12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 18/09/2019
இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள்
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
அமில ஊடகத்தில் Mn(VI) அயனி சுய ஆக்சிஜனேற்ற ஒடுக்கமடையும் வினையினை எழுதுக
2.
இடைநிலைத்தனிமங்கள் நிறமுள்ள அயனியைத் தோற்றுவிப்பதன் காரணம் யாது?
3.
லாந்தனைடு குறுக்கம் என்றால் என்ன?
4.
பைரோலுசைட்டிலிருந்து பொட்டாசியம் பெர்மாங்கனேட் தயாரித்தலின் வினைகளை எழுது
5.
இடைநிலைத் தனிமங்கள் உலோகக் கலவைகளை உருவாக்குவதன் காரணம் யாது?
6.
உலோகக்கலவை உருவாதல் பற்றிய ஹியூம் ரோத்தரி விதியினைக் கூறுக
7.
4d வரிசை தனிமங்களின் ஆக்சிஜனேற்ற நிலைகளை விளக்குக.
8.
இடைநிலைத் தனிமங்கள் என்பன எவை? உதாரணம் தருக
9.
லாந்தனாய்டு குறுக்கம் என்றால் என்ன? அதன் விளைவுகள் யாவை?
10.
1.
3MnO2-4 + 4H+ ⟶ 2MnO4- + MnO2 + 2H2O
2.
(i) தனித்த எலக்ட்ரான்களை பெற்றுள்ளன.
(ii) d - இணைக்கூட்டில் உள்ள அடுத்தடுத்த ஆற்றல் மாற்றங்களுக்கு இடையே ஆற்றல் வேறுபாடு குறைவு
(iii) எனவே d - d எலக்ட்ரான் பரிமாற்றம் நடைபெறுவதால் இடைநிலை தனிமங்கள் நிறமுள்ள அயனியை தோற்றுவிக்கின்றன.
3.
சீசியம் முதல் லுட்டீசியம் வரை செல்லும் போது அணு எண் அதிகரிக்க, அதிகரிக்க லாந்தனைடுகளின் அணு மற்றும் அயனி ஆரங்கள் சீராகக் குறைவது லாந்தனைடு குறுக்கம் எனப்படும்.
4.
2MnO2 + 4KOH + O2 \(\underrightarrow { \Delta } \) 2K2MnO4 + 2H2O
5.
(i) இடைநிலைத் தனிமங்கள் அனைத்தும் ஏறத்தாழ ஒரே அணு அமைப்பை பெற்றுள்ளன
(ii) இவை ஒரே மாதிரியான படிக அமைப்பை பெற்றிருப்பதால் ஒன்றின் இடத்தை மற்றொன்று எடுத்துக் கொள்ள முடியும்
6.
ஹியூம் - ரோத்தரி விதி:
(i) ஒரு பதலீடடைந்த உலோகக் கலவை உருவாக, கரைப்பான் மற்றும் கரைபொருள் ஆகியவற்றின் அணு ஆரங்களுக்கு இடையே வேறுபாடு 15 சதவீதத்தை விட குறைவாக இருக்க வேண்டும்.
(ii) கரைப்பான் மற்றும் கரைபொருள் இரண்டும் ஒரே இணைதிறன் மற்றும் படிக அமைப்பினை பெற்றிருக்க வேண்டும்
(iii) அவைகளின் எலக்ட்ரான் கவர்திற மதிப்பின் வேறுபாடானது பூஜ்ஜியத்திற்கு அருகாமையில் அமைய வேண்டும்.
இந்நிபந்தனை நிறைவு செய்யும் உலோகங்கள் தங்களுக்குள் உலோகக்கலவைகளை உருவாக்குகின்றன.
7.
1. 4d உலோகங்களின் ஆக்ஸினேற்ற நிலையானது இட்ரியம் மற்றும் லாந்தனத்தின் +3 முதல் ருத்தினியம் மற்றும் ஆஸ்மியத்தின் +8 வரை மாறுபடுகிறது.
2. 4d மற்றும் 5d தனிமங்கள் O, F மற்றும் CI ஆகிய அதிக எலக்ட்ரான் கவர் தன்மையுடைய தனிமங்களுடன் உருவாக்கும் சோமங்களில் அவைகளின் அதிகபட்ச ஆக்ஜனேற்ற நிலை காணப்படுகிறது. ஒரு வரிசையில் மேலிருந்து கீழாக வரும் போது உயர் ஆக்ஸிஜனேற்ற நிலைகளில் நிலைப்புத் தன்மை பொதுவாக அதிகரிக்கிறது. அதே நேரத்தில் குறைந்த ஆக்ஸிஜனேற்ற நிலைகளின் நிலைப்புத் தன்மை குறைகிறது.
(எ. கா) RuO4, மற்றும் OsO4
ருத்தினியம் மற்றும் ஆஸ்மியத்தின் ஆக்ஸிஜனேற்ற எண் +8.
8.
IUPAC வரையறையின் படி ஒரு தனிமத்தின் அணுவானது முழுவதும் நிரப்படாத d உட்கூட்டினை பெற்றிருந்தாலோ அல்லது அத்தனிமம் உருவாக்கும் நேரயனியானது முழுவதும் நிரப்பப்படாத d உட்கூட்டினை பெற்றிருந்தாலோ அத்தனிமம் ஒரு இடைநிலை உலோகமாகும். இவைகள் தனிம வரிசை அட்டவணையில் மையப் பகுதியில் s மற்றும் p-தொகுதி தனிமங்களுக்கு இடையில் இடம் பெற்றுள்ளன.
எடுத்துக்காட்டு: Fc, Cu, Ag, Au
9.
அணு மற்றும் அயனி ஆரம்:
4f தொடரில் சீரியம் (Ce) முதல் லுட்டீசியம் (G₁Lu) வரை செல்லும் போது அணு எண் அதிகரிக்க அதிகரிக்க லாந்தனாய்டுகளின் அணு மற்றும் அயனி ஆரங்கள் சீராகக் குறைந்து வருகின்றன. இவ்வாறு அயனி ஆரம் குறைவது லாந்தனாய்டு குறுக்கம் எனப்படும்.
லாந்தனாய்டு குறுக்கத்தின் விளைவுகள்:
(i) காரத் தன்மை குறைதல்:
Ce3+ யிலிருந்து Lu3+ நோக்கிச் செல்லும் போது Ln3+ அயனிகளில் காரத் தன்மை குறைகிறது. Ln3+ அயனிகளின் உருவளவு குறைவதாலும், Ln - OH பிணைப்பின் அயனித் தன்மை குறைவதாலும், (சகப்பிணைப்புத் தன்மை அதிகரிக்கப்பதன் காரணமாகவும்) காரத் தன்மையானது குறைகிறது.
(ii) லாந்தனாய்டுகளுக்கிடையேயான ஒற்றுமைகள்:
f-தொடர் முழுமைக்கும் அணு ஆரத்தில் 10 pm குறைவும் அயனி ஆரத்தில் 20 pm குறைவும் மட்டுமே காணப்படுகிறது. இவ்வாறு லாந்தனாய்டுகளில் அயனி ஆரங்களில் மிகச் சிறிதளவே வேறுபாடுகள் காணப்படுவதால் அவைகளின் வேதிப் பண்புகள் ஏறத்தாழ ஒத்துள்ளன.
(iii) முதல் மற்றும் இரண்டாம் வரிசை இடைநிலைத் தனிமங்களைக் காட்டிலும்:
இரண்டாம் மற்றும் மூன்றாம் இடைநிலைத் தனிம வரிசைத்தனிமங்கள் அதிகளவில் ஒன்றுக்கொன்று ஒத்துள்ளன.
10.

12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards