12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 06/12/2019
இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள்
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
_________ க்கு அணைவுச் சேர்மங்களை உருவாக்கும் தன்மை அதிகம்
லாந்தனைடுகள்
ஆக்டினைடுகள்
சீரியம்
யூரோப்பியம்
2.
லாந்தனைடுகளின் பொதுவான ஆக்சிஜனேற்ற நிலை ____________
+4
+2
+6
+3
3.
கூற்று A: இடைநிலைத் தனிமங்களின் அடர்த்தி, உருகுநிலை மற்றும் கொதிநிலை ஆகிய அதிகம்
காரணம் R: Zn, Cd மற்றும் Hg ஆகியன முழுவதும் நிரம்பிய d ஆர்பிட்டால்களை கொண்டுள்ளதால் குறைந்த உருகு நிலை மற்றும் கொதி நிலையைக் கொண்டுள்ளன.
A மற்றும் R இரண்டுமே சரி, R ஆனது A யினை விளக்குகிறது.
A மற்றும் R இரண்டுமே சரி, R ஆனது A யினை விளக்கவில்லை
A சரி ஆனால் R தவறு
A தவறு ஆனால் R சரி
4.
கூற்று A: 5s மற்றும் 4d ஆர்பிட்டால்களில் ஆற்றல்கள் ஏறத்தாழ சமம்
காரணம் R: 4d மற்றும் 5s ஆர்பிட்டால்களின் ஒப்பிட்டு ஆற்றல்கள் உட்கரு சுமை மற்றும் எலக்ட்ரான் விநியோகத்தைப் பொறுத்து மாறுபடுகிறது
A மற்றும் R இரண்டுமே சரி, R ஆனது A யினை விளக்குகிறது.
A மற்றும் R இரண்டுமே சரி, R ஆனது A யினை விளக்கவில்லை
A சரி ஆனால் R தவறு
A தவறு ஆனால் R சரி
5.
நிறமற்ற சேர்மத்தை தரும் அயனி எது?
Sc3+
V3+
Ti3+
Cr3+
6.
உலோகத்தின் ஆக்சோ எதிர் அயனிகளில் அதிகபட்ச ஆக்சிஜனேற்ற நிலை காணப்படுவது ஏன்?
7.
இடைநிலைத்தனிமங்கள் நிறமுள்ள அயனியைத் தோற்றுவிப்பதன் காரணம் யாது?
8.
Mn2+ அயனியில் எத்தனை தனித்த எலக்ட்ரான்கள் உள்ளன? அவை எவ்வாறு அதன் காந்தத் தன்மையை பாதிக்கின்றன?
9.
ஆக்டினைடு அயனிகள் நிறமுள்ளவை. ஏன்?
10.
Pt(II) சேர்மங்களை காட்டிலும் Ni(II) சேர்மங்கள் அதிக வெப்ப இயக்கவியல் நிலைப்புத் தன்மை உடையவை ஏன்?
11.
K2Cr2O7 மீது வெப்பத்தின் விளைவு யாது?
12.
பொட்டாசியம் பெர்மாங்கனேட் பயன்களை எழுதுக.
13.
பொட்டாசியம் டை குரோமேட்டின் பயன்களை எழுதுக
14.
குரோமைல் குளோரைடு சோதனையை விளக்குக
15.
இடைநிலைத் தனிமங்கள் அணைவுச் சேர்மங்களை உருவாக்குவதன் காரணம் யாது?
16.
KMnO4 ன் ஆக்சிஜனேற்ற பண்பினை விளக்குக
17.
குரோமேட் மற்றும் டைகுரோமேட் அயனியின் அமைப்பினை விவரி?
18.
கருஊதா நிறம் கொண்ட மாங்கனீசு சேர்மம் (A) சூடுபடுத்தும்போது சிதைவடைந்து ஆக்சிஜனுடன் சேர்மம் (B) மற்றும் (C) ஐ தருகிறது. சேர்மம் (C) KOH உடன் பொட்டாசியம் நைட்ரேட் முன்னிலையில் வினைபுரிந்து சேர்மம் (B) ஐத் தருகிறது. அடர் H2SO4 உடன் NaCl சேர்ந்து சேர்மம் (C) ஐ சூடுபடுத்தும் போது குளோரின் வாயு வெளியேறுகிறது. சேர்மம் (D) உருவாகிறது. சேர்மங்கள் A, B, C, D ஐ கண்டறிந்து வினைகளைத் தருக.
19.
i) லாந்தனைடுகளில் எது பெரிய Ln3+ அயனி?
ii) ஒரு தனித்த எலக்ட்ரானின் காந்த திருப்புத் திறன் மதிப்பு 1.1 BM எனில் குரோமியம் அணுவின் காந்த திருப்புத் திறனைக் கணக்கிடுக.
iii) பெர்மாங்கனேட் அயனியில் அனைத்து Mn மற்றும் O பிணைப்புகளும் சகப்பிணைப்புகள், காரணம் தருக.
1.
(b)
ஆக்டினைடுகள்
2.
(d)
+3
3.
(b)
A மற்றும் R இரண்டுமே சரி, R ஆனது A யினை விளக்கவில்லை
4.
(a)
A மற்றும் R இரண்டுமே சரி, R ஆனது A யினை விளக்குகிறது.
5.
(a)
Sc3+
6.
ஆக்சிஜனின் பல பிணைப்பு ஏற்படுத்தும் தன்மையினாலும், அதிக எலக்ட்ரான் கவர் திறன் மதிப்பினாலும் ஆக்சோ எதிர் அயனிகளில் உலோகம் அதிகபட்ச ஆக்சிஜனேற்ற நிலைகளில் காணப்படுகிறது.
7.
(i) தனித்த எலக்ட்ரான்களை பெற்றுள்ளன.
(ii) d - இணைக்கூட்டில் உள்ள அடுத்தடுத்த ஆற்றல் மாற்றங்களுக்கு இடையே ஆற்றல் வேறுபாடு குறைவு
(iii) எனவே d - d எலக்ட்ரான் பரிமாற்றம் நடைபெறுவதால் இடைநிலை தனிமங்கள் நிறமுள்ள அயனியை தோற்றுவிக்கின்றன.
8.
(i) Mn2+ ன் எலக்ட்ரான் அமைப்பு 3d5; தனித்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை n = 5;
(ii) எனவே Mn2+ அயனி பாராகாந்தத் தன்மையுடையது
(iii) புற காந்தப் புலத்தினால் ஈர்க்கப்படுகின்றன
9.
(i) இணையாகாத f எலக்ட்ரான்களைக் கொண்டுள்ளன
(ii) இவை ஒளியை உறிஞ்சி f - f எலக்ட்ரான் பரிமாற்றத்திற்கு உட்படுத்தப்படுகின்றன
(iii) எனவே பொதுவாக ஆக்டினைடு அயனிகள் நிறமுள்ளவை
10.
Pt2+ உடன் ஒப்பிடும் போது Ni2+ உருவாக்க குறைவான அயனியாக்கும் ஆற்றல் தேவைப்படுவதால். Pt(II) சேர்மங்களை விட Ni(II) சேர்மங்கள் அதிக வெப்ப இயக்கவியல் நிலைப்புத் தன்மை உடையது.
11.
பொட்டாசியம் டை குரோமேட் வெப்பப்படுத்தும்போது பொட்டாசியம் குரோமேட்டாக மாற்றுகிறது
K2Cr2O7 \(\underrightarrow { \Delta } \) K2CrO4 + 2Cr2O3 + 3O2↑
12.
(i) வலிமைமிக்க ஆக்சிஜனேற்றியாக பயன்படுகிறது
(ii) பல்வேறு தோல் தொற்றுநோய்கள் மற்றும் கால்களில் ஏற்படும் பூஞ்சை தொற்றுகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது
(iii) நீரை தூய்மைப்படுத்தும் தொழிற்சாலைகளில், நிலத்தடி நீரிலிருந்து ஹைட்ரஜன் சல்பைடு மற்றும் இரும்பை நீக்கப் பயன்படுகிறது
(iv) கரிமச் சேர்மங்களின் நிறைவுறாத் தன்மையை கண்டறிய பேயரின் காரணியாக பயன்படுகிறது
(v) ஃபெர்ரஸ் உப்புகள், ஆக்சலேட்டுகள், ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் அயோடைடுகளை அளந்தறியும் பகுமனறி பகுப்பாய்வுகளில் பயன்படுகிறது
13.
(i) வலிமையான ஆக்சிஜனேற்றியாக பயன்படுகிறது
(ii) சாயமிடுதல் மற்றும் அச்சுத் தொழிலில் பயன்படுகிறது
(iii) தோல் பதனிடுதலில் பயன்படுகிறது.
(iv) பருமனறி பகுப்பாய்வில் இரும்பின் சேர்மங்கள் மற்றும் அயோடைடுகளை அளந்தறியப் பயன்படுகிறது
14.
(i) பொட்டாசியம் டை குரோமேட்டை ஏதேனும் ஒரு குளோரைடு உப்புடன் சேர்த்து அடர் கந்தக அமிலத்தின் முன்னிலையில் வெப்பப்படுத்தும் போது ஆரஞ்சு சிவப்பு நிற குரோமைல் குளோரைடு ஆவி வெளியேறுகிறது
(ii) பண்பறி பகுப்பாய்வின் குளோரைடை கண்டறிய இது பயன்படுகிறது
K2Cr2O7 + 4NaCl + 6H2SO4 ⟶ 2KHSO4 + 4NaHSO4 + 2CrO2Cl2↑ + 3H2O
(iii) வெளியேற்றும் குரோமைல் குளோரைடு ஆவி சோடியம் ஹைட்ராக்சைடு கரைசலில் கரைக்கப்படுகிறது.
(iv) இதனுடன் அசிடிக் அமிலம் சேர்த்து பின் லெட் அசிடேட் கரைசலை சேர்க்கும் போது மஞ்சள் நிற லெட் குரோமேட் வீழ்ப்படிவாகிறது.
CrO2 + 4NaOH ⟶ Na2CrO4 + 2NaCl + 2H2O
Na2CrO4 + (CH3COO)2Pb ⟶ Pb CrO4 ↓ + 2CH3COONa
15.
i) சிறிய உருவளவு
ii) அதிக நேர்மின்சுமை
iii) ஈனிகள் வழங்கும் எலக்ட்ரான் இணைகளை ஏற்றுக் கொள்ள காலியான குறைந்த ஆற்றலுடைய d ஆர்பிட்டால்களை பெற்றுள்ளன
16.
i) அமில ஊடகம்:
பெர்ரஸ் அயனியை பெர்ரிக் அயனியாக ஆக்சிஜனேற்றமடையச் செய்கிறது
2MnO-4 + 10Fe2++ 16H+ ⟶ 2Mn2++ 10Fe3++ 8H2O
ii) நடுநிலை ஊடகம்:
H2S ஐ சல்பராக ஆக்சிஜனேற்றமடையச் செய்கிறது
2MnO-4 + 3H2S ⟶ 2MnO2 +3S + 2OH-+ 2H2O
iii) கார ஊடகம்:
பெர்மாங்கனேட், மாங்கனேட்டாக மாற்றமடைகிறது
MnO-4+ 2H2O + 3e- ⟶ MnO2 + 4OH-
17.
(i) குரோமேட் மற்றும் டைகுரோமேட் ஆகிய இரண்டும் குரோமியத்தின் ஆக்சோ நேர் அயனிகளாகும்
(ii) வலிமையான ஆக்சிஜனேற்றியாகும்
(iii) குரோமியம் +6 ஆக்சிஜனேற்ற நிலையில் உள்ளது
(iv) நீர்க்கரைசலில் குரோமேட் மற்றும் டைகுரோமேட் அயனிகள் ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாறும் இயல்புடையது
(v) காரக் கரைசலில் குரோமேட் அயனி முக்கியத்துவம் பெறுகிறது
(vi) அமிலக் கரைசலில் டைகுரோமேட் அயனி முக்கியத்துவம் பெறுகிறது
18.
(i) கருஊதா நிறம் கொண்ட மாங்கனீசு சேர்மம் KMnO4(A) ஆகும்
(ii) KMnO4 ஐ சூடுபடுத்தும் போது சிதைவடைந்து K2MnO4 (B), MnO2 (C) மற்றும் O2 ஐ தருகிறது
\(\underset { (C) }{ { 2MnO }_{ 2 } } +4KOH\underrightarrow { \Delta } { K }_{ 2 }Mn\underset { (B) }{ { O }_{ 4 }+ } \underset { (C) }{ { MnO }_{ 4 } } +{ O }_{ 2 }\)
(iii) MnO2(C) ஐ KOH உடன் வினைபுரியச் செய்யும் போது K2MnO4 (B) ஐ தருகிறது
\(\underset { (C) }{ { 2MnO }_{ 2 } } +4KOH+{ O }_{ 2 }\rightarrow { K }_{ 2 }Mn\underset { (B) }{ { O }_{ 4 }+ } { H }_{ 2 }O\)
(iv) மேலும் MnO2 (C) ஐ NaCl மற்றும் H2SO4 உடன் சூடுபடுத்தும் போது குளோரின் வாயு வெளியேறுகிறது
\(\underset { (C) }{ { MnO }_{ 2 } } +4NaCl+{ 4H }_{ 2 }S{ O }_{ 2 }\rightarrow MnCl\underset { (D) }{ _{ 2 }+ } 4NaH{ SO }_{ 4 }+{ Cl }_{ 2 }+2{ H }_{ 2 }O\)
| சேர்மம் | வாய்பாடு | பெயர் |
| A | KMnO4 | பொட்டாசியம் பெர்மாங்கனேட் |
| B | K2MnO4 | பொட்டாசியம் பெர்மாங்கனேட் |
| C | MnO2 | மாங்கனீசு டை ஆக்ஸைடு |
| D | MnCl2 | மாங்கனீசு குளோரைடு |
19.
i) La3+ அயனி பெரியது.
ii) Cr அணுவில் 6 தனித்த எலக்ட்ரான்கள் உள்ளன. எனவே அதன் காந்த திருப்புத்திறன் = 6 x 1 = 6.6 BM
iii) MnO4 ல் Mn ன் ஆக்சிஜனேற்ற நிலை +7
ஏழு எலக்ட்ரான்களையும் இழந்து அயனி பிணைப்புகளை உருவாக்குவது சாத்தியமல்ல. எனவே எலக்ட்ரான்களை சமமாக பகிர்ந்து கொண்டு சகப்பிணைப்புகளை உருவாக்குகின்றன.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards