12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test

1.
சமூக சந்தையிடுகை என்றால் என்ன?
2.
சேவை சந்தையிடுதல் என்றால் என்ன?
3.
பசுமை சந்தையிடுதல் என்றால் என்ன?
4.
ஜான் F கென்னடி கூறிய நுகர்வோர் உரிமைகள் யாவை?
5.
தகவல் பெறும் உரிமை (Right to be informed) பற்றி சிறு குறிப்பு வரைக.
6.
சிறுகுறிப்பு வரைக - நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986.
7.
"வாங்குவோர் ஜாக்கிரதை" என்றால் என்ன?
8.
நுகர்வோர் என்பவர் யார்?
9.
மின் சந்தையிடுதலின் நன்மைகளை விவரி.
10.
தனியிடச்சந்தை பற்றி விளக்குக.
11.
மின் சந்தையிடுதலின் நோக்கங்கள் யாவை? (ஏதேனும் 3)
12.
ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பாதுகாப்பு உரிமைகள் பற்றி நீவீர் அறிவது என்ன?
13.
நிவாரணத்திற்கான உரிமைகள் பற்றி நீவீர் அறிந்தது என்ன?
14.
நுகர்வோரியலின் முக்கியத்துவம் பற்றி எழுதுக. (ஏதேனும் 3)
15.
செயற்கைப் பற்றாக்குறை என்றால் என்ன?
16.
நுகர்வோரியல் குறித்து இயற்றப்பட்ட முக்கியச் சட்டங்கள் யாவை? (ஏதேனும் 3)
17.
பாரம்பரிய சந்தையிடுகை எவ்வாறு மின் சந்தையிலிருந்து வேறுபடுகிறது - விளக்குக
18.
நுகர்வோரின் கடமைகளை விளக்குக? (ஏதேனும் 5)
19.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986ன் நோக்கங்கள் யாவை? (ஏதேனும் 5)
20.
நுகர்வோர் எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள்?(ஏதேனும் 5)
1.
சந்தைப்படுத்தலில் ஒரு புதிய அனுமான அறிமுகம் தான் சமூக சந்தைப்படுத்தல் ஆகும். சமூக நலனை உறுதிப்படுத்தும் வகையில், சமூகத்தின் குறிப்பிட்ட பழக்க வழக்கங்களையும் நோக்கங்களையும் வெளிப்படுத்தும் வகையில் பொருள்களை சந்தைப்படுத்தும் முறையை சமூக சந்தைப்படுத்தல் எனலாம்.
2.
சேவை சந்தையிடுதல், சந்தையிடுதலின் ஓர் சிறப்பு பிரிவு ஆகும். இது ஒரு சேவை அல்லது பயனை ஒருவர் மற்றவருக்கு அளிப்பதை குறிக்கும். சேவை சந்தையிடுதல் என்பது, தகவல்தொழில் நுட்பம், வங்கிக் காப்பீடு, சுகாதாரம், சுற்றுலா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பழுதுபார்ப்பு போன்ற சேவைப்பொருள்களை பரிவர்த்தனை செய்துக் கொள்ளுவதை குறிக்கும்.
3.
சுற்றுச்சூழலுக்கு எவ்வித தீங்கும் விளைவிக்காமல் சுற்றுப்புறச் சூழலுக்கு பாதுகாப்பாக சந்தைப்படுத்துவதை பசுமை சந்தைப்படுத்துதல் எனலாம். நுகர்வோர்களின் தேவை மற்றும் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் பொருள்கள் மற்றும் சேவைகளை உருவாக்கி, மேம்படுத்தி, தரமான செயல் திறன்மிக்க பொருள்களை, மலிவு விலையில் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் உற்பத்தி செய்து சந்தைப்படுத்துவதை பசுமை சந்தைப்படுத்தல் எனலாம்.
4.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி திரு. ஜான் F கென்னடி அவர்கள் " அடிப்படையான நுகர்வோர் உரிமை என்பது பாதுகாப்பு உரிமை, தகவல் பெறும் உரிமை, தேர்ந்தெடுக்கும் உரிமை மற்றும் கேட்கும் உரிமை" என்று கூறுகிறார்.
5.
(i) பொருட்களை வாங்கும் பொழுது நுகர்வோர் அப்பொருட்களைப் பற்றிய பெயர், கலவை, பயன்படுத்தும் அளவு, உற்பத்தி மற்றும் காலாவதி நாள், தயாரிப்பு பிரிவு எண் மற்றும் எச்சரிக்கை போன்ற அனைத்து விதமான தகவல்களையும் கேட்டுப்பெற வேண்டும்.
(ii) மேலும் பொருட்களின் விலை, அதன் தயாரிப்பாளர் பெயர், வரியுடன் அல்லது வரியில்லாத விலை ஆகியவையும் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.
6.
(i) பல்வேறு நுகர்வோர் பாதுகாப்புக் குழுக்கள் மற்றும் நுகர்வோரின் தொடர் அழுத்தத்தின் காரணமாக மைய அரசு "நுகர்வோர் 55 பாதுகாப்புச் சட்டம் 1986" எனும் விரிவான சட்டத்தை இயற்றியது. இச்சட்டம் 15.04.1987 அன்று அமுலுக்கு வந்தது. இச்சட்டம் 1993ல் திருத்தியமைக்கப்பட்டது. இச்சட்டம் சுருக்கமாக “கோப்ரா” (COPRA) என்றழைக்கப்படுகிறது.
(ii) இச்சட்டம் ஏமாற்று நோக்குடைய குறைபாடுடைய பொருட்கள், குறைபாடுடைய சேவைகள். நேர்மையற்ற வணிக நடைமுறைகள் மற்றும் பல்வேறு வகையான சுரண்டல்களிலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்கின்றது.
7.
(i) வாங்குவோர் ஜாக்கிரதை எனும் சொல் கேவியட் எம்ப்டர் எனும் இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து பிறந்தது ஆகும். "உள்ளது உள்ளபடியே என்ற சொற்றொடரைப்போன்று நுகர்வோர் வாங்கிய பொருட்கள் அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை அல்லது குறைபாடுடையவை எனில் அத்தகு இடர்பாடுகளுக்கு வாங்குபவரே பொறுப்பேற்க வேண்டும்.
(ii) பொருட்களை வாங்கியவர் அதற்கு நிவாரணம் தேட இயலாது என நுகர்வோரை எச்சரிக்கை செய்யும் தத்துவமே "வாங்குவோர் ஜாக்கிரதை அல்லது விழித்திரு" எனும் கோட்பாடாகும்.
8.
உற்பத்தியாளரிடமிருந்து அல்லது விற்பனையாளரிடமிருந்து பொருட்களை வாங்குவோர் அல்லது இயற்கை வளங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டு (காற்று, நீர் மற்றும் இயற்கை வளங்கள்) அல்லது பிறரால் உற்பத்தி செய்யப்பட்டு, விற்கப்படும் பொருட்களை பயன்படுத்துபவரே நுகர்வோர் ஆவார்.
9.
நன்மைகள்:
(i) அனைத்து நேரத்திலும் சந்தை: மின் சந்தை வாரத்தின் 7 நாட்களிலும் 24 மணிநேரத்திலும் (24×7) பயனாளிகளுக்கு சந்தை வசதியை அளிக்கிறது. இதனால் நுகர்வோர் எந்த இடத்திலிருந்தும் எந்த நேரத்திலும் பொருள்களை/ சேவைகளையும் பெறவும் அளிக்கவும் முடியும்.
(ii) நேரடி தொடர்பு: தயாரிப்பாளருக்கும் நுகர்வோருக்கும் இடையே நேரடி தொடர்பு ஏற்படுவதால் செலவுகள் குறைக்கப்படுகிறது. இதனால் மலிவான விலையில் பொருட்களை இணைய சந்தையிடுகையின் வாயிலாக நுகர்வோர்கள் வாங்க இயலுகிறது.
(iii) தேவையை பெறுதல்: நுகர்வோர் தங்களுக்கு தேவைப்படும் எத்தகைய பொருள்களையும் மற்றும் சேவைகளையும் மின் சந்தையில் பல்வேறு தளங்கள் / வலை பக்கங்கள் மூலம் பெறலாம்.
10.
போட்டியாளர்களால் அடையாளம் காணப்படாத ஒரு வரையறுக்கப்பட்ட வகுப்பு / பிரிவு மக்களை அடையாளம் கண்டு அந்த வாடிக்கையாளரின் தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான அனைத்து சந்தையிடுதல் முயற்சிகளை செய்வதே (niche market) தனியிடச்சந்தையை குறிக்கும்.
(ii) ஒரு பெரிய குளத்தில் ஒரு சிறிய மீனாக இருப்பதற்கு பதிலாக ஒரு சிறிய குளத்தில் ஒரு பெரிய மீனாக இருப்பது போல, ஒரு குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட வாடிக்கையாளரின் தேவைகளை பூர்த்தி செய்யும் சந்தையை இவ்வாறு அழைக்கிறோம்.அனைத்து வசதிகளுடன் உரிய திரையரங்குகள் (இதன் டிக்கெட் விலை மற்ற திரையரங்கை போல் அல்லாமல் 5 அல்லது 6 மடங்கு அதிகமாக இருக்கும்).
11.
மின் சந்தைப்படுத்தலின் முக்கிய நோக்கங்கள் பின்வருமாறு:
1. சந்தையின் பங்கை மேலும் விரிவாக்கம் செய்தல்.
2. வழங்கீடு மற்றும் விற்பனை மேம்பாட்டு செலவுகளை குறைத்தல்.
3. பொருள் குறித்த அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
4. தகவல் தளத்தை பலப்படுத்துதல்.
12.
(i) சில தயாரிப்புப் பொருட்கள் நுகர்வோரின் உடல் நலம், சொத்துக்கள் மற்றும் வாழ்வு முறையில் அபாயத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.
(ii) அத்தயாரிப்புகள் நுகர்வோரின் நலனுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாக இருக்கலாம்.
(iii) சிறந்த உதாரணமாக உணவு சேர்க்கைகள், நிறமிகள், உணவுப்பாதுகாப்பு இரசாயனங்கள் ஆகியவை ஆகும்.
(iv) உடல்நலக் கோளாறுகள் மற்றும் ஆரோக்கிய அபாயங்கள் எழும் வாய்ப்புகள் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும் அல்லது முற்றிலும் குறைக்கப்பட வேண்டும்.
(v) உணவுகள் மற்றும் மருந்துகள் நுகர்வோரின் உயிரைக் காப்பாற்றுவதாகவும் உயிருக்கு பாதுகாப்பு அளிப்பதாகவும் இருக்க வேண்டும்.
(vi) இன்றைய சூழலில் தற்போதைய சட்டங்கள் பாதுகாப்பில்லாத பொருட்களை தயாரிப்பதோ அல்லது விற்பனை செய்வதோ கூடாது என்ற கடமை விற்பனையாளர்களுக்கும் மற்றும் உற்பத்தி செய்பவர்களுக்கும் உள்ளது.
13.
நிவாரணம் காணும் உரிமை Right to seek Redressal
(i) நிவாரணம் காணும் செயல் முந்தைய நடவடிக்கைக்கு மேலே உள்ளது. புகார்களும் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளும் கேட்கப்பட வேண்டியவை அல்ல.
(ii) ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய காலத்திற்குள் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
(iii) நுகர்வோரின் புகார்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும் குறைதீர்ப்பு செயலினால் நுகர்வோர் நம்பிக்கை அதிகரிக்கும் மற்றும் வாங்குபவர்களுக்கும் நியாயம் கிடைக்கும்.
(iv) ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் உண்மையான கூற்றுகளுக்கு நியாயமான மற்றும் உறுதியான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
14.
நுகர்வோரியலின் முக்கியத்துவம்:
(i) நுகர்வோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களை ஒருங்கிணைத்தல்.
(ii) நியாயமற்ற வணிக நடைமுறைகளை எதிர்த்தல்
(iii) சுரண்டல்களிலிருந்து பாதுகாத்தல்
(iv) அரசின் கவனத்தை ஈர்த்தல்
(v) நுகர்வோர் பாதுகாப்பு விதிகளை திறம்பட நடைமுறைப்படுத்தல்
(vi) முழுமையான மற்றும் சமீபத்திய தகவல்களை தருதல்
(vii) சமூகவிரோத நடவடிக்கைகளை எதிர்த்தல்
15.
(i) சில சூழ்நிலைகளில் வணிகர்கள் தங்களின் வணிக நிறுவனங்களின் சரக்குகளை இருப்பு வைக்கும் இடங்களில் போதுமான அல்லது தேவைக்கு அதிகமான அளவு சரக்குகளை இருப்பு வைத்திருந்தாலும் கூட தங்கள் கடைகளின் முகப்பில் இருப்பு இல்லை எனும் பெயர்ப் பலகையை வைக்கின்றனர்.
(ii) இத்தகைய சூழ்நிலைகளில் நுகர்வோர் தங்களின் தவிர்க்க இயலாத தேவையின் அடிப்படையில் அப்பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
(iii) இதன் மூலம் வணிகர்கள் நேர்மையற்ற முறையில் பெருலாபம் ஈட்டுகின்றனர். திரையரங்குகளில் அரங்கம் நிறைவு (House full) என்னும் பெயர்ப்பலகை மாட்டப்பட்ட பின்னும் கள்ளச்சந்தையில் அதிக விலைக்குத் தாராளமாக அனுமதி சீட்டுகள் (Tickets) கிடைக்கின்றன.
16.
(i) இந்திய ஒப்பந்தச் சட்டம், 1872.
(ii) பொருட்கள் விற்பனைச் சட்டம், 1930
(iii) வேளாண்பொருட்கள் தரப்படுத்துதல் மற்றும் விற்பனைச் சட்டம், 1937.
17.
| மின் சந்தைப்படுத்துதல் E-Marketing | பாரம்பரிய சந்தைப்படுத்துதல் Traditional Marketing |
| பொருள்கள் / சேவைகளை மிக விரைவாக குறைந்த செலவில் மேம்படுத்த முடியும். | இம்முறையில் மிக தாமதமாகவும், அதிக செலவிலும் மட்டும் பொருள், சேவையை மேம்படுத்த முடியும். |
| உலக அளவில் மிக விரைவில் மிக எளிதாக பொருள்களை மேம்படுத்தி சந்தையிட முடியும். | இம்முறையில் அவ்வளவு எளிதாக உலகளவில் பொருள்களை மேம்படுத்த முடியாது. காலமும், செலவும் அதிகமாகும். |
| வணிக நிறுவனங்கள் மிகக் குறைந்த அளவு மனித வளத்துடன் தொழிலை விரிவுபடுத்தலாம். | இம்முறையில் தொழிலை விரிவுபடுத்த அதிக மனித வளம் தேவைப்படுகிறது. |
| இம்முறையில் ஆண்டு முழுவதும் வாரம் 7 நாட்கள் 24 மணி நேரமும் குறைந்த மனித சக்தியுடன் சந்தையிட முடியும். | இம்முறையில் ஆண்டு முழுவதும் வாரம் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் சந்தையிடுவது இயலாத காரியம். |
18.
நுகர்வோரின் கடமைகள்:
(i) தரமான பொருட்களை நியாயமான விலையில் வாங்குதல் (Buying quality products at reasonable price) :
பொருட்களைப் பற்றிய முழுமையான அறிவுடன் அதன் விலை, தரம் மற்றும் அதன் அனைத்து விவரங்களையும் அந்த பொருளை வாங்குவதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய நுகர்வோரின் முக்கியப் பொறுப்பாகும். நுகர்வோர் பொருளை பற்றிய அறிவை தனது சொந்த அனுபவத்திலோ அல்லது அந்த பொருளை பயன்படுத்திய மற்றவர்களிடமோ அல்லது இணையதளம் மூலமாகவோ பெற்றிருக்க வேண்டும்.
(ii) பொருட்களின் எடையையும் மற்றும் அளவினையும் உறுதி செய்தல் :
வியாபாரிகள் பெரும்பாலும் நியாயமற்ற எடைகள் மற்றும் மோசடி நடவடிக்கைகள் மூலம் நுகர்வோரை ஏமாற்றுகிறார்கள். நுகர்வோர் என்பவர் சரியான எடை மற்றும் சரியான அளவிலான பொருட்களை பெறுகிறோம் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
(iii) விவர அட்டையை கவனமாக படித்தல்:
பொருளின் மீது ஒட்டப்பட்டுள்ள விவர அட்டையை முழுமையாக படிக்க வேண்டியது நுகர்வோரின் கடமையாகும். பொருளின் விவரங்கள் முழுமையாகவும் சரியாகவும் மற்றும் உண்மையாகவும் இருக்க வேண்டும்.
(iv) தவறான மற்றும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் :
விற்பனையாளர்கள் பெரும்பாலும் பொருட்கள் மீதான கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்கிறார்கள். எனவே, இத்தகைய மோசடி விளம்பரங்களால் தவறாக புரிந்துகொண்டு ஏமாறாமல் இருப்பதே நுகர்வோரின் தலையாய கடமையாகும்.
(v) தவறான திட்டங்கள் :
பெரும்பாலும் விளம்பரங்கள் கவர்ச்சிகரமாகவும், உணர்ச்சிகரமாகவும் பயன்படுத்தப்படுகின்றன. அவைகள், ஏமாற்றும் வகையிலும் தவறாகவும் இருந்து நுகர்வோர்களை வழி நடத்தலாம். நுகர்வோர் எப்போழுதும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மீது எச்சரிக்கையாகவும், தவறான விளம்பரங்களை தவிர்க்கவும் வேண்டும்.
(vi) ரொக்க ரசீதை உறுதி செய்தல் :
பொருட்களுக்கான இடாப்புடன் ரொக்க ரசீது உத்தரவாத அட்டை போன்றவற்றை பெறுவது நுகர்வோரின் சட்டப்படியான கடமையாகும். பொருட்களை வாங்கியதற்கான ரொக்க ரசீதையும் உத்தரவாத அட்டையையும் கேட்டுப் பெறுவதே நுகர்வோரின் முக்கிய கடமையாகும்.
19.
பின்வருபவை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் நோக்கங்கள் ஆகும்
1. நுகர்வோரின் உயிருக்கும் உடமைக்கும் ஊறு விளைவிக்கும் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு எதிராக நுகர்வோரைப் பாதுகாத்தல்.
2. நுகர்வோர் வாங்கும் பொருட்களின் தரம், அளவு, சுத்தத்தன்மை, விலை மற்றும் தரநிலை குறித்த உண்மையான மற்றும் முழுமையான தகவல்களை நுகர்வோருக்கு அளித்தல்.
3. வணிகர்களின் நியாயமற்ற வணிக நடைமுறைகளிலிருந்து நுகர்வோரைப் பாதுகாத்தல்.
4. சுரண்டல் நடைமுறைகளுக்கு எதிராக தீர்வுகளை தேட நுகர்வோருக்கு அதிகாரமளித்தல்.
5. நுகர்வோர்களின் உரிமைகள் மற்றும் கடமைகளை அறிந்து கொள்ளச் செய்தல்.
6. நல்ல தரமான பொருட்களை சரியான விலைகளில் கிடைக்கச் செய்வதன் மூலம் அவர்களின் சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்துதல்.
7. நுகர்வோர் தங்களது உரிமைகளை நிலைநாட்ட நுகர்வோர் குழுக்கள் மற்றும் பிற அதிகார அமைப்புகளை ஏற்படுத்துதல்.
20.
(i) அதிக விலைக்கு விற்றல் :
விற்பனையாளர்கள் மற்றும் சேவைகளை அளிப்பவர்கள் தாங்கள் வழங்கும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு அதன் தரத்திற்கு ஈடான விலையைக் காட்டிலும் கூடுதலான விலையை அளிப்பதற்கு பல்வேறு தருணங்களில் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.
(ii) கலப்படம் :
கலப்படம் என்பது உணவுப் பொருட்களில் விரும்பத்தகாத பதிலிப் பொருட்களைச் சேர்ப்பதாகும். கலப்படப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு உடல்ரீதியாகவும், பணரீதியிலும் கடுமையான இழப்புகள் ஏற்படுகிறது. கலப்படம் நுகர்வோரது உடல்நலத்தை பெரிதும் பாதிப்பதால், அது ஒரு மன்னிக்க முடியாத குற்றமாகும்.
(iii) போலியான பொருட்கள் :
மக்கள் மத்தியில் பிரபலமடைந்த வணிகக் குறியுடைய பொருட்களுக்கு அதே போன்ற போலியான பொருட்கள் சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்டு மோசடியாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தானியங்கி (ஆட்டோமொபைல்) வாகன உதிரிபாகங்கள், பிளேடுகள், கைக்கடிகாரங்கள், பேனாக்கள், வானொலிப்பெட்டிகள், மருத்துவ மருந்துப் பொருட்கள், நகைகள், துணிகள் மற்றும் ரூபாய் நோட்டுக்கள் கூட கள்ளத்தனமாக, போலியாகத் தயாரிக்கப்பட்டு இமயம் முதல் குமரி வரை எங்கும் நீக்கமற தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
(iv) செயற்கையான பற்றாக்குறை:
சில சூழ்நிலைகளில் வணிகர்கள் தங்களின் வணிக நிறுவனங்களின் சரக்குகளை இருப்பு வைக்கும் இடங்களில் போதுமான அல்லது தேவைக்கு அதிகமான அளவு சரக்குகளை இருப்பு வைத்திருந்தாலும் கூட தங்கள் கடைகளின் முகப்பில் இருப்பு இல்லை எனும் பெயர்ப்பலகையை வைக்கின்றனர். இத்தகைய சூழ்நிலைகளில் நுகர்வோர் தங்களின் தவிர்க்க இயலாத தேவையின் அடிப்படையில் அப்பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
(v) தரக்குறைவு :
கட்டுமானம் செய்து முத்திரையிடப்பட்ட கொள்கலன்களை திறந்தால் அதில் அடைக்கப்பட்டுள்ள பொருட்கள் தரம் குறைந்ததாகவும், கெட்டுப்போனதாகவும், நிகர எடை கொள்கலனில் குறிப்பிடப்பட்டுள்ளதை விட குறைவாக இருப்பதையும் காணமுடிகிறது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards