12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/11/2019
புறப்பரப்பு வேதியியல்
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
CuCl2 முன்னிலையில் காற்றைக் கொண்டு HCl ஐ ஆக்சிஜனேற்றம் அடையச் செய்தல்.
2.
Cu முன்னிலையில் H2 மற்றும் O2 ஆகியன வினை புரிவதால் நீர் உருவாகும் வினையை பின்வருமாறு எழுதலாம்.
3.
MnO2 முன்னிலையில் KClO3 யின் வெப்பச்சிதைவு வினை பின்வருமாறு நிகழ்கிறது.
4.
கரைப்பான் விரும்பும் கூழ்மங்கள், கரைப்பான் வெறுக்கும் கூழ்மங்களைவிட அதிக நிலைப்புத் தன்மை வாய்ந்தவை . ஏன்?
5.
கூழ்மம் மற்றும் களி ஆகியவற்றிற்கிடையே உள்ள வேறுபாடுகள் யாவை ?
6.
7.
NH3 அல்லது CO2 ஆகிய இரண்டில் எது கரியின் புறப்பரப்பில் எளிதில் பரப்புகவரப்படுகிறது? ஏன்?
8.
இயற்புறப்பரப்பு கவர்தலின் சிறப்புப் பண்புகள் இரண்டை தருக.
9.
இயற்புறப்பரப்பு கவர்தல், வேதிப்புறப்பரப்பு கவர்தல் வேறுபடுத்துக.
10.
ஒரு திரிதல் சோதனையில் , (X) எனும் கூழ்மத்தின் 10 mL கரைசலானது வடிகட்டிய நீர் , மற்றும் 0.1M செறிவுடைய AB எனும் மின்பகுளிக் கரைசல் ஆகியவற்றை சேர்த்து அதன் கனஅளவு 20 mL ஆக்கப்படுகிறது. 6.6 mL AB கரைசலைக் கொண்டுள்ள அனைத்து கரைசல்களும் 5 நிமிடங்களுக்குள் வீழ்படிவாக்கப்பட்டன என கண்டறியப்பட்டுள்ளது.கூழ்மம் (X) க்கு AB யின் துகள்திரட்டு மதிப்பு என்ன?
1.
2CuCl2 → Cl2 + Cu2Cl2
2Cu2Cl2 + O2 → 2Cu2OCL2
இது ஒரு இடைநிலைச் சேர்மமாகும்.
2Cu2OCl2 + 4 HCl → 2H2O + 4CuCl2
2.
2Cu + \(\frac{1}{2}\) O2 → Cu2O
இது ஒரு இடைநிலைச் சேர்மமாகும்.
Cu2O + H2 → H2O + 2Cu
3.
2KClO3 → 2KCl+3O2 → வினையில் நிகழும் படிகளை பின்வருமாறு எழுதலாம்
2KClO3 + 6MnO2 → 6MnO3 + 2KCl
இது ஒரு இடைநிலைச் சேர்மமாகும்.
6MnO3 → 6MnO2 + 3O2
4.
கரைப்பான் விரும்பும் கூழ்மங்களில், பிரிகை நிலைமைக்கும் பிரிகை ஊடகத்திற்கும் இடையே வலுவான கவர்ச்சி விசை நிலவுகிறது.
எடுத்துக்காட்டுகள்: புரதம் மற்றும் ஸ்டார்ச் ஆகியவற்றின் கூழ்ம கரைசல்கள். இவை அதிக நிலைப்புத் தன்மை கொண்டவை, எளிதில் வீழ்படிவாவதில்லை. அவை வீழ்படிவான பின்பும் கூட, பிரிகை ஊடகத்தை சேர்த்து மீளவும் கூழ்மநிலைக்கு கொண்டுவர இயலும்.
கரைப்பான் வெறுக்கும் கூழ்மங்களில், பிரிகைநிலைமைக்கும் பிரிகை ஊடகத்திற்கும் இடையே கவர்ச்சி விசைகள் ஏதுமில்லை. இவை குறைந்த நிலைப்புத் தன்மை கொண்டவைகளாகும். மேலும் எளிதில் வீழ்படிவாகின்றன ஆனால், பிரிகை ஊடகத்தை சேர்ப்பதன் மூலம் மீண்டும் இவற்றை உருவாக்க இயலாது அவை, ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு தாமாகவே திரிந்துவிடுகின்றன. இவை மீளாக் கூழ்மங்கள் என்றழைக்கப்படுகின்றன.
எடுத்துக்காட்டு: கோல்டு, சில்வர், பிளாட்டினம் மற்றும் காப்பர் கூழ்மங்கள்.
5.
| வ.எண் | கூழ்மம் | களி |
| 1. | கூழ்ம கரைசலில் நீர்ம நிலை பிரிகை ஊடகம். | கூழ்ம கரைசலில் திண்ம நிலை பிரிகை ஊடகம் |
| 2. | பாகியல் தன்மை குறைவு. | அதிக பாகியல் தன்மை |
| 3. | வரையறுக்கப்பட்ட வடிவம் பெற்றிருப்பதில்லை. |
வரையறுக்கப்பட்ட வடிவம் பெற்றிருக்கும் |
| 4. | எ.கா: மை, பெயின்ட், Au கூழ்மம், etc. | எ.கா: வெண்ணெய், பாலாடைக்கட்டி, etc. |
6.
7.
NH3 ன் நிலைமாறு வெப்பநிலை 406 K மற்றும் CO2 வின் நிலைமாறு வெப்பநிலை 304 K ஆகும். எனவே NH3 ஆனது CO2 வை விட அதிக நிலைமாறு வெப்பநிலையையும், அதிக வான்டர்வால்ஸ் ஈர்ப்பு விசையையும் பெற்றுள்ளது. எனவே CO2 வை விட NH3 அதிக அளவில் பரப்பு கவரப்படுகிறது.
8.
1. இது கணப்பொழுதில் நிகழ்கிறது
2. இது தேர்ந்த செயல்முறை அல்ல
3. எலக்ட்ரான்கள் இட மாற்றம் நிகழ்வதில்லை
4. பரப்பின் மீது பல அடுக்குகள் உருவாகின்றன
9.
| வ.எண் | வேதிப்புறப்பரப்பு கவர்தல் அல்லது கிளர்வுறுத்தப்பட்ட பரப்பு கவர்தல் | இயற்புறப்பரப்பு கவர்தல் அல்லது வாண்டர்வால்ஸ் பரப்பு கவர்தல் |
| 1. | இது மிக மெதுவாக நிகழ்கிறது. | இது கணப்பொழுதில் நிகழ்கிறது. |
| 2. | இது அதிக தேர்ந்த செயல்முறையாகும். பரப்புப் பொருள் மற்றும் பரப்புகவர் பொருள் ஆகியவற்றின் தன்மையை பொருத்தமைகிறது. | இது தேர்ந்த செயல்முறை அல்ல |
| 3. | அழுத்தம் அதிகரிக்கும்போது வேதிப்புறப்பரப்பு கவர்தல் வேகமாக நிகழ்கிறது. ஆனால், இது பரப்பு கவர்தலின் அளவை மாற்றுவதில்லை. | இயற்புறப்பரப்புக் கவர்ச்சியில் அழுத்தம் அதிகரிக்கும்போது, பரப்பு கவர்தலின் அளவும் அதிகரிக்கிறது. |
| 4. | வெப்பநிலையை அதிகரிக்கும்போது வேதிப்புறப்பரப்பு கவர்தல் முதலில் அதிகரித்து பின்னர் குறைகிறது. | வெப்பநிலை அதிகரிக்கும்போது இயற்பரப்புக் கவர்ச்சி குறைகிறது. |
| 5. | வேதிப்புறப்பரப்பு கவர்தலில் பரப்பு பொருளுக்கும் பரப்புகவர் பொருளுக்கும் இடையே எலக்ட்ரான் இடமாற்றம் நிகழ்கிறது. | எலக்ட்ரான்கள் இடமாற்றம் நிகழ்வதில்லை. |
| 6. | பரப்பு கவர்தல் வெப்பம் அதிகம். அதாவது 40 முதல் 400 kJ / மோல் வரை. | பரப்பு கவர்தல் வெப்பம் குறைவு. 40 kJ/மோல் என்ற அளவிலேயே உள்ளது. |
| 7. | பரப்பின் மீது பரப்புகவர் பொருளின் ஒற்றை அடுக்கு உருவாகிறது. | பரப்பின் மீது பரப்புகவர் பொருளின் பல அடுக்குகள் உருவாகின்றன. |
| 8. | கிளர்வு மையங்கள் என்றழைக்கப்படும் சில குறிப்பிட்ட அமைவிடங்களில் மட்டும் பரப்பு கவர்தல் நிகழ்கிறது. இது புறப்பரப்பின் பரப்பளவைப் பொருத்து அமைகிறது. | இது எல்லா இடங்களிலும் நிகழ்கிறது. |
| 9. | வேதிப்புறப்பரப்பு கவர்தலில், குறிப்பிடத்தகுந்த கிளர்வுகொள் ஆற்றல் கொண்ட கிளர்வு அணைவு உருவாதல் நிகழ்கிறது. |
கிளர்வுகொள் ஆற்றல் முக்கியமற்றது.
|
10.
(i) கூழ்மத்தின் வீழ்படிவாக்க தேவையான மிகக் குறைந்த AB அளவு 6.6 mL அதன் AB ன் மோல்களின் எண்ணிக்கை.
=\(\frac { 6.6*0.1 }{ 20 } \)
= 0.033 மோல்கள்
(ii) 0.0033 மோல்கள் அதாவது 3.3 மிலி மோல்கள் 1L கூழ்மத்தை வீழ்படிவாக்க தேவைப்படுகிறது.
(iii) AB துகள்திரட்டு மதிப்பு x =3.3
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards