12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test

1.
2.
சட்டமுறைக் கூட்டம் என்றால் என்ன?
3.
எப்பொழுது இயக்குனர் தனது அலுவலகத்திலிருந்து நீக்கப்படுகிறார்.
4.
எப்பொழுது மாற்று இயக்குநர்களை நியமிக்கலாம்?
5.
பங்குகளை வட்டத்தில் வெளியிடுவது என்றால் என்ன? அப்படி வெளியிட நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகள் யாவை?
6.
வேளாண் தொழில் முனைவோரைப் பற்றி சுருக்கமாக எழுதுக.
7.
தொழில் முனைவோர் மற்றும் அகத்தொழில் முனைவோர் இவர்களை வேறுபடுத்துக.
8.
இரண்டு வகை கீறல்களின் வரைபடத்தை வரைக.
9.
மாற்றுச் சீட்டு மற்றும் கடனுறுதிச்சீட்டினை வேறுபடுத்துக.
10.
உலகமயமாக்கலின் ஏதேனும் மூன்று தாக்கங்களை எழுதுக.
11.
12.
தனியிடச்சந்தை பற்றி விளக்குக.
13.
மின் வணிகத்தில் B2B மற்றும் B2C என்றால் என்ன?
14.
வியாபாரத்தின் மூன்று சுற்றுச்சூழல் காரணிகளை விளக்கு
15.
மாநில ஆணையத்தின் உச்சநீதி அதிகார வரம்பு என்ன?
16.
ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பாதுகாப்பு உரிமைகள் பற்றி நீவீர் அறிவது என்ன?
17.
செயற்கைப் பற்றாக்குறை என்றால் என்ன?
18.
சந்தையிடுகை கலவை என்பது பற்றி நீவீர் அறிவது யாது? ஏதேனும் இரண்டு கூறுக.
19.
பொருளின் விலையை பாதிக்கும் காரணிகள் யாவை?
20.
காலத்தின் அடிப்படையில் சந்தையினை எப்படி வகைப்படுத்துவாய்?
21.
சந்தையில் என்னென்ன பொருட்களை சந்தையிட முடியும் என்பதை தெரிவிக்கவும்.(ஏதேனும் 3)
22.
தொழிற்சாலைக்குள் பயிற்சி என்றால் என்ன?
23.
மனோபாவச் சோதனை என்றால் என்ன?
24.
மன அழுத்த நேர்காணல் என்றால் என்ன?
25.
விளம்பரத்திற்கும் கோரப்படாத விண்ணப்பங்களுக்கும் இடையே உள்ள இரண்டு வேறுபாடுகள் தருக.
26.
மனித வள மேலாண்மையின் பணிகளை கூறுக.
27.
தேசிய பங்குச் சந்தை விளக்குக.
28.
காளை மற்றும் கரடி - விளக்குக.
29.
30.
கருவூல இரசீதின் பொது இயல்புகள் யாவை? (ஏதேனும் 3)
31.
மேலாண்மையை நிர்வாகத்திலிருந்து வேறுபடுத்துக. (ஏதேனும் 3)
32.
மேலாண்மை கலையா? அறிவியலா?
33.
"பகராள்" சிறு குறிப்பு வரைக.
34.
தீர்மானம் என்றால் என்ன?
35.
மேலாண்மை இயக்குநர் என்று யாரை அழைக்கிறோம்?
36.
கடன் பத்திரங்கள் என்றால் என்ன?
37.
பங்குச் சான்றிதழ் என்றால் என்ன?
38.
உரிமைப் பங்குகள் என்றால் என்ன?
39.
முன்னுரிமைப் பங்குகள் பற்றி சிறுகுறிப்பு வரைக.
40.
பங்கு என்றால் என்ன?
41.
வேளாண் தொழில் முனைவோர் என்பவர் யார்?
42.
அகத்தொழில் முனைவோர் இலக்கணம் தருக.
43.
காசோலை என்றால் என்ன?
44.
45.
உலகமயமாக்கலின் ஏதேனும் இரண்டு நன்மையை எழுதுக.
46.
தனியார்மயமாக்கல் என்றால் என்ன?
47.
புதிய பொருளாதாரக் கொள்கைகளின் கிளைகள் எழுதுக.
48.
மின்னணு சில்லறை வியாபாரிகள் என்பவர்கள் யார்?
49.
சேவை சந்தையிடுதல் என்றால் என்ன?
50.
பசுமை சந்தையிடுதல் என்றால் என்ன?
51.
VUCA -ஐ விரிவாக்கம் தருக.
52.
உட்புறச் சூழல் என்றால் என்ன?
53.
புகார்களை எவ்வாறு பதிவு செய்வது?
54.
மாநில ஆணையம் என்ற பதத்தை விவரிக்கவும்.
55.
ஜான் F கென்னடி கூறிய நுகர்வோர் உரிமைகள் யாவை?
56.
"விற்பனையாளர் ஜாக்கிரதை" என்றால் என்ன?
57.
"வாங்குவோர் ஜாக்கிரதை" என்றால் என்ன?
58.
நுகர்வோர் என்பவர் யார்?
59.
சந்தையிடுகை கலவையின் வரைவிலக்கணம் தருக.
60.
ஒழுங்குமுறை சந்தை என்றால் என்ன?
61.
பொருட்கள் சந்தை என்பதன் பொருள் யாது?
62.
மின்னணு கற்றல் முறை பற்றி கூறுக.
63.
பயிற்சி முறை என்றால் என்ன?
64.
பணியமர்த்தல் என்றால் என்ன?
65.
நேர்காணல் என்றால் என்ன?
66.
வளாக ஆட்சேர்ப்பின் அம்சங்களில் ஏதெனும் இரண்டை குறிப்பிடுக.
67.
அக வள ஆட்சேர்ப்பின் ஏதெனும் இரண்டைக் கூறுக.
68.
ஆட்சேர்ப்பின் பொருள் தருக.
69.
70.
பல்வேறு அடையாள ஆதாரங்கள் யாவை?
71.
புறத்தோற்றமற்ற பத்திர கணக்கு என்றால் என்ன ?
72.
செபி பற்றிய சிறுகுறிப்பு வரைக .
73.
தலால் தெரு - விளக்குக.
74.
ஊகவணிகர்களின் வகைகள் யாவை?
75.
தரகர் என்று யாரை அழைக்கப்படுகிறார்கள்?
76.
பங்குச் சந்தை என்றால் என்ன?
77.
அரசுப் பத்திரங்கள் சந்தை என்றால் என்ன?
78.
வைப்புச் சான்றிதழ் சந்தை என்றால் என்ன?
79.
மூலதனச் சந்தையின் பங்கேற்பாளர்கள் யார்?
80.
பரஸ்பர நிதி என்றால் என்ன?
81.
82.
மூலதனச் சந்தை என்றால் என்ன?
83.
கடன் சந்தை என்றால் என்ன?
84.
உடனடிச் சந்தை என்றால் என்ன?
85.
நிதிச்சந்தை - சிறு குறிப்பு வரைக.
86.
குறியிலக்கு மேலாண்மை என்றால் என்ன?
87.
ஒருங்கிணைத்தலின் பொருள் பற்றி நீங்கள் அறிவது என்ன?
88.
திட்டமிடுதல் என்றால் என்ன?
89.
மேற்பார்வை வீச்செல்லை என்பதன் பொருள் யாது?
90.
மேலாளர் என்பவர் யார்?
91.
மேலாண்மைக் கருவிகளைப் பட்டியலிடுக.
92.
மேலாண்மை என்றால் என்ன?
93.
பலவகையான நிறும கூட்டங்களை விளக்குக.
94.
நிறுமச் செயலரின் பணிகளை விளக்கு?
95.
இயக்குனர்களின் குற்றவியல் சார்ந்த பொறுப்புகளைப் பற்றி எழுதுக.
96.
இயக்குனரின் அதிகாரங்களை கூறுக.
97.
இயக்குனரின் தகுதிகள் பற்றி கூறுக.
98.
கடன் பத்திரங்களின் வகைகள் யாவை? (ஏதேனும் 5)
99.
பங்குகளுக்கும், கடனீட்டுப் பத்திரத்திற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை? (ஏதேனும் 5)
100.
101.
தொழில் முனைவோரின் சிறப்பு இயல்புகள் யாவை? (ஏதேனும் 5)
102.
காசோலை மற்றும் மாற்றுச்சீட்டினை வேறுபடுத்துக. (ஏதேனும் 5)
103.
நிபந்தனை மற்றும் நம்புறுதிகளை வேறுபடுத்துக.
104.
தாராளமயமாக்கல் நன்மைகள் மற்றும் குறைபாடுகள் பற்றி விளக்குக. (ஏதேனும் 5)
105.
வணிகத்தின் பொருளாதார மற்றும் சமூக கலாச்சார சூழலை விளக்குக.
106.
நுகர்வோரின் பொறுப்புகள் யாவை? (ஏதேனும் 5)
107.
நுகர்வோர் பாதுகாப்பில் நுகர்வோரின் பங்கினை விளக்குக.
108.
நுகர்வோர் எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள்?(ஏதேனும் 5)
109.
பொருளாதார அடிப்படையில் சந்தைகள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?
110.
பணிவழி பயிற்சிக்கும், பணிவழியற்ற பயிற்சி முறைக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை? (ஏதேனும் 5)
111.
பணியமர்த்தல் கோட்பாடுகளை விவரி.
112.
மனித வள மேலாண்மையின் மேலாண்மைப் பணிகளை விவரி.
113.
செபியின் அதிகாரங்களை விவரி. (ஏதேனும் 5)
114.
செபியின் பணிகளை விவரி.(ஏதேனும் 5)
115.
பங்கு பரிவர்த்தனைக்கும் பண்ட மாற்றுப் பரிவர்த்தனைக்கும் உள்ள வேறுபாடுகளைத் தருக
116.
பங்குச் சந்தை பணிகளை விவரி.(ஏதேனும் 5)
117.
நிதிச் சந்தையின் பணிகள் யாவை?
118.
முதல் நிலைச் சந்தை மற்றும் இரண்டாம் நிலைச் சந்தைக்கும் இடையேயான வேறுபாடுகளை விளக்குக. (ஏதேனும் 5)
119.
குறியிலக்கு மேலாண்மையின் முக்கிய நன்மைகள் யாவை? (ஏதேனும் 5)
120.
நவீன மேலாண்மைக் கோட்பாடுகளை விவரி. (ஏதேனும் 5)
121.
அறிவியல் பூர்வ மேலாண்மையின் கோட்பாடுகள் யாவை?
122.
மேலாண்மையின் அடிப்படைக் கருத்துக்களை விவரி. (ஏதேனும் 5)
1.
2.
சட்டமுறை கூட்டம் (Statutory Meeting)
நிறுமச் சட்டப்படி ஒவ்வொரு பொது நிறுமமும் தொழில் தொடங்கிய தேதியிலிருந்து ஒரு மாதத்திலிருந்து 6 மாதத்திற்குள் பங்குனர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் இதனை சட்டமுறை கூட்டம் என அழைக்கப்படுகிறது. ஒரு பொது நிறுமத்தின் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கூட்டப்படும் கூட்டம் சட்டமுறை கூட்டம் ஆகும். பங்கு முதல் இல்லாத பொது மற்றும் தனி நிறுமங்கள் இத்தகைய கூட்டத்தை கூட்ட தேவையில்லை.
3.
(i) பங்குதாரர்களால் நீக்கம் - பிரிவு(169)
1. இயக்குனர்கள் பின்பற்றிய கொள்கைகள் பொருத்தமானதல்ல என பங்குதாரர்கள் கருதினால்,
2. சிறப்பு அறிவிப்பை வழங்குவதன் மூலமும், சாதாரண தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலமும் இயக்குனரின் பதவிக்காலம் முடியும் முன் இயக்குனரை பதவியிலிருந்து நீக்கலாம்.
(ii) மத்திய அரசால் நீக்கப்படுதல் :
1. பொறுப்புகளை நிறைவேற்றுவதில் மோசடி.
2. விவேகமான வர்த்தக நடைமுறையின்மை.
3. கடுமையான வியாபார பாதிப்பு.
4. பொது நலனுக்கு சேதமளிக்கும் வகையில் நிர்வாகம் நடத்தப்படுவது.
போன்ற காரணங்களால் மத்திய அரசு இயக்குனரை நீக்கலாம்.
(iii) நிறும /கம்பெனி சட்ட வாரியத்தால் நீக்கப்படுதல் :
ஒரு இயக்குனர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார் என்று கம்பெனி சட்டவாரியத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டால் கம்பெனி சட்ட வாரியத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டால் கம்பெனி சட்ட வாரியத்தால் இயக்குனர் நீக்கப்படலாம்.
4.
(i) ஒரு இயக்குநர் இந்தியாவில் குறைந்தது மூன்று மாதத்திற்கு மேல் இல்லையென்றால் அவருக்கு பதிலாக கூடுதல் இயக்குநர்களை இயக்குநர் குழு நியமிக்கலாம். இவ்வாறு நியமிப்பதற்கு கம்பெனியின் செயல்முறை ஏட்டில் அங்கீகாரம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது பொதுக்கூட்டத்தில் ஒரு தீர்மானம் இயற்றி அதன் வாயிலாக நியமிக்கலாம்.
(ii) இந்த மாற்று இயக்குநர் உண்மையான இயக்குநருக்கு முகவராக அல்லது பதிலாக கருதப்படமாட்டார்.
5.
1. பங்குகளின் வெளியீட்டு விலை முகமதிப்பை விட குறைவாக இருந்தால் அது வட்டத்தில் (தள்ளுபடியில் வெளியிடுதல் என அழைக்கப்படுகிறது.
(எ.கா) Rs.10 முகமதிப்புடைய பங்குகளை Rs.8க்கு வெளியிட்டால் தள்ளுபடி Rs.2.
2. நிறுமச் சட்டம் 2013 பிரிவு (53)ன் படி தள்ளுபடி பங்குகளை வெளியிடுதல்.
6.
1. வேளாண் பொருட்களை விளைவித்து, நேரடியாகவோ அல்லது கூட்டுறவு அமைப்புகள் மூலமாகவோ சந்தையிடும் பணியை மேற்கொள்பவர்.
2. இவர்கள் பல்வேறு இயற்கை சார்ந்த உள்ளீட்டு பொருட்களான உரம், விதை, தண்ணீர், பூச்சிக்கொல்லி மருந்து, உழைப்பு போன்ற இடு பொருட்களை இட்டு உணவு பொருட்களை உற்பத்தி செய்கின்றனர்.
3. மேலும் மாட்டுப்பண்ணை, ஆட்டுப்பண்ணை, கோழி வளர்ப்பு, மீன் பூ வளர்த்தல், இறால் வளர்த்தல் மற்றும் வேளாண் கருவிகளை உற்பத்தி செய்தல் போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.
7.
| அடிப்படை | தொழில் முனைபவர் | அகத்தொழில் முனைவோர் |
| சிந்தனை | தடையற்ற சிந்தனையாளர் | தன்னிசையான சிந்தனையாளர் ஆனால் தொழில் நிறுமத்தின் உள் செயல்படுபவர் |
| சார்பு நிலை | தன்னிசையான நபர் | தொழில் முனைவோரை சார்ந்து இருப்பவர் |
| நிதி தோற்றத்தால் | தன் சொந்த முயற்சியில் தொழிலுக்கான நிதியை திரட்ட வேண்டும் | நிதி திரட்டும் பொறுப்பில்லை. ஆனால் நிதியை கையாளும் பொறுப்பு உள்ளது. |
| வெகுமதி | இலாபம் என்ற வெகுமதியைப் பெறுகிறார் | இலாபத்தில் பங்கில்லை, ஊதியம், ஊக்க ஊதியம் மற்றும் மேம்படிகள் பெற வாய்ப்புண்டு |
| இடர் ஏற்றல் | கட்டாயம் இடர் ஏற்க வேண்டும் | இடர்பாட்டில் பங்கு பெறுவதில்லை. செயல்திட்டம் தோல்விக்கு பொறுப்பேற்பதில்லை |
| தகுநிலை / தரநிலை | உரிமையாளர் | ஊழியர் |
| செயல்பாடு | தொழிலுக்குப் புறத்தே நின்று பெரும்பாலும் செயல்படுபவர் | முழு நிறுமத்திற்கு உட்பட்டு இயங்கும் நபர் |
8.

9.
| வ. எ | வேறுபாடுகளின் இயல்புகள் | மாற்றுச்சீட்டு | கடனுறுதி சீட்டு |
| 1 | உறுதிமொழி தன்மை | நிபந்தனையற்ற முறையாவணம் | நிபந்தனையற்ற பணம் தருவதற்கான கடன் உறுதிமொழி பத்திரம் |
| 2 | தரப்பினர் | மூன்று நபர்கள் இருப்பார்கள் 1. வரைபவர் 2. வரையப் பெற்றவர் 3. பணம் பெறுபவர் |
இரண்டு தரப்பினர் மட்டுமே இருப்பர் 1. வரைபவர் 2. பணம் பெறுபவர். |
| 3 | வரைபவர் | கடனாளர் | கடனாளி |
| 4 | தரப்பினர் அடையாளம் | எழுதுபவரும் பணம் பெறுபவரும் ஒரே நபராக இருக்கலாம். | இதனை எழுதுபவரே பணம் பெறுபவராக இருக்க முடியாது. |
| 5 | பொறுப்பாக்கப்படும் வரிசை | மாற்றுச்சீட்டை எழுதியவரின் பொறுப்பு இரண்டாம் பட்சமானது மாற்றுச் சீட்டை ஏற்றவர் பணம் தராமல் மறுக்கும் போது மட்டுமே வரைபவரின் பொறுப்பு எழும். | கடனுறுதி சீட்டை எழுதியவரின் பொறுப்பு முதன்மையானது. |
| 6 | கொணர்பவர் பத்திரம் | இதை கொணர்பவருக்கு கொடுக்கும்படி வரையலாம். | இதை கொணர்பவருக்கு தருவதாக வரைய சட்டம் தடை செய்கிறது. |
| 7 | ஏற்பு | இதனை எழுதப் பெற்றவர் ஏற்க வேண்டும் | இதை கடனாளியே எழுதுவதால் ஏற்க அவசியமில்லை |
| 8 | படிகள் (வடிவம்) | அயல்நாட்டு மாற்றுச் சீட்டு மூன்று படிகளில் தயாரிக்கப்படுகிறது | கடனுறுதி சீட்டு ஒரு படியில் மட்டுமே எழுதப்படுகிறது |
| 9 | நிபந்தனைக்கு உட்படுதல் | மாற்றுச் சீட்டினை நிபந்தனைக்கு உட்படுத்தலாம் | இதனை நிபந்தனைக்கு உட்படுத்த இயலாது |
| 10 | அவமதிப்பு அறிவிப்பு | மேலெழுதியவருக்கு (அ) வரைந்தவருக்கு மாற்றுச் சீட்டு அவமதிக்கப்பட்ட செய்தியை அறிவிக்க வேண்டும். | அவமதிப்பு அறிவிப்பு தேவையில்லை |
10.
(i) குறைந்த இயக்கச் செலவுகளின் அடக்கம் மற்றும் புதிய மூல பொருட்கள் மற்றும் கூடுதல் சந்தை அனுகல் மூலம் பெரிய நிறுவனங்கள் போட்டி திறனை பெறுகின்றன.
(ii) பன்னாட்டு நிறுவனங்கள் (MNC's) பொருட்களை தயாரிக்க வாங்க மற்றும் பொருட்களை விற்பனை செய்ய முடிகின்றது.
(iii) உலகமயமாக்கல் நுகர்வோர் பொருட்களின் சந்தையை வெகுவாக (ஏற்றத்துடன்) பெருக்கிட உதவும் வாய்ப்பை உருவாக்கலாம்.
11.
12.
போட்டியாளர்களால் அடையாளம் காணப்படாத ஒரு வரையறுக்கப்பட்ட வகுப்பு / பிரிவு மக்களை அடையாளம் கண்டு அந்த வாடிக்கையாளரின் தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான அனைத்து சந்தையிடுதல் முயற்சிகளை செய்வதே (niche market) தனியிடச்சந்தையை குறிக்கும்.
(ii) ஒரு பெரிய குளத்தில் ஒரு சிறிய மீனாக இருப்பதற்கு பதிலாக ஒரு சிறிய குளத்தில் ஒரு பெரிய மீனாக இருப்பது போல, ஒரு குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட வாடிக்கையாளரின் தேவைகளை பூர்த்தி செய்யும் சந்தையை இவ்வாறு அழைக்கிறோம்.அனைத்து வசதிகளுடன் உரிய திரையரங்குகள் (இதன் டிக்கெட் விலை மற்ற திரையரங்கை போல் அல்லாமல் 5 அல்லது 6 மடங்கு அதிகமாக இருக்கும்).
13.
B2B
உற்பத்தியாளருக்கும், மொத்த வியாபாரிகளுக்கும் இடையேயான மொத்த வியாபாரிகளுக்கும், சில்லறை வியாபாரிகளுக்கும் இடையேயான வாங்குதல் மற்றும் விற்றல் வியாபாரங்கள் B2B எனப்படும்.
B2C
உற்பத்தியாளர்களுக்கும், நுகர்வோர்களுக்கும் இடையேயான வணிக நடவடிக்கைகள் B2C எனப்படும்.
14.
1. உட்புறச்சூழல்:
i) இது நிறுவனத்தின் உட்புறத்தோடு தொடர்புடைய காரணிகளாகும்.
ii) இவற்றை கட்டுப்படுத்துதல், மாற்றியமைத்தல் போன்றவற்றை எளிதில் மேற்கொள்ள முடியும்.
(எ.கா) கொள்கைகள் மற்றும் திட்டங்கள், நிறுவன கட்டமைப்பு, ஊழியர்கள், நிதி மற்றும் வளங்கள்.
2. நுண்ணிய சூழல்:
வியாபாரத்தின் செயல்திறனை உடனடியாக பாதிக்கும் சுற்றுச்சூழலாக இருக்கும் காரணிகளை இது குறிக்கிறது.
(எ.கா) நிதி அளிப்பவர்கள், சரக்கு விற்பனையாளர்கள், சந்தையிடுகை இடைநிலையர்கள், பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் போட்டியாளர்கள்.
3. பரந்த சூழல்:
i) வணிகத்தின் வெற்றி பரந்த சூழலுக்கு பொருத்தக்கூடிய தன்மையை சார்ந்து இருக்கிறது.
ii) இவை கட்டுப்படுத்த முடியாத காரணிகள் ஆகும்.
iii) அவை வியாபாரத்திற்கான மகத்தான வாய்ப்புகளை வழங்குகின்றன.
iv) வியாபாரத்திற்கு தீவிர அச்சுறுதல்களை ஏற்படுத்துகின்றன.
15.
1. 20 இலட்சத்திற்கு மிகையாக 1 கோடிக்குள்ளாக விற்கப்பட்ட சரக்குகள் மற்றும் சேவை தொடர்பாக எழும் குறை மனுக்களை விசாரிக்கும் அதிகாரம் மாநில ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
2. மாநில மன்றத்தின் தீர்ப்புகளுக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட்ட மனுக்களை விசாரித்து தீர்ப்பு வழங்கும் அதிகாரம் மாநில ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
16.
(i) சில தயாரிப்புப் பொருட்கள் நுகர்வோரின் உடல் நலம், சொத்துக்கள் மற்றும் வாழ்வு முறையில் அபாயத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.
(ii) அத்தயாரிப்புகள் நுகர்வோரின் நலனுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாக இருக்கலாம்.
(iii) சிறந்த உதாரணமாக உணவு சேர்க்கைகள், நிறமிகள், உணவுப்பாதுகாப்பு இரசாயனங்கள் ஆகியவை ஆகும்.
(iv) உடல்நலக் கோளாறுகள் மற்றும் ஆரோக்கிய அபாயங்கள் எழும் வாய்ப்புகள் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும் அல்லது முற்றிலும் குறைக்கப்பட வேண்டும்.
(v) உணவுகள் மற்றும் மருந்துகள் நுகர்வோரின் உயிரைக் காப்பாற்றுவதாகவும் உயிருக்கு பாதுகாப்பு அளிப்பதாகவும் இருக்க வேண்டும்.
(vi) இன்றைய சூழலில் தற்போதைய சட்டங்கள் பாதுகாப்பில்லாத பொருட்களை தயாரிப்பதோ அல்லது விற்பனை செய்வதோ கூடாது என்ற கடமை விற்பனையாளர்களுக்கும் மற்றும் உற்பத்தி செய்பவர்களுக்கும் உள்ளது.
17.
(i) சில சூழ்நிலைகளில் வணிகர்கள் தங்களின் வணிக நிறுவனங்களின் சரக்குகளை இருப்பு வைக்கும் இடங்களில் போதுமான அல்லது தேவைக்கு அதிகமான அளவு சரக்குகளை இருப்பு வைத்திருந்தாலும் கூட தங்கள் கடைகளின் முகப்பில் இருப்பு இல்லை எனும் பெயர்ப் பலகையை வைக்கின்றனர்.
(ii) இத்தகைய சூழ்நிலைகளில் நுகர்வோர் தங்களின் தவிர்க்க இயலாத தேவையின் அடிப்படையில் அப்பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
(iii) இதன் மூலம் வணிகர்கள் நேர்மையற்ற முறையில் பெருலாபம் ஈட்டுகின்றனர். திரையரங்குகளில் அரங்கம் நிறைவு (House full) என்னும் பெயர்ப்பலகை மாட்டப்பட்ட பின்னும் கள்ளச்சந்தையில் அதிக விலைக்குத் தாராளமாக அனுமதி சீட்டுகள் (Tickets) கிடைக்கின்றன.
18.
(i) சந்தையிடுகை கலவை மூலம் நிறுவனம் தனது நுகர்வோர்களை குறிவைத்து அதன் மூலம் லாபம் ஈட்டுவதே ஆகும். இத்தகைய சந்தையிடுகையின் செயல்பாடுகள் நான்கு வகை கலவை பொருட்களை கொண்டுள்ளது. அதாவது பொருட்கலவை, விலை கலவை. இடக் கலவை, மற்றும் மேம்பாட்டு கலவை போன்றவையாகும்.
(ii) பொருள் (Product) : பொருள் சந்தையில் ஒரு முக்கிய கூறு ஆகும். பொருள் இல்லையெனில் எந்த ஒரு சந்தையும் இயங்க இயலாது.
(iii) விலை (Place) : பிலிப் கோட்லர் அவர்களின் கருத்துப்படி “விலை என்பது பண்டங்கள் மற்றும் பணியின் மாற்று மதிப்பு ஆக பெறப்படும் ஒன்றாகும்" அல்லது நுகர்வோர்கள் நலன் கருதி பண்டங்கள் மற்றும் பணிகளுக்கு இணையான மதிப்பை மாற்றிக் கொள்ள தக்க ஒன்றுதான் விலை" என்கிறார்.
19.
1. வாடிக்கையாளர் மனப்பாங்கு
2. நுகர்வோரின் தேவை
3. வழங்கல் வழிகள்
4. வாடிக்கையாளரின் பொருளாதார சூழல்
20.
(i) மிக குறுகிய கால சந்தை : இவ்வகை சந்தையில் மிக குறுகிய காலத்தில் பயன்படத்தக்க பொருட்கள் மட்டுமே கையாளப்படுகிறது. அதாவது அழுகக்கூடிய தன்மை உடைய பொருட்களான, பால், முட்டை, காய் மற்றும் கனிகள் போன்றவைகள் இத்தகைய சந்தையானது கிராமப்புறங்களில் இன்றளவும் நடைபெறுகிறது.
(ii) குறுகிய கால சந்தை : இத்தகைய சந்தையில் ஒரு சில பொருட்கள் இச்சந்தையில் தேவையை சமாளிப்பதற்கு அளிப்பின் அளவு சரிசெய்யப்படுகிறது. தேவை அளிப்பை விட அதிகமானது.
(iii) நீண்டகால சந்தை : நீடித்து உழைக்க கூடிய பொருட்களை கையாளத்தக்க வகையில் உள்ள சந்தையை இது குறிக்கிறது. இத்தகைய சந்தையில் நீண்ட காலத்திற்கு பயன்படுத்த ஏதுவாக உள்ள நுகர்வு பொருட்கள் மற்றும் சேவைகள் மட்டும் சந்தையிடுகை செய்யப்படுகிறது.
21.
சந்தையில் சந்தையிடக்கூடிய பொருட்கள் :
1. பண்டங்கள் / பொருட்கள் (Goods)
2. பணிகள் / சேவைகள் (Service)
3. அனுபவங்கள் (Experiences)
4. நிகழ்வுகள் (Events)
5. நபர்கள் (Persons)
6. இடம் (Place)
7. கடமைகள் (Properties)
8. அமைப்பு (Organisation)
9. தகவல் (Information)
10. கருத்துக்கள் (Ideas)
22.
1. பயிற்சி நோக்கத்திற்காக செயற்கையாக உருவாக்கப்படும் உண்மையான வேலை சூழலைப் போல, ஊழியர்களுக்கு பயிற்சியளிக்கும் முறை தொழிற்சாலைக்குள் பயிற்சி முறை எனப்படுகிறது.
2. இந்த வகையான பயிற்சி அளிப்பதன் மூலமாக தொழிற்சாலையில் உள்ள இயந்திரங்களுக்கு எவ்வித சேதாரங்களும், இழப்பும் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
உதாரணம்: ஓட்டுனர்கள், விமானிகள், விண்வெளி விஞ்ஞானிகள் போன்றோருக்கு இப்பயிற்சி வழங்கப்படுகிறது.
23.
(i) மனோபாவச் சோதனை என்பது குறிப்பிட்ட பணிக்கு விண்ணப்பதாரர் எந்த அளவிற்கு பொருத்தமானவர் என்பதை அளவிட மேற்கொள்ளப்படும் உளவியல் தேர்வு ஆகும்.
(ii) இச்சோதனை பணியாளரின் எதிர்கால செயல்திறனை முன்கணிக்கவும் பயன்படுகிறது.
24.
(i) மன அழுத்த நேர்காணலில் விண்ணப்பதாரரிடம் வேண்டும் என்றே மன அழுத்தம் தரும் வகையினை கேள்விகள் கேட்கப்படும், உணர்ச்சிகளை கட்டுப்படுத்துதல் மற்றும் மன அழுத்தத்தை சமாளிக்கும் திறனை சோதிக்க இத்தகைய நேர்காணல் நடத்தப்படுகிறது.
(ii) மன அழுத்த சூழ்நிலையில் விண்ணப்பதாரர் எவ்வாறு எதிர் வினையாற்றுகிறார், பதிலளிக்கிறார் என்பதை உற்று நோக்கி அப்பணிக்கு அவரின் பொருத்தப்பாடு சோதிக்கப்படுகிறது.
(iii) பெரும்பாலும் விற்பனைப் பிரதிநிதிகள் பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்கம் போன்ற துறைகளில் பணியமர்த்தப்படுபவர்களுக்கு இவ்வகையான நேர்காணல் நடத்தப்படுகிறது.
25.
| வ.எண் | அடிப்படை | விளம்பரம் | கோரப்படாத விண்ணப்பம் |
| 1. | பொருள் | பணியாளர்களை தேடும் பொருட்டு விளம்பரம் செய்யப்படுகின்றது. | வேலை தேடுவோர், தன்னிச்சையாக வேலை வேண்டி விண்ணப்பம் செய்யப்படுகின்றது. |
| 2. | தெரிந்து கொள்ளல் | இதன் மூலம் வேலைக்கு தேவைப்படும் தகுதி, வழங்கப்படும் சம்பளம் ஆகியவற்றை தெரிந்து கொள்ள முடியும். | வேலை தேடுவோர் தன்னுடைய தகுதி, எதிர்பார்க்கும் சம்பளம் போன்ற விவரங்களைத் தருகின்றனர். |
| 3. | உறுதிநிலை | விளம்பரம் தரும் நிறுவனத்தில் பணியிடம் காலியாக உள்ளது.என்பதை உறுதியாக நம்பலாம். | விண்ணப்பிக்கும் நிறுவனத்தில் பணியிடம் காலியாக உள்ளது என்பதை உறுதியாக சொல்ல முடியாது, |
26.
மனித வள மேலாண்மையின் பணிகள்:
1. மேலாண்மைப் பணிகள்
2. இயக்கப் பணிகள்
மேலாண்மைப் பணிகள்:
(i) திட்டமிடுதல்
(ii) அமைத்தல்
(iii) இயக்குவித்தல்
(iv) கட்டுப்படுத்துதல்
இயக்கப் பணிகள்:
(i) திரட்டுதல்
(ii) அபிவிருத்தி
(iii) இழப்பீடு
(iv) தக்கவைத்தல்
(v) ஒருங்கிணைத்தல்
(vi) நிர்வகித்தல்
27.
(i) தேசிய பங்குச்சந்தை நவம்பர் 1992 ல் அமைக்கப்பட்டது.
(ii) இது தேசிய அளவில் திரை சார்ந்து இணை வழியாக ஆணை பெரும் வியாபார அமைப்பாகும்.
(iii) இந்த அமைப்பு செயற்கைகோள் இணைப்பு மூலம் நாடு முழுவதும் பரவியுள்ள உறுப்பினர்களிடையே பங்குகளை, பத்திரங்களை வியாபாரம் செய்கிறது.
(iv) கடன் பிரிவு மூலதனப் பிரிவு என்றுள்ளது.
28.
காளை - தெஜிவாலா:
(i) பத்திரங்கள் எதிர்காலத்தில் விலையேற்றம் பெறும் என்று எதிர்பார்க்கின்ற ஊக வணிகர் காளை அல்லது தெஜிவாலா (Tejiwala) என்றழைக்கப்படுகிறார்.
(ii) ஒரு காளை தன்னுடைய கொம்புகளால் எதிரிகளை உயரே அல்லது மேல் நோக்கி தூக்கி ஏறிவது போன்று, இந்த வகை வணிக ஊக வணிகர் பிணையப் பத்திரங்களின் விலையை உயரச் செய்யும் நோக்கோடு செயல்படுவதால் காளை எனப் பெயரை பெற்றுள்ளார்.
(iii) இவர் எல்லாம் நன்மைக்காகவே நடைபெறும் (Optimism) என்ற மனப்பாங்கு கொண்டவர்.
கரடி - மண்டிவாலா:
(i) கரடி அல்லது மண்டிவாலா (Mandiwala) என்றழைக்கப்படும் ஊகவணிகர், எதிர்காலத்தில் குறிப்பிட்ட பத்திரங்களின் விலைகள் வீழ்ச்சி அடையும் என்று எண்ணுபவர்.
(ii) ஒரு கரடி வணிகர் எதிலும் பின்னோக்கிய மனப்பாங்கு(pessimism) கொண்டவர்.
(iii) ஒரு கரடி பொதுவாகத் தன்னுடைய எதிரியைத் தரையில் தள்ளி அழுத்துகிறது. அதேபோல் ஒரு கரடி ஊகவணிகரும் பங்குச் சந்தையில் பங்குகளின் விலையை கீழே தள்ளுவதற்கு வேண்டிய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்
29.
30.
கருவூல இரசீது பின்வரும் பொதுவான இயல்புகளை உடையது. அவை பின்வருமாறு.
1. வெளியிடுபவர்
2. நிதி இரசீது
3. நீர்மைத் தன்மை
4. முக்கிய ஆதாரம்
5. பண மேலாண்மை
31.
| கோட்பாட்டின் அடிப்படை | மேலாண்மை | நிர்வாகம் |
|---|---|---|
| பொருள் | மேலாண்மை என்பது மற்றவர்களின் முயற்சி மற்றும் ஒத்துழைப்புடன் நோக்கங்களை எய்தும் ஒரு கலையாகும். | ஒரு குழுவால் ஒரு நிறுவனத்தை நிர்வகிப்பதற்கான செயல் முறையே நிர்வாகம் என்று அழைக்கப்படுகின்றது. |
| அதிகாரம் | மத்திய மற்றும் கீழ்மட்ட அளவில் | உயர் மட்ட அளவில் |
| பங்கு | நிறைவேற்றம் | முடிவெடுத்தல் |
| தொடர்பு தன்மை | கொள்கைகளை செயல்படுத்தல் | கொள்கைகளை உருவாக்குதல் |
| செயல்பாட்டு பரப்பு | நிர்வாகத்தின் கீழ் செயல்படுகிறது | நிறுவனத்தின் செயல்பாடுகள் மீது முழுக்கட்டுப்பாடு |
| செயல் | திட்டங்களையும், கொள்கைகளையும் செயல்படுத்தல் | திட்டங்கள் தீட்டுதல், கொள்கைகளைக் கட்டமைத்தல் மற்றும் இலக்குகளை நிர்ணயித்தல். |
32.
1. மேலாண்மை என்பது ஒரு கலையும் அல்ல, அறிவியலும் அல்ல, இரண்டின் தொகுப்பாகும்.
2. மேலாண்மை என்பது அதன் இயல்பின் அடிப்படையில் ஒரு செயலை செய்வதற்கான கலையோ அல்லது ஒரு செயலை பெறுவதற்கான அறிவியலா ஆகும்.
33.
கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்களிக்க முடியாத உறுப்பினர்கள் அவர்களுக்கு பதிலாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகராள்களை நியமிக்கலாம். பகராள் உறுப்பினராக இருக்க வேண்டிய அவசியமில்லை. பகராள் கூட்டம் தொடங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் நிறும பதிவு அலுவலகத்தில் தெரிவித்து பதியப்பட வேண்டும்.
34.
இயக்குநரவையால் எடுக்கப்பட்ட ஒரு முடிவை நடைமுறைப்படுத்த, சட்டப்படி குறைந்தளவு எண்ணிக்கை கொண்ட பங்குனர்களின் கூட்டத்தில், ஓட்டுப்பதிவு நடத்தியோ அல்லது வேறு முறையின் மூலமாக பங்குனர்களால் அளிக்கப்படும் ஒப்புதல் தீர்மானம் எனப்படும்.
35.
இயக்குனராக நிறுமத்தில் பணி புரியும் ஒருவர் அதிகபட்சமான அதிகாரங்களை கொண்டவருமாக, கம்பெனியின் நிர்வாகத்தில் அதிக ஆர்வம் அதிகபட்சமான சுதந்திரமும் உடையவர் கம்பெனியை வழிநடத்துவதற்கும் இயக்குநர்களை கட்டுப்படுத்தும் உரிமையும் இவருக்கு உண்டு.
36.
நிறுமச்சட்டம் 2013, பிரிவு 2(30) ன்படி "கடன் பத்திரம்" என்பது நிறுமத்தின் சொத்துக்களின் மீது பற்றுப் பொறுப்பு ஏற்படுத்தியோ (அ) ஏற்படுத்தாமலோ நிறுமம் வெளியிடும் பிணையமாகும். கடன் பத்திரத் தொகுதி, பாண்டு முதலான பிணையங்களும் கடன் பத்திரம் என்பதில் அடங்கும்.
37.
(i) நிறுமத்தின் குறிப்பிட்ட பங்குகளுக்கு சொந்தக்காரர் என்று வழங்கப்படும் சான்றிதழ் பங்குச் சான்றிதழ் எனப்படும்.
(ii) இதில் நிறுமம் பொது இலட்சினை, இயக்குனர் மற்றும் செயலரின் கையொப்பம் இருக்கும்.
(iii) பங்கு சான்றிதழ் என்பது உரிமைக்கு சாட்சியமே தவிர உரிமை இல்லை.
38.
(i) நிறுமத்தின் பங்களிப்பு மற்றும் பங்கு முதலை உயர்த்தும் நோக்கில் வெளியிடப்படும் பங்குகள் உரிமைப் பங்குகள் எனப்படும்.
(ii) இந்த உரிமைப் பங்குகளின் வெளியீடு செயல்முறை விதிகளுக்கு உட்பட்டு இருக்கும்.
39.
ஒரு நிறுமம் பங்காதாயம் வழங்கும் பொழுது அதை வாங்க முன்னுரிமை பெற்ற பங்குகள் முன்னுரிமை பங்குகள் எனப்படும்.
40.
நிறுமத்தின் பங்கு முதலின் சிறு (பகுதி) பங்கு எனப்படும்.
எ.கா : நிறுமத்தின் பங்கு முதல் = Rs.10,000
பங்கு முதலை திரட்ட பங்குகளை பிரிக்க வேண்டும்.
Rs.10 க்கு வெளியிட்டால் 1,0000 பங்குகள் எனவும்
Rs 100க்கு வெளியிட்டால் 100 பங்குகள் எனவும் வெளியிடலாம்.
41.
(i) வேளாண் தொழில் முனைவோர் வேளாண் பொருட்களை விளைவித்து சந்தையிடும் தொழிலை முனைகின்றனர்.
(ii) இவர்கள் பல்வேறு இயற்கை சார்ந்த உள்ளீட்டு பொருட்களான உரம், விதை, தண்ணீர், பூச்சிக்கொல்லி மருந்துகள், உழைப்பு போன்ற இடுபொருட்களை கொண்டு உணவு பொருட்களை உற்பத்தி செய்கின்றனர்.
42.
(i) ஒரு தொழில் முனைவோர் ஆரம்பித்த பணியில் பணிபுரிபவர்.
(ii) இவர் தனக்கு வழங்கப்பட்ட பணியில், நிறுவனத்தில் கிடைக்கக்கூடிய வளங்களைக் கொண்டு, தனது ஆற்றலை பயன்படுத்தி புதிய எண்ணங்களை புகுத்துபவர்.
43.
மாற்றுமுறை ஆவணச் சட்டம் 1881ன் பிரிவு 6ன்படி வெளிப்படையாக கேட்டாலன்றி வேறு எப்போதும் பணம் தரக்கூடாது என வாடிக்கையாளரால் வங்கியின் மீது எழுதப்படும் மாற்றுச் சீட்டே காசோலை எனப்படும்.
44.
45.
1. வெளிநாட்டு ஒத்துழைப்பை கூட்டுதல்
2. சந்தை விரிவாக்கம்
3. தொழில்நுட்ப வளர்ச்சி
46.
தனியார்மயமாக்கல் என்றால் பொதுத்துறை நிறுவனங்களின் உரிமைகளை தனியார் நிறுவனங்களுக்கு மாற்றி தரும் நிகழ்வு அல்லது கொள்கையை குறிப்பிடுவதாகும். சுருங்கக் கூறின் தனியார்மயமாக்கல் என்பது பொதுதுறைக்கு ஒதுக்கப்பட்ட தொழில்களை தனியார் துறைக்கு மாற்ற அனுமதி அளிப்பதாகும்.
47.

48.
1. உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை உற்பத்தியாளர்களிடமிருந்து அல்லது மொத்த வியாபாரியிடமிருந்து அப்பொருட்களை இணையதளம் வழியாக நுகர்வோர்களுக்கு விற்பனை செய்பவர்கள் மின்னணு சில்லறை வியாபாரிகள் என்பவர் ஆவர்.
2. உதாரணம்: அமேசான் நிறுவனம், பிளிப்கார்ட் போன்றவை.
49.
சேவை சந்தையிடுதல், சந்தையிடுதலின் ஓர் சிறப்பு பிரிவு ஆகும். இது ஒரு சேவை அல்லது பயனை ஒருவர் மற்றவருக்கு அளிப்பதை குறிக்கும். சேவை சந்தையிடுதல் என்பது, தகவல்தொழில் நுட்பம், வங்கிக் காப்பீடு, சுகாதாரம், சுற்றுலா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பழுதுபார்ப்பு போன்ற சேவைப்பொருள்களை பரிவர்த்தனை செய்துக் கொள்ளுவதை குறிக்கும்.
50.
சுற்றுச்சூழலுக்கு எவ்வித தீங்கும் விளைவிக்காமல் சுற்றுப்புறச் சூழலுக்கு பாதுகாப்பாக சந்தைப்படுத்துவதை பசுமை சந்தைப்படுத்துதல் எனலாம். நுகர்வோர்களின் தேவை மற்றும் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் பொருள்கள் மற்றும் சேவைகளை உருவாக்கி, மேம்படுத்தி, தரமான செயல் திறன்மிக்க பொருள்களை, மலிவு விலையில் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் உற்பத்தி செய்து சந்தைப்படுத்துவதை பசுமை சந்தைப்படுத்தல் எனலாம்.
51.
விரைவான தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக வணிகத்தின் எதிர்கால சூழலை சுருக்கமாக ஏற்ற இறக்கம், நிச்சயமற்ற தன்மை, சிக்கலானத் தன்மை மற்றும் தெளிவற்றத் தன்மை கொண்டவை என்று கூறலாம்.
52.
உட்புறச் சூழல் என்பது நிறுவனத்தின் உட்புறத்தோடு தொடர்புடைய காரணிகளாகும். எனவே இவற்றைக் கட்டுப்படுத்துதல், மாற்றி அமைத்தல், போன்றவற்றை நிறுவனங்கள் எளிதில் மேற்கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக கொள்கைகள் மற்றும் திட்டங்கள், நிறுவன கட்டமைப்பு, ஊழியர்கள், நிதி மற்றும் வளங்கள் போன்றவை ஆகும்.
53.
(i) குறைதீர்ப்பு முடிவடையும் தேதிக்கு தேவையான நடவடிக்கை எடுக்கும் தேதி 2 வருடத்திற்குள் புகார் பதிவு செய்யலாம்.
(ii) முத்திரைத்தாளில் புகார் மனு அளிக்க வேண்டிய அவசியமில்லை.
(iii) புகார் அளிப்பவர் தனிப்பட்ட முறையிலோ அல்லது முகவர் மூலமாகவோ அல்லது அஞ்சல் வழியாகவோ புகாரை அனுப்பலாம்.
(iv) புகார் அளிக்க வழக்கறிஞர்களை ஈடுபடுத்த வேண்டிய அவசியமில்லை.
54.
(i) இந்த ஆணையம் மாநில அளவில் செயல்பட்டுவருகிறது. இந்த அமைப்பை நுகர்வோர் குறைபாட்டு தீர்ப்பாணையம் என அழைக்கப்படுகிறது.
(ii) சரக்கு மற்றும் சேவைகள் தொடர்பாக எழும் புகார்கள் இந்த தீர்ப்பாணையத்தின் செயல் எல்லைக்குள் அடங்கும்.
(iii) விற்கப்பட்ட சரக்கில் ஏற்படும் பழுதுகள் மற்றும் தரக்குறைகள் மற்றும் நியாயமற்ற மற்றும் தடை செய்யும் வணிக நடைமுறைகளுக்கு (Unfair Restrictive Trade Practices). வணிக நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு ஆணையம் என்ற பெயரில் துவங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறது.
55.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி திரு. ஜான் F கென்னடி அவர்கள் " அடிப்படையான நுகர்வோர் உரிமை என்பது பாதுகாப்பு உரிமை, தகவல் பெறும் உரிமை, தேர்ந்தெடுக்கும் உரிமை மற்றும் கேட்கும் உரிமை" என்று கூறுகிறார்.
56.
(i) "விற்பனையாளர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" (Let the Seller Beware) என்ற கோட்பாட்டின் அடிப்படையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
(ii) விற்பனையாளர்கள் தங்களது பொறுப்பிலிருந்து தப்பிக்க இயலாது. விளம்பரங்களில் "பொருட்கள் உள்ளது உள்ளபடி” என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டாலொழிய, பொருட்களை வாங்குபவருக்கு, அப்பொருளை வாங்குவதற்கான நோக்கத்தை அப்பொருள் நிறைவேற்றும் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையிலேயே' விற்பனையாளர் அப்பொருளை விற்பனை செய்ய வேண்டும்.
57.
(i) வாங்குவோர் ஜாக்கிரதை எனும் சொல் கேவியட் எம்ப்டர் எனும் இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து பிறந்தது ஆகும். "உள்ளது உள்ளபடியே என்ற சொற்றொடரைப்போன்று நுகர்வோர் வாங்கிய பொருட்கள் அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை அல்லது குறைபாடுடையவை எனில் அத்தகு இடர்பாடுகளுக்கு வாங்குபவரே பொறுப்பேற்க வேண்டும்.
(ii) பொருட்களை வாங்கியவர் அதற்கு நிவாரணம் தேட இயலாது என நுகர்வோரை எச்சரிக்கை செய்யும் தத்துவமே "வாங்குவோர் ஜாக்கிரதை அல்லது விழித்திரு" எனும் கோட்பாடாகும்.
58.
உற்பத்தியாளரிடமிருந்து அல்லது விற்பனையாளரிடமிருந்து பொருட்களை வாங்குவோர் அல்லது இயற்கை வளங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டு (காற்று, நீர் மற்றும் இயற்கை வளங்கள்) அல்லது பிறரால் உற்பத்தி செய்யப்பட்டு, விற்கப்படும் பொருட்களை பயன்படுத்துபவரே நுகர்வோர் ஆவார்.
59.
திரு.ஜெரோமி எம்சி கார்தோ அவர்களின் கூற்றுப்படி, "சந்தையிடுகை கலவை நான்கு கூறுகளைக் கொண்டுள்ளது. அவையாவன, பொருள் கூறுகள், விலை கூறுகள், விற்பனை மேம்பாட்டு கூறுகள் மற்றும் இடக்கூறுகள் ஆகும்". என்கிறார்.
60.
அரசின் சட்டம் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு சந்தை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் இதன் செயல்பாடுகள் அனைத்தும் சட்டமுறைப்படி கட்டுப்படுத்தப்படுகிறது.
உதாரணமாக மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை பங்கு சந்தைகள்.
61.
உற்பத்தி பொருட்கள் அல்லது நுகர்வு பொருட்கள் போன்றவை வாங்குதல் மற்றும் விற்பனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் சந்தை பொருட்கள் சந்தையாகும்.
62.
(i) மின்னணு கற்றல் முறை என்பது பாரம்பரிய பயிற்சி வகுப்பறையில் அல்லது அலுவலகத்தில் தொழில்நுட்ப செயல்முறையை பயன்படுத்துவதாகும்.
(ii) அலுவலகம் மின்னணு கற்றல் கூட பெரும்பாலும் இணையவழி கற்றல் அல்லது வலைபக்க அடிப்படையிலான பயிற்சியை குறிக்கிறது.
63.
பயிற்சி என்பது புதிய திறமையை அதிகரிப்பது, சிக்கலை தீர்ப்பதற்கான நுணுக்கத்தினை அறிவது மற்றும் தொழில் நுட்ப அறிவு ஆகியவற்றை மேம்படுத்தும் செயல் ஆகும். பயிற்சி என்பது அவர்களின் நடத்தை வழிகாட்டி விதிகள் மற்றும் விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வை தருகிறது.
64.
(i) பணியமர்த்தல் என்பது புதிய பணியாளர்களை பணியில் நியமித்தல், பதவி உயர்வு, பணியிட மாறுதல் அல்லது ஏற்கனவே உள்ள பணியாளரை பதவி இறக்கம் செய்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
(ii) சரியான நபருக்கு சரியான வேலைவாய்ப்பை அளிக்கும் செயல்முறையே பணியமர்த்தல் என்று அழைக்கப்படுகிறது.
65.
(i) தேர்வு நடவடிக்கையில் அடுத்த நிலை நேர்காணல் ஆகும். இது 'வொயர்' எனும் பிரெஞ்ச் வார்த்தையிலிருந்து வந்ததாகும். இதன் பொருள் 'மற்றவரைக் காணல்' என்பதாகும்.
(ii) தேர்ந்தெடுப்பவர் மற்றும் தேர்ந்தெடுக்கப்படுபவர் இருவரும் முகத்திற்கு முகம் பார்த்து அறிந்து உரையாடுவதை குறிக்கிறது.
66.
1. கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று நல்ல கல்வித் தகுதியடைய விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
2. நேரம், செலவு போன்றவைகள் இதன்மூலம் சேமிக்கப்படுகின்றது.
67.
(i) பதவி உயர்வு - பணிமூப்பு மற்றும் தகுதியின் அடிப்படையில் பணியாளர்கள் நிறுவன அமைப்பின் படிநிலையில் உள்ள கீழ்மட்ட நிலையிலிருந்து மேல்மட்ட நிலைக்கு சென்று பணி புரிய வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
(ii) தக்கவைத்தல் - மேலாண்மை விருப்பப்படி, வயது முதிர்வு ஓய்வு பிறகும் ஓய்வூதியம் பெறும் பணியாளர்களை நிறுவன தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.
68.
ஒரு நிறுவனத்தில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு பொருத்தமான நபர்களைத் தேர்ந்தெடுக்கும் பணி செயல்முறை ஆட்சேர்ப்பு எனப்படுகிறது.
69.
70.
1) நிரந்தரக் கணக்கு எண்
2) வாக்காளர் அட்டை
3) கடவுச் சீட்டு
4) ஓட்டுநர் உரிமம்
5) வங்கி செல்லேடு
6) வருமான வரி படிவங்கள்
7) மின்கட்டண ரசீது
8) தொலைபேசிக் கட்டண ரசீது மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகள் வழங்கிய புகைப்படம் ஒட்டிய அடையாளச் சான்றிதழ்கள் சட்டரீதியான அல்லது ஒழுங்குமுறை ஆவணங்கள் போன்றவை அடையாள ஆதாரங்களாகும்.
9) சட்டரீதியான அல்லது ஒழுங்குமுறை ஆவணங்கள்
71.
(i) புறத்தோற்றமற்ற பத்திரக் கணக்கு என்பது ஒருவர் மின்னணு அல்லது புறத்தோற்றமற்ற வடிவத்தில் வாங்கக்கூடிய அனைத்து பங்குகளையும் குறிக்கிறது.
(ii) புறத்தோற்றமற்ற பத்திரக் கணக்கு, சாதாரண வங்கிக் கணக்கைப் போலவே பங்குகள், பத்திரங்கள், அரசாங்கப் பத்திரங்கள், பரஸ்பர நிதிகள் மற்றும் பரிமாற்ற வர்த்தக நிதிகள் போன்றவைகளை வைத்துள்ளது.
72.
(அ) நமது மூலதனச் சந்தையை ஒழுங்குபடுத்தவும் மற்றும் கட்டுப்படுத்தவும் இந்தியாவில் உருவாக்கப்பட்ட உயர் அமைப்பு இந்திய பத்திர மற்றும் மாற்றங்களின் வாரியம் செபி ஆகும்.
(ஆ) இது இந்திய அரசால் 1966 ல் உருவாக்கப்பட்டது ஆனால் 1992 ஆம் ஆண்டில் சட்டமுறை அதிகாரம் பெற்றது.
73.
(i) 1874 ஆம் ஆண்டு இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட முதல் பங்குச் சந்தை அமைந்த இடத்திற்கு தலால் தெரு என்று பெயர்.
(ii) தலால் என்ற வார்த்தைக்கு மராத்தி மொழியில் தரகர் அல்லது இடைத்தரகர் என்று பொருள்.
(iii) இங்கு இந்தியாவின் புகழ்பெற்ற பங்குச்சந்தையான பம்பாய் பங்குச் சந்தை மற்றும் பிற மதிப்புமிக்க நிறுவனங்களும் உள்ளன.
74.
(i) இந்தியாவில் பங்கு மாற்றகங்களில் நான்கு வகையான ஊக வணிகர்கள் செயல்படுகின்றனர்.
(ii) அவர்கள் காளை, கரடி, கலைமான், முடவாத்து என்று அழைக்கப்படுகின்றனர்.
75.
(i) தரகர்கள், கழிவு முகவர் ஆவர். பத்திரங்களை வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்குமிடையே இடைநிலையாளர்களாகத் தரகர்கள் செயல்படுகின்றனர்.
(ii) இவர்கள் தனக்காகப் பத்திரங்களை வாங்கி விற்பதில்லை.
76.
பங்குச் சந்தை என்பது பெரு நிறுவன மற்றும் பிற பத்திரங்களை வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சந்தையாகும். இங்கே, பத்திரங்கள் சில நன்கு வரையறுக்கப்பட்ட விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் வாங்கப்பட்டு விற்கப்படுகின்றன.
77.
அரசு அல்லது தங்கமுனை பத்திரங்களை வாங்கவும் விற்கவும் கூடிய ஒரு சந்தைக்கு 'அரசு பத்திரங்கள் சந்தை' என்று பெயர்.
78.
வைப்புச் சான்றிதழ் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் குறுகிய கால வைப்பு ஆவணமாகும்.
79.
மூலதனச் சந்தையின் ஈடுபடுபவர்கள் தனிநபர்கள், நிறுமங்கள், அரசு வங்கிகள், மற்றும் இதர நிதி நிறுவனங்கள் போன்றவர்களை உள்ளடக்கியுள்ளது.
80.
(i) சிறு முதலீட்டாளர்களின் சேமிப்புகளை பெரிய முதலீடாக மாற்றும் நிதி நிறுவனங்களையே பரஸ்பர நிதி என்கிறோம்.
(ii) பரஸ்பர நிதி நிறுவனம் பங்குதாரர்களிடமிருந்து பெற்ற நிதியினை முதலீடு செய்வதற்கு அந்த முதலீட்டிலிருந்து பெற்ற பலனை பங்குதாரர்களுக்கு அளிக்கிறது.
81.
82.
(i) மூலதனச் சந்தை என்பது நிதி பத்திரங்களான பிணையங்கள், மற்றும் பங்குகளின் வர்த்தகத்தில் ஈடுபடும் வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் கூடும் ஒரு சந்தை ஆகும்.
(ii) தனிநபர் மற்றும் நிறுவனங்கள் போன்ற பங்கேற்பாளர்களால் வாங்குதல் மற்றும் விற்றல் மேற்கொள்ளப்படுகிறது.
83.
கடன் கருவிகளை வர்த்தகம் செய்வதற்கான நிதிச் சந்தை கடன் சந்தை ஆகும். அரசு பத்திரங்கள் (அ) பிணையங்கள், நிறுவன கடனீட்டு பத்திரங்கள் போன்றன.
84.
ஆவணங்களை வழங்கலும், ரொக்கம் பெறுதலும் உடனடியாக நடைபெறும் சந்தை உடனடிச் சந்தை ஆகும். அதாவது தீர்வு உடனடியாக நடைபெறுகிறது.
85.
எந்த ஒரு சந்தையில் நிதி கோரல்கள், சொத்துக்கள் மற்றும் பத்திரங்கள் போன்ற நிதிக் கருவிகள் வியாபாரம் செய்யப்படும் சந்தை "நிதிச் சந்தை" எனப்படும்.
86.
1. ஒரு அமைப்பில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் திறம்பட மற்றும் சுய ஈடுபாட்டுடன் பங்கு வகிக்கும் ஒரு நிர்வாக முறையே குறியிலக்கு மேலாண்மை ஆகும்.
2. குறியிலக்கு மேலாண்மையானது, நிறுவனத்தின் குறிக்கோள்களுடன் ஒரு தனி நபரின் குறிக்கோள்களை ஒன்றிணைத்துச் செல்கிறது.
87.
1. அனைத்து தனிநபர்களுடைய திறன்களை உள்ளடக்கிய செயல்களின் ஒத்திசைவு ஆகும்.
2. ஒரு நிறுவனத்தின் குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்கு அனைத்து செயல்பாடுகளும் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
88.
1. திட்டமிடுதல் என்பது மேலாண்மையின் செயல்பாடுகளில் முதன்மையானது ஆகும். திட்டமிடுதல் இல்லாமல் எந்த ஒரு காரியமும் செய்ய முடியாது.
2. திட்டமிடுதல் என்பது வருங்கால தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு ஆக்கபூர்வமான மதிப்பீடு ஆகும்.
89.
ஒரு உயர் அலுவலரால் திறமையாக மேலாண்மை செய்யப்படும் கீழ்ப்பணியாளர்களின் எண்ணிக்கையை மேலாண்மையின் வீச்செல்லையை குறிக்கின்றது. மேலாண்மையின் பரப்பளவு என்பது மேலாளரின் கீழ் நேரடியாகப் பணியாற்றும் கீழ்பணியாளர்களின் அளவு ஆகும்.
90.
(i) ஒரு நிறுவனத்தின் மேலாண்மைப் பணியை ஏற்பவர் மேலாளர்.
(ii) ஒரு மேலாளர் என்பவர் நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் பணி சார்ந்த செயல்பாடுகள் என இரண்டினையும் மேற்கொள்கிறார்.
91.
1) கணக்கியல்
2) வணிகச்சட்டங்கள்
3) உளவியல்
4) புள்ளியியல்
5) பொருளியல்
6) தரவு செயலாக்கம் போன்றவை மேலாண்மைக் கருவிகளாகும்.
92.
ஒரு வணிக நிறுவனத்தின் மேலாண்மை செய்பவர்கள் மற்றும் விஷயங்களை நிர்வகிப்பதற்கான ஒழுங்கமைக்கப்பட்ட வழி மேலாண்மை என்று அழைக்கப்படுகின்றது.
93.
பங்குநர்கள் கூட்டங்கள்: நிறும பங்குநர்களால் நடத்தப்படும் கூட்டங்கள் பங்குனர்கள் கூட்டம் என அழைக்கப்படுகிறது. நிறும பங்குநர் கூட்டங்களை மூன்று வகையாக பிரிக்கலாம்.
(i) சட்டமுறை கூட்டம்: நிறுமச் சட்டப்படி ஒவ்வொரு பொது நிறுமமும் தொழில் தொடங்கிய தேதியிலிருந்து ஒரு மாதத்திலிருந்து 6 மாதத்திற்குள் பங்குனர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் இதனை சட்டமுறை கூட்டம் என அழைக்கப்படுகிறது.
(ii) ஆண்டுப் பொதுக்கூட்டம் : ஒவ்வொரு ஆண்டும் நிறுமத்தில் இயல்பான நடவடிக்கை குறித்து ஆலோசிக்க கூட்டப்படும் கூட்டம் ஆண்டு பொதுக்கூட்டம் ஆகும்.
(iii) சிறப்புக் கூட்டம்: சட்டமுறைக் கூட்டம் மற்றும் ஆண்டு பொதுக் கூட்டம் ஆகியவை நிறுமத்தின் இயல்பான சாதாரண கூட்டங்கள் ஆகும்.
(iv) இயக்குநர் அவைக் கூட்டம் : நிறுமத்தை நிர்வகிக்கும் பொறுப்பு இயக்குநரவையிடம் உள்ளதால் இயக்குநர்கள் அடிக்கடி கூடி பல வியாபார நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க வேண்டும். இதற்காக இயக்குநரவையால் கூட்டப்படும் கூட்டங்கள் இயக்குநரவை கூட்டங்கள் ஆகும்.
(v) வாரியக் குழுக் கூட்டம்: பட்டியலிடப்பட்ட நிறுமமும், ₹10 கோடி அல்லது அதற்கு மேல் பங்கு முதலுடைய ஒவ்வொரு பொது நிறுமம் தணிக்கை குழு கூட்டத்தை கூட்ட வேண்டும். இக்கூட்டம் ஆண்டுக்கு குறைந்தது நான்கு முறை கூட்ட வேண்டும்.
சிறப்புக் கூட்டங்கள்:
(i) வகுப்பு கூட்டம்(Class Meeting) Meetings of Particular Share or Debenture Holders
ஒரு குறிப்பிட்ட வகையான பங்குகள் அல்லது கூட்டங்கள் குறிப்பிட்ட வகையான கடனீட்டுப்பத்திரங்களும், கூட்டப்படும் கூட்டம் வகுப்பு கூட்டம் ஆகும். சாதாரண பங்குகள் (எ) முன்னுரிமை பங்குகள் கூட்டப்படும் கூட்டத்தை கூறலாம்.
(ii) கடனீந்தோர் கூட்டம் : நிறுமக் கூட்டங்களை போல இது ஒரு நிறும கூட்டம் அல்ல இருப்பினும், இது ஒரு புதிய கடன் கொள்கையை அறிமுகம் செய்யும் போது அல்லது கடனீந்தோர்கள் தொடர்பான சில வழக்குகளை பேசி முடிவு எடுக்கவும், கடனீந்தோர்களுடன் சில ஒப்பந்தங்கள் மேற்கொள்ளவும் இவ்வகை கூட்டங்கள் கூட்டப்படுகிறது.
94.
I. சட்டப்பூர்வமான பணிகள் :
நிறுமச்சட்டம் 2013ன் படி கீழ்க்கண்டவை நிறுமச் செயலரின் சட்டப்பூர்வமான பணிகள் ஆகும். அவை
(i) நிறுமத்தின் அங்கீகாரம் தேவைப்படும் அனைத்து இடங்களிலும் நிறுமத்தின் சார்பாக கையொப்பம் இடுவது.
(ii) பங்குகள், இயக்குநர்கள் மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்பான ஆவணங்களை பராமரித்தல்.
(iii) பங்கு முதல் தொகையை அதிகரிப்பது குறித்த அறிவிப்பை நிறும பதிவாளரிடம் கொடுத்தல்.
(iv) பங்கு ஒதுக்கீடு செய்த இரண்டு மாதத்திற்குள் பங்கு ஒதுக்கீடு சான்றிதழை அளித்தல்.
(v) ஆண்டு அறிக்கையில் கையொப்பமிடுதல்.
(vi) தொழில் தொடங்க சான்றிதழை பெற தேவையான உறுதிமொழிகளை அளித்தல்.
(vii) ஒவ்வொரு பங்குனர்களுக்கும் ஆண்டு பொதுக்கூட்டம் குறித்த அறிவிப்பை அனுப்புதல்.
(viii) சட்டமுறை ஏடுகளை தயாரித்தல்.
(ix) ஆண்டு பொதுக்கூட்டம் மற்றும் இயக்குநரவை கூட்டங்களுக்கான கூட்ட நிகழ்ச்சிக் குறிப்பை 30 நாட்களுக்குள் தயாரித்தல்.
(x) கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கோப்பிலிட்டு நிறும பதிவாளருக்கு அனுப்புதல்.
(xi) நிறும கலைப்பின் போது நிதிநிலை அறிக்கைகளை தயாரிக்க உதவி செய்தல்.
II. சட்டப்பூர்வமற்ற பிற பணிகள் :
(i) இயக்குநருக்கு ஆற்ற வேண்டிய முகமைப் பணிகள் :
a) நிறுமத்திற்கு தேவையான கொள்கைகளை வகுத்து, பல முடிவுகளை எடுப்பதற்கு தேவையான தகவல்களையும் அறிவுரைகளையும் வழங்குதல்.
b) இயக்குநர்களின் வருகை பதிவேட்டை பராமரிப்பது, கூட்டங்கள் கூட்டுவது.
c ) கூட்ட நிகழ்ச்சி நிரல் மற்றும் கூட்ட குறிப்பு தயாரிப்பது தொடர்பாக கூட்டத் தலைவருடன் கலந்தாலோசித்து பல தீர்மானங்களை தயாரித்தல்.
d ) இயக்குநரவை அலுவலர்களுடன் தகவல் தொடர்பை ஏற்படுத்தி ஆவணங்களை கோப்பிடல் மற்றும் பதிவேடுகளை தயாரித்து அளிப்பது.
ii) பங்குனர்களுக்கு ஆற்ற வேண்டிய முகமைப் பணிகள் :
a) நிறும பங்குனர்களின் உரிமை மீறப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டியது.
b) பங்கு ஒதுக்கீட்டு கடிதம், கூட்ட அழைப்பு கடிதம், வருத்த கடிதம், பங்கு சான்றிதழ் பங்கானைகளை அனுப்புவது மற்றும் கடனீட்டுப்பத்திரத்தை அளிப்பது.
c )பங்குனர்களின் கூட்ட நாள், இடம் மற்றும் நிகழ்ச்சி நிரல் போன்ற விவரங்கள் தாங்கிய அறிக்கையை பங்குனர்களுக்கு அனுப்புதல்.
d) இயக்குநர்களின் சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்கு இயக்குநரவை சார்பாக கலந்தோசித்து விசாரித்து உரிய பதிலை அளிப்பது.
(iii) அலுவலக ஊழியர்கள் மற்றும் பணியாட்களுக்கு ஆற்றும் சேவைகள் :
a) நிறும அலுவலக ஊழியர்களில் தலை சிறந்த மூத்த ஊழியர் செயலர்.
b) அலுவலக செயல்பாடுகளை இயல்பாக செயல்பட செய்வது.
c) அலுவலக செயல்பாடு சார்ந்த அனைத்தையும் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படுத்த வேண்டியது.செயலரின் கடமை.
95.
சட்டப்படி செய்ய வேண்டிய செயல்களைச் செய்யாத போதும் கீழ்க்காணும் மோசடிக்கு உடந்தையாக இருந்திருந்தால் இயக்குனர்களுக்கு அபராதம் மற்றும் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
i) தகவலறிக்கையில் தவறான தகவல்களை அளித்தல்.
ii) பங்கு ஒதுக்கீட்டிற்கான தகவல்களை உரிய படிவத்தில் கம்பெனி பதிவாளருக்கு சமர்ப்பிக்க தவறுதல்.
iii) பங்குகளை ஒருங்கிணைந்த பங்குகளாக மாற்றியதற்கான அறிவிப்பை சமர்ப்பிக்க தவறுதல்.
iv) பங்கு சான்றிதழ் மற்றும் கடன் பத்திர சான்றிதழ் வழங்க தவறுதல்.
v) உறுப்பினர்களுக்கான பதிவேடு மற்றும் கடன் பத்திரதாரர்களுக்கான பதிவேடுகளை பராமரிக்க தவறுதல்.
vi ) ஆண்டு நிறும பொதுக் கூட்டத்தை கூட்ட தவறுதல்.
vii) நிதிநிலை அறிக்கை வெளியிட அல்லது வழங்கிட தவறுதல்.
viii) 15க்கும் மேற்பட்ட கம்பெனிகளில் இயக்குனராக பணியாற்றியவர்களை வைத்திருத்தல்.
96.
I. சட்டப்பூர்வமான அதிகாரங்கள் :
(i) பங்குதாரர்களிடமிருந்து வர வேண்டிய பங்குகள் மீதான செலுத்தப்படாத அழைப்புகளை பெறுவதற்கான அதிகாரம்.
(ii) கடனீட்டுப் பத்திரங்கள் வெளியிடுவதற்கான அதிகாரம்.
(iii) கடனீட்டுப் பத்திரம் தவிர இதர வழிகளில் கடன் வாங்குவதற்கான அதிகாரம்.
(iv) நிறுமத்தின் நிதியை முதலீடு செய்யும் அதிகாரம்.
(v) புதிய கடன்களை உருவாக்கும் அதிகாரம்.
(vi) நிறுமத்தின் வியாபாரத்தை பல்வகைப்படுத்தும் அதிகாரம்.
(vii) ஒருங்கிணைத்தல், ஒன்று சேர்த்தல் மற்றும் மறு சீரமைப்பு செய்தல் போன்றவற்றை அங்கீகரிப்பதற்கான அதிகாரம்.
(viii) நிதிநிலை அறிக்கை மற்றும் இயக்குனர் குழுவின் அறிக்கைகளை அங்கீகரிப்பதற்கான அதிகாரம்.
II . மேலாண்மை அல்லது நிர்வாக ரீதியான அதிகாரங்கள்:
i) மூன்றாம் நபருடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் அதிகாரம்.
ii) பங்குகளை ஒதுக்கீடு செய்தல், திரும்பப் பெறுதல் மற்றும் பங்குகளை மாற்றுவதற்கான அதிகாரம்.
iii) கடன் பத்திரங்களை வெளியிட வேண்டிய விதிமுறை களையும் நிபந்தனைகளையும் முடிவு செய்யும் அதிகாரம்.
iv) புதிய கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கும்,வணிகத்தை செயல்படுத்துவதற்கும் வழிமுறைகளை உருவாக்க அதிகாரம்.
v) நிர்வாக இயக்குனர், மேலாளர் மற்றும் கம்பெனி செயலரை நியமனம் செய்யும் அதிகாரம்.
vi) தன் கீழ் பணியாற்றும் ஊழியர்களை மேற்பார்வை செய்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்.
III. தீர்மானத்தின் மீது இயக்குனர் அதிகாரங்கள் :
i) நிறுமனத்தின் சொத்தை விற்க அல்லது குத்தகைக்கு விடும் உரிமை
ii) கடனை திரும்ப செலுத்த இயக்குனருக்கு தேவையான காலத்தை அனுமதிப்பது.
iii) செலுத்தப்பட்ட மூலதனம் மற்றும் காப்புகள் ஆகியவற்றின் கூட்டு தொகைக்கு மேல் கடன் வாங்கும் அதிகாரம்,
iv) ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஒரு நபரை முகவராக நியமனம் செய்தல்.
v) மிகை ஊதிய பங்குகளை வெளியிடுதல் மற்றும் மறுசீரமைப்பு செய்தல்.
vi) மூன்று ஆண்டுகளின் சராசரி இலாபத்தில் 5% அல்லது ரூ.50,000 இதில் எது அதிகமோ அத்தொகையை தொண்டு நோக்கங்களுக்காக பங்களிப்பு செய்வதற்கான அதிகாரம்.
IV. இதர அதிகாரங்கள் :
i) சாதாரண காலிப் பணியிடங்களை நிரப்பும் அதிகாரம்.
ii) நிறும முதல் தணிக்கையாளரை நியமிக்கும் அதிகாரம்.
iii) மாற்று இயக்குனர், கூடுதல் இயக்குனர் மற்றும் நிர்வாக இயக்குனர்களை நியமிக்கும் அதிகாரம்.
iv) முக்கிய நிர்வாக அல்லது மேலாண்மை அதிகாரிகளை நீக்கும் அதிகாரம்.
v) பங்குகளுக்கான இடைக்கால மற்றும் இறுதி பங்காதாயத்தை பரிந்துரை செய்யும் அதிகாரம்.
vi) நிறும கடன் தீர்க்கும் நிலைமையை அறிவிக்கும் அதிகாரம்.
vii) அரசியல் அமைப்பிற்கு பங்களிப்பு செய்யும் அதிகாரம்.
97.
இயக்குநர் தகுதிகள் : நிறுமம் கம்பெனி செயல்முறை விதிகளுக்கு வெளிகளில் கூடிய உள்ளவாறு தேவையான தகுதிகளை பெற்றிருத்தல் வேண்டும்.
பொதுவாக ஒரு இயக்குநர், நிதி, சட்டம், மேலாண்மை, விற்பனை, சந்தைப்படுத்தல், நிர்வாகம், ஆராய்ச்சி, பெருநிறும ஆளுமை, தொழில்நுட்ப செயல்பாடுகள் அல்லது நிறுமத்தின் வணிக தொடர்பான பிற துறைகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துறைகளில் பொருத்தமான திறன்கள், அனுபவம் மற்றும் அறிவைக் கொண்டிருக்க வேண்டும்.
(i) ஒரு இயக்குநர் சரியான மனநிலை உடைய நபராக இருக்க வேண்டும்.
(ii) ஒரு இயக்குநர் கம்பெனி செயல் முறை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள தகுதி பங்குகள் வைத்திருக்க வேண்டும்.
(iii) ஒரு இயக்குநர் தனிநபராக இருத்தல் வேண்டும்.
(iv) நல்ல நிதிநிலை உடையவராக இருத்தல் வேண்டும்.
(v) நீதிமன்றத்தால் எந்தவிதமான குற்றத்திற்காகவும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டாமல்/ தண்டிக்கப்படாமல் இருத்தல் வேண்டும்.
98.
கடன் பத்திரங்கள் வெளியிடும் முறை மற்றும் நிபந்தனைகள் அடிப்படையில் பல விதங்களாக பிரிக்கலாம். அவை,
1. மாற்று அடிப்படை:
அ) மாற்ற இயலா கடன் பத்திரங்கள் :
இதை கடனீட்டு பத்திரமாக மட்டுமே வைத்திருக்க முடியும், சாதாரண பங்குகளாக மாற்ற இயலாது.
ஆ) பகுதி மாற்றத்தக்க கடன் பத்திரங்கள்:
கடனீட்டு பத்திரத்தை வெளியிடுபவர் அறிவிக்கும் சமயம், கடனீட்டு பத்திரத்தின் ஒரு பகுதியை மட்டும் சாதாரண பங்குகளாக மாற்ற இயலும்.
இ) முற்றிலும் மாற்றத்தக்க கடன் பத்திரங்கள் :
கடனீட்டு பத்திரத்தை வெளியிடுபவர் அறிவிக்கும் சமயம், கடனீட்டு பத்திரம் முழுமையாக சாதாரண பங்குகளாக மாற்ற இயலும்.
ஈ) தேர்வின்படி மாற்றத்தக்க கடன் பத்திரங்கள் :
வெளியீட்டாளர் முடிவு செய்யும் விலையிலோ / சமயத்திலோ கடனீட்டு பத்திரம் பங்குகளாக மாற்ற முடியும்.
2. பிணையங்கள் (அ) ஈட்டின் அடிப்படை:
அ) பிணையம் தரப்பட்ட கடன் பத்திரம்:
நிறுமத்தின் சொத்துக்கள் மீது பற்றுப் பொறுப்பு ஏற்படுத்தி வெளியிடப்படுவது.
இந்திய நிறுமச்சட்டம் 2013 பிரிவு 71 (3)ன்படி மத்திய அரசு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும்.
ஆ) பிணையம் தரப்படாத கடன் பத்திரம்:
நிறுமத்தின் சொத்துக்கள் மீது எவ்வித பற்றுப் பொறுப்பும் ஏற்படுத்தப்படாமல் வெளியிடப்படுவது.
3. மீட்பு அடிப்படை :
அ) மீட்கக்கூடிய கடன் பத்திரம் :
குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு பிறகு இவ்வகை கடன் பத்திரங்களை திரும்ப மீட்டுக் கொள்ளலாம்.
ஆ) மீட்க இயலா கடன் பத்திரம் :
நிறும வாழ்நாளில் இவ்வகையான கடனீட்டு பத்திரங்களை மீட்க இயலாது.
4. பதிவு செய்தல் அடிப்படை :
அ) பதிவு செய்யப்பட்ட கடனீட்டு பத்திரங்கள் :
குறிப்பிட்ட நபர்களின் பெயர்களை நிறும ஏட்டில் பதிவு செய்து நிறுமம் கடனீட்டு பத்திரங்களை வெளியிடுவது.
ஆ) கொணர்பவர் / பதிவு செய்யப்படாத பத்திரங்கள் :
கடனீட்டு பத்திரங்களை வைத்திருப்பவருக்கு அதன் மீதான உரிமை உண்டு.
99.
| வ.எண் | பங்குகள் | கடன் பத்திரம் |
| 1. | இது நிறுமத்தின் முதலில் ஒரு பங்கு ஆகும். | இது சட்டப்படி ஒரு கடன் ஆகும். |
| 2. | பங்குதாரர்கள் நிறுமத்தின் உறுப்பினர்கள்/ உரிமையாளர்கள் ஆவர். | கடன் பத்திரதாரர்கள் நிறுமத்தின் கடனீந்தோர்கள் ஆவர். |
| 3. | பங்குதாரர்கள் மாறுபடும் விலையில் பங்காதாயம் பெறுவர். | கடன் பத்திரதாரர்கள் நிலையான விதத்தில் வட்டி செலுத்தி அதற்கான பங்காதாயம் பெறுவர். |
| 4. | பங்குகளில் எந்தவிதமான விதிப்பும் கிடையாது. | நிறுமத்தின் சொத்துக்களின் மீது கடன் பத்திரங்கள் விதிக்கப்படும். |
| 5. | பங்குகள் தள்ளுபடியில் ஒரு குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு மட்டுமே வெளியிட முடியும். | சாதாரண பத்திரங்களை தள்ளுபடியில் வெளியிட எந்த நெறிமுறைகளும், தடைகளும் இல்லை. |
| 6. | இயக்குநர் அவையின் முடிவின் அடிப்படையிலும், இலாபத்தின் அடிப்படையிலும் பங்காதாய வீதம் மாறும். | கடன் பத்திரங்களின் வட்டி வீதம் நிலையானது |
100.
101.
தொழில் முனைபவரின் சிறப்பியல்புகள்:
(i) தொழில் துணிகர உணர்வு : தொழில் முனைபவர் தான் மேற்கொண்ட தொழிலில் ஏற்படும் இடர்களை துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும். வினையை நடத்தி வரும்போது ஏற்படும் இயற்கையான ஏமாற்றங்கள் அல்லது தோல்விகள் அவரின் ஆர்வத்தை சிதைக்கா வண்ணம் துணிவுடன் செயல்படுவோர் ஆவார்.
(ii) தன்னம்பிக்கை : தன்னம்பிக்கை ஒரு மனிதனுக்கு அழகு ஏற்படுத்துகிறது. எதிர்மறை உணர்வுகளான அசௌகரியங்கள், ஏமாற்றங்கள், தோல்விகள் மற்றும் தொல்லைகள் தொழில் முனைபவரது மன உறுதியை குலைக்கக் கூடாது.
(iii) நெகிழ்வு தன்மை : மாறும் சூழ்நிலைகட்கு ஏற்ப தொழில் முனைபவன் தன் முடிவை அல்லது நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளும் நெகிழ்வு தன்மையை கடைப்பிடிக்க வேண்டும். நெகிழ்வுத் தன்மையற்றவர்கள் தொழில் முனைவில் வெற்றி காண்பது இயலாத ஒன்றாகும்.
(iv) புதுமை புகுத்தல் : தொழில் முனைபவர் புதுமை படைப்பாளராக இருந்திட வேண்டும். ஏதேனும் ஒரு புதுமையைப் புகுத்தி சந்தையில் நிரந்தரமான இடத்தை பிடிக்க வேண்டும். புதுமை என்பது புத்தம் புதிய பொருளாகவோ, புதுமைப் பண்புகளை பொருளில் நுழைப்பதோ, புதிய சந்தையை உருவாக்குவதோ, புதிய கச்சாப் பொருளைக் கொண்டு பொருளை உற்பத்தி செய்வதோ, புதிய உற்பத்தி முறையை கையாள்வதோ மற்றும் புதிய நுட்பத்தை மேற்கொள்வது.
(v) வளத்தை திரட்டுபவர் :
1. தான் மேற்கொண்ட செயலை செயலாக்கிட தொழில் முனைபவர் புலனாகக்கூடிய மற்றும் புலனாகாத உட்பொருட்களையும் ஒன்றிணைப்பவர் ஆவார்.
2. தொழிலை துவக்கிட இடு பொருளை வாங்குதல், மனித வளத்தை திரட்டுதல், நிதியை புரட்டுதல், போன்ற நடவடிக்கைகளை நாட்டின் மூலை முடுக்குகளுக்கு சென்று சேரும் வகையில் பொருளை உற்பத்தி சந்தையிடுகைக்கு கொண்டு சேர்க்கும் செயலை செய்பவர் ஆவார்.
(vi) கடின உழைப்பு: தொழில் முனைபவர் தான் மேற்கொண்ட செயலின் நோக்கத்தை அடைய அரும்பாடு படவேண்டும். தொல்லைகள், இடர்கள், அசௌகரியங்கள், இன்னல்கள் மற்றும் ஏமாற்றங்கள் என அவ்வப்போது ஏற்படும் இடர்களை தளராமல் மேற்கொள்ளுதல். தலைவிதியின் மீது பழிபோடுவதோ அல்லது பிறவற்றின் மீது பழி சுமத்தி சுகம் காண்பவராகவோ இருக்கக் கூடாது.
102.
| வ.எண் | வேறுபாடு | மாற்றுச்சீட்டு | காசோலை |
| 1 | வரையப்படுவது | மாற்றுச் சீட்டு வங்கி உட்பட ஒரு குறிப்பிட்ட நபர் மீது வரையப்படுவது. | ஒரு குறிப்பிட்ட வங்கியர் மீது வரையப்படுவது. |
| 2 | செலுத்தப்படுவது | கேட்டவுடனோ அல்லது குறிப்பிட்ட காலமுதிர்வின் போதோ தருமாறு எழுதப்படுவது. | எப்போதும் கேட்டவுடனே பணம் கொடுக்குமாறு எழுதப்படுவது. |
| 3 | ஏற்பு | கால மாற்றுச்சீட்டைப் பொறுத்தவரையில் அதை எழுதப் பெற்றவர் ஏற்க வேண்டும். | காசோலையை ஏற்பு செய்திட தேவையில்லை. |
| 4 | சலுகை நாள் | மாற்றுச்சீட்டின் முதிர்வு காலம் முடிந்த நாளிற்கு பின் பணம் தர மூன்று சலுகை நாட்கள் வழங்கப்படுகிறது. | காசோலைக்கு பணம் தர வங்கிக்கு சலுகை நாட்கள் தரப்படுவதில்லை. |
| 5 | படிகள் | அந்நிய மாற்றுச்சீட்டு மூன்று படிகள் தயாரிக்கப்படுகிறது. | காசோலைக்கு பணம் பெற படிகள் எடுக்க வேண்டிய அவசியமில்லை |
| 6 | வருவாய்த்தலை | மாற்றுச்சீட்டில் வருவாய்த்தலை அதன் மதிப்பிற்கு ஏற்ப ஒட்ட வேண்டும். | காசோலையில் வருவாய்த்தலை ஒட்ட வேண்டியதில்லை. |
103.
| வ.எண் | வேறுபடுத்தும் கூறுகள் | நிபந்தனைகள் | நம்புறுதிகள் |
| 1. | பொருள் | ஒப்பந்தத்தின் கருப் பொருளாகத் திகழ்வது. | நம்புறுதி ஒப்பந்தத்திற்குத் துணையாக இருக்கிறது. |
| 2. | முக்கியத்துவம் | ஒப்பந்தத்தில் நிபந்தனையை மீறுவது ஒப்பந்தத்தை மீறுவதாகக் கொள்ளப்படுகிறது. | நம்புறுதியை மீறுவது ஒப்பந்தத்தினை மீறுவதற்கு ஒப்பாகாது. |
| 3. | உரிமை மாற்றம் | நிபந்தனை நிறைவேற்றாமல் உரிமை மாற்றம் நிகழ முடியாது. | நம்புறுதியை நிறைவேற்றாமல் உரிமை மாற்றம் நிகழ முடியும். |
| 4. | பரிகாரம் / தீர்வு | நிபந்தனை மீறுவதனால் ஒப்பந்தத்தில் பாதிக்கப்பட்ட நபர் ஒப்பந்தத்தை நீக்கிக் கொள்வதுடன் நட்ட ஈடு கோரும் உரிமையைப் பெறுகிறார். | நம்புறுதியை மீறுவதனால் ஒப்பந்தத்தில் பாதிக்கப்பட்டவர் நட்ட ஈடு கேட்கும் உரிமையை மட்டுமே பெற்றுள்ளார். |
104.
நன்மைகள்
(அ) வெளி நாட்டு முதலீடுகள் அதிகரிப்பு: (Increase in Foreign Investment)
ஒரு நாடு வணிகத்தை தாராளமயமாக்குதலின் மூலமாக அதிக அளவில் வெளிநாடுகளிலிருந்து கவர்ச்சிகரமான முதலீடுகளை பெற முடிகின்றது. அம்முதலீடுகள் மூலமாக உள்நாட்டில் மூலதனத்தை பெருக்குவதோடு அதன் பொருளாதாரத்தை பன்மடங்கு பெருக்குவதற்கு உதவுகிறது.
(ஆ) அந்நிய செலாவணி இருப்பு அதிகரிப்பு (Increase the Foreign Exchange Reserve)
வெளி நாட்டு முதலீட்டிற்கும் அந்நிய செலாவணிக்குமான கட்டுப்பாடுகளை தளர்த்தி மூலதனத்தை எளிதில் பெறுவதற்கு வழிவகை செய்துள்ளது.
(இ) நுகர்வு அதிகரிப்பு : (Increase in Consumption)
தாராளமயமாக்களினால் ஒரு நாட்டில் பயன்பாட்டிற்கு அதிக அளவிலான பொருட்கள் கிடைக்கவும் அதிக உற்பத்திக்கும் வழிவகை செய்கிறது.
(ஈ) விலைக்கட்டுப்பாடு : (Control Over Price)
ஏற்றுமதி இறக்குமதி தீர்வைகளை நீக்குவதால் நுகர்வோருக்கு குறைந்த விலைக்கு பொருட்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தாராளமயமாக்கலினால் இறக்குமதி நாடுகளுக்கு நன்மை விளைவிக்கிறது.
(உ) வெளிநாட்டில் பெறும் கடன்களை குறைக்கிறது (Reduction in external borrowings)
தாராளமயமாக்கலின் மூலம் வெளி நாட்டுக் கடன்களை ஈர்ப்பதன் மூலம் வெளிநாட்டு வர்த்தகக் கடன்களை வாங்கும் வாய்ப்பு குறைகிறது.
குறைபாடுகள்:
(அ) வேலையின்மையை அதிகரித்தல் (Increase in Unemployment)
வர்த்தக தாராளமயமாக்கல் பெரும்பாலும் பொருளாதாரத்தின் சமநிலைக்கு வழிவகுப்பதால் சிறு தொழில்களில் சில வளர்ந்தும் சில சிறு தொழில்களில் சரிவும் ஏற்படுகிறது. இதனால் சில தொழிற்சாலைகள் மூடுகின்ற நிலையால் வேலையில்லா நிலை உருவாகிறது.
(ஆ) உள்நாட்டு தொழில் அலகுகளின் இழப்பு (Loss to Domestic Units)
தாராளமயமாக்கல் கோட்பாட்டில் குறைந்த நுழைவுக் கட்டுப்பாடுகளுடன் வெளிநாட்டு தொழில்கள் பல நாடுகளில் ஊடுருவ சாத்தியம் அதிகம் உள்ளது. இது உள்நாட்டு தொழில்களை அச்சுறுத்துவதுடன் மற்றும் போட்டியை தோற்றுவித்து உள்நாட்டு தொழிலை அடியோடு ஒழிக்கும் சதியாகவும் கருதப்படுகிறது.
(இ) அயல்நாடுகளை சார்ந்திருத்தலை பெருக்கும்:(Increased Dependence of Foreign Nation)
வர்த்தக தாராளமயமாக்கல் என்பது பலம் பொருந்திய பன்னாட்டு நிறுவனங்களிலிருந்து அதிக போட்டிகளை எதிர்கொள்ளும். அது சந்தையை தன் கட்டுபாட்டிற்கு கீழ் கொண்டுவரும் நிலையை உருவாக்க நேரிடலாம்.
105.
1. வளர்ச்சி கட்டத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தின் இயல்பு:
i. நாடுகளை வளர்ந்த, வளரும் மற்றும் பின்தங்கிய நாடுகள் என வகைப்படுத்தலாம்.
ii. வளர்ந்த நாடுகள் - அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, கனடா மற்றும் ஆஸ்திரேலியா. இவை பல கணினி சார்ந்த தொழில் நுட்பங்களை வெற்றிகரமாக ஒருங்கிணைத்துள்ளன.
iii. வளரும் நாடுகள் -இந்தியா, சீனா, பிரேசில், மெக்சிகோ, ஏற்றத்தாழ்வு, அதிக மக்கள் தொகை மெதுவாக தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ளுதல் போன்றவை இவற்றின் தன்மைகள்.
iv) பின்தங்கிய நாடுகள் -மிக குறைந்த அளவிலான தொழில்நுட்ப தத்தெடுப்பு, குறைவான வாழ்க்கை தரம்.
2. பொருளாதார அமைப்பு முறையின் இயல்புகள்:
முதலாளித்துவம் - நாட்டின் அனைத்து வளங்களையும் தனிநபர் அல்லது தனியார் நிறுவனங்கள் சொந்தமாக்கி கொள்ள அரசு கொள்ள அரசு அனுமதி அளித்தல்.
சமதர்மம் (அ) சோசலிசம் - தனியார் துறை மீது அதிக கட்டுப்பாடு.
3. தேசத்தின் பொருளாதாரக் கொள்கை:
நாணயக் கொள்கை, ஏற்றுமதி இறக்குமதிக் கொள்கை, தொழில்துறைக் கொள்கை, வர்த்தகக் கொள்கை, நிதிக்கொள்கை ஆகியவை பொருளாதார சூழலின் பகுதியாக உள்ளது.
4. பொருளாதாரக் குறியீடுகள்:
மொத்த உள்நாட்டு உற்பத்தி, மொத்த தேசிய உற்பத்தி, தேசிய வருமானம், தனிநபர் வருமானம், செலுத்துகை சமநிலை, சேமிப்பு விகிதம் மற்றும் முதலீடுகள் போன்ற பொருளாதார குறியீடு முக்கியமான பகுதியை உருவாக்குகிறது.
5. நிதிசந்தை அபிவிருத்தி:
தொழில்துறை வளர்ச்சி, பணச்சந்தை, மூலதனச்சந்தை, பங்குச்சந்தை, பத்திர சந்தை மற்றும் சிறந்த வங்கியில் அமைப்பு முறை போன்றவற்றின் வெளிப்பாடு.
6. பொருளாதாரக் கட்டமைப்பு:
மூலதன உருவாக்கம், முதலீட்டு முறை, வர்த்தக சமநிலை, தொழிலாளர் உழைப்பின் அழிப்பு மற்றும் தேசிய உற்பத்தியின் கட்டமைப்பு ஆகியவை உள்ளடக்கியது.
சமூக கலாச்சார சூழல்:
1. சமூக நிறுவனங்கள் மற்றும் குழுக்கள்.
2. சமுதாயத்தில் பரவலான குடும்ப அமைப்பு.
3. வணிகத்தில் திருமணத்தின் பங்கு.
4. சமூகத்தின் சாதி அமைப்பு முறை.
5. மக்களின் பழக்க வழக்கம், நம்பிக்கை (மற்றும்) சுயமரியாதை.
6. மக்கள் தொகை காரணிகள்.
7. மக்கள் வாழ்க்கைமுறை, சுவை, விருப்பம் மற்றும் முன்னுரிமைகள்.
106.
நுகர்வோரின் பொறுப்புகள் பின்வரும் வகையில் பட்டியலிடப்படுகின்றன.
(i) விற்பனை ஒப்பந்த சட்டத்தின் விதிகள் மற்றும் நிபந்தனைகளின்படி பொருளுக்கான விலையை நுகர்வோர்கள் செலுத்த வேண்டும்.
(ii) பொருட்களை நுகர்வோரின் இருப்பிடத்தில் வழங்குமாறு விற்பனையாளரைக் கேட்டுக் கொள்வது அவரின் பொறுப்பாகும்.
(iii) ஒப்பந்தச் சட்டத்தின்படி குறித்த நேரத்தில் பொருட்களை நுகர்வோர் பெற்றுக் கொள்ளவில்லையென்றால் அதனால் ஏற்படும் நட்டத்திற்கு அவரே பொறுப்பாவார்.
(iv) நுகர்வோர் பொருட்களைப் பெற்றுக் கொண்டு தாமதமாக விற்பனையாளருக்கு பணம் செலுத்தினாலோ அல்லது பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்திவிட்டாலோ அதற்கான நஷ்டஈடு தர வேண்டியது நுகர்வோரின் கடமையாகும்.
(v) நுகர்வோர் தங்களிடமிருக்கும் பொருட்களை அதன் விதிமுறைகளின்படி மற்றும் முன்னெச்சரிக்கையுடன் அப்பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
(vi) நுகர்வோர் பொருட்கள் மீதான தனது தேவையை தெளிவாக விற்பனையாளரிடம் வெளிப்படுத்த வேண்டும்.
107.
1. நுகர்வோருக்கு எதிரான நேர்மையற்ற வணிக நடைமுறைகளுக்கு நுகர்வோரால் மட்டுமே இறுதியாக முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
2. அரசாங்கம் சட்டங்களை ஏட்டளவில் வைத்துக்கொண்டு இல்லாமல் விதி மீறும் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து நுகர்வோர் நலனை பாதுகாக்க வேண்டும்.
3. நுகர்வோர்கள் விழிப்புணர்வுடனும் நுகர்வோரை ஒன்றிணைத்து நுகர்வோர் இயக்கமாக செயல்பட்டு நுகர்வோர் நலனை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
4. அப்பாவி நுகர்வோர்களிடம் நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள் பற்றி எடுத்துக்கூறி அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
நுகர்வோர் நடவடிக்கை குழுக்கள் செயல்படுத்துதல் :
1. கிராம அளவில் நுகர்வோர் நடவடிக்கை குழுக்களை உருவாக்குதல் - நுகர்வோர் உரிமைகள் குறித்து கல்வி புகட்டுதல் வேண்டும்.
2. நுகர்வோர் குறைகள் மற்றும் புகார்கள் மீது உரிய விசாரணை செய்ய மற்றும் அவற்றிற்கு தீர்வு காண நுகர்வோர் பாதுகாப்பு முகமைகள் மூலம் அமைப்பை உருவாக்குதல் வேண்டும்.
3. வணிக நிறுவனங்களை தொழில்துறை விதிகளின்படி ஒழுங்குபடுத்த வேண்டும்.
4. தன்னார்வ நுகர்வோர் குழுக்கள் நுகர்வோர் சட்டங்கள் குறித்த தகவல்களை ஊடகங்கள் வாயிலாக நுகர்வோருக்கு வழங்கி அவர்களுக்கு ஏற்படும். பாதிப்புகளுக்கு எதிரான கல்வியறிவு புகட்ட வேண்டும்.
5. வணிகர்களின் தவறான வணிக நடவடிக்கைகளுக்கு எதிராக நுகர்வோர் இயக்கங்களை ஏற்படுத்துதல்.
6. நுகர்வோர் கூட்டுறவுகளைப் பலப்படுத்துதல்.
7. பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை நுகர்வோர் குழுக்கள் அணுகி நுகர்வோரின் பிரச்சனைகளை பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பேசி அரசின் கவனத்தை ஈர்க்கச் செய்தல்.
8. பொருட்களின் தரத்தை பரிசோதிக்க பரிசோதனைக் கூடங்களை மாவட்டம் தோறும் உருவாக்குதல்.
9. தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் ஊடகங்கள் மூலம் உற்பத்தியாளர் மற்றும் வணிகர் எடுக்கச் செய்தலின் தவறுகளை சுட்டிக்காட்ட செய்தல்.
10. நுகர்வோர் சட்டத்தை மீறிச் செயல்படுவோர் குறித்த புகார்களை சம்பந்தப்பட்ட சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கைகளை எடுக்கச் செய்தல்.
108.
(i) அதிக விலைக்கு விற்றல் :
விற்பனையாளர்கள் மற்றும் சேவைகளை அளிப்பவர்கள் தாங்கள் வழங்கும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு அதன் தரத்திற்கு ஈடான விலையைக் காட்டிலும் கூடுதலான விலையை அளிப்பதற்கு பல்வேறு தருணங்களில் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.
(ii) கலப்படம் :
கலப்படம் என்பது உணவுப் பொருட்களில் விரும்பத்தகாத பதிலிப் பொருட்களைச் சேர்ப்பதாகும். கலப்படப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு உடல்ரீதியாகவும், பணரீதியிலும் கடுமையான இழப்புகள் ஏற்படுகிறது. கலப்படம் நுகர்வோரது உடல்நலத்தை பெரிதும் பாதிப்பதால், அது ஒரு மன்னிக்க முடியாத குற்றமாகும்.
(iii) போலியான பொருட்கள் :
மக்கள் மத்தியில் பிரபலமடைந்த வணிகக் குறியுடைய பொருட்களுக்கு அதே போன்ற போலியான பொருட்கள் சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்டு மோசடியாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தானியங்கி (ஆட்டோமொபைல்) வாகன உதிரிபாகங்கள், பிளேடுகள், கைக்கடிகாரங்கள், பேனாக்கள், வானொலிப்பெட்டிகள், மருத்துவ மருந்துப் பொருட்கள், நகைகள், துணிகள் மற்றும் ரூபாய் நோட்டுக்கள் கூட கள்ளத்தனமாக, போலியாகத் தயாரிக்கப்பட்டு இமயம் முதல் குமரி வரை எங்கும் நீக்கமற தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
(iv) செயற்கையான பற்றாக்குறை:
சில சூழ்நிலைகளில் வணிகர்கள் தங்களின் வணிக நிறுவனங்களின் சரக்குகளை இருப்பு வைக்கும் இடங்களில் போதுமான அல்லது தேவைக்கு அதிகமான அளவு சரக்குகளை இருப்பு வைத்திருந்தாலும் கூட தங்கள் கடைகளின் முகப்பில் இருப்பு இல்லை எனும் பெயர்ப்பலகையை வைக்கின்றனர். இத்தகைய சூழ்நிலைகளில் நுகர்வோர் தங்களின் தவிர்க்க இயலாத தேவையின் அடிப்படையில் அப்பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
(v) தரக்குறைவு :
கட்டுமானம் செய்து முத்திரையிடப்பட்ட கொள்கலன்களை திறந்தால் அதில் அடைக்கப்பட்டுள்ள பொருட்கள் தரம் குறைந்ததாகவும், கெட்டுப்போனதாகவும், நிகர எடை கொள்கலனில் குறிப்பிடப்பட்டுள்ளதை விட குறைவாக இருப்பதையும் காணமுடிகிறது.
109.
பொருளாதாரத்தின் அடிப்படையில்:
அ. முறையான (செம்மையான) சந்தை:
இவ்வகை சந்தையில், ஒரே இயல்பான தன்மை கொண்ட பண்டங்கள் மற்றும் பணிகளை ஒரே விதமான விலையின் அடிப்படையில் கையாளப்படுகிறது: இந்த சந்தை கீழ்க்காணும் நிபந்தனைகளை கொண்டுள்ளது.
i. அதிக எண்ணிக்கை உள்ள வாங்குவோர் மற்றும் விற்போரை கொண்டுள்ளது.
ii. பொருட்களின் விலை சந்தை முழுவதும் ஒரே சீராக இருத்தல்.
iii. வாங்குவோர் மற்றும் விற்போர் சந்தையை பற்றி தெளிவாக அறிந்திருத்தல்.
iv. பொருட்கள் தங்கு தடையின்றி ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு வழிவகை செய்கிறது.
ஆ. முறையற்ற அல்லது செம்மையற்ற சந்தை (Imperfect Market)
இவ்வகை சந்தை பல்வகை பொருட்கள் மற்றும் பல்வேறு விலைகளை கொண்டுள்ளது. ஒரே தன்மை மற்றும் விலைகொண்ட பொருட்கள் இச்சந்தையில் மேற்கொள்ளப்பட மாட்டாது. கீழ்க்கண்ட செயல்பாடுகளின் அடிப்படையில் இத்தகைய சந்தை செயல்படுகிறது. அவற்றை காணலாம்.
i. பொருட்கள் ஒத்த தன்மை இன்மை
ii. விலையில் ஏற்ற தாழ்வு
iii. தகவல் தொடர்பில் குறைபாடு
iv. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பொருட்களை கொண்டு செல்வதில் உள்ள தடைகள்.
110.
| வ.எண் | ஒப்பிடுவதற்கான அடிப்படை | பணிவழிப் பயிற்சி | பணிவழியற்ற பயிற்சி |
| 1. | விளக்கம் | பணியாளர் உண்மையான வேலை சூழலில் வேலையை புரிந்து கொள்கிறார். | பணியாளர், பணிச் சூழலுக்கு வெளியே பயிற்சியை பெறுகிறார். |
| 2. | செலவு | செலவு குறைவான முறை | செலவு அதிகமான முறை அதாவது தனித்தனிப் பயிற்சி அறைகள் தனித்திறன் பெற்றவர்கள், வளங்கள் மற்றும் காணொளி போன்ற வளங்கள் தேவைப்படுகிறது. |
| 3. | இடம் | வேலை இடத்திலேயே பயிற்சி அளிக்கப்படுகிறது. | வேலை இடத்திற்கு வெளியே பயிற்சி அளிக்கப்படுகிறது. |
| 4. | பொருத்தம் | உற்பத்தி செய்யும் அமைப்புகளுக்கு பொருத்தமான முறை | உற்பத்தி அமைப்புகளுக்கு பொருத்தமற்ற முறை. இது மேலாண்மை செய்யும் நிறுவனங்களுக்கு பொருத்தமான முறை |
| 5. | அணுகுமுறை | நடைமுறை அணுகுமுறை | கோட்பாடு அணுகுமுறை |
| 6. | கோட்பாடு | நிறைவேற்றல் மூலம் கற்றல் | அறிவைப் பெறுவதன் மூலம் கற்றல் |
| 7. | கற்றல் | அறிவைப் பெறுவதன் மூலம் கற்றல் | அனுபவத்தின் மூலம் கற்றல் |
| 8. | தொடர்பு | பயிற்சி மிகவும் பொருத்தமானது மற்றும் நடைமுறையில் ஒவ்வொரு நாளுக்கும் தேவையான தேவைகளை கையாளுதல். | ஒரே நேரத்தில் பணியாளர்களின் குழுக்களுடன் மிக எளிதாக தொடர்பை ஏற்படுத்த முடியும். |
111.
1. முதலில் வேலை, அடுத்து மனிதர்
(i) பணியின் தேவைக்கேற்ப பணியாளர் வேலையில் அமர்த்தப்பட வேண்டும்.
(ii) வேலைக்கு தேவைப்படும் விண்ணப்பதாரர் மற்றும் அவரது தகுதியில் எவ்விதமான சமரசமும் இருக்கக்கூடாது.
(iii) "முதலில் வேலை அடுத்து மனிதர்" என்பது வேலை வாய்ப்பு கொள்கையாக இருக்க வேண்டும்.
2. வேலைவாய்ப்பு :
(i) புதிய ஊழியர்களுக்கு தகுதிக்கு அதிகமான அல்லது குறைவான வேலை வழங்கப்படக் கூடாது.
(ii) தகுதியை அடிப்படையாகக் கொண்டு மனிதர்களுக்கு வேலை வழங்கப்பட வேண்டும்.
3. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் :
பணி தொடர்பாக பணியிடத்தில் நிலவும் விதிமுறைகள் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை பணியாளர் பரவலாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
4. அபராதங்கள் பற்றிய விழிப்புணர்வு :
ஊழியர் தவறு செய்தாலோ அல்லது அவரால் ஏதேனும் இழப்பு ஏற்பட்டாலோ அதன் காரணமாக அவருக்கு வழங்கப்படும் தண்டனை மற்றும் அபராதம் குறித்த விழிப்புணர்வினை அவர் பெற்றிருக்க வேண்டும்.
5. விசுவாசம் மற்றும் ஒத்துழைப்பு :
(i) பணியாளர்களுக்கு பணியமர்த்தும் போது அவருக்குள் விசுவாசம் மற்றும் ஒத்துழைப்பு உணர்வினை வளர்க்கும் முயற்சியினை மேற்கொள்ள வேண்டும்.
(ii) இதன் மூலம் அவர் வேலை மற்றும் நிறுவனம் குறித்த அவரது பொறுப்புகளை சிறப்பாக உணர்ந்து கொள்ள இயலும்.
112.
1. மனித சக்தி தேவையான அடையாளம் காணுதல்
ஒரு நிறுவனத்தில் மனித வள தேவைகளைத் தீர்மானிப்பது என்பது மிகவும் முக்கியமான ஒரே முதலீட்டு முறையாகும்.
2. மாற்றங்களை இணைத்துக் கொள்ளல்.
மாற்றம் என்பது நிலையானது,மாற்றத்தை நிறுவனத்தில் திறன்பட அறிமுகப்படுத்த மனித வள மேலாண்மை ஒரு முகவராக செயல்பட வேண்டும்.
3.மனித சக்தியின் சரியான தேவையை உறுதி செய்தல் :
மனித வள மேலாண்மையின் மூலமாக நிறுவனத்தில் திறன்பட அறிமுகப்படுத்தப்பட்ட மனித வள மேலாண்மை ஒரு முகவராக செயல்பட வேண்டும்.
4. சரியான வேலைக்கு சரியான நபரைத் தேர்ந்தெடுத்தல் :
(i) சரியான வேலைக்கு சரியான தகுதியுடைய நபர்களை மனித வள மேலாண்மை உறுதிப்படுத்துகிறது.
(ii) இதனால் நிறுவனத்தில் குறை தகுதி அல்லது மிகை தகுதி உடைய பணியாளர்கள் இல்லாத நிலை ஏற்படுகிறது.
5. திறன் மற்றும் அறிவை மேம்படுத்துதல் :
(i) பணியாளர்கள் திறன் மற்றும் அறிவு மேம்பாடு செயல்பாடுகளை நிர்வகிப்பதில் மனித வள மேலாண்மை முக்கியமாக செயல்படுகிறது.
(ii) பயிற்சி மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் மூலம் தொழில் சார்ந்த அறிவை பணியாளர்களுக்கு வழங்குகிறது.
6. பணியாளர்களின் செயல்திறனை மதிப்பிடுதல் :
(i) மனித வள மேலாண்மை நடவடிக்கைகள் மூலம் பணியாளர்களின் செயல்திறன்களை மதிப்பீடு செய்ய முடிகிறது.
(ii) இதனால் பணிபுரிவோரின் திறனை அதிகரிக்கவும், ஊக்கமளிக்கவும், பணியாளர்களின் செயல்திறனை அறியவும் முடிகிறது.
7. போட்டி நன்மைகளை மேம்படுத்துதல் :
நிறுவனங்கள் தகுதி வாய்ந்த மற்றும் போட்டிச் சூழலை எதிர்கொள்ளும் பணியாளர்களைக் கொண்டிருந்தால் மட்டுமே உலகளாவிய போட்டிச் சந்தையின் நன்மையைப் பெற முடியும்.
8. பணியாளர் அர்ப்பணிப்பைத் தீர்மானித்தல் :
(i) மனித வள மேலாண்மை நேர்காணல் அல்லது வினாத் தொகுப்பு வாயிலாக பணியாளர்களுக்கு அவர்களின் பணி அர்ப்பணிப்பு நிலையைத் தீர்மானிக்கிறது.
9. சமூகமயமாக்க வலியுறுத்தல் :
மனிதர்கள் சமூக விலங்குகளாக இருக்கிறார்கள். நிறுவனத்தில் அதிகபட்சமாக பங்களிப்பு செய்வதற்கு ஒத்த வயதுடையோர், துணை நிலையில் உள்ளோர் மற்றும் மேலாளர்களுடன் நல்ல உறவு வைத்திருப்பது உறுதி செய்ய வேண்டும்.
10. சாதகமான பணியாளர் மனப்பான்மையை வளர்ப்பதற்கு:
(i) மேலாண்மையைப் பற்றி பணியாளர்களின் மனப்பான்மை சாதகமாக இருக்கும் வகையில் நிறுவனங்கள் ஒரு நல்ல பணிச் சூழலை உருவாக்க விரும்புகிறது.
(ii) நிறுவனங்களில் ஆலோசனை மையம்,குறை தீர்க்கும் மையம் போன்றவற்றை ஏற்படுத்துவதன் மூலமாக இச்சூழலை அடையலாம்.
113.
(1) பங்குச்சந்தைகள் மற்றும் இடைத்தரகர்கள் தொடர்பான அதிகாரங்கள் (Powers Relating to Stock Exchanges & Intermediaries)
பத்திர வணிகத்தை மேற்கொள்ளும் பங்கு பரிமாற்றகங்கள் மற்றும் இடைத் தரகர்களிடம் செபி பரந்த அதிகாரங்களைக் கொண்டுள்ளது.
(2) நாணய அபராதங்களை விதிக்கும் அதிகாரம் (Power to Impose Monetary-Penalties.)
மூலதனச்சந்தை இடைத்தரகர்கள் மற்றும் பிற பங்கேற்பாளர்கள் மீது வரம்பு மீறல்களுக்கு நாணய அபராதங்களை சுமத்துவதற்கு செபி அதிகாரத்திற்கு உட்பட்டுள்ளது. இது ஒரு குறுகிய காலத்திற்கு தங்கள் பதிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம்.
(3) பணியிடங்களில் செயல்பாடுகளை தொடங்குவதற்கான அதிகாரம் ஒதுக்கப்பட்டுள்ளது (Power to Initiate Actions in Functions Assigned.)
(அ) செபி ஒதுக்கப்பட்டுள்ள பணிகள் குறித்து நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஒரு அதிகாரம் உண்டு.
(ஆ) உதாரணமாக, இது பல்வேறு இடைத்தரகர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கலாம் அல்லது முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான குறிப்பிட்ட விதிகளை அறிமுகப்படுத்தலாம்.
(4) பத்திரங்களில் உள்வழி வர்த்தகத்தை, ஒழுங்குப்படுத்துவதற்கான அதிகாரம் (Power to Regulate Insider Trading.)
உள்வழி வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் அல்லது வணிக வங்கியாளர்களின் பணிகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரங்களை செபி கொண்டுள்ளது.
(5) பத்திரங்கள் ஒப்பந்த சட்டத்தின் கீழ் உள்ள அதிகாரங்கள் (Powers Under Securities Contracts Act.)
(அ) பங்குச்சந்தை திறம்பட ஒழுங்குபடுத்த நிதி அமைச்சகம் பத்திரங்கள் ஒப்பந்தங்கள் (ஒழுங்குவிதிகள்) சட்டத்தின் கீழ் பல்வேறு அதிகாரங்களை செபிக்கு 13 செப்டம்பர், 1994 அன்று ஒரு அறிவித்தல் மூலம் வழங்கியுள்ளது.
(ஆ) ஒவ்வொரு பங்குச் சந்தையிலும் ஆளும் குழுவில் மூன்று உறுப்பினர்களை நியமிக்க நிதி அமைச்சகம் செபிக்கும் அதிகாரம் அளிக்கிறது.
(6) பங்குச்சந்தை வணிகத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் (Power to Regulate Business of Stock Exchanges)
பத்திரச் சந்தை மற்றும் பரஸ்பர நிதியுடன் தொடர்புடைய இடைநிலையர்கள், மோசடியான மற்றும் முறையற்ற வியாபார செயல்பாடுகள் மற்றும் நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு போன்றவற்றை ஒழுங்குபடுத்தும் அதிகாரங்களை செபி கொண்டுள்ளது.
114.
(i) போதுமான கல்வி மற்றும் வழிகாட்டல் மூலம் முதலீட்டாளர்களின் நலன்களை பாதுகாக்கிறது.
(ii) பங்குச் சந்தைகளில் வியாபாரத்தை ஒழுங்குபடுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல். தரகர்கள் மற்றும் துணை தரகர்கள் ஆகியோர் நிதிச்சந்தையில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பங்கு பரிவர்த்தனை விசாரணைகள், இடைத்தரகர்கள் மற்றும் தன்னியக்க ஒழுங்குபடுத்தும் அமைப்புகளை ஆய்வு செய்தல் மற்றும் தேவையான நடவடிக்கைகளை செபி எடுக்கிறது.
(iii) பத்திரங்களில் உள்வழி வர்த்தகத்தை தடை செய்கிறது.
(iv) பங்குச் சந்தைகளில் செயல்படும் நிதி இடைத்தரகர்களால் மேற்கொள்ளப்படும் நிதி மோசடி மற்றும் நியாயமற்ற முறைகளை தடை செய்கிறது.
(v) நிதி இடைத்தரகர்களுக்கு பொருத்தமான பயிற்சி அளித்தல், பங்குச் சந்தையில் ஆரோக்கியமான சூழலுக்கு மிகவும் முக்கியமானது. மேலும், முதலீட்டாளர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.
(vi) சட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான கட்டணம் வசூலித்தல் அல்லது சட்டத்தின் நோக்கம் நிறைவேற்றுவதற்கான வேறு எந்த வகை கட்டணம் வசூலித்தலும் இதில் அடங்கும்.
(vii) இந்திய மத்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் செயல்பாடுகளை செயல்படுத்துதல்.
(viii) இடைத்தரகர்களின் சுய ஒழுங்குமுறை அமைப்பை ஊக்குவித்தல்.
(ix) இது விரிவான சட்ட அதிகாரங்களை கொண்டுள்ளது.
115.
| வ.எண் | சிறப்பியல்புகள் | பங்கு பரிவர்த்தனை | பண்டமாற்று பரிவர்த்தனை |
|---|---|---|---|
| 1 | பொருள் | பங்குச் சந்தை என்பது தொழில்துறை மற்றும் நிதிப் பாதுகாப்பின் கொள்முதல் மற்றும் விற்பனைக்கான ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சந்தை. | ஒரு பண்டமாற்று பரிமாற்றம் என்பது பண்டங்கள் வர்த்தகம் செய்யப்படும் பரிமாற்றமாகும். |
| 2 | பணிகள் | எளிதான சந்தைப்படுத்துதலை வழங்குதல் | பத்திரங்களுக்கு தேவை ஏற்படுத்துதல் அல்லது பத்திரங்களுக்கு விலைக் காப்பீடு சேவைகள் மற்றும் நீர்மை தன்மை ஏற்படுத்துதல். |
| 3 | பங்கேற்பாளர்கள் | முதலீட்டாளர்கள் மற்றும் ஊக வணிகர்கள் | தயாரிப்பாளர்கள், முகவர்கள், நிறுவனங்களின் வியாபாரிகள் மற்றும் ஊகவணிகர்கள் |
| 4 | ஒப்பந்தங்களின் காலம் | ரொக்கம், உடனடி வழங்கல் மற்றும் பதினைந்து நாட்களுக்கான ஒப்பந்த கணக்கு | எதிர்கால சந்தை ஒப்பந்தங்களுக்கான 2 அல்லது 3 மாதங்கள் கால செலுத்துகை மற்றும் உடனடி பண ஒப்பந்தங்கள் |
| 5 | முன் ஒப்பந்தம் | பத்திரங்கள் முழுமையாக தரநிலையாக்கப்படுவதால் முன்னோக்கு ஒப்பந்தங்கள் எளிமைப்படுத்தப்படுகின்றன. | எதிர்கால ஒப்பந்தத்தை எளிதாக்குவதற்கு தரநிலை வகுப்புகளுக்கு நியமங்கள் இருக்க வேண்டும். |
| 6 | விலை புள்ளி | முன்னோக்கிய ஒப்பந்தங்களைப் பொறுத்தவரை ஒரு முனை புள்ளிகள் மட்டுமே சாத்தியமாகும். | எதிர்கால ஒப்பந்தங்களுக்கான பலமுனை புள்ளிகள் சாத்தியமாகும். |
| 7 | பணிகள் | எளிதான சந்தைப்படுத்துதலை வழங்குதல் | பத்திரங்களுக்கு தேவை ஏற்படுத்துதல் அல்லது பத்திரங்களுக்கு விலைக் காப்பீடு சேவைகள் மற்றும் நீர்மை தன்மை ஏற்படுத்துதல். |
| 8 | நோக்கம் | பொருள் மூலதன உருவாக்கம் மற்றும் மூலதன ஆதாரங்களை சிறந்த முறையில் பயன்படுத்துதல் ஆகியவற்றை எளிதாக்குகிறது | ஆபத்து குறைப்பு மூலம் பொருட்கள் விற்பனையை அதிகரிக்க உதவுகிறது |
116.
ஒரு பங்குச் சந்தையின் பல்வேறு செயல்பாடுகளை கீழே விளக்கப்பட்டுள்ளன.
1. உடனடி மற்றும் தொடர்ச்சியான சந்தை:(Ready and Continuous Market)
(i) பங்கு பரிவர்த்தனை உண்மையில், ஏற்கனவே இருக்கும் பத்திரங்களுக்கு ஒரு சந்தை.
(ii) ஒரு முதலீட்டாளர் தனது பத்திரங்களை விற்க விரும்பினால், அவர் எளிதில் விரைவாக பங்குச் சந்தைகளில் அவற்றை விற்பனை செய்யலாம்.
(iii) வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர் தனது பங்குகளை பணமாக மாற்றலாம். அதே போல் அவர் தன் பணத்தை பத்திரங்களில் மாற்றலாம்.
2. பத்திரங்கள் சரியான மதிப்பீடு: (Correct Evaluation of Securities)
(i) பத்திரங்கள் வாங்குதல் மற்றும் விற்பனை செய்யப்படும் விலைகள் பதிவு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன.
(ii) இதன் விலைகள் "சந்தை மேற்கோள்கள்" என்று அழைக்கப்படுகின்றன.
(3) மூலதன உருவாக்கத்திற்கான உதவி (Aid to Capital formation)
(i) பங்குச் சந்தை பரிமாற்றம் பல்வேறு தொழில் துறை பத்திரங்கள் மற்றும் அவற்றின் விலைகள் மற்றும் அவர்களின் கொள்முதல் மற்றும் விற்பனைக்கு வழங்கிய வசதிகள் ஆகியவற்றை மக்களுக்கு சேமித்து, முதலீடு செய்ய தூண்டுகிறது.
(ii) பங்கு பரிமாற்றங்கள், ஒரு நிலையான மூலதனத்தை தொழில்துறையில் உறுதிப்படுத்துகின்றன மற்றும் தொழில் துறை வளர்ச்சிக்கு உதவும்.
(4) ஊக வணிகத்திற்கான வசதிகள் (Facilities for Speculation)
(i) ஊகவணிகம் என்பது பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகளின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.
(ii) ஊக வணிகத்தின் விளைவாக, பத்திரங்களின் தேவை மற்றும் வழங்கல் சமமாகிறது.
(ii) இதேபோல், விலை நகர்வுகள் சுமூகமாக அளிக்கப்படுகின்றன.
(5) பருவகால பத்திரங்கள் (Seasoning of Securities)
(i) புதிய நிறுவனங்கள் பங்குகள் வெளியிடும் பொழுது, ஊக வணிகர்கள் மற்றும் பொறுப்புறுதியாளர்கள் தற்காலிக கால வணிகத்தில் ஈடுபடுகின்றனர்.
(ii) புதிய வெளியீடுகளை சந்தை ஈர்க்க தயாராகும் பொழுது அவர்களுக்கு அவைகள் சந்தையை திறந்து விடுகின்றன.
(6) மூலதனத்தை சரியான முறையில் வழிப்படுத்துதல்: மக்கள் நல்ல லாபத்தை ஈட்டக் கூடிய அத்தகைய நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்ய விரும்புகிறது. ஆனால் பங்குச் சந்தைகளுக்கு இந்த சேமிப்புக்கள் இலாபமற்ற அலகுகள் பங்குகள் மீது வீணடிக்கப்படக்கூடும்.
(7) முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பு : ஒரு பங்கு பரிவர்த்தனையில் அனைத்து ஒப்பந்தங்களும் நன்கு வரையறுக்கப்பட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு ஏற்ப உள்ளன. உதாரணமாக, தங்கள் சேவைகளுக்கான அதிகமான கமிஷன்களை புரோக்கர்கள் வசூலிக்க முடியாது.
117.
இடைநிலையர் பணிகள்:
அ) வள ஆதாரங்களின் பரிமாற்றம்:
நிதிச் சந்தைகள் பொருளாதார மூல வளங்களை கடன் தருபவர்களிடமிருந்து கடன் பெறுபவர்களுக்கு மாற்ற உதவி புரிகின்றது.
ஆ) வருவாயை அதிகரித்தல்:
நிதிச் சந்தைகள் கடன் வழங்குபவர்கள். அவர்களின் உபரி நிதிநிலை முதலீடு செய்வதன் மூலம் வட்டி / பங்காதாயம் ஈட்ட அனுமதிக்கிறது. இது தேசிய வருமானத்தை அதிகரிக்க பங்களிப்பை வழங்குகிறது.
இ) ஆக்கப்பூர்வ பயன்பாடு:
நிதிச் சந்தை பெற்ற கடன் நிதியை ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்த அனுமதிக்கிறது. இது தேசிய மொத்த உற்பத்தியை அதிகரிக்கிறது.
ஈ) மூலதன உருவாக்கம்:
நிதிச் சந்தைகள் புதிய சேமிப்பு ஓட்டம் மூலம் ஒரு நாட்டின் மூலதன உருவாக்கத்திற்கு உதவி புரிய வழிவகை செய்கிறது.
உ) விலை தீர்மானம்:
வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் கலந்துரையாடல் மூலம் நிதி சார்ந்த சொத்துக்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தேவை மற்றும் அளிப்பு அடிப்படையில் பொருளாதாரத்தில் நிதிகளை பங்கீடு செய்வதற்கு நிதிச் சந்தை வழி வகுக்கிறது.
ஊ) விற்பனை வழிமுறைகள்:
நிதிச் சந்தைகள், முதலீட்டாளர்கள் நிதிச் சொத்துக்களை விற்பனை செய்வதற்கு வழிமுறைகளை வழங்குகிறது.
எ) தகவல்கள்:
நிதிச் சந்தையில் பங்கேற்பாளர்களின் நடவடிக்கைகள் சந்தையின் பல்வேறு பகுதிகளில் தகவல்களை உற்பத்தி செய்ய மற்றும் பரவலாக்க வழி வகுக்கிறது.
நிதிச் சார்ந்த பணிகள்:
அ) கடன் வாங்குபவர்களுக்கு நிதியை வழங்குகிறது. இதன் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்த முடிகிறது.
ஆ) கடன் வழங்குபவர்கள் சொத்துக்களை ஈட்ட வழிவகை செய்கிறது. இதன் மூலம் சொத்துக்களை உற்பத்தி சார்ந்த துணிகர முயற்சியை பயன்படுத்தி செல்வம் ஈட்ட முடிகிறது.
இ) சந்தையில் நீர்மைத் தன்மையை வழங்குகிறது. இதன் மூலம் நிதியை வணிகம் செய்ய உதவுகிறது.
118.
| வ.எண் | ஒப்பீட்டு அடிப்படை (Basis for Comparison) |
புதிய வெளியீடுகள் சந்தை (New Issue Market) |
இரண்டாம் நிலை சந்தை (Secondary Market) |
|---|---|---|---|
| 1 | பொருள் | புதிய பங்குகளுக்கான சந்தை முதல் நிலை சந்தை எனப்படும். | முன்னர் வெளியிட்ட ஈடுகளை வணிகம் செய்யும் இடம் இரண்டாம் நிலை சந்தை எனப்படும். |
| 2 | கொள்முதலின் வகைகள் |
நேரடி | மறைமுகம் |
| 3 | நிதி | புதிய நிறுவனங்கள் மற்றும் இயங்கி கொண்டு இருக்கும் நிறுவனங்களின் விரிவாக்கம் மற்றும் பல்வகைபடுத்துதல் போன்றவற்றிற்கு நிதி வழங்குகிறது. | நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதில்லை. |
| 4 | ஒரு பத்திரம் எத்தனை முறை விற்க முடியும்? | ஒரே ஒருமுறை | பலமுறை |
| 5 | வாங்குதல் மற்றும் விற்றல் | நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இடையே | முதலீட்டாளர்களுக்கு இடையே |
| 6 | பங்குகளை விற்பதன் மீதான ஆதாயம் பெறும் நபர் | நிறுவனம் | முதலீட்டாளர்கள் |
| 7 | இடைநிலையர் | ஒப்புறுதியாளர்கள் | தரகர்கள் |
119.
குறியிலக்கு மேலாண்மையின் நன்மைகள் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளன:
(i) குறியிலக்கு மேலாண்மையின் கீழ். மேலாளர்கள் மேலாண்மையின் பல்வேறு மட்டங்களில் உள்ள குறிக்கோள்களை அமைப்பதில் ஈடுபட்டுள்ளனர்.
(ii) குறியிலக்கு மேலாண்மையின் செயல் முறை மேலாளர்களுக்கு. ஒட்டு மொத்த அமைப்பில் தங்களது பங்கைப் புரிந்து கொள்ள உதவுகிறது.
(iii) திட்டமிடலுக்கான தேவையையும் மற்றும் திட்டமிடலுக்கான பாராட்டுதலையும் மேலாளர் அங்கீகரிக்கச் செய்கிறது.
(iv) குறியிலக்கு மேலாண்மை பங்கேற்பு மேலாண்மைக்கு ஒரு அடித்தளத்தை வழங்குகிறது.
(v) குறியிலக்கு மேலாண்மை உதவியுடன் செயல்திறன் முறையாக மதிப்பீடு செய்யப்படுகிறது.
(vi) குறியிலக்கு மேலாண்மை செயல்திறன் அளவுகோல்களை வழங்குகிறது. இது சரியான நடவடிக்கை எடுக்க உதவுகிறது.
(vii) குறியிலக்கு மேலாண்மை அதிகாரப் பகிர்வு உதவியால் எளிதாகச் செய்யப்படுகிறது.
(viii) ஒரு தொழிலாளியின் குறியிலக்கு பொறுப்பு மேலாண்மை மூலம் நிர்ணயிக்கப்படுகின்றது.
(ix) மேலாண்மை நிர்வாகத்தால் மிக விரைவில் முடிவுகள் எடுக்கப்படுகிறது.
120.
நவீன மேலாண்மையின் கோட்பாடுகள்: நவீன மேலாண்மையின் தந்தை எனப் போற்றப்படும் திரு.ஹென்றி ஃபோயல் ஒவ்வொரு மேலாளரும் நிறுவனத்தின் வெற்றிக்காக நடைமுறைப்படுத்த வேண்டிய 14 பிரதான கோட்பாடுகளை வரையறுத்திருக்கிறார். அவைகளாவன.
(I) வேலைப் பகிர்வு : இக்கோட்பாட்டின்படி தொழிலமைப்பின் மொத்தப்பணிச் சுமையும் சிறிய பணிகளாகப் பகிர்வு செய்ய வேண்டும். தொழிலாளர் ஒவ்வொரு தொழிலாளியின் திறமைக்கேற்ப பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு அப்பணியில் அத்தொழிலாளி சிறப்பீடுபாடும் நிபுணத்துவமும் அடையும் வண்ணம் தொழில் முறை வளர்ச்சியையும் பணிச்சூழலையும் உருவாக்க வேண்டும்.
(II) அதிகாரமும், பொறுப்பும்: அதிகாரம் என்பது ஒரு அலுவலர் தன் கீழ்பணியாளர்களுக்கு ஆணையிடும் உரிமையைக் குறிக்கின்றது.
(III) ஒழுங்குமுறை: இது கீழ்ப்படிதல், மற்றவர்களிடம் முறைப்படி நடத்துதல், அதிகாரத்தை மதித்தல் போன்றவை ஆகும். இவ்வொழுங்கு நிறுவனம் செம்மையாக நடைபெற இன்றியமையாததாகும்.
(IV) பொது நலனுக்காக தனி நலம் புறக்கணிக்கப்படல் வேண்டும் : நிர்வாகம் தனிப்பட்ட ஆதாயங்களை ஒதுக்கி வைத்துவிட்டு நிறுவனத்தின் நோக்கங்களை மட்டுமே முன் நிறுத்த வேண்டும். எனவே தனிப்பட்ட நபர்களின் தனிநலனை விட தொழில் நிறுவனத்தின் நோக்கமே அனைத்தையும் விட மேம்பட்டிருக்க வேண்டும்.
(v) ஊதியம் : ஊதியம் என்பது பணியாளர் களின் பணிக்கு கொடுக்கப்படும் விலையாகும். பணியாளருக்கு கொடுக்கப்படும் ஊதியமே தொழிலாளர்களை ஊக்குவிக்கும் முதன்மையான ஊக்குவிப்பவனாக இருந்து உற்பத்தியை அதிகரிப்பப்பதால் அவர்களுக்கு போதுமான ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
121.
1. அறிவியல், கட்டை விரல் விதி அல்ல:
(i) கட்டை விரல் விதிமுறைக்கு பதிலாக அறிவியல்பூர்வ வேலைப் பகுப்பாய்வு மூலம் வளர்ச்சியடைந்த முறைகள் பயன்படுத்தப்பட வேண்டும்.
(ii) கட்டை விரல் விதி என்பது மேலாளர் தனது தனிப்பட்ட தீர்ப்புகள் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவு ஆகும்.
2. இணக்கம், சச்சரவின்மை:
(i) மேலாண்மைக்கும், பணியாளர்களுக்கும் மிகச்சிறந்த ஒற்றுமை இருக்க வேண்டும். ஒவ்வொரு முதலாளியும் தனது செழிப்பை தனது பணியாளர்களின் செழிப்பு மூலமே அடைய எய்த முடியும்.
(ii) நிர்வாகம் தனது உபரியான இலாபத்தை தனது பணியாளர்களுடன் பகிர்ந்து கொள்ள எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.
3. மனப்புரட்சி:
(i) பரஸ்பர நம்பிக்கை மற்றும் சரியான புரிதலுடன் கூடிய குழுச் செயல்பாடு கொண்டு உழைக்க வேண்டிய முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
(ii) இதன் மூலம் மேலாண்மையில் நிர்வாகமும், பணியாளர்களும் ஒருவரோடு ஒருவர் பொருந்தி செயல்படுவதால் வளர்ச்சிக்கு உதவுகின்றது.
4. தனி மனிதத்துவமல்ல, ஒத்துழைப்பு:
(i) சச்சரவு இன்றி ஒற்றுமை என்ற கோட்பாட்டின் விரிவாக்கம் ஆகும். தொழிலாளர் மற்றும் நிர்வாகத்தின் பரஸ்பர ஒத்துழைப்பின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
(ii) ஒத்துழைப்பு, பரஸ்பர நம்பிக்கை, நல்லெண்ண உணர்வு ஆகியவை மேலாளர் மற்றும் தொழிலாளர் ஆகிய இருவரிடமும் மேலோங்கி இருக்க வேண்டும்.
5. ஒவ்வொரு நபரும் அவரது மிகச்சிறந்த திறனுடன் மற்றும் செழிப்புடனும் வளர்ச்சியடைதல்:
(i) அறிவியல் பூர்வ முறையில் உரிய பணியாளர்களை தேர்வு செய்ய வேண்டும். தொழிலாளர்களின் உடல் தகுதி, மன மற்றும் அறிவுத்திறன் அடிப்படையில் அவர்களுக்கு உரிய பணியினை ஒதுக்க வேண்டும்.
(ii) தொழில் நிறுவனம் அதிக இலாபம் ஈட்ட திறமையான தொழிலாளர்கள் திறம்பட உற்பத்திப் பணிகளை மேற்கொள்வார்கள். இது தொழில் நிறுவனம் மற்றும் தொழிலாளர்கள் தத்தமது திறனையும் செழிப்பையும் அடைவதற்கு உதவி புரிகின்றது.
122.
மேலாண்மையின் அடிப்படைக் கருத்து: மேலாண்மையின் அடிப்படைக் கருத்துக்களை பின்வரும் அவற்றின் தொன்றுதொட்ட இயல்புகள் மூலமாக அறிந்து கொள்ள இயலும்.
(i) அறிவின் தொகுப்பு : தற்போது மேலாண்மை உயர்தனிச் சிறப்பு வாய்ந்த மேலாண்மைக் கோட்பாடு மற்றும் தத்துவத்தை உருவாக்கியுள்ளது. மேலாண்மை இலக்கியம் அனைத்து நாடுகளிலும் வளர்ச்சி பெற்றிருக்கின்றது.
(ii) மேலாண்மைக் கருவிகள் : கணக்கியல், வணிகச் சட்டங்கள், உளவியல், புள்ளியியல், பொருளியல், தரவு செயலாக்கம் என மேலாண்மையின் கிளைகள் பல்கிப் பெருகி விரிவடைந்துள்ளது.
(iii) தனிப் பாடப்பிரிவு : பல்வேறு பல்கலைக் கழங்களும், உயர்கல்வி நிறுவனங்களும் மேலாண்மைக் கல்வியை தனிப்பாடப் பிரிவாக அங்கீகரித்திருக்கின்றன. ஏற்றுமதி மேலாண்மை, ஆள்சார் மேலாண்மை, உற்பத்தி மேலாண்மை, சந்தை மேலாண்மை, நிதி மேலாண்மை போன்ற மேலாண்மையின் பல்வேறு பகுதிகளில் கருத்தரங்கம், சிறப்புப் பாடப்பிரிவுகள், பயிற்சித் திட்டங்கள் போன்றவற்றின் மூலம் மேலாண்மை நவீனமயமானதாகவும், பிரபலமடைந்தும் வருகின்றது.
(iv) சிறப்பீடுபாடு: வணிகத்தின் ஒவ்வொரு செயல்பாட்டுப் பகுதியையும் சீரிய முறையில் மேலாண்மை செய்து வணிகத்தை சிறப்பாக நிர்வகிக்க உயர் கல்வித் தகுதியும் முறையான பயிற்சியும் பெற்ற உரிய முன்னனுபவமுள்ளவர்களை தேர்ந்தெடுத்து பணியமர்த்த வேண்டும் என்ற மனப்பாங்கு தற்போது வளர்ந்து வருகின்றது.
(v) நடத்தை விதி : நுகர்வோர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் அல்லது சமுதாயம் போன்றவற்றிற்கு வணிக மேலாண்மை ஆற்ற வேண்டிய சமூகப் பொறுப்புணர்வுகளை அறிவூட்டப்பட்ட வணிகர்கள் அங்கீகரித்திருக்கின்றனர். பொது கழகங்களுக்கு தற்போது சமூக மனசாட்சியும், விழிப்புணர்வும் உள்ளது.
(vi) பணி ரீதியானதொரு அமைப்பு : பல்வேறு நாடுகளில் மேலாண்மைப் பிரிவுகளில் அறிவுப் பரவலாக்கம் ஏற்படவும், மேலாண்மை சிறப்புத் தொழில் குறித்த பொதுமக்கள் மனதில் ஒரு சிறந்த தோற்றத்தை உருவாக்கவும் வணிக மேலாண்மை சங்கங்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதை நாம் காண முடிகின்றது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards