12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test

1.
குறித்த நேரத்தில் பொருட்களை நுகர்வோர் பெறவில்லையெனில் அதனால் ஏற்படும் இழப்பிற்கு பொறுப்பாக்குபவர் ______
உற்பத்தியாளர்
விற்பாண்மையர்
நுகர்வோர்
விற்பனையாளர்
2.
மேல்முறையீடு எத்தனை நாட்களுக்கு செய்ய வேண்டும்?
3
9
15
30
3.
COPRA என்பதன் விரிவாக்கம் யாது?
Consumer precious Act
Consumer primary Act
Consumer Protection Act
Consumer prevention Act
4.
______ இடைத்தரகர்கள் மற்றும் பங்கேற்பாளர் மீது வரம்பு மீறல்களுக்கு நாணய அபராதங்களை சுமத்துவதற்கு செபி அதிகாரத்திற்கு உட்பட்டது
பணச் சந்தை
ரொக்கச் சந்தை
பங்குச் சந்தை
மூலதனச் சந்தை
5.
தனி நிறுமத்தில் உள்ள இயக்குநர்களின் எண்ணிக்கை
15
2
10
25
6.
மாற்றத்தின் அடிப்படையில் கடன் பத்திரங்களை ______ வகையாகப் பிரிக்கலாம்.
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
7.
தீர்மானங்கள் எத்தனை வகைப்படும்?
2
3
4
5
8.
தேசிய திறன் அபிவிருத்தி குறிக்கோள் திட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு
2014
2015
2016
2017
9.
அரைத்த மாவையே அரைக்காமல் புதிய பொருட்களை அறிமுகப்படுத்தி வெற்றி காண்பவர்கள்
முதல் தலைமுறை தொழில் முனைவோர்
நவீன தொழில் முனைவோர்
பாரம்பரிய தொழில் முனைவோர்
மேற்கூறிய எவருமில்லை
10.
சரக்கு விற்பனை சட்டத்தில் எத்தனை நபர்கள் ஈடுபடுகிறார்கள்?
நான்கு
இரண்டு
மூன்று
ஐந்து
11.
தாராளமயமாக்கலுக்குப் பின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு ________
1.2 பில்லியன்
1.3 பில்லியன்
1.5 மில்லியன்
1.3 மில்லியன்
12.
உலகின் மிகவும் பிரபலமான பங்குச் சந்தை _______
லண்டன் பங்குச் சந்தை
பம்பாய் பங்குச் சந்தை
தேசிய பங்குச் சந்தை
நியூயார்க்
13.
ஒரு வியாபாரத்தை உருவாக்குவதற்கும் மற்றும் அழிப்பதற்குமான திறமை யாரிடம் உள்ளது?
வணிகர்கள்
விற்பனையர்
பொதுமக்கள்
உற்பத்தியாளர்
14.
நீண்ட தேர்வு செயல்முறை _______ ஏற்படுத்தும்
குறைவான செலவு
அதிக செலவு
நியாயமான செலவு
எதுவுமில்லை
15.
_________ கருவூல ரசீதுகள் எந்தவித நிலையான தள்ளுபடி விகிதம் கொண்டு செயல்படுவதில்லை
91 நாட்கள்
182 நாட்கள்
364 நாட்கள்
91 நாட்கள் மற்றும் 182 நாட்கள்
16.
சாதாரண அல்லது தற்காலிக திறனற்ற ஊழியர்கள் இந்த வழியின் மூலம் ஆட்சேர்ப்பு செய்யப்படுகின்றனர்.
தொழிற்சாலை வாயிலில்
வளாகத் தேர்வு
இணைய வழி
பழைய ஊழியர்களின் பரிந்துரை
17.
புதிய வெளியீடுகளுக்கான சந்தை
மூலதன சந்தை
பணச் சந்தை
பத்திரச் சந்தை
முதல் நிலைச் சந்தை
18.
மனித வள மேலாண்மை என்பது ஒரு நிறுவனத்தில் ஆட்களை
பணியமர்த்தல்
ஊக்குவித்தல்
நிர்வகித்தல்
இவை அனைத்தும்
19.
இரண்டாம் நிலைச் சந்தையில் பத்திரங்கள் எத்தனை முறை விற்கப்படும்?
ஒரே ஒரு முறை
பல முறை
நூறு முறை
ஆயிரம் முறை
20.
இந்திய மகளிர் தொழில் முனைவோர் கூட்டமைப்பு ________ ஆம் ஆண்டு ஒரு அரசு சார்புடைய சங்கமாக பதிவு செய்யப்பட்டது?
1886
1776
1996
2006
21.
விதிவிலக்கு மேலாண்மை முடிவுகளை நிர்ணயிக்கும் சிறந்த _________ விளங்குகிறது.
குறிக்கோளாக
இலக்குகளாக
திறவுகோலாக
அளவுகோலாக
22.
அயல்நாட்டு மாற்று சீட்டுகள் எத்தனை படிகளில் தயாரிக்கப்படுகிறது?
ஐந்து
மூன்று
இரண்டு
நான்கு
23.
ஒரு நிறுவனத்தில் மற்றவர்களுடன் நல்ல உறவு வைத்திருக்க வேண்டியது _________ கடமையாகும்.
நிர்வாகியின்
பணியாளர்களின்
மேலாளரின்
உரிமையாளரின்
24.
_________ நிறுவனக் கூட்டமைப்பு என்பது நிறுவனத்தின் சவால்களை சுமத்துகின்றது.
உயரமான
குறுகிய
செங்குத்தான
கிடைமட்டம்
25.
பரிந்துரை சந்தை
பல்நோக்கு சந்தை
உள்ளடக்க சந்தை
மறைமுக சந்தை
26.
நுகர்வோர் நலன் கருதி பண்டகம் மற்றும் பணிகளுக்கு இணையான மதிப்பை மாற்றிக் கொள்ள தக்க ஒன்றுதான் _________.
விற்பனை
விலை
போக்குவரத்து
கட்டுமம்
27.
ஒரு குடும்பத்தில் உறுப்பினர்களிடையே பண்டங்களையோ அல்லது பணிகளையோ பரிமாற்றுவது _________.
குடும்பச் சந்தை
உள்ளூர் சந்தை
தேசிய சந்தை
களச் சந்தை
28.
பணிபுரியும் இடத்தை விட்டு விட்டு, வேறு இடத்திற்கு சென்று பயிற்சி பெறும் முறை _________.
கருத்தரங்கு மாநாட்டு முறை
புலம் பயணம் முறை
மின்னணு கற்றல் முறை
செயல் விளக்க பயிற்சி முறை
29.
நிறுமத்தின் செயலர் அந்த நிறுமத்தின் ஓர் ______ ஆவார்.
உறுப்பினர்
இயக்குனர்
தன்னிச்சையான ஒப்பந்ததாரர்
ஊழியர்
30.
எந்த இயக்குநர் நிதி நிறுமத்தால் நியமிக்கப்படுகிறார்?
பெயரளவு
கூடுதல்
மகளிர்
நிழல்
31.
பங்குத் தொகுதியை _______ நிறுமம் வெளியிடும்.
பொது
தனியார்
ஒரு நபர்
சிறு
32.
_______ இந்தியாவை உலகளாவிய வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மையமாக மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் இந்தியா
இந்தியாவில் தயாரிப்போம் திட்டம்
ஸ்டார்ட்டப் இந்தியா
வடிவமைப்பு இந்தியா
33.
ஸ்டார்ட் அப் இந்தியா இந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது.
1996
2016
2019
1992
34.
தொழில் முனைவோரை கீழ் குறிப்பிட்டபடி எப்படி வகைப்படுத்த முடியாது?
இடர்தாங்கி
புதுமைப்படைப்பவர்
ஊழியர்
அமைப்பாளர்
35.
மாற்று முறை ஆவணச்சட்டம் 1881 பிரிவு 6 எதைப் பற்றி இயம்புகிறது?
கடனுறுதிச் சீட்டு
மாற்றுச் சீட்டு
காசோலை
மேற்கூறிய எதுவுமில்லை
36.
விற்பனை ஒப்பந்தத்தில் யாருக்கு விற்பதற்கு உரிமை உண்டு?
வாங்குனர்
விற்பவர்
வாடகைக்கு எடுப்பவர்
அனுப்பப் பெற்றவர்
37.
_____ பொருட்கள், சேவைகள், மூலதனம் மற்றும் உழைப்பு ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக தேசிய பொருளாதாரங்களுக்கு இடையில் தடைகளை அகற்றுவதால் ஏற்படும் விளைவுகளாகும்.
தனியார்மயமாக்கல்
தாராளமயமாக்கல்
உலகமயமாக்கல்
வெளிநாட்டு வர்த்தகம்
38.
சமூக ஊடக சந்தைப்படுத்துதலை சிறப்பாக செயல்படுத்துவது _____ மாற்றுவிகிதத்தை அதிகரிக்கும்.
வாடிக்கையாளரிலிருந்து வாங்குபவராக
சில்லறை வியாபாரிலிருந்து வாடிக்கையாளராக
வாங்குபவரிலிருந்து மற்றும் ஒரு வாங்குபவராக
சந்தையாளருக்கு நேரடி தொடர்பு
39.
VUCA ______, _______, ______, ________.
மதிப்பு நிச்சயமின்மை சிக்கலானது தெளிவில்லாதது
மதிப்பு தவிர்க்க இயலாதது நிறுமம் மற்றும் அதிகாரம்
மாற்றம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது நிறுமம் ஏலம்
மேற்கூறிய அனைத்தும்
40.
நுகர்வோர்கள் இவற்றிற்கு எதிராக பாதுகாக்கப்பட வேண்டும்.
பொருள்களில் குறைபாடுகள்
பொருள்களில் தட்டுப்பாடு
ஒழுங்கற்ற மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட வணிக நடைமுறைகள்
மேலே உள்ள அனைத்தும்
41.
நுகர்வோரின் உரிமைகள் அவர்கள் கொண்டுள்ள நிலையில் ____ ஆகும்.
அளவீடுகள்
விற்பனை அதிகப்படுத்துதல்
பொறுப்புகள்
கடமைகள்
42.
உரிய மறுபயன் அளித்து தனது சொந்த உபயோகத்திற்காகப் பொருட்களையும், சேவைகளையும் ஏற்றுக் கொள்ளும் நபர்
வாடிக்கையாளர்
நுகர்வோர்
வாங்குபவர்
உபயோகிப்பவர்
43.
சந்தையில் உயர் நிலையில் இருப்பவர் யார்?
வாடிக்கையாளர்
விற்பனையாளர்
மொத்த விற்பனையாளர்
சில்லறை விற்பனையாளர்
44.
கீழ்கண்டவற்றுள் எது பங்குகள் மற்றும் பத்திரங்களை வாங்கி, விற்கும் நடவடிக்கையை மேற்கொள்கிறது.
பங்கு சந்தை
தயாரிப்பு பொருள் சந்தை
உள்ளூர் சந்தை
குடும்ப சந்தை
45.
பின்வருவனவற்றில் எவை சிறந்த வேலை செயல்திறனை உறுதிப்படுத்துவதற்காக பணியாளர்களின் திறன் நிலைகளை மேம்படுத்துகிறது?
பயிற்சி
தேர்ந்தெடுப்பு
ஆட்சேர்ப்பு
செயல்திறன் மதிப்பீடு
46.
ஒரு உள்ளார்ந்த திறனை கண்டறிய கருவியாக செயல்படும் சோதனை அடையாளம்
தகுதி பரிசோதனை
மனப்பான்மை பரிசோதனை
நிபுணத்துவம் பரிசோதனை
உடல் பரிசோதனை
47.
பணி மாற்றம் என்பது ஒரு ______ ஆட்சேர்ப்பு வளமாகும்.
அக வள
புற வள
புறத்திறனீட்டல்
மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை.
48.
பணியாளர் சுழற்சி வீதம் என்பது நிறுவனத்தில் பணியாளர்களின் நிலை __________பொழுது ஏற்படுகிறது.
நிறுவனத்திற்குள் உள்ளே வரும்
நிறுவனத்தை விட்டு வெளியே செல்லும்
சம்பள பிரச்சனையின்
மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை
49.
காகித வடிவிலான பங்குகளை மின்னணு வடிவில் மாற்றுவதற்கான செயல்முறை ____ ஆகும்.
புறத்தோற்றமற்ற பத்திரங்கள்
பட்டியலில் இருந்து விலக்குதல்
புறத்தோற்றம் உள்ள பத்திரங்கள்
தடையுள்ள பத்திரங்கள்
50.
____ இதுவே உலகின் பழமையான பங்குச் சந்தையாகும்.
இலண்டன் பங்குச் சந்தை
பம்பாய் பங்குச் சந்தை
தேசிய பங்குச் சந்தை
ஆம்ஸ்டர்டாம் பங்குச் சந்தை
51.
அரசுப் பத்திரங்கள் _______ போன்ற நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன.
மத்திய அரசு
மாநில அரசுகள்
பகுதி அரசு அமைப்புகள்
மேற்கூறிய அனைத்தும்
52.
முதல் நிலைச் சந்தை என்பது பத்திரங்களை/ பிணையங்களை ______ முறை வியாபாரம் செய்யும் ஒரு சந்தை ஆகும்.
முதன்முறை
இரண்டாம் முறை
மூன்றாம் முறை
பலமுறை
53.
மூலதனச் சந்தை என்பது ________ க்கான ஒரு சந்தை ஆகும்.
குறுகிய கால நிதி
நடுத்தர கால நிதி
நீண்ட கால நிதி
குறுகிய கால நிதி
54.
முக்கியமான சிக்கல்களைக் கண்டறிவதன் மூலம், வாய்ப்புகளையும் அச்சுறுத்தல்களையும் மேலாண்மை எச்சரிக்கையாக வைத்திருக்க ________ உதவுகிறது.
முதுகலை வணிக நிர்வாகம்
விதிவிலக்கு மேலாண்மை
முதுகலை வணிக மேலாண்மை
குறியிலக்கு மேலாண்மை
55.
56.
அறிவியல் பூர்வ மேலாண்மை கோட்பாட்டை உருவாக்கி வளர்த்தவர்
ஃபோயல்
டேலர்
மேயோ
ஜேக்கப்
57.
நவீன சந்தையியலின் தலையாய நோக்கம் யாது?
58.
பாதிக்கப்பட்ட நுகர்வோர் தனது புகார் மனுவை யாரிடம் தாக்கல் செய்ய வேண்டும்?
59.
புறத்தோற்ற வர்த்தகம் யாரால், எப்பொழுது தொடங்கப்பட்டது?
60.
திரு ரால்ஃப் நேடார் என்பவர் யார்?
61.
ஊக்கப்பங்குகள் என்றால் என்ன?
62.
இயக்குனர்களின் பதிவேடு என்பது யாது?
63.
திரும்ப திரும்ப நிகழும் மற்றும் நிகழா செலவுகளுக்கு எ.கா தருக.
64.
அபாயமுள்ள பொருள் சார்ந்த நம்புறுதி என்றால் என்ன?
65.
அதிகாரமளிக்கப்பட்ட எழுத்தர் யார்?
66.
தெளிவான தொழில் முனைவோர் - விளக்குக.
67.
ரூ. 5 கோடி அல்லது அதற்கு மேல் பங்கு மூலதனம் கொண்டுள்ள நிறுமத்தின் செயலரின் தகுதிகள் யாவை?
68.
தனியார் மயமாக்கலின் குறைபாடுகளை கூறுக.
69.
நிறுவன வெற்றிக்கு தேவையானவை எவை?
70.
பணியாளர் தேர்ந்தெடுத்தல் நடைமுறைகளை தீர்மானிக்கும் காரணிகள் யாவை?
71.
உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு இரசீதுகள் என்றால் என்ன?
72.
பணியாளர் வேட்டை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
73.
பண்டக சந்தை என்றால் என்ன? அதன் பிரிவுகளை வகைப்படுத்துக
74.
மனித வள மேலாண்மை ஒரு அறிவியலா? அல்லது கலையா? உன்னுடைய கூற்றை தருக.
75.
நிதிச் சந்தையில் நிதிசார் பணிகளைக் கூறுக
76.
மேலாளரின் நேரத்தை சேமிப்பது விதிவிலக்கு மேலாண்மையா? குறியிலக்கு மேலாண்மையா? காரணம் கூறுக.
77.
தொழில் முனைவின் முக்கியத்துவத்தை வரிசைப்படுத்துக
78.
பண வசதி மாற்றுச் சீட்டு என்றால் என?
79.
"மாற்றம்" - வியாபார உலகின் மந்திரச் சொல் - விளக்குக.
80.
மேலாண்மைக்கும், பணியாளர்களுக்கும் இணக்கம் ஏற்படுவதற்கான காரணிகள் யாவை?
81.
மின்னணு சந்தையிடுகை - வரைவிலக்கணம் தருக.
82.
சந்தையிடுகையின் பணிகள் யாவை?
83.
சந்தையின் தேவைகளைக் கூறுக.
84.
புலம் பயணம் முறை பற்றி குறிப்பு வரைக.
85.
சிறப்பு தீர்மானம் என்றால் என்ன?
86.
யார் இயக்குனரை நீக்குகிறார்?
87.
பல்வேறு வகையான முன்னுரிமைப் பங்குகளை சுருக்கமாக கூறுக. (ஏதேனும் 3)
88.
பின்வருவனவற்றிற்கு சிறுகுறிப்பு வரைக.
1) பால்பொருள் உற்பத்தி தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்
2) திட்ட அறிக்கை
89.
அரசியல் சூழல் என்றால் என்ன?
90.
தொழில் முனைவோரின் வணிகப் பணிகளைக் குறிப்பிடுக. (ஏதேனும் 3)
91.
மாற்றுச் சீட்டு மற்றும் கடனுறுதிச்சீட்டினை வேறுபடுத்துக.
92.
பொருள் விற்பனை ஒப்பந்தம் உட்கிடை நிபந்தனைகள் மற்றும் நம்புறுதிகளை விவாதிக்க.
93.
புதிய பொருளாதார கொள்கை பற்றி ஒரு சிறு குறிப்பு தருக.
94.
மின் வணிகத்திற்கும் மின் வியாபாரத்திற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?
95.
சரக்குகள் மற்றும் சேவைகள் வரி குழுவின் செயல்பாடுகள் யாவை?
96.
தன்னார்வ நுகர்வோர் அமைப்பு பற்றி விவரிக்கவும்.
97.
நுகர்வோர் உரிமைகள் - வரையறு.
98.
நுகர்வோர் பாதுகாப்பில் அரசின் பங்கு யாது?
99.
பொருளின் விலையை பாதிக்கும் காரணிகள் யாவை?
100.
சந்தையிடுகையாளரின் பங்களிப்பு எவையேனும் மூன்றினை குறிப்பிடுக.
101.
பயிற்சி அளிப்பவர் மற்றும் பயிற்சி பெறுபவர் பற்றி சிறு குறிப்பு எழுதுக.
102.
உயர்மட்டக் குழு நேர்காணல் ஏன் நடத்தப்படுகிறது?
103.
வேலை வாய்ப்பு இணையதளங்கள் என்றால் என்ன?
104.
மனித வள மேலாண்மையின் பணிகளை கூறுக.
105.
செபி அமைப்பின் கட்டமைப்புகளை வரைக.
106.
தேசிய பங்குச் சந்தை முறை (NSMS) பற்றி விளக்குக.
107.
கருவூல இரசீதின் பொது இயல்புகள் யாவை? (ஏதேனும் 3)
108.
மூலதனச் சந்தையின் ஏதேனும் இரண்டு பணிகளை விளக்குக.
109.
உடனடி சந்தை மற்றும் எதிர் நோக்கிய சந்தைகளுக்கும் இடையேயான வேறுபாடுகளை விளக்குக.
110.
குறியிலக்கு மேலாண்மையின் ஏதேனும் மூன்று செயல்முறைகளைப் பட்டியலிடுக.
111.
செயலூக்கமளித்தலின் நன்மைகளைக் குறிப்பிடுக.
112.
மேலாண்மை கலையா? அறிவியலா?
113.
நுகர்வோரின் எங்கிருந்து பொருட்களை வாங்குவது சிறந்ததாக கருதப்படுகிறது?
114.
நுகர்வோர்கள் சுரண்டப்படுவதற்கான காரணங்கள் யாது?
115.
செபியின் நிர்வாக உறுப்பினர்கள் யாவர்?
116.
நுகர்வோர்கள் சட்டப்படி எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள்?
117.
நிறுமம் எவ்வகையான வாழ்நாளைக் கொண்டது?
118.
பங்கெடுப்பாளர் என்பவர் யார்?
119.
தொழிற் கொள்கைகளை உருவாக்குவதன் நோக்கம் யாது?
120.
நிறும செயலர் வரைவிலக்கணம் தருக.
121.
பாரம்பரிய தொழில் முனைவோரை பற்றி கூறுக.
122.
உடமை மற்றும் உரிமை வேறுபடுத்துக.
123.
பட்டியலிடப்படாத பத்திரங்கள் என்றால் என்ன?
124.
உலகமயமாக்கல் என்றால் என்ன?
125.
நிறுவன வெளிப்புறத்தோடு தொடர்புடைய காரணிகள் யாவை?
126.
நேர்காணல் - வரைவிலக்கணம் தருக.
127.
கருவூல இரசீது சந்தை என்றால் என்ன?
128.
பதவி இறக்கம் என்றால் என்ன?
129.
முதல் நிலைச் சந்தையில் எவ்வாறு மூலதனத்தை திரட்டலாம்?
130.
மனித வளத்தின் வரைவிலக்கணம் தருக.
131.
முதல் நிலைச் சந்தை என்றால் என்ன?
132.
சந்தையிடுகையும் விற்பனையும் ஒன்றா? ஏன்?
133.
எதன் அடிப்படையில் குறிக்கோள்கள் கட்டமைக்கப்படுகின்றன?
134.
கொணர்பவர் காசோலை என்றால் என்ன?
135.
"செயல்படுவதற்கு முன் சிந்தியுங்கள்" - இந்த கூற்று எந்த மேலாண்மை செயல்பாடுடன் தொடர்புடையது?
136.
முறைமை எப்படி இருக்க வேண்டும்?
137.
பரிந்துரை சந்தையிடுதல் என்றால் என்ன?
138.
பெயரிடல் என்றால் என்ன?
139.
பன்னாட்டு சந்தை என்றால் என்ன?
140.
பயிற்சி முறை - வரைவிலக்கணம் தருக.
141.
"பகராள்" சிறு குறிப்பு வரைக.
142.
முழுநேர இயக்குநர் என்பவர் யார்?
143.
நிறுமம் உருவாக்கத்தில் உள்ள நான்கு நிலைகள் யாவை?
144.
டிஜிட்டல் இந்தியாவைப் பற்றி குறிப்பு வரைக.
145.
தெளிவான தொழில் முனைவோருக்கு உதாரணம் தருக.
146.
தொழில் முனைவோரின் சிறப்பியல்புகள் இரண்டினை குறிப்பிடுக.
147.
மாற்றுச்சீட்டு வரையறு.
148.
149.
தாராளமயமாக்கலின் ஏதேனும் இரண்டு குறைபாடுகளை குறிப்பிடுக.
150.
பசுமை சந்தையிடுதல் என்றால் என்ன?
151.
VUCA -ஐ விரிவாக்கம் தருக.
152.
மாநில ஆணையம் என்ற பதத்தை விவரிக்கவும்.
153.
தகவல் பெறும் உரிமை (Right to be informed) பற்றி சிறு குறிப்பு வரைக.
154.
கலப்படத்திற்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
155.
பண்டங்கள் மற்றும் பணிகளின் விலையை பாதிக்கும் அக காரணிகள் இரண்டினைத் தருக.
156.
மொத்த விற்பனை சந்தைக்கும் மற்றும் சில்லறை விற்பனை சந்தைக்கும் இடையே உள்ள நான்கு வேறுபாடுகளை குறிப்பிடுக.
157.
மின்னணு கற்றல் முறை பற்றி கூறுக.
158.
தன்விளக்கக் குறிப்பு பற்றி நீவீர் அறிவது யாது?
159.
வளாக ஆட்சேர்ப்பின் அம்சங்களில் ஏதெனும் இரண்டை குறிப்பிடுக.
160.
161.
செபியின் தலைமையகம் பற்றி குறிப்பிடுக.
162.
ஊகவணிகர்களின் வகைகள் யாவை?
163.
அரசுப் பத்திரங்கள் சந்தை என்றால் என்ன?
164.
மூலதனச் சந்தை என்றால் என்ன?
165.
நிதிச்சந்தை - சிறு குறிப்பு வரைக.
166.
குறியிலக்கு மேலாண்மைக்கு வரைவிலக்கணம் தருக.
167.
திட்டமிடுதல் என்றால் என்ன?
168.
மேலாண்மை என்றால் என்ன?
169.
செபியின் நோக்கங்களை விளக்குக
170.
நிப்டி (NIFTY 50) - விளக்குக
171.
பணித் தேர்வின் முக்கியத்துவத்தை விளக்குக.
172.
வைப்புச் சான்றிதழ் மற்றும் அதன் இயல்புகளைக் கூறுக
173.
ஆட்சேர்ப்பின் முறையின் வளங்களை விவரிக்க.
174.
மனித வள மேலாண்மையின் முக்கியத்துவத்தை தருக.
175.
குறியிலக்கு மேலாண்மையின் செயல்முறைகளை விளக்குக.
176.
மேலாண்மையின் துணை செயல்பாடுகளை விளக்குக.
177.
மேலாண்மையின் அடிப்படைக் கருத்துக்களை விளக்குக.
178.
பல்நோக்கு அளவு மட்ட லெவல் சந்தையிடுதல் பற்றி விளக்குக.
179.
சந்தையிடுகை பணிகளை விளக்குக.
180.
சந்தையிடுகையாளரின் பணிகளை விளக்குக.
181.
பயிற்சியின் நோக்கம் யாது? அல்லது பயிற்சியின் அவசியம் என்ன?
182.
நிறுமச் செயலரின் பணிகளை விளக்கு?
183.
இயக்குனர் அவர்களின் இடம்பெற்றுள்ளவைகளை எழுதுக.
184.
பங்கு முதலைக் கொண்டுள்ள நிறுமம் தொழிலை துவங்கிட நிறைவேற்ற வேண்டிய சடங்குமுறைகள் கூறி விளக்குக.
185.
186.
ஊரக மற்றும் நகர்ப்புற தொழில்முனைவோரை வேறுபடுத்திக் காட்டுக.
187.
தொழில் முனைவோரின் சிறப்பு இயல்புகள் யாவை? (ஏதேனும் 5)
188.
மாற்றுமுறை ஆவணத்தின் எடுகோள்கள் யாவை?
189.
விற்பனை ஒப்பந்தத்தின் அடிப்படை கூறுகளைக் கூறி விளக்குக.
190.
தாராளமயமாக்கல் நன்மைகள் மற்றும் குறைபாடுகள் பற்றி விளக்குக. (ஏதேனும் 5)
191.
மின்னணு விற்பனையில் நன்மை தீமைகளை விளக்கு.
192.
வியாபாரத்தின் நுண்ணிய சூழல் காரணிகளை விளக்கு. (ஏதேனும் 5)
193.
மாநில ஆணையத்தின் ஒட்டுமொத்த செயல்திறனை விளக்குக.
194.
நுகர்வோரின் உரிமைகள் யாவை?
195.
நுகர்வோர் பாதுகாப்பின் தேவைகள் யாவை?
196.
சந்தை என்ற சொல்லை விளக்குக.
197.
சந்தை எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது? விவரி.(ஏதேனும் 5)
198.
பயிற்சியின் பல்வேறு முறைகளை விவரி? (ஏதேனும் 5)
199.
பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான முக்கியமான நேர்காணலின் வகைகளை விளக்குக? (ஏதேனும் 5)
200.
ஆட்சேர்ப்பு மற்றும் தேர்வினை வேறுபடுத்திக் காட்டுக.
201.
மனித வளத்தின் தனிப்பட்ட அம்சங்களை விளக்குக.
202.
செபியின் அதிகாரங்களை விவரி. (ஏதேனும் 5)
203.
லம்பார்டு தெரு மற்றும் வால் தெரு - விளக்குக.
204.
பணச்சந்தையின் ஆவணங்களை விவரி.
205.
நிதிச் சந்தையின் பல்வேறு வகையான புதிய நிறுவனங்களை விளக்குக. (ஏதேனும் 5)
206.
நிதிச் சந்தையின் பங்கினை விவாதிக்கவும்.
207.
குறியிலக்கு மேலாண்மையின் பல்வேறு குறைபாடுகளை விளக்குக.
208.
மேலாண்மையின் பல்வேறு பணிகளை விளக்குக. (ஏதேனும் 5)
209.
மேலாண்மையின் அடிப்படைக் கருத்துக்களை விவரி. (ஏதேனும் 5)
1.
(c)
நுகர்வோர்
2.
(d)
30
3.
(c)
Consumer Protection Act
4.
(d)
மூலதனச் சந்தை
5.
(b)
2
6.
(c)
நான்கு
7.
(b)
3
8.
(b)
2015
9.
(b)
நவீன தொழில் முனைவோர்
10.
(b)
இரண்டு
11.
(d)
1.3 மில்லியன்
12.
(a)
லண்டன் பங்குச் சந்தை
13.
(c)
பொதுமக்கள்
14.
(b)
அதிக செலவு
15.
(c)
364 நாட்கள்
16.
(a)
தொழிற்சாலை வாயிலில்
17.
(d)
முதல் நிலைச் சந்தை
18.
(d)
இவை அனைத்தும்
19.
(b)
பல முறை
20.
(a)
1886
21.
(d)
அளவுகோலாக
22.
(b)
மூன்று
23.
(b)
பணியாளர்களின்
24.
(a)
உயரமான
25.
(c)
உள்ளடக்க சந்தை
26.
(b)
விலை
27.
(a)
குடும்பச் சந்தை
28.
(b)
புலம் பயணம் முறை
29.
(d)
ஊழியர்
30.
(a)
பெயரளவு
31.
(a)
பொது
32.
(b)
இந்தியாவில் தயாரிப்போம் திட்டம்
33.
(b)
2016
34.
(c)
ஊழியர்
35.
(c)
காசோலை
36.
(b)
விற்பவர்
37.
(c)
உலகமயமாக்கல்
38.
(a)
வாடிக்கையாளரிலிருந்து வாங்குபவராக
39.
(a)
மதிப்பு நிச்சயமின்மை சிக்கலானது தெளிவில்லாதது
40.
(d)
மேலே உள்ள அனைத்தும்
41.
(c)
பொறுப்புகள்
42.
(b)
நுகர்வோர்
43.
(a)
வாடிக்கையாளர்
44.
(a)
பங்கு சந்தை
45.
(a)
பயிற்சி
46.
(a)
தகுதி பரிசோதனை
47.
(a)
அக வள
48.
(b)
நிறுவனத்தை விட்டு வெளியே செல்லும்
49.
(a)
புறத்தோற்றமற்ற பத்திரங்கள்
50.
(d)
ஆம்ஸ்டர்டாம் பங்குச் சந்தை
51.
(d)
மேற்கூறிய அனைத்தும்
52.
(a)
முதன்முறை
53.
(c)
நீண்ட கால நிதி
54.
(b)
விதிவிலக்கு மேலாண்மை
55.
(c)
56.
(b)
டேலர்
57.
நுகர்வோரை திருப்தி செய்வது என்பது நவீன சந்தையியலின் தலையாய நோக்கமாகும்
58.
(i) தயாரிப்பாளர் (அல்லது)
(ii) விற்பனையாளர் (அல்லது)
(iii) பொருளை விற்ற வணிகர்
59.
(i) 1996ம் ஆண்டு டிசம்பர் மாதம் தேசிய பங்குச் சந்தை (NSE) முதன் முதலாக புறத்தோற்ற பத்திரங்களை வர்த்தகத்தை தொடங்கியது
(ii) ரிலையன்ஸ் நிறுவனம் முதன்முதலாக 100 பங்குகளை புறத்தோற்றமற்ற வடிவ பத்திரங்கள் விற்பனையில் ஈடுபட்டது
(iii) 1997, டிசம்பர் மாதம் மும்பை பங்குச் சந்தை புறத்தோற்ற பத்திரங்கள் வர்த்தகத்தை தொடங்கியது
60.
(i) இவர் நுகர்வோர் இயக்கத்தின் தந்தை ஆவர்
(ii) அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பெருநிறுமங்களின் முற்றுரிமை மற்றும் நியாயமற்ற வணிக நடைமுறைகளை எதிர்த்து பல்வேறு போராட்டம் நடத்தியவர்
61.
1. செயல்முறை விதிகளின்படி ஒரு நிறுமமானது தனது முதலில் ஏற்பட்ட இலாபத்தை பெருக்கும் நோக்கில் முழுவதும் செலுத்தப்பட்ட பங்குகளை ஊக்கப்பங்காக வெளியிடுகிறது.
2. நிறுமத்தின் உபரிகளையும் காப்புகளையும் முறையாக பயன்படுத்துதல் ஆகும்.
3. முந்தைய பங்குதாரர்கள் எவ்வித மறுபயன் எதிர்பார்க்காமல் இது வெளியிடப்படும்.
62.
1. இது பங்குதாரர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இயக்குனர் பட்டியல்.
2. பொதுவாக இதில் கம்பெனியின் கூட்ட நடவடிக்கை எழுதப்படும்.
3. இயக்குனர் பதவியிலிருந்து இறந்தவர்கள், பதவி விலகியவர்கள், நீக்கப்பட்டவர்களின் விவரமும் இருக்கும்.
63.
(i) திரும்ப திரும்ப நிகழும் செலவு - இயந்திரம், நிலம், கட்டடம் மற்றும் ஆலை செலவு.
(ii) திரும்ப திரும்ப நிகழா செலவு - கூலி, சம்பளம் மற்றும் மேல்நிலை செலவு
64.
1. தான் வாங்கும் பொருட்கள் அபாயமானவை அல்லது வாங்குநருக்கு அபாயத்தை விளைவிக்கும் என விற்பவர் அறிந்திருந்தால், வாங்குநரிடம் அது குறித்து எச்சரிக்கை செய்ய வேண்டும்.
2. இல்லையெனில் வாங்குநருக்கு விற்கப்பட்ட பொருளால் ஏற்படும் விபத்திற்கு நட்ட ஈடு தர வேண்டும்.
65.
(i) இவர்கள் பங்கு மாற்றத்தின் உறுப்பினராக இருப்பவரால் தனக்குப் பணியாளராக அமர்த்தப்பட்டவர் ஆவர்
(ii) இவர்கள் தங்களுடைய பணியாண்மையரின் சார்பாகப் பங்கு மாற்றத்தின் தளத்தில் தொழில் செய்வதற்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளனர்
(iii) இவர்கள் சம்பளமும், கழிவும் பெறுவர்
66.
1. உளவியல் மற்றும் பொருளாதார காரணிகளால் உந்தப்பட்டு தொழில் துவங்க முனைந்தவர்கள்
2. இவர்கள் வேறு யாரிடமும் பணிபுரிய விரும்ப மாட்டார்கள்.
3. தன்னுடைய அறிவு, அனுபவம், திறமை, ஆற்றல் போன்றவற்றை உள்ளீடாக செலுத்தி இலாபம் ஈட்டுபவர்கள்.
எ.கா : திருபாய் அம்பானி, T.V. சுந்தரம். டாடா பிர்லா.
67.
1. இந்திய நிறும செயலர்களின் நிறுவனத்தின் உறுப்பினராக இருக்க வேண்டும்.
2. இலண்டன் பட்டய செயலாளர்கள் நிறுவனத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
68.
1. பொது நலனில் கவனமின்மை
2. அரசியல் நிர்பந்தம்
3. பொருளாதார நலிவடைந்த பிரிவுகளை புறக்கணித்தல்
69.
1. நிறுவன வெற்றி மனித வளத்தினை சார்ந்துள்ளது.
2. நிறுவனத்தின் வெற்றிக்கு தரமான, திறமையான, சரியான அணுகுமுறை மற்றும் மனிதவள உறுதிப்பாடு அவசியம்.
70.
1. பணியின் தன்மை
2. விண்ணப்பத்தார்களின் எண்ணிக்கை
3. தேர்ந்தெடுத்தல் கொள்கை
4. செலவு காரணி திட்டம்
5. கல்வித் தகுதி, அனுபவம் மற்றும் வெளிப்பாடு நிலை
71.
உள்நாட்டு இரசீது:
இந்தியாவில் குடியிருக்கும் ஒரு நபருக்கு, இந்தியாவில் எழுதப்பட்ட மற்றும் செலுத்த வேண்டிய இரசீதுகள் உள்நாட்டு இரசீதுகள் என்று அழைக்கப்படும்
அயல்நாட்டு இரசீதுகள்:
இந்தியாவிற்கு வெளியே எழுதப்பட்டு, இந்தியாவிலோ அல்லது அயல்நாட்டிலோ செலுத்தப்படும் இரசீதுகளை அயல்நாட்டு இரசீதுகள் என்று அழைக்கப்படும்
72.
உயர் ஊதியம் மற்றும் அதிக பலன்கள் வாங்குவதன் மூலம் போட்டி நிறுவனங்களில் வேட்டை என்பதாகும்.
எடுத்துக்காட்டு : விற்பனை பிரதிநிதிகள், மேலாளர்கள், பட்டய கணக்காளர்கள்
73.
பண்டக சந்தை:
வழங்கப்படும் புற கொள்முதல்களை அதிகப்படியாக கடந்து செல்லும் நிதி பரிவர்த்தனைகள் கொண்ட 50 முக்கிய பண்டக சந்தைகளுக்கு இடையே முதல் நிலை பொருட்களை வர்த்தகம் செய்வதை பண்டக சந்தை மேலாண்மை செய்கிறது
கடின பண்டகச் சந்தை:
கடின பொருட்கள் என்பவை பொதுவாக தோண்டி எடுக்கப்படும் மூலப்பொருட்கள்.
உதாரணம்: தங்கம், எண்ணெய், ரப்பர், இரும்பு மற்றும் தாது
மென் பண்டகச் சந்தை:
மென் பண்டகம் என்பது பொதுவாக விவசாயம் சார்ந்த முதல் நிலைப் பொருட்கள் ஆகும்
உதாரணம்: கோதுமை, பருத்தி, சர்க்கரை
74.
1. மனித வள மேலாண்மை என்பது அறிவியல் மற்றும் கலை ஆகிய இரண்டுமாக இருத்தல் வேண்டும்.
2. இது சோதனைகள் மற்றும் உற்றுநோக்கல் அடிப்படையிலும் அத்துடன் திறம்பட மனித வளத்தைக் கையாள்வதின் அடிப்படையிலும் இவை அறிவியல் மற்றும் கலை ஆகிய இரண்டுமாக கருதப்படுகிறது.
75.
1. கடன் வாங்குபவர்களுக்கு நிதியை வழங்குகிறது. இதன் மூலம்தான் அவர்கள் தங்களின் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்த முடியும்
2. கடன் வழங்குபவர்கள் சொத்துக்களை ஈட்ட வழிவகை செய்கிறது. இதன் மூலம் அவர்கள் சொத்துக்களை உற்பத்தி சார்ந்த துணிகர முயற்சியை பயன்படுத்தி செல்வம் ஈட்ட முடிகிறது
3. சந்தையில் நீர்மைத் தன்மையை வழங்குகிறது. இதன் மூலம் நிதியை வணிகம் செய்ய உதவுகிறது
76.
1. விதிவிலக்கு மேலாண்மை என்பது ஒரு மேலாளரின் நேரத்தை சேமிக்கிறது.
2. ஒரு மேலாளர் விதிவிலக்கான செயல்களை மட்டுமே கையாளுகிறார்.
3. இவர் வழக்கமான பிரச்சனைகளை கீழ்நிலை ஊழியர்களின் வசம் விடுகிறார்.
77.
(i) புதுமை படைத்தல்
(ii) நாட்டின் மொத்த பொருள் உற்பத்திக்கு பங்களித்தல்
(iii) சீரான வட்டார வளர்ச்சி
(iv) ஏற்றுமதி முன்னேற்றம்
(v) உள்ளார்ந்த வளப் பயன்பாடு
(vi) பொருளாதார சக்தி குவிதலை தவிர்த்தல்
(vii) வாழ்க்கைத் தர உயர்ச்சி
78.
பின்னாளில் ஒருவருக்கு உதவும் என்ற நோக்குடன் மறுபயன் இன்றி வரையப்படும் மாற்றுச் சீட்டு பணவசதி மாற்றுச் சீட்டு எனப்படும்
79.
1. வியாபாரத்தில் தொடர்ச்சியான மாற்றங்கள் நிகழ்கின்றன.
2. புதுமைப்படுத்துதல் அல்லது மாற்றங்கள் மூலம் நுகர்வோர்கள் திருப்தி அடைகின்றனர்.
3. மாற்றங்கள் மூலம் நிறுவனத்தின் வளர்ச்சியும், இலாபமும் பெருகுகின்றது.
80.
1. இலாப உபரியை பணியாளர்களோடு பகிர்ந்து கொள்ளல்
2. பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல்
3. வேலைப் பகிர்வு
4. ஒற்றுமை உணர்வு
5. நேர்மறை மனநிலை
6. ஒழுங்குணர்வு
7. நேர்மை
81.
ஜூடி ஸ்ட்ராஸின் கூற்றுப்படி, சிறந்த இடப் பகிர்வு, தகவல் தொழில்நுட்ப பொருள் வேறுபடுத்தும் மற்றும் நிலைப்படுத்தும் உத்திகளை மிக பரவலாக பயன்படுத்துவதன் வழியாக நுகர்வோரின் மதிப்பை அதிகரிப்பது மட்டுமல்லாமல், பொருள் மற்றும் சேவைகளின் விலையை தீர்மானிப்பது, விநியோகிப்பது, விற்பனை மேம்பாடு தனிநபர் மற்றும் நிறுவன நுகர்வோரின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் பரிமாற்றத்தை திட்டமிட்டு உருவாக்குதல் போன்றவற்றிற்கு மின் இணையத்தை மிகச் சீரிய முறையில் சிறப்பாக செயல்படுவதை மின்னணு சந்தையிடுகை குறிக்கும்.
82.
83.
1. பண்டங்கள் மற்றும் பணிகளை பரிமாற்றம் செய்ய வழிவகுக்கிறது.
2. விலைக் கொள்கை மூலம் தேவை மற்றும் அளிப்பை சரி செய்கிறது.
3. சமுதாயத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வழிவகை செய்கிறது.
4. வாழ்க்கையின் புதிய முறையை அறிமுகப்படுத்துகிறது.
5. பொருள் மேம்பாடு மூலம் சந்தை பகுப்பை மேம்படுத்துகிறது.
84.
வழக்கமாக பணிபுரியும் இடத்தை விட்டு வேறு ஒரு இடத்திற்கு பணியாளர்கள் குழுவாக சேர்ந்து பயணித்து சென்ற இடத்தில் இருக்கும் தொழில் வல்லுநர்களிடம் விளக்கம் கேட்டு தங்களது திறனை வளர்த்துக் கொள்வதே புலப்பயணம் முறை சார்ந்த பயிற்சி எனப்படும்.
85.
ஒரு முடிவை நிறைவேற்ற கூட்டத்திற்கு வருகை புரிந்துள்ள பங்குனர்களின் எண்ணிக்கையில் 75 சதவீதம் நபர்கள் முடிவிற்கு சாதகமாக வாக்களித்தால் அது சிறப்பு தீர்மானம் ஆகும். அதாவது முடிவிற்கு எதிராக வாக்களித்தவர்களின் எண்ணிக்கையை போல மூன்று மடங்கு அதிகமான எண்ணிக்கையில் முடிவு சாதகமாக வாக்களித்து முடிவை நிறைவேற்றினால் அது சிறப்பு தீர்மானம் ஆகும்.
(i) சிறப்பு தீர்மானம் தேவைப்படும் நடவடிக்கைகள்
(ii) நிறுமத்தின் பதிவு அலுவலகத்தை ஒரு மாநிலத்திலிருந்து பிற மாநிலத்திற்கு மாற்றம் செய்ய.
(iii) நிறுமத்தின் நோக்கத்தை மாற்ற
(iv) நிறுமத்தின் பெயரை மாற்ற
(v) சட்ட நடைமுறை விதிகளை திருத்தம் செய்ய
(vi) நீதிமன்ற உத்தரவுக்கு இணங்கி நிறும பங்கு முதல் தொகையை குறைக்க.
(vii) புதிய தொழிலைத் தொடங்க
(viii) தணிக்கையாளரை பணியமர்த்த.
(ix) மொத்த விற்பனை முகவர்களை பணியமர்த்த
(x) இயக்குநர்கள் மற்றும் மேலாண்மை இயக்குநர்களின் ஊதியத்தை தீர்மானிக்க.
86.
(i) பங்குதாரர்கள்
(ii) மத்திய அரசு
(iii) கம்பெனி/நிறும சட்ட வாரியம்
87.
(i) குவிவு முன்னுரிமைப் பங்குகள்: அனைத்து பங்காதாய நடவடிக்கைகள் ஒரு சிறப்பான முறையில் செலுத்தி இறுதி வரையிலும் குறிப்பிட்ட காலம் முடியும் வரை பயன்படுத்தப்படும்.
(ii) குவியா முன்னுரிமைப் பங்குகள்: ஒருங்கிணைக்கப்பட்ட முன்னுரிமைப் பங்குகளுக்கு எதிராக இருப்பது ஒருங்கிணைக்கப்படாத முன்னுரிமைப் பங்குகள் ஆகும்.
(iii) மீள்தகு முன்னுரிமைப் பங்குகள் : ஒரு நிலையான காலம் (அ) தவணை நாள் முடிந்து பெறக் கூடிய பங்குகள் ஆகும்.
(iv) மீள்தகா முன்னுரிமைப் பங்குகள்: நிறுமத்தை கலைக்கும் போது (அ) சொத்துக்களை விற்று நீர்மைத் தன்மை ஆக்கும் போது பெறக் கூடிய பங்குகள் ஆகும்.
(v) மாற்றக் கூடிய முன்னுரிமைப் பங்குகள்: ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் சாதாரண பங்குகளை மாற்றக் கூடிய தன்மை கொண்ட பங்குகள் ஆகும்.
(vi) மாற்ற முடியாத முன்னுரிமைப் பங்குகள்: எந்த சூழ்நிலையிலும் சாதாரண பங்குகளாக மாற்ற இயலாத தன்மை கொண்ட பங்குகள் ஆகும்.
88.
1. பால் பண்ணை தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் :
விவசாயம், செல்லப்பிராணிகள், விலங்குகள் மற்றும் சிறிய பால்பண்ணைகளை உருவாக்கும் செயல்திட்டங்களுக்கும் மற்றும் அதற்கான கருவிகளை வாங்க நிதி உதவி அளிப்பது.
2. திட்ட அறிக்கை :
நிதியியல், தொழில்நுட்ப அறிவு உழைப்பு மற்றும் மூலப் பொருட்களின் ஆதாரங்கள், சந்தை திறன் மற்றும் இலாபத்தன்மை போன்ற அம்சங்களை உள்ளடக்கிய அறிக்கை.
89.
1. எந்த ஒரு அரசியல் காரணங்கள் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தவும், பாதிக்கவும் செய்கிறதோ அதுவே அரசியல் சூழல் எனப்படும்.
2. அந்த ஊக்கம் அல்லது பாதிப்பு ஊரக, தேசிய அளவில் கூட இருக்கலாம்.
3. தொழில் முனைவோர் அந்த அரசியல் காரணிகளை நன்கு ஆராய்ந்து செயல்பட வேண்டும்.
90.
(i) உற்பத்தி அல்லது தயாரிப்பு பணி: உற்பத்தி பணியை பொறுத்தவரை தொழில் முனைவோர் எந்த இடத்தில் தொழிலை நிறுவுவது; தொழிலை நிறுவிய இடத்தின் உள் அமைப்பு எப்படி இருக்கவேண்டும்; என்ன பொருளை தயாரிக்க வேண்டும். எந்த அளவு உற்பத்தி பொருட்கள் இருக்கவேண்டும், பொருளின் வடிவம் எப்படி இருக்க வேண்டும். போன்ற உற்பத்தி தொடர்பான பணிகளை முடிவு செய்து செயலில் இறங்கவேண்டும்.
(ii) சந்தையிடுகை: சந்தையிடுகை என்ற சொல் பொருள் உற்பத்திக்கு முன்பே தொடங்கி பொருளை உற்பத்தி செய்த பின் வாடிக்கையாளர் வசம் கொண்டு சேர்க்கும் வரையிலான ஒட்டு மொத்த நடவடிக்கைகளையும் உள்ளடக்கிய சொல். பொருளின் விற்பனையை கூட்ட விற்பனையை பெருக்க நடவடிக்கை மேற்கொள்ளல், விளம்பரம் செய்தல், பொருளை விற்க விற்பனையாளரை அமர்த்தல் போன்ற பல பணிகளை தொழில். முனைவோர் செய்ய வேண்டும்.
(iii) கணக்கியல் பணி: கணக்கியல் பணி என்பது நிதிநிலையை அறியும் பணி. அதாவது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மேற்கொண்ட தொழில் முயற்சியில் இலாபம் வந்துள்ளதா அல்லது நட்டம் வந்துள்ளதா எனவும் குறிப்பிட்ட நாளில் முனைந்த தொழிலின் நிதி நிலை எப்படி உள்ளது அதாவது நிலைச் சொத்துக்களின் மதிப்பு என்ன? பொறுப்புகளின் மதிப்பு எண் மூலதனம் எவ்வளவு கூடியுள்ளது அல்லது குறைந்துள்ளது. பிறருக்கு தரவேண்டிய பொறுப்புகள் எவ்வளவு என அறிய இருப்புநிலை குறிப்பு மற்றும் இலாப நட்டக் கணக்கு தயாரிக்கும் பணியையும் தொழில் முனைவோர் மேற்கொள்ள வேண்டும்.
91.
| வ. எ | வேறுபாடுகளின் இயல்புகள் | மாற்றுச்சீட்டு | கடனுறுதி சீட்டு |
| 1 | உறுதிமொழி தன்மை | நிபந்தனையற்ற முறையாவணம் | நிபந்தனையற்ற பணம் தருவதற்கான கடன் உறுதிமொழி பத்திரம் |
| 2 | தரப்பினர் | மூன்று நபர்கள் இருப்பார்கள் 1. வரைபவர் 2. வரையப் பெற்றவர் 3. பணம் பெறுபவர் |
இரண்டு தரப்பினர் மட்டுமே இருப்பர் 1. வரைபவர் 2. பணம் பெறுபவர். |
| 3 | வரைபவர் | கடனாளர் | கடனாளி |
| 4 | தரப்பினர் அடையாளம் | எழுதுபவரும் பணம் பெறுபவரும் ஒரே நபராக இருக்கலாம். | இதனை எழுதுபவரே பணம் பெறுபவராக இருக்க முடியாது. |
| 5 | பொறுப்பாக்கப்படும் வரிசை | மாற்றுச்சீட்டை எழுதியவரின் பொறுப்பு இரண்டாம் பட்சமானது மாற்றுச் சீட்டை ஏற்றவர் பணம் தராமல் மறுக்கும் போது மட்டுமே வரைபவரின் பொறுப்பு எழும். | கடனுறுதி சீட்டை எழுதியவரின் பொறுப்பு முதன்மையானது. |
| 6 | கொணர்பவர் பத்திரம் | இதை கொணர்பவருக்கு கொடுக்கும்படி வரையலாம். | இதை கொணர்பவருக்கு தருவதாக வரைய சட்டம் தடை செய்கிறது. |
| 7 | ஏற்பு | இதனை எழுதப் பெற்றவர் ஏற்க வேண்டும் | இதை கடனாளியே எழுதுவதால் ஏற்க அவசியமில்லை |
| 8 | படிகள் (வடிவம்) | அயல்நாட்டு மாற்றுச் சீட்டு மூன்று படிகளில் தயாரிக்கப்படுகிறது | கடனுறுதி சீட்டு ஒரு படியில் மட்டுமே எழுதப்படுகிறது |
| 9 | நிபந்தனைக்கு உட்படுதல் | மாற்றுச் சீட்டினை நிபந்தனைக்கு உட்படுத்தலாம் | இதனை நிபந்தனைக்கு உட்படுத்த இயலாது |
| 10 | அவமதிப்பு அறிவிப்பு | மேலெழுதியவருக்கு (அ) வரைந்தவருக்கு மாற்றுச் சீட்டு அவமதிக்கப்பட்ட செய்தியை அறிவிக்க வேண்டும். | அவமதிப்பு அறிவிப்பு தேவையில்லை |
92.
உட்கிடை நிபந்தனைகள் :
(i) உரிமை குறித்த நிபந்தனை : பொருளை விற்பவர் அந்தக் குறிப்பிட்டப் பொருளை விற்க உரிமை கொண்டவர். வாங்குபவர் பொருளை விற்பவர். அந்த பொருளை விற்பதற்கு உரிமையுள்ளவர் என்று கருதிக் கொள்ளலாம்.
(ii) விவரிப்பு குறித்த நிபந்தனை : விவரிப்பு மூலம் விற்பனை செய்யப்பட்ட சரக்கு விவரித்தபடியே இருக்க வேண்டும். அதாவது வாங்குபவர் வாங்க விரும்பும் பொருளின் உண்மை நிலையை சோதித்து அறியும் வாய்ப்பைப் பெற்றிருந்தால் அப்பொழுது இந்த விதி பொருந்தாது.
உட்கிடை நம்புறுதிகள் :
(i) இடையூறற்ற உரிமை: தான் வைத்திருக்கும் சரக்கைப் பிறர் இடையூறு இன்றி முழுமையாக அனுபவிக்க முடியும் என்ற நம்புறுதி உடன்பாட்டில் உண்டு. வேறு யாரேனும் தன்னை விட சிறந்த உரிமை இருப்பதாகக் கூறிக்கொண்டு பின்னர் சரக்கு உரிமைக்கு இடையூறு விளைவித்தால், விற்குநரிடம் வாங்குனர் நட்ட ஈடு பெறும் உரிமை பெற்றவர்.
(ii) வில்லங்கம் பற்றிய நம்புறுதி: தான் வாங்கிய சரக்கு மூன்றாம் நபரின் பிணையத்திற்கு உட்பட்டதல்ல என்ற வில்லங்கம் பற்றிய நம்புறுதி விற்பனை ஒப்பந்தத்தில் உண்டு.
93.
(i) இந்தியா 1991 ஆம் ஆண்டு, பன்னாட்டு பண நிதியம் (IMF) என பிரபலமாக அறியப்பட்ட சர்வதேச மறு சீரமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான சர்வதேச வங்கி (IBRD)ஐ அணுகுகிறது மேலும் வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்த $7 மில்லியனை அமெரிக்க டாலர்களை கடனாக பெற்றது. தனியார் துறை மீதான கட்டுப்பாடுகளை நீக்குதல் மற்றும் இந்தியாவிற்கும் மற்ற நாடுகளுக்கும் இடையில் வர்த்தக கட்டுப்பாட்டை அகற்றுவதன் மூலம் பொருளாதாரத்தை தாராளமயமாக்கல் என்பது இந்த நிறுவனங்களின் எதிர்பார்ப்பு ஆகும்.
(ii) உலக வங்கி மற்றும் சர்வதேச நாணயநிதியத்தின் (IMF) நிலைமைகளுக்கு இந்தியா உட்பட்டு மற்றும் பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்கள் கொண்ட புதிய பொருளாதாரக் கொள்கையை (NEP) அறிவித்தது. இந்த புதிய பொருளாதார சீர்திருத்தங்கள் பொதுவாக எல்பிஜி (LPG) அல்லது தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் என்று அழைக்கப்படுகிறது.
94.
| வ.எண். | அடிப்படை | மின் வணிகம் | மின் வியாபாரம் |
| 1. | பொருள் | மின் வணிகம் என்பது மின் வலைய தளத்தின் வழியாக பொருள்கள் மற்றும் சேவைகளை பெறுவதையும் அளிப்பதையும் குறிக்கும். | மின் வியாபாரம் என்பது பொருள் மற்றும் சேவைகளை பெறுவது, அளிப்பது மட்டுமின்றி அதற்கும் அப்பாற்பட்ட வழங்கல் வழி மேலாண்மை போன்றவைகளை உள்ளடக்கியதாகும். |
| 2. | வியாபாரம் | மின் வணிகம், மின் வியாபாரம் இரண்டும் ஒரே மாதிரியான பொருளை வியாபாரம் செய்கிறது. | இதிலும் ஒரே மாதிரியான பொருளை வியாபாரம் செய்கிறது. |
95.
சரக்குகள் மற்றும் சேவைகள் வரிக்குழு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பரிந்துரைகளை வழங்கும்.
அவை பின்வருமாறு:
1) சரக்குகள் மற்றும் சேவைகள் வரிகளில் உட்படுத்துக்கூடிய மத்திய, மாநிலங்கள் மற்றும் உள்ளூர் அமைப்புகளால் விதிக்கப்படும் வரி, செஸ் மற்றும் கூடுதல் கட்டணம்.
2) GST வரி விலக்கு, மேல்வரி விலக்கு அளிக்கப்பட பொருட்கள் சேவைகள் தொடர்பாக.
3) மாதிரி பொருட்கள் மற்றும் சேவைகள் வரிச்சட்டங்கள் சேவைகள் வரியில் உள்நாட்டிற்கு கொடுக்கப்பட வேண்டிய மூலதனத்தீர்வை, மாநிலங்களுக்கு இடையேயான விற்பனை மீது விதிக்கப்படும் வரி அல்லது வணிக வரிசட்ட பிரிவு 269A ன் படி வழங்கப்பட வேண்டிய மூலதனத் தீர்வை ஆகியவை.
4) GST இல் இருந்து விலக்கு அளிக்கப்பட பொருட்கள் மற்றும் சேவைகள் நுழைவுத் திறனின் எல்லை வரம்பு பொருட்கள் மற்றும் சேவைகள் வரிகளின் தரவரிசைகளின் தர விகிதங்கள் உட்பட.
5) ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான சிறப்பு வரிவிகிதம் பற்றி அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்தில் உள்ள வரி விகிதங்கள் இயற்கை பேரழிவு அல்லது அதன் போது கூடுதல் வளங்களை உயர்த்துதல் தொடர்பான.
6) அருணாச்சல பிரதேசம், அசாம், ஜம்மு காஷ்மீர், மனிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா, ஹிமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு குறித்த பரிந்துரைகளை GST குழு வழங்கும்.
96.
1. பொருட்களை வாங்கி பயன்படுத்தும் ஒரு தனிநபரோ அல்லது ஒரு குடும்பமோ நுகர்வோராக இருக்கலாம்.
2. தன்னார்வ நுகர்வோர் அமைப்பு என்பது நுகர்வோரின் உரிமை மற்றும் நலனை பாதுகாத்திட ஏற்படுத்தப்பட்ட அமைப்பைக் குறிக்கும்.
97.
1. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986 இன் படி ஒவ்வொருவரும் தனி நபர், கூட்டாண்மை, இந்து கூட்டுக்குடும்பம் மற்றும் நிறுமம் என்பதனுள் அடங்குவர்.
2. அவர்களின் உரிமை என்பது மூலப்பொருட்களை கொள்முதல் செய்து முடிவுற்ற பொருட்களாக உற்பத்தி செய்வது.
3. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் முக்கியத்துவம் ஒவ்வொரு நுகர்வோரும் தனது உரிமை பற்றியும், நீதிமன்றம் மற்றும் அதன் உரிமைகள், வரம்பு மீறல்களைப் பற்றி தெரிந்து கொள்வதேயாகும்.
98.
(i) மத்திய மாநில அரசுகள் நுகர்வோரை பாதுகாக்க நாடு முழுவதும் பல்வேறு சட்டங்களை இயற்றி உள்ளன.
(ii) நுகர்வோரை பாதுகாக்க பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும் நுகர்வோர் இன்னும் அது குறித்து அறியாதவர்களாகவும் செயலற்றவர்களாகவும் உள்ளனர்.
99.
1. வாடிக்கையாளர் மனப்பாங்கு
2. நுகர்வோரின் தேவை
3. வழங்கல் வழிகள்
4. வாடிக்கையாளரின் பொருளாதார சூழல்
100.
(1) தூண்டுபவர் (Instigator)
சந்தையின் மேம்பாடு கருதி அவ்வப்போது சந்தையிடுகையின் வாய்ப்புகள் மற்றும் சந்தையில் ஏற்படும் மாற்றங்களை உன்னிப்பாக கூர்ந்து கவனித்து அதற்கு ஏற்றவாறு சந்தையிடுகலவையில் மாற்றத்தை ஏற்படுத்தி ஒரு புதிய கோணத்தை சந்தையிடுகையாளர் ஏற்படுத்துகிறார்.
(2) புதுமைபுகுத்துநர் (Innovator)
சந்தையிடுகையாளர் தனது பண்டங்கள் மற்றும் பணிகளை சந்தையில் தனக்கென ஒரு இடத்தை ஏற்படுத்துவதற்கு நடைமுறையில் இருந்து வரும் பொருட்களின் இயல்பை அதிகரித்தல் மதிப்பை கூட்டுதல், விலையில் மாற்றத்தை ஏற்படுத்துதல், பொருள்கொண்டு சேர்க்கும் முறை, தொழில் முறையில் மாற்றம் மற்றும் உற்பத்தி முறையில் மாற்றம் போன்றவற்றை செய்து வருகிறார்.
(3) ஒருங்கிணைப்பாளர் (Integrator)
பண்டங்கள் மற்றும் பணிகள் பற்றி நுகர்வோர் மற்றும் வாடிக்கையாளரின் மத்தியில் கருத்துக்களை பெற்றும் அதன் அடிப்படையில் அமைப்பின் ஒருங்கிணைப்பு பணியினை மேற்கொள்கிறார்.
101.
பயிற்சி அளிப்பவர்:
(i) பணியாளருக்குத் திறன்களை போதித்து பணியை சிறப்பாக செய்ய தயார் செய்யும் ஒரு நபர் பயிற்றுவிப்பாளர் ஆவார்.
(ii) பயிற்றுவிப்பவர் என்பவர் பயிற்சியாளர், ஆசிரியர் வழிகாட்டல், ஆலோசகர்,
ஆலோசகர் கையேடு, குரு, மேலாளர், கையாளுநர், ஆசிரியர் மற்றும் கல்வியாளர் போன்றோர்.
பயிற்சி பெறுபவர்:
(i) ஒரு வேலையின் திறனை கற்றுக் கொள்ளும் நபரே பயிற்சி பெறுபவர் ஆவர்.
(ii) பயிற்சி பெறுபவர் மனிதவள மேன்மைத் துறை அல்லது மேற்பார்வையாளரின் பரிந்துரையின் அடிப்படையிலும் தன் சுய ஆர்வத்தின் அடிப்படையிலும் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுகிறார்.
102.
1. விண்ணப்பதாரரிடம் பலர் அடங்கிய ஒரு குழு நேர்காணல் செய்வதால் அது உயர்மட்ட குழு நேர்காணல் எனப்படுகிறது.
2. இக்குழுவில் தலைமை பொறுப்பேற்பவர், சம்பந்தப்பட்ட துறையின் நிபுணர்கள், உளவியல் நிபுணர்கள், சிறுபான்மையினரின் பிரதிநிதிகள் ஆகியோர் இடம் பெற்றிருப்பர்.
3. பொதுவாக உயர் பதவிகளுக்கான பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் போது உயர்மட்ட குழு நேர்காணல் நடத்தப்படுகின்றது.
103.
(i) நிறுவனங்கள் இணையதளங்களை வேலைவாய்ப்புக்கு பயன்படுத்தி தாங்கள் எதிர்பார்க்கும் தகுதியுடைய பணியாளர்களை தேர்வு செய்து காலியிடங்கள் பூர்த்தி செய்யலாம்.
(ii) படித்த இளைஞர்கள் தங்கள் தகுதிக்கு ஏற்றார் போன்ற வேலையை தேர்வு செய்ய இந்த இணையதளங்கள் உதவ செய்கிறது.
(iii) இந்த இணையதளங்கள் மூலம் வேலை இல்லா நிலை தவிர்க்கப்படுகிறது.
104.
மனித வள மேலாண்மையின் பணிகள்:
1. மேலாண்மைப் பணிகள்
2. இயக்கப் பணிகள்
மேலாண்மைப் பணிகள்:
(i) திட்டமிடுதல்
(ii) அமைத்தல்
(iii) இயக்குவித்தல்
(iv) கட்டுப்படுத்துதல்
இயக்கப் பணிகள்:
(i) திரட்டுதல்
(ii) அபிவிருத்தி
(iii) இழப்பீடு
(iv) தக்கவைத்தல்
(v) ஒருங்கிணைத்தல்
(vi) நிர்வகித்தல்
105.
செபி அதன் உறுப்பினர்களால் நிர்வகிக்கப்படுகிறது. இதில் பின்வருவன அடங்கும்
106.
(i) தேசிய பங்குச்சந்தை அமைப்பு ஸ்ரீ எம்.ஜே. பெர்வானி தலைமையில் (பிரபலமாக பெர்வானி குழு) உயர் அதிகாரம் கொண்ட அமைப்பினால் ஏற்படுத்தப்பட்டது.
(ii) இந்தியாவில் உள்ள தேசிய பங்குச்சந்தைகள் பின்வருமாறு:
1. இந்தியாவின் தேசிய பங்குச்சந்தை
2. இந்திய பங்கு வைப்பு குழு லிமிடெட்
3. தேசிய தீர்வை மற்றும் வைப்பு முறை
4. இந்திய பங்கு பத்திரங்கள் விற்பனைக் கழகம்.
107.
கருவூல இரசீது பின்வரும் பொதுவான இயல்புகளை உடையது. அவை பின்வருமாறு.
1. வெளியிடுபவர்
2. நிதி இரசீது
3. நீர்மைத் தன்மை
4. முக்கிய ஆதாரம்
5. பண மேலாண்மை
108.
சேமிப்பு மற்றும் மூலதன உருவாக்கம்
சேமிப்பு மற்றும் மூலதன உருவாக்கம் மூலதனச் சந்தையில் பல்வேறு வகையான பத்திரங்கள் பல்வேறு துறையைச் சார்ந்து மக்களிடமிருந்து (தனிநபர், நிறுமங்கள், அரசு முதலியன) சேமிப்பை திரட்டுவதற்கு உதவி செய்கின்றது. பத்திரங்கள் முதலீடு செய்யும் மக்களுக்கு நிச்சயமான ஊக்கத் தொகையாக பங்கு மாற்றகத்தின் இரட்டை சிறப்பியல்புகளான நியாயமான வருவாய் மற்றும் நீர்மைத் தன்மை கிடைக்கிறது. இது நாட்டில் மூலதன உருவாக்கத்தை முடுக்குகிறது.
உடனடி மற்றும் தொடர்ச்சியான சந்தை
பங்கு மாற்றகம் வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் பத்திரங்களை வாங்க மற்றும் விற்பதற்கு ஒரு வசதியான மையத்தை வழங்குகிறது. எளிய சந்தையிடுதல் பத்திரங்களில் முதலீடு செய்வதில் மற்ற சொத்துக்களுடன் ஒப்பிடும் பொழுது அதிக நீர்மைத் தன்மையை உருவாக்குகிறது.
109.
| வ.எண் | ஒப்பீட்டு அடிப்படை | உடனடி சந்தை | எதிர்நோக்கிய சந்தை |
|---|---|---|---|
| 1 | பொருள் | ஆவணங்களை வழங்கலும், ரொக்கம் பெறுதலும் உடனடியாக நடைபெறும் சந்தை உடனடி சந்தை ஆகும். | சொத்து வழங்கலும், ரொக்கம் செலுத்தலும் முன்னரே தீர்மானிக்கப்பட்டு எதிர்காலத்தில் நடைபெறும் சந்தை எதிர்கால சந்தை ஆகும். |
| 2 | விலை நிர்ணயம் / முடிவு | விலைகளை உடனுக்குடன் சந்தை நிலவரத்தைப் பொறுத்து விலை முடிவு செய்வது ஆகும். | எதிர்காலத்தில் பொருட்களை கைமாற்றிக் கொள்வதற்காக இன்றே விலைகளை முடிவு செய்வது ஆகும். |
110.
1. அமைப்பின் குறிக்கோள்களை வரையறுத்தல்
2. ஒவ்வொரு பிரிவின் இலக்குகள்
3. முக்கிய முடிவு பகுதிகள்
4. கீழ்நிலை ஊழியர்களின் குறிக்கோள்களை அல்லது இலக்குகளை நிர்ணயித்தல்.
111.
1. செயலூக்கமளித்தல் மூலமே நிறுவனத்தின் நோக்கங்களை அடைய முடியும்.
2. ஒரு பணியை விரைவாக செய்து முடிப்பதிலும், பணியாளர்களின் பணியின் மீதான விருப்பத்தை வளர்ப்பதிலும் செயலூக்கமளித்தல் பயன்படுகிறது.
3. ஒரு வளமிக்க தலைமையின் கீழ் செயல்படுவதால் மேலாண்மையின் இலக்கை எளிதில் அடைய முடிகிறது.
112.
1. மேலாண்மை என்பது ஒரு கலையும் அல்ல, அறிவியலும் அல்ல, இரண்டின் தொகுப்பாகும்.
2. மேலாண்மை என்பது அதன் இயல்பின் அடிப்படையில் ஒரு செயலை செய்வதற்கான கலையோ அல்லது ஒரு செயலை பெறுவதற்கான அறிவியலா ஆகும்.
113.
1. கூட்டுறவு அங்காடி
2. சிறப்பங்காடி
3. அரசுக் கடைகள்
114.
நுகர்வோருக்கு பொருள்களின் தயாரிப்பு மற்றும் சேவை பற்றிய விழிப்புணர்வு இன்மையே நுகர்வோர்கள் சுரண்டப்படுவதற்கான காரணம்
115.
1. கூடுதல் இயக்குநர்
2. துணை இயக்குநர்
3. உதவி இயக்குநர்
4. பிரிவு அலுவலர்கள்
116.
(i) விற்பனையாளர்கள் பொருட்களை விற்கும் போதே அதற்கான இடாப்பில் விற்ற பொருள் திரும்ப பெற மாட்டாது என அச்சிட்டு வெளியிடுகின்றனர்
(ii) இதனை அரசு கண்டு கொள்வதில்லை. எனவே சட்டப்படியே நுகர்வோர்கள் ஏமாற்றப்படுகிறார்கள்
117.
1. நிறுமம் நீண்ட வாழ்நாளைக் கொண்டது. உறுப்பினராக யாரும் வரலாம், போகலாம்.
2. உறுப்பினர்களின் மரணம் போன்றவை நிறுமத்தை பாதிக்காது.
118.
அமைப்பு முறை ஏட்டில் கையொப்பமிடுபவர்களை பங்கெடுப்பாளர் என்று அழைக்கப்படுகின்றனர்.
119.
1. நாட்டில் புதுமையை புதுக்குதல்
2. தொழில் முனைவை வளர்த்தல்
120.
"ஒரு நிறுமத்தின் அமைச்சராக (அல்லது) நிர்வாக பணிகளை செய்து முடிக்க தேவையான அனைத்து தகுதிகளும் பெற்றுள்ள தனிநபர்". - நிறும சட்டம் 2013 பிரிவு 2 (14)
121.
1. இவர்கள் வணிகத்தை வாழ்க்கையின் ஒரு அங்கமாக கருதுபவர்கள்
2. தொழில் முனைவு என்பது இவர்களுக்கு இரத்தத்தில் ஊறிய ஒன்று.
3. காலங்காலமாக தொழிலில் இருப்பவர்கள், அதனால் சந்தையைப் பற்றிய முழுமையான அறிவு பெற்றவர்களாக இருப்பார்கள்.
122.
| உடமை | உரிமை |
| பொருளை வைத்திருக்கும் நிலை | பொருளை விரும்பியபடி கையாளும் உரிமை |
123.
(i) பங்கு மாற்றகம் அலுவல் பட்டியலில் இடம் பெற்றிராத, பங்கு பரிவர்த்தனைகளின் பட்டியல் காணப்படாத பத்திரங்கள் பட்டியலிடப்படாத பத்திரங்கள் என்று அழைக்கப்படுகிறது
(ii) இவ்வகை பத்திரங்களை பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய முடியாது
124.
உலக பொருளாதாரத்துடன் ஒரு நாட்டின் பொருளாதாரம் இணைவது உலகமயமாக்கல் எனப்படும்.
125.
1. நாட்டின் சமூகம்
2. பொருளாதாரம்
3. அரசியல்
4. சட்டத்துறைகளின் ஒரு பகுதி
126.
ஸ்காட் என்பவரது கூற்றுப்படி "நேர்காணல் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு இடையே நிகழும் குறிப்பிட்ட நோக்கத்திற்கான கருத்துப் பரிமாற்றம், வினாக்களுக்கு விடை பகர்தல் மற்றும் தகவல் தொடர்பாகும்.
127.
கருவூல இரசீதுகளை வாங்கும் மற்றும் சந்தைக்கு கருவூல இரசீது சந்தை என்று பெயர்
128.
பணியில் தொடர்ந்து குறைவான செயல்திறனை வெளிப்படுத்தும் பணியாளர், செயல் திறனின் முக்கியத்துவத்தை உணரும் வகையில் அவரை மேல்நிலைப் பணியிலிருந்து கீழ்நிலைப் பணிக்கு மாற்றுவது "பதவி இறக்கம்" எனப்படுகிறது.
129.
முதல் நிலைச் சந்தையில் மூன்று வழிகளில் மூலதனத்தை திரட்டலாம். அவை,
1. பொது வெளியீடு
2. உரிமை வெளியீடு
3. தனியார் வெளியீடு
130.
பீட்டர், எப். ட்ரக்கர் அவர்களின் கூற்றின்படி," மனிதன் அவனுக்கு கிடைக்கும் எல்லா வளங்களையும் கொண்டு வளர்ச்சி மற்றும் மேம்பாடு அடைய முடியும்.
131.
நிறுமங்கள் முதன் முதலில் பத்திரங்களை விற்பனை செய்வதில் பங்குபெறும் அனைத்து நிறுவனங்களையும் உள்ளடக்க பயன்படுத்தப்படும் சொல் முதல் நிலைச் சந்தை எனப்படும்
132.
(i) சந்தையிடுகையும் விற்பனையும் ஒன்றல்ல
(ii) விற்பனை என்பது சந்தையிடுகை பணியின் முக்கிய அங்கம்
(iii) சந்தையிடுகை என்பது பொருள் உற்பத்திக்கு முன்பே தொடங்கி பொருளை உற்பத்தி செய்து வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்க்கும் ஒட்டுமொத்த நடவடிக்கை.
133.
1. கிடைக்கக்கூடிய வளங்களின் அடிப்படையில் குறிக்கோள்கள் கட்டமைக்கப்படுகின்றன.
2. சில வளங்கள் போதுமானதாக இல்லை என்றால், அமைப்பின் குறிக்கோள்கள் அதற்கேற்றபடி மாற்றம் செய்யப்பட வேண்டும்.
134.
காசோலையை கொண்டு வருபவருக்கு பணம் தருமாறு ஆணை பிறப்பித்து வழங்கப்படும் காசோலை கொணர்பவர் காசோலை எனப்படும்
135.
1. நிதி திட்டமிடுதல் என்ற மேலாண்மை செயல்பாடுடன் தொடர்புடையது.
2. திட்டமிடுதல் இல்லாமல் எந்த ஒரு காரியமும் செய்ய முடியாது.
136.
முறைமை என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும், நிறும விதிமுறைகளுக்கு உட்பட்டதாகவும் இருக்க வேண்டும்.
137.
வழக்கமாக பொருள்களைப் பற்றி விளம்பரம் செய்யாமல் ஒரு நிறுவனத்திற்குரிய ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர் மூலம் பொருள்களின் தன்மை மற்றும் சிறப்பைப் பற்றி மற்றவர்களுக்கு பரிந்துரை செய்ய தூண்டி விற்பனை அதிகரிக்கும் முறையை பரிந்துரை சந்தையிடுதல் எனலாம்.
138.
போட்டி பொருட்களிலிருந்து வேறுபடுத்தி காண்பதற்கு ஒரு பெயரையோ அல்லது வணிகக் குறியோ இடப்படுவதற்கு பெயரிடல் எனப்படுகிறது.
139.
1. பண்டங்கள் மற்றும் பணிகளை பன்னாட்டு அளவில் சந்தையிடுகை செய்வதனை பன்னாட்டு சந்தை அல்லது உலகளாவிய சந்தை என அழைக்கப்படுகிறது.
2. வாங்குவோர் மற்றும் விற்போர் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட நாடுகளுக்கிடையே சந்தையிடுகையில் ஈடுபடுவர்.
140.
மதிஸ் மற்றும் ஜாங்சன் கூற்றுப்படி, "பயிற்சி என்பது கற்றல் நடைமுறை. இது ஊழியருக்கு திறன்கள், கருத்துக்கள், மனோபாவங்கள் மற்றும் இலக்குகளை அடைய உதவும் அறிவு".
141.
கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்களிக்க முடியாத உறுப்பினர்கள் அவர்களுக்கு பதிலாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகராள்களை நியமிக்கலாம். பகராள் உறுப்பினராக இருக்க வேண்டிய அவசியமில்லை. பகராள் கூட்டம் தொடங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் நிறும பதிவு அலுவலகத்தில் தெரிவித்து பதியப்பட வேண்டும்.
142.
நிறுமத்தின் இயக்குநராக பணிபுரியும் ஒருவர் தனது வேலை நேரம் முழுவதையும் நிறுமத்தின் வளர்ச்சிக்காக பயன்படுத்துவதும் மேலும் இதன் மூலமாக நிறுமத்திற்கு வருமானம் ஏற்படும் வகையில் குறிப்பிடத்தக்க நேரடி ஆர்வத்தைக் காட்டுபவரும் முழுநேர இயக்குநர் ஆவார்.
143.
நிறுமத்தை உருவாக்குதல் என்பது நான்கு நிலைகளை கொண்டது.
i) நிர்வாகம் (Promotion)
ii) பதிவு செய்தல்
iii) முதல் போடுதல்
iv) வியாபாரத்தை தொடங்குதல்
144.
இத்திட்டத்தின் மூலம் அனைத்து அரசின் சேவைகளும் பயனாளிகளுக்கு மின்னணு முறையில் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் இந்திய பொருளாதாரம் மின்னணு பொருளாதாரமாக மாறி வருகிறது. உலகெங்கும் கிடைக்கும் பொருட்கள் மற்றும் பணிகளை மக்கள் மின்னணு முறையில் பெற வகை செய்திடும் அறிவு பொருளாதாரமாக இந்திய பொருளாதாரம் மாறி வருகிறது என்றால் மிகையாகாது.
145.
திருவாளர்கள் திருபாய் அம்பானி, ஜம்சேட் டாடா, T.V. சுந்தரம் ஐயங்கார், சேஷாத்திரி, பிர்லா, நாராயண மூர்த்தி, அஸிஸ் பிரேம்ஜி.
146.
(i) தொழில் துணிகர உணர்வு : தொழில் முனைபவர் தாம் மேற்கொண்ட தொழிலில் ஏற்படும் இடர்களை துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும்.
(ii) தன்னம்பிக்கை : தன்னம்பிக்கை ஒரு மனிதனுக்கு அழகு ஏற்படுத்துகிறது. எதிர்மறை உணர்வுகளான அசௌகரியங்கள், ஏமாற்றங்கள், தோல்விகள் மற்றும் தொல்லைகள் தொழில் முனைபவரது மன உறுதியை குலைக்கக்கூடாது.
147.
ஆவணத்தை கொணர்பவருக்கோ அல்லது அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஒருவருக்கோ அல்லது அவரது ஆணைக்கோ, ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்துமாறு, குறிப்பிட்ட ஒருவரை ஆணையிடும் விடுப்பவரால் கையொப்பம் இடப்பட்ட எழுத்தாலான நிபந்தனையற்ற ஆணை ஆவணமே மாற்றுச்சீட்டு - மாற்றுமுறை ஆவணச்சட்டம் 1881 பிரிவு (5).
148.
149.
1. வேலையின்மையை அதிகரித்தல்.
2. உள்நாட்டு தொழில் அலகுகளின் இழப்பு
3. சமநிலையற்ற வளர்ச்சி.
4. அயல்நாடுகளை சார்ந்திருத்தலை பெருக்கும்.
150.
சுற்றுச்சூழலுக்கு எவ்வித தீங்கும் விளைவிக்காமல் சுற்றுப்புறச் சூழலுக்கு பாதுகாப்பாக சந்தைப்படுத்துவதை பசுமை சந்தைப்படுத்துதல் எனலாம். நுகர்வோர்களின் தேவை மற்றும் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் பொருள்கள் மற்றும் சேவைகளை உருவாக்கி, மேம்படுத்தி, தரமான செயல் திறன்மிக்க பொருள்களை, மலிவு விலையில் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் உற்பத்தி செய்து சந்தைப்படுத்துவதை பசுமை சந்தைப்படுத்தல் எனலாம்.
151.
விரைவான தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக வணிகத்தின் எதிர்கால சூழலை சுருக்கமாக ஏற்ற இறக்கம், நிச்சயமற்ற தன்மை, சிக்கலானத் தன்மை மற்றும் தெளிவற்றத் தன்மை கொண்டவை என்று கூறலாம்.
152.
(i) இந்த ஆணையம் மாநில அளவில் செயல்பட்டுவருகிறது. இந்த அமைப்பை நுகர்வோர் குறைபாட்டு தீர்ப்பாணையம் என அழைக்கப்படுகிறது.
(ii) சரக்கு மற்றும் சேவைகள் தொடர்பாக எழும் புகார்கள் இந்த தீர்ப்பாணையத்தின் செயல் எல்லைக்குள் அடங்கும்.
(iii) விற்கப்பட்ட சரக்கில் ஏற்படும் பழுதுகள் மற்றும் தரக்குறைகள் மற்றும் நியாயமற்ற மற்றும் தடை செய்யும் வணிக நடைமுறைகளுக்கு (Unfair Restrictive Trade Practices). வணிக நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு ஆணையம் என்ற பெயரில் துவங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறது.
153.
(i) பொருட்களை வாங்கும் பொழுது நுகர்வோர் அப்பொருட்களைப் பற்றிய பெயர், கலவை, பயன்படுத்தும் அளவு, உற்பத்தி மற்றும் காலாவதி நாள், தயாரிப்பு பிரிவு எண் மற்றும் எச்சரிக்கை போன்ற அனைத்து விதமான தகவல்களையும் கேட்டுப்பெற வேண்டும்.
(ii) மேலும் பொருட்களின் விலை, அதன் தயாரிப்பாளர் பெயர், வரியுடன் அல்லது வரியில்லாத விலை ஆகியவையும் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.
154.
(i) உணவு தானியங்களில் சிறிய கற்கள் சேர்க்கப்படுகின்றன.
(ii) கருப்பு மிளகுடன் பப்பாளி விதை கலக்கப்படுகின்றது.
(iii) மிளகாய்ப்பொடியுடன் செங்கல் பொடி கலக்கப்படுகின்றது.
(iv) தேங்காய் எண்ணெயில் பாமாயில் கலக்கப்படுகின்றது.
155.
1. மூலப்பொருட்கள் கிடைக்கும் அறை
2. உற்பத்திச் செலவு
3. பொருளின் தரம்
4. தேவை
156.
| வ.எண் | அடிப்படை | மொத்த விற்பனை சந்தை | சில்லறை விற்பனை சந்தை |
| 1. | பொருள் | உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக பொருட்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. | மொத்த விற்பனையாளர்களிடமிருந்து நேரடியாக பொருட்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. |
| 2. | கொள்முதல் அளவு | மொத்தமாக பொருட்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. | சிறு சிறு அளவில் பொருட்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. |
| 3. | யாருக்கு விற்பனை செய்யப்படுகிறது | சில்லறை விற்பனையாளருக்கு மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது. | நுகர்வோர் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சிறு சிறு அளவில் விற்பனை செய்யப்படுகிறது. |
| 4. | யாருக்கு விற்பனை செய்யப்படுவதில்லை | நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுவதில்லை. | நுகர்வோருக்கு தேவையான அளவில் விற்பனை செய்யப்படுகிறது. |
157.
(i) மின்னணு கற்றல் முறை என்பது பாரம்பரிய பயிற்சி வகுப்பறையில் அல்லது அலுவலகத்தில் தொழில்நுட்ப செயல்முறையை பயன்படுத்துவதாகும்.
(ii) அலுவலகம் மின்னணு கற்றல் கூட பெரும்பாலும் இணையவழி கற்றல் அல்லது வலைபக்க அடிப்படையிலான பயிற்சியை குறிக்கிறது.
158.
ஒரு விண்ணப்பதாரர் ஒரு நிறுவனத்திற்கு விண்ணப்பிக்கும் பொழுது, பணி அனுபவ காலம், கல்வித்தகுதி, மதிப்பெண், பணி நிபுணத்துவம், பணி தொடர்பு மற்றும் நடத்தைகள் பற்றி குறிப்பிடுவதே தன்விளக்க குறிப்பாகும்.
159.
1. கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று நல்ல கல்வித் தகுதியடைய விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
2. நேரம், செலவு போன்றவைகள் இதன்மூலம் சேமிக்கப்படுகின்றது.
160.
161.
1. மும்பையில் உள்ள பாந்திரா குர்லா வளாகத்தின் வணிக மாவட்டத்திலுள்ளது செபியின் தலைமையகம் உள்ளது
2. மேலும் புதுதில்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் அஹமதாபாத்தில் வடக்கு, கிழக்கு தெற்கு மற்றும் மேற்கு பிராந்திய அலுவலகங்கள் உள்ளன.
162.
(i) இந்தியாவில் பங்கு மாற்றகங்களில் நான்கு வகையான ஊக வணிகர்கள் செயல்படுகின்றனர்.
(ii) அவர்கள் காளை, கரடி, கலைமான், முடவாத்து என்று அழைக்கப்படுகின்றனர்.
163.
அரசு அல்லது தங்கமுனை பத்திரங்களை வாங்கவும் விற்கவும் கூடிய ஒரு சந்தைக்கு 'அரசு பத்திரங்கள் சந்தை' என்று பெயர்.
164.
(i) மூலதனச் சந்தை என்பது நிதி பத்திரங்களான பிணையங்கள், மற்றும் பங்குகளின் வர்த்தகத்தில் ஈடுபடும் வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் கூடும் ஒரு சந்தை ஆகும்.
(ii) தனிநபர் மற்றும் நிறுவனங்கள் போன்ற பங்கேற்பாளர்களால் வாங்குதல் மற்றும் விற்றல் மேற்கொள்ளப்படுகிறது.
165.
எந்த ஒரு சந்தையில் நிதி கோரல்கள், சொத்துக்கள் மற்றும் பத்திரங்கள் போன்ற நிதிக் கருவிகள் வியாபாரம் செய்யப்படும் சந்தை "நிதிச் சந்தை" எனப்படும்.
166.
பேராசிரியர் ரெட்டின் என்பவர் குறியிலக்கு மேலாண்மையை "மேலாண்மையின் நிலைப்பாடுகளுக்கு ஏற்ற தரநிலைகள் நிறுவுதல் மற்றும் அளவிடக்கூடிய காலக்கோடு இலக்குகள் கொண்ட கால இடைவெளியை செங்குத்தாகவும், கிடைமட்டமாகவும், எதிர்கால திட்டமிடலுடன் இணைத்துக்கொள்ளும் கால இடைவெளியைக் குறிக்கிறது" என வரையறுக்கிறார்.
167.
1. திட்டமிடுதல் என்பது மேலாண்மையின் செயல்பாடுகளில் முதன்மையானது ஆகும். திட்டமிடுதல் இல்லாமல் எந்த ஒரு காரியமும் செய்ய முடியாது.
2. திட்டமிடுதல் என்பது வருங்கால தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு ஆக்கபூர்வமான மதிப்பீடு ஆகும்.
168.
ஒரு வணிக நிறுவனத்தின் மேலாண்மை செய்பவர்கள் மற்றும் விஷயங்களை நிர்வகிப்பதற்கான ஒழுங்கமைக்கப்பட்ட வழி மேலாண்மை என்று அழைக்கப்படுகின்றது.
169.
1. பங்கு பரிவர்த்தனைகளின் ஒழுங்கு முறை:
(i) செபியின் முதல் நோக்கம் பங்குச் சந்தைகளை ஒழுங்குபடுத்துவதும், கட்டுப்படுத்துவதும்
(ii) இதனால் முதலீட்டாளர்களுக்கு திறமையான சேவைகள் வழங்கப்படலாம்
2. முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பு:
(i) முதலீட்டாளர்கள் இல்லாத நிலையில் மூலதனச் சந்தை அர்த்தமற்றது
(ii) செபியின் முதன்மையான நோக்கமே முதலீட்டாளர்களின் நலனைப் பாதுகாப்பது ஆகும்
3. உள்வழி வியாபாரத்தை சரிபார்த்தல்
(i) செபி உள்வழி வணிகத்தை தடைசெய்கிறது
(ii) உள்வழி வியாபாரத்தினால் முதலீட்டாளர்களின் நலன் பாதிக்கப்படுகிறது
(iii) சட்டத்திற்கு புறமாக செயல்படும் நிறுவனங்களையும் தடை செய்கிறது
4. தரகர்கள் மீதான கட்டுப்பாடு:
(i) செபி மூலதனச் சந்தையை கட்டுப்படுத்த, தரகர்கள் மற்றும் பிற இடைநிலையர்களின் நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு கண்காணிக்கிறது
(ii) இடைநிலையர்களின் சுய கட்டுப்பாட்டிற்கு உதவுகிறது
5. தணிக்கை மற்றும் ஆய்வுகளை நடத்துதல்:
(i) நிறுவனத்தின் செயல்பாட்டினை தணிக்கை மற்றும் ஆய்வுகளை செபி நடத்துகிறது
(ii) இதனால் நிறுவனத்தின் நற்பெயர் உயர்நிலை பெறுகின்றது
170.
(i) நிப்டி (NIFTY 50) என்ற வார்த்தை நேஷனல் (National) மற்றும் ஃபிப்டி (FIFTY) என்ற இரண்டு வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டது
(ii) இது இந்தியாவின் அனைத்து பிரிவுகளிலும் திறம்பட செயலாற்றும் 50 முக்கிய நிறுவனங்களின் பங்குகளின் வணிகத்தைக் குறிப்பதாகும்
(iii) தேசிய பங்குச் சந்தையில் (NSE) மிக முக்கிய பங்குகளின் வணிகத்தை பிரதிபலிப்பதால் நாட்டின் அனைத்து துறைகளின் நிறுவனப் பங்குகளும் வளர்ச்சியைக் குறிப்பிடுவதாக இது அமைகிறது
(iv) நிப்டி அமைப்பு நாட்டின் பல்வேறு தரப்பட்ட 24 பிரிவுகளில் உள்ள 50 தொழில் நிறுவனங்களில் பங்குகளை உள்ளடக்கியதாகும்
(v) இது மாறுபட்ட பிரிவுகளின் முக்கிய பங்குகள் செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டு நிப்டி கணக்கிடப்படுகிறது
(vi) தேசிய பங்குச் சந்தையில் ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் வசதிகள் இருப்பதால் நிப்டி ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாக விளங்குகிறது
(vii) நிப்டி கணக்கீடுகளை செய்ய நிறுவனங்களின் அளவையொட்டி சந்தை மூலதனமாக்குதல் முறையை பயன்படுத்துகின்றன
171.
1. நல்ல திறமை
(i) சிறந்த தேர்ந்தெடுத்தல் முறை பல்வேறு நடவடிக்கைகளில் திறம் வாய்ந்த நபர்களை தேர்வு செய்ய வகை செய்கிறது.
(ii) இது நிறுவனத்தின் உற்பத்தித்திறன் மேம்படவும், இலாபம் அதிகரிக்கவும் வழி செய்கிறது,
2. சிறந்த திறன்
(i) குறிப்பிட்ட வேலைக்கு சரியான நபரை தேர்ந்தெடுத்ததன் காரணமாக அவர்கள் சிறந்த முறையில் பணியாற்றி நிறுவனத்தின் இலக்குகளை எளிதில் அடைய முடிகிறது.
(ii) இதனால் நிறுவனத்தின் ஒட்டுமொத்த திறன் உயருகிறது.
3. குறைக்கப்பட்ட பயிற்சி மற்றும் வளர்ச்சிக்கான செலவு
(i) தகுதி வாய்ந்த தனி நபர், தகுதி வாய்ந்த அதிகாரத்தை பெற்றுள்ளதால் ஊழியரின் சிறந்த தேர்வு நிச்சயமாக பயிற்சி செலவுகளைக் குறைக்கும்.
(ii) சரியான பதவிக்கு மிகச் சரியான நபரை தேர்வு செய்வதன் மூலம் அவர்கள் பணி நுட்பங்களை எளிதாகவும், விரைவாகவும் புரிந்துகொள்ள முடியும்.
4. குறைக்கப்பட்ட பணி சுழற்சி
(i) விண்ணப்பதாரர்கள் சரியான தேர்வு குறைவான தொழிலாளர் சுழற்சியை நோக்கி செல்கிறது.
(ii) நிறுவனம் குறைந்த ஆட்சேர்ப்பு செலவின் மூலம் பயனடையலாம்.
5. வேலையைத் தூண்டுதல்
(i) சரியான நபரை சரியான தேர்வு குறைவான தொழிலாளர் சுழற்சியை நோக்கி செல்கிறது.
(ii) பணியாளர் தங்களது திறமை முழுமையாகப் பயன்படுத்தப்படுகிறது என உணர்கிறார்கள்.
(iii) இதனால் பணியாளர்கள் தங்களது பணியில் சிறப்புக் கவனம் செலுத்துகிறார்கள்.
6. பிற நன்மைகள்
(i) விண்ணப்பதாரர்களை முறையான தேர்வு செய்வதால் பணிக்கு வராத நிலை குறைக்கப்படுகிறது.
(ii) மேலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை முழுமையாகப் பின்பற்றுவதால் பணியிடத்தில் நிகழும் விபத்துகள் முழுமையாகக் குறைக்கப்படுகின்றது.
172.
(i) வைப்புச் சான்றிதழ் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் குறுகிய கால வைப்புச் சான்றிதழ் ஆவணங்களாகும்.
(ii) இதை வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் தங்களது நிதி ஆதாரங்களை உயர்த்திக் கொள்வதற்காக வெளியிடுகின்றன
(iii) வைப்புச் சான்றிதழ் கடன் உறுதி பத்திர வடிவத்தில் பயன்பாட்டில் வழங்கப்படுகிறது
(iv) இவை எளிதில் மாற்றக்கூடிய இயல்புடையதாகவும், விரைவாக சந்தைப்படுத்தக் கூடியதாகவும், குறிப்பிட்ட முகமதிப்பு மற்றும் முதிர்வு தொகை ஆகியவற்றைக் கொண்டிருக்கும்
(v) இது ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு மாற்றக்கூடிய தன்மையுடையது
(vi) இது மாற்றக்கூடிய தன்மையுடையதால் இதற்கு மாற்றுமுறை ஆவண வைப்புச் சான்றிதழ் என்றும் அழைக்கப்படுகிறது
வைப்புச் சான்றிதழின் இழப்புகள்:
1. கால வைப்புக்கான உரிமை ஆவணம் ஆகும்
2. பிணையமற்ற மாற்றுமுறை ஆவணங்கள் ஆகும்
3. மேல் எழுதுதல் மூலம் எளிதில் மாற்றி வழங்கும் தன்மை உடையது
4. முகமதிப்பிலிருந்து வட்டத்தில் வெளியிடுதல்
5. சலுகை நாட்கள் இல்லாமல் குறிப்பிட்ட தேதியில் திரும்பச் செலுத்தக்கூடியது.
173.
புற வளங்கள்
(i) நேரடி வளங்கள்
1. விளம்பரங்கள்
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக நிறுவனத்தின் உரிமையாளர் வேலையின் தன்மை காலியிடத்தின் தன்மை, தேவைப்படும் தகுதி மற்றும் அனுபவம், வழங்கப்படும் சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பிக்க வேண்டிய காலக்கெடு ஆகியவற்றைக் குறிப்பிட்டு தினசரி பத்திரிகைகள், பிற ஊடகங்கள் வழியாக விளம்பரம் செய்யலாம்.
2. கோரப்படாத விண்ணப்பதாரர்கள் :
நிறுவனங்கள், காலிப் பணியிடங்கள் குறித்து எவ்வித அறிவிப்பும் செய்யாத நிலையில் வேலை தேடுவோர் தன்னிச்சையாக வேலை வேண்டி விண்ணப்பித்த விண்ணப்பங்களை தேவைப்படும் நேரத்தில் நிறுவனம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
3. நேர்முகத் தேர்வு :
வேலை தேடி நிறுவனத்திற்கு நேரடியாக வருபவர்களை நேர்முக தேர்வின் மூலமாகவும் பணியமர்த்த முடியும்.
4. வளாக தேர்வு
கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று நல்ல கல்வித் தகுதியுடைய விண்ணப்பதாரர்களை வளாகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கலாம்.
5. தொழிற்சாலை வாயிலில் ஆட்சேர்ப்பு :
பொதுவாக சாதாரண அல்லது தற்காலிகமாக திறனற்ற ஊழியர்கள் இந்த வழியின் மூலம் ஆட்சேர்ப்பு செய்யப்படுகின்றனர்.
6. போட்டி நிறுவனங்கள்
உயர் ஊதியம் மற்றும் அதிக பலன்கள் வழங்குவதன் மூலம் போட்டி நிறுவனங்களில் உள்ள திறமையான பணியாளர்களை தம்முடைய நிறுவனத்தில் பணியாற்ற ஈர்க்கும் செயல் பணியாளர் வேட்டை என அழைக்கப்படுகிறது.
7. இணையவழி ஆட்சேர்ப்பு
தொழில் நுட்பம் மற்றும் தகவல் தொடர்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கான காரணமாக நிறுவனங்கள் தாங்கள் எதிர்பார்க்கும் தகுதியுடைய பணியாளர்களை உலகளவில் இணையத்தின் வாயிலாக பெற முடிகிறது.
(ii) மறைமுக வளங்கள் :
1. பணியாளர் பரிந்துரை
(i) பணியாளர் இருக்கும் காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்களை நிறுவனத்தில் இருக்கும் ஊழியர்கள் பரிந்துரைக்கலாம்.
(ii) அந்நபர்கள் அவர்களின் உறவினர்களாகவோ அல்லது நண்பர்களாகவோ இருக்கலாம்.
(iii) பணியாளரின் நம்பகத் தன்மையின் அடிப்படையில் பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட வேண்டும்.
(iii) பணியாளரின் நம்பகத் தன்மையின் அடிப்படையில் பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட வேண்டும்.
2. அரசு/பொது வேலைவாய்ப்பு அலுவலகங்கள்:
(i) ஆட்சேர்ப்பு செய்வதற்கு வசதியாக நாடு முழுவதும் அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட நிறுவனங்களாகும்.
(ii) தரவு தளத்தின் மூலம் தேவையான தகவல்களை தந்து வேலை வழங்குவோர்க்கும், வேலை தேடுவோர்க்கும் இடையில் உள்ள இடைவெளியை இணைக்கும் ஒரு பலமாக செயல்படுகிறது.
3. தனியார் வேலைவாய்ப்பு முகவர்கள் :
உரிமையைத் தவிர மற்றபடி அரசு வேலை வாய்ப்பு அலுவலகங்கள் போன்ற இதுவும் செயல்படுகிறது.
4. வேலைவாய்ப்பு ஆலோசனை மையங்கள் :
(i) இந்த வகையான நிறுவனங்கள் பண அடிப்படையில் வாடிக்கையாளர் நிறுவனங்களின் சார்பாக ஆட்சேர்ப்பு பணியினை மேற்கொள்கிறது.
(ii) இந்த வகையான நிறுவனங்கள் நிர்வாகிகள் மற்றும் உயர்மட்ட பணியாளர்கள் தாங்கள் வழங்கும் ஆலோசனைக்கு கட்டணம் வசூலிக்கின்றனர்.
(iii) இந்த புறத் திறநீட்டல் ஆட்சேர்ப்பு செயல்முறை என்றும் அழைக்கப்படுகிறது.
5. தொழில்முறை சங்கங்கள்
அதிக திறமை மற்றும் தொழில்நுட்ப அறிவுள்ள சரியான நபரைத் தேடும் நிறுவனங்கள், பயிற்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், இந்திய மேலாண்மைச் சங்கம் போன்றவற்றை அணுகலாம்.
6. பதிலனுப்புதல் :
ஏற்கனவே ஒரு நிறுவனத்தில் பணியில் இருப்பவரை குறுகிய காலத் தீர்விற்கு குறிப்பிட்ட காலத்திற்கு குறிப்பிட்ட பணியை மேற்கொள்ள பதிலாய் நிலையில் நியமித்துக் கொள்ளலாம்.
7. வாய் வார்த்தை
வேலை வாய்ப்பு பற்றிய தகவல்களை தங்களுக்கு தெரிந்த நபர்களுக்கு பகிரும் நன்மதிப்புள்ள நபர்களிடமிருந்து வேலை தேடுவோர் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
8. பணியாளர் ஒப்பந்ததாரர்கள் :
நிறுவனங்கள் ஒப்பந்தக்காரர்கள் மூலம் திறமையற்ற மற்றும் கைத் தொழிலாளர்களை நியமிக்கின்றன.
9. வேலை வாய்ப்பு இணைய தளங்கள் :
நிறுவனங்கள் வேலை வாய்ப்பு இணைய தளங்களைப் பயன்படுத்தி தாங்கள் எதிர்பார்க்கும் தகுதியுடைய பணியாளர்களை தேர்வு செய்து காலியிடங்களை பூர்த்தி செய்யலாம்.
174.
1. மனித வளத்தின் மூலமாக மட்டுமே மற்ற அனைத்து வளங்களும் திறம்பட பயன்படுத்தப்படுகின்றன.
2. ஒரு நிறுவனத்தின் நிலையான வளர்ச்சி முக்கிய வளமான மனித வளத்தைச் சார்ந்துள்ளது.
3. தொழில்துறை உறவுகள் மனித வளத்தைத் சார்ந்துள்ளது.
4. மனித வளங்கள் மூலமாக மட்டுமே மனித உறவுகள் சாத்தியமாகிறது.
5. மனித வளமானது பிற அனைத்து உற்பத்தி காரணிகளையும் நிர்வகிக்கிறது
6. பயிற்சி மற்றும் அபிவிருத்தி திட்டங்களின் மூலம் மனித வளத்தைப் பயன்படுத்த முடியும்.
7. மேலாண்மையின் அனைத்து மட்டங்களிலும் மனித வளத்தைப் பயன்படுத்த முடியும்.
8. மனித வளங்கள் சட்டபூர்வ கட்டமைப்பினால் நன்கு பாதுகாக்கப்படுகின்றன.
175.
1. அமைப்பின் குறிக்கோள்களை வரையறுத்தல்:
i. தொடக்கத்தில், ஒரு அமைப்பின் உயர்நிலை ஊழியர்களால் அமைப்பின் குறிக்கோள்கள் கட்டமைக்கப்படுகின்றன.
ii. ஏன் தொழில் தொடங்கப்பட்டது? அதன் வெளிப்பாடு என்ன? என்பது பற்றி கூறுவது அமைப்பின் குறிக்கோள்களை வரையறுத்தல் ஆகும்.
2. ஒவ்வொரு பிரிவின் இலக்குகள்:
ஒவ்வொரு பிரிவின் குறிக்கோள்களும், துறை அல்லது பிரிவுக்கான குறிக்கோள்களும் அமைப்பின் ஒட்டுமொத்த குறிக்கோள்களின் அடிப்படையில் கட்டமைக்கப்படுகிறது.
3. முக்கிய முடிவு பகுதிகள்:
i. அமைப்பின் குறிக்கோள்களின் அடிப்படையில் முக்கிய முடிவு பகுதிகள் நிர்ணயிக்கப்படுகின்றன.
ii. முக்கிய முடிவு பகுதிகள் முன்னுரிமை அடிப்படையில் அமைக்கப்படுகிறது.
4. கீழ்நிலை ஊழியர்களின் குறிக்கோள்களை நிர்ணயித்தல்:
i. ஒவ்வொரு கீழ்நிலை ஊழியர்களின் குறிக்கோள்களும் நிர்ணயிக்கப்படுகிறது. இது விரும்பத்தக்க, குறைந்த அளவு எண்ணிக்கை அலகுகளான குறிக்கோள்களாக நிர்ணயிக்கப்படுகிறது.
ii. கீழ்நிலை ஊழியர்களுக்கு வாய்ப்பு வழங்குவதன் மூலம், தங்களுக்கான தரநிலைகளை அமைக்கவும், சாதனைக்கான வாய்ப்புகள் அதிகமாகவும் காணப்படுகின்றன.
5. குறிக்கோள்களுடன் வளங்களை ஒப்புநோக்கல்:
கிடைக்கக்கூடிய வளங்களின் அடிப்படையில் குறிக்கோள்கள் கட்டமைக்கப்படுகின்றன. சில வளங்கள் போதுமானதாக இல்லையெனில் அமைப்பின் குறிக்கோள்கள் அதற்கேற்றபடி மாற்றம் செய்யப்பட வேண்டும்.
6. கால வாரியான மறு ஆய்வுக் கூட்டம் கூடுதல்:
உயர்நிலை ஊழியர்கள் மற்றும் கீழ்நிலை ஊழியர்கள் சந்திக்கும் வகையில் கால வாரியான கூட்டங்கள் நடத்த வேண்டும். அக்கூட்டங்களில் குறிக்கோள்களை நிறைவேற்றுவதில் உள்ள முன்னேற்றத்தைப் பற்றி விவாதிக்க வேண்டும்.
7. செயல்பாடுகளை மதிப்பீடு செய்தல்:
கீழ்நிலை ஊழியர்களின் செயல்பாடுகளை உயர்நிலை ஊழியர்கள் மதிப்பீடு செய்து, சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
8. குறிக்கோள்களை மறு ஆய்வு செய்தல்:
அமைப்பு என்பது மாறும் உலகத்தின் ஒரு பகுதியாகும். நவீன வியாபார அமைப்பின் வாழ்வு மாறக்கூடியதாகும், வளர்ச்சியடையக் கூடியதாகவும் உள்ளது. இச்சூழலுக்கேற்ப குறிக்கோள்கள் கட்டமைத்து மறு மதிப்பீடு செய்ய வேண்டும்.
176.
1. புதுமைப்படுத்துதல்:
i. வியாபார உலகில் செய்யப்படும் மாற்றங்களை எதிர்கொள்ள ஊழியர்களையும், அமைப்பையும் தயார்நிலைப்படுத்தும் செயல்பாடு புதுமைப்படுத்துதல் எனப்படும்.
ii. நுகர்வோர்கள் புதுமைப்படுத்துதல் மூலம் திருப்தி அடைகின்றனர்.
2. பிரதிநிதித்துவம்:
i. ஒரு மேலாளர் ஒரு நிறுவனத்தின் பிரதிநிதியாக செயல்பட வேண்டும்.
ii. வாடிக்கையாளர்கள், பொருட்கள் மற்றும் சேவையை அளிப்பவர்கள், அரசாங்க அதிகாரிகள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் இதைப் போன்றவர்களுடன் ஒரு மேலாளர் தொடர்புடன் இருக்க வேண்டும்.
3. முடிவெடுத்தல்:
i. ஒரு அமைப்பின் ஒவ்வொரு பணியாளரும் பல்வேறு எண்ணிக்கையிலான முடிவுகளை ஒவ்வொரு நாளும் எடுக்கின்றனர்.
ii. ஒரு அமைப்பு இலகுவாக செயல்படுவதற்கு முடிவெடுத்தல் உதவுகிறது.
4. தகவல் தொடர்பு:
i. தொடர்பு என்பது மனித எண்ணங்களை, கண்ணோட்டங்களை அல்லது கருத்துக்களை ஒரு நபர் மற்றொரு நபருக்கு பரிமாற்றம் செய்வது ஆகும்.
ii. வேலையை ஒழுங்குபடுத்துவதற்கும், நடவடிக்கையை ஒருங்கிணைப்பதற்கும் தொடர்பு உதவுகிறது.
177.
1. அறிவின் தொகுப்பு:
i. தற்போது மேலாண்மை உயர் தனிச்சிறப்பு வாய்ந்த மேலாண்மைக் கோட்பாடு மற்றும் தத்துவத்தை உருவாக்கியுள்ளது.
ii. வணிக உலகம் அல்லது அரசுத்துறை அல்லது தனியார் துறை போன்றவற்றின் வேலை வாய்ப்பு உலகில் வெற்றிகரமாக நுழைவதற்கு சிறந்த கடவுச்சீட்டு போன்றது மேலாண்மை ஆகும்.
2. மேலாண்மைக் கருவிகள்:
கணக்கியல், வணிகச் சட்டங்கள், உளவியல், புள்ளியியல், பொருளியல், தரவு செயலாக்கம் என மேலாண்மையின் கிளைகள் பல்கிப் பெருகி விரிவடைந்துள்ளது.
3. தனிப் பாடப்பிரிவு:
i. பல்வேறு பல்கலைக்கழகங்களும், உயர்கல்வி நிறுவனங்களும் மேலாண்மைக் கல்வியை தனிப் பாடப்பிரிவாக அங்கீகரித்திருக்கின்றன.
ii. ஏற்றுமதி மேலாண்மை, ஆள்சார் மேலாண்மை, உற்பத்தி மேலாண்மை, சந்தை மேலாண்மை, நிதி மேலாண்மை போன்ற சிறப்புப் பாடப் பிரிவுகள், பயிற்சித் திட்டங்கள் போன்றவற்றின் மூலம் மேலாண்மை நவீனமயமானதாகவும், பிரபலமடைந்தும் வருகின்றது.
4. சிறப்பீடுபாடு:
வணிகத்தின் ஒவ்வொரு செயல்பாட்டுப் பகுதியையும் சீரிய முறையில் மேலாண்மை செய்து வணிகத்தை சிறப்பாக நிர்வகிக்க உயர்கல்வித் தகுதியும், முறையான பயிற்சியும் பெற்ற, உரிய முன் அனுபவமுள்ளவர்களை தேர்ந்தெடுத்து பணியமர்த்த வேண்டும்.
5. நடத்தை விதி:
i. நுகர்வோர் சார்ந்த சந்தைப்படுத்துதல் கருத்தாக்கம் என்பது பெரு நிறுவன நடத்தை விதியினையும் பிரதிபலிப்பதாகும்.
ii. நுகர்வோர் இயக்கங்களின் அழுத்தம், தொழிற்சங்க வாதம், பொதுமக்கள் கருத்து மற்றும் சட்டம் ஆகியவை அறம் சார்ந்த விதிகளைத் தோற்றுவித்து மேலாண்மையை வலுவாகத் தூண்டுகிறது.
6. பணி ரீதியானதொரு அமைப்பு:
பல்வேறு நாடுகளில் மேலாண்மைப் பிரிவுகளில் அறிவுப் பரவலாக்கம் ஏற்படவும், மேலாண்மை சிறப்புத் தொழில் குறித்த பொதுமக்கள் மனதில் ஒரு சிறந்த தோற்றத்தை உருவாக்கவும் வணிக மேலாண்மை சங்கங்கள் நடவடிக்கை மேற்கொள்கிறது.
178.
1. இவ்வகை சந்தையிடுதல் ஒரு நேரடி சந்தையிடுதல் வகையைச் சார்ந்தது.
2. இம்முறையில் ஒரு மொத்த வியாபாரி அல்லது விநியோகஸ்தரை நிறுவனம் முதலில் நிர்ணயிக்கும். பின்னர் விநியோகஸ்தர்கள் அவர்களின் கீழ் பல விநியோகஸ்தர்களை நிர்ணயிப்பர்.
3. விநியோகஸ்தர்களும் அவர்களின் கீழ் பல விநியோகஸ்தர்களை அமர்த்தி விற்பனையை பெருக்கும் முறையையே பல்நோக்கு அளவு சந்தையிடுதல் என்கிறோம்.
4. இவ்வாறு அமர்த்தப்படுபவர்கள் கீழ்நிலையர் அல்லது கீழ்நிலை விநியோகஸ்தர்கள் என அழைக்கப்படுகின்றனர்.
5. இம்முறையில் ஒவ்வொரு விற்பனையாளர்களும் தாங்கள் செய்த விற்பனைக்கு மட்டுமல்லாமல் அவர்களின் கீழ் பணியாற்றும் விற்பனையாளர்கள் செய்யும் விற்பனைக்கும் சேர்த்து விற்பனை கழிவை பெறுவார்கள்.
6. இம்முறையில் விற்பனையாளர்கள் சொல் வழி அல்லது வாய்வழி தொடர்பு அல்லது உறவு வழி பரிந்துரையின் மூலம் பொருட்களை சந்தையிடுதலைக் குறிக்கிறது.
7. இம்முறை சந்தையிடுதல் விற்பனையாளர் அல்லது விநியோகஸ்தர்கள் மட்டும் விற்பனை செய்யாமல் அவர்களுடன் இணைத்து மற்றவர்களையும் விற்பனை செய்ய தூண்டுவர்.
8. இம்முறை சந்தையிடுதலுக்கு எடுத்துக்காட்டாக டியுப்பர் மற்றும் ஆம்வே நிறுவனங்களின் விற்பனை முறையைக் கூறலாம்.
179.
1. உரிமை மாற்று பணிகள்:
i. உரிமை மாற்று பணி என்பது பண்டங்கள் மற்றும் பணிகளின் மதிப்பை பணத்தின் அடிப்படையில் மாற்றுவதைக் குறிக்கிறது.
ii. இத்தகைய உரிமை மாற்று பணிகளை மேலும் இரண்டு வகையாக பிரிக்கலாம்.
1. வாங்குதல் மற்றும் ஒன்று சேர்த்தல்
2. விற்பனை
2. இடமாற்று பணிகள்:
இவ்வகை பணிகள் இரண்டு முக்கிய பணிகளை மேற்கொண்டுள்ளது.
i. போக்குவரத்து
ii. சரக்கு சேமிப்பு மற்றும் பண்டக சாலையிடுதல்
i. போக்குவரத்து
1. சந்தையிடுகை நடவடிக்கைகளுக்கு போக்குவரத்து இன்றியமையாத ஒரு பணியாக உள்ளது.
2. போக்குவரத்தின் மூலமே பொருட்கள் உற்பத்தி மையத்திலிருந்து நுகர்விடங்களுக்கு கொண்டு வரப்படுகின்றன.
3. போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள தீவிர மேம்பாட்டின் காரணமாகவே தற்பொழுது பேரளவு உற்பத்தி சாத்தியமாகி உள்ளது.
4. போக்குவரத்தானது பொருளுக்கு இடப் பயன்பாட்டை அளிக்கின்றது.
ii. சரக்கு சேமிப்பு மற்றும் பண்டக சாலையிடுதல்:
1. சரக்கு சேமிப்பு என்பது இப்பொழுது மிகவும் இன்றியமையாத ஒரு பணியாகி உள்ளது.
2. சரக்குகள் உற்பத்தி மையங்களிலும் பகிர்ந்தளிப்பு நிலையங்களிலும் சேமித்து வைக்கப்படுகின்றன.
3. சமநிலையற்ற தேவைகளையும் பருவகால தேவையையும் உடைய பொருட்களுக்கு சேமிப்பு மிகவும் அவசியமாகின்றது.
3. வசதிப் பணிகள்:
i. பண்டங்கள் மற்றும் பணிகளை உற்பத்தியாளரிடமிருந்து நுகர்வோருக்கு கொண்டு செல்வதற்கு உதவி புரியும் பணியையே துணைப் பணிகள் என்று அழைக்கப்படுகிறது.
ii. பணிகள் நேரடியாக பண்டங்களை மாற்றம் செய்வது அல்ல.
iii. நிதியிடல்
iv. இடர் ஏற்றல்
v. சந்தை தகவல்
vi. தரப்படுத்துதல்
vii. வகைப்படுத்துதல்
viii. பெயரிடல்
ix. கட்டுமம்
x. விலையிடல்
180.
1. தூண்டுபவர்:
சந்தையின் மேம்பாடு கருதி அவ்வப்போது சந்தையிடுகையின் வாய்ப்புகள் மற்றும் சந்தையில் ஏற்படும் மாற்றங்களை உன்னிப்பாக கூர்ந்து கவனித்து அதற்கு ஏற்றவாறு சந்தையிடு கலவையில் மாற்றத்தை ஏற்படுத்தி ஒரு புதிய கோணத்தை சந்தையிடுகையாளர் ஏற்படுத்துகிறார்.
2. புதுமை புகுத்துநர்:
சந்தையிடுகையாளர் தனது பண்டங்கள் மற்றும் பணிகளை சந்தையில் தனக்கென ஒரு இடத்தை ஏற்படுத்துவதற்கு நடைமுறையில் இருந்து வரும் பொருட்களின் இயல்பை அதிகரித்தல், மதிப்பைக் கூட்டுதல், விலையில் மாற்றத்தை ஏற்படுத்துதல், பொருள் கொண்டு சேர்க்கும் முறை, தொழில் முறையில் மாற்றம் மற்றும் உற்பத்தி முறையில் மாற்றம் போன்றவற்றை செய்து வருகிறார்.
3. ஒருங்கிணைப்பாளர்:
பண்டங்கள் மற்றும் பணிகள் பற்றி நுகர்வோர் மற்றும் வாடிக்கையாளரின் மத்தியில் கருத்துக்களை பெற்றும் அதன் அடிப்படையில் அமைப்பின் ஒருங்கிணைப்பு பணியினை மேற்கொள்கிறார்.
4. செயல்பாட்டாளர்:
அமைப்பின் பல்வேறு பணிகளின் உதவியோடு பொருட்களை சந்தையிடுகை செய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் மாற்றங்களை உருவாக்குகிறார்.
181.
1. பணியின் தரத்தினை உயர்த்துதல்:
i. பணியில் கவனம் செலுத்துவதுடன் பயிற்சி ஒரு குறிப்பிட்ட பணியாளரின் திறனை மேம்படுத்துகிறது.
ii. இது பணியாளரின் பணி தரத்தினை அதிகரிக்க வகை செய்கிறது.
2. பணியாளரின் வளர்ச்சியை மேம்படுத்துதல்:
பயிற்சி பெற்ற ஊழியர்கள் தங்கள் வேலையில் திறன் மிக்க ஊழியர்களின் செயல்திறன் மேம்பாட்டில் புதிய திறன்களை ஊக்குவிப்பது பயிற்சி ஆகும்.
3. வழக்கொழிவை தடுத்தல்:
i. சமீபத்தில் தொழில்நுட்பங்கள் மற்றும் நுட்பங்களைப் பற்றிய கூடுதல் அறிவைக் கற்றுக் கொள்ள பயிற்சி அளிக்கிறது.
ii. பணியாளர்கள் தற்கால தொழில்நுட்பம் மற்றும் போக்குடன் புதுப்பிக்கப்படுகிறார்கள்.
4. புதிய பணியாளர்களுக்கு விழிப்பூட்டல்:
பயிற்சியின் மூலம் புதிய பணியாளர்கள், வேலை முறைமை, நுட்பங்கள், அறிக்கைகள், பணியில் பயன்படுத்தப்படும் கருவிகள் மற்றும் உபகரணங்களை பயிற்சி நிறுவனத்தின் உதவியுடன் வேலை செய்யும் கலாச்சாரம் போன்றவற்றை கற்றுக் கொள்ளலாம்.
5. மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள்:
i. வேலையில் ஈடுபடும்போது பணியினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணர்வினை முறையான பயிற்சியின் மூலம் பெறுகின்றனர்.
ii . இது வேலை இடத்தில் பணி பாதுகாப்பினை மேம்படுத்த மற்றும் விபத்துக்களை தவிர்க்க உதவுகிறது.
6. ஊழியர்களை ஊக்குவித்தல்:
i. ஒரு பணியாளர் தன் பதவி திட்டமிடுதலுக்கு ஏற்ப தொடர்ந்து தன் மேம்பாட்டிற்காக தன் பணி பாதையில் முன்னேறி செல்ல அவசியமாகிறது.
ii. பயிற்சியானது அவர்களுக்கு செயலூக்கம் அளிப்பதோடு மட்டுமல்லாமல் நிர்வாகத்தின் மீதான அக்கறையையும், மறு உணர்வையும் ஊட்டுகிறது.
7. அதிக உற்பத்தித் திறன் மற்றும் இலாபங்கள்:
சிறந்த பயிற்சியளிக்கப்பட்ட ஊழியர்களின் பங்களிப்பு மேலும் திறன்களையும் உத்திகளையும் அளித்து வேலையினை கச்சிதமாகவும், விரைவாகவும் முடிப்பதற்கு பயிற்சி முறை உதவுகிறது.
8. செலவு குறைப்பு:
i. பயிற்சியளிக்கப்பட்ட ஊழியர்கள் வளங்களை திறமையான முறையில் பயன்படுத்தலாம்.
ii. வள ஆதாரங்களை வீணடிக்க எந்த வாய்ப்புகளும் இல்லை.
iii. இது செலவுகளைக் குறைக்க வழிவகுக்கிறது.
9. குறைந்த மேற்பார்வை:
பயிற்சி அளிக்கப்பட்ட ஊழியர்கள் தங்கள் பணியை செய்வதற்கு தேவையான அனைத்து தெளிவு நிலையைப் பெற்றிருப்பதால் குறைவான மேற்பார்வை போதுமானது.
10. சிறந்த ஒத்திசைவு:
ஊழியர்கள் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய மாற்றங்களை தொடர் பயிற்சியின் மூலம் தங்களை மாற்றிக் கொள்ள முடிகிறது.
182.
I. சட்டப்பூர்வமான பணிகள் :
நிறுமச்சட்டம் 2013ன் படி கீழ்க்கண்டவை நிறுமச் செயலரின் சட்டப்பூர்வமான பணிகள் ஆகும். அவை
(i) நிறுமத்தின் அங்கீகாரம் தேவைப்படும் அனைத்து இடங்களிலும் நிறுமத்தின் சார்பாக கையொப்பம் இடுவது.
(ii) பங்குகள், இயக்குநர்கள் மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்பான ஆவணங்களை பராமரித்தல்.
(iii) பங்கு முதல் தொகையை அதிகரிப்பது குறித்த அறிவிப்பை நிறும பதிவாளரிடம் கொடுத்தல்.
(iv) பங்கு ஒதுக்கீடு செய்த இரண்டு மாதத்திற்குள் பங்கு ஒதுக்கீடு சான்றிதழை அளித்தல்.
(v) ஆண்டு அறிக்கையில் கையொப்பமிடுதல்.
(vi) தொழில் தொடங்க சான்றிதழை பெற தேவையான உறுதிமொழிகளை அளித்தல்.
(vii) ஒவ்வொரு பங்குனர்களுக்கும் ஆண்டு பொதுக்கூட்டம் குறித்த அறிவிப்பை அனுப்புதல்.
(viii) சட்டமுறை ஏடுகளை தயாரித்தல்.
(ix) ஆண்டு பொதுக்கூட்டம் மற்றும் இயக்குநரவை கூட்டங்களுக்கான கூட்ட நிகழ்ச்சிக் குறிப்பை 30 நாட்களுக்குள் தயாரித்தல்.
(x) கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கோப்பிலிட்டு நிறும பதிவாளருக்கு அனுப்புதல்.
(xi) நிறும கலைப்பின் போது நிதிநிலை அறிக்கைகளை தயாரிக்க உதவி செய்தல்.
II. சட்டப்பூர்வமற்ற பிற பணிகள் :
(i) இயக்குநருக்கு ஆற்ற வேண்டிய முகமைப் பணிகள் :
a) நிறுமத்திற்கு தேவையான கொள்கைகளை வகுத்து, பல முடிவுகளை எடுப்பதற்கு தேவையான தகவல்களையும் அறிவுரைகளையும் வழங்குதல்.
b) இயக்குநர்களின் வருகை பதிவேட்டை பராமரிப்பது, கூட்டங்கள் கூட்டுவது.
c ) கூட்ட நிகழ்ச்சி நிரல் மற்றும் கூட்ட குறிப்பு தயாரிப்பது தொடர்பாக கூட்டத் தலைவருடன் கலந்தாலோசித்து பல தீர்மானங்களை தயாரித்தல்.
d ) இயக்குநரவை அலுவலர்களுடன் தகவல் தொடர்பை ஏற்படுத்தி ஆவணங்களை கோப்பிடல் மற்றும் பதிவேடுகளை தயாரித்து அளிப்பது.
ii) பங்குனர்களுக்கு ஆற்ற வேண்டிய முகமைப் பணிகள் :
a) நிறும பங்குனர்களின் உரிமை மீறப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டியது.
b) பங்கு ஒதுக்கீட்டு கடிதம், கூட்ட அழைப்பு கடிதம், வருத்த கடிதம், பங்கு சான்றிதழ் பங்கானைகளை அனுப்புவது மற்றும் கடனீட்டுப்பத்திரத்தை அளிப்பது.
c )பங்குனர்களின் கூட்ட நாள், இடம் மற்றும் நிகழ்ச்சி நிரல் போன்ற விவரங்கள் தாங்கிய அறிக்கையை பங்குனர்களுக்கு அனுப்புதல்.
d) இயக்குநர்களின் சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்கு இயக்குநரவை சார்பாக கலந்தோசித்து விசாரித்து உரிய பதிலை அளிப்பது.
(iii) அலுவலக ஊழியர்கள் மற்றும் பணியாட்களுக்கு ஆற்றும் சேவைகள் :
a) நிறும அலுவலக ஊழியர்களில் தலை சிறந்த மூத்த ஊழியர் செயலர்.
b) அலுவலக செயல்பாடுகளை இயல்பாக செயல்பட செய்வது.
c) அலுவலக செயல்பாடு சார்ந்த அனைத்தையும் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படுத்த வேண்டியது.செயலரின் கடமை.
183.
அ) பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உகந்த கலவை :
1. குறைந்தது ஒரு பெண் இயக்குனர்களுடன் கூடிய செயல்படும் மற்றும் செயல் நிர்வாகம் அல்லாத இயக்குனர்கள்.
2. 50 % க்கு குறையாமல் செயல் நிர்வாகம் அல்லாத இயக்குனர்கள் கொண்ட ஒருங்கிணைப்பாக இருக்க வேண்டும்.
ஆ)செயல் நிர்வாகம் அல்லாத இயக்குனர் தலைவராக இருக்கும்போது :
குறைந்தது மூன்றில் ஒரு பங்கு செயல் நிர்வாக இயக்குனர்கள் சுதந்திர இயக்குனராக இருக்க வேண்டும்.
இ) செயல் நிர்வாகம் அல்லாத இயக்குனர் தோற்றுவிப்பாளராக அல்லது தோற்றுவிப்பாளருடன் தொடர்புடையவராக அல்லது இயக்குனர் குழுவிற்கு சமமான மட்டத்தில் இருக்கும் போது அல்லது இயக்குனர் குழு மட்டத்தில் ஒரு நிலை பெற்றிருக்கும்போது :
1. குறைந்தபட்சம் 50 % சுதந்திர இயக்குனர்களைக் கொண்டு இருக்க வேண்டும்.
2. இயக்குனர்கள் நிறுமத்தின் குறிக்கோளை அடைய வித்தியாசமான அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டும்.
184.
நிறுமச் சட்டம் பிரிவு (II)ன்படி பங்கு முதலைக் கொண்டுள்ள நிறுமம் கீழ்காணும் உறுதிமொழியை கொடுத்து நிறுமத்தை தொடங்க வேண்டும்.
(i) ஒவ்வொரு பங்குதாரரும் முழு தொகையும் செலுத்தி பெறப்பட்ட பங்குகளின் விவரம்.
(ii) பொது வரையறு நிறுமமாயின் Rs.5 இலட்சமும் தனி வரையறு நிறுமமாயின் Rs.1 இலட்சமும் செலுத்தப்பட்ட மூலதனம் இருக்க வேண்டும்.
(iii) இது பதிவு அலுவலரால் சரிபார்க்கப்பட்டு கோப்புகளில் வைக்கப்படும்.
மேற்கண்ட உறுதிமொழிகள் சரிபார்க்கப்பட்டு நிறுமம் தொடங்குவதற்கான ஆணை பிறப்பிக்கப்படும்.
185.
186.
| வ.எண் | வேறுபாடு | நகர்புற தொழில் முனைவோர் | ஊரக தொழில் முனைவோர் |
|---|---|---|---|
| 1. | அமைவிடம் | மாநில தலைநகரம், மாவட்ட தலைநகரம் பேரூராட்சிகளில் தொழிலை துவங்குவார். | கிராமப்புறங்களில் தனது தொழிலை துவங்குபவர். |
| 2. | அரசின் சலுகைகள் | ஊரக தொழில் முனைவோரை காட்டிலும் குறைவான அரசு சலுகைகளை பெறுகிறார். | கிராமப்புற வளர்ச்சிக்காக அரசு அதிகமான சலுகைகளை இவருக்கு வழங்குகிறது. |
| 3. | அமைப்பு | உற்பத்தி, சில்லறை அல்லது கூட்டு பங்கு நிறும தொழில் முனைவோராக இருக்கலாம். | உற்பத்தி மற்றும் சில்லறை தொழில் முனைவோராக இருக்கலாம். |
| 4. | உற்பத்தி செலவு | நகர்ப்புறங்களில் செயல்படுவதால் அதிகமான உற்பத்தி செலவு ஏற்படுகிறது. | கிராமப்புறங்களில் செயல்படுவதால் குறைவான உற்பத்தி செலவு ஏற்படுகிறது. |
| 5. | விலை | உற்பத்தி செலவு அதிகமாதலால் பொருளுக்கான விலையை அதிகரித்து விற்பனை செய்கிறார். | உற்பத்தி செலவு குறைவாக உள்ளதால் நுகர்வோருக்கு குறைவான விலையில் பொருட்களை விற்பனை செய்கிறார். |
187.
தொழில் முனைபவரின் சிறப்பியல்புகள்:
(i) தொழில் துணிகர உணர்வு : தொழில் முனைபவர் தான் மேற்கொண்ட தொழிலில் ஏற்படும் இடர்களை துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும். வினையை நடத்தி வரும்போது ஏற்படும் இயற்கையான ஏமாற்றங்கள் அல்லது தோல்விகள் அவரின் ஆர்வத்தை சிதைக்கா வண்ணம் துணிவுடன் செயல்படுவோர் ஆவார்.
(ii) தன்னம்பிக்கை : தன்னம்பிக்கை ஒரு மனிதனுக்கு அழகு ஏற்படுத்துகிறது. எதிர்மறை உணர்வுகளான அசௌகரியங்கள், ஏமாற்றங்கள், தோல்விகள் மற்றும் தொல்லைகள் தொழில் முனைபவரது மன உறுதியை குலைக்கக் கூடாது.
(iii) நெகிழ்வு தன்மை : மாறும் சூழ்நிலைகட்கு ஏற்ப தொழில் முனைபவன் தன் முடிவை அல்லது நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளும் நெகிழ்வு தன்மையை கடைப்பிடிக்க வேண்டும். நெகிழ்வுத் தன்மையற்றவர்கள் தொழில் முனைவில் வெற்றி காண்பது இயலாத ஒன்றாகும்.
(iv) புதுமை புகுத்தல் : தொழில் முனைபவர் புதுமை படைப்பாளராக இருந்திட வேண்டும். ஏதேனும் ஒரு புதுமையைப் புகுத்தி சந்தையில் நிரந்தரமான இடத்தை பிடிக்க வேண்டும். புதுமை என்பது புத்தம் புதிய பொருளாகவோ, புதுமைப் பண்புகளை பொருளில் நுழைப்பதோ, புதிய சந்தையை உருவாக்குவதோ, புதிய கச்சாப் பொருளைக் கொண்டு பொருளை உற்பத்தி செய்வதோ, புதிய உற்பத்தி முறையை கையாள்வதோ மற்றும் புதிய நுட்பத்தை மேற்கொள்வது.
(v) வளத்தை திரட்டுபவர் :
1. தான் மேற்கொண்ட செயலை செயலாக்கிட தொழில் முனைபவர் புலனாகக்கூடிய மற்றும் புலனாகாத உட்பொருட்களையும் ஒன்றிணைப்பவர் ஆவார்.
2. தொழிலை துவக்கிட இடு பொருளை வாங்குதல், மனித வளத்தை திரட்டுதல், நிதியை புரட்டுதல், போன்ற நடவடிக்கைகளை நாட்டின் மூலை முடுக்குகளுக்கு சென்று சேரும் வகையில் பொருளை உற்பத்தி சந்தையிடுகைக்கு கொண்டு சேர்க்கும் செயலை செய்பவர் ஆவார்.
(vi) கடின உழைப்பு: தொழில் முனைபவர் தான் மேற்கொண்ட செயலின் நோக்கத்தை அடைய அரும்பாடு படவேண்டும். தொல்லைகள், இடர்கள், அசௌகரியங்கள், இன்னல்கள் மற்றும் ஏமாற்றங்கள் என அவ்வப்போது ஏற்படும் இடர்களை தளராமல் மேற்கொள்ளுதல். தலைவிதியின் மீது பழிபோடுவதோ அல்லது பிறவற்றின் மீது பழி சுமத்தி சுகம் காண்பவராகவோ இருக்கக் கூடாது.
188.
(i) ஒவ்வொரு மாற்றுமுறை ஆவணமும் மறுபயன் கருதி வரையப்பட்டது.
(ii) ஒவ்வொரு மாற்றுமுறை ஆவணமும் ஒப்புக் கொள்வதாகக் கருதப்படுகிறது.
(iii) அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாளில் அது எழுதப்பட்டது.
(iv) நியாயமான காலத்திற்குள் முதிர்வுக்கு முன்பாக ஏற்கப்பட்டதாக கருதப்படுகிறது.
(v) அதன் முதிர்வு தேதிக்கு முன்பே ஏற்கப்பட்டதாக கருதப்படுகிறது.
(vi) மாற்றுமுறை ஆவணம் காணாமல் போனாலும் முறைப்படி முத்திரையிடப்படுவதாக கருதப்படுகிறது.
(vii) இதனை வைத்திருப்பவர் முறைப்படி உடைமை பெற்றவராக கருதப்படுகிறார்.
(viii) மாற்றுமுறை ஆவணத்தில் மேலெழுதப்பட்டது என குறிப்பிடப்பட வேண்டும்.
189.
விற்பனைச் சட்டத்தின் அடிப்படைக் கூறுகள்: ஒரு விற்பனை ஒப்பந்தச் சட்டத்திற்கு பின்வரும் கூறுகள் இன்றியமையாததாக கருதப்படுகிறது.
(i) இருதரப்பினர்: சரக்கு விற்பனைச் சட்டத்தில் இருதரப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் வாங்குனர் இன்னொருவர் விற்பனையாளர். ஒரு தனி நபர் தனக்கே பொருளை எடுத்துக் கொள்வதை விற்பனை என்ற சொல் குறிக்காது.
(ii) பொருளின் மீதான உரிமை மாற்றம்: விற்பனை என்று அழைக்க, விற்பவர் பொருளின் மீதான உரிமையை வாங்குபவர்க்கு மறுபயன் பெற்றுக் கொண்டு மாற்றித்தர வேண்டும். பொருளின் உடைமை மாற்றுவது என்ற செயல் விற்பனை ஆகாது.
(iii) சரக்கு/பொருள்: சரக்கு என்ற சொல் பணம், அசையாச் சொத்து மற்றும் உரிமைகோர் சரக்கில் அடங்காது. சரக்கு என்ற சொல்லில் பணம், அசையா சொத்துக்கள் மற்றும் உரிமைக்கோர் போன்றவை அடங்காது.
(iv) விலை: பொருளின் விற்பனைக்கு மறுபயனே விலை ஆகும். பொருளைப் பொருளுக்கு மாற்றாக பரிமாற்றம் செய்துக் கொள்வது விலையாகாது. பொருளைப் பகுதியாக பொருளுக்கும் மீதப் பகுதியாக விலைக்குமே மாற்றிக் கொள்ளும்போது, விலைக்கு மாற்றிய பகுதி மட்டும் விற்பனை நடவடிக்கை ஆகும்.
(v) விற்பனை மற்றும் விற்பனை உடன்பாடு:
பொருளின் உரிமையை உடனே மாற்றிவிடக் கூடிய நடவடிக்கைகள் விற்பனை என்றும், உரிமையை எதிர்காலத்தில் மாற்றும் நடவடிக்கைகளுக்கு விற்பனை உடன்பாட்டு நடவடிக்கைகள் எனவும் பொருள்படும்.
190.
நன்மைகள்
(அ) வெளி நாட்டு முதலீடுகள் அதிகரிப்பு: (Increase in Foreign Investment)
ஒரு நாடு வணிகத்தை தாராளமயமாக்குதலின் மூலமாக அதிக அளவில் வெளிநாடுகளிலிருந்து கவர்ச்சிகரமான முதலீடுகளை பெற முடிகின்றது. அம்முதலீடுகள் மூலமாக உள்நாட்டில் மூலதனத்தை பெருக்குவதோடு அதன் பொருளாதாரத்தை பன்மடங்கு பெருக்குவதற்கு உதவுகிறது.
(ஆ) அந்நிய செலாவணி இருப்பு அதிகரிப்பு (Increase the Foreign Exchange Reserve)
வெளி நாட்டு முதலீட்டிற்கும் அந்நிய செலாவணிக்குமான கட்டுப்பாடுகளை தளர்த்தி மூலதனத்தை எளிதில் பெறுவதற்கு வழிவகை செய்துள்ளது.
(இ) நுகர்வு அதிகரிப்பு : (Increase in Consumption)
தாராளமயமாக்களினால் ஒரு நாட்டில் பயன்பாட்டிற்கு அதிக அளவிலான பொருட்கள் கிடைக்கவும் அதிக உற்பத்திக்கும் வழிவகை செய்கிறது.
(ஈ) விலைக்கட்டுப்பாடு : (Control Over Price)
ஏற்றுமதி இறக்குமதி தீர்வைகளை நீக்குவதால் நுகர்வோருக்கு குறைந்த விலைக்கு பொருட்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தாராளமயமாக்கலினால் இறக்குமதி நாடுகளுக்கு நன்மை விளைவிக்கிறது.
(உ) வெளிநாட்டில் பெறும் கடன்களை குறைக்கிறது (Reduction in external borrowings)
தாராளமயமாக்கலின் மூலம் வெளி நாட்டுக் கடன்களை ஈர்ப்பதன் மூலம் வெளிநாட்டு வர்த்தகக் கடன்களை வாங்கும் வாய்ப்பு குறைகிறது.
குறைபாடுகள்:
(அ) வேலையின்மையை அதிகரித்தல் (Increase in Unemployment)
வர்த்தக தாராளமயமாக்கல் பெரும்பாலும் பொருளாதாரத்தின் சமநிலைக்கு வழிவகுப்பதால் சிறு தொழில்களில் சில வளர்ந்தும் சில சிறு தொழில்களில் சரிவும் ஏற்படுகிறது. இதனால் சில தொழிற்சாலைகள் மூடுகின்ற நிலையால் வேலையில்லா நிலை உருவாகிறது.
(ஆ) உள்நாட்டு தொழில் அலகுகளின் இழப்பு (Loss to Domestic Units)
தாராளமயமாக்கல் கோட்பாட்டில் குறைந்த நுழைவுக் கட்டுப்பாடுகளுடன் வெளிநாட்டு தொழில்கள் பல நாடுகளில் ஊடுருவ சாத்தியம் அதிகம் உள்ளது. இது உள்நாட்டு தொழில்களை அச்சுறுத்துவதுடன் மற்றும் போட்டியை தோற்றுவித்து உள்நாட்டு தொழிலை அடியோடு ஒழிக்கும் சதியாகவும் கருதப்படுகிறது.
(இ) அயல்நாடுகளை சார்ந்திருத்தலை பெருக்கும்:(Increased Dependence of Foreign Nation)
வர்த்தக தாராளமயமாக்கல் என்பது பலம் பொருந்திய பன்னாட்டு நிறுவனங்களிலிருந்து அதிக போட்டிகளை எதிர்கொள்ளும். அது சந்தையை தன் கட்டுபாட்டிற்கு கீழ் கொண்டுவரும் நிலையை உருவாக்க நேரிடலாம்.
191.
நன்மைகள்
i. அனைத்து நேரத்திலும் சந்தை:
1. மின் சந்தை வாரத்தின் 7 நாட்களிலும் 24 மணி நேரத்திலும் (24x7) பயனாளிக்கு சந்தை வசதியை அளிக்கிறது.
2. இதனால் நுகர்வோர் எந்த இடத்திலிருந்தும் எந்த நேரத்திலும் பொருள்களையும் சேவைகளையும் பெறவும் அளிக்கவும் முடியும்.
ii. நேரடி தொடர்பு:
1. தயாரிப்பாளருக்கும் நுகர்வோருக்கும் இடையே நேரடி தொடர்பு ஏற்படுவதால் செலவுகள் குறைக்கப்படுகிறது.
2. இதனால் மலிவான விலையில் பொருட்களை இணைய சந்தையிடுகையின் வாயிலாக நுகர்வோர்கள் பொருட்களை வாங்க இயலுகிறது.
iii. தேவையை பெறுதல்:
நுகர்வோர் தங்களுக்கு தேவைப்படும் எத்தகைய பொருள்களையும் மற்றும் சேவைகளையும் மின் சந்தையில் பல்வேறு தளங்கள் மற்றும் வலை பக்கங்கள் மூலம் பெறலாம்.
தீமைகள்
i. அதிக செலவு:
1. மின் சந்தைப்படுத்துதலில் விளம்பரம் செய்யவும், வணிக தளம் அமைக்கவும் பெரிய அளவில் செலவிட வேண்டும்.
2. வலைதள வடிவமைப்பு, மென்பொருள், நுண்பொருள், வணிகதளப் பராமரிப்பு, வினியோக செலவு போன்றவற்றிக்கு அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டியுள்ளது.
ii. சிறிய நிறுவனத்திற்கு பொருந்தாது:
மிக தொலைவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு பொருள் மற்றும் சேவைகளை வழங்க சிறிய நிறுவனங்களுக்கு மின் சந்தைப்படுத்தல் பொருந்தாது.
iii. தகவல்களைப் புதுப்பித்தல்:
1. இன்றைய சூழலில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு ஏற்ப நிறுவனங்கள் இணைய தளத்தில் போதிய விவரங்களைப் புதுப்பிக்கின்றன.
2. தகவல்களை அவ்வப்பொழுது புதுப்பிப்பது மிகவும் கடினமாக இருக்கும்.
192.
வியாபாரத்தின் செயல் திறனை உடனடியாக பாதிக்கும் சுற்றுச் சூழலாக இருக்கும் காரணிகளை நுண்ணிய சூழல் குறிக்கிறது. இதில் பின்வருவன அடங்கும்.
(அ) நிதி அளிப்பவர்கள்:
(i) கடனீட்டுப் பத்திரதாரர்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் வணிகம் சிறந்த முறையில் இயங்க முக்கிய பங்கினை வகிக்கிறார்கள்.
(ii) அவர்களின் நிதிதிறன், கொள்கை உத்திகள், இடர் பற்றிய அணுகுமுறை மற்றும் நிதிசாரா அமைப்புகளின் பங்கு முக்கியமாக உள்ளது.
(ஆ) சரக்கு விற்பனையாளர்கள் :
எந்தவொரு அமைப்பிலும் மூலப்பொருட்கள் மற்றும் இதர உள்ளீடுகளின் வழங்குநர்கள் மிகவும் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். விநியோகிப்பாளரிடமிருந்து பெறப்படும் பொருட்கள் உற்பத்திகளில் தொடர்ச்சியான செயல்பாட்டை செயல்படுத்துகிறது.
(இ) சந்தையிடுகை இடைநிலையர்கள்:
(i) உற்பத்தி பொருளை விற்பனை செய்யவும் நுகர்வோரிடம் கொண்டு சேர்ப்பதற்கும் விநியோகிப்பாளர்களின் உதவி தேவைப்படுகிறது.
(ii) இவர்கள் நிறுவனத்தையும், நுகர்வோரையும் இணைக்கும் திகழ்கின்றனர். மொத்த விற்பனையாளர்கள் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் முகவர்கள் பொருள்களை நுகர்வோரிடம் சேர்ப்பதை உறுதி செய்கின்றனர்.
(ஈ) பொது மக்கள்:
தொழிலில் தாக்கத்தை ஏற்படுத்தும் பின்வரும் குழுக்கள் பொது மக்கள் எனப்படுகிறது.அவையானவை ஊடகக்குழு, குடிமக்கள் குழு மற்றும் உள்ளூர் பொது மக்கள் போன்ற குழுக்கள் வியாபாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பொது மக்களிடம் ஒரு வியாபாரத்தை உருவாக்குவதற்கும் அல்லது அழிப்பதற்குமான திறமை உள்ளது.
(உ) வாடிக்கையாளர்கள்
ஒவ்வொரு வியாபாரத்தின் நோக்கமும் அதன் வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவேற்றுவதாகும். வாடிக்கையாளரே வணிகத்தின் மன்னராக கருதப்படுகிறார் மற்றும் அவர்களைச் சுற்றியே வணிகம் உள்ளது.
(ஊ) போட்டியாளர்கள்:
அனைத்து நிறுவனங்களும் எல்லா நிலைகளிலும் போட்டியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.உள்ளுர், தேசிய மற்றும் உலகளாவிய அளவில் ஒரே மாதிரியான பொருள் உற்பத்தி அல்லது தயாரிப்புகள் இருப்பதால் நிறுவனங்கள் பல்வேறு நிலைகளில் போட்டியிட கூடிய நிலை ஏற்படுகிறது.
193.
(i) நோக்கத்திற்காக வணிக நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு ஆணையம் என்ற பெயரில் துவங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
(ii) இந்த அமைப்பு நுகர்வோர் குறைபாட்டு தீர்ப்பாணையம் என அழைக்கப்படுகிறது.
அதிகாரம்
(i) மாநில மன்றம் விசாரித்த புகார்கள் அல்லது தன்வசம் விசாரணையில் உள்ள புகார்கள் தொடர்பான ஆவணங்களை கேட்டு பெற்று ஆழ்ந்த விசாரணை செய்து தீர்ப்பு வழங்கும் அதிகாரம் பெற்றுள்ளது.
(ii) கணக்கு ஏடுகள் ஆவணங்கள் மற்றும் பொருட்களை மாநில நுகர்வோர் தன்வசம் வைத்துக்கொள்ளவும் அல்லது மேற்கூறிய இந்த ஆவணங்களை குறைதீர்ப்பு முகமத்தில் பணிபுரியும் அலுவலர்கள் பார்வைக்கோ அல்லது ஆய்வுக்கோ வழங்க அதிகாரம் பெற்றுள்ளது.
(iii) மேற்கூறிய முகமையின் அதிகாரிகளுக்கு சட்டத்தின் நோக்கத்திற்காக தேவைப்படும் தகவல்களை வழங்கும் அதிகாரம்.
194.
1. உடல்நல பாதுகாப்பு உரிமை மற்றும் பாதுகாப்பிற்கான உரிமை :
(i) சில தயாரிப்பு பொருட்கள் நுகர்வோரின் உடல்நலம், சொத்துக்கள் மற்றும் வாழ்வு முறையில் அபாயத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.
(ii) இன்றைய சூழலில் சட்டத்திற்கு புறம்பான மற்றும் பாதுகாப்பில்லாத பொருட்களை தயாரிப்பதோ அல்லது விற்பனை செய்யவோ கூடாது என்ற கடமை விற்பனையாளருக்கும் மற்றும் உற்பத்தி செய்வோருக்கும் உள்ளது.
2. தகவல் பெறும் உரிமை :
பொருட்களை வாங்கும் பொழுது நுகர்வோர் அதன் பெயர், கலவை, பயன்படுத்தும் அளவு, உற்பத்தி மற்றும் காலாவதியாகும் நாள், தயாரிப்பு பிரிவு மற்றும் எச்சரிக்கை பற்றிய அனைத்து தகவல்களையும் கேட்டுப் பெற வேண்டும்.
3. தேர்ந்தெடுக்கும் உரிமை :
(i) தேர்வு என்பது பரந்த வழிகளில் தரம், வியாபாரக் குறியீடு, நியாயமான விலை போன்றவற்றின் அடிப்படையில் பொருட்களை தேர்ந்தெடுப்பதாகும்.
(ii) ஒரு திறமையான விற்பனையாளர் நுகர்வோரை மன நிறைவு கொள்ள பரவலான பொருட்களின் தேர்வினை கருதுகிறார்.
4. செவிமடுக்கும் உரிமை :
(i) வணிக நிறுவனங்கள் நுகர்வோரின் புகார்கள் மற்றும் குறைகளை திறந்த மனதுடனும், கருணை மனப்பான்மையுடனும் செவிமடுக்க வேண்டும்.
(ii) அனைத்து நிறுவனங்களும் நுகர்வோரின் குறைகளைக் கண்டறிய தனியான துறை அல்லது பகுதி அல்லது பிரிவை ஏற்படுத்த வேண்டும்.
5. நிவாரணம் காணும் உரிமை :
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் உண்மையான கூற்றுகளுக்கு நியாயமான மற்றும் உறுதியான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை வணிக நிறுவனங்கள் ஏற்படுத்த வேண்டும்.
6. நுகர்வோர் கல்வி உரிமை :
(i) பல நுகர்வோர் அமைப்புகள் மற்றும் சில சிறப்பு பெற்ற தொழில்கள் நுகர்வோர் கல்வியினை வழங்குகின்றன.
(ii) இதன் மூலம் நுகர்வோர் வாழ்நாள் முழுவதும் தன்னுடைய உரிமையைப் பற்றி அறிந்தவராக இருக்கிறார்.
7. வாழ்க்கை தர உரிமை :
(i) வணிக நிறுவனங்கள் மனித வர்க்கத்திற்கான சமூகப் பொறுப்புடன் உற்பத்தி மற்றும் வெளியீடு செய்ய வேண்டும்.
(ii) உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தி கழிவுகள் மற்றும் கழிவுநீரை வெளியேற்றும்பொழுது அவை சுற்றுச் சூழல் மற்றும் மனிதர்களைப் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும்.
8. நுகர்வோர் பாதுகாப்பு உரிமை :
(i) நுகர்வோர் தனது பட்டறிவுடன், ஐ.எஸ்.ஐ (ISI) குறியீடு உள்ள உபகரணங்களை பயன்படுத்த வேண்டும்.
(ii) இதன் மூலம் நுகர்வோர்களுக்கு தரமான பொருட்களை மட்டுமே தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும்.
9. அடிப்படை தேவைகளுக்கான உரிமை :
(i) ஒவ்வொரு நுகர்வோருக்கும் அடிப்படை தேவைகளான உணவு, உடை மற்றும் சுத்தமான நீர், ஆரோக்கியமான சூழலை பெற உரிமை உண்டு.
(ii) இது புதிதாக சேர்க்கப்பட்ட நுகர்வோர் உரிமையாகும்.
(iii) இவை மனித வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்துகிறது.
195.
1. நுகர்வோரை வணிகத்தின் மன்னராக கருதப்பட்டாலும் அவர்களுடைய நலன்கள் ஏறத்தாழ புறக்கணிக்கப்படுகின்றன.
2. பொருட்களின் பற்றாக்குறை, கிடைத்ததை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு நுகர்வோரை தள்ளி விடுகின்றது.
3. பொருட்களின் தரம் விட்டுக்கொடுக்கப்படுகிறது. உத்திரவாதம் அர்த்தமற்றதாகிறது. நுகர்வோருக்கு ஏற்படும் உடல்நல பாதிப்பு கண்டுகொள்ளப்படுவதில்லை.
4. வணிக நிறுவனங்களுக்கு கொள்ளை இலாபம் ஈட்டுதல் எனும் ஒற்றை நோக்கம் மட்டுமே மிக முக்கியமானதாக மாறி இருக்கிறது.
5. எனவே இத்தகைய சூழலில் நுகர்வோர் பாதுகாப்பு மிகவும் அவசியமான ஒன்றாகும்.
196.
1. சந்தை என்ற சொல் "மர்கட்டஸ்" என்ற லத்தீன் சொல்லிலிருந்து பெறப்பட்டது.
2. சந்தை என்பது வணிகம் நடைபெறும் இடத்தைக் குறிக்கிறது.
3. சந்தையின் பொதுவான பயன்பாடானது பொருட்களை வாங்குதல் மற்றும் விற்பனை செய்வதற்கான ஒரு இடமாக திகழ்கிறது.
4. கிளாக் மற்றும் கிளார்க் ஆகியோரின் கருத்துப்படி சந்தை என்பது ஒரு குறிப்பிட்ட பொருளுக்கான உரிமையை மாற்றி வழங்குவதற்கு வழிவகுக்கும் சக்தியாக விளங்குகிறது.
5. பல்வேறு அணுகுமுறையின் அடிப்படையில் சந்தையை பல்வேறு பகுதிகளாக பிரிக்கப்படுகிறது.
6. பண்டங்கள் மற்றும் பணிகளை மேற்கொள்பவர் "சந்தையிடுகையாளர்" ஆவார்.
7. தற்போது சந்தை தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியாலும், நவீன போக்குவரத்து வசதியாலும், தாராளமயமாக்குதல் என்பது உலகெங்கிலும் எளிதாக பயணிப்பதாலும் வணிகம் நாடுகளின் எல்லையைத் தாண்டி நடைபெறுகின்றது.
8. இதனால் உலகளாவிய சர்வதேச அளவில் பொருள்களை வாங்கவும், விற்கவும் சக்தியைப் பெற்றுள்ளது.
197.
பல்வேறு அணுகுமுறையின் அடிப்படையில் சந்தையை பகுதிகள், பொருட்களின் இயல்பு மற்றும் பொருளாதார பார்வை, பரிமாற்றம், ஒழுங்குமுறை, காலம், அளவு மற்றும் முக்கியத்துவம் போன்றவற்றின் அடிப்படையில் சந்தை வகைப்படுத்தப்படுகிறது.
புவியியல் அடிப்படையில்:
(i) குடும்ப சந்தை
(ii) உள்ளூர் சந்தை
(iii) தேசிய சந்தை
(iv) பன்னாட்டு சந்தை அல்லது உலகளாவிய சந்தை
பண்டகங்களின் / பொருட்களின் அடிப்படையில்:
அ. பண்டக சந்தை
(i) உற்பத்தி பொருள் மாற்று சந்தை
(ii) தயாரிப்பு பொருள் மாற்று சந்தை
(iii) சூரிய உலோகச் சந்தை
ஆ. மூலதன சந்தை
(i) பண சந்தை
(ii) அந்நிய செலாவணி சந்தை
(iii) பங்கு சந்தை
இ. பொருளாதாரத்தின் அடிப்படையில்:
(i) முறையான சந்தை
(ii) முறையற்ற அல்லது செம்மையற்ற சந்தை
ஈ. நடவடிக்கைகளின் அடிப்படையில்:
(i) உடனடிச்சந்தை
(ii) எதிர்கால சந்தை
உ. ஒழுங்குமுறை அடிப்படையில்:
(i) ஒழுங்குமுறை சந்தை
(ii) ஒழுங்குமுறையற்ற சந்தை
காலத்தின் அடிப்படையில்:
(i) மிகக் குறுகிய கால சந்தை
(ii) குறுகிய கால சந்தை
(iii) நீண்ட கால சந்தை
எ. தொழில் அளவின் அடிப்படையில்:
(i) மொத்த விற்பனை சந்தை
(ii) சில்லறை விற்பனை சந்தை
ஏ. முக்கியத்துவத்தின் அடிப்படையில்:
(i) முதன்மை சந்தை
(ii) இரண்டாம் நிலை சந்தை
(iii) முனையச் சந்தை
198.
பயிற்சியின் முறைகள் :
பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க பல்வேறு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. பயிற்சி முறைகள் ஒரு அமைப்பிற்கும் மற்றொரு அமைப்பிற்கும் இடையே மாறுபடுகின்றன.
அ) பணிவழி பயிற்சி முறைகள் On the Job Training:
(i) பணிவழி பயிற்சி என்பது பணி செய்யும் இடத்திலேயே பணியாளர்களுக்கு அங்குள்ள மேற்பார்வையாளரால் (அ) முன் அனுபவம் பெற்றவரால் பணி சார்ந்த போதனை அளிக்கப்படுகிறது.
செய்து கற்றல் மற்றும் சம்பாதிக்கும் போது கற்றல் என்ற அடிப்படை கோட்பாட்டினை கொண்டது. பணிவழி பயிற்சி ஒப்பீட்டளவில் குறுகிய காலத்தில் கற்றுக் கொள்ளக்கூடிய திறன்களை இறக்குமதி செய்வதற்கு ஏற்றது. பின்வருவன பணிவழி பயிற்சி முறைகளாகும்.
பயிற்சியளிப்பு :
(i) வழிகாட்டுதல் பயிற்சிமுறை
(ii) பணி சுழற்சி அல்லது வேலை சுழற்சி முறை.
(iii) பணி அறிவுறுத்தல் நுணுக்கமுறை
(iv) தொழில் பழகுநர் பயிற்சிமுறை
(v) குழு ஒதுக்கீடு முறை
(vi) ஆய்வின் கீழ் பயிற்சி முறை
ஆ) பணி வழியற்ற பயிற்சி முறைகள் Off the Job Training:
(i) பணிவழியற்ற பயிற்சி முறை என்பது தொழிலாளர்கள், ஊழியர்களிடம் உண்மையான பணிநிலையத்திலிருந்து வேலை பாடம் கற்றுக் கொள்வதற்கான பயிற்சி முறையாகும்.
(ii) மேலும் பணிவழியற்ற பயிற்சி என்பது குறிப்பிட்ட வேலை இடத்திற்கு அருகே இருக்கும் பயிற்சி நோக்கத்திற்காக குறிப்பாக ஒதுக்கப்பட்ட இடம் இதில் தொழிலாளர்கள் திறன்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் மற்றும் தேவையான கருவிகள் மற்றும் உத்திகளைக் கொண்டு பெற வேண்டும். இப்பணிவழியற்ற பயிற்சியின் பல்வேறு முறைகள் பின்வரும் பத்திகளில் விவரிக்கப்பட்டுள்ளது.
1. விரிவுரை முறை
2. குழு கலந்துரையாடல் முறை
3. சூழ்நிலை ஆய்வு முறை
4. பங்கேற்று நடித்தல்
5. கருத்தரங்கு மாநாட்டு முறை
6. புலம் பயணம் முறை
7. பணியிடத்தை ஒத்த இடத்தில் பயிற்சி முறை
8. மின்னணு கற்றல் முறை
9. செயல்விளக்க பயிற்சி முறை
199.
(1) ஆரம்ப நேர்காணல் :
(i) விண்ணப்பதாரர்களின் குறிப்பிட்ட பணிக்கான பொருத்தப்பாட்டை அறிய ஆரம்ப நேர்காணல் நடத்தப்படுகிறது.
(ii) இது நேரம், பணிச்சுமை மற்றும் செலவை கட்டுப்படுத்த உதவுகிறது.
(2) வடிவமைக்கப்பட்ட நேர்காணல்
இது முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்படுகிறது. நேர்காணலில் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் முன் கூட்டியே தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் நடத்தப்படுவது.
(3) வடிவமைக்கப்படாத நேர்காணல்
(i) இது கட்டமைக்கப்பட்ட நேர்காணலுக்கு நேர்மாறானது. சுதந்திரமான மற்றும் வெளிப்படையான பரஸ்பர கருத்துப் பரிமாற்றம் இருக்கும் வகையில் நேர்காணல் சூழல் இருக்க வேண்டும்.
(ii) இங்கு எதுவும் முன்கூட்டி திட்டமிடப்படுவதில்லை. நேர்காணலில் அப்போதிருக்கும் சூழல், மனநிலை போன்றவற்றின் அடிப்படையில் கேள்விகள் அமையும். கேள்விகள் முன்கூட்டி திட்டமிடப்படுவதில்லை.
(4) ஆழ்ந்த நேர்காணல்
(i) இதில் நேர்காணல் செய்யப்படுபவரின் துறை தொடர்பான ஆழமான, பரந்த அளவிலான அறிவு சோதனை செய்யப்படுகிறது.
(ii) அவர் துறையில் எந்த அளவு நிபுணத்துவம் மற்றும் நடைமுறை அறிவைப் பெற்றுள்ளார் என அறிய இத்தகைய நேர்காணல் செய்யப்படுகிறது.
(5) உயர்மட்ட குழு நேர்காணல்
(i) விண்ணப்பதாரரிடம் பலர் அடங்கிய ஒரு குழு நேர்காணல் செய்தால் அது உயர்மட்ட குழு நேர்காணல் ஆகும். பொதுவாக தலைமை பொறுப்பேற்பவர், சம்பந்தப்பட்ட துறையின் நிபுணர்கள் உளவியல் நிபுணர்கள், சிறுபான்மையினரின் பிரதிநிதிகள் இக்குழுவில் இடம் பெற்றிருப்பர்.இம்முறை சம்பந்தப்பட்ட துறையின் நிபுணர்கள், உளவியல் நிபுணர்கள், சிறுபான்மையினரின் பிரதிநிதிகள் இக்குழுவில் இடம் பெற்றிருப்பர்.
200.
| வ.எண் | அடிப்படை | ஆட்சேர்ப்பு | தேர்ந்தெடுத்தல் |
|---|---|---|---|
| 1. | பொருள் | பணியாளர்களைத் தேடும் மற்றும் அவர்களை வேலைக்கு விண்ணப்பிக்கத் தூண்டும் நடவடிக்கையே ஆட்சேர்ப்பு ஆகும். | பொருத்தமான வேலைக்கு பொருத்தமான விண்ணப்பதாரரை தேர்ந்தெடுத்து பணி வழங்குதல் பணியமர்த்துதல் ஆகும். |
| 2. | அணுகு முறை | இது நேர்மையான அணுகுமுறை | இது எதிர்மறையான அணுகுமுறை |
| 3. | நோக்கம் | காலியாக உள்ள பணிக்கு, அதிக அளவிலான விண்ணப்பதாரரை அழைப்பது. | பொருத்தமான விண்ணப்பதாரரை தேர்ந்தெடுத்துவிட்டு மீதமுள்ள நபர்களை நீக்குவது. |
| 4. | வரிசை | முதல்படி | இரண்டாம் படி |
| 5. | முறை | சிக்கனமான முறை | செலவு மிகுதியான முறை |
| 6. | ஒப்பந்த உறவு | இது ஒப்பந்த அடிப்படையிலான உறவை உருவாக்குவதில்லை | இது ஒப்பந்த அடிப்படையிலான உறவை உருவாக்குகிறது |
|
7
|
செயல் முறை | மிகவும் எளிமையானது. | மிகவும் சிரமம் மற்றும் சிக்கலானது. |
| 8 | காலம் | விளம்பரம் மூலம் காலிப் பணியிடத்தை அடையாளம் காட்டுதல், குறைவான காலம் போதுமானது. | பல்வேறு பரிசோதனைகளில் மற்றும் நேர்காணல் மூலம் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப் படுவதால் அதிக காலம் தேவைப்படுகிறது. |
201.
1. உற்பத்தி செய்யும் ஒரே காரணியாக மனித வளம் திகழ்கிறது.
2. பிற அனைத்து வளங்களையும் மனித வளம் ஊக்குவிக்கிறது.
3. பணியமர்த்தப்பட்ட பணியாளர்களைக் கொண்டதே தவிர மனித வளம் என்பது பணியாளர் அல்ல.
4. மனித வளமானது கண்டுபிடிப்பு மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது.
5. மனித வளங்கள் உணர்ச்சிபூர்வமானவை.
6. மனித வளங்களின் நடத்தைகளை ஊகிக்க முடியாது.
7. மனித வளங்கள் நகரும் தன்மை கொண்டது.
8. மனித வளமானது ஒரு குழுவாக செயல்படலாம்.
9. மனித வளங்கள் தனியாக சிந்திக்கவும், செயல்படவும், பகுப்பாய்வு செய்யவும் மற்றும் விளக்கவும் முடியும்.
10. மனித வளங்களால் உண்டாகும் மதிப்பு மற்றும் பாராட்டுக்கள் நீண்ட காலத்திற்கு கிடைக்கிறது.
11. நிதியுடன் அல்லது நிதியில்லாமலும் மனித வளங்கள் ஊக்குவிக்கப்படலாம்.
202.
(1) பங்குச்சந்தைகள் மற்றும் இடைத்தரகர்கள் தொடர்பான அதிகாரங்கள் (Powers Relating to Stock Exchanges & Intermediaries)
பத்திர வணிகத்தை மேற்கொள்ளும் பங்கு பரிமாற்றகங்கள் மற்றும் இடைத் தரகர்களிடம் செபி பரந்த அதிகாரங்களைக் கொண்டுள்ளது.
(2) நாணய அபராதங்களை விதிக்கும் அதிகாரம் (Power to Impose Monetary-Penalties.)
மூலதனச்சந்தை இடைத்தரகர்கள் மற்றும் பிற பங்கேற்பாளர்கள் மீது வரம்பு மீறல்களுக்கு நாணய அபராதங்களை சுமத்துவதற்கு செபி அதிகாரத்திற்கு உட்பட்டுள்ளது. இது ஒரு குறுகிய காலத்திற்கு தங்கள் பதிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம்.
(3) பணியிடங்களில் செயல்பாடுகளை தொடங்குவதற்கான அதிகாரம் ஒதுக்கப்பட்டுள்ளது (Power to Initiate Actions in Functions Assigned.)
(அ) செபி ஒதுக்கப்பட்டுள்ள பணிகள் குறித்து நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஒரு அதிகாரம் உண்டு.
(ஆ) உதாரணமாக, இது பல்வேறு இடைத்தரகர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கலாம் அல்லது முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான குறிப்பிட்ட விதிகளை அறிமுகப்படுத்தலாம்.
(4) பத்திரங்களில் உள்வழி வர்த்தகத்தை, ஒழுங்குப்படுத்துவதற்கான அதிகாரம் (Power to Regulate Insider Trading.)
உள்வழி வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் அல்லது வணிக வங்கியாளர்களின் பணிகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரங்களை செபி கொண்டுள்ளது.
(5) பத்திரங்கள் ஒப்பந்த சட்டத்தின் கீழ் உள்ள அதிகாரங்கள் (Powers Under Securities Contracts Act.)
(அ) பங்குச்சந்தை திறம்பட ஒழுங்குபடுத்த நிதி அமைச்சகம் பத்திரங்கள் ஒப்பந்தங்கள் (ஒழுங்குவிதிகள்) சட்டத்தின் கீழ் பல்வேறு அதிகாரங்களை செபிக்கு 13 செப்டம்பர், 1994 அன்று ஒரு அறிவித்தல் மூலம் வழங்கியுள்ளது.
(ஆ) ஒவ்வொரு பங்குச் சந்தையிலும் ஆளும் குழுவில் மூன்று உறுப்பினர்களை நியமிக்க நிதி அமைச்சகம் செபிக்கும் அதிகாரம் அளிக்கிறது.
(6) பங்குச்சந்தை வணிகத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் (Power to Regulate Business of Stock Exchanges)
பத்திரச் சந்தை மற்றும் பரஸ்பர நிதியுடன் தொடர்புடைய இடைநிலையர்கள், மோசடியான மற்றும் முறையற்ற வியாபார செயல்பாடுகள் மற்றும் நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு போன்றவற்றை ஒழுங்குபடுத்தும் அதிகாரங்களை செபி கொண்டுள்ளது.
203.
லம்பார்டு தெரு (Lombard Street):
(i) இலண்டன் நகரத்தின் வணிகம், வங்கி, காப்பீட்டுத் தொழில் மற்றும் இடைக்கால நீட்சியாக குறிப்பிட்டளவு தொடர்பு ஏற்படுத்தியுள்ளது.
(ii) இந்த தெருவின் மொத்த நீளம் 260 மீட்டராகும்.
(iii) இது நியூயார்க் நகரின் வால் தெரு போன்று உள்ளது.
வால் தெரு (Wall Street):
(i) லோயர் மன்ஹாட்டனில் நியூயார்க் பங்குச்சந்தையின் உண்மையான இல்லாமல் வால் தெரு இருக்கிறது.
(ii) அமெரிக்க தரகு மற்றும் முதலீட்டு வங்கிகளின் சிறப்புமிக்க தலைமையகமாகவும் உள்ளது.
(iii) நிதி மற்றும் முதலீட்டுக் குழுவின் ஒருங்கிணைந்த பெயராக உள்ளது.
204.
1. கருவூல இரசீதுகள்:
(i) அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட கருவூல இரசீதுகள் தற்போது மிகவும் பிரபலமாக உள்ள வணிக மற்றும் அதிகளவு நீர்மைத் தன்மை கொண்ட ஆவணங்களாகும்.
(ii) கருவூல இரசீதுகள் என்பது குறிப்பிட்ட காலக் கெடுவுடன் கூடிய கடன் உறுதிப் பத்திரம்.
(iii) இதன் காலம் ஒரு வருடத்திற்கு மேல் இருக்காது.
i) 91 நாட்கள் கருவூல இரசீதுகள்:
91 நாட்கள் கருவூல இரசீதுகள் ஒரு நிலையான 4 சதவீத தள்ளுபடி விகிதத்தில் ஏலத்தின் மூலம் வெளியிடப்படுகின்றன.
ii) 182 நாட்கள் கருவூல இரசீதுகள்:
இந்திய ரிசர்வ் வங்கி, 182 நாட்கள் கருவூல இரசீதுகளை ஒரு வாரம் முழுவதும் வடிகட்டும் அடிப்படையில் வெளியிடுகிறது.
iii) 364 நாட்கள் கருவூல இரசீதுகள்:
(i) இது எவ்வித நிலையான விகிதமும் கொண்டு செயல்படுவதில்லை.
(ii) இந்த தள்ளுபடி விகிதம் அதிகார அமைப்பின் இசைவினைப் பெற்று பங்கேற்பாளர்களுக்கு ஏலத்தில் தெரிவிக்கப்படுகிறது.
2. வைப்பு சான்றிதழ்கள்:
(i) வைப்பு சான்றிதழ்கள் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் குறுகிய கால வைப்பு ஆவணங்களாகும்.
(ii) வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தங்களது நிதி ஆதாரங்களை உயர்த்திக் கொள்வதற்காக வெளியிடுகின்றன.
(iii) வைப்பு சான்றிதழ்கள் எளிதில் மாற்றக்கூடிய இயல்புடையதாகவும், விரைவாக சந்தைப்படுத்தக் கூடியதாகவும், குறிப்பிட்ட முகமதிப்பு மற்றும் முதிர்வுத் தொகை ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
(iv) இது மாற்றுமுறை ஆவண வைப்புச் சான்றிதழ் என்றும் அழைக்கப்படுகிறது.
3. வணிக இரசீதுகள்:
(i) பொருட்களின் விற்பனையாளர்கள் மூலம் பொருட்களை வாங்குபவர் மீது எழுதி தயாரிக்கப்படும் ஒரு ஆவணமே வணிக இரசீது ஆகும்.
(ii) வணிக இரசீது சுய நீர்மை தன்மை, இரு நபர்களுக்கிடையிலான பரிமாற்றம், நடவடிக்கையின் சரியான தேதியை தெரிந்து கொள்ளும் தன்மை, நடவடிக்கை குறித்த வெளிப்படைத் தன்மை போன்ற நன்மைகளைக் கொண்டது.
i) தேவை மற்றும் பண்பாட்டு இரசீதுகள்:
(i) தேவை இரசீது என்பது பணம் செலுத்துவதற்கான தேதி எதுவும் குறிப்பிடப்படாத இரசீது ஆகும்.
(ii) தேவை இரசீது என்பது இந்த இரசீதை வைத்திருப்பவர் தனக்கு எப்பொழுது பணம் தேவைப்படுகிறதோ அப்போது இந்த இரசீதுக்கு பணம் பெற்றுக் கொள்ளலாம்.
ii) தூய்மை இரசீது மற்றும் ஆவண இரசீதுகள்:
(i) பொருட்களின் உரிமை ஆவணம் மூலம் இணைக்கப்பட்ட இரசீதுகள் ஆவண இரசீதுகள் எனப்படும்.
(ii) எந்த ஒரு ஆவணமும் எழுதி இணைக்கப்படாத இரசீதுகள் தூய்மை இரசீதுகள் ஆகும்.
iii) உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு இரசீதுகள்:
(i) இந்தியாவில் எழுதப்பட்ட மற்றும் செலுத்த வேண்டிய இரசீதுகள் உள்நாட்டு இரசீதுகள் எனப்படும்.
(ii) இந்தியாவிற்கு வெளியே எழுதப்பட்டு இந்தியாவிலோ அல்லது அயல்நாட்டிலோ செலுத்தப்படும் இரசீதுகளை அயல்நாட்டு இரசீதுகள் என்றழைக்கப்படும்.
iv) தனித்துவமான இரசீதுகள்:
வரைதல் மற்றும் ஏற்றுக் கொள்ளல் உள்ளூர் வழக்கப்படி அல்லது வர்த்தகப் பயன்பாட்டின் மூலம் நிர்வகிக்கப்படுவதை குறிக்கும்.
v) இருப்பிட மற்றும் வழங்கள் இரசீதுகள்:
உண்மையான வியாபார நடவடிக்கைகள் அல்லாமல் உருவாக்கப்படும் இரசீதுகளை இருப்பிட மற்றும் வழங்கள் இரசீதுகள் என்று அழைக்கப்படுகின்றன.
205.
தொழிற்சாலைகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக புதிய நிதி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு கடன் அளிக்கப்பட்டது. அந்நிறுவனங்களைப் பற்றி சுருக்கமாக கீழே காணலாம்.
துணிகர நிதி நிறுவனம்:
துணிகர மூலதன நிதி என்பது சாதாரண நிதியில் ஒரு பகுதி ஆகும். இது புதிய திட்டம் மற்றும் கண்டுபிடிப்பிற்கு நிதி வழங்குவதற்காக உருவாக்கப்பட்டதாகும். துணிகர மூலதனம் என்பது தொழில்நுட்ப திட்டங்களை வணிகமயமாக்குவதற்கு தேவையான நிதியினை அளிக்கிறது.
பரஸ்பர நிதி:
சிறு முதலீட்டாளர்களின் சேமிப்புகளை பெரிய முதலீடாக மாற்றும் நிதி நிறுவனங்களையே பரஸ்பர நிதி என்கிறோம். நிதி நிறுவனங்களான LIC, UTI மற்றும் வணிக வங்கிகள் SBI மற்றும் கனரா வங்கி போன்றவை பரஸ்பர நிதி வணிகத்தில் ஈடுபடுகின்றன.
இந்திய எதிர் பங்கு மாற்றகம்:
பங்குகளை இந்தியா முழுவதும் மின்னணு மூலம் வியாபாரம் செய்யும் நோக்கத்தோடு முதன்மை நிதி நிறுவனங்களால் உருவாக்கப்பட்டதே OTCEI என்பதாகும். இதன் மூலம் முதலீட்டாளர் மற்றும் நிறுமத்திற்கு சில பிரச்சனைகள் இருந்த போதும் வெளிப்படைத் தன்மை, விரைவான முடிவு, நெகிழ்வு தன்மை ஆகிய நன்மைகளையும் அளிக்கிறது.
ஏட்டுக்கடன் தரகு முகமை நிறுவனங்கள்:
விற்பனை மூலம் பெற வேண்டிய பெறுதல்களின் அடிப்படையில் நிதி நிறுவனங்கள் செய்யும் நிதி ஏற்பாடே ஏட்டுக்கடன் தரகு முகமை ஆகும். இந்தியாவில் செயல்படும் சில நிறுவனங்களாவன, SBI. மற்றும் வணிக சேவைகள் SBI ன் துணை நிறுவனம் மற்றும் கான்பேங்க் ஃபேக்டரிக் லிமிடெட் கனரா வங்கியின் துணை நிறுவனம் ஆகும்.
இந்திய தேசியப் பங்கு மாற்றகம் லிமிடெட் (NSEI):
பங்குச் சந்தையின் மாதிரியாக NSEI என்பது 1992ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இச்சந்தையின் நோக்கமானது மின்னணு பங்குகளை இந்தியா முழுவதும் அமைத்து கொடுப்பதாகும்.
தேசிய பத்திரங்கள் களஞ்சியம் லிமிடெட்:
காகிதமில்லா மற்றும் காகிதமாற்று பங்குகளை கொண்டுவருவதற்காக 1996ம் ஆண்டு NSDLல் உருவாக்கப்பட்டது. இரண்டாம் சந்தையில், வியாபாரத்திற்கு பின் ஏற்படும் சிக்கல்களை தீர்கவும் NSDL ல் உருவாக்கப்பட்டது.
இந்திய பங்கு வைப்பு கழகம் லிமிடெட்:
SHCIIL -ல் நோக்கமானது பங்குச் சந்தை நடவடிக்கையில் மத்திய பத்திர வைப்பாக செயல்படுவதே ஆகும். இக்கழகம் தேசிய அளவிலான நிர்வாக சீர்திருத்த பணிகளையும் செய்கிறது.
206.
நிதிச் சந்தையின் பங்கு:
நிதிச் சந்தையின் பங்கு பொருளாதாரத்தின் துரித வளர்ச்சியின் முக்கிய தேவைகளில் ஒன்று சுறுசுறுப்பான மற்றும் செழிப்பான நிதிச்சந்தை ஆகும். ஒரு நிதிச் சந்தை பின்வரும் வழிகளில் ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவி செய்வதால் அது மிகப்பெரும் பயனாக திகழ்கிறது.
(அ) சேமிப்பை பெருக்குதல் (Savings Mobilization):
சேமிப்பாளர்கள் (அ) தனிநபர்கள், வணிக நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு போன்ற உபரி அலகுகளிடமிருந்து நிதிகளை பெறுவதன் மூலம் நிதிச் சந்தை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
(ஆ) முதலீடுகள் (Investment):
நிதி முதலீடுகளை வசூலிப்பதிலும் அவற்றை தேவை உள்ளவர்களுக்கு வழங்குவதிலும் நிதிச் சந்தை' முக்கியப் பங்கு வகிக்கிறது.
(இ) தேசிய வளர்ச்சி (National Growth):
நிதிப் பற்றாக்குறை உள்ள நிறுவனங்களுக்கு உபரி நிதிகள் தடங்கலின்றி நடமாட்டம் செய்ய உறுதி செய்வதன் மூலம் ஒரு தேசத்தின் வளர்ச்சியில் நிதிச் சந்தை பங்களிப்பை வழங்குகிறது. நிதி ஆக்க பூர்வமான நோக்கில் பயன்படுத்த வழிவகை செய்கிறது. இது ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.
(ஈ) தொழில்முனைவோர் வளர்ச்சி (Entrepreneurship Growth):
தேவையான நிதி வளங்களை தொழில் முனைவோர்களுக்கு கிடைக்க பெறுவதன் மூலம் அதன் மேம்பாட்டிற்கு நிதிச் சந்தை பங்களிக்கிறது.
(உ) தொழிற்துறை மேம்பாடு (Industrial Development):
நிதிச் சந்தையின் பல்வேறு கூறுகள் ஒரு நாட்டின் தொழிற்துறையின் துரித வளர்ச்சி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவி புரிகிறது. இதன் மூலம் சமுதாயத்தின் வாழ்க்கை தரம் மற்றும் நல்வாழ்வை உயர்த்துகிறது.
207.
1. பெரும்பாலான செயல் நிர்வாகிகள் குறியிலக்கு மேலாண்மை என்பது என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது? அதன் தேவை? நன்மை? போன்ற கருத்துக்களில் குறியிலக்கு மேலாண்மை தனது தத்துவத்தை விளக்குவதில் தோல்வி அடைந்துள்ளது.
2. குறியிலக்கு மேலாண்மை என்பது அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் ஒரு முறையாகும். மேலும் அதிக செலவு மற்றும் அதிகமான காகித வேலை தேவைப்படுகிறது.
3. குறியிலக்கு மேலாண்மை குறுகிய கால குறிக்கோள்களை மட்டுமே வலியுறுத்துகிறது. நீண்ட கால குறிக்கோள்களை கருத்தில் கொள்வதில்லை.
4. கீழ்நிலை ஊழியர்களின் நிலை தகுந்த குறிக்கோள் அமைப்பிற்கு அவசியமாகிறது. ஆனால், குறியிலக்கு மேலாண்மையின் செயல்முறையில் இது சாத்தியம் இல்லை.
5. குறியிலக்கு மேலாண்மை திடமான ஒன்றாகும். சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றப்பட வேண்டிய குறிக்கோள்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், திட்டமிட்ட முடிவுகளைப் பெற முடியாது.
208.
மேலாண்மை பணிகளை இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தலாம் அவை முக்கிய பணிகள் மற்றும் துணைப்பணிகள் ஆகும்.
முதன்மைப் பணிகள்:
(i) திட்டமிடுதல்:
திட்டமிடுதல் என்பது மேலாண்மையின் செயல்பாடுகளில் முதன்மையானது ஆகும். திட்டமிடுதல் என்பது வருங்கால தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு ஆக்கபூர்வமான மதிப்பீடு ஆகும்.
(ii) அமைத்தல் :
பணியாளர்களுக்கு பணிகளை ஒப்படைவு செய்வதும் அப்பணிகளை நிறைவேற்றுவதற்கு போதிய அதிகாரங்களை வழங்குவதும் மேலும் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு பணியாளரே பொறுப்பேற்க செய்வதும் அமைத்தல் பணி எனப்படுகிறது.
(iii) பணியமர்த்தல் :
பணியமர்த்தல் என்பது பணியாளர்களைத் தேர்வு செய்தல் மற்றும் திறமையான பணியாளர்களுக்கு பணியிடமளித்தல் செயல்பாடுகளை பணியமர்த்தல் உள்ளடக்கியுள்ளது.
(iv) இயக்குவித்தல் :
தற்போதைய இலக்குகளை சாதிக்கும் பொருட்டு தொடர்ச்சியான அடிப்படையில் செயலூக்கமளித்தல், முன்னணியிலிருத்தல், வழிகாட்டுதல் மற்றும் கீழ்நிலைப் பணியாளர்களுடன் தொடர்புபடுத்துதல் போன்றன இயக்குதலைக் குறிக்கிறது.
(v) கட்டுப்படுத்துதல் :
ஊக்க ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு அளிக்கும் முடிவுகளை எடுப்பதற்கும் பணியாளர்களின் செயல்திறனை மதிப்பிடுவதற்கும் கட்டுப்படுத்துதல் செயல்பாடு பயன்படுகிறது.
(vi) ஒருங்கிணைத்தல் :
ஒரு நிறுவனம் தனது குறிக்கோளை அடைவதற்கு பல்வேறு திறன்கள் கொண்ட பணியாளர்களை ஒருங்கிணைப்பது ஒருங்கிணைத்தல் எனப்படுகிறது. நிறுவனத்தின் ஒவ்வொரு மேலாண்மை பணிகளிலும் ஒருங்கிணைத்தல் பணி உள்ளடங்கியுள்ளது.
(vii) செயலூக்கமளித்தல் :
செயலூக்கமளித்தல் மூலமே நிறுவனத்தின் நோக்கங்களை அடைய முடியும். ஒரு பணியை விரைவாக செய்து முடிப்பதையும், பணியாளர்களின் பணியின் மீதான விருப்பத்தை வளர்ப்பதையும் செயலூக்கமளித்தல் என்ற சொல் உள்ளடக்கியுள்ளது.
துணைப்பணிகள் :
(i) புதுமைப்படுத்துதல் :
வியாபார உலகில் செய்யப்படும் மாற்றங்களை எதிர்கொள்ள ஊழியர்களையும் அமைப்பையும் தயார் நிலைப்படுத்தும் செயல்பாடு புதுமைப்படுத்துதல் என்பதைக் குறிக்கிறது. வியாபாரத்தில் தொடர்ச்சியான மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
(ii) பிரதிநிதித்துவம் :
ஒரு மேலாளர் ஒரு நிறுவனத்தின் பிரதிநிதியாக செயல்பட வேண்டும். வாடிக்கையாளர்கள், பொருட்கள் மற்றும் சேவையை அளிப்பவர்கள். அரசாங்க அதிகாரிகள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் இதைப் போன்றவர்களுடன் மேலாளர் தொடர்புடன் இருக்க வேண்டும்.
(iii) முடிவெடுத்தல் :
ஒரு அமைப்பின் ஒவ்வொரு பணியாளரும் பல்வேறு எண்ணிக்கையிலான முடிவுகளை ஒவ்வொரு நாளும் எடுக்கின்றனர்.ஒரு அமைப்பு இலகுவாக செயல்படுவதற்கு முடிவெடுத்தல் உதவுகிறது.
(iv) தகவல் தொடர்பு:
தொடர்பு என்பது மனித எண்ணங்களை, கண்ணோட்டங்களை அல்லது கருத்துக்களை ஒரு நபர் மற்றொரு நபருக்கு பரிமாற்றம் செய்வதைக் குறிக்கிறது.
209.
மேலாண்மையின் அடிப்படைக் கருத்து: மேலாண்மையின் அடிப்படைக் கருத்துக்களை பின்வரும் அவற்றின் தொன்றுதொட்ட இயல்புகள் மூலமாக அறிந்து கொள்ள இயலும்.
(i) அறிவின் தொகுப்பு : தற்போது மேலாண்மை உயர்தனிச் சிறப்பு வாய்ந்த மேலாண்மைக் கோட்பாடு மற்றும் தத்துவத்தை உருவாக்கியுள்ளது. மேலாண்மை இலக்கியம் அனைத்து நாடுகளிலும் வளர்ச்சி பெற்றிருக்கின்றது.
(ii) மேலாண்மைக் கருவிகள் : கணக்கியல், வணிகச் சட்டங்கள், உளவியல், புள்ளியியல், பொருளியல், தரவு செயலாக்கம் என மேலாண்மையின் கிளைகள் பல்கிப் பெருகி விரிவடைந்துள்ளது.
(iii) தனிப் பாடப்பிரிவு : பல்வேறு பல்கலைக் கழங்களும், உயர்கல்வி நிறுவனங்களும் மேலாண்மைக் கல்வியை தனிப்பாடப் பிரிவாக அங்கீகரித்திருக்கின்றன. ஏற்றுமதி மேலாண்மை, ஆள்சார் மேலாண்மை, உற்பத்தி மேலாண்மை, சந்தை மேலாண்மை, நிதி மேலாண்மை போன்ற மேலாண்மையின் பல்வேறு பகுதிகளில் கருத்தரங்கம், சிறப்புப் பாடப்பிரிவுகள், பயிற்சித் திட்டங்கள் போன்றவற்றின் மூலம் மேலாண்மை நவீனமயமானதாகவும், பிரபலமடைந்தும் வருகின்றது.
(iv) சிறப்பீடுபாடு: வணிகத்தின் ஒவ்வொரு செயல்பாட்டுப் பகுதியையும் சீரிய முறையில் மேலாண்மை செய்து வணிகத்தை சிறப்பாக நிர்வகிக்க உயர் கல்வித் தகுதியும் முறையான பயிற்சியும் பெற்ற உரிய முன்னனுபவமுள்ளவர்களை தேர்ந்தெடுத்து பணியமர்த்த வேண்டும் என்ற மனப்பாங்கு தற்போது வளர்ந்து வருகின்றது.
(v) நடத்தை விதி : நுகர்வோர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் அல்லது சமுதாயம் போன்றவற்றிற்கு வணிக மேலாண்மை ஆற்ற வேண்டிய சமூகப் பொறுப்புணர்வுகளை அறிவூட்டப்பட்ட வணிகர்கள் அங்கீகரித்திருக்கின்றனர். பொது கழகங்களுக்கு தற்போது சமூக மனசாட்சியும், விழிப்புணர்வும் உள்ளது.
(vi) பணி ரீதியானதொரு அமைப்பு : பல்வேறு நாடுகளில் மேலாண்மைப் பிரிவுகளில் அறிவுப் பரவலாக்கம் ஏற்படவும், மேலாண்மை சிறப்புத் தொழில் குறித்த பொதுமக்கள் மனதில் ஒரு சிறந்த தோற்றத்தை உருவாக்கவும் வணிக மேலாண்மை சங்கங்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதை நாம் காண முடிகின்றது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards