12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 10/10/2019
இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள்
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
d - தொகுதி தனிமங்கள் பொதுவாக _______ ஐ உருவாக்குகின்றன.
சகபிணைப்பு ஹைட்ரைடுகள்
உலோக ஹைட்ரைடுகள்
இடைச்செருகல் ஹைட்ரைடுகள்
உப்பு போன்ற ஹைட்ரைடுகள்
2.
இடைநிலைத் தனிமங்கள் வினையூக்கிகளாக பயன்படுவதன் காரணம் __________
அதிக நேர்மின் சுமை
வினைபடு பொருள்களை பரப்புக்கவர அதிக புறப்பரப்பினை கொண்டுள்ளன
தனித்த d எலக்ட்ரான்கள் உள்ளன
(ஆ) மற்றும் (இ)
3.
4.
அமில ஊடகத்தில் பெர்மாங்கனேட் அயனியானது இவ்வாறு மாற்றமடைகிறது.
MnO 42−
Mn 2+
Mn 3+
MnO2
5.
பின்வருவனவற்றுள் வெப்பப்படுத்தும் போது ஆக்சிஜனை வெளியிடாத சேர்மம் எது?
K2Cr2O7
(NH4)2Cr2O7
KClO3
Zn(ClO3)2
6.
பின்வருவனவற்றுள் எதனுடைய சேர்மம் நிறமற்றது?
Fe3+
Ti4+
Co2+
Ni2+
7.
V3+ ல் உள்ள இணையாகாத எலக்ட்ரான்களின் எண்ணிக்கைக்கு சமமான இணையாகாத எலக்ட்ரான்களைப் பெற்றிருப்பது ____________
Ti3+
Fe3+
Ni2+
Cr3+
8.
Sc(Z = 21) ஒரு இடைநிலைத் தனிமம் ஆனால் Zn(Z = 30) இடைநிலைத் தனிமம் அல்ல ஏனெனில் _________
Sc3+ மற்றும் Zn2+ ஆகிய இரு அயனிகளும் நிறமற்றவை மேலும் வெண்மை நிற சேர்மங்களை உருவாக்குகின்றன
d-ஆர்பிட்டால் ஆனது Sc-ல் பகுதியளவு நிரப்பப்பட்டுள்ளது. ஆனால் Zn-ல் முழுவதும் நிரப்பப்பட்டுள்ளது.
Zn-ல் கடைசி எலக்ட்ரான் 4s ஆர்பிட்டாலில் நிரம்புவதாக கருதப்படுகிறது
Sc மற்றும் Zn ஆகிய இரண்டும் மாறுபடும் ஆக்சிஜனேற்ற நிலைகளைப் பெற்றிருப்பதில்லை.
9.
ஆக்டினைடு அயனிகள் நிறமுள்ளவை. ஏன்?
10.
இடைநிலைத் தனிமங்கள் உலோகக் கலவைகளை உருவாக்குவதன் காரணம் யாது?
11.
இடைநிலைத் தனிமங்களின் வகைப்பாட்டினை எழுதுக
12.
லாந்தனாய்டு குறுக்கத்தைவிட, ஆக்டினாய்டு வரிசையில், ஆக்டினாய்டு குறுக்கம் அதிகமாக உள்ளது. ஏன்?
13.
Fe3+ மற்றும் Fe2+ல் எது அதிக நிலைப்புத் தன்மை உடையது. ஏன்?
14.
இடைச்செருகல் சேர்மங்கள் என்றால் என்ன?
15.
Gd3+ அயனியானது நிறமற்றது. ஏன்?
16.
ஆக்டினாய்டுகள் என்றால் என்ன? மூன்று உதாரணங்கள் தருக.
17.
உள்இடைநிலை தனிமங்கள் என்றால் என்ன?
18.
இடைநிலைத் தனிமங்கள் என்பன எவை? உதாரணம் தருக
19.
லாந்தனாய்டுகளையும், ஆக்டினாய்டுகளையும் ஒப்பிடுக.
20.
லாந்தனாய்டு குறுக்கம் என்றால் என்ன? அதன் விளைவுகள் யாவை?
21.
இடைநிலை தனிமங்கள் அதிக உருகு நிலையைக் கொண்டுள்ளன. ஏன்?
22.
Cr2+ அல்லது Fe2+ இவற்றுள் எது வலிமையான ஆக்சிஜனொடுக்கி?
23.
4F7 என்ற எலக்ட்ரான் அமைப்புடைய லாந்தனைடு அயனி
24.
+2 ஆக்சிஜனேற்ற நிலையுடைய லாந்தனைடு
25.
MnO2 ல் Mnன் ஆக்சிஜனேற்ற நிலை
26.
தூளாக்கப்பட்ட இரும்பு
27.
Ni / H2
28.
i) Cu+ உப்புகள் Cu2+ உப்புக்களை விட நிலைப்புத் தன்மை குறைந்தது.
ii) இரும்பு இடைச்செருகல் சேர்மங்களை உருவாக்காது
iii) Ag+ மற்றும் Cd2+ அயனிகள் ஒத்த எலக்ட்ரான் அமைப்புடையவை
அ) (i) & (iii)
ஆ) (ii) & (iii)
இ) (iii) & (ii)
ஈ) (ii)
29.
i) ஆஸ்மியத்தின் அதிகபட்ச ஆக்சிஜனேற்ற நிலை +8 ஆகும்
ii) இடைநிலைத் தனிமங்களில் s மற்றும் d எலக்ட்ரான்கள் வெளியேறி அதிகபட்ச ஆக்சிஜனேற்ற நிலையை உருவாக்குகின்றன
iii) 3d5 என்ற எலக்ட்ரான் அமைப்பை உடைய அயனி அதிகபட்ச காந்த திருப்புத்திறனைக் கொண்டது.
அ) (i)
ஆ) (iii)
இ) (ii) & (iii)
ஈ) (i), (ii) & (iii)
30.
i) அனைத்து லாந்தனைடுகளும் அமிலம் கலந்த நீரிலிருந்து ஹைட்ரஜனை வெளியேற்றுகின்றன
ii) Cr3+ அயனியிலிருந்து Lu3+ அயனி நோக்கிக் செல்லும் பொது அயனிகளின் Ln3+ நிறம் அடர்த்தியாகிறது
iii) அணுஎண் அதிகரிக்கும் போது Lu3+ அயனிகளின் உருவளவு அதிகரிக்கிறது
அ) (i)
ஆ) (ii)
இ) (ii) & (iii)
ஈ) (i) & (iii)
31.
i) Sc3+ அயனியில் உள்ள தனித்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை பூஜ்யம் மற்றும் காத்திருப்புத்திறனின் மதிப்பும் பூஜ்யம்.
ii) Cr2O72- ல் Cr ன் ஆக்சிஜனேற்ற நிலை +4
iii) தற்சுழற்சியைப் பொறுத்து காந்த திருப்புத்திறன் = \(\sqrt {n(n +2)} BM\)
அ) (i) & (iii)
ஆ) (i) & (ii)
இ) (ii) & (iii)
ஈ) (ii) மட்டும்
32.
UF6 ல் யுரேனியத்தின் ஆக்சிஜனேற்ற நிலை _______
33.
பொட்டாசியம் டை குரோமேட்டில் குரோமியத்தின் ஆக்சிஜனேற்ற நிலை ________
34.
ஹைட்ரோ பார்மைல் ஏற்ற வினையின் வினைவேக மாற்றி _________
35.
பாராகாந்தத் தன்மை பண்பிற்கு காரணம் ________
36.
3d வரிசையில் தனித்துவமாக உள்ள உலோகம் _________
1.
(c)
இடைச்செருகல் ஹைட்ரைடுகள்
2.
(d)
(ஆ) மற்றும் (இ)
3.
(c)
4.
(b)
Mn 2+
5.
(b)
(NH4)2Cr2O7
6.
(b)
Ti4+
7.
(c)
Ni2+
8.
(b)
d-ஆர்பிட்டால் ஆனது Sc-ல் பகுதியளவு நிரப்பப்பட்டுள்ளது. ஆனால் Zn-ல் முழுவதும் நிரப்பப்பட்டுள்ளது.
9.
(i) இணையாகாத f எலக்ட்ரான்களைக் கொண்டுள்ளன
(ii) இவை ஒளியை உறிஞ்சி f - f எலக்ட்ரான் பரிமாற்றத்திற்கு உட்படுத்தப்படுகின்றன
(iii) எனவே பொதுவாக ஆக்டினைடு அயனிகள் நிறமுள்ளவை
10.
(i) இடைநிலைத் தனிமங்கள் அனைத்தும் ஏறத்தாழ ஒரே அணு அமைப்பை பெற்றுள்ளன
(ii) இவை ஒரே மாதிரியான படிக அமைப்பை பெற்றிருப்பதால் ஒன்றின் இடத்தை மற்றொன்று எடுத்துக் கொள்ள முடியும்
11.
இடைநிலைத் தனிமங்கள் அல்லது d தொகுதி தனிமங்கள் மூன்று வரிசைகளைக் கொண்டது. தொகுதி 3 முதல் 12 வரை உள்ள தனிமங்களை உள்ளடக்கியது
| வரிசைத் தொடர் | வரிசை | தனிமங்கள் | தனிமங்களின் எண்ணிக்கை |
| 4 | 3d | Sc-Zn | 10 |
| 5 | 4d | Y-Cd | 10 |
| 6 | 5d | La, Hf - Hg | 10 |
12.
ஆக்டினைடு வரிசையில், திரை மறைத்தல் விளைவு லாந்தனைடு வரிசையை விட குறைவு ஆக்டினைடு வரிசையில் அணு எண் அதிகரிக்க அதிகரிக்க செயலுறு அணுக்கரு மின்சுமை அதிகரிக்கிறது. ஆகவே லாந்தனாய்டு குறுக்கத்தை விட ஆக்டினாய்டு வரிசையில் ஆக்டினாய்டு குறுக்கம் அதிகமாக உள்ளது.
13.
1. Fe3+ ன் எலக்ட்ரான் அமைப்பு - [Ar]3d5
2. சரிபாதி நிரம்பிய எலக்ட்ரான் அமைப்பை பெற்றுள்ளது
3. Fe2+ ன் எலக்ட்ரான் அமைப்பு - [Ar]3d6
4. இவற்றில் ஒரு பகுதியளவு நிரப்பப்பட்ட d- ஆர்பிட்டாலைப் பெற்றுள்ளது.
5. இதனால் Fe3+ ஆனது Fe2+ விட அதிக நிலைப்பு தன்மையை பெற்றுள்ளது.
14.
ஒரு உலோக அணிக் கோவைத்தளத்தில் உள்ள இடைச்செருகல் துளைகளில் ஹைட்ரஜன், போரான், கார்பன் அல்லது நைட்ரஜன் போன்ற சிறிய அணுக்கள் இடம்பெறுவதால் ஏற்படும் சேர்மங்கள் இடைச்செருகல் சேர்மங்கள் என அழைக்கப்படுகின்றன. வழக்கமாக இவைகள் வேதி வினைக்கூறு விகித அடிப்படையில் அமையாத சேர்மங்களாகும். இடைநிலை உலோகங்கள் கணக்கற்ற இடைச்செருகல் சேர்மங்களை உருவாக்குகின்றன.
உதாரணம் : TiC, ZrH1.92, Mn4N etc.
இடைச்செருகல் சேர்மங்களின் பண்புகள்:
(i) இவை கடினமானவை. மேலும் வெப்ப மற்றும் மின்கடத்தும் தன்மையைப் பெற்றுள்ளன.
(ii) இவை அவற்றில் அடங்கியுள்ள தூய உலோகங்களைக் காட்டிலும் அதிக உருகுநிலையைக் கொண்டுள்ளன.
(iii) இடைநிலை உலோகங்களின் ஹைட்ரைடுகள் வலிமைமிக்க ஆக்சிஜன் ஒடுக்கிகள் ஆகும்.
(iv) உலோக கார்பைடுகள் வேதி மந்த தன்மையைப் பெற்றுள்ளன.
15.
(i) லாந்தனைடு அயனிகளின் நிறத்திற்கு காரணம் தனித்த 4f - எலக்ட்ரான்களும், ஒளியை உறிஞ்சி அவை f - f ஆர்பிட்டால் பரிமாற்றம் அடைவதும் ஆகும்.
(ii) Gd3+ அயனியின் எலக்ட்ரான் அமைப்பு 4f7 5d0 6s0
(iii) Gd3+ அயனி ஏழு தனித்த எலக்ட்ரான்களைப் பெற்று, நிலைப்புத் தன்மையுடைய சரிபாதி நிரம்பிய 4f - ஆர்பிட்டால்களைக் கொண்டுள்ளது.
(iv) எலக்ட்ரான்களின் சீர்மைத்தன்மை குலைந்து, நிலைப்புத் தன்மை குறைவதால் Gd3+ அயனியில் f - f ஆர்பிட்டல் பரிமாற்றம் நிகழ்வதில்லை. எனவே Gd3+ அயனி நிறமற்றது.
(v) மேலும் f - f எலக்ட்ரான் பரிமாற்றம் நிகழத் தேவையான ஒளி ஆற்றலை அகச்சிவப்புப் பகுதியில் உறிஞ்ச வேண்டி இருப்பதால் கட்புலனாகும் ஒளிப்பகுதியில் Gd3+ அயனியின் நிறம் தெரிவதில்லை.
16.
ஆக்டினியத்தினைத் தொடர்ந்து வரும் 14 தனிமங்கள். அதாவது தோரியம் (Th) முதல் லாரன்சீயம் (GoLr) வரையிலான தனிமங்கள் ஆக்டினாய்டுகள் என அழைக்கப்படுகின்றன.
உதாரணம்: ஆக்டினியம், யூரேனியம், லாரன்சியம்.
17.
(n-2) f ஆர்பிட்டால்களின் கூடுதல் எலக்ட்ரான்கள் நுழையும் தனிமங்களை f தொகுதி தனிமங்கள் என்கிறோம்.
இவை இடைநிலை தனிமங்களுக்கு உள்ளேயே இடைநிலை வரிசையை உண்டாக்குகின்றன. எனவே இவை உள்இடைநிலை தனிமங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
f தொகுதி தனிமங்கள் அருமண்தனிமங்கள் என்றும் அழைக்கப்படுகிறது.
உள் இடைநிலைத் தனிமங்கள் இரண்டு வரிசைத் தொடர்களைக் கொண்டுள்ளன. அவை
1. லாந்தனாய்டு வரிசை (4f தொகுதி தனிமங்கள்) மற்றும்
2. ஆக்டினைடு வரிசை (5f தொகுதி தனிமங்கள்)
18.
IUPAC வரையறையின் படி ஒரு தனிமத்தின் அணுவானது முழுவதும் நிரப்படாத d உட்கூட்டினை பெற்றிருந்தாலோ அல்லது அத்தனிமம் உருவாக்கும் நேரயனியானது முழுவதும் நிரப்பப்படாத d உட்கூட்டினை பெற்றிருந்தாலோ அத்தனிமம் ஒரு இடைநிலை உலோகமாகும். இவைகள் தனிம வரிசை அட்டவணையில் மையப் பகுதியில் s மற்றும் p-தொகுதி தனிமங்களுக்கு இடையில் இடம் பெற்றுள்ளன.
எடுத்துக்காட்டு: Fc, Cu, Ag, Au
19.
| வ.எண்: | லாந்தனைடுகள் | ஆக்டினாய்டுகள் |
| 1. | வேறுபடுத்தும் எலக்ட்ரான் 4f ஆர்பிட்டாலில் சேர்க்கிறது | வேறுபடுத்தும் எலக்ட்ரான் 5f ஆர்பிட்டாலில் சேர்க்கிறது. |
| 2. | 4f ஆர்பிட்டாலில் பிணைப்பு ஆற்றல் அதிகம் | 5f ஆர்பிட்டாலில் பிணைப்பு ஆற்றல் குறைவு |
| 3. | இவைகளில் அணைவுச் சேர்மங்களை உருவாக்கும் தன்மை குறைவு. | இவற்றின் அணைவுச் சேர்மங்களை உருவாக்கும் தன்மை அதிகம். |
| 4. | பெரும்பாலான லாந்தனாய்டுகள் நிறமற்றவை | பெரும்பாலான ஆக்டினாய்டுகள் நிறமுடையவை (U3+ சிவப்பு, U4+ பச்சை, UO22+ மஞ்சள்) |
| 5. | இவைகள் ஆக்சோ நேரயனிகளை உருவாக்குவதில்லை. | இவைகளின் ஆக்சோ நேரயனிகளை உருவாக்குகின்றன. UO22+, NpO22+ |
| 6. | லாந்தனாய்டுகள் சில நேர்வுகளில் +3 ஆக்சிஜனேற்ற நிலையுடன், +2 ஆக்சிஜனேற்ற நிலைகளையும் பெற்றுள்ளன. | ஆக்டினாய்டுகள் +3 ஆக்சிஜனேற்ற நிலையுடன் +4, +5, +6 மற்றும் +7 போன்ற உயர் ஆக்சிஜனேற்ற நிலைகளை பெற்றுள்ளன. |
20.
அணு மற்றும் அயனி ஆரம்:
4f தொடரில் சீரியம் (Ce) முதல் லுட்டீசியம் (G₁Lu) வரை செல்லும் போது அணு எண் அதிகரிக்க அதிகரிக்க லாந்தனாய்டுகளின் அணு மற்றும் அயனி ஆரங்கள் சீராகக் குறைந்து வருகின்றன. இவ்வாறு அயனி ஆரம் குறைவது லாந்தனாய்டு குறுக்கம் எனப்படும்.
லாந்தனாய்டு குறுக்கத்தின் விளைவுகள்:
(i) காரத் தன்மை குறைதல்:
Ce3+ யிலிருந்து Lu3+ நோக்கிச் செல்லும் போது Ln3+ அயனிகளில் காரத் தன்மை குறைகிறது. Ln3+ அயனிகளின் உருவளவு குறைவதாலும், Ln - OH பிணைப்பின் அயனித் தன்மை குறைவதாலும், (சகப்பிணைப்புத் தன்மை அதிகரிக்கப்பதன் காரணமாகவும்) காரத் தன்மையானது குறைகிறது.
(ii) லாந்தனாய்டுகளுக்கிடையேயான ஒற்றுமைகள்:
f-தொடர் முழுமைக்கும் அணு ஆரத்தில் 10 pm குறைவும் அயனி ஆரத்தில் 20 pm குறைவும் மட்டுமே காணப்படுகிறது. இவ்வாறு லாந்தனாய்டுகளில் அயனி ஆரங்களில் மிகச் சிறிதளவே வேறுபாடுகள் காணப்படுவதால் அவைகளின் வேதிப் பண்புகள் ஏறத்தாழ ஒத்துள்ளன.
(iii) முதல் மற்றும் இரண்டாம் வரிசை இடைநிலைத் தனிமங்களைக் காட்டிலும்:
இரண்டாம் மற்றும் மூன்றாம் இடைநிலைத் தனிம வரிசைத்தனிமங்கள் அதிகளவில் ஒன்றுக்கொன்று ஒத்துள்ளன.
21.
இடைநிலை உலோகங்கள் அதிகளவு தனித்த எலக்ட்ரானை கொண்டுள்ளது. இது உலோகப்பிணைப்பில் ஈடுபடுவதால் அதிக உருகுநிலையைக் கொண்டுள்ளது.
இடைநிலை உலோக வரிசையில் இடமிருந்து வலமாகச் செல்லும் போது, ஆரம்பத்தில் உலோகப் பிணைப்பிற்கு தேவையான தனித்த d- எலக்ட்ரான்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் உருகுநிலையும் அதிகரித்து, அதிகபட்ச மதிப்பினை அடைந்து பின், உலோக பிணைப்பிற்கு தேவையான எலக்ட்ரான்கள் இணையாவதால் உருகுநிலையின் மதிப்பு குறைகிறது.
22.
1. Cr2+ ஆனது Fe2+ விட வலிமையான ஆக்ஸிஜனோடுக்கியாகும். Cr2+ திட்ட மின்முனை மின்னழுத்த (E°) மதிப்பானது - 0.91 V ஆகும். ஆனால் Fe2+ ன் மதிப்பு - 0.44 V ஆகும்.
2. ஒரு உலோகத்தின் திட்ட மின்முனை மின்னழுத்த மதிப்பானது அதிக எதிர்க்குறி மதிப்பைப் பெற்றிருப்பின் அந்த உலோகமானது ஒரு வலிமையான ஒடுக்கும் காரணியாகும். ஏனெனில் இவைகள் எளிதில் எலக்ட்ரான்களை இழக்கின்றன. எனவே Cr²+ ஒரு வலிமையான ஆக்ஸிஜனோடுக்கியாகும்.
23.
Gd
24.
Eu
25.
+4
26.
ஹேபர் முறை
27.
தாவர எண்ணெயினை டால்டாவாக மாற்றுதல்
28.
( )
அ) (i) & (iii)
சரியான கூற்று : (ii) இரும்பு இடைச்செருகல் சேர்மங்களை உருவாக்கும்
29.
( )
ஈ) (i), (ii) & (iii)
30.
( )
அ) (i)
சரியான கூற்று ii) Ln3+ அயனிகளில் x மற்றும் (14 - x ) எண்ணிக்கையிலான f எலக்ட்ரான்களை கொண்ட அயனிகள் ஒரே நிறத்தைப் பெற்றுள்ளன.
iii) அணு எண் அதிகரிக்கும் போது Lu3+ அயனிகளின் உருவளவு குறைகிறது
31.
( )
அ) (i) & (iii)
சரியான கூற்று : (ii) Cr2O72- ல் Cr ன் ஆக்சிஜனேற்ற நிலை +6
32.
( )
+6
33.
( )
+6
34.
( )
(Co2(Co)8)
35.
( )
தனித்த எலக்ட்ரான்கள்
36.
( )
காப்பர்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards