---|---|---|
| 1 | இதன் உட்கூறுகள் நீண்ட எல்லை வரையில் ஒழுங்காகக் கட்டமைக்கப்பட்டுள்ளன. | ஒழுங்குத் தன்மையின் எல்லை குறைவு. இதன் உட்கூறுகள் அங்கும் இங்கும் ஒழுங்கின்றி அமைந்துள்ளன. |
| 2 | குறிப்பிட்ட வடிவமுடையது. | ஒழுங்கற்ற வடிவமுடையது. |
| 3 | படிக வடிவமுடைய திடப்பொருட்கள் பொதுவாக திசையொப்பு (aniotropic) பண்பற்றவை. | இவைகள் திரவங்களைப் போன்று திசையொப்புப் பண்பு (isotropic) உடையவை. |
| 4 | இவைகள் உண்மையான திடப்பொருட்களாகக் கருதப்படுகின்றன. | இவைகள் போலி திடப்பொருட்கள் அல்லது அதிகுளிரவைக்கப்பட்ட திரவங்களாகக் கருதப்படுகின்றன. |
| 5 | வரையறுக்கப்பட்ட உருகுதல் வெப்ப மதிப்பினைப் பெற்றுள்ளன. | இவைகள் வரையறுக்கப்பட்ட உருகுதல் வெப்ப மதிப்பினைப் பெற்றிருப்பதில்லை. |
| 6 | இவைகள் துல்லியமான உருகுநிலையைப் பெற்றுள்ளன | வெப்பநிலை அதிகரிக்கும் போது இவைகள் சீராக, மென்மையாக மாறும் இயல்புடையவை. எனவே இப்பொருட்களை எவ்வடிவமாகவும் வார்க்க இயலும். |
| 7 | எடுத்துக்காட்டு: NaCl, வைரம் போன்றவை |
எடுத்துக்காட்டு: இரப்பர், கண்ணாடி போன்றவை |
14.
n = 1 λ = 0.154 θ = 16061, d = ?
2d sinθ = nλ
\(d=\frac { n\lambda }{ 2sin\theta } \)
\(=\frac { 1\times 0.154 }{ 2sin{ 16 }^{ 0 }{ 16 }^{ 1 } } \)
\(d=\frac { 1\times 0.154 }{ 2\times 0.286 } \) = 0.269nm
\({ d }_{ hkl }=\frac { a }{ \sqrt { { h }^{ 2 }+{ k }^{ 2 }+{ 1 }^{ 2 } } } \)
\(a={ d }_{ hkl }\sqrt { { h }^{ 2 }+{ k }^{ 2 }+{ 1 }^{ 2 } } \)
\(a={ d }_{ 200 }\sqrt { { 2 }^{ 2 }+0+0 } \)
= 0.269 x √4
= 0.269 x 2
a = 0.538nm.
15.
i) r = 125pm a = ?
நெருங்கிப் பொதிந்த கனசதுர (ccp) அமைப்பு முகப்பு மைய கனசதுர (fcc) அலகுக் கூட்டினை அடிப்படையாகக் கொண்டது.
fcc படிகத்துக்கு n = 4\(r=\frac { a\sqrt { 2 } }{ 4 } \)
\(a=\frac { 4r }{ \sqrt { 2 } } \)
\(\\ =\frac { 4\times 125 }{ 1.414 } \)
விளிம்பு நீளம் a = 353.61pm
ii) 22400cm3 கன அளவில் 6.023 x 1023 அணுக்கள் உள்ளன
1cm3 கன அளவில் \(\\ =\frac { 6.023\times { 10 }^{ 23 } }{ 22400 } \times 1\)
= 2.689 x 1019 அணுக்கள் உள்ளன.
fcc படிகத்தில் 4 அணுக்கள் 1 அலகுக்கூட்டில் உள்ளன.
2.689 x 1019 அணுக்கள் \(\frac{1}{4}\) x 2.689 x 1019 அலகுக்கூட்டில் உள்ளன.
= 6.723 x 1018அலகுக்கூடுகள்
1cm3 அலுமினியத்தில் 6.723 x 1018அலகுக்கூடுகள் உள்ளன.
16.
திடப்பொருட்கள்
i) வரையறுக்கப்பட்ட வடிவம் மற்றும் கன அளவைப் பெற்றுள்ளன.
ii) கடினமானவை மேலும் அமுக்க இயலாத் தன்மையுடையவை
iii) அவற்றின் உட்கூறுகளுக்கிடையே வலிமையான ஈர்ப்பு விசைகள் காணப்படுகின்றன.
iv) இவற்றில் காணப்படும் அணுக்கள், அயனிகள் அல்லது மூலக்கூறுகள் ஆகியவற்றிற்கு இடையேயான தொலைவு குறைவாகும்.
v) திடப்பொருட்களின் உட்கூறுகள் நிலையான இட அமைவினை பெற்றுள்ளன. மேலும் அவ்விட அமைவினை பொறுத்து மட்டுமே அவைகள் அலைவுற இயலும்.
17.
n = 4
ρ = 2.48 gcm-3
NA = 6.023 x 1023
\(\rho =\frac { nM }{ { a }^{ 3 }{ N }_{ A } } \)
\(\therefore { a }^{ 3 }=\frac { nM }{ { \rho N }_{ A } } \)
= \(\frac { 4\times 58 }{ 2.48\times 6.023\times { 10 }^{ 23 } } \)
a3 = 15.55 x 10-23cm3
a3 = 0.1555 x 10-21 cm
\(
\mathrm{a} =\sqrt[3]{0.1555 \times 10^{-21}} \\
\mathrm{a} =0.5375 \times 10^{-7} \mathrm{~cm}=5.375 \times 10^{-8} \mathrm{~cm} \\
=537.5 \mathrm{pm}
\)
K+ மற்றும் F- அயனிகளுக்கிடையேயானத் தொலைவு
\(=\frac{537.5}{1.414}=380.13 \mathrm{pm}\)
18.
பொதிவுத் திறன்:
இவ்வமைப்பில் படத்தில் காட்டியுள்ளவாறு கோளங்கள் கனசதுரத்தின் முதன்மை மூலைவிட்டத்தின் வழியே தொட்டுக்கொண்டுள்ளன.
In ∆ ABC
AC2 = AB2 + BC2
\(AC=\sqrt { { AB }^{ 2 }+{ BC }^{ 2 } } \)
\(AC=\sqrt { { a }^{ 2 }+{ a }^{ 2 } } =\sqrt { { 2a }^{ 2 } } =\sqrt { 2 } a\)
In ∆ ACG
AG2 = AC2 + CG2
\(AG=\sqrt { { AC }^{ 2 }+{ CG }^{ 2 } } \)
\(AG=\sqrt { { \left( \sqrt { 2 } a \right) }^{ 2 }+{ a }^{ 2 } } \)
\(AG=\sqrt { { 2a }^{ 2 }+{ a }^{ 2 } } =\sqrt { { 3a }^{ 2 } } \)
\(AG=\sqrt { 3 } a\)
i.e; = \(\sqrt { 3 } a\) = 4r
r = \(\frac { \sqrt { 3 } }{ 4 } a\)
'r' ஆரமுடைய கோளத்தின் கனஅளவு
= \(\frac { 4 }{ 3 } \pi { r }^{ 3 }\)
= \(\frac { 4 }{ 3 } \pi { \left( \frac { \sqrt { 3 } }{ 4 } a \right) }^{ 3 }\)
= \(\frac { \sqrt { 3 } }{ 16 } \pi { a }^{ 3 }\) .............(1)
bcc வடிவமைப்பில் ஒரு அலகுக் கூட்டில் காணப்படும் கோளங்களின் எண்ணிக்கை இரண்டு என நாம் அறிவோம். எனவே அனைத்துக் கோளங்களின் கனஅளவு
= \(2\times \left( \frac { \sqrt { 3 } \pi { a }^{ 3 } }{ 16 } \right) =\frac { \sqrt { 3 } \pi { a }^{ 3 } }{ 8 } ........(3)\)
சமன்பாடு (3) ஐ (1) ஆல் வகுக்க
∴ பொதிவு பின்னம் = \(\frac { \left( \frac { \sqrt { 3 } \pi { a }^{ 3 } }{ 8 } \right) }{ { a }^{ 3 } } \times 100\)
= \(\frac { \sqrt { 3 } \pi }{ 8 } \times 100\)
= \(\sqrt { 3 } \pi \times 12.5\)
= 1.732 x 3.14 x 12.5
= 68 %
19.
ஆ) சிலிக்கன் கார்பைடு
சிலிக்கன் கார்பைடு சகப்பிணைப்பு படிகம், மற்றவை மூலக்கூறு படிகங்கள்
20.
( )
அ) (i) & (ii)
சரியான கூற்று:
iii) சகப்பிணைப்பு படிகங்கள் குறைந்த உருகுநிலை உடையவை.
iv) சகப்பிணைப்பு படிகங்கள் மிக அதிகமான வெப்ப மற்றும் மின் கடத்தும் தன்மையைப் பெற்றிருக்கின்றன.
21.
ஈ) (ii) மட்டும்
சரியான கூற்று:
ii) மூலக்கூறு படிகங்களில் உட்கூறுகள் வலிமையான நிலை மின்னியல் விசையால் பிணைக்கப்பட்டுள்ளன.
22.
i) A மற்றும் R இரண்டுமே சரி, R ஆனது Aயினை விளக்குகிறது.
முனைவுற்ற மூலக்கூறு படிகங்களில் அதன் உட்கூறுகள் ஒப்பீட்டு அளவில் வலிமை குறைந்த இருமுனை - இருமுனை இடை விசைகளால் பிணைக்கப்பட்டுள்ளன.
23.
24.
1. அளந்தறியப்படும் திசையினை பொறுத்து இயற்பண்புகள் அமையுமாயின் அத்தன்மை திசையொப்பு பண்பற்ற தன்மை எனப்படும்.
2. வெவ்வேறு திசைகளில் அளந்தறியும் போது, இயற்பண்புகள் வெவ்வேறு மதிப்புகளை பெற்றால், அத்தன்மை திசையொப்பு பண்பற்றத் தன்மை எனப்படும்.
3. படிக வடிவமுடைய திடப்பொருட்கள் திசையொப்பு பண்பற்றவை.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards