12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test

1.
தரகர் என்று யாரை அழைக்கப்படுகிறார்கள்?
2.
இந்தியாவில் உள்ள எதேனும் 5 பங்குச் சந்தைகளை பற்றி எழுதுக.
3.
ஏலமிடுதல் என்பதன் பொருள் யாது?
4.
வைப்புச் சான்றிதழ் சந்தை என்றால் என்ன?
5.
மூலதனச் சந்தையில் விலை எவ்வாறு நிர்ணயம் செய்யப்படுகிறது?
6.
7.
இரண்டாம் நிலைச் சந்தையில் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?
8.
உடனடிச் சந்தை என்றால் என்ன?
9.
காளை மற்றும் கரடி - விளக்குக.
10.
பங்குச் சந்தையின் குறைபாடுகளை விவரி. (ஏதேனும் 3)
11.
12.
பணச்சந்தையில் ஈடுபடும் பங்கேற்பாளர்கள் யாவர்? (ஏதேனும் 3)
13.
ஏட்டுக்கடன் மற்றும் துணிகர முதல் வழங்கு நிறுமங்களை பற்றி விளக்குக.
14.
மூலதனச் சந்தையின் பல்வேறு வகைகள் என்ன? விளக்குக. (ஏதேனும் 3)
15.
இந்தியாவில் நிதிச் சந்தையின் வரை எல்லையை விளக்குக.
16.
நிதிச் சந்தையின் பொருள் தருக.
17.
பங்குச் சந்தை பணிகளை விவரி.(ஏதேனும் 5)
18.
அரசுப் பத்திரங்களின் இயல்புகளை விவரி. (ஏதேனும் 5)
19.
20.
மூலதனச் சந்தையின் சிறப்பியல்புகளை விவாதிக்க.
21.
முதல் நிலைச் சந்தை மற்றும் இரண்டாம் நிலைச் சந்தைக்கும் இடையேயான வேறுபாடுகளை விளக்குக. (ஏதேனும் 5)
1.
(i) தரகர்கள், கழிவு முகவர் ஆவர். பத்திரங்களை வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்குமிடையே இடைநிலையாளர்களாகத் தரகர்கள் செயல்படுகின்றனர்.
(ii) இவர்கள் தனக்காகப் பத்திரங்களை வாங்கி விற்பதில்லை.
2.
இந்தியாவிலுள்ள பல்வேறு பங்குச் சந்தைகளின் பெயர்கள் பின்வருமாறு
(i) தி பாம்பே பங்குச் சந்தை.
(ii) அகமதாபாத் பங்குச் சந்தை சங்கம் லிமிடெட்.
(iii) ஜெய்ப்பூர் பங்கு பரிவர்த்தனை லிமிடெட்.
(iv) கல்கத்தா பங்கு பரிவர்த்தனை சங்கம் லிமிடெட்
(v) பெங்களூரு பங்குச் சந்தை லிமிடெட்.
3.
வர்த்தகர்கள் ஒருவர் ஒருவரோடு போட்டியிடும் முறையில் பத்திரங்களை அதிகபட்ச விலைக்கு விற்க மேற்கொள்ளப்படும் ஒரு வர்த்தக முறையே 'ஏலம் விடுதல்' என அழைக்கப்படுகின்றது.
4.
வைப்புச் சான்றிதழ் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் குறுகிய கால வைப்பு ஆவணமாகும்.
5.
பத்திரங்களின் விலை மூலதனச் சந்தையில் பத்திரங்களின் தேவை மற்றும் அளிப்பை பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது.
6.
7.
வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் கலந்துரையாடுதல் மூலம் நிதி சார்ந்த சொத்துக்களின் விலையை நிர்ணயம் செய்ய நிதிச் சந்தை அனுமதிக்கின்றது. விலை கண்டுபிடிப்பு செயல்முறை மூலம் தேவை மற்றும் அளிப்பு அடிப்படையில் பொருளாதாரத்தில் நிதிகளை பங்கீடு செய்வதற்கு நிதிச் சந்தை சைகை வழங்குகிறது.
8.
ஆவணங்களை வழங்கலும், ரொக்கம் பெறுதலும் உடனடியாக நடைபெறும் சந்தை உடனடிச் சந்தை ஆகும். அதாவது தீர்வு உடனடியாக நடைபெறுகிறது.
9.
காளை - தெஜிவாலா:
(i) பத்திரங்கள் எதிர்காலத்தில் விலையேற்றம் பெறும் என்று எதிர்பார்க்கின்ற ஊக வணிகர் காளை அல்லது தெஜிவாலா (Tejiwala) என்றழைக்கப்படுகிறார்.
(ii) ஒரு காளை தன்னுடைய கொம்புகளால் எதிரிகளை உயரே அல்லது மேல் நோக்கி தூக்கி ஏறிவது போன்று, இந்த வகை வணிக ஊக வணிகர் பிணையப் பத்திரங்களின் விலையை உயரச் செய்யும் நோக்கோடு செயல்படுவதால் காளை எனப் பெயரை பெற்றுள்ளார்.
(iii) இவர் எல்லாம் நன்மைக்காகவே நடைபெறும் (Optimism) என்ற மனப்பாங்கு கொண்டவர்.
கரடி - மண்டிவாலா:
(i) கரடி அல்லது மண்டிவாலா (Mandiwala) என்றழைக்கப்படும் ஊகவணிகர், எதிர்காலத்தில் குறிப்பிட்ட பத்திரங்களின் விலைகள் வீழ்ச்சி அடையும் என்று எண்ணுபவர்.
(ii) ஒரு கரடி வணிகர் எதிலும் பின்னோக்கிய மனப்பாங்கு(pessimism) கொண்டவர்.
(iii) ஒரு கரடி பொதுவாகத் தன்னுடைய எதிரியைத் தரையில் தள்ளி அழுத்துகிறது. அதேபோல் ஒரு கரடி ஊகவணிகரும் பங்குச் சந்தையில் பங்குகளின் விலையை கீழே தள்ளுவதற்கு வேண்டிய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்
10.
பங்கு மாற்றகங்களின் குறைபாடுகளை பின்வருமாறு கூறலாம்:
(i) பங்கு பரிவர்த்தனை சீரான மற்றும் கட்டுப்பாடு இல்லாதது.
(ii) பங்குச் சந்தைகளின் உறுப்பினர் மீது கட்டுப்பாடு இல்லாதது.
(iii) ஆரோக்கியமற்ற ஊகத்தை கட்டுப்படுத்துவதில் தோல்வி.
(iv) ஒரு இடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டணம் வசூலிக்க அனுமதிக்கிறது.
(v) பங்கு பரிவர்த்தனையின் விளிம்பு தேவைகள் அல்லது உற்பத்தி சந்தைகளின் விஷயத்தில் வலியுறுத்துவதில்லை.
(vi) பங்கு மாற்றகங்களில் பங்குகளை பட்டியலிட சரியான ஒழுங்குமுறைகள் இல்லை.
11.
12.
பணச் சந்தையின் நடைமுறையில் பல பங்கேற்பாளர்கள் உள்ளனர்.
1. பல்வேறு நாடுகளின் அரசாங்கங்கள்
2. பல்வேறு நாடுகளின் மைய வங்கிகள்
3. தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள்
4. பரஸ்பர நிதி நிறுவனங்கள்
5. காப்பீட்டு நிறுவனங்கள்
6. வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள்
7. இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி
8. வணிக வங்கிகள்
9. மாநில அரசுகள்
10. பொதுமக்கள்
13.
ஏட்டுக்கடன் மற்றும் தரகு முகமை நிறுவனங்கள்:
(i) விற்பனை மூலம் பெற வேண்டிய பெறுதல்களின் அடிப்படையில் நிதி நிறுவனங்கள் செய்யும் நிதி ஏற்பாடே ஏட்டுக்கடன் தரகு முகமை ஆகும்.
(ii) இந்தியாவில் செயல்படும் சில நிறுவனங்களான, SHI மற்றும் வணிக சேவைகள் SBlன் துணை நிறுவனம் மற்றும் கான்பேங்க் ஃபேக்டரிக் லிமிடெட் கனரா வங்கியின் துணை நிறுவனம் ஆகும்.
துணிகர நிதி நிறுவனம்:
(i) துணிகர மூலதன நிதி என்பது சாதாரண நிதியில் ஒரு பகுதி ஆகும். இது புதிய திட்டம் மற்றும் கண்டுபிடிப்பிற்கு நிதி வழங்குவதற்காக உருவாக்கப்பட்டதாகும்.
(ii) துணிகர மூலதனம் என்பது தொழில்நுட்ப திட்டங்களை வணிகமயமாக்குவதற்கு தேவையான நிதியினை அளிக்கிறது.
14.
மூலதனச் சந்தையின் வகைகள் : மூலதனச் சந்தை பின்வரும் வரைபடத்தின்படி முதல் நிலைச் சந்தை மற்றும் இரண்டாம் நிலைச் சந்தை என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை முதல் நிலைச் சந்தை இரண்டாம் நிலைச் சந்தை
முதல்நிலைச் சந்தை:
(i) முதல்நிலைச் சந்தை என்பது புதிய வெளியீடுகளுக்கான ஒரு சந்தை ஆகும். ஆகையால் இது புதிய வெளியீடுகள் சந்தை எனவும் அழைக்கப்படுகிறது.
(ii) முதல்நிலைச் சந்தை பொது மக்களுக்கு முதன்முதலில் வெளியிடும் பத்திரங்களை கையாளுகிறது.
(iii) முதல்நிலை சந்தையில் கடனாளிகள் நீண்டகால நிதிக்காக புதிய நிதி பத்திரங்களை மாற்றம் செய்து கொள்கின்றனர்.
ஒரு முதல் நிலைச் சந்தையில் ஒரு நிறுமம் பின்வரும் மூன்று வழிகளில் மூலதனத்தை திரட்டிப் கொள்ளலாம்.
அவைகள்: 1) பொது வெளியீடு 2) உரிமை வெளியீடு 3) தனியார் வெளியீடு
இரண்டாம் நிலைச் சந்தை:
(i) ஏற்கனவே வெளியீடு செய்யப்பட்ட பத்திரங்களுக்கான சந்தை இரண்டாம் நிலைச் சந்தை என வரையறுக்கப்படுகிறது.
(ii) ஏற்கனவே முதல் நிலைச் சந்தையில் வெளியீடு செய்யப்பட்ட பத்திரங்கள் இங்கு வணிகம் செய்யப்படுகின்றன.
(iii) முதல் நிலைச் சந்தையின் வெளியீடுகளை பின்பற்றும் முதலீட்டார்களுக்கு இடையே வணிகம் மேற்கொள்ளப்படுகிறது.
(iv) இது பங்கு மாற்றகம் உடனடி மாற்றகம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியுள்ளது.
15.
(i) நிதிச் சந்தை தனிநபர்களுக்கு, விவசாயத் துறைகளுக்கு, தொழிற்துறைகளுக்கு, சேவை துறைகள், நிதி நிறுவனங்களான வங்கிகள், காப்பீட்டு துறைகள், சேம நல காப்பு நிதிகள் மற்றும் அரசுக்கு நிதி உதவிகளை வழங்குகிறது.
(ii) மேற்குறிப்பிட்ட அமைப்புகள் தேவையான நிதியை நிதிச் சந்தையின் உதவியுடன் குறித்த நேரத்தில் பெறுகின்றனர்.
(iii) நிதிச் சந்தையின் மூலம் குறுகிய கால மற்றும் நீண்ட கால நிதி உதவியினை நிறுவனங்கள் பெறுகின்றன. ஒட்டுமொத்த பொருளாதார மேம்பாட்டிற்கு வழி வகுக்கிறது.
16.
1. எந்த ஒரு சந்தையில் நிதி கோருதல்கள், சொத்துக்கள் மற்றும் பத்திரங்கள் போன்ற நிதிக் கருவிகள் வியாபாரம் செய்யப்படுகின்றதோ அதுவே 'நிதிச் சந்தை' எனப்படுகிறது.
2. நிதி அளிப்பவர்களிடம் உள்ள உபரி நிதியை நிதி தேவை உள்ளவரின் நிதிப் பற்றாக்குறையை நோக்கி கடன் நிதியை எடுத்து செல்வது நிதிச் சந்தை எனவும் கூறலாம்.
17.
ஒரு பங்குச் சந்தையின் பல்வேறு செயல்பாடுகளை கீழே விளக்கப்பட்டுள்ளன.
1. உடனடி மற்றும் தொடர்ச்சியான சந்தை:(Ready and Continuous Market)
(i) பங்கு பரிவர்த்தனை உண்மையில், ஏற்கனவே இருக்கும் பத்திரங்களுக்கு ஒரு சந்தை.
(ii) ஒரு முதலீட்டாளர் தனது பத்திரங்களை விற்க விரும்பினால், அவர் எளிதில் விரைவாக பங்குச் சந்தைகளில் அவற்றை விற்பனை செய்யலாம்.
(iii) வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர் தனது பங்குகளை பணமாக மாற்றலாம். அதே போல் அவர் தன் பணத்தை பத்திரங்களில் மாற்றலாம்.
2. பத்திரங்கள் சரியான மதிப்பீடு: (Correct Evaluation of Securities)
(i) பத்திரங்கள் வாங்குதல் மற்றும் விற்பனை செய்யப்படும் விலைகள் பதிவு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன.
(ii) இதன் விலைகள் "சந்தை மேற்கோள்கள்" என்று அழைக்கப்படுகின்றன.
(3) மூலதன உருவாக்கத்திற்கான உதவி (Aid to Capital formation)
(i) பங்குச் சந்தை பரிமாற்றம் பல்வேறு தொழில் துறை பத்திரங்கள் மற்றும் அவற்றின் விலைகள் மற்றும் அவர்களின் கொள்முதல் மற்றும் விற்பனைக்கு வழங்கிய வசதிகள் ஆகியவற்றை மக்களுக்கு சேமித்து, முதலீடு செய்ய தூண்டுகிறது.
(ii) பங்கு பரிமாற்றங்கள், ஒரு நிலையான மூலதனத்தை தொழில்துறையில் உறுதிப்படுத்துகின்றன மற்றும் தொழில் துறை வளர்ச்சிக்கு உதவும்.
(4) ஊக வணிகத்திற்கான வசதிகள் (Facilities for Speculation)
(i) ஊகவணிகம் என்பது பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகளின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.
(ii) ஊக வணிகத்தின் விளைவாக, பத்திரங்களின் தேவை மற்றும் வழங்கல் சமமாகிறது.
(ii) இதேபோல், விலை நகர்வுகள் சுமூகமாக அளிக்கப்படுகின்றன.
(5) பருவகால பத்திரங்கள் (Seasoning of Securities)
(i) புதிய நிறுவனங்கள் பங்குகள் வெளியிடும் பொழுது, ஊக வணிகர்கள் மற்றும் பொறுப்புறுதியாளர்கள் தற்காலிக கால வணிகத்தில் ஈடுபடுகின்றனர்.
(ii) புதிய வெளியீடுகளை சந்தை ஈர்க்க தயாராகும் பொழுது அவர்களுக்கு அவைகள் சந்தையை திறந்து விடுகின்றன.
(6) மூலதனத்தை சரியான முறையில் வழிப்படுத்துதல்: மக்கள் நல்ல லாபத்தை ஈட்டக் கூடிய அத்தகைய நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்ய விரும்புகிறது. ஆனால் பங்குச் சந்தைகளுக்கு இந்த சேமிப்புக்கள் இலாபமற்ற அலகுகள் பங்குகள் மீது வீணடிக்கப்படக்கூடும்.
(7) முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பு : ஒரு பங்கு பரிவர்த்தனையில் அனைத்து ஒப்பந்தங்களும் நன்கு வரையறுக்கப்பட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு ஏற்ப உள்ளன. உதாரணமாக, தங்கள் சேவைகளுக்கான அதிகமான கமிஷன்களை புரோக்கர்கள் வசூலிக்க முடியாது.
18.
அரசு பத்திரங்களின் இயல்புகளை விரிவாக பின்வருமாறு பார்க்கலாம்.
1. முகமைகள்: (AGENCIES)
மத்திய அரசு. மாநில அரசுகள், அரசாங்க அமைப்புக்கு இணையான அமைப்புகள் போன்ற அதாவது உள்ளூர் அரசு அமைப்புகள் உதாரணமாக நகராட்சிகள், மாநகராட்சிகள், துறைமுகங்கள் போன்ற தன்னாட்சி அமைப்புகள், மற்றும் பிற அமைப்புகள் போன்ற முகவர்களின் மூலம் அரசு பத்திரங்கள் வெளியிடப்படுகின்றன.
2. இந்திய ரிசர்வ் வங்கியின் சிறப்பு பணி: (RBI SPECIAL ROLE)
இந்திய ரிசர்வ் வங்கி அரசு பத்திரங்கள் வாங்குதல் மற்றும் விற்பனை செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது. குறிப்பாக பண மேலாண்மையில் சிறப்பாக செயல்படுகிறது.
3. பத்திரங்களின் இயல்பு: (NATURE OF SECURITIES)
அரசு பத்திரங்கள் உத்தரவாதமாக வட்டி வழங்குவதால் அதிக முதலீடு செய்வது பாதுகாப்பானது மேலும் அரசே முதன்மை தொகையை திரும்ப செலுத்துவதால் முற்றிலும் பாதுகாப்பு தன்மை கொண்டதாகவும் இருக்கிறது.
4. பணப் புழக்க விபரம்: (LIQUIDITY PROFILE)
தங்க முனை பத்திரங்கள் பல வகை நீர்மை தன்மை கொண்டவை. அதன்படி மத்திய அரசால் வழங்கப்பட்ட பத்திரங்கள் அதிக நீர்மை தன்மை கொண்டதால் அதன் பணப்புழக்கமும் அதிகமாக இருக்கும்.
5. வரிவிலக்கு (TAX REBATE)
முதலீட்டாளர்களுக்கு பரந்த அளவில் வரிவிலக்கு அளிப்பது இந்த அரசு பத்திரங்களின் முக்கிய அம்சமாக விளங்குகின்றது. இந்த பத்திரங்கள் இந்த நன்மைக்காகவே மிகவும் பிரபலமானதாக உள்ளது.
(6) சந்தை (MARKET)
அரசு பத்திரங்களில் ஒவ்வொரு விற்பனை மற்றும் கொள்முதலுக்கு தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது, தங்க முனைபத்திரங்கள் ஒரு எதிரெதிர் அல்லது இணையான சந்தையாகும். இந்தியாவில் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சந்தை ஆகிய இரண்டு சந்தைகளிலும் அரசு பத்திரங்கள் சந்தைப்படுத்தப்படுகிறது.
(7) படிவங்கள் (FORMS)
பங்கு சான்றிதழ்கள், உறுதிமொழி சீட்டுகள் மற்றும் கொணர்பவர் பத்திரங்கள் போன்ற வடிவங்களில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் வழங்கும் பத்திரங்கள் இருக்கும்.
(8) பங்கேற்பாளர்கள் (PARTICIPANTS)
அரசு பத்திர சந்தையில் அரசுத்துறை வைத்துள்ள வளங்களைப் பரிமாற்றம் செய்வதில் ஒருங்கிணைந்த பங்கேற்பாளர்களாக மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் உள்ளன.
(9) வர்த்தகம் (TRADING)
அரசாங்க பத்திரங்களுக்கு இரண்டாம் நிலைசந்தை, குறுகிய, சிறிய மற்றும் குறைவான செயல்திறன் கொண்டது என்றாலும் பங்குச்சந்தைகளில் அரசாங்க பத்திரங்களை விற்பனை செய்வதிலும் வாங்குவதிலும் வங்கிகள். மற்றும் பெருநிறுவனங்கள் ஈடுபடுகின்றன.
(10) வெளியீட்டு இயந்திரம் (ISSUE MECHANISM)
இந்திய ரிசர்வ் வங்கியின் கீழுள்ள பொது கடன் அலுவலகம் (PUBLIC DEBT OFFICE) அரசு பத்திரங்களை வெளியிடுகிறது.
19.
20.
அ) பத்திரங்களின் சந்தை:
பங்குகள், கடனுறுதிப் பத்திரங்கள் போன்ற பத்திரங்கள் மூலதனச் சந்தையில் கையாளப்படுவதால் இது பத்திரங்களின் சந்தை என அழைக்கப்படுகிறது.
ஆ) விலை:
பத்திரங்களின் விலை மூலதனச் சந்தையில் பத்திரங்களின் தேவை மற்றும் அளிப்பை பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது.
இ) பங்கேற்பாளர்கள்:
மூலதனச் சந்தையின் ஈடுபடுபவர்கள் தனிநபர்கள், நிறுமங்கள், அரசு வங்கிகள், மற்றும் இதர நிதி நிறுவனங்கள் போன்றவர்கள் ஆவார்.
ஈ) இட அமைவு:
மூலதனச் சந்தைக்கான இடம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட்பட்டதில்லை, என்றாலும் பங்கு மாற்றகம் போன்ற நன்கு தெரிந்த இடமாக இருத்தல் வேண்டும்.
உ) நிதி சார்ந்த சொத்துக்களின் சந்தை:
மூலதனச் சந்தை நீண்ட கால நிதி சார்ந்த சொத்துக்களுக்கான ஒரு மேடையை வழங்குகிறது.
21.
| வ.எண் | ஒப்பீட்டு அடிப்படை (Basis for Comparison) |
புதிய வெளியீடுகள் சந்தை (New Issue Market) |
இரண்டாம் நிலை சந்தை (Secondary Market) |
|---|---|---|---|
| 1 | பொருள் | புதிய பங்குகளுக்கான சந்தை முதல் நிலை சந்தை எனப்படும். | முன்னர் வெளியிட்ட ஈடுகளை வணிகம் செய்யும் இடம் இரண்டாம் நிலை சந்தை எனப்படும். |
| 2 | கொள்முதலின் வகைகள் |
நேரடி | மறைமுகம் |
| 3 | நிதி | புதிய நிறுவனங்கள் மற்றும் இயங்கி கொண்டு இருக்கும் நிறுவனங்களின் விரிவாக்கம் மற்றும் பல்வகைபடுத்துதல் போன்றவற்றிற்கு நிதி வழங்குகிறது. | நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதில்லை. |
| 4 | ஒரு பத்திரம் எத்தனை முறை விற்க முடியும்? | ஒரே ஒருமுறை | பலமுறை |
| 5 | வாங்குதல் மற்றும் விற்றல் | நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இடையே | முதலீட்டாளர்களுக்கு இடையே |
| 6 | பங்குகளை விற்பதன் மீதான ஆதாயம் பெறும் நபர் | நிறுவனம் | முதலீட்டாளர்கள் |
| 7 | இடைநிலையர் | ஒப்புறுதியாளர்கள் | தரகர்கள் |
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards