12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test

1.
"பகராள்" சிறு குறிப்பு வரைக.
2.
தீர்மானம் என்றால் என்ன?
3.
செயலர் என்பவர் யார்?
4.
மேலாண்மை இயக்குநர் என்று யாரை அழைக்கிறோம்?
5.
இயக்குனர் என்பதை வரையறுக்க.
6.
கடன் பத்திரங்கள் என்றால் என்ன?
7.
பங்குச் சான்றிதழ் என்றால் என்ன?
8.
உரிமைப் பங்குகள் என்றால் என்ன?
9.
ஊக்கப் பங்குகள் என்றால் என்ன?
10.
பணியாளர் நலன் சாதாரணப் பங்குகள் (Sweat) என்றால் என்ன?
11.
முன்னுரிமைப் பங்குகள் பற்றி சிறுகுறிப்பு வரைக.
12.
பங்கு என்றால் என்ன?
13.
நிறுமம் உருவாக்கத்தில் உள்ள நான்கு நிலைகள் யாவை?
14.
15.
சட்டமுறைக் கூட்டம் என்றால் என்ன?
16.
சிறப்பு தீர்மானம் என்றால் என்ன?
17.
எப்பொழுது இயக்குனர் தனது அலுவலகத்திலிருந்து நீக்கப்படுகிறார்.
18.
முதல் இயக்குனர் என்றால் என்ன?
19.
பல்வேறு வகையான முன்னுரிமைப் பங்குகளை சுருக்கமாக கூறுக. (ஏதேனும் 3)
20.
பங்குகளை வட்டத்தில் வெளியிடுவது என்றால் என்ன? அப்படி வெளியிட நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகள் யாவை?
21.
பங்குகளை முனைமத்தில் வெளியிடல் என்பது குறித்து நீவிர் அறிவது யாது?
22.
தீர்மானத்தின் வகைகளை விளக்கி தேவைப்படும் செயல்பாடுகளை தருக.
23.
பலவகையான நிறும கூட்டங்களை விளக்குக.
24.
நிறுமச் செயலரின் பணிகளை விளக்கு?
25.
இயக்குனர்களின் குற்றவியல் சார்ந்த பொறுப்புகளைப் பற்றி எழுதுக.
26.
இயக்குனரின் அதிகாரங்களை கூறுக.
27.
இயக்குனர்களின் தகுதியின்மைகளை பட்டியலிடு.
28.
இயக்குனரின் தகுதிகள் பற்றி கூறுக.
29.
கடன் பத்திரங்களின் வகைகள் யாவை? (ஏதேனும் 5)
30.
பங்குகளுக்கும், கடனீட்டுப் பத்திரத்திற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை? (ஏதேனும் 5)
1.
கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்களிக்க முடியாத உறுப்பினர்கள் அவர்களுக்கு பதிலாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகராள்களை நியமிக்கலாம். பகராள் உறுப்பினராக இருக்க வேண்டிய அவசியமில்லை. பகராள் கூட்டம் தொடங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் நிறும பதிவு அலுவலகத்தில் தெரிவித்து பதியப்பட வேண்டும்.
2.
இயக்குநரவையால் எடுக்கப்பட்ட ஒரு முடிவை நடைமுறைப்படுத்த, சட்டப்படி குறைந்தளவு எண்ணிக்கை கொண்ட பங்குனர்களின் கூட்டத்தில், ஓட்டுப்பதிவு நடத்தியோ அல்லது வேறு முறையின் மூலமாக பங்குனர்களால் அளிக்கப்படும் ஒப்புதல் தீர்மானம் எனப்படும்.
3.
நிறுமக் கொள்கைகள் குறித்த ரகசியங்களை காத்தல், நிதிச் சார்ந்த முடிவுகள் எடுத்தல் மற்றும் பணியாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்தல் போன்ற முக்கிய பொறுப்புகள் நிறும செயலருக்கு உண்டு. நிறுமத்தின் ஒட்டுமொத்த நிறுமச் செயல்பாடுகளை இயக்கும் நபரே, நிறுமச் செயலர் என அழைக்கப்படுகிறார்.
4.
இயக்குனராக நிறுமத்தில் பணி புரியும் ஒருவர் அதிகபட்சமான அதிகாரங்களை கொண்டவருமாக, கம்பெனியின் நிர்வாகத்தில் அதிக ஆர்வம் அதிகபட்சமான சுதந்திரமும் உடையவர் கம்பெனியை வழிநடத்துவதற்கும் இயக்குநர்களை கட்டுப்படுத்தும் உரிமையும் இவருக்கு உண்டு.
5.
" ஒரு நிறுமத்தை நிர்வகிக்கும் குழுவிற்காக நியமிக்கப்பட்டவர் இயக்குனர் ஆவார்".
6.
நிறுமச்சட்டம் 2013, பிரிவு 2(30) ன்படி "கடன் பத்திரம்" என்பது நிறுமத்தின் சொத்துக்களின் மீது பற்றுப் பொறுப்பு ஏற்படுத்தியோ (அ) ஏற்படுத்தாமலோ நிறுமம் வெளியிடும் பிணையமாகும். கடன் பத்திரத் தொகுதி, பாண்டு முதலான பிணையங்களும் கடன் பத்திரம் என்பதில் அடங்கும்.
7.
(i) நிறுமத்தின் குறிப்பிட்ட பங்குகளுக்கு சொந்தக்காரர் என்று வழங்கப்படும் சான்றிதழ் பங்குச் சான்றிதழ் எனப்படும்.
(ii) இதில் நிறுமம் பொது இலட்சினை, இயக்குனர் மற்றும் செயலரின் கையொப்பம் இருக்கும்.
(iii) பங்கு சான்றிதழ் என்பது உரிமைக்கு சாட்சியமே தவிர உரிமை இல்லை.
8.
(i) நிறுமத்தின் பங்களிப்பு மற்றும் பங்கு முதலை உயர்த்தும் நோக்கில் வெளியிடப்படும் பங்குகள் உரிமைப் பங்குகள் எனப்படும்.
(ii) இந்த உரிமைப் பங்குகளின் வெளியீடு செயல்முறை விதிகளுக்கு உட்பட்டு இருக்கும்.
9.
செயல்முறை விதிகளின்படி ஒரு நிறுமமானது தனது முதலில் ஏற்பட்ட இலாபத்தை பெருக்கும் நோக்கில் முழுவதும் செலுத்தப்பட்ட பங்குகளை ஊக்கப்பங்காக வெளியிடுகிறது. இது நிறுமத்தின் பொதுவான இயல்புகளுக்காக வெளியிடப்படுகிறது. குறிப்பாக சொன்னால் நிறுமத்தின் உபரிகளையும் மற்றும் காப்புகளையும் முறையாக பயன்படுத்துதல் ஆகும்.
10.
பணியாளர்கள் அல்லது இயக்குநர்களுக்காக, ஒரு தள்ளுபடியில் அல்லது ரொக்கமற்ற மறுபயனுக்கு அவர்கள் அளித்த அறிவிப்பிற்கு அல்லது அறிவாற்றல் சார்ந்த சொத்துரிமைக்கு அல்லது அவர்கள் கூட்டிய மதிப்பிற்கு அளிக்கப்படுவது பணியாளர் நலன் சாதாரண பங்குகள் எனப்படும்.
11.
ஒரு நிறுமம் பங்காதாயம் வழங்கும் பொழுது அதை வாங்க முன்னுரிமை பெற்ற பங்குகள் முன்னுரிமை பங்குகள் எனப்படும்.
12.
நிறுமத்தின் பங்கு முதலின் சிறு (பகுதி) பங்கு எனப்படும்.
எ.கா : நிறுமத்தின் பங்கு முதல் = Rs.10,000
பங்கு முதலை திரட்ட பங்குகளை பிரிக்க வேண்டும்.
Rs.10 க்கு வெளியிட்டால் 1,0000 பங்குகள் எனவும்
Rs 100க்கு வெளியிட்டால் 100 பங்குகள் எனவும் வெளியிடலாம்.
13.
நிறுமத்தை உருவாக்குதல் என்பது நான்கு நிலைகளை கொண்டது.
i) நிர்வாகம் (Promotion)
ii) பதிவு செய்தல்
iii) முதல் போடுதல்
iv) வியாபாரத்தை தொடங்குதல்
14.
15.
சட்டமுறை கூட்டம் (Statutory Meeting)
நிறுமச் சட்டப்படி ஒவ்வொரு பொது நிறுமமும் தொழில் தொடங்கிய தேதியிலிருந்து ஒரு மாதத்திலிருந்து 6 மாதத்திற்குள் பங்குனர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் இதனை சட்டமுறை கூட்டம் என அழைக்கப்படுகிறது. ஒரு பொது நிறுமத்தின் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கூட்டப்படும் கூட்டம் சட்டமுறை கூட்டம் ஆகும். பங்கு முதல் இல்லாத பொது மற்றும் தனி நிறுமங்கள் இத்தகைய கூட்டத்தை கூட்ட தேவையில்லை.
16.
ஒரு முடிவை நிறைவேற்ற கூட்டத்திற்கு வருகை புரிந்துள்ள பங்குனர்களின் எண்ணிக்கையில் 75 சதவீதம் நபர்கள் முடிவிற்கு சாதகமாக வாக்களித்தால் அது சிறப்பு தீர்மானம் ஆகும். அதாவது முடிவிற்கு எதிராக வாக்களித்தவர்களின் எண்ணிக்கையை போல மூன்று மடங்கு அதிகமான எண்ணிக்கையில் முடிவு சாதகமாக வாக்களித்து முடிவை நிறைவேற்றினால் அது சிறப்பு தீர்மானம் ஆகும்.
(i) சிறப்பு தீர்மானம் தேவைப்படும் நடவடிக்கைகள்
(ii) நிறுமத்தின் பதிவு அலுவலகத்தை ஒரு மாநிலத்திலிருந்து பிற மாநிலத்திற்கு மாற்றம் செய்ய.
(iii) நிறுமத்தின் நோக்கத்தை மாற்ற
(iv) நிறுமத்தின் பெயரை மாற்ற
(v) சட்ட நடைமுறை விதிகளை திருத்தம் செய்ய
(vi) நீதிமன்ற உத்தரவுக்கு இணங்கி நிறும பங்கு முதல் தொகையை குறைக்க.
(vii) புதிய தொழிலைத் தொடங்க
(viii) தணிக்கையாளரை பணியமர்த்த.
(ix) மொத்த விற்பனை முகவர்களை பணியமர்த்த
(x) இயக்குநர்கள் மற்றும் மேலாண்மை இயக்குநர்களின் ஊதியத்தை தீர்மானிக்க.
17.
(i) பங்குதாரர்களால் நீக்கம் - பிரிவு(169)
1. இயக்குனர்கள் பின்பற்றிய கொள்கைகள் பொருத்தமானதல்ல என பங்குதாரர்கள் கருதினால்,
2. சிறப்பு அறிவிப்பை வழங்குவதன் மூலமும், சாதாரண தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலமும் இயக்குனரின் பதவிக்காலம் முடியும் முன் இயக்குனரை பதவியிலிருந்து நீக்கலாம்.
(ii) மத்திய அரசால் நீக்கப்படுதல் :
1. பொறுப்புகளை நிறைவேற்றுவதில் மோசடி.
2. விவேகமான வர்த்தக நடைமுறையின்மை.
3. கடுமையான வியாபார பாதிப்பு.
4. பொது நலனுக்கு சேதமளிக்கும் வகையில் நிர்வாகம் நடத்தப்படுவது.
போன்ற காரணங்களால் மத்திய அரசு இயக்குனரை நீக்கலாம்.
(iii) நிறும /கம்பெனி சட்ட வாரியத்தால் நீக்கப்படுதல் :
ஒரு இயக்குனர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார் என்று கம்பெனி சட்டவாரியத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டால் கம்பெனி சட்ட வாரியத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டால் கம்பெனி சட்ட வாரியத்தால் இயக்குனர் நீக்கப்படலாம்.
18.
(i) நிறுவனம் கூட்டுருவாக்கம் செய்யப்பட்ட தேதி முதல் அலுவலகத்தை இயக்குபவர் முதல் இயக்குனர் ஆவார்.
(ii) முதல் இயக்குனரின் பெயர் வழக்கமாக நிறுமச் செயல்முறை ஏட்டில் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும்.
(iii) பிரிவு 152 ன் படி இயக்குனர்கள் புதிதாக நியமிக்கப்படும் வரை இவர் முதல் இயக்குனராக கருதப்படுவோர்.
19.
(i) குவிவு முன்னுரிமைப் பங்குகள்: அனைத்து பங்காதாய நடவடிக்கைகள் ஒரு சிறப்பான முறையில் செலுத்தி இறுதி வரையிலும் குறிப்பிட்ட காலம் முடியும் வரை பயன்படுத்தப்படும்.
(ii) குவியா முன்னுரிமைப் பங்குகள்: ஒருங்கிணைக்கப்பட்ட முன்னுரிமைப் பங்குகளுக்கு எதிராக இருப்பது ஒருங்கிணைக்கப்படாத முன்னுரிமைப் பங்குகள் ஆகும்.
(iii) மீள்தகு முன்னுரிமைப் பங்குகள் : ஒரு நிலையான காலம் (அ) தவணை நாள் முடிந்து பெறக் கூடிய பங்குகள் ஆகும்.
(iv) மீள்தகா முன்னுரிமைப் பங்குகள்: நிறுமத்தை கலைக்கும் போது (அ) சொத்துக்களை விற்று நீர்மைத் தன்மை ஆக்கும் போது பெறக் கூடிய பங்குகள் ஆகும்.
(v) மாற்றக் கூடிய முன்னுரிமைப் பங்குகள்: ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் சாதாரண பங்குகளை மாற்றக் கூடிய தன்மை கொண்ட பங்குகள் ஆகும்.
(vi) மாற்ற முடியாத முன்னுரிமைப் பங்குகள்: எந்த சூழ்நிலையிலும் சாதாரண பங்குகளாக மாற்ற இயலாத தன்மை கொண்ட பங்குகள் ஆகும்.
20.
1. பங்குகளின் வெளியீட்டு விலை முகமதிப்பை விட குறைவாக இருந்தால் அது வட்டத்தில் (தள்ளுபடியில் வெளியிடுதல் என அழைக்கப்படுகிறது.
(எ.கா) Rs.10 முகமதிப்புடைய பங்குகளை Rs.8க்கு வெளியிட்டால் தள்ளுபடி Rs.2.
2. நிறுமச் சட்டம் 2013 பிரிவு (53)ன் படி தள்ளுபடி பங்குகளை வெளியிடுதல்.
21.
நிறுமம் ஒன்று அதன் பெயரளவு மதிப்பிற்கு கூடுதலான ஒரு விலைக்கு அதன் பங்குகளை விற்க இயலும் - நிலையில் முனைமத்தில் பங்குகளை வெளியிடலாம். பங்குகள் மீது பெறப்படும் முனைமத்தொகை ஆனது "ஈடுகள் முனைமக் கணக்கு" என்ற ஒரு கணக்கிற்கு அனுப்பப்படும் பிரிவு (78).
எடுத்துக்காட்டாக ஒரு நிறுமம் ₹10/- முக மதிப்பிலான பங்கினை ₹12/- என வெளியீட்டு பெறப்படும் முனைமத் தொகை ₹2/- ஈடுகள் முனைமக் கணக்கிற்கு கொண்டு செல்லப்படும்.
(i) முதன்மை செலவுகளை போக்கெழுதியது
(ii) செலவுகளை போக்கெழுதியது (அ) தரகு செலுத்தியது (அ) தள்ளுபடி அனுமதித்தது. பங்குகளின் வெளியீடு (அ) கடன் பத்திரங்களின் வெளியீடு
(iii) மீள்தரு முன்னுரிமை பங்கிற்காக செய்த ஏதேனும் முனைம ஒதுக்கீடு தொகை.
இப்படி செய்த வருமான நிதிகளை ஒதுக்கீடு செய்து ஈடுகள் முனைம கணக்கிற்கு கொண்டு சென்று பங்காதாயமாக வழங்கப்படும். இது பொதுவாக வாங்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் பிரிவு (77A) இந்த முனைமம் எல்லா நேரங்களிலும் பங்காதாயமாக வழங்கப்பட மாட்டாது.
22.
தீர்மானத்தினை மூன்று வகைகளாக பிரிக்கலாம் அவை :
1. சாதாரண தீர்மானம் :
ஒரு முடிவுக்கு எதிராக இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட ஆதரவாக இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் அது சாதாரண தீர்மானமாகும்.
சாதாரண தீர்மானம் மூலம் நடைமுறைப்படுத்தும் முடிவுகள்:
(i) நிறுமம் பெயரை திருத்துதல்
(ii) நிறும பங்கு முதலை மாற்றியமைக்க
(iii) கடனீட்டு பத்திரத்தை மீட்க
(iv) பங்காதாயம் அறிவிக்க
(v) இயக்குநர்களை பணியமர்த்த
2. சிறப்பு தீர்மானம் :
1. சிறப்பு பொருள் குறித்து நிறைவேற்றப்படும் தீர்மானம்.
2. வருகைபுரிந்துள்ள உறுப்பினர்களில் 4 இல் 3 பங்கு முடிவிற்கு சாதகமாக வாக்களிப்பது சிறப்பு தீர்மானம்.
சிறப்பு தீர்மானம் தேவைப்படும் நடவடிக்கைகள் :
(i) நிறும பதிவு அலுவலகத்தை ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாற்றுவதற்கு.
(ii) நிறும நோக்கத்தை மாற்ற
(iii) நிறும பெயரை மாற்ற
(iv) சட்ட நடைமுறை விதிகளை திருத்தம் செய்ய
(v) புதிய தொழிலை தொடங்க
3. சிறப்பு அறிவிப்பு தேவைப்படும் தீர்மானம்
(i) நிறும சட்டம் 2013 குறிப்பிட்டுள்ள சில நடவடிக்கைகள் குறித்து முடிவுகளை எடுக்க சிறப்பு கூட்டம் கூட்ட வேண்டியுள்ளது.
(ii) இக்கூட்டம் கூட்டும் 14 நாட்களுக்கு முன் எக்காரணத்திற்காக கூட்டப்படுகிறது என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும்.
இக்கூட்டம் கூட்ட வேண்டியதன் அவசியம் :
(i) பணி ஓய்வு பெரும் தணிக்கையரை தவிர மீண்டும் பணியில் அமர்த்தவில்லை என்பதை உறுதி செய்ய.
(ii) பணி ஓய்வு பெற்ற தணிக்கையரை மீண்டும் பணியில் அமர்த்தவில்லை என்பதை உறுதி செய்ய.
(iii) ஒரு இயக்குநரை பணிக்காலம் முடியும் முன்பே பணி நீக்கம் செய்ய
(iv) பணி நீக்கம் செய்யப்பட்ட இயக்குநர்களின் காலி இடத்தில வேறு இயக்குநர்களை பணியமர்த்த
(v) புதிய தொழிலை தொடங்க
23.
பங்குநர்கள் கூட்டங்கள்: நிறும பங்குநர்களால் நடத்தப்படும் கூட்டங்கள் பங்குனர்கள் கூட்டம் என அழைக்கப்படுகிறது. நிறும பங்குநர் கூட்டங்களை மூன்று வகையாக பிரிக்கலாம்.
(i) சட்டமுறை கூட்டம்: நிறுமச் சட்டப்படி ஒவ்வொரு பொது நிறுமமும் தொழில் தொடங்கிய தேதியிலிருந்து ஒரு மாதத்திலிருந்து 6 மாதத்திற்குள் பங்குனர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் இதனை சட்டமுறை கூட்டம் என அழைக்கப்படுகிறது.
(ii) ஆண்டுப் பொதுக்கூட்டம் : ஒவ்வொரு ஆண்டும் நிறுமத்தில் இயல்பான நடவடிக்கை குறித்து ஆலோசிக்க கூட்டப்படும் கூட்டம் ஆண்டு பொதுக்கூட்டம் ஆகும்.
(iii) சிறப்புக் கூட்டம்: சட்டமுறைக் கூட்டம் மற்றும் ஆண்டு பொதுக் கூட்டம் ஆகியவை நிறுமத்தின் இயல்பான சாதாரண கூட்டங்கள் ஆகும்.
(iv) இயக்குநர் அவைக் கூட்டம் : நிறுமத்தை நிர்வகிக்கும் பொறுப்பு இயக்குநரவையிடம் உள்ளதால் இயக்குநர்கள் அடிக்கடி கூடி பல வியாபார நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க வேண்டும். இதற்காக இயக்குநரவையால் கூட்டப்படும் கூட்டங்கள் இயக்குநரவை கூட்டங்கள் ஆகும்.
(v) வாரியக் குழுக் கூட்டம்: பட்டியலிடப்பட்ட நிறுமமும், ₹10 கோடி அல்லது அதற்கு மேல் பங்கு முதலுடைய ஒவ்வொரு பொது நிறுமம் தணிக்கை குழு கூட்டத்தை கூட்ட வேண்டும். இக்கூட்டம் ஆண்டுக்கு குறைந்தது நான்கு முறை கூட்ட வேண்டும்.
சிறப்புக் கூட்டங்கள்:
(i) வகுப்பு கூட்டம்(Class Meeting) Meetings of Particular Share or Debenture Holders
ஒரு குறிப்பிட்ட வகையான பங்குகள் அல்லது கூட்டங்கள் குறிப்பிட்ட வகையான கடனீட்டுப்பத்திரங்களும், கூட்டப்படும் கூட்டம் வகுப்பு கூட்டம் ஆகும். சாதாரண பங்குகள் (எ) முன்னுரிமை பங்குகள் கூட்டப்படும் கூட்டத்தை கூறலாம்.
(ii) கடனீந்தோர் கூட்டம் : நிறுமக் கூட்டங்களை போல இது ஒரு நிறும கூட்டம் அல்ல இருப்பினும், இது ஒரு புதிய கடன் கொள்கையை அறிமுகம் செய்யும் போது அல்லது கடனீந்தோர்கள் தொடர்பான சில வழக்குகளை பேசி முடிவு எடுக்கவும், கடனீந்தோர்களுடன் சில ஒப்பந்தங்கள் மேற்கொள்ளவும் இவ்வகை கூட்டங்கள் கூட்டப்படுகிறது.
24.
I. சட்டப்பூர்வமான பணிகள் :
நிறுமச்சட்டம் 2013ன் படி கீழ்க்கண்டவை நிறுமச் செயலரின் சட்டப்பூர்வமான பணிகள் ஆகும். அவை
(i) நிறுமத்தின் அங்கீகாரம் தேவைப்படும் அனைத்து இடங்களிலும் நிறுமத்தின் சார்பாக கையொப்பம் இடுவது.
(ii) பங்குகள், இயக்குநர்கள் மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்பான ஆவணங்களை பராமரித்தல்.
(iii) பங்கு முதல் தொகையை அதிகரிப்பது குறித்த அறிவிப்பை நிறும பதிவாளரிடம் கொடுத்தல்.
(iv) பங்கு ஒதுக்கீடு செய்த இரண்டு மாதத்திற்குள் பங்கு ஒதுக்கீடு சான்றிதழை அளித்தல்.
(v) ஆண்டு அறிக்கையில் கையொப்பமிடுதல்.
(vi) தொழில் தொடங்க சான்றிதழை பெற தேவையான உறுதிமொழிகளை அளித்தல்.
(vii) ஒவ்வொரு பங்குனர்களுக்கும் ஆண்டு பொதுக்கூட்டம் குறித்த அறிவிப்பை அனுப்புதல்.
(viii) சட்டமுறை ஏடுகளை தயாரித்தல்.
(ix) ஆண்டு பொதுக்கூட்டம் மற்றும் இயக்குநரவை கூட்டங்களுக்கான கூட்ட நிகழ்ச்சிக் குறிப்பை 30 நாட்களுக்குள் தயாரித்தல்.
(x) கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கோப்பிலிட்டு நிறும பதிவாளருக்கு அனுப்புதல்.
(xi) நிறும கலைப்பின் போது நிதிநிலை அறிக்கைகளை தயாரிக்க உதவி செய்தல்.
II. சட்டப்பூர்வமற்ற பிற பணிகள் :
(i) இயக்குநருக்கு ஆற்ற வேண்டிய முகமைப் பணிகள் :
a) நிறுமத்திற்கு தேவையான கொள்கைகளை வகுத்து, பல முடிவுகளை எடுப்பதற்கு தேவையான தகவல்களையும் அறிவுரைகளையும் வழங்குதல்.
b) இயக்குநர்களின் வருகை பதிவேட்டை பராமரிப்பது, கூட்டங்கள் கூட்டுவது.
c ) கூட்ட நிகழ்ச்சி நிரல் மற்றும் கூட்ட குறிப்பு தயாரிப்பது தொடர்பாக கூட்டத் தலைவருடன் கலந்தாலோசித்து பல தீர்மானங்களை தயாரித்தல்.
d ) இயக்குநரவை அலுவலர்களுடன் தகவல் தொடர்பை ஏற்படுத்தி ஆவணங்களை கோப்பிடல் மற்றும் பதிவேடுகளை தயாரித்து அளிப்பது.
ii) பங்குனர்களுக்கு ஆற்ற வேண்டிய முகமைப் பணிகள் :
a) நிறும பங்குனர்களின் உரிமை மீறப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டியது.
b) பங்கு ஒதுக்கீட்டு கடிதம், கூட்ட அழைப்பு கடிதம், வருத்த கடிதம், பங்கு சான்றிதழ் பங்கானைகளை அனுப்புவது மற்றும் கடனீட்டுப்பத்திரத்தை அளிப்பது.
c )பங்குனர்களின் கூட்ட நாள், இடம் மற்றும் நிகழ்ச்சி நிரல் போன்ற விவரங்கள் தாங்கிய அறிக்கையை பங்குனர்களுக்கு அனுப்புதல்.
d) இயக்குநர்களின் சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்கு இயக்குநரவை சார்பாக கலந்தோசித்து விசாரித்து உரிய பதிலை அளிப்பது.
(iii) அலுவலக ஊழியர்கள் மற்றும் பணியாட்களுக்கு ஆற்றும் சேவைகள் :
a) நிறும அலுவலக ஊழியர்களில் தலை சிறந்த மூத்த ஊழியர் செயலர்.
b) அலுவலக செயல்பாடுகளை இயல்பாக செயல்பட செய்வது.
c) அலுவலக செயல்பாடு சார்ந்த அனைத்தையும் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படுத்த வேண்டியது.செயலரின் கடமை.
25.
சட்டப்படி செய்ய வேண்டிய செயல்களைச் செய்யாத போதும் கீழ்க்காணும் மோசடிக்கு உடந்தையாக இருந்திருந்தால் இயக்குனர்களுக்கு அபராதம் மற்றும் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
i) தகவலறிக்கையில் தவறான தகவல்களை அளித்தல்.
ii) பங்கு ஒதுக்கீட்டிற்கான தகவல்களை உரிய படிவத்தில் கம்பெனி பதிவாளருக்கு சமர்ப்பிக்க தவறுதல்.
iii) பங்குகளை ஒருங்கிணைந்த பங்குகளாக மாற்றியதற்கான அறிவிப்பை சமர்ப்பிக்க தவறுதல்.
iv) பங்கு சான்றிதழ் மற்றும் கடன் பத்திர சான்றிதழ் வழங்க தவறுதல்.
v) உறுப்பினர்களுக்கான பதிவேடு மற்றும் கடன் பத்திரதாரர்களுக்கான பதிவேடுகளை பராமரிக்க தவறுதல்.
vi ) ஆண்டு நிறும பொதுக் கூட்டத்தை கூட்ட தவறுதல்.
vii) நிதிநிலை அறிக்கை வெளியிட அல்லது வழங்கிட தவறுதல்.
viii) 15க்கும் மேற்பட்ட கம்பெனிகளில் இயக்குனராக பணியாற்றியவர்களை வைத்திருத்தல்.
26.
I. சட்டப்பூர்வமான அதிகாரங்கள் :
(i) பங்குதாரர்களிடமிருந்து வர வேண்டிய பங்குகள் மீதான செலுத்தப்படாத அழைப்புகளை பெறுவதற்கான அதிகாரம்.
(ii) கடனீட்டுப் பத்திரங்கள் வெளியிடுவதற்கான அதிகாரம்.
(iii) கடனீட்டுப் பத்திரம் தவிர இதர வழிகளில் கடன் வாங்குவதற்கான அதிகாரம்.
(iv) நிறுமத்தின் நிதியை முதலீடு செய்யும் அதிகாரம்.
(v) புதிய கடன்களை உருவாக்கும் அதிகாரம்.
(vi) நிறுமத்தின் வியாபாரத்தை பல்வகைப்படுத்தும் அதிகாரம்.
(vii) ஒருங்கிணைத்தல், ஒன்று சேர்த்தல் மற்றும் மறு சீரமைப்பு செய்தல் போன்றவற்றை அங்கீகரிப்பதற்கான அதிகாரம்.
(viii) நிதிநிலை அறிக்கை மற்றும் இயக்குனர் குழுவின் அறிக்கைகளை அங்கீகரிப்பதற்கான அதிகாரம்.
II . மேலாண்மை அல்லது நிர்வாக ரீதியான அதிகாரங்கள்:
i) மூன்றாம் நபருடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் அதிகாரம்.
ii) பங்குகளை ஒதுக்கீடு செய்தல், திரும்பப் பெறுதல் மற்றும் பங்குகளை மாற்றுவதற்கான அதிகாரம்.
iii) கடன் பத்திரங்களை வெளியிட வேண்டிய விதிமுறை களையும் நிபந்தனைகளையும் முடிவு செய்யும் அதிகாரம்.
iv) புதிய கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கும்,வணிகத்தை செயல்படுத்துவதற்கும் வழிமுறைகளை உருவாக்க அதிகாரம்.
v) நிர்வாக இயக்குனர், மேலாளர் மற்றும் கம்பெனி செயலரை நியமனம் செய்யும் அதிகாரம்.
vi) தன் கீழ் பணியாற்றும் ஊழியர்களை மேற்பார்வை செய்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்.
III. தீர்மானத்தின் மீது இயக்குனர் அதிகாரங்கள் :
i) நிறுமனத்தின் சொத்தை விற்க அல்லது குத்தகைக்கு விடும் உரிமை
ii) கடனை திரும்ப செலுத்த இயக்குனருக்கு தேவையான காலத்தை அனுமதிப்பது.
iii) செலுத்தப்பட்ட மூலதனம் மற்றும் காப்புகள் ஆகியவற்றின் கூட்டு தொகைக்கு மேல் கடன் வாங்கும் அதிகாரம்,
iv) ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஒரு நபரை முகவராக நியமனம் செய்தல்.
v) மிகை ஊதிய பங்குகளை வெளியிடுதல் மற்றும் மறுசீரமைப்பு செய்தல்.
vi) மூன்று ஆண்டுகளின் சராசரி இலாபத்தில் 5% அல்லது ரூ.50,000 இதில் எது அதிகமோ அத்தொகையை தொண்டு நோக்கங்களுக்காக பங்களிப்பு செய்வதற்கான அதிகாரம்.
IV. இதர அதிகாரங்கள் :
i) சாதாரண காலிப் பணியிடங்களை நிரப்பும் அதிகாரம்.
ii) நிறும முதல் தணிக்கையாளரை நியமிக்கும் அதிகாரம்.
iii) மாற்று இயக்குனர், கூடுதல் இயக்குனர் மற்றும் நிர்வாக இயக்குனர்களை நியமிக்கும் அதிகாரம்.
iv) முக்கிய நிர்வாக அல்லது மேலாண்மை அதிகாரிகளை நீக்கும் அதிகாரம்.
v) பங்குகளுக்கான இடைக்கால மற்றும் இறுதி பங்காதாயத்தை பரிந்துரை செய்யும் அதிகாரம்.
vi) நிறும கடன் தீர்க்கும் நிலைமையை அறிவிக்கும் அதிகாரம்.
vii) அரசியல் அமைப்பிற்கு பங்களிப்பு செய்யும் அதிகாரம்.
27.
நிறுமச் சட்டம் 164 ஆம் பிரிவின்படி இயக்குனராக தகுதியற்றவர்கள் :
(i) நீதிமன்றத்தால் பித்த மனநிலை பிடித்தவர் என அறிவித்த நபர்.
(ii) நீதிமன்றத்தால் திவாலானவர் என அறிவித்த நபர்.
(iii) திவாலானவர் என அறிவிக்கக் கோரி விண்ணப்பம் செய்துள்ள நபர்.
(iv) குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குக் குறையாமல் சிறை தண்டனை பெற்றவர்.
(v) அழைப்பு பணம் செலுத்தாத நபர்.
(vi) நீதிமன்றத்தால் தகுதியற்றவர் என தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டவர்.
(vii) பிரிவு 188 ன் கீழ் குற்றம் புரிந்தவர்களுடன் நடவடிக்கையில் ஈடுபடும் போது.
(viii) இயக்குனர் அடையாள எண்ணைப் பெறாதவர்.
28.
இயக்குநர் தகுதிகள் : நிறுமம் கம்பெனி செயல்முறை விதிகளுக்கு வெளிகளில் கூடிய உள்ளவாறு தேவையான தகுதிகளை பெற்றிருத்தல் வேண்டும்.
பொதுவாக ஒரு இயக்குநர், நிதி, சட்டம், மேலாண்மை, விற்பனை, சந்தைப்படுத்தல், நிர்வாகம், ஆராய்ச்சி, பெருநிறும ஆளுமை, தொழில்நுட்ப செயல்பாடுகள் அல்லது நிறுமத்தின் வணிக தொடர்பான பிற துறைகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துறைகளில் பொருத்தமான திறன்கள், அனுபவம் மற்றும் அறிவைக் கொண்டிருக்க வேண்டும்.
(i) ஒரு இயக்குநர் சரியான மனநிலை உடைய நபராக இருக்க வேண்டும்.
(ii) ஒரு இயக்குநர் கம்பெனி செயல் முறை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள தகுதி பங்குகள் வைத்திருக்க வேண்டும்.
(iii) ஒரு இயக்குநர் தனிநபராக இருத்தல் வேண்டும்.
(iv) நல்ல நிதிநிலை உடையவராக இருத்தல் வேண்டும்.
(v) நீதிமன்றத்தால் எந்தவிதமான குற்றத்திற்காகவும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டாமல்/ தண்டிக்கப்படாமல் இருத்தல் வேண்டும்.
29.
கடன் பத்திரங்கள் வெளியிடும் முறை மற்றும் நிபந்தனைகள் அடிப்படையில் பல விதங்களாக பிரிக்கலாம். அவை,
1. மாற்று அடிப்படை:
அ) மாற்ற இயலா கடன் பத்திரங்கள் :
இதை கடனீட்டு பத்திரமாக மட்டுமே வைத்திருக்க முடியும், சாதாரண பங்குகளாக மாற்ற இயலாது.
ஆ) பகுதி மாற்றத்தக்க கடன் பத்திரங்கள்:
கடனீட்டு பத்திரத்தை வெளியிடுபவர் அறிவிக்கும் சமயம், கடனீட்டு பத்திரத்தின் ஒரு பகுதியை மட்டும் சாதாரண பங்குகளாக மாற்ற இயலும்.
இ) முற்றிலும் மாற்றத்தக்க கடன் பத்திரங்கள் :
கடனீட்டு பத்திரத்தை வெளியிடுபவர் அறிவிக்கும் சமயம், கடனீட்டு பத்திரம் முழுமையாக சாதாரண பங்குகளாக மாற்ற இயலும்.
ஈ) தேர்வின்படி மாற்றத்தக்க கடன் பத்திரங்கள் :
வெளியீட்டாளர் முடிவு செய்யும் விலையிலோ / சமயத்திலோ கடனீட்டு பத்திரம் பங்குகளாக மாற்ற முடியும்.
2. பிணையங்கள் (அ) ஈட்டின் அடிப்படை:
அ) பிணையம் தரப்பட்ட கடன் பத்திரம்:
நிறுமத்தின் சொத்துக்கள் மீது பற்றுப் பொறுப்பு ஏற்படுத்தி வெளியிடப்படுவது.
இந்திய நிறுமச்சட்டம் 2013 பிரிவு 71 (3)ன்படி மத்திய அரசு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும்.
ஆ) பிணையம் தரப்படாத கடன் பத்திரம்:
நிறுமத்தின் சொத்துக்கள் மீது எவ்வித பற்றுப் பொறுப்பும் ஏற்படுத்தப்படாமல் வெளியிடப்படுவது.
3. மீட்பு அடிப்படை :
அ) மீட்கக்கூடிய கடன் பத்திரம் :
குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு பிறகு இவ்வகை கடன் பத்திரங்களை திரும்ப மீட்டுக் கொள்ளலாம்.
ஆ) மீட்க இயலா கடன் பத்திரம் :
நிறும வாழ்நாளில் இவ்வகையான கடனீட்டு பத்திரங்களை மீட்க இயலாது.
4. பதிவு செய்தல் அடிப்படை :
அ) பதிவு செய்யப்பட்ட கடனீட்டு பத்திரங்கள் :
குறிப்பிட்ட நபர்களின் பெயர்களை நிறும ஏட்டில் பதிவு செய்து நிறுமம் கடனீட்டு பத்திரங்களை வெளியிடுவது.
ஆ) கொணர்பவர் / பதிவு செய்யப்படாத பத்திரங்கள் :
கடனீட்டு பத்திரங்களை வைத்திருப்பவருக்கு அதன் மீதான உரிமை உண்டு.
30.
| வ.எண் | பங்குகள் | கடன் பத்திரம் |
| 1. | இது நிறுமத்தின் முதலில் ஒரு பங்கு ஆகும். | இது சட்டப்படி ஒரு கடன் ஆகும். |
| 2. | பங்குதாரர்கள் நிறுமத்தின் உறுப்பினர்கள்/ உரிமையாளர்கள் ஆவர். | கடன் பத்திரதாரர்கள் நிறுமத்தின் கடனீந்தோர்கள் ஆவர். |
| 3. | பங்குதாரர்கள் மாறுபடும் விலையில் பங்காதாயம் பெறுவர். | கடன் பத்திரதாரர்கள் நிலையான விதத்தில் வட்டி செலுத்தி அதற்கான பங்காதாயம் பெறுவர். |
| 4. | பங்குகளில் எந்தவிதமான விதிப்பும் கிடையாது. | நிறுமத்தின் சொத்துக்களின் மீது கடன் பத்திரங்கள் விதிக்கப்படும். |
| 5. | பங்குகள் தள்ளுபடியில் ஒரு குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு மட்டுமே வெளியிட முடியும். | சாதாரண பத்திரங்களை தள்ளுபடியில் வெளியிட எந்த நெறிமுறைகளும், தடைகளும் இல்லை. |
| 6. | இயக்குநர் அவையின் முடிவின் அடிப்படையிலும், இலாபத்தின் அடிப்படையிலும் பங்காதாய வீதம் மாறும். | கடன் பத்திரங்களின் வட்டி வீதம் நிலையானது |
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards