12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test

1.
மேலாண்மை இயக்குனர் - வரையறுக்க
2.
வேளாண் தொழில் முனைவோரைப் பற்றி சுருக்கமாக எழுதுக.
3.
மாற்றுச் சீட்டு மற்றும் கடனுறுதிச்சீட்டினை வேறுபடுத்துக.
4.
உலகமயமாக்கலின் ஏதேனும் மூன்று தாக்கங்களை எழுதுக.
5.
6.
சந்தையீட்டாளரின் பணிகளை பட்டியலிடுக.
7.
மனோபாவச் சோதனை என்றால் என்ன?
8.
பத்திர ஒப்பந்தங்கள் சட்டப்படி செபியின் அதிகாரங்களை விளக்குக.
9.
இரண்டாம் நிலைச் சந்தை- சிறு குறிப்பு வரைக.
10.
11.
டிஜிட்டல் இந்தியாவைப் பற்றி குறிப்பு வரைக.
12.
சேவை சந்தையிடுதல் என்றால் என்ன?
13.
உட்புறச் சூழல் என்றால் என்ன?
14.
ஜான் F கென்னடி கூறிய நுகர்வோர் உரிமைகள் யாவை?
15.
பண்டமாற்று பரிவர்த்தனை என்றால் என்ன?
16.
அரசுப் பத்திரங்கள் சந்தை என்றால் என்ன?
17.
அதிகாரம் என்பதன் பொருள் தருக.
18.
பலவகையான நிறும கூட்டங்களை விளக்குக.
19.
இயக்குனரின் கடமைகள் என்ன?
20.
பணிசார் தொழில் முனைவோரின் தன்மையை விவரி.
21.
22.
மின்னணு விற்பனையில் நன்மை தீமைகளை விளக்கு.
23.
வியாபாரத்தின் நுண்ணிய சூழல் காரணிகளை விளக்கு. (ஏதேனும் 5)
24.
நுகர்வோர் எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள்?(ஏதேனும் 5)
25.
பணிவழி பயிற்சிக்கும், பணிவழியற்ற பயிற்சி முறைக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை? (ஏதேனும் 5)
26.
ஆட்சேர்ப்பு முறையில் உள்ள புறவளங்களை விளக்குக. (ஏதேனும் 5)
27.
செபியின் பணிகளை விவரி.(ஏதேனும் 5)
28.
பங்குச் சந்தை பணிகளை விவரி.(ஏதேனும் 5)
29.
பணச்சந்தையின் ஆவணங்களை விவரி.
30.
மேலாண்மையின் பல்வேறு பணிகளை விளக்குக. (ஏதேனும் 5)
31.
மேலாண்மையின் அடிப்படைக் கருத்துக்களை விவரி. (ஏதேனும் 5)
1.
1. நிறுமத்தின் அதிகபட்ச அதிகாரங்களைக் கொண்டவர்.
2. நிறும நிர்வாகத்தில் அதிக ஆர்வம் மற்றும் சுதந்திரம் உடையவர்.
3. நிறுமத்தை வழிநடத்தும் மற்றும் இயக்குனர்களை கட்டுப்படுத்தும் உரிமை பெற்றவர்.
2.
1. வேளாண் பொருட்களை விளைவித்து, நேரடியாகவோ அல்லது கூட்டுறவு அமைப்புகள் மூலமாகவோ சந்தையிடும் பணியை மேற்கொள்பவர்.
2. இவர்கள் பல்வேறு இயற்கை சார்ந்த உள்ளீட்டு பொருட்களான உரம், விதை, தண்ணீர், பூச்சிக்கொல்லி மருந்து, உழைப்பு போன்ற இடு பொருட்களை இட்டு உணவு பொருட்களை உற்பத்தி செய்கின்றனர்.
3. மேலும் மாட்டுப்பண்ணை, ஆட்டுப்பண்ணை, கோழி வளர்ப்பு, மீன் பூ வளர்த்தல், இறால் வளர்த்தல் மற்றும் வேளாண் கருவிகளை உற்பத்தி செய்தல் போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.
3.
| வ. எ | வேறுபாடுகளின் இயல்புகள் | மாற்றுச்சீட்டு | கடனுறுதி சீட்டு |
| 1 | உறுதிமொழி தன்மை | நிபந்தனையற்ற முறையாவணம் | நிபந்தனையற்ற பணம் தருவதற்கான கடன் உறுதிமொழி பத்திரம் |
| 2 | தரப்பினர் | மூன்று நபர்கள் இருப்பார்கள் 1. வரைபவர் 2. வரையப் பெற்றவர் 3. பணம் பெறுபவர் |
இரண்டு தரப்பினர் மட்டுமே இருப்பர் 1. வரைபவர் 2. பணம் பெறுபவர். |
| 3 | வரைபவர் | கடனாளர் | கடனாளி |
| 4 | தரப்பினர் அடையாளம் | எழுதுபவரும் பணம் பெறுபவரும் ஒரே நபராக இருக்கலாம். | இதனை எழுதுபவரே பணம் பெறுபவராக இருக்க முடியாது. |
| 5 | பொறுப்பாக்கப்படும் வரிசை | மாற்றுச்சீட்டை எழுதியவரின் பொறுப்பு இரண்டாம் பட்சமானது மாற்றுச் சீட்டை ஏற்றவர் பணம் தராமல் மறுக்கும் போது மட்டுமே வரைபவரின் பொறுப்பு எழும். | கடனுறுதி சீட்டை எழுதியவரின் பொறுப்பு முதன்மையானது. |
| 6 | கொணர்பவர் பத்திரம் | இதை கொணர்பவருக்கு கொடுக்கும்படி வரையலாம். | இதை கொணர்பவருக்கு தருவதாக வரைய சட்டம் தடை செய்கிறது. |
| 7 | ஏற்பு | இதனை எழுதப் பெற்றவர் ஏற்க வேண்டும் | இதை கடனாளியே எழுதுவதால் ஏற்க அவசியமில்லை |
| 8 | படிகள் (வடிவம்) | அயல்நாட்டு மாற்றுச் சீட்டு மூன்று படிகளில் தயாரிக்கப்படுகிறது | கடனுறுதி சீட்டு ஒரு படியில் மட்டுமே எழுதப்படுகிறது |
| 9 | நிபந்தனைக்கு உட்படுதல் | மாற்றுச் சீட்டினை நிபந்தனைக்கு உட்படுத்தலாம் | இதனை நிபந்தனைக்கு உட்படுத்த இயலாது |
| 10 | அவமதிப்பு அறிவிப்பு | மேலெழுதியவருக்கு (அ) வரைந்தவருக்கு மாற்றுச் சீட்டு அவமதிக்கப்பட்ட செய்தியை அறிவிக்க வேண்டும். | அவமதிப்பு அறிவிப்பு தேவையில்லை |
4.
(i) குறைந்த இயக்கச் செலவுகளின் அடக்கம் மற்றும் புதிய மூல பொருட்கள் மற்றும் கூடுதல் சந்தை அனுகல் மூலம் பெரிய நிறுவனங்கள் போட்டி திறனை பெறுகின்றன.
(ii) பன்னாட்டு நிறுவனங்கள் (MNC's) பொருட்களை தயாரிக்க வாங்க மற்றும் பொருட்களை விற்பனை செய்ய முடிகின்றது.
(iii) உலகமயமாக்கல் நுகர்வோர் பொருட்களின் சந்தையை வெகுவாக (ஏற்றத்துடன்) பெருக்கிட உதவும் வாய்ப்பை உருவாக்கலாம்.
5.
6.
சந்தையிடுகையாளர் கீழ்க்கண்ட பல்வேறு பணிகளை மேற்கொள்கிறார் அவைகள் பின்வருமாறு,
(i) சந்தை பற்றிய தகவல்களை சேகரித்து அதனை ஆராய்தல்
(ii) சந்தை திட்டமிடுதல்
(iii) பொருட்களை வடிவமைத்தல் மற்றும் மேம்படுத்துதல்
(iv) பொருட்களை வகைப்படுத்துதல் மற்றும் தரப்படுத்தல்
(v) கட்டுமானம் செய்தல் மற்றும் பெயரிடல்
(vi) வர்த்தக குறியீடு செய்தல்
(vii) வாடிக்கையாளர் சேவை தொடர்பான ஆதரவு அளித்தல்
(viii) பொருளுக்கான விலை நிர்ணயம் செய்தல்
(ix) விற்பனை அளவினை மேம்படுத்துதல்
(x) வழங்கல் வழியினை ஏற்படுத்துதல்.
(xi) போக்குவரத்து நடவடிக்கைகளை கையாளுதல்
(xii) பொருட்களை சேமித்தல் மற்றும் பண்டக காப்பு செய்தல் போன்ற அனைத்து பணிகளையும் சந்தையிடுகையாளர் செய்து வருகின்றனர்.
7.
(i) மனோபாவச் சோதனை என்பது குறிப்பிட்ட பணிக்கு விண்ணப்பதாரர் எந்த அளவிற்கு பொருத்தமானவர் என்பதை அளவிட மேற்கொள்ளப்படும் உளவியல் தேர்வு ஆகும்.
(ii) இச்சோதனை பணியாளரின் எதிர்கால செயல்திறனை முன்கணிக்கவும் பயன்படுகிறது.
8.
(i) பங்குச் சந்தை திறம்பட ஒழுங்குபடுத்த நிதி அமைச்சகம் செப்டம்பர் 13, 1994 ஆம் ஆண்டு பத்திரங்கள் ஒப்பந்தங்கள் சட்டத்தின் கீழ் செபிக்கு பல்வேறு அதிகாரங்களை வழங்கியுள்ளது.
(ii) ஒவ்வொரு பங்குச் சந்தையிலும் ஆளும் குழுவில் மூன்று உறுப்பினர்களை நியமிக்க நிதி அமைச்சகம் செபிக்கு அதிகாரம் அளிக்கிறது.
9.
(i) இரண்டாம் நிலைச் சந்தை ஏற்கனவே வெளியீடு செய்யப்பட்ட பங்குகளுக்கான சந்தை இரண்டாம் நிலைச் சந்தை ஆகும்.
(ii) இரண்டாம் நிலைச் சந்தையில் பங்கு மாற்றகம் ஒரு முக்கியமான நிறுவனம் ஆகும்.
10.
11.
இத்திட்டத்தின் மூலம் அனைத்து அரசின் சேவைகளும் பயனாளிகளுக்கு மின்னணு முறையில் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் இந்திய பொருளாதாரம் மின்னணு பொருளாதாரமாக மாறி வருகிறது. உலகெங்கும் கிடைக்கும் பொருட்கள் மற்றும் பணிகளை மக்கள் மின்னணு முறையில் பெற வகை செய்திடும் அறிவு பொருளாதாரமாக இந்திய பொருளாதாரம் மாறி வருகிறது என்றால் மிகையாகாது.
12.
சேவை சந்தையிடுதல், சந்தையிடுதலின் ஓர் சிறப்பு பிரிவு ஆகும். இது ஒரு சேவை அல்லது பயனை ஒருவர் மற்றவருக்கு அளிப்பதை குறிக்கும். சேவை சந்தையிடுதல் என்பது, தகவல்தொழில் நுட்பம், வங்கிக் காப்பீடு, சுகாதாரம், சுற்றுலா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பழுதுபார்ப்பு போன்ற சேவைப்பொருள்களை பரிவர்த்தனை செய்துக் கொள்ளுவதை குறிக்கும்.
13.
உட்புறச் சூழல் என்பது நிறுவனத்தின் உட்புறத்தோடு தொடர்புடைய காரணிகளாகும். எனவே இவற்றைக் கட்டுப்படுத்துதல், மாற்றி அமைத்தல், போன்றவற்றை நிறுவனங்கள் எளிதில் மேற்கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக கொள்கைகள் மற்றும் திட்டங்கள், நிறுவன கட்டமைப்பு, ஊழியர்கள், நிதி மற்றும் வளங்கள் போன்றவை ஆகும்.
14.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி திரு. ஜான் F கென்னடி அவர்கள் " அடிப்படையான நுகர்வோர் உரிமை என்பது பாதுகாப்பு உரிமை, தகவல் பெறும் உரிமை, தேர்ந்தெடுக்கும் உரிமை மற்றும் கேட்கும் உரிமை" என்று கூறுகிறார்.
15.
பண்டமாற்று பரிமாற்றம் (அ) பரிவர்த்தனை என்பது பண்டங்கள் வர்த்தகம் செய்யப்படும் இடத்தில் பொருட்களை பரிமாற்றம் செய்வதாகும்.
எ.கா: தங்கம், வெள்ளி
16.
அரசு அல்லது தங்கமுனை பத்திரங்களை வாங்கவும் விற்கவும் கூடிய ஒரு சந்தைக்கு 'அரசு பத்திரங்கள் சந்தை' என்று பெயர்.
17.
அதிகாரம் என்பது ஒரு அலுவலர் தன் கீழ்பணியாளர்களுக்கு ஆணையிடும் உரிமையைக் குறிக்கின்றது.
18.
பங்குநர்கள் கூட்டங்கள்: நிறும பங்குநர்களால் நடத்தப்படும் கூட்டங்கள் பங்குனர்கள் கூட்டம் என அழைக்கப்படுகிறது. நிறும பங்குநர் கூட்டங்களை மூன்று வகையாக பிரிக்கலாம்.
(i) சட்டமுறை கூட்டம்: நிறுமச் சட்டப்படி ஒவ்வொரு பொது நிறுமமும் தொழில் தொடங்கிய தேதியிலிருந்து ஒரு மாதத்திலிருந்து 6 மாதத்திற்குள் பங்குனர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் இதனை சட்டமுறை கூட்டம் என அழைக்கப்படுகிறது.
(ii) ஆண்டுப் பொதுக்கூட்டம் : ஒவ்வொரு ஆண்டும் நிறுமத்தில் இயல்பான நடவடிக்கை குறித்து ஆலோசிக்க கூட்டப்படும் கூட்டம் ஆண்டு பொதுக்கூட்டம் ஆகும்.
(iii) சிறப்புக் கூட்டம்: சட்டமுறைக் கூட்டம் மற்றும் ஆண்டு பொதுக் கூட்டம் ஆகியவை நிறுமத்தின் இயல்பான சாதாரண கூட்டங்கள் ஆகும்.
(iv) இயக்குநர் அவைக் கூட்டம் : நிறுமத்தை நிர்வகிக்கும் பொறுப்பு இயக்குநரவையிடம் உள்ளதால் இயக்குநர்கள் அடிக்கடி கூடி பல வியாபார நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க வேண்டும். இதற்காக இயக்குநரவையால் கூட்டப்படும் கூட்டங்கள் இயக்குநரவை கூட்டங்கள் ஆகும்.
(v) வாரியக் குழுக் கூட்டம்: பட்டியலிடப்பட்ட நிறுமமும், ₹10 கோடி அல்லது அதற்கு மேல் பங்கு முதலுடைய ஒவ்வொரு பொது நிறுமம் தணிக்கை குழு கூட்டத்தை கூட்ட வேண்டும். இக்கூட்டம் ஆண்டுக்கு குறைந்தது நான்கு முறை கூட்ட வேண்டும்.
சிறப்புக் கூட்டங்கள்:
(i) வகுப்பு கூட்டம்(Class Meeting) Meetings of Particular Share or Debenture Holders
ஒரு குறிப்பிட்ட வகையான பங்குகள் அல்லது கூட்டங்கள் குறிப்பிட்ட வகையான கடனீட்டுப்பத்திரங்களும், கூட்டப்படும் கூட்டம் வகுப்பு கூட்டம் ஆகும். சாதாரண பங்குகள் (எ) முன்னுரிமை பங்குகள் கூட்டப்படும் கூட்டத்தை கூறலாம்.
(ii) கடனீந்தோர் கூட்டம் : நிறுமக் கூட்டங்களை போல இது ஒரு நிறும கூட்டம் அல்ல இருப்பினும், இது ஒரு புதிய கடன் கொள்கையை அறிமுகம் செய்யும் போது அல்லது கடனீந்தோர்கள் தொடர்பான சில வழக்குகளை பேசி முடிவு எடுக்கவும், கடனீந்தோர்களுடன் சில ஒப்பந்தங்கள் மேற்கொள்ளவும் இவ்வகை கூட்டங்கள் கூட்டப்படுகிறது.
19.
ஒருங்கிணைந்த கடமைகள் :
1. ஆண்டு கணக்குகளின் மீது ஒப்புதல் அளித்து அதற்கு அதிகாரப்பூர்வ சான்று வழங்குதல்.
2. பங்குதாரர்களுக்கு அளிக்கப்படும் இயக்குனர் அறிக்கையில், காப்புநிதிக்கு மாற்றம் செய்த தொகை, உபரி தொகையை முதலீடு செய்தல், கடன் வாங்குதல் போன்றவற்றை தெளிவுபடக் கூற வேண்டும்.
3. நிறுமத்தின் முதல் தணிக்கையாளரை நியமனம் செய்தல்,
4. இயக்குனர் கூட்டம் மற்றும் பங்குதாரர் கூட்டம் பற்றி அறிவிப்பு அளித்தல் மற்றும் கூட்டத்தை நடத்துதல்,
5. இயக்குனர் குழு கூட்டத்தில் தீர்மானங்களை முன்மொழிதல் அல்லது நிறைவேற்றுதல்.
பொதுவான கடமைகள் :
1. கம்பெனியின் நோக்கத்தை நிறைவேற்றும் மற்றும் அடையும் பொருட்டு புதிய கொள்கைகளை வகுத்தல்.
2. செயல்முறை விதிகள் அனுமதி வழங்கியிருப்பின் நிறும நலனுக்காக எந்த ஒரு குழுவிற்கும் அதிகாரத்தை ஒப்படைக்கும் உரிமை.
3. நிறும வளர்ச்சியை சரிபார்த்தல், புதிய கொள்கைகளை நடைமுறைப்படுத்தல் மற்றும் தொழிலாளிகளுக்கு தேவையான கட்டளைகளை வழங்குதல்.
4. தங்களுக்கு கீழ் மேலாண்மை இயக்குனர், மேலாளர்,செயலர் மற்றும் இதர பணியாளர்களை நியமனம் செய்தல்.
5. நிறும செயல்முறை விதிகளுக்குட்பட்டு செயல்படுதல்,
6. நிறும நோக்கத்தை அடையும் பொருட்டு நல்ல எண்ணத்துடன் பணியாற்றுதல்.
7. தேவையான அக்கறை மற்றும் அர்ப்பணிப்புடன் தன்னுடைய கடமைகளை உரிய நேரத்தில் செயல்படுத்துதல்.
குறிப்பிடத்தக்க கடமைகள் :
1. இயக்குனர் தங்களின் பெயர், முகவரி மற்றும் தொழில் பற்றிய விவரங்களை அளிக்க வேண்டும்.
2. தான் வைத்திருக்கும் பங்குகள் பற்றிய விவரங்களை அளிக்க வேண்டும்.
3. தான் பதவியேற்ற இரண்டு மாத காலத்திற்குள் தேவையான குறைந்தளவு பங்குகளை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
4. தகவலறிக்கை வெளியிடுதல், குறைந்தபட்ச சந்தாவை நிர்ணயம் செய்தல்.
5.வெளியிடப்பட்ட தகவலறிக்கையில் எந்தவித தவறான கருத்துக்களும் / தகவல்களும் இல்லை என உறுதி செய்யும் கடமை.
6. தகவலறிக்கை சட்டத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் கொண்டுள்ளதா என உறுதி செய்யும் கடமை.
7. நிறும பதிவாளரிடம் தகவலறிக்கையை சமர்ப்பிக்கும் முன்னர் அதில் கையொப்பமிட்டிருக்க வேண்டும்.
8. பங்கு விண்ணப்ப பணம் அட்டவணை வங்கியில் போடப்பட்டுள்ளதா என சரிபார்க்கும் கடமை.
9. பங்கு ஒதுக்கீடு தொடர்பான பட்டியலை நிறும பதிவாளருக்கு சமர்ப்பிக்கும் உரிமை.
10. அறிவிக்கப்பட்ட பங்காதாயத்தை செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யும் உரிமை.
11. பங்குகளை பறிமுதல், ஒறுப்பிழப்பு மற்றும் மாற்றவும் உரிமை உண்டு.
12. சட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு அனைத்து செயல்களையும் குறிப்பிட்ட காலத்தில் செய்து முடிக்கும் கடமை.
13. சட்டத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்து செயல்களையும் குறிப்பிட்ட காலத்தில் செய்து முடிக்கும் கடமை.
14. அசாதாரண பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு விடும் கடமை.
15. கம்பெனியின் சட்டபூர்வமான மற்றும் ஆண்டு பொதுக்கூட்டத்தைக் கூட்ட அழைப்பு விடுக்கும் கடமை.
20.
பணிசார் வகைப்பாடு :
(i) புதுமை படைக்கும் தொழில் முனைவோர் : ஒரு புதுமை புகுத்திக் கொண்டே இருப்பவர். இவர்கள் எப்போதும் வியாபாரச் சூழல்களை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டே இருப்பவர்கள். அதன் அடிப்படையில் நுகர்வோருக்கு எந்தெந்த தேவை நிறைவேறாமல் இருக்கிறது என்பதைப் பகுத்து ஆய்ந்து அதனை தங்களுடைய பொருட்களின் மூலம் நிறைவேற்றுவார்கள்.
(ii) மாதிரியை பின்பற்றும் தொழில் முனைவோர்:
மாதிரியை பின்பற்றும் தொழில் முனைவோர்கள் தற்போது சந்தையில் கிடைக்கும் பொருள்களை தங்களின் அறிவு, ஆற்றல், வல்லமையை வைத்துக்கொண்டு வேறுமுறையில் வடிவமைப்பவர்கள். இவர்கள் மேலைநாடுகளில் வடிவமைக்கப்பட்ட பொருட்களை தங்களின் உள்ளூர் தேவைக்கு ஏற்றபடி உருமாற்றி வெளியிடுபவர்கள்.
(iii) காலம் கடத்தும் பழமைவாத தொழில்முனைவோர் :
பழமை தொழில் முனைவோர்கள் எதையும் புதிதாக புகுத்துவதில் தயக்கம் காட்டுபவர்கள். குறிப்பாக புதியது புகுத்தினால் இடர் வந்துவிடும் என அச்சம் கொள்பவர்கள். தொழில் சூழ்நிலைகள் மாறிவரும் போதிலும் மாறாத இவர்கள் மாற்றத்தை வேறு வழி இல்லாத நிலையில் ஏற்க தள்ளப்படுபவர்கள்.
(iv) மந்தமான தொழில் முனைவோர் (அ) ஆண் தேனி தொழில் முனைவோர் :
மந்தமான தொழில் முனைவோர்களும் பழமைவாத தொழில் முனைவோருக்கு நிகராக மாறுதல்களை ஏற்க விரும்பாதவர்கள். இவர்கள் யாரும் நுழைய விரும்பாத அல்லது பெரிய நிறுமங்களால் புறக்கணிக்கப்பட்ட ஒரு சிறிய சந்தையில் செயல்படுபவர்கள். அதாவது சிறிய குட்டையில் பெரிய மீனாக அரசாள்பவர்கள். அந்த சிறுசந்தையில் எவ்வித மாற்றமும் செய்யாமல் அப்படியே இயங்குபவர்கள்.
21.
22.
நன்மைகள்
i. அனைத்து நேரத்திலும் சந்தை:
1. மின் சந்தை வாரத்தின் 7 நாட்களிலும் 24 மணி நேரத்திலும் (24x7) பயனாளிக்கு சந்தை வசதியை அளிக்கிறது.
2. இதனால் நுகர்வோர் எந்த இடத்திலிருந்தும் எந்த நேரத்திலும் பொருள்களையும் சேவைகளையும் பெறவும் அளிக்கவும் முடியும்.
ii. நேரடி தொடர்பு:
1. தயாரிப்பாளருக்கும் நுகர்வோருக்கும் இடையே நேரடி தொடர்பு ஏற்படுவதால் செலவுகள் குறைக்கப்படுகிறது.
2. இதனால் மலிவான விலையில் பொருட்களை இணைய சந்தையிடுகையின் வாயிலாக நுகர்வோர்கள் பொருட்களை வாங்க இயலுகிறது.
iii. தேவையை பெறுதல்:
நுகர்வோர் தங்களுக்கு தேவைப்படும் எத்தகைய பொருள்களையும் மற்றும் சேவைகளையும் மின் சந்தையில் பல்வேறு தளங்கள் மற்றும் வலை பக்கங்கள் மூலம் பெறலாம்.
தீமைகள்
i. அதிக செலவு:
1. மின் சந்தைப்படுத்துதலில் விளம்பரம் செய்யவும், வணிக தளம் அமைக்கவும் பெரிய அளவில் செலவிட வேண்டும்.
2. வலைதள வடிவமைப்பு, மென்பொருள், நுண்பொருள், வணிகதளப் பராமரிப்பு, வினியோக செலவு போன்றவற்றிக்கு அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டியுள்ளது.
ii. சிறிய நிறுவனத்திற்கு பொருந்தாது:
மிக தொலைவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு பொருள் மற்றும் சேவைகளை வழங்க சிறிய நிறுவனங்களுக்கு மின் சந்தைப்படுத்தல் பொருந்தாது.
iii. தகவல்களைப் புதுப்பித்தல்:
1. இன்றைய சூழலில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு ஏற்ப நிறுவனங்கள் இணைய தளத்தில் போதிய விவரங்களைப் புதுப்பிக்கின்றன.
2. தகவல்களை அவ்வப்பொழுது புதுப்பிப்பது மிகவும் கடினமாக இருக்கும்.
23.
வியாபாரத்தின் செயல் திறனை உடனடியாக பாதிக்கும் சுற்றுச் சூழலாக இருக்கும் காரணிகளை நுண்ணிய சூழல் குறிக்கிறது. இதில் பின்வருவன அடங்கும்.
(அ) நிதி அளிப்பவர்கள்:
(i) கடனீட்டுப் பத்திரதாரர்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் வணிகம் சிறந்த முறையில் இயங்க முக்கிய பங்கினை வகிக்கிறார்கள்.
(ii) அவர்களின் நிதிதிறன், கொள்கை உத்திகள், இடர் பற்றிய அணுகுமுறை மற்றும் நிதிசாரா அமைப்புகளின் பங்கு முக்கியமாக உள்ளது.
(ஆ) சரக்கு விற்பனையாளர்கள் :
எந்தவொரு அமைப்பிலும் மூலப்பொருட்கள் மற்றும் இதர உள்ளீடுகளின் வழங்குநர்கள் மிகவும் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். விநியோகிப்பாளரிடமிருந்து பெறப்படும் பொருட்கள் உற்பத்திகளில் தொடர்ச்சியான செயல்பாட்டை செயல்படுத்துகிறது.
(இ) சந்தையிடுகை இடைநிலையர்கள்:
(i) உற்பத்தி பொருளை விற்பனை செய்யவும் நுகர்வோரிடம் கொண்டு சேர்ப்பதற்கும் விநியோகிப்பாளர்களின் உதவி தேவைப்படுகிறது.
(ii) இவர்கள் நிறுவனத்தையும், நுகர்வோரையும் இணைக்கும் திகழ்கின்றனர். மொத்த விற்பனையாளர்கள் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் முகவர்கள் பொருள்களை நுகர்வோரிடம் சேர்ப்பதை உறுதி செய்கின்றனர்.
(ஈ) பொது மக்கள்:
தொழிலில் தாக்கத்தை ஏற்படுத்தும் பின்வரும் குழுக்கள் பொது மக்கள் எனப்படுகிறது.அவையானவை ஊடகக்குழு, குடிமக்கள் குழு மற்றும் உள்ளூர் பொது மக்கள் போன்ற குழுக்கள் வியாபாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பொது மக்களிடம் ஒரு வியாபாரத்தை உருவாக்குவதற்கும் அல்லது அழிப்பதற்குமான திறமை உள்ளது.
(உ) வாடிக்கையாளர்கள்
ஒவ்வொரு வியாபாரத்தின் நோக்கமும் அதன் வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவேற்றுவதாகும். வாடிக்கையாளரே வணிகத்தின் மன்னராக கருதப்படுகிறார் மற்றும் அவர்களைச் சுற்றியே வணிகம் உள்ளது.
(ஊ) போட்டியாளர்கள்:
அனைத்து நிறுவனங்களும் எல்லா நிலைகளிலும் போட்டியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.உள்ளுர், தேசிய மற்றும் உலகளாவிய அளவில் ஒரே மாதிரியான பொருள் உற்பத்தி அல்லது தயாரிப்புகள் இருப்பதால் நிறுவனங்கள் பல்வேறு நிலைகளில் போட்டியிட கூடிய நிலை ஏற்படுகிறது.
24.
(i) அதிக விலைக்கு விற்றல் :
விற்பனையாளர்கள் மற்றும் சேவைகளை அளிப்பவர்கள் தாங்கள் வழங்கும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு அதன் தரத்திற்கு ஈடான விலையைக் காட்டிலும் கூடுதலான விலையை அளிப்பதற்கு பல்வேறு தருணங்களில் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.
(ii) கலப்படம் :
கலப்படம் என்பது உணவுப் பொருட்களில் விரும்பத்தகாத பதிலிப் பொருட்களைச் சேர்ப்பதாகும். கலப்படப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு உடல்ரீதியாகவும், பணரீதியிலும் கடுமையான இழப்புகள் ஏற்படுகிறது. கலப்படம் நுகர்வோரது உடல்நலத்தை பெரிதும் பாதிப்பதால், அது ஒரு மன்னிக்க முடியாத குற்றமாகும்.
(iii) போலியான பொருட்கள் :
மக்கள் மத்தியில் பிரபலமடைந்த வணிகக் குறியுடைய பொருட்களுக்கு அதே போன்ற போலியான பொருட்கள் சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்டு மோசடியாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தானியங்கி (ஆட்டோமொபைல்) வாகன உதிரிபாகங்கள், பிளேடுகள், கைக்கடிகாரங்கள், பேனாக்கள், வானொலிப்பெட்டிகள், மருத்துவ மருந்துப் பொருட்கள், நகைகள், துணிகள் மற்றும் ரூபாய் நோட்டுக்கள் கூட கள்ளத்தனமாக, போலியாகத் தயாரிக்கப்பட்டு இமயம் முதல் குமரி வரை எங்கும் நீக்கமற தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
(iv) செயற்கையான பற்றாக்குறை:
சில சூழ்நிலைகளில் வணிகர்கள் தங்களின் வணிக நிறுவனங்களின் சரக்குகளை இருப்பு வைக்கும் இடங்களில் போதுமான அல்லது தேவைக்கு அதிகமான அளவு சரக்குகளை இருப்பு வைத்திருந்தாலும் கூட தங்கள் கடைகளின் முகப்பில் இருப்பு இல்லை எனும் பெயர்ப்பலகையை வைக்கின்றனர். இத்தகைய சூழ்நிலைகளில் நுகர்வோர் தங்களின் தவிர்க்க இயலாத தேவையின் அடிப்படையில் அப்பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
(v) தரக்குறைவு :
கட்டுமானம் செய்து முத்திரையிடப்பட்ட கொள்கலன்களை திறந்தால் அதில் அடைக்கப்பட்டுள்ள பொருட்கள் தரம் குறைந்ததாகவும், கெட்டுப்போனதாகவும், நிகர எடை கொள்கலனில் குறிப்பிடப்பட்டுள்ளதை விட குறைவாக இருப்பதையும் காணமுடிகிறது.
25.
| வ.எண் | ஒப்பிடுவதற்கான அடிப்படை | பணிவழிப் பயிற்சி | பணிவழியற்ற பயிற்சி |
| 1. | விளக்கம் | பணியாளர் உண்மையான வேலை சூழலில் வேலையை புரிந்து கொள்கிறார். | பணியாளர், பணிச் சூழலுக்கு வெளியே பயிற்சியை பெறுகிறார். |
| 2. | செலவு | செலவு குறைவான முறை | செலவு அதிகமான முறை அதாவது தனித்தனிப் பயிற்சி அறைகள் தனித்திறன் பெற்றவர்கள், வளங்கள் மற்றும் காணொளி போன்ற வளங்கள் தேவைப்படுகிறது. |
| 3. | இடம் | வேலை இடத்திலேயே பயிற்சி அளிக்கப்படுகிறது. | வேலை இடத்திற்கு வெளியே பயிற்சி அளிக்கப்படுகிறது. |
| 4. | பொருத்தம் | உற்பத்தி செய்யும் அமைப்புகளுக்கு பொருத்தமான முறை | உற்பத்தி அமைப்புகளுக்கு பொருத்தமற்ற முறை. இது மேலாண்மை செய்யும் நிறுவனங்களுக்கு பொருத்தமான முறை |
| 5. | அணுகுமுறை | நடைமுறை அணுகுமுறை | கோட்பாடு அணுகுமுறை |
| 6. | கோட்பாடு | நிறைவேற்றல் மூலம் கற்றல் | அறிவைப் பெறுவதன் மூலம் கற்றல் |
| 7. | கற்றல் | அறிவைப் பெறுவதன் மூலம் கற்றல் | அனுபவத்தின் மூலம் கற்றல் |
| 8. | தொடர்பு | பயிற்சி மிகவும் பொருத்தமானது மற்றும் நடைமுறையில் ஒவ்வொரு நாளுக்கும் தேவையான தேவைகளை கையாளுதல். | ஒரே நேரத்தில் பணியாளர்களின் குழுக்களுடன் மிக எளிதாக தொடர்பை ஏற்படுத்த முடியும். |
26.
(i) நேர்முகத் தேர்வு: வேலை தேடி நிறுவனத்திற்கு நேரடியாக வருபவர்களை நேர்முக தேர்வின் மூலமாகவும் பணியமர்த்த முடியும்.
(ii) வளாக தேர்வு : கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று நல்ல கல்வித் தகுதியுடைய விண்ணப்பதாரர்களை வளாகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கலாம்.
(iii) தொழிற்சாலை வாயிலில் ஆட்சேர்ப்பு : பொதுவாக சாதாரண அல்லது தற்காலிக திறனற்ற ஊழியர்கள் இந்த வழியில் மூலம் ஆட்சேர்ப்பு செய்யப்படுகின்றனர்.
(iv) போட்டி நிறுவனங்கள் : உயர் ஊதியம் மற்றும் அதிக பலன்கள் வழங்குவதன் மூலம் போட்டி நிறுவனங்களில் உள்ள திறமையான பணியாளர்களை தம்முடைய நிறுவனத்தில் பணியாற்ற ஈர்க்கும் செயல் பணியாளர் வேட்டை என அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டு விற்பனை பிரதிநிதிகள் பட்டய கணக்காளர்கள் மேலாளர்கள் ஆகியோர்.
(v) இணைய வழி ஆட்சேர்ப்பு : தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் காரணமாக நிறுவனங்கள் தாங்கள் எதிர்பார்க்கும் தகுதியுடைய பணியாளர்களை உலகளவில் இணையத்தின் வாயிலாக பெற முடிகிறது. இது ஆட்சேர்ப்புக்கான தவிர்க்க முடியாத புற வள ஆதாரமாகிவிட்டது.
27.
(i) போதுமான கல்வி மற்றும் வழிகாட்டல் மூலம் முதலீட்டாளர்களின் நலன்களை பாதுகாக்கிறது.
(ii) பங்குச் சந்தைகளில் வியாபாரத்தை ஒழுங்குபடுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல். தரகர்கள் மற்றும் துணை தரகர்கள் ஆகியோர் நிதிச்சந்தையில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பங்கு பரிவர்த்தனை விசாரணைகள், இடைத்தரகர்கள் மற்றும் தன்னியக்க ஒழுங்குபடுத்தும் அமைப்புகளை ஆய்வு செய்தல் மற்றும் தேவையான நடவடிக்கைகளை செபி எடுக்கிறது.
(iii) பத்திரங்களில் உள்வழி வர்த்தகத்தை தடை செய்கிறது.
(iv) பங்குச் சந்தைகளில் செயல்படும் நிதி இடைத்தரகர்களால் மேற்கொள்ளப்படும் நிதி மோசடி மற்றும் நியாயமற்ற முறைகளை தடை செய்கிறது.
(v) நிதி இடைத்தரகர்களுக்கு பொருத்தமான பயிற்சி அளித்தல், பங்குச் சந்தையில் ஆரோக்கியமான சூழலுக்கு மிகவும் முக்கியமானது. மேலும், முதலீட்டாளர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.
(vi) சட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான கட்டணம் வசூலித்தல் அல்லது சட்டத்தின் நோக்கம் நிறைவேற்றுவதற்கான வேறு எந்த வகை கட்டணம் வசூலித்தலும் இதில் அடங்கும்.
(vii) இந்திய மத்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் செயல்பாடுகளை செயல்படுத்துதல்.
(viii) இடைத்தரகர்களின் சுய ஒழுங்குமுறை அமைப்பை ஊக்குவித்தல்.
(ix) இது விரிவான சட்ட அதிகாரங்களை கொண்டுள்ளது.
28.
ஒரு பங்குச் சந்தையின் பல்வேறு செயல்பாடுகளை கீழே விளக்கப்பட்டுள்ளன.
1. உடனடி மற்றும் தொடர்ச்சியான சந்தை:(Ready and Continuous Market)
(i) பங்கு பரிவர்த்தனை உண்மையில், ஏற்கனவே இருக்கும் பத்திரங்களுக்கு ஒரு சந்தை.
(ii) ஒரு முதலீட்டாளர் தனது பத்திரங்களை விற்க விரும்பினால், அவர் எளிதில் விரைவாக பங்குச் சந்தைகளில் அவற்றை விற்பனை செய்யலாம்.
(iii) வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர் தனது பங்குகளை பணமாக மாற்றலாம். அதே போல் அவர் தன் பணத்தை பத்திரங்களில் மாற்றலாம்.
2. பத்திரங்கள் சரியான மதிப்பீடு: (Correct Evaluation of Securities)
(i) பத்திரங்கள் வாங்குதல் மற்றும் விற்பனை செய்யப்படும் விலைகள் பதிவு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன.
(ii) இதன் விலைகள் "சந்தை மேற்கோள்கள்" என்று அழைக்கப்படுகின்றன.
(3) மூலதன உருவாக்கத்திற்கான உதவி (Aid to Capital formation)
(i) பங்குச் சந்தை பரிமாற்றம் பல்வேறு தொழில் துறை பத்திரங்கள் மற்றும் அவற்றின் விலைகள் மற்றும் அவர்களின் கொள்முதல் மற்றும் விற்பனைக்கு வழங்கிய வசதிகள் ஆகியவற்றை மக்களுக்கு சேமித்து, முதலீடு செய்ய தூண்டுகிறது.
(ii) பங்கு பரிமாற்றங்கள், ஒரு நிலையான மூலதனத்தை தொழில்துறையில் உறுதிப்படுத்துகின்றன மற்றும் தொழில் துறை வளர்ச்சிக்கு உதவும்.
(4) ஊக வணிகத்திற்கான வசதிகள் (Facilities for Speculation)
(i) ஊகவணிகம் என்பது பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகளின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.
(ii) ஊக வணிகத்தின் விளைவாக, பத்திரங்களின் தேவை மற்றும் வழங்கல் சமமாகிறது.
(ii) இதேபோல், விலை நகர்வுகள் சுமூகமாக அளிக்கப்படுகின்றன.
(5) பருவகால பத்திரங்கள் (Seasoning of Securities)
(i) புதிய நிறுவனங்கள் பங்குகள் வெளியிடும் பொழுது, ஊக வணிகர்கள் மற்றும் பொறுப்புறுதியாளர்கள் தற்காலிக கால வணிகத்தில் ஈடுபடுகின்றனர்.
(ii) புதிய வெளியீடுகளை சந்தை ஈர்க்க தயாராகும் பொழுது அவர்களுக்கு அவைகள் சந்தையை திறந்து விடுகின்றன.
(6) மூலதனத்தை சரியான முறையில் வழிப்படுத்துதல்: மக்கள் நல்ல லாபத்தை ஈட்டக் கூடிய அத்தகைய நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்ய விரும்புகிறது. ஆனால் பங்குச் சந்தைகளுக்கு இந்த சேமிப்புக்கள் இலாபமற்ற அலகுகள் பங்குகள் மீது வீணடிக்கப்படக்கூடும்.
(7) முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பு : ஒரு பங்கு பரிவர்த்தனையில் அனைத்து ஒப்பந்தங்களும் நன்கு வரையறுக்கப்பட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு ஏற்ப உள்ளன. உதாரணமாக, தங்கள் சேவைகளுக்கான அதிகமான கமிஷன்களை புரோக்கர்கள் வசூலிக்க முடியாது.
29.
1. கருவூல இரசீதுகள்:
(i) அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட கருவூல இரசீதுகள் தற்போது மிகவும் பிரபலமாக உள்ள வணிக மற்றும் அதிகளவு நீர்மைத் தன்மை கொண்ட ஆவணங்களாகும்.
(ii) கருவூல இரசீதுகள் என்பது குறிப்பிட்ட காலக் கெடுவுடன் கூடிய கடன் உறுதிப் பத்திரம்.
(iii) இதன் காலம் ஒரு வருடத்திற்கு மேல் இருக்காது.
i) 91 நாட்கள் கருவூல இரசீதுகள்:
91 நாட்கள் கருவூல இரசீதுகள் ஒரு நிலையான 4 சதவீத தள்ளுபடி விகிதத்தில் ஏலத்தின் மூலம் வெளியிடப்படுகின்றன.
ii) 182 நாட்கள் கருவூல இரசீதுகள்:
இந்திய ரிசர்வ் வங்கி, 182 நாட்கள் கருவூல இரசீதுகளை ஒரு வாரம் முழுவதும் வடிகட்டும் அடிப்படையில் வெளியிடுகிறது.
iii) 364 நாட்கள் கருவூல இரசீதுகள்:
(i) இது எவ்வித நிலையான விகிதமும் கொண்டு செயல்படுவதில்லை.
(ii) இந்த தள்ளுபடி விகிதம் அதிகார அமைப்பின் இசைவினைப் பெற்று பங்கேற்பாளர்களுக்கு ஏலத்தில் தெரிவிக்கப்படுகிறது.
2. வைப்பு சான்றிதழ்கள்:
(i) வைப்பு சான்றிதழ்கள் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் குறுகிய கால வைப்பு ஆவணங்களாகும்.
(ii) வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தங்களது நிதி ஆதாரங்களை உயர்த்திக் கொள்வதற்காக வெளியிடுகின்றன.
(iii) வைப்பு சான்றிதழ்கள் எளிதில் மாற்றக்கூடிய இயல்புடையதாகவும், விரைவாக சந்தைப்படுத்தக் கூடியதாகவும், குறிப்பிட்ட முகமதிப்பு மற்றும் முதிர்வுத் தொகை ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
(iv) இது மாற்றுமுறை ஆவண வைப்புச் சான்றிதழ் என்றும் அழைக்கப்படுகிறது.
3. வணிக இரசீதுகள்:
(i) பொருட்களின் விற்பனையாளர்கள் மூலம் பொருட்களை வாங்குபவர் மீது எழுதி தயாரிக்கப்படும் ஒரு ஆவணமே வணிக இரசீது ஆகும்.
(ii) வணிக இரசீது சுய நீர்மை தன்மை, இரு நபர்களுக்கிடையிலான பரிமாற்றம், நடவடிக்கையின் சரியான தேதியை தெரிந்து கொள்ளும் தன்மை, நடவடிக்கை குறித்த வெளிப்படைத் தன்மை போன்ற நன்மைகளைக் கொண்டது.
i) தேவை மற்றும் பண்பாட்டு இரசீதுகள்:
(i) தேவை இரசீது என்பது பணம் செலுத்துவதற்கான தேதி எதுவும் குறிப்பிடப்படாத இரசீது ஆகும்.
(ii) தேவை இரசீது என்பது இந்த இரசீதை வைத்திருப்பவர் தனக்கு எப்பொழுது பணம் தேவைப்படுகிறதோ அப்போது இந்த இரசீதுக்கு பணம் பெற்றுக் கொள்ளலாம்.
ii) தூய்மை இரசீது மற்றும் ஆவண இரசீதுகள்:
(i) பொருட்களின் உரிமை ஆவணம் மூலம் இணைக்கப்பட்ட இரசீதுகள் ஆவண இரசீதுகள் எனப்படும்.
(ii) எந்த ஒரு ஆவணமும் எழுதி இணைக்கப்படாத இரசீதுகள் தூய்மை இரசீதுகள் ஆகும்.
iii) உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு இரசீதுகள்:
(i) இந்தியாவில் எழுதப்பட்ட மற்றும் செலுத்த வேண்டிய இரசீதுகள் உள்நாட்டு இரசீதுகள் எனப்படும்.
(ii) இந்தியாவிற்கு வெளியே எழுதப்பட்டு இந்தியாவிலோ அல்லது அயல்நாட்டிலோ செலுத்தப்படும் இரசீதுகளை அயல்நாட்டு இரசீதுகள் என்றழைக்கப்படும்.
iv) தனித்துவமான இரசீதுகள்:
வரைதல் மற்றும் ஏற்றுக் கொள்ளல் உள்ளூர் வழக்கப்படி அல்லது வர்த்தகப் பயன்பாட்டின் மூலம் நிர்வகிக்கப்படுவதை குறிக்கும்.
v) இருப்பிட மற்றும் வழங்கள் இரசீதுகள்:
உண்மையான வியாபார நடவடிக்கைகள் அல்லாமல் உருவாக்கப்படும் இரசீதுகளை இருப்பிட மற்றும் வழங்கள் இரசீதுகள் என்று அழைக்கப்படுகின்றன.
30.
மேலாண்மை பணிகளை இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தலாம் அவை முக்கிய பணிகள் மற்றும் துணைப்பணிகள் ஆகும்.
முதன்மைப் பணிகள்:
(i) திட்டமிடுதல்:
திட்டமிடுதல் என்பது மேலாண்மையின் செயல்பாடுகளில் முதன்மையானது ஆகும். திட்டமிடுதல் என்பது வருங்கால தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு ஆக்கபூர்வமான மதிப்பீடு ஆகும்.
(ii) அமைத்தல் :
பணியாளர்களுக்கு பணிகளை ஒப்படைவு செய்வதும் அப்பணிகளை நிறைவேற்றுவதற்கு போதிய அதிகாரங்களை வழங்குவதும் மேலும் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு பணியாளரே பொறுப்பேற்க செய்வதும் அமைத்தல் பணி எனப்படுகிறது.
(iii) பணியமர்த்தல் :
பணியமர்த்தல் என்பது பணியாளர்களைத் தேர்வு செய்தல் மற்றும் திறமையான பணியாளர்களுக்கு பணியிடமளித்தல் செயல்பாடுகளை பணியமர்த்தல் உள்ளடக்கியுள்ளது.
(iv) இயக்குவித்தல் :
தற்போதைய இலக்குகளை சாதிக்கும் பொருட்டு தொடர்ச்சியான அடிப்படையில் செயலூக்கமளித்தல், முன்னணியிலிருத்தல், வழிகாட்டுதல் மற்றும் கீழ்நிலைப் பணியாளர்களுடன் தொடர்புபடுத்துதல் போன்றன இயக்குதலைக் குறிக்கிறது.
(v) கட்டுப்படுத்துதல் :
ஊக்க ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு அளிக்கும் முடிவுகளை எடுப்பதற்கும் பணியாளர்களின் செயல்திறனை மதிப்பிடுவதற்கும் கட்டுப்படுத்துதல் செயல்பாடு பயன்படுகிறது.
(vi) ஒருங்கிணைத்தல் :
ஒரு நிறுவனம் தனது குறிக்கோளை அடைவதற்கு பல்வேறு திறன்கள் கொண்ட பணியாளர்களை ஒருங்கிணைப்பது ஒருங்கிணைத்தல் எனப்படுகிறது. நிறுவனத்தின் ஒவ்வொரு மேலாண்மை பணிகளிலும் ஒருங்கிணைத்தல் பணி உள்ளடங்கியுள்ளது.
(vii) செயலூக்கமளித்தல் :
செயலூக்கமளித்தல் மூலமே நிறுவனத்தின் நோக்கங்களை அடைய முடியும். ஒரு பணியை விரைவாக செய்து முடிப்பதையும், பணியாளர்களின் பணியின் மீதான விருப்பத்தை வளர்ப்பதையும் செயலூக்கமளித்தல் என்ற சொல் உள்ளடக்கியுள்ளது.
துணைப்பணிகள் :
(i) புதுமைப்படுத்துதல் :
வியாபார உலகில் செய்யப்படும் மாற்றங்களை எதிர்கொள்ள ஊழியர்களையும் அமைப்பையும் தயார் நிலைப்படுத்தும் செயல்பாடு புதுமைப்படுத்துதல் என்பதைக் குறிக்கிறது. வியாபாரத்தில் தொடர்ச்சியான மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
(ii) பிரதிநிதித்துவம் :
ஒரு மேலாளர் ஒரு நிறுவனத்தின் பிரதிநிதியாக செயல்பட வேண்டும். வாடிக்கையாளர்கள், பொருட்கள் மற்றும் சேவையை அளிப்பவர்கள். அரசாங்க அதிகாரிகள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் இதைப் போன்றவர்களுடன் மேலாளர் தொடர்புடன் இருக்க வேண்டும்.
(iii) முடிவெடுத்தல் :
ஒரு அமைப்பின் ஒவ்வொரு பணியாளரும் பல்வேறு எண்ணிக்கையிலான முடிவுகளை ஒவ்வொரு நாளும் எடுக்கின்றனர்.ஒரு அமைப்பு இலகுவாக செயல்படுவதற்கு முடிவெடுத்தல் உதவுகிறது.
(iv) தகவல் தொடர்பு:
தொடர்பு என்பது மனித எண்ணங்களை, கண்ணோட்டங்களை அல்லது கருத்துக்களை ஒரு நபர் மற்றொரு நபருக்கு பரிமாற்றம் செய்வதைக் குறிக்கிறது.
31.
மேலாண்மையின் அடிப்படைக் கருத்து: மேலாண்மையின் அடிப்படைக் கருத்துக்களை பின்வரும் அவற்றின் தொன்றுதொட்ட இயல்புகள் மூலமாக அறிந்து கொள்ள இயலும்.
(i) அறிவின் தொகுப்பு : தற்போது மேலாண்மை உயர்தனிச் சிறப்பு வாய்ந்த மேலாண்மைக் கோட்பாடு மற்றும் தத்துவத்தை உருவாக்கியுள்ளது. மேலாண்மை இலக்கியம் அனைத்து நாடுகளிலும் வளர்ச்சி பெற்றிருக்கின்றது.
(ii) மேலாண்மைக் கருவிகள் : கணக்கியல், வணிகச் சட்டங்கள், உளவியல், புள்ளியியல், பொருளியல், தரவு செயலாக்கம் என மேலாண்மையின் கிளைகள் பல்கிப் பெருகி விரிவடைந்துள்ளது.
(iii) தனிப் பாடப்பிரிவு : பல்வேறு பல்கலைக் கழங்களும், உயர்கல்வி நிறுவனங்களும் மேலாண்மைக் கல்வியை தனிப்பாடப் பிரிவாக அங்கீகரித்திருக்கின்றன. ஏற்றுமதி மேலாண்மை, ஆள்சார் மேலாண்மை, உற்பத்தி மேலாண்மை, சந்தை மேலாண்மை, நிதி மேலாண்மை போன்ற மேலாண்மையின் பல்வேறு பகுதிகளில் கருத்தரங்கம், சிறப்புப் பாடப்பிரிவுகள், பயிற்சித் திட்டங்கள் போன்றவற்றின் மூலம் மேலாண்மை நவீனமயமானதாகவும், பிரபலமடைந்தும் வருகின்றது.
(iv) சிறப்பீடுபாடு: வணிகத்தின் ஒவ்வொரு செயல்பாட்டுப் பகுதியையும் சீரிய முறையில் மேலாண்மை செய்து வணிகத்தை சிறப்பாக நிர்வகிக்க உயர் கல்வித் தகுதியும் முறையான பயிற்சியும் பெற்ற உரிய முன்னனுபவமுள்ளவர்களை தேர்ந்தெடுத்து பணியமர்த்த வேண்டும் என்ற மனப்பாங்கு தற்போது வளர்ந்து வருகின்றது.
(v) நடத்தை விதி : நுகர்வோர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் அல்லது சமுதாயம் போன்றவற்றிற்கு வணிக மேலாண்மை ஆற்ற வேண்டிய சமூகப் பொறுப்புணர்வுகளை அறிவூட்டப்பட்ட வணிகர்கள் அங்கீகரித்திருக்கின்றனர். பொது கழகங்களுக்கு தற்போது சமூக மனசாட்சியும், விழிப்புணர்வும் உள்ளது.
(vi) பணி ரீதியானதொரு அமைப்பு : பல்வேறு நாடுகளில் மேலாண்மைப் பிரிவுகளில் அறிவுப் பரவலாக்கம் ஏற்படவும், மேலாண்மை சிறப்புத் தொழில் குறித்த பொதுமக்கள் மனதில் ஒரு சிறந்த தோற்றத்தை உருவாக்கவும் வணிக மேலாண்மை சங்கங்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதை நாம் காண முடிகின்றது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards