12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test

1.
பின்வரும் வாக்கியத்தில் தவறான ஒன்றை கண்டறிக.
போட்டி பொருட்களிலிருந்து வேறுபடுத்தி காண்பதற்கு ஒரு பெயரோ அல்லது வணிக குறியோ இடப்படுவதற்கு பெயரிடல் என்று பெயர்
பொருட்கள் விற்பனை செய்வதற்கு முன்னர் எளிதில் கையாளுவதற்கு ஏற்றவாறு உறையிடுவது கட்டுமம் எனப்படுகிறது
சந்தையிடுகை நடவடிக்கைக்கு போக்குவரத்து இன்றியமையாத ஒரு பணியாக உள்ளது
மேற்சொன்னவற்றில் எதுவுமில்லை
2.
பால், முட்டை, காய் மற்றும் கனிகள் போன்றவைகள் விற்பனை செய்யப்படும் சந்தை இவ்வாறு அழைக்கப்படுகிறது.
களச் சந்தை
மிகக் குறுகிய காலச் சந்தை
நீண்ட காலச் சந்தை
முறையான சந்தை
3.
உயர் ஊதியம் மற்றும் அதிக பலன்கள் வழங்குவதன் மூலம் போட்டி நிறுவனங்களில் உள்ள திறமையான பணியாளர்களை தம்முடைய நிறுவனத்தில் பணியாற்ற ஈர்க்கும் செயல் __ என அழைக்கப்படுகிறது.
இணைய வழி ஆட்சேர்ப்பு
பணியாளர் வேட்டை
சார்ந்தவர்கள்
வளாகத் தேர்வு
4.
பின்வருவனவற்றுள் ஒன்று பயிற்சியின் நன்மை அல்ல.
உற்பத்தித் திறனை அதிகரிக்கிறது
பணியாளர்களின் தனித்திறன் மற்றும் அறிவுத் திறன் மேம்படுத்துகிறது
ஒழுங்குணர்வை மேம்படுத்துகிறது
மேற்சொன்னவற்றில் எதுவுமில்லை
5.
நுண்ணறிவு எண் = மன வயது / கால வயது x 100
= (மன வயது/ கால வயது) x 100
= (கால வயது/ மன வயது) x 100
= (மன வயது/ கால வயது) x 200
= (மன வயது/ கணக்கிட்ட வயது) x 100
6.
சிறந்த வேலை செயல்திறனை உறுதிப்படுத்துவதற்காக பணியாளர்களின் திறன் நிலைகளை எது மேம்படுத்துகிறது?
பயிற்சி
தேர்ந்தெடுப்பு
ஆட்சேர்ப்பு
செயல்திறன் மதிப்பீடு
7.
கீழ்கண்டவற்றுள் கண்ணுக்கு புலப்படாத பொருள் எது?
கல்வி
கைபேசி
ஆடைகள்
வாகனங்கள்
8.
சந்தையிடுகை கலவை என்பது சந்தையிடுகை திட்டமிடல் மூலம் நிறுவனத்தின் குறிக்கோள் ______ தேவை மற்றும் மன நிறைவு மூலம் லாபம் பெறுகிறது.
மொத்த விற்பனையாளர்
சில்லறை விற்பனையாளர்
நுகர்வோர்
விற்பனையாளர்
9.
சந்தையிடுகை முறையின் ஆரம்ப நிலை _______
முற்றுரிமை முறை
பணத்திற்கு மாற்றுதல்
பண்டமாற்று முறை
தற்சார்பு உற்பத்தி
10.
பங்கு பரிவர்த்தனை சந்தை இவ்வாறு அழைக்கப்படுகிறது.
களச்சந்தை
உள்ளூர் சந்தை
பத்திரங்களின் சந்தை
தேசிய சந்தை
11.
உடனடிச் சந்தை எதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது.
பொருட்கள்
பரிவர்த்தனை
ஒழுங்குமுறை
காலம்
12.
சந்தையிடுகையில் சந்தையிடுகையாளர் முதலில் தெரிந்து கொள்ள விரும்புவது
வாடிக்கையாளரின் தகுதி
பொருளின் தரம்
வாடிக்கையாளரின் பின்புலம்
வாடிக்கையாளரின் தேவைகள்
13.
பண்டங்கள் மற்றும் பணிகளை பணத்தின் அடிப்படையில் மாற்றம் செய்பவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
விற்பனையாளர்
சந்தையிடுகையாளர்
வாடிக்கையாளர்
மேலாளர்
14.
பயிற்சி முறைகளை _____ மற்றும் ___________பயிற்சி என வகைப்படுத்தலாம்.
வேலை சுழற்சி மற்றும் வேலை செறிவூட்டல்
பணிவழி மற்றும் பணி வழியற்ற பயிற்சி
வேலை பகுப்பாய்வு மற்றும் வேலை வடிவமைப்பு
உடல் மற்றும் மனம்
15.
_____ ஊழியர்களின் திறமை குறைபாடுகளைத் தடுக்க உதவுகிறது.
பயிற்சி
வேலை பகுப்பாய்வு
தேர்வு
ஆட்சேர்ப்பு
16.
முதலில் வேலை, அடுத்து மனிதர் என்பது ஒரு ____ கோட்பாடு.
சோதனை
நேர்காணல்
பயிற்சி
பணியமர்த்தல்
17.
பணியாளர்களை தேர்ந்தெடுப்பதில் பின்வருவனவற்றில் எவை பல்வேறு பண்புகளை அளவிட பயன்படுகிறது?
உடல் பரிசோதனை
உளவியல் சோதனை
அணுகுமுறை டெஸ்ட்
நிபுணத்துவம் சோதனைகள்
18.
இணையவழி ஆட்சேர்ப்பு என்பது ____ மூலமே சாத்தியம்.
கணினி
இணையம்
அகன்றவரிசை
4 ஜி
19.
20.
ஆட்சேர்ப்பு என்பது _______ அடையாளம் காண்பதற்கான செயல்முறை ஆகும்.
சரியான வேலைக்கு சரியான நபர்
நன்கு செயலாக்குபவர்
சரியான நபர்
மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை.
21.
பண்டகச் சந்தை என்றால் என்ன?
22.
ஆட்சேர்ப்பு முறையில் வேட்டையாடுதல் என்றால் என்ன ?
23.
4Ps என அழைக்கப்படுவது யாது?
24.
சந்தையிடுகை கலவையின் வரைவிலக்கணம் தருக.
25.
சந்தை என்றால் என்ன?
26.
மின்னணு கற்றல் முறை பற்றி கூறுக.
27.
பங்கேற்று நடித்தல் முறை என்றால் என்ன?
28.
பணியமர்த்தல் என்றால் என்ன?
29.
தேர்ந்தெடுத்தல் என்றால் என்ன?
30.
பதவி உயர்வு என்றால் என்ன?
31.
பணியிடத்தை ஒத்த இடத்தில் பயிற்சி முறை என்றால் என்ன?
32.
பணி ஒப்பந்தத்தில் எழுதப்படக்கூடிய விவரங்கள் யாவை?
33.
சந்தையிடுகை கலவை என்பது பற்றி நீவீர் அறிவது யாது? ஏதேனும் இரண்டு கூறுக.
34.
சந்தையிடுகையின் நோக்கங்கள் யாவை?
35.
காலத்தின் அடிப்படையில் சந்தையினை எப்படி வகைப்படுத்துவாய்?
36.
சந்தையிடுகையாளர் ஓர் புதுமை கண்டுபிடிப்பாளரா? நீர் அதை ஏற்றுக்கொள்வீரா?
37.
பணிவழி பயிற்சி பற்றி நீ அறிவது யாது?
38.
அடைவுச் சோதனை குறித்து நீவீர் அறிவது யாது?
39.
ஆட்சேர்ப்புச் செயல்பாட்டில் உள்ள புறத்திறனீட்டல் படிநிலைகளை கூறுக.
40.
வேலை வாய்ப்பு இணையதளங்கள் என்றால் என்ன?
41.
ஆட்சேர்ப்பு முறையில் உள்ள சமீபகால போக்குகளை விளக்குக.
42.
ஆட்சேர்ப்பு முறையில் உள்ள அகவளங்களை விளக்குக.(ஏதேனும் 5)
43.
ஆட்சேர்ப்பு முறைக்கும், தேர்ந்தெடுத்தலுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை விவரி.(ஏதேனும் 5)
44.
சந்தையிடுகை பணிகளை விளக்குக.
45.
பயிற்சியின் நோக்கம் யாது? அல்லது பயிற்சியின் அவசியம் என்ன?
46.
சந்தையிடுகை கலவையின் கூறுகளை குறிப்பிடுக.
47.
48.
இன்றைய நவீன உலகில் சந்தையை மேம்படுத்துவதற்கு உமது பங்களிப்பு யாது? விளக்குக.
49.
பொருளாதார அடிப்படையில் சந்தைகள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?
50.
சந்தை எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது? விவரி.(ஏதேனும் 5)
51.
பயிற்சியின் நன்மைகளை விளக்குக. (தலைப்புக்கு இரண்டு விளக்கம்)
52.
பயிற்சியின் பல்வேறு முறைகளை விவரி? (ஏதேனும் 5)
53.
பணியமர்த்தல் கோட்பாடுகளை விவரி.
54.
பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான முக்கியமான நேர்காணலின் வகைகளை விளக்குக? (ஏதேனும் 5)
1.
(d)
மேற்சொன்னவற்றில் எதுவுமில்லை
2.
(b)
மிகக் குறுகிய காலச் சந்தை
3.
(b)
பணியாளர் வேட்டை
4.
(d)
மேற்சொன்னவற்றில் எதுவுமில்லை
5.
(a)
= (மன வயது/ கால வயது) x 100
6.
(a)
பயிற்சி
7.
(a)
கல்வி
8.
(c)
நுகர்வோர்
9.
(c)
பண்டமாற்று முறை
10.
(c)
பத்திரங்களின் சந்தை
11.
(b)
பரிவர்த்தனை
12.
(d)
வாடிக்கையாளரின் தேவைகள்
13.
(b)
சந்தையிடுகையாளர்
14.
(b)
பணிவழி மற்றும் பணி வழியற்ற பயிற்சி
15.
(a)
பயிற்சி
16.
(d)
பணியமர்த்தல்
17.
(b)
உளவியல் சோதனை
18.
(b)
இணையம்
19.
(b)
20.
(a)
சரியான வேலைக்கு சரியான நபர்
21.
சந்தையில் உற்பத்தி பொருட்கள் அல்லது நுகர்வு பொருட்கள் போன்றவை வாங்குதல் மற்றும் விற்பனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
22.
நிறுவனங்கள் தங்களது சொந்த பணியாளர்களுக்கு பயிற்சிகள் மற்றும் மேம்பாடுகள் வழங்குவதற்கு பதிலாக போட்டி நிறுவனங்களில் உள்ள பணியாளர்களுக்கு நிதி மற்றும் நிதிசாராத சலுகைகளை கூடுதலாக வழங்கி அப்பணியாளர்களை கவர்ந்து பணியில் அமர்த்துகிறது. இது கவர்தல் என்றும் அழைக்கப்படுகிறது. அல்லது திறமையானவர்களை வேட்டையாடுதல் எனப்படுகிறது.
23.
திட்டம், மக்கள், செயல்திறன், செயல்முறை
24.
திரு.ஜெரோமி எம்சி கார்தோ அவர்களின் கூற்றுப்படி, "சந்தையிடுகை கலவை நான்கு கூறுகளைக் கொண்டுள்ளது. அவையாவன, பொருள் கூறுகள், விலை கூறுகள், விற்பனை மேம்பாட்டு கூறுகள் மற்றும் இடக்கூறுகள் ஆகும்". என்கிறார்.
25.
சந்தை என்ற சொல் "மர்கட்டஸ்" என்ற லத்தீன் சொல்லிலிருந்து பெறப்பட்டது. மேலும் வணிகம் நடைபெறும் இடத்தை குறிக்கிறது. அதாவது சந்தையின் பொதுவான பயன்பாடானது பொருட்களை வாங்குதல் மற்றும் விற்பனை செய்வதற்கான ஒரு இடமாக திகழ்கிறது.
26.
(i) மின்னணு கற்றல் முறை என்பது பாரம்பரிய பயிற்சி வகுப்பறையில் அல்லது அலுவலகத்தில் தொழில்நுட்ப செயல்முறையை பயன்படுத்துவதாகும்.
(ii) அலுவலகம் மின்னணு கற்றல் கூட பெரும்பாலும் இணையவழி கற்றல் அல்லது வலைபக்க அடிப்படையிலான பயிற்சியை குறிக்கிறது.
27.
(i) பயிற்றுவிப்பாளர்கள் இந்த முறையில் பதவியின் சூழ்நிலையை அல்லது பதவியில் நியமிக்கப்பட்ட பாத்திரத்தை விளக்குவார்.
(ii) அவர்கள் எந்த ஒத்திகையும் இல்லாமல் ஒதுக்கப்படும் பாத்திரங்களில் செயல்பட வேண்டும்.
(iii) முன் தயாரிக்கப்பட்ட உரையாடல்கள் எதுவும் இல்லை. எனவே அவர்கள் எந்த வகையிலும் பங்கேற்காமல் பங்கு வகிக்க வேண்டும்.
28.
(i) பணியமர்த்தல் என்பது புதிய பணியாளர்களை பணியில் நியமித்தல், பதவி உயர்வு, பணியிட மாறுதல் அல்லது ஏற்கனவே உள்ள பணியாளரை பதவி இறக்கம் செய்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
(ii) சரியான நபருக்கு சரியான வேலைவாய்ப்பை அளிக்கும் செயல்முறையே பணியமர்த்தல் என்று அழைக்கப்படுகிறது.
29.
தேர்வு என்பது பணிநாடுவோரை வேறுபடுத்திப் பார்த்து ஆய்ந்தறிந்து சரியான நபரை உரிய பணிக்கு அடையாளம் கண்டு அப்பணிக்கு அவரை வெற்றிகரமாக பணியமர்த்தும் நிலை ஆகும். தேர்வு என்பது விண்ணப்பதாரர்களை வகைப்படுத்தி பணிக்கு மிகவும் பொருத்தமானவரை தேர்ந்தெடுப்பதே ஆகும்.
30.
பணி மூப்பு மற்றும் தகுதியின் அடிப்படையில், பணியாளர்கள் நிறுவன அமைப்பின் படிநிலையில் உள்ள கீழ்மட்ட நிலையிலிருந்து, மேல்மட்ட நிலைக்கு சென்று பணிபுரிய வாய்ப்பு அளிக்கப்படுகிறது.இதுவே பதவி உயர்வு எனப்படும்.
31.
(i) பயிற்சி நோக்கத்திற்காக செயற்கையாக உருவாக்கப்படும் உண்மையான வேலை சூழலைப் போல ஊழியர்களுக்கு பயிற்சியளிக்கும் முறை தொழிற்சாலைக்குள் பயிற்சி முறை எனப்படுகிறது.
(ii) இந்த வகையான பயிற்சி அளிப்பதன் மூலமாக தொழிற்சாலையில் உள்ள இயந்திரங்களுக்கு எவ்வித சேதாரமும் இழப்பும் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
(iii) ஓட்டுனர்கள், விமானிகள், விண்வெளி விஞ்ஞானிகள் போன்றோருக்கு இப்பயிற்சி வழங்கப்படுகிறது.
32.
1. பணியின் தலைப்பு
2. கடமைகள் மற்றும் பொறுப்புகள்
3. சம்பளம்
4. வேலை நேரம்
5. பணியில் சேர்ந்த தேதி மற்றும் பணிக்காலத்தை கணக்கிடுவதற்கான அடிப்படை
6. பணி விதிகள்
7. குறை தீர் நடைமுறைகள்
8. ஒழுங்குமுறை நடைமுறை
9. உரிமைகள் தொடர்பான சிறப்பு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
33.
(i) சந்தையிடுகை கலவை மூலம் நிறுவனம் தனது நுகர்வோர்களை குறிவைத்து அதன் மூலம் லாபம் ஈட்டுவதே ஆகும். இத்தகைய சந்தையிடுகையின் செயல்பாடுகள் நான்கு வகை கலவை பொருட்களை கொண்டுள்ளது. அதாவது பொருட்கலவை, விலை கலவை. இடக் கலவை, மற்றும் மேம்பாட்டு கலவை போன்றவையாகும்.
(ii) பொருள் (Product) : பொருள் சந்தையில் ஒரு முக்கிய கூறு ஆகும். பொருள் இல்லையெனில் எந்த ஒரு சந்தையும் இயங்க இயலாது.
(iii) விலை (Place) : பிலிப் கோட்லர் அவர்களின் கருத்துப்படி “விலை என்பது பண்டங்கள் மற்றும் பணியின் மாற்று மதிப்பு ஆக பெறப்படும் ஒன்றாகும்" அல்லது நுகர்வோர்கள் நலன் கருதி பண்டங்கள் மற்றும் பணிகளுக்கு இணையான மதிப்பை மாற்றிக் கொள்ள தக்க ஒன்றுதான் விலை" என்கிறார்.
34.
1. நவீன சந்தையிடுகை கொள்கையானது அறிவு தரத்தை பயன்படுத்த உதவுகிறது.
2. சந்தையிடுகை துறையில் மேம்பாட்டை ஏற்படுத்துகிறது.
3. கொள்கை வழிகாட்டல் மேம்பாடு மற்றும் நல்லதொரு பயனுள்ள முடிவினை செயல்படுத்துகிறது.
4. சந்தையிடுகை தொடர்புள்ள பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு காண வழிவகை செய்கிறது.
5. சந்தையிடுகை தொடர்பான பிரச்சனை குறித்து மேலும் தகவல்களை கண்டு உணருகிறது.
6. முன்னேற்ற செயல் குறித்து சரியான நடவடிக்கை மேற்கொள்கிறது.
35.
(i) மிக குறுகிய கால சந்தை : இவ்வகை சந்தையில் மிக குறுகிய காலத்தில் பயன்படத்தக்க பொருட்கள் மட்டுமே கையாளப்படுகிறது. அதாவது அழுகக்கூடிய தன்மை உடைய பொருட்களான, பால், முட்டை, காய் மற்றும் கனிகள் போன்றவைகள் இத்தகைய சந்தையானது கிராமப்புறங்களில் இன்றளவும் நடைபெறுகிறது.
(ii) குறுகிய கால சந்தை : இத்தகைய சந்தையில் ஒரு சில பொருட்கள் இச்சந்தையில் தேவையை சமாளிப்பதற்கு அளிப்பின் அளவு சரிசெய்யப்படுகிறது. தேவை அளிப்பை விட அதிகமானது.
(iii) நீண்டகால சந்தை : நீடித்து உழைக்க கூடிய பொருட்களை கையாளத்தக்க வகையில் உள்ள சந்தையை இது குறிக்கிறது. இத்தகைய சந்தையில் நீண்ட காலத்திற்கு பயன்படுத்த ஏதுவாக உள்ள நுகர்வு பொருட்கள் மற்றும் சேவைகள் மட்டும் சந்தையிடுகை செய்யப்படுகிறது.
36.
ஆம், சந்தையிடுகையாளர் தனது பண்டங்கள் மற்றும் பணிகளை சந்தையில் தனக்கென ஒரு இடத்தை ஏற்படுத்துவதற்கு நடைமுறையில் இருந்து வரும் பொருட்களின் இயல்பை அதிகரித்தல், மதிப்பை கூட்டுதல், விலையில் மாற்றத்தை ஏற்படுத்துதல், பொருள் கொண்டு சேர்க்கும் முறை, தொழில் முறையில் மாற்றம் மற்றும் உற்பத்தி முறையில் மாற்றம் போன்றவற்றை செய்து வருகிறார்.
37.
(i) பணி வழி பயிற்சி என்பது பணி செய்யும் இடத்திலேயே பணியாளர்களுக்கு அங்குள்ள மேற்பார்வையாளரால் (அ) முன் அனுபவம் பெற்றவரால் பணி சார்ந்த போதனை அளிக்கப்படுகிறது.
(ii) இதனை வேறுவிதமாகவும் கூறலாம். அதாவது பணியாளர் பணி சார்ந்த விவரங்களை பணிச்சூழல் மூலம் கற்கிறார்.
(iii) 'செய்து கற்றல் மற்றும் சம்பாதிக்கும் போது கற்றல்' என்ற அடிப்படைக் கோட்பாட்டினை கொண்டது.
(iv) பணிவழி பயிற்சி ஒப்பீட்டளவில் குறுகிய காலத்தில் கற்றுக் கொள்ளக்கூடிய திறன்களை இறக்குமதி செய்வதற்கு ஏற்றது.
38.
(i) இது குறிப்பிட்ட துறையில் விண்ணப்பதாரரின் அடைவுத் திறனை அளவிடும் சோதனையாகும். கல்வி நிறுவனங்களில் வழக்கமாக நடத்தப்படும் தேர்வுகள் இச்சோதனை முறையைச் சார்ந்ததே. இதனை அறிவுத் திறன் சோதனை எனவும் அழைக்கலாம்
(ii) கற்றல் அனுபவத்திற்கு முன்னும், கற்றல் அனுபவத்தின் போதும், அதன் பிறகும் நடத்தப்படுகிறது.
(iii) பணி குறித்த சிறப்பறிவில் விண்ணப்பதாரரின் தேர்ச்சி தன்மையை அறிய இச்சோதனை நடத்தப்படுகிறது.
அ) ஓட்டுனர் பணிக்கு விண்ணப்பித்தவரை வாகனம் ஓட்டிக்காட்டச் சொல்லுதல்.
ஆ) இசைப்பள்ளி மாணவரை இசைக்கச் சொல்லி கேட்டல்.
இ) ஆசிரியர் பணிக்கானவரை பாடம் நடத்திக் காட்டச் சொல்லி சோதித்தல்.
39.
ஆட்சேர்ப்பின் படிநிலைகள் பின்வருமாறு:
(i) ஆட்சேர்ப்பு திட்டமிடல்.
(ii) காலிப்பணியிடங்களை தீர்மானித்தல்.
(iii) வளங்களை கண்டறிதல்.
(iv) விளம்பரம் குறித்த தகவலை உருவாக்குதல்.
(v) பொருத்தமான விளம்பரம் முறையை தேர்ந்தெடுத்தல்.
(vi) தேர்வு செயல்பாட்டிற்கு வழிவகுத்தல்.
(vii) மதிப்பீடு மற்றும் கட்டுப்பாடு.
40.
(i) நிறுவனங்கள் இணையதளங்களை வேலைவாய்ப்புக்கு பயன்படுத்தி தாங்கள் எதிர்பார்க்கும் தகுதியுடைய பணியாளர்களை தேர்வு செய்து காலியிடங்கள் பூர்த்தி செய்யலாம்.
(ii) படித்த இளைஞர்கள் தங்கள் தகுதிக்கு ஏற்றார் போன்ற வேலையை தேர்வு செய்ய இந்த இணையதளங்கள் உதவ செய்கிறது.
(iii) இந்த இணையதளங்கள் மூலம் வேலை இல்லா நிலை தவிர்க்கப்படுகிறது.
41.
நிறுவனங்கள் மூலம் ஆட்சேர்ப்பு செய்வதற்கான சமீபத்திய முறைகள் பின்வருமாறு:
(i) புறத்திறனீட்டல் (Outsourcing)
ஆட்சேர்ப்பு பணியினை மேற்கொள்ள சேவைக் கட்டணம் வழங்கும் நிறுவனங்களின் விண்ணப்பங்களை கூர்ந்தாய்வு செய்து சரியான பணிக்கு சரியான நபரை தேர்ந்தெடுத்து கொடுக்கும் பணியினை புறத்திறனீட்டல் நிறுவனங்கள் செய்கின்றன.
புறத்திறனீட்டல் மூலமான ஆட்சேர்ப்பு செயல்முறை.
(ii) புறம்பான திறன் மற்றும் ஆற்றல் கொண்ட நபரை வேட்டையாடுவது
நிறுவனங்கள் தங்களது சொந்த பணியாளர்களுக்கு பயிற்சிகள் மற்றும் மேம்பாடுகள் வழங்குவதற்கு பதிலாக போட்டி நிறுவனங்களில் உள்ள பணியாளர்களுக்கு நிதி மற்றும் நிதிசாராத சலுகைகளை கூடுதலாக வழங்கி அப்பணியாளர்களை கவர்ந்து பணியில் அமர்த்துகிறது. இது கவர்தல் என்றும் அழைக்கப்படுகிறது. அல்லது திறமையானவர்களை வேட்டையாடுதல் எனப்படுகிறது.
42.
பின்வருபவைகள் ஆட்சேர்ப்பின் அக வளங்களாகும்.
அக வளங்கள்:
இடமாற்றம், மேம்படுத்துதல், பதவி உயர்வு, பதவி இறக்கம், பழைய ஊழியர்களின் பரிந்துரை, வேலை சுழற்சி, ஓய்வு பெற்ற ஊழியர்கள், சார்ந்தவர்கள், முந்தைய விண்ணப்பதாரர்கள், கையகப்படுத்துதல் மற்றும் ஒன்றிணைப்புகள்.
(i) இடமாற்றம்:
ஒரு துறையில் இருக்கும் உபரி பணியாளர்களை பற்றாக்குறை உள்ள மற்ற துறைகளுக்கு பணி மாற்றம் செய்வதன் மூலம் காலிப்பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை எளிமையான வழியில் நிரப்பலாம்.
(ii) மேம்படுத்துதல்:
பணியாளர்கள் கீழ்மட்ட நிலையிலிருந்து மேல்மட்ட நிலை நோக்கி செல்ல செயல்திறன் மதிப்பீட்டு முறை உதவுகிறது.
(iii) பதவி உயர்வு:
பணிமூப்பு மற்றும் தகுதியின் அடிப்படையில் பணியாளர்கள் நிறுவன அமைப்பின் படிநிலையில் உள்ள கீழ்மட்ட நிலையிலிருந்து மேல்மட்ட நிலைக்கு சென்று பணி புரிய வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
(iv) பதவி இறக்கம்:
பணியில் தொடர்ந்து குறைவான செயல்திறனை வெளிப்படுத்தும் பணியாளர் செயல்திறனின் முக்கியத்துவத்தை உணரும் வகையில் அவரை மேல்நிலை பணியிலிருந்து கீழ்நிலை பணிக்கு மாற்றிவிடுவது பதவி இறக்கம் எனப்படுகிறது.
(v) பழைய ஊழியர்களின் பரிந்துரை:
பழைய பணியாளர்களை திருப்திப்படுத்த அவர்களது உறவினர்கள் அல்லது நண்பர்களை வேலைக்கு அமர்த்தலாம்.
(vi) வேலை சுழற்சி:
சுழற்சி முறையில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளில் ஈடுபடுவது எப்படி என்பதை ஒவ்வொரு பணியாளரும் அறிந்திருக்க வேண்டும். இவ்வாறு அறிந்திருந்தால் இதனை ஒரு அக வளமாகக் கொண்டு பணியாளர்கள் அனைத்து விதமான பணிகளை மேற்கொள்ள இயலும்.
(vii) தக்கவைத்தல்:
மேலாண்மை விருப்பப்படி, வயது முதிர்வு, ஓய்விற்கு பிறகும் ஓய்வூதியம் பெறும் பணியாளர்களை நிறுவன தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.
43.
| வ.எண் | ஒப்பிடுவதற்கான அடிப்படை | ஆட்சேர்ப்பு | தேர்ந்தெடுத்தல் |
| 1. | பொருள் | பணியாளர்களைத் தேடும் மற்றும் அவர்களை வேலைக்கு விண்ணப்பிக்கத் தூண்டும் நடவடிக்கையே ஆட்சேர்ப்பு ஆகும். | பொருத்தமான வேலைக்கு பொருத்தமான விண்ணப்பத்தாரரை தேர்ந்தெடுத்து பணி வழங்குதல் பணியமர்த்தல் ஆகும். |
| 2. | அணுகுமுறை | ஆட்சேர்ப்பு என்பது நேர்மறையான ஓர் செயல்முறை | தேர்ந்தெடுத்தல் என்பது எதிர்மறையான ஓர் அணுகுமுறை |
| 3. | நோக்கம் | காலியாக உள்ள பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பத்தாரரை அழைப்பது | மிகவும் பொருத்தமான விண்ணப்பத்தாரரை தேர்ந்தெடுப்பது மற்றும் மீதமுள்ளவர்களை நீக்குவது |
| 4. | வரிசை | முதல் படி | இரண்டாம் படி |
| 5. | முறை | சிக்கனமான முறை | செலவு மிகுதியான முறை |
44.
1. உரிமை மாற்று பணிகள்:
i. உரிமை மாற்று பணி என்பது பண்டங்கள் மற்றும் பணிகளின் மதிப்பை பணத்தின் அடிப்படையில் மாற்றுவதைக் குறிக்கிறது.
ii. இத்தகைய உரிமை மாற்று பணிகளை மேலும் இரண்டு வகையாக பிரிக்கலாம்.
1. வாங்குதல் மற்றும் ஒன்று சேர்த்தல்
2. விற்பனை
2. இடமாற்று பணிகள்:
இவ்வகை பணிகள் இரண்டு முக்கிய பணிகளை மேற்கொண்டுள்ளது.
i. போக்குவரத்து
ii. சரக்கு சேமிப்பு மற்றும் பண்டக சாலையிடுதல்
i. போக்குவரத்து
1. சந்தையிடுகை நடவடிக்கைகளுக்கு போக்குவரத்து இன்றியமையாத ஒரு பணியாக உள்ளது.
2. போக்குவரத்தின் மூலமே பொருட்கள் உற்பத்தி மையத்திலிருந்து நுகர்விடங்களுக்கு கொண்டு வரப்படுகின்றன.
3. போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள தீவிர மேம்பாட்டின் காரணமாகவே தற்பொழுது பேரளவு உற்பத்தி சாத்தியமாகி உள்ளது.
4. போக்குவரத்தானது பொருளுக்கு இடப் பயன்பாட்டை அளிக்கின்றது.
ii. சரக்கு சேமிப்பு மற்றும் பண்டக சாலையிடுதல்:
1. சரக்கு சேமிப்பு என்பது இப்பொழுது மிகவும் இன்றியமையாத ஒரு பணியாகி உள்ளது.
2. சரக்குகள் உற்பத்தி மையங்களிலும் பகிர்ந்தளிப்பு நிலையங்களிலும் சேமித்து வைக்கப்படுகின்றன.
3. சமநிலையற்ற தேவைகளையும் பருவகால தேவையையும் உடைய பொருட்களுக்கு சேமிப்பு மிகவும் அவசியமாகின்றது.
3. வசதிப் பணிகள்:
i. பண்டங்கள் மற்றும் பணிகளை உற்பத்தியாளரிடமிருந்து நுகர்வோருக்கு கொண்டு செல்வதற்கு உதவி புரியும் பணியையே துணைப் பணிகள் என்று அழைக்கப்படுகிறது.
ii. பணிகள் நேரடியாக பண்டங்களை மாற்றம் செய்வது அல்ல.
iii. நிதியிடல்
iv. இடர் ஏற்றல்
v. சந்தை தகவல்
vi. தரப்படுத்துதல்
vii. வகைப்படுத்துதல்
viii. பெயரிடல்
ix. கட்டுமம்
x. விலையிடல்
45.
1. பணியின் தரத்தினை உயர்த்துதல்:
i. பணியில் கவனம் செலுத்துவதுடன் பயிற்சி ஒரு குறிப்பிட்ட பணியாளரின் திறனை மேம்படுத்துகிறது.
ii. இது பணியாளரின் பணி தரத்தினை அதிகரிக்க வகை செய்கிறது.
2. பணியாளரின் வளர்ச்சியை மேம்படுத்துதல்:
பயிற்சி பெற்ற ஊழியர்கள் தங்கள் வேலையில் திறன் மிக்க ஊழியர்களின் செயல்திறன் மேம்பாட்டில் புதிய திறன்களை ஊக்குவிப்பது பயிற்சி ஆகும்.
3. வழக்கொழிவை தடுத்தல்:
i. சமீபத்தில் தொழில்நுட்பங்கள் மற்றும் நுட்பங்களைப் பற்றிய கூடுதல் அறிவைக் கற்றுக் கொள்ள பயிற்சி அளிக்கிறது.
ii. பணியாளர்கள் தற்கால தொழில்நுட்பம் மற்றும் போக்குடன் புதுப்பிக்கப்படுகிறார்கள்.
4. புதிய பணியாளர்களுக்கு விழிப்பூட்டல்:
பயிற்சியின் மூலம் புதிய பணியாளர்கள், வேலை முறைமை, நுட்பங்கள், அறிக்கைகள், பணியில் பயன்படுத்தப்படும் கருவிகள் மற்றும் உபகரணங்களை பயிற்சி நிறுவனத்தின் உதவியுடன் வேலை செய்யும் கலாச்சாரம் போன்றவற்றை கற்றுக் கொள்ளலாம்.
5. மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள்:
i. வேலையில் ஈடுபடும்போது பணியினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணர்வினை முறையான பயிற்சியின் மூலம் பெறுகின்றனர்.
ii . இது வேலை இடத்தில் பணி பாதுகாப்பினை மேம்படுத்த மற்றும் விபத்துக்களை தவிர்க்க உதவுகிறது.
6. ஊழியர்களை ஊக்குவித்தல்:
i. ஒரு பணியாளர் தன் பதவி திட்டமிடுதலுக்கு ஏற்ப தொடர்ந்து தன் மேம்பாட்டிற்காக தன் பணி பாதையில் முன்னேறி செல்ல அவசியமாகிறது.
ii. பயிற்சியானது அவர்களுக்கு செயலூக்கம் அளிப்பதோடு மட்டுமல்லாமல் நிர்வாகத்தின் மீதான அக்கறையையும், மறு உணர்வையும் ஊட்டுகிறது.
7. அதிக உற்பத்தித் திறன் மற்றும் இலாபங்கள்:
சிறந்த பயிற்சியளிக்கப்பட்ட ஊழியர்களின் பங்களிப்பு மேலும் திறன்களையும் உத்திகளையும் அளித்து வேலையினை கச்சிதமாகவும், விரைவாகவும் முடிப்பதற்கு பயிற்சி முறை உதவுகிறது.
8. செலவு குறைப்பு:
i. பயிற்சியளிக்கப்பட்ட ஊழியர்கள் வளங்களை திறமையான முறையில் பயன்படுத்தலாம்.
ii. வள ஆதாரங்களை வீணடிக்க எந்த வாய்ப்புகளும் இல்லை.
iii. இது செலவுகளைக் குறைக்க வழிவகுக்கிறது.
9. குறைந்த மேற்பார்வை:
பயிற்சி அளிக்கப்பட்ட ஊழியர்கள் தங்கள் பணியை செய்வதற்கு தேவையான அனைத்து தெளிவு நிலையைப் பெற்றிருப்பதால் குறைவான மேற்பார்வை போதுமானது.
10. சிறந்த ஒத்திசைவு:
ஊழியர்கள் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய மாற்றங்களை தொடர் பயிற்சியின் மூலம் தங்களை மாற்றிக் கொள்ள முடிகிறது.
46.
(1) பொருள் (Product)
பொருள் சந்தையில் ஒரு முக்கிய கூறு ஆகும். பொருள் இல்லையெனில் எந்த ஒரு சந்தையும் இயங்க இயலாது என்று கூறுகின்ற அளவிற்கு பொருள் முக்கிய இடம் பெறுகிறது.
(2) விலை (Price)
விலை என்பது பண்டங்கள் மற்றும் பணியின் மாற்று மதிப்பாக பெறப்படும் ஒன்றாகும்.
(3) இடம் (Place)
(i) ஒரு பொருள் என்னதான் தரம் வாய்ந்தவையாகவும், விலையில் சாதகத்தன்மை மற்றும் சிறந்த மேம்பாட்டு நடவடிக்கைகள் இருந்தபோதிலும் உற்பத்தி இடத்திலிருந்து நுகர்வு இடம் வரை பொருட்களை சரியான முறையில் மற்றும் சரியான நேரத்தில் கொண்டு செல்லவில்லை எனில் அனைத்தும் பயன் அற்றதாகும்.
(ii) எனவே சரியான நேரத்தில் சரியான இடத்திற்கு கொண்டு செல்வதற்கு இடம் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.
(4) விற்பனை மேம்பாடு / விளம்பரம் (Promotion)
சந்தையில் ஒரு பொருள் என்ன தான் தரமுடையதாக இருந்தாலும் மேலும் விலையில் சாதக நிலை இருந்தாலும் நுகர்வோர் மத்தியில் பொருளின் சிறப்பு இயல்புகள் மற்றும் பயன்பாடு குறித்து தெரியப்படுத்தாத நிலையில் அப்பொருள் நிர்ணயித்த வெற்றியை ஒரு போதும் அடைய இயலாது, எனவே மேம்பாட்டு நடவடிக்கைகள் மிகவும் அவசியமான ஒன்றாகும். மேம்பாட்டு நடவடிக்கையில் விளம்பரம் அதிக பங்கு வகிக்கிறது.
47.
48.
1. சந்தையில் ஒரு பொருள் என்னதான் தரமுடையதாக இருந்தாலும், விலையில் சாதக நிலை இருந்தாலும், நுகர்வோர் மத்தியில் பொருளின் சிறப்பு இயல்புகள் மற்றும் பயன்பாடு குறித்து தெரியப்படுத்தாத நிலையில் அப்பொருள் நிர்ணயித்த வெற்றியை ஒருபோதும் அடைய இயலாது.
2. எனவே மேம்பாடு நடவடிக்கைகள் மிகவும் அவசியமான ஒன்றாகும்.
3. மேம்பாடு நடவடிக்கையில், விளம்பரம் அதிக பங்கு வகிக்கிறது.
4. விளம்பரம் தற்போதைய சூழலில் இணையதளம், பேஸ்புக், வாட்ஸ்அப் மூலம் செய்யப்படும் போது விரைவில் நுகர்வோர்களை சென்றடையும்.
5. மேலும் பொருட்களின் சிறப்பியல்புகளை, நுகர்வோர்களின் கைபேசிகளுக்கு குறுஞ் செய்திகளாக அனுப்பி வைக்கலாம்.
6. குறிப்பிட்ட தொகைகளுக்கு மேல் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசுகளை தந்து ஊக்குவிக்கலாம்.
49.
பொருளாதாரத்தின் அடிப்படையில்:
அ. முறையான (செம்மையான) சந்தை:
இவ்வகை சந்தையில், ஒரே இயல்பான தன்மை கொண்ட பண்டங்கள் மற்றும் பணிகளை ஒரே விதமான விலையின் அடிப்படையில் கையாளப்படுகிறது: இந்த சந்தை கீழ்க்காணும் நிபந்தனைகளை கொண்டுள்ளது.
i. அதிக எண்ணிக்கை உள்ள வாங்குவோர் மற்றும் விற்போரை கொண்டுள்ளது.
ii. பொருட்களின் விலை சந்தை முழுவதும் ஒரே சீராக இருத்தல்.
iii. வாங்குவோர் மற்றும் விற்போர் சந்தையை பற்றி தெளிவாக அறிந்திருத்தல்.
iv. பொருட்கள் தங்கு தடையின்றி ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு வழிவகை செய்கிறது.
ஆ. முறையற்ற அல்லது செம்மையற்ற சந்தை (Imperfect Market)
இவ்வகை சந்தை பல்வகை பொருட்கள் மற்றும் பல்வேறு விலைகளை கொண்டுள்ளது. ஒரே தன்மை மற்றும் விலைகொண்ட பொருட்கள் இச்சந்தையில் மேற்கொள்ளப்பட மாட்டாது. கீழ்க்கண்ட செயல்பாடுகளின் அடிப்படையில் இத்தகைய சந்தை செயல்படுகிறது. அவற்றை காணலாம்.
i. பொருட்கள் ஒத்த தன்மை இன்மை
ii. விலையில் ஏற்ற தாழ்வு
iii. தகவல் தொடர்பில் குறைபாடு
iv. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பொருட்களை கொண்டு செல்வதில் உள்ள தடைகள்.
50.
பல்வேறு அணுகுமுறையின் அடிப்படையில் சந்தையை பகுதிகள், பொருட்களின் இயல்பு மற்றும் பொருளாதார பார்வை, பரிமாற்றம், ஒழுங்குமுறை, காலம், அளவு மற்றும் முக்கியத்துவம் போன்றவற்றின் அடிப்படையில் சந்தை வகைப்படுத்தப்படுகிறது.
புவியியல் அடிப்படையில்:
(i) குடும்ப சந்தை
(ii) உள்ளூர் சந்தை
(iii) தேசிய சந்தை
(iv) பன்னாட்டு சந்தை அல்லது உலகளாவிய சந்தை
பண்டகங்களின் / பொருட்களின் அடிப்படையில்:
அ. பண்டக சந்தை
(i) உற்பத்தி பொருள் மாற்று சந்தை
(ii) தயாரிப்பு பொருள் மாற்று சந்தை
(iii) சூரிய உலோகச் சந்தை
ஆ. மூலதன சந்தை
(i) பண சந்தை
(ii) அந்நிய செலாவணி சந்தை
(iii) பங்கு சந்தை
இ. பொருளாதாரத்தின் அடிப்படையில்:
(i) முறையான சந்தை
(ii) முறையற்ற அல்லது செம்மையற்ற சந்தை
ஈ. நடவடிக்கைகளின் அடிப்படையில்:
(i) உடனடிச்சந்தை
(ii) எதிர்கால சந்தை
உ. ஒழுங்குமுறை அடிப்படையில்:
(i) ஒழுங்குமுறை சந்தை
(ii) ஒழுங்குமுறையற்ற சந்தை
காலத்தின் அடிப்படையில்:
(i) மிகக் குறுகிய கால சந்தை
(ii) குறுகிய கால சந்தை
(iii) நீண்ட கால சந்தை
எ. தொழில் அளவின் அடிப்படையில்:
(i) மொத்த விற்பனை சந்தை
(ii) சில்லறை விற்பனை சந்தை
ஏ. முக்கியத்துவத்தின் அடிப்படையில்:
(i) முதன்மை சந்தை
(ii) இரண்டாம் நிலை சந்தை
(iii) முனையச் சந்தை
51.
I. நிறுமத்திற்கு கிடைக்கும் நன்மைகள்:
1. இது ஊழியர்களின் திறமையை அதிகரிக்கிறது மற்றும் உற்பத்தி திறன் மற்றும் இலாபத்தை மேம்படுத்துகிறது.
2. இது மூலப்பொருள் சேதத்தினையும் மற்றும் செயலற்ற நேரத்தினையும் குறைக்கிறது.
3. இது சமீபத்திய போக்குகளுக்கு ஊழியர்களை மாற்ற உதவுகிறது.
4. இது மேற்பார்வைக்கான நேரத்தைக் குறைக்கிறது.
5. பயிற்சி முறை பணியிடத்தில் விபத்துக்களின் எண்ணிக்கை மற்றும் அதன் விளைவாக இழப்பீட்டு தொகை ஆகியவற்றை இது குறைக்கிறது.
6. பயிற்சி பணியாளர்களின் சுழற்சியைக் குறைக்கிறது.
7. சிறந்த பயிற்சியின் மூலம் தொழிற்சங்க மற்றும் மேலாண்மை உறவை மேம்படுத்த முடியும்.
II. ஊழியர்களுக்கு கிடைக்கும் நன்மைகள்:
1. பணியாளர்களின் தனித்திறன் மற்றும் அறிவுத்திறனை மேம்படுத்துகிறது.
2. குறுகிய காலத்தில் அவர்கள் பணியுயர்வு மற்றும் பண மேம்பாட்டிற்கு உதவுகிறது.
3. தொழிலாளர் உற்பத்தித் திறனை அதிகரிக்கிறது.
4. தொழிலாளரின் மனத்திண்மையை ஒழுங்குணர்வுதனை மேம்படுத்துகிறது.
5. அதிக ஊதியம் மற்றும் வெகுமதிகளுக்கு வழிகோலுகிறது.
6. பயிற்சி பணியாளர்களிடையே பணி பற்றிய நல்ல மனப்பாங்கினையும், நம்பகத் தன்மையையும் ஏற்படுத்துகிறது.
7. ஆபத்தான பணிகளில் பணியாளர்களுக்கு பாதுகாப்பான நடைமுறைகளை உற்று நோக்க வகை செய்கிறது.
III. வாடிக்கையாளருக்கு கிடைக்கும் நன்மைகள்:
1. வாடிக்கையாளர்கள் சிறந்த தரமான பொருள்கள் மற்றும் சேவையினை பெற முடிகிறது.
2. வாடிக்கையாளர்கள் புதுமையான அல்லது மதிப்பு கூட்டப்பட்ட அல்லது சிறப்பியல்புடைய பொருள்களைப் பெறுகின்றனர்.
52.
பயிற்சியின் முறைகள் :
பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க பல்வேறு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. பயிற்சி முறைகள் ஒரு அமைப்பிற்கும் மற்றொரு அமைப்பிற்கும் இடையே மாறுபடுகின்றன.
அ) பணிவழி பயிற்சி முறைகள் On the Job Training:
(i) பணிவழி பயிற்சி என்பது பணி செய்யும் இடத்திலேயே பணியாளர்களுக்கு அங்குள்ள மேற்பார்வையாளரால் (அ) முன் அனுபவம் பெற்றவரால் பணி சார்ந்த போதனை அளிக்கப்படுகிறது.
செய்து கற்றல் மற்றும் சம்பாதிக்கும் போது கற்றல் என்ற அடிப்படை கோட்பாட்டினை கொண்டது. பணிவழி பயிற்சி ஒப்பீட்டளவில் குறுகிய காலத்தில் கற்றுக் கொள்ளக்கூடிய திறன்களை இறக்குமதி செய்வதற்கு ஏற்றது. பின்வருவன பணிவழி பயிற்சி முறைகளாகும்.
பயிற்சியளிப்பு :
(i) வழிகாட்டுதல் பயிற்சிமுறை
(ii) பணி சுழற்சி அல்லது வேலை சுழற்சி முறை.
(iii) பணி அறிவுறுத்தல் நுணுக்கமுறை
(iv) தொழில் பழகுநர் பயிற்சிமுறை
(v) குழு ஒதுக்கீடு முறை
(vi) ஆய்வின் கீழ் பயிற்சி முறை
ஆ) பணி வழியற்ற பயிற்சி முறைகள் Off the Job Training:
(i) பணிவழியற்ற பயிற்சி முறை என்பது தொழிலாளர்கள், ஊழியர்களிடம் உண்மையான பணிநிலையத்திலிருந்து வேலை பாடம் கற்றுக் கொள்வதற்கான பயிற்சி முறையாகும்.
(ii) மேலும் பணிவழியற்ற பயிற்சி என்பது குறிப்பிட்ட வேலை இடத்திற்கு அருகே இருக்கும் பயிற்சி நோக்கத்திற்காக குறிப்பாக ஒதுக்கப்பட்ட இடம் இதில் தொழிலாளர்கள் திறன்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் மற்றும் தேவையான கருவிகள் மற்றும் உத்திகளைக் கொண்டு பெற வேண்டும். இப்பணிவழியற்ற பயிற்சியின் பல்வேறு முறைகள் பின்வரும் பத்திகளில் விவரிக்கப்பட்டுள்ளது.
1. விரிவுரை முறை
2. குழு கலந்துரையாடல் முறை
3. சூழ்நிலை ஆய்வு முறை
4. பங்கேற்று நடித்தல்
5. கருத்தரங்கு மாநாட்டு முறை
6. புலம் பயணம் முறை
7. பணியிடத்தை ஒத்த இடத்தில் பயிற்சி முறை
8. மின்னணு கற்றல் முறை
9. செயல்விளக்க பயிற்சி முறை
53.
1. முதலில் வேலை, அடுத்து மனிதர்
(i) பணியின் தேவைக்கேற்ப பணியாளர் வேலையில் அமர்த்தப்பட வேண்டும்.
(ii) வேலைக்கு தேவைப்படும் விண்ணப்பதாரர் மற்றும் அவரது தகுதியில் எவ்விதமான சமரசமும் இருக்கக்கூடாது.
(iii) "முதலில் வேலை அடுத்து மனிதர்" என்பது வேலை வாய்ப்பு கொள்கையாக இருக்க வேண்டும்.
2. வேலைவாய்ப்பு :
(i) புதிய ஊழியர்களுக்கு தகுதிக்கு அதிகமான அல்லது குறைவான வேலை வழங்கப்படக் கூடாது.
(ii) தகுதியை அடிப்படையாகக் கொண்டு மனிதர்களுக்கு வேலை வழங்கப்பட வேண்டும்.
3. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் :
பணி தொடர்பாக பணியிடத்தில் நிலவும் விதிமுறைகள் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை பணியாளர் பரவலாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
4. அபராதங்கள் பற்றிய விழிப்புணர்வு :
ஊழியர் தவறு செய்தாலோ அல்லது அவரால் ஏதேனும் இழப்பு ஏற்பட்டாலோ அதன் காரணமாக அவருக்கு வழங்கப்படும் தண்டனை மற்றும் அபராதம் குறித்த விழிப்புணர்வினை அவர் பெற்றிருக்க வேண்டும்.
5. விசுவாசம் மற்றும் ஒத்துழைப்பு :
(i) பணியாளர்களுக்கு பணியமர்த்தும் போது அவருக்குள் விசுவாசம் மற்றும் ஒத்துழைப்பு உணர்வினை வளர்க்கும் முயற்சியினை மேற்கொள்ள வேண்டும்.
(ii) இதன் மூலம் அவர் வேலை மற்றும் நிறுவனம் குறித்த அவரது பொறுப்புகளை சிறப்பாக உணர்ந்து கொள்ள இயலும்.
54.
(1) ஆரம்ப நேர்காணல் :
(i) விண்ணப்பதாரர்களின் குறிப்பிட்ட பணிக்கான பொருத்தப்பாட்டை அறிய ஆரம்ப நேர்காணல் நடத்தப்படுகிறது.
(ii) இது நேரம், பணிச்சுமை மற்றும் செலவை கட்டுப்படுத்த உதவுகிறது.
(2) வடிவமைக்கப்பட்ட நேர்காணல்
இது முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்படுகிறது. நேர்காணலில் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் முன் கூட்டியே தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் நடத்தப்படுவது.
(3) வடிவமைக்கப்படாத நேர்காணல்
(i) இது கட்டமைக்கப்பட்ட நேர்காணலுக்கு நேர்மாறானது. சுதந்திரமான மற்றும் வெளிப்படையான பரஸ்பர கருத்துப் பரிமாற்றம் இருக்கும் வகையில் நேர்காணல் சூழல் இருக்க வேண்டும்.
(ii) இங்கு எதுவும் முன்கூட்டி திட்டமிடப்படுவதில்லை. நேர்காணலில் அப்போதிருக்கும் சூழல், மனநிலை போன்றவற்றின் அடிப்படையில் கேள்விகள் அமையும். கேள்விகள் முன்கூட்டி திட்டமிடப்படுவதில்லை.
(4) ஆழ்ந்த நேர்காணல்
(i) இதில் நேர்காணல் செய்யப்படுபவரின் துறை தொடர்பான ஆழமான, பரந்த அளவிலான அறிவு சோதனை செய்யப்படுகிறது.
(ii) அவர் துறையில் எந்த அளவு நிபுணத்துவம் மற்றும் நடைமுறை அறிவைப் பெற்றுள்ளார் என அறிய இத்தகைய நேர்காணல் செய்யப்படுகிறது.
(5) உயர்மட்ட குழு நேர்காணல்
(i) விண்ணப்பதாரரிடம் பலர் அடங்கிய ஒரு குழு நேர்காணல் செய்தால் அது உயர்மட்ட குழு நேர்காணல் ஆகும். பொதுவாக தலைமை பொறுப்பேற்பவர், சம்பந்தப்பட்ட துறையின் நிபுணர்கள் உளவியல் நிபுணர்கள், சிறுபான்மையினரின் பிரதிநிதிகள் இக்குழுவில் இடம் பெற்றிருப்பர்.இம்முறை சம்பந்தப்பட்ட துறையின் நிபுணர்கள், உளவியல் நிபுணர்கள், சிறுபான்மையினரின் பிரதிநிதிகள் இக்குழுவில் இடம் பெற்றிருப்பர்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards