12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test

1.
எப்பொழுது இயக்குனர் தனது அலுவலகத்திலிருந்து நீக்கப்படுகிறார்.
2.
தொழில் முனைவோர் மற்றும் மேலாளர் இவர்களை வேறுபடுத்தி காட்டுக. (ஏதேனும் 3)
3.
உலகமயமாக்கலின் ஏதேனும் மூன்று தாக்கங்களை எழுதுக.
4.
மின் வணிகத்தில் B2B மற்றும் B2C என்றால் என்ன?
5.
காலத்தின் அடிப்படையில் சந்தையினை எப்படி வகைப்படுத்துவாய்?
6.
சந்தையில் என்னென்ன பொருட்களை சந்தையிட முடியும் என்பதை தெரிவிக்கவும்.(ஏதேனும் 3)
7.
புறத்தோற்றமற்ற பத்திரங்கள் என்றால் என்ன?
8.
தேசிய பங்குச் சந்தை விளக்குக.
9.
கருவூல இரசீதின் பொது இயல்புகள் யாவை? (ஏதேனும் 3)
10.
மேலாண்மை கலையா? அறிவியலா?
11.
பலவகையான நிறும கூட்டங்களை விளக்குக.
12.
இயக்குனரின் கடமைகள் என்ன?
13.
பல்வேறு மேலெழுத்திடும் முறையின் பிரிவுகளை விவரிக்க.
14.
காசோலை மற்றும் மாற்றுச்சீட்டினை வேறுபடுத்துக. (ஏதேனும் 5)
15.
இந்திய பொருளாதாரத்தில் எல்பிஜி (LPG)யின் தாக்கத்தை விளக்குக.
16.
நவீன சந்தையிடுகையில் கையாளப்படும் நவீன சந்தையிடுதல் உத்திகளை விளக்கு.
17.
நுகர்வோரின் கடமைகளை விளக்குக? (ஏதேனும் 5)
18.
சந்தையிடுகை கலவையின் கூறுகளை குறிப்பிடுக.
19.
பணிவழி பயிற்சிக்கும், பணிவழியற்ற பயிற்சி முறைக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை? (ஏதேனும் 5)
20.
பணியமர்த்தல் கோட்பாடுகளை விவரி.
21.
செபியின் பணிகளை விவரி.(ஏதேனும் 5)
22.
பங்குச் சந்தையின் பயன்களை விவரி.
23.
குறியிலக்கு மேலாண்மையின் முக்கிய நன்மைகள் யாவை? (ஏதேனும் 5)
24.
அறிவியல் பூர்வ மேலாண்மையின் கோட்பாடுகள் யாவை?
25.
சிறப்பு தீர்மானம் ______ க்கு தேவைப்படுகிறது.
கடனீட்டுப் பத்திரத்தை மீட்க
பங்காதாயம் அறிவிக்க
இயக்குநரை பணியமர்த்த
தணிக்கையாளரை பணியமர்த்த
26.
எந்த இயக்குநர் நிதி நிறுமத்தால் நியமிக்கப்படுகிறார்?
பெயரளவு
கூடுதல்
மகளிர்
நிழல்
27.
பங்குத் தொகுதியை _______ நிறுமம் வெளியிடும்.
பொது
தனியார்
ஒரு நபர்
சிறு
28.
கீழ் குறிப்பிடப்பட்டுள்ள எந்தெந்த பண்புகள் தொழில் முனைவோர்க்கு உரித்தானவை?
துணிகர உணர்வு
நெளிவு சுளிவு
தன்னம்பிக்கை
அனைத்தும்
29.
மாற்றுப் பெறுநர் யார்?
ஆவணத்தை மாற்றுபவர்
யார் பெயரில் மாற்றப்படுகிறதோ அவர்
பணம் பெறுபவர்
மேற்கூறிய எவரும் இல்லை
30.
தூய சில்லரை விற்பனையாளர்________ என அழைக்கப்படுபவர்
சந்தை உருவாக்குநர்கள்
நடவடிக்கை தரகர்கள்
வியாபாரிகள்
முகவர்கள்
31.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள்
01.01.1986
01.04.1986
15.04.1987
15.04.1990
32.
உடனடிச் சந்தை எதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது.
பொருட்கள்
பரிவர்த்தனை
ஒழுங்குமுறை
காலம்
33.
பண்டங்கள் மற்றும் பணிகளை பணத்தின் அடிப்படையில் மாற்றம் செய்பவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
விற்பனையாளர்
சந்தையிடுகையாளர்
வாடிக்கையாளர்
மேலாளர்
34.
நிரப்பப்படாத விண்ணப்பத்தின் நோக்கம் ____ பற்றிய தகவல்களை சேகரிப்பதற்காகும்.
நிறுமம்
விண்ணப்பதாரர்
வினா நேர்காணல் அட்டவணை
போட்டியாளர்கள்
35.
மனித வள மேலாண்மை ____________ உறவினை நிர்ணயிக்கிறது.
அக, புற
முதலாளி, தொழிலாளி
உரிமையாளர், வேலைக்காரன்
முதல்வர், முகவர்
36.
இந்தியாவில் மூலதனச் சந்தையை கட்டுப்படுத்த எந்த ஆண்டு செபி அமைக்கப்பட்டது?.
1988
1992
2014
2013
37.
தன் வணிகர் பங்குச்சந்தையில் ஈடுபடுவது
அவர்களின் வாடிக்கையாளர்களுக்காக
தனது சொந்த நடவடிக்கைகளுக்காக
மற்ற தரகர்களுக்காக
மற்ற உறுப்பினர்களுக்காக
38.
பணச்சந்தையில் இடர் என்பது ______
அதிகம்
சந்தை இடர்
குறைந்த கடன் மற்றும் சந்தை இடர்
நடுத்தர இடர்
39.
முதல் நிலைச் சந்தை ________ எனவும் அழைக்கப்படுகிறது.
இரண்டாம் நிலைச் சந்தை
பணச் சந்தை
புதிய வெளியீடுகளுக்கான சந்தை
மறைமுக சந்தை
40.
பின்வருவனவற்றுள் எது ஒப்பீடு செய்ய உதவுகிறது?
திட்டமிடுதல்
ஒழுங்கமைத்தல்
பணியமர்த்துதல்
கட்டுப்படுத்துதல்
41.
"பகராள்" சிறு குறிப்பு வரைக.
42.
மேலாண்மை இயக்குநர் என்று யாரை அழைக்கிறோம்?
43.
உரிமைப் பங்குகள் என்றால் என்ன?
44.
நிறுமம் உருவாக்கத்தில் உள்ள நான்கு நிலைகள் யாவை?
45.
வேளாண் தொழில் முனைவோர் என்பவர் யார்?
46.
உட்புறச் சூழல் என்றால் என்ன?
47.
பணியமர்த்தல் என்றால் என்ன?
48.
இந்தியாவில் பங்கு வணிகநேரம் என்றால் என்ன?
49.
அரசுப் பத்திரங்கள் சந்தை என்றால் என்ன?
50.
திட்டமிடுதல் என்றால் என்ன?
51.
அ. வலைதளக் கடை ஒரு நுகர்வோருக்கும், வணிகக் கடைக்கும் நேரடி வணிக முறையாகும்.
ஆ. வலைதளக் கடை மூலம் இறுதி நுகர்வோருக்கு மின் இணையம் வழியாக பொருள் அல்லது சேவைகளை பராமரிப்பு செய்வது ஆகும்.
இ. வலைத்தளக் கடையை மெய்நிகர் கடை எனவும் அழைக்கலாம்.
ஈ. வாடிக்கையாளர் கடன் அட்டை அல்லது பிற முறைகளில் பணம் செலுத்தி பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
52.
அ. நவீன மேலாண்மை - ஹென்றி ஃபோயல்
ஆ. மேலாண்மை பயிற்சியியல் - F.W. டேலர்
இ. மேலாண்மை மேலாளர் - பீட்டர் F. ட்ரக்கர்
ஈ. அறிவியல்பூர்வ மேலாண்மை - லூயிஸ் A. ஆலன்
53.
1. திட்டமிடுதல் என்பது மேலாண்மை செயல்பாடுகளில் கடைசியானது.
2. பொருத்தமான நபர்களை பொருத்தமான வேலைக்கு அமர்த்துவது இயக்குவித்தல் ஆகும்.
3. செயலூக்கமளித்தல் மூலமே நிறுவனத்தின் நோக்கங்களை அடைய முடியும்.
4. ஒருங்கமைத்தல் என்பது மேலாண்மையின் துணைச் செயல்பாடுகளுள் ஒன்று.
54.
உறுதிப்படுத்துதல் (A): சிறு முதலீட்டாளர்களின் சேமிப்புகளை பெரிய முதலீடாக மாற்றும் நிதி நிறுவனம் பரஸ்பர நிதி ஆகும்
காரணம் (R): "சிறு துளி பெரு வெள்ளம்"
அ) (A) மற்றும் (R) தவறானது
ஆ) (A) சரியானது ஆனால் (R) தவறானது
இ) (A) மற்றும் (R) சரியானது, (A) ஐ (R) விளக்குகிறது
ஈ) (A) மற்றும் (R) சரியானது (A) ஐ விளக்கவில்லை
1.
(i) பங்குதாரர்களால் நீக்கம் - பிரிவு(169)
1. இயக்குனர்கள் பின்பற்றிய கொள்கைகள் பொருத்தமானதல்ல என பங்குதாரர்கள் கருதினால்,
2. சிறப்பு அறிவிப்பை வழங்குவதன் மூலமும், சாதாரண தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலமும் இயக்குனரின் பதவிக்காலம் முடியும் முன் இயக்குனரை பதவியிலிருந்து நீக்கலாம்.
(ii) மத்திய அரசால் நீக்கப்படுதல் :
1. பொறுப்புகளை நிறைவேற்றுவதில் மோசடி.
2. விவேகமான வர்த்தக நடைமுறையின்மை.
3. கடுமையான வியாபார பாதிப்பு.
4. பொது நலனுக்கு சேதமளிக்கும் வகையில் நிர்வாகம் நடத்தப்படுவது.
போன்ற காரணங்களால் மத்திய அரசு இயக்குனரை நீக்கலாம்.
(iii) நிறும /கம்பெனி சட்ட வாரியத்தால் நீக்கப்படுதல் :
ஒரு இயக்குனர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார் என்று கம்பெனி சட்டவாரியத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டால் கம்பெனி சட்ட வாரியத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டால் கம்பெனி சட்ட வாரியத்தால் இயக்குனர் நீக்கப்படலாம்.
2.
| வ.எண் | அடிப்படை | தொழில் முனைபவர் | மேலாளர் |
| (i) | நோக்கு | ஒரு அமைப்பினை தேர்ந்தெடுத்து தன்னுடைய வினையை துவக்குவது. | துவக்கிய வினையில் செவ்வனே பணியாற்றுவது இவரின் நோக்கு. |
| (ii) | தகுநிலை | தொழில் முனைபவர் தான் துவங்கிய அமைப்பின் உரிமையாளர். | மேலாளர் ஊதியம் பெறும் உழைப்பாளி. |
| (iii) | இடர் ஏற்றல் | தொழில் முனைபவர் தான் துவங்கிய வினையினால் ஏற்படும் இடர்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மையை தாங்குபவர். |
மேலாளர்கள் வினையின் இடரில் பங்கு பெறுவது இல்லை. மாறாக இடர் ஏற்படும்போது வேறு நிறுமத்திற்கு தாவி விடும் பருவகால நண்பர்கள். |
| (iv) | வெகுமதி | தொழில் முனைபவர் தன்னுடைய இடர் ஏற்பிற்கு வெகுமதியாக இலாபத்தை பெறுகின்றனர். | மேலாளர்கள் இலாபத்தில் பங்கு பெறுவது இல்லை. ஊதியம் மேல் ஊதியம், படிகள், ஊக்க ஊதியம் பெறுபவர்கள். |
| (v) | ஆற்றல் | தொழில் முனைபவர்கள் படைப்பாற்றல். உள்ளுணர்வு மற்றும் எதையாவது புதியதாக செய்ய வேண்டும் என்ற உந்துதல் பெற்றவர்கள். | மேலாளர்கள் நல்ல கோட்பாட்டு அறிவும், மனித உறவு திறனும் பெற்றவர்களாக இருக்கவேண்டும். |
3.
(i) குறைந்த இயக்கச் செலவுகளின் அடக்கம் மற்றும் புதிய மூல பொருட்கள் மற்றும் கூடுதல் சந்தை அனுகல் மூலம் பெரிய நிறுவனங்கள் போட்டி திறனை பெறுகின்றன.
(ii) பன்னாட்டு நிறுவனங்கள் (MNC's) பொருட்களை தயாரிக்க வாங்க மற்றும் பொருட்களை விற்பனை செய்ய முடிகின்றது.
(iii) உலகமயமாக்கல் நுகர்வோர் பொருட்களின் சந்தையை வெகுவாக (ஏற்றத்துடன்) பெருக்கிட உதவும் வாய்ப்பை உருவாக்கலாம்.
4.
B2B
உற்பத்தியாளருக்கும், மொத்த வியாபாரிகளுக்கும் இடையேயான மொத்த வியாபாரிகளுக்கும், சில்லறை வியாபாரிகளுக்கும் இடையேயான வாங்குதல் மற்றும் விற்றல் வியாபாரங்கள் B2B எனப்படும்.
B2C
உற்பத்தியாளர்களுக்கும், நுகர்வோர்களுக்கும் இடையேயான வணிக நடவடிக்கைகள் B2C எனப்படும்.
5.
(i) மிக குறுகிய கால சந்தை : இவ்வகை சந்தையில் மிக குறுகிய காலத்தில் பயன்படத்தக்க பொருட்கள் மட்டுமே கையாளப்படுகிறது. அதாவது அழுகக்கூடிய தன்மை உடைய பொருட்களான, பால், முட்டை, காய் மற்றும் கனிகள் போன்றவைகள் இத்தகைய சந்தையானது கிராமப்புறங்களில் இன்றளவும் நடைபெறுகிறது.
(ii) குறுகிய கால சந்தை : இத்தகைய சந்தையில் ஒரு சில பொருட்கள் இச்சந்தையில் தேவையை சமாளிப்பதற்கு அளிப்பின் அளவு சரிசெய்யப்படுகிறது. தேவை அளிப்பை விட அதிகமானது.
(iii) நீண்டகால சந்தை : நீடித்து உழைக்க கூடிய பொருட்களை கையாளத்தக்க வகையில் உள்ள சந்தையை இது குறிக்கிறது. இத்தகைய சந்தையில் நீண்ட காலத்திற்கு பயன்படுத்த ஏதுவாக உள்ள நுகர்வு பொருட்கள் மற்றும் சேவைகள் மட்டும் சந்தையிடுகை செய்யப்படுகிறது.
6.
சந்தையில் சந்தையிடக்கூடிய பொருட்கள் :
1. பண்டங்கள் / பொருட்கள் (Goods)
2. பணிகள் / சேவைகள் (Service)
3. அனுபவங்கள் (Experiences)
4. நிகழ்வுகள் (Events)
5. நபர்கள் (Persons)
6. இடம் (Place)
7. கடமைகள் (Properties)
8. அமைப்பு (Organisation)
9. தகவல் (Information)
10. கருத்துக்கள் (Ideas)
7.
(i) புறத்தோற்றமற்ற பத்திரங்கள் உருவாக்கம் என்பது நிறுவன பதிவாளரால் காகித வடிவிலான பங்குச் சான்றிதழை அழித்து புறத்தோற்றமில்லாத வகையில் பத்திரங்களாக மாற்றல் என்பதாகும்.
(ii) முதலீட்டாளர்களின் வேண்டுகோளின் பேரில் புறத்தோற்றமற்ற பத்திரங்களாக உருமாற்றம் செய்யப்படுகிறது. முதலீட்டாளர்கள் முதலில் வைப்பக பங்கேற்பாளர்களுடன் (Depository Participant) கணக்கை தொடங்க வேண்டும்.
(iii) 1996 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் தேசிய பங்குச் சந்தை (NSE) முதன்முதலாக புறத்தோற்றமற்ற பத்திரங்கள் வர்த்தகத்தை தொடங்கியது.
(iv) அங்கு ரிலையன்ஸ் நிறுவனம் முதன்முதலாக 100 பங்குகள் விற்பனையில் ஈடுபட்டது. 1997 டிசம்பர் மாதம் மும்பை பங்குச் சந்தை புறத்தோற்றமற்ற பத்திரங்கள் வர்த்தகத்தை தொடங்கியது.
8.
(i) தேசிய பங்குச்சந்தை நவம்பர் 1992 ல் அமைக்கப்பட்டது.
(ii) இது தேசிய அளவில் திரை சார்ந்து இணை வழியாக ஆணை பெரும் வியாபார அமைப்பாகும்.
(iii) இந்த அமைப்பு செயற்கைகோள் இணைப்பு மூலம் நாடு முழுவதும் பரவியுள்ள உறுப்பினர்களிடையே பங்குகளை, பத்திரங்களை வியாபாரம் செய்கிறது.
(iv) கடன் பிரிவு மூலதனப் பிரிவு என்றுள்ளது.
9.
கருவூல இரசீது பின்வரும் பொதுவான இயல்புகளை உடையது. அவை பின்வருமாறு.
1. வெளியிடுபவர்
2. நிதி இரசீது
3. நீர்மைத் தன்மை
4. முக்கிய ஆதாரம்
5. பண மேலாண்மை
10.
1. மேலாண்மை என்பது ஒரு கலையும் அல்ல, அறிவியலும் அல்ல, இரண்டின் தொகுப்பாகும்.
2. மேலாண்மை என்பது அதன் இயல்பின் அடிப்படையில் ஒரு செயலை செய்வதற்கான கலையோ அல்லது ஒரு செயலை பெறுவதற்கான அறிவியலா ஆகும்.
11.
பங்குநர்கள் கூட்டங்கள்: நிறும பங்குநர்களால் நடத்தப்படும் கூட்டங்கள் பங்குனர்கள் கூட்டம் என அழைக்கப்படுகிறது. நிறும பங்குநர் கூட்டங்களை மூன்று வகையாக பிரிக்கலாம்.
(i) சட்டமுறை கூட்டம்: நிறுமச் சட்டப்படி ஒவ்வொரு பொது நிறுமமும் தொழில் தொடங்கிய தேதியிலிருந்து ஒரு மாதத்திலிருந்து 6 மாதத்திற்குள் பங்குனர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் இதனை சட்டமுறை கூட்டம் என அழைக்கப்படுகிறது.
(ii) ஆண்டுப் பொதுக்கூட்டம் : ஒவ்வொரு ஆண்டும் நிறுமத்தில் இயல்பான நடவடிக்கை குறித்து ஆலோசிக்க கூட்டப்படும் கூட்டம் ஆண்டு பொதுக்கூட்டம் ஆகும்.
(iii) சிறப்புக் கூட்டம்: சட்டமுறைக் கூட்டம் மற்றும் ஆண்டு பொதுக் கூட்டம் ஆகியவை நிறுமத்தின் இயல்பான சாதாரண கூட்டங்கள் ஆகும்.
(iv) இயக்குநர் அவைக் கூட்டம் : நிறுமத்தை நிர்வகிக்கும் பொறுப்பு இயக்குநரவையிடம் உள்ளதால் இயக்குநர்கள் அடிக்கடி கூடி பல வியாபார நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க வேண்டும். இதற்காக இயக்குநரவையால் கூட்டப்படும் கூட்டங்கள் இயக்குநரவை கூட்டங்கள் ஆகும்.
(v) வாரியக் குழுக் கூட்டம்: பட்டியலிடப்பட்ட நிறுமமும், ₹10 கோடி அல்லது அதற்கு மேல் பங்கு முதலுடைய ஒவ்வொரு பொது நிறுமம் தணிக்கை குழு கூட்டத்தை கூட்ட வேண்டும். இக்கூட்டம் ஆண்டுக்கு குறைந்தது நான்கு முறை கூட்ட வேண்டும்.
சிறப்புக் கூட்டங்கள்:
(i) வகுப்பு கூட்டம்(Class Meeting) Meetings of Particular Share or Debenture Holders
ஒரு குறிப்பிட்ட வகையான பங்குகள் அல்லது கூட்டங்கள் குறிப்பிட்ட வகையான கடனீட்டுப்பத்திரங்களும், கூட்டப்படும் கூட்டம் வகுப்பு கூட்டம் ஆகும். சாதாரண பங்குகள் (எ) முன்னுரிமை பங்குகள் கூட்டப்படும் கூட்டத்தை கூறலாம்.
(ii) கடனீந்தோர் கூட்டம் : நிறுமக் கூட்டங்களை போல இது ஒரு நிறும கூட்டம் அல்ல இருப்பினும், இது ஒரு புதிய கடன் கொள்கையை அறிமுகம் செய்யும் போது அல்லது கடனீந்தோர்கள் தொடர்பான சில வழக்குகளை பேசி முடிவு எடுக்கவும், கடனீந்தோர்களுடன் சில ஒப்பந்தங்கள் மேற்கொள்ளவும் இவ்வகை கூட்டங்கள் கூட்டப்படுகிறது.
12.
ஒருங்கிணைந்த கடமைகள் :
1. ஆண்டு கணக்குகளின் மீது ஒப்புதல் அளித்து அதற்கு அதிகாரப்பூர்வ சான்று வழங்குதல்.
2. பங்குதாரர்களுக்கு அளிக்கப்படும் இயக்குனர் அறிக்கையில், காப்புநிதிக்கு மாற்றம் செய்த தொகை, உபரி தொகையை முதலீடு செய்தல், கடன் வாங்குதல் போன்றவற்றை தெளிவுபடக் கூற வேண்டும்.
3. நிறுமத்தின் முதல் தணிக்கையாளரை நியமனம் செய்தல்,
4. இயக்குனர் கூட்டம் மற்றும் பங்குதாரர் கூட்டம் பற்றி அறிவிப்பு அளித்தல் மற்றும் கூட்டத்தை நடத்துதல்,
5. இயக்குனர் குழு கூட்டத்தில் தீர்மானங்களை முன்மொழிதல் அல்லது நிறைவேற்றுதல்.
பொதுவான கடமைகள் :
1. கம்பெனியின் நோக்கத்தை நிறைவேற்றும் மற்றும் அடையும் பொருட்டு புதிய கொள்கைகளை வகுத்தல்.
2. செயல்முறை விதிகள் அனுமதி வழங்கியிருப்பின் நிறும நலனுக்காக எந்த ஒரு குழுவிற்கும் அதிகாரத்தை ஒப்படைக்கும் உரிமை.
3. நிறும வளர்ச்சியை சரிபார்த்தல், புதிய கொள்கைகளை நடைமுறைப்படுத்தல் மற்றும் தொழிலாளிகளுக்கு தேவையான கட்டளைகளை வழங்குதல்.
4. தங்களுக்கு கீழ் மேலாண்மை இயக்குனர், மேலாளர்,செயலர் மற்றும் இதர பணியாளர்களை நியமனம் செய்தல்.
5. நிறும செயல்முறை விதிகளுக்குட்பட்டு செயல்படுதல்,
6. நிறும நோக்கத்தை அடையும் பொருட்டு நல்ல எண்ணத்துடன் பணியாற்றுதல்.
7. தேவையான அக்கறை மற்றும் அர்ப்பணிப்புடன் தன்னுடைய கடமைகளை உரிய நேரத்தில் செயல்படுத்துதல்.
குறிப்பிடத்தக்க கடமைகள் :
1. இயக்குனர் தங்களின் பெயர், முகவரி மற்றும் தொழில் பற்றிய விவரங்களை அளிக்க வேண்டும்.
2. தான் வைத்திருக்கும் பங்குகள் பற்றிய விவரங்களை அளிக்க வேண்டும்.
3. தான் பதவியேற்ற இரண்டு மாத காலத்திற்குள் தேவையான குறைந்தளவு பங்குகளை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
4. தகவலறிக்கை வெளியிடுதல், குறைந்தபட்ச சந்தாவை நிர்ணயம் செய்தல்.
5.வெளியிடப்பட்ட தகவலறிக்கையில் எந்தவித தவறான கருத்துக்களும் / தகவல்களும் இல்லை என உறுதி செய்யும் கடமை.
6. தகவலறிக்கை சட்டத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் கொண்டுள்ளதா என உறுதி செய்யும் கடமை.
7. நிறும பதிவாளரிடம் தகவலறிக்கையை சமர்ப்பிக்கும் முன்னர் அதில் கையொப்பமிட்டிருக்க வேண்டும்.
8. பங்கு விண்ணப்ப பணம் அட்டவணை வங்கியில் போடப்பட்டுள்ளதா என சரிபார்க்கும் கடமை.
9. பங்கு ஒதுக்கீடு தொடர்பான பட்டியலை நிறும பதிவாளருக்கு சமர்ப்பிக்கும் உரிமை.
10. அறிவிக்கப்பட்ட பங்காதாயத்தை செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யும் உரிமை.
11. பங்குகளை பறிமுதல், ஒறுப்பிழப்பு மற்றும் மாற்றவும் உரிமை உண்டு.
12. சட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு அனைத்து செயல்களையும் குறிப்பிட்ட காலத்தில் செய்து முடிக்கும் கடமை.
13. சட்டத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்து செயல்களையும் குறிப்பிட்ட காலத்தில் செய்து முடிக்கும் கடமை.
14. அசாதாரண பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு விடும் கடமை.
15. கம்பெனியின் சட்டபூர்வமான மற்றும் ஆண்டு பொதுக்கூட்டத்தைக் கூட்ட அழைப்பு விடுக்கும் கடமை.
13.
1. வெற்று மேலெழுதுதல்:
யாருக்காக மேலெழுப்பப்படுகிறதோ அவர் பெயரை குறிப்பிடாமல் தமது கையொப்பத்தை மட்டும் இட்டு மற்றவரிடம் தந்து விடுதல்.
எ.கா: பல்லவன் என்பவருக்கு ஒரு காசோலை வரையப்படுகிறது அவர் அதை பாண்டியன் என்பவருக்கு மாற்றித்தர நினைக்கிறார். அப்போது பாண்டியன் பெயரை குறிப்பிடாமல் பல்லவன் என தனது கையொப்பத்தை இட்டால் போதுமானது.
2. சிறப்பு மேலெழுதல்:
மேலெழுதுபவர் ஒரு குறிப்பிட்ட நபருக்கோ அல்லது அவரது ஆணை பெற்றவருக்கோ செலுத்தும்படி கட்டளை எழுதி தமது கையொப்பத்தை இடுதல்.
எ.கா: தனக்கு அல்லது பாண்டியனுக்கு செலுத்துக என காசோலையில் பல்லவன் கையொப்பமிட்டு மேலெழுதுவது.
3. நிபந்தனைக்குட்பட்ட மேலெழுதுதல்:
(i) காசோலை என்பது ஒரு நிபந்தனையற்ற ஆவணம்.
(ii) எனினும், மேலெழுதுபவர் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி நடந்தால் தான் மேலெழுதப் பெறுநர் பணம் பெற முடியும் என்ற நிபந்தனை விதித்து மேலெழுதுவது நிபந்தனைக்குட்பட்ட மேலெழுதல் எனப்படும்.
எ.கா: பாண்டியன் டெல்லியிலிருந்து 3 மாத காலத்திற்குள் திரும்பிவிட்டால் பணம் செலுத்துக என பல்லவன் கையொப்பமிட்டு மேலெழுதுவது.
4. வரையறுத்த மேலெழுதுதல்:
மேலெழுதப்பட்ட ஆவணத்தை வேறு யாருக்கும் மாற்ற முடியாதவாறு செய்யப்படும் மேலெழுதுதல்
எ.கா: பாண்டியனுக்கு மட்டும் கொடு என மேலெழுதுவது பல்லவன் கையொப்பமிடுவது.
5. பொறுப்பு தவிர் மேலெழுதுதல்:
மேலெழுதுபவர் ஆவணத்தின் மீது எழுதப்படும் வெளிப்படையான வார்த்தைகளால் தனது பொறுப்பினை தவிர்த்து விடுதல்.
எ.கா: பாண்டியன் அல்லது அவரது ஆணை பெற்றவருக்கு என் பொறுப்பு இல்லாமல் கொடுக்கவும் என பல்லவன் மேலெழுதுவது.
6. கடமை தவிர் (அ) உரிமைதவிர் மேலெழுதுதல்:
மேலெழுதப்பட்ட ஆவணம் மறுக்கப்படும் பொழுது, மறுக்கப்பட்ட விவரத்தை தன்னிடம் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என தனது உரிமையை விட்டுக் கொடுப்பது.
எ.கா: பாண்டியனுக்கு அல்லது அவரது ஆணை பெற்றவருக்கு கொடுக்கவும் அவமதிப்பு அறிவிப்பு தேவையில்லை என பல்லவன் மேலெழுதுவது.
பகுதி மேலெழுதுதல்:
மாற்றுமுறை ஆவணத்தில் குறிக்கப்பட்டுள்ள தொகையில் ஒரு பகுதியை மட்டும் மாற்றுமுறை மேலெழுதப்படுவது.
எ.கா: மாற்றுச் சீட்டின் தொகை ரூ.1000 த்தில் பாண்டியனுக்கு செலுத்த வேண்டியது ரூ.300 மீதமுள்ள ரூ.700 ஐ மேலெழுதி வேறு யாருக்கும் மாற்றுவது.
14.
| வ.எண் | வேறுபாடு | மாற்றுச்சீட்டு | காசோலை |
| 1 | வரையப்படுவது | மாற்றுச் சீட்டு வங்கி உட்பட ஒரு குறிப்பிட்ட நபர் மீது வரையப்படுவது. | ஒரு குறிப்பிட்ட வங்கியர் மீது வரையப்படுவது. |
| 2 | செலுத்தப்படுவது | கேட்டவுடனோ அல்லது குறிப்பிட்ட காலமுதிர்வின் போதோ தருமாறு எழுதப்படுவது. | எப்போதும் கேட்டவுடனே பணம் கொடுக்குமாறு எழுதப்படுவது. |
| 3 | ஏற்பு | கால மாற்றுச்சீட்டைப் பொறுத்தவரையில் அதை எழுதப் பெற்றவர் ஏற்க வேண்டும். | காசோலையை ஏற்பு செய்திட தேவையில்லை. |
| 4 | சலுகை நாள் | மாற்றுச்சீட்டின் முதிர்வு காலம் முடிந்த நாளிற்கு பின் பணம் தர மூன்று சலுகை நாட்கள் வழங்கப்படுகிறது. | காசோலைக்கு பணம் தர வங்கிக்கு சலுகை நாட்கள் தரப்படுவதில்லை. |
| 5 | படிகள் | அந்நிய மாற்றுச்சீட்டு மூன்று படிகள் தயாரிக்கப்படுகிறது. | காசோலைக்கு பணம் பெற படிகள் எடுக்க வேண்டிய அவசியமில்லை |
| 6 | வருவாய்த்தலை | மாற்றுச்சீட்டில் வருவாய்த்தலை அதன் மதிப்பிற்கு ஏற்ப ஒட்ட வேண்டும். | காசோலையில் வருவாய்த்தலை ஒட்ட வேண்டியதில்லை. |
15.
i) புதிய (LPG) யின் தாக்கத்தை ஒப்பந்தங்களை அறிமுகம் செய்வது.
ii) வெளிநாட்டு முதலீடுகளை கவர்ந்திழுத்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியது.
iii) முற்றுமை மற்றும் வணிக தடை சட்டம் (MRTP ACT) 1969 திருத்தியமைக்கப்பட்டது.
iv) கட்டுப்பாடுகளை அகற்றுதல்
v) பன்னாட்டு வணிகத்தை மேம்படுத்த உதவுதல்
vi) பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை கையாள உதவுதல்
vii) வரிகளை மறுசீரமைப்பு செய்தல்
viii) உரிமம் வழங்கும் முறையை அகற்றிட வழிவகுத்து கையாள உதவுதல்
1. உலகமயமாக்கல் தாராளமயமாக்கல் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றது, இக்கோட்பாடு தடையற்ற வாணிகத்தை பன்னாட்டு அளவில் உருவாக்கியது.
2. இதன் மூலம் பல நாடுகளின் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான தடைகள் உடைத்தெறியப்பட்டன.
3. மேலும் இந்திய பொருளாதாரத்தை உலக நாடுகள் மதிக்கத்தக்க அளவிற்கு வளர்ச்சியடையச் செய்துள்ளது.
16.
1. இணையம்:
i. தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக சந்தையிடுதல் இணையம் மூலம் செய்யப்படுகின்றது.
ii. பொருட்களை அல்லது சேவைகளை இணையம் வழியாக பரிமாற்றம் செய்யப்படுகிறது.
2. மின் மார்க்கெட்டிங் முறை:
மின் இணையம், மின்னஞ்சல், வயர்லெஸ் ஊடகம், மின் வலையமைப்பு மற்றும் மின்னணு வாடிக்கையாளர் மேலாண்மை முறை போன்ற டிஜிட்டல் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி சந்தையிடுதலின் நோக்கத்தை அடைய முடிகிறது.
3. மின்னணு வாடிக்கையாளர் மேலாண்மை:
வளரும் நவீன காலத்தில் வாடிக்கையாளரின் விருப்பங்களையும், தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கும், சந்தையிடுவதற்கும் இந்த மின்னணு மேலாண்மை உதவி புரிகின்றது.
4. சமூக தொழில்நுட்ப ஊடகங்கள் (Social Media's):
1. சமீப கால அபரிதமான தொழில்நுட்ப வளர்ச்சியில், சமூக ஊடகங்களாக திகழ்கின்ற யூடியூப், முகநூல், ட்விட்டர் போன்ற இதர முறைகள் மூலம் சந்தையிடுதல் விரிவாக்கம் செய்யப்படுகின்றது.
2. இது சந்தையிடுதலின் அபரிதமான வளர்ச்சிக்கும் வழிவகை செய்கிறது.
5. பல்நோக்கு அளவு சந்தையிடுதல்:
1. பல விநியோகஸ்தர்களை நிர்ணயம் செய்து சந்தையிடுதலின் முக்கிய நோக்கத்தை இதன் வாயிலாக அடையச் செய்தல்.
2. இதில் அமர்த்தப்பட்ட விநியோகஸ்தர்களை கீழ்நிலை விநியோகஸ்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
3. இதனால் சந்தையிடுதலின் பணி எளிமையாக நடைபெறுகின்றது.
17.
நுகர்வோரின் கடமைகள்:
(i) தரமான பொருட்களை நியாயமான விலையில் வாங்குதல் (Buying quality products at reasonable price) :
பொருட்களைப் பற்றிய முழுமையான அறிவுடன் அதன் விலை, தரம் மற்றும் அதன் அனைத்து விவரங்களையும் அந்த பொருளை வாங்குவதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய நுகர்வோரின் முக்கியப் பொறுப்பாகும். நுகர்வோர் பொருளை பற்றிய அறிவை தனது சொந்த அனுபவத்திலோ அல்லது அந்த பொருளை பயன்படுத்திய மற்றவர்களிடமோ அல்லது இணையதளம் மூலமாகவோ பெற்றிருக்க வேண்டும்.
(ii) பொருட்களின் எடையையும் மற்றும் அளவினையும் உறுதி செய்தல் :
வியாபாரிகள் பெரும்பாலும் நியாயமற்ற எடைகள் மற்றும் மோசடி நடவடிக்கைகள் மூலம் நுகர்வோரை ஏமாற்றுகிறார்கள். நுகர்வோர் என்பவர் சரியான எடை மற்றும் சரியான அளவிலான பொருட்களை பெறுகிறோம் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
(iii) விவர அட்டையை கவனமாக படித்தல்:
பொருளின் மீது ஒட்டப்பட்டுள்ள விவர அட்டையை முழுமையாக படிக்க வேண்டியது நுகர்வோரின் கடமையாகும். பொருளின் விவரங்கள் முழுமையாகவும் சரியாகவும் மற்றும் உண்மையாகவும் இருக்க வேண்டும்.
(iv) தவறான மற்றும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் :
விற்பனையாளர்கள் பெரும்பாலும் பொருட்கள் மீதான கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்கிறார்கள். எனவே, இத்தகைய மோசடி விளம்பரங்களால் தவறாக புரிந்துகொண்டு ஏமாறாமல் இருப்பதே நுகர்வோரின் தலையாய கடமையாகும்.
(v) தவறான திட்டங்கள் :
பெரும்பாலும் விளம்பரங்கள் கவர்ச்சிகரமாகவும், உணர்ச்சிகரமாகவும் பயன்படுத்தப்படுகின்றன. அவைகள், ஏமாற்றும் வகையிலும் தவறாகவும் இருந்து நுகர்வோர்களை வழி நடத்தலாம். நுகர்வோர் எப்போழுதும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மீது எச்சரிக்கையாகவும், தவறான விளம்பரங்களை தவிர்க்கவும் வேண்டும்.
(vi) ரொக்க ரசீதை உறுதி செய்தல் :
பொருட்களுக்கான இடாப்புடன் ரொக்க ரசீது உத்தரவாத அட்டை போன்றவற்றை பெறுவது நுகர்வோரின் சட்டப்படியான கடமையாகும். பொருட்களை வாங்கியதற்கான ரொக்க ரசீதையும் உத்தரவாத அட்டையையும் கேட்டுப் பெறுவதே நுகர்வோரின் முக்கிய கடமையாகும்.
18.
(1) பொருள் (Product)
பொருள் சந்தையில் ஒரு முக்கிய கூறு ஆகும். பொருள் இல்லையெனில் எந்த ஒரு சந்தையும் இயங்க இயலாது என்று கூறுகின்ற அளவிற்கு பொருள் முக்கிய இடம் பெறுகிறது.
(2) விலை (Price)
விலை என்பது பண்டங்கள் மற்றும் பணியின் மாற்று மதிப்பாக பெறப்படும் ஒன்றாகும்.
(3) இடம் (Place)
(i) ஒரு பொருள் என்னதான் தரம் வாய்ந்தவையாகவும், விலையில் சாதகத்தன்மை மற்றும் சிறந்த மேம்பாட்டு நடவடிக்கைகள் இருந்தபோதிலும் உற்பத்தி இடத்திலிருந்து நுகர்வு இடம் வரை பொருட்களை சரியான முறையில் மற்றும் சரியான நேரத்தில் கொண்டு செல்லவில்லை எனில் அனைத்தும் பயன் அற்றதாகும்.
(ii) எனவே சரியான நேரத்தில் சரியான இடத்திற்கு கொண்டு செல்வதற்கு இடம் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.
(4) விற்பனை மேம்பாடு / விளம்பரம் (Promotion)
சந்தையில் ஒரு பொருள் என்ன தான் தரமுடையதாக இருந்தாலும் மேலும் விலையில் சாதக நிலை இருந்தாலும் நுகர்வோர் மத்தியில் பொருளின் சிறப்பு இயல்புகள் மற்றும் பயன்பாடு குறித்து தெரியப்படுத்தாத நிலையில் அப்பொருள் நிர்ணயித்த வெற்றியை ஒரு போதும் அடைய இயலாது, எனவே மேம்பாட்டு நடவடிக்கைகள் மிகவும் அவசியமான ஒன்றாகும். மேம்பாட்டு நடவடிக்கையில் விளம்பரம் அதிக பங்கு வகிக்கிறது.
19.
| வ.எண் | ஒப்பிடுவதற்கான அடிப்படை | பணிவழிப் பயிற்சி | பணிவழியற்ற பயிற்சி |
| 1. | விளக்கம் | பணியாளர் உண்மையான வேலை சூழலில் வேலையை புரிந்து கொள்கிறார். | பணியாளர், பணிச் சூழலுக்கு வெளியே பயிற்சியை பெறுகிறார். |
| 2. | செலவு | செலவு குறைவான முறை | செலவு அதிகமான முறை அதாவது தனித்தனிப் பயிற்சி அறைகள் தனித்திறன் பெற்றவர்கள், வளங்கள் மற்றும் காணொளி போன்ற வளங்கள் தேவைப்படுகிறது. |
| 3. | இடம் | வேலை இடத்திலேயே பயிற்சி அளிக்கப்படுகிறது. | வேலை இடத்திற்கு வெளியே பயிற்சி அளிக்கப்படுகிறது. |
| 4. | பொருத்தம் | உற்பத்தி செய்யும் அமைப்புகளுக்கு பொருத்தமான முறை | உற்பத்தி அமைப்புகளுக்கு பொருத்தமற்ற முறை. இது மேலாண்மை செய்யும் நிறுவனங்களுக்கு பொருத்தமான முறை |
| 5. | அணுகுமுறை | நடைமுறை அணுகுமுறை | கோட்பாடு அணுகுமுறை |
| 6. | கோட்பாடு | நிறைவேற்றல் மூலம் கற்றல் | அறிவைப் பெறுவதன் மூலம் கற்றல் |
| 7. | கற்றல் | அறிவைப் பெறுவதன் மூலம் கற்றல் | அனுபவத்தின் மூலம் கற்றல் |
| 8. | தொடர்பு | பயிற்சி மிகவும் பொருத்தமானது மற்றும் நடைமுறையில் ஒவ்வொரு நாளுக்கும் தேவையான தேவைகளை கையாளுதல். | ஒரே நேரத்தில் பணியாளர்களின் குழுக்களுடன் மிக எளிதாக தொடர்பை ஏற்படுத்த முடியும். |
20.
1. முதலில் வேலை, அடுத்து மனிதர்
(i) பணியின் தேவைக்கேற்ப பணியாளர் வேலையில் அமர்த்தப்பட வேண்டும்.
(ii) வேலைக்கு தேவைப்படும் விண்ணப்பதாரர் மற்றும் அவரது தகுதியில் எவ்விதமான சமரசமும் இருக்கக்கூடாது.
(iii) "முதலில் வேலை அடுத்து மனிதர்" என்பது வேலை வாய்ப்பு கொள்கையாக இருக்க வேண்டும்.
2. வேலைவாய்ப்பு :
(i) புதிய ஊழியர்களுக்கு தகுதிக்கு அதிகமான அல்லது குறைவான வேலை வழங்கப்படக் கூடாது.
(ii) தகுதியை அடிப்படையாகக் கொண்டு மனிதர்களுக்கு வேலை வழங்கப்பட வேண்டும்.
3. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் :
பணி தொடர்பாக பணியிடத்தில் நிலவும் விதிமுறைகள் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை பணியாளர் பரவலாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
4. அபராதங்கள் பற்றிய விழிப்புணர்வு :
ஊழியர் தவறு செய்தாலோ அல்லது அவரால் ஏதேனும் இழப்பு ஏற்பட்டாலோ அதன் காரணமாக அவருக்கு வழங்கப்படும் தண்டனை மற்றும் அபராதம் குறித்த விழிப்புணர்வினை அவர் பெற்றிருக்க வேண்டும்.
5. விசுவாசம் மற்றும் ஒத்துழைப்பு :
(i) பணியாளர்களுக்கு பணியமர்த்தும் போது அவருக்குள் விசுவாசம் மற்றும் ஒத்துழைப்பு உணர்வினை வளர்க்கும் முயற்சியினை மேற்கொள்ள வேண்டும்.
(ii) இதன் மூலம் அவர் வேலை மற்றும் நிறுவனம் குறித்த அவரது பொறுப்புகளை சிறப்பாக உணர்ந்து கொள்ள இயலும்.
21.
(i) போதுமான கல்வி மற்றும் வழிகாட்டல் மூலம் முதலீட்டாளர்களின் நலன்களை பாதுகாக்கிறது.
(ii) பங்குச் சந்தைகளில் வியாபாரத்தை ஒழுங்குபடுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல். தரகர்கள் மற்றும் துணை தரகர்கள் ஆகியோர் நிதிச்சந்தையில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பங்கு பரிவர்த்தனை விசாரணைகள், இடைத்தரகர்கள் மற்றும் தன்னியக்க ஒழுங்குபடுத்தும் அமைப்புகளை ஆய்வு செய்தல் மற்றும் தேவையான நடவடிக்கைகளை செபி எடுக்கிறது.
(iii) பத்திரங்களில் உள்வழி வர்த்தகத்தை தடை செய்கிறது.
(iv) பங்குச் சந்தைகளில் செயல்படும் நிதி இடைத்தரகர்களால் மேற்கொள்ளப்படும் நிதி மோசடி மற்றும் நியாயமற்ற முறைகளை தடை செய்கிறது.
(v) நிதி இடைத்தரகர்களுக்கு பொருத்தமான பயிற்சி அளித்தல், பங்குச் சந்தையில் ஆரோக்கியமான சூழலுக்கு மிகவும் முக்கியமானது. மேலும், முதலீட்டாளர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.
(vi) சட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான கட்டணம் வசூலித்தல் அல்லது சட்டத்தின் நோக்கம் நிறைவேற்றுவதற்கான வேறு எந்த வகை கட்டணம் வசூலித்தலும் இதில் அடங்கும்.
(vii) இந்திய மத்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் செயல்பாடுகளை செயல்படுத்துதல்.
(viii) இடைத்தரகர்களின் சுய ஒழுங்குமுறை அமைப்பை ஊக்குவித்தல்.
(ix) இது விரிவான சட்ட அதிகாரங்களை கொண்டுள்ளது.
22.
அ. சமுதாயத்திற்கான பயன்கள்:
i) பொருளாதார வளர்ச்சி:
உற்பத்தித் தேவைகளுக்காக நிலையான சேமிப்புகளை உறுதிப்படுத்துவதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது.
ii) நிதி திரட்டல் தளம்:
நன்கு நிர்வகிக்கப்பட்ட இலாபத்தை உருவாக்கும் நிறுவனங்கள் புதிய பங்குகளின் மூலம் வரம்பற்ற நிதியைத் திரட்ட உதவுகிறது.
iii) வளங்களை மாற்றுதல்:
நிறுவனத்தை செம்மையாக இயக்குவதற்கு வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்தி பகிர்ந்தளிக்கப்படுகின்றன.
iv) மூலதன உருவாக்கம்:
பங்குச்சந்தை வாயிலாக மூலதன உருவாக்கத்தை ஊக்கப்படுத்துகிறது.
v) அரசாங்கத்திற்கான நிதி திரட்டல்:
நிதி பங்குச்சந்தை மீதான பத்திரங்களின் விற்பனை மூலம் திட்டங்களை மேற்கொள்வதற்கு நிதி திரட்ட உதவுகிறது.
ஆ. நிறுவனத்திற்கான பயன்கள்:
i) நிறுவனத்தின் மீதான நன்மதிப்பு உயருதல்:
பங்கு மாற்றகங்களில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் அதிகப்படியான நற்பெயரையும், கடன் பெறும் தன்மையையும் பெற்றுள்ளது.
ii) விரிவான சந்தை:
பங்குகளுக்கு விரிவான சந்தை தயாராக உள்ளது.
iii) பெரும் நிதி திரட்டப்படுதல்:
பங்குகள் மற்றும் கடனீட்டுப் பத்திரங்களின் மூலம் பங்குச்சந்தை எளிதில் பெரிய நிதியை பெருக்க முடியும்.
iv) பேரம் பேசும் வலிமையை அதிகரிக்கிறது:
கூடுதல் விரிவாக்கம், இணைப்பு அல்லது ஒருங்கிணைத்தல் காரணமாக அதிக பேரம் பேசும் சக்தி பெற்று நிறுவனங்களின் பங்குகள் விற்பனை எண்ணிக்கையை அதிகரிக்கிறது.
இ. முதலீட்டாளர்களுக்கான பயன்கள்:
i) நீர்மைத் தன்மை:
முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை விரைவாக பணமாக மாற்றுவதற்கு பங்கு மாற்றகம் உதவுகிறது.
ii) பாதுகாப்பு இணை மதிப்பு சேர்க்கை:
வங்கிகளில் கடன் பெரும் பொழுது பங்கு பத்திரங்களுக்கு பங்கு பரிமாற்ற நிலையங்களில் வழங்கப்படும் பாதுகாப்பு மதிப்பு சேர்க்கப்படுகிறது.
iii) முதலீட்டாளர் பாதுகாப்பு:
பங்குச்சந்தை பரிவர்த்தனைகள், முதலீட்டாளர்கள் வட்டி, விதிமுறைகள் ஆகியவற்றை கடுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் நியாயமான ஒப்பந்தத்தை உறுதிப்படுத்துகிறது.
iv) பங்கு பத்திரங்களின் உண்மையான மதிப்பை மதிப்பீடு செய்தல்:
பத்திரங்களின் உண்மையான மதிப்பை தினசரி பத்திரிக்கைகள், வலைத்தளங்களின் உதவியுடன் சந்தையில் எளிதாக மதிப்பீடு செய்யலாம்.
v) பத்திரங்களின் வியாபாரத்திற்கான கருவி:
பங்கு மாற்றகம், பட்டியலிடப்பட்ட பங்குகளை ஒரு சில நிமிடங்களிலேயே விற்பனை செய்வதற்கான முறைகளையும், வாங்குவதற்கான நடைமுறைகளையும் கொண்டுள்ளது.
23.
குறியிலக்கு மேலாண்மையின் நன்மைகள் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளன:
(i) குறியிலக்கு மேலாண்மையின் கீழ். மேலாளர்கள் மேலாண்மையின் பல்வேறு மட்டங்களில் உள்ள குறிக்கோள்களை அமைப்பதில் ஈடுபட்டுள்ளனர்.
(ii) குறியிலக்கு மேலாண்மையின் செயல் முறை மேலாளர்களுக்கு. ஒட்டு மொத்த அமைப்பில் தங்களது பங்கைப் புரிந்து கொள்ள உதவுகிறது.
(iii) திட்டமிடலுக்கான தேவையையும் மற்றும் திட்டமிடலுக்கான பாராட்டுதலையும் மேலாளர் அங்கீகரிக்கச் செய்கிறது.
(iv) குறியிலக்கு மேலாண்மை பங்கேற்பு மேலாண்மைக்கு ஒரு அடித்தளத்தை வழங்குகிறது.
(v) குறியிலக்கு மேலாண்மை உதவியுடன் செயல்திறன் முறையாக மதிப்பீடு செய்யப்படுகிறது.
(vi) குறியிலக்கு மேலாண்மை செயல்திறன் அளவுகோல்களை வழங்குகிறது. இது சரியான நடவடிக்கை எடுக்க உதவுகிறது.
(vii) குறியிலக்கு மேலாண்மை அதிகாரப் பகிர்வு உதவியால் எளிதாகச் செய்யப்படுகிறது.
(viii) ஒரு தொழிலாளியின் குறியிலக்கு பொறுப்பு மேலாண்மை மூலம் நிர்ணயிக்கப்படுகின்றது.
(ix) மேலாண்மை நிர்வாகத்தால் மிக விரைவில் முடிவுகள் எடுக்கப்படுகிறது.
24.
1. அறிவியல், கட்டை விரல் விதி அல்ல:
(i) கட்டை விரல் விதிமுறைக்கு பதிலாக அறிவியல்பூர்வ வேலைப் பகுப்பாய்வு மூலம் வளர்ச்சியடைந்த முறைகள் பயன்படுத்தப்பட வேண்டும்.
(ii) கட்டை விரல் விதி என்பது மேலாளர் தனது தனிப்பட்ட தீர்ப்புகள் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவு ஆகும்.
2. இணக்கம், சச்சரவின்மை:
(i) மேலாண்மைக்கும், பணியாளர்களுக்கும் மிகச்சிறந்த ஒற்றுமை இருக்க வேண்டும். ஒவ்வொரு முதலாளியும் தனது செழிப்பை தனது பணியாளர்களின் செழிப்பு மூலமே அடைய எய்த முடியும்.
(ii) நிர்வாகம் தனது உபரியான இலாபத்தை தனது பணியாளர்களுடன் பகிர்ந்து கொள்ள எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.
3. மனப்புரட்சி:
(i) பரஸ்பர நம்பிக்கை மற்றும் சரியான புரிதலுடன் கூடிய குழுச் செயல்பாடு கொண்டு உழைக்க வேண்டிய முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
(ii) இதன் மூலம் மேலாண்மையில் நிர்வாகமும், பணியாளர்களும் ஒருவரோடு ஒருவர் பொருந்தி செயல்படுவதால் வளர்ச்சிக்கு உதவுகின்றது.
4. தனி மனிதத்துவமல்ல, ஒத்துழைப்பு:
(i) சச்சரவு இன்றி ஒற்றுமை என்ற கோட்பாட்டின் விரிவாக்கம் ஆகும். தொழிலாளர் மற்றும் நிர்வாகத்தின் பரஸ்பர ஒத்துழைப்பின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
(ii) ஒத்துழைப்பு, பரஸ்பர நம்பிக்கை, நல்லெண்ண உணர்வு ஆகியவை மேலாளர் மற்றும் தொழிலாளர் ஆகிய இருவரிடமும் மேலோங்கி இருக்க வேண்டும்.
5. ஒவ்வொரு நபரும் அவரது மிகச்சிறந்த திறனுடன் மற்றும் செழிப்புடனும் வளர்ச்சியடைதல்:
(i) அறிவியல் பூர்வ முறையில் உரிய பணியாளர்களை தேர்வு செய்ய வேண்டும். தொழிலாளர்களின் உடல் தகுதி, மன மற்றும் அறிவுத்திறன் அடிப்படையில் அவர்களுக்கு உரிய பணியினை ஒதுக்க வேண்டும்.
(ii) தொழில் நிறுவனம் அதிக இலாபம் ஈட்ட திறமையான தொழிலாளர்கள் திறம்பட உற்பத்திப் பணிகளை மேற்கொள்வார்கள். இது தொழில் நிறுவனம் மற்றும் தொழிலாளர்கள் தத்தமது திறனையும் செழிப்பையும் அடைவதற்கு உதவி புரிகின்றது.
25.
(d)
தணிக்கையாளரை பணியமர்த்த
26.
(a)
பெயரளவு
27.
(a)
பொது
28.
(d)
அனைத்தும்
29.
(b)
யார் பெயரில் மாற்றப்படுகிறதோ அவர்
30.
(b)
நடவடிக்கை தரகர்கள்
31.
(c)
15.04.1987
32.
(b)
பரிவர்த்தனை
33.
(b)
சந்தையிடுகையாளர்
34.
(b)
விண்ணப்பதாரர்
35.
(b)
முதலாளி, தொழிலாளி
36.
(a)
1988
37.
(b)
தனது சொந்த நடவடிக்கைகளுக்காக
38.
(c)
குறைந்த கடன் மற்றும் சந்தை இடர்
39.
(c)
புதிய வெளியீடுகளுக்கான சந்தை
40.
(d)
கட்டுப்படுத்துதல்
41.
கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்களிக்க முடியாத உறுப்பினர்கள் அவர்களுக்கு பதிலாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகராள்களை நியமிக்கலாம். பகராள் உறுப்பினராக இருக்க வேண்டிய அவசியமில்லை. பகராள் கூட்டம் தொடங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் நிறும பதிவு அலுவலகத்தில் தெரிவித்து பதியப்பட வேண்டும்.
42.
இயக்குனராக நிறுமத்தில் பணி புரியும் ஒருவர் அதிகபட்சமான அதிகாரங்களை கொண்டவருமாக, கம்பெனியின் நிர்வாகத்தில் அதிக ஆர்வம் அதிகபட்சமான சுதந்திரமும் உடையவர் கம்பெனியை வழிநடத்துவதற்கும் இயக்குநர்களை கட்டுப்படுத்தும் உரிமையும் இவருக்கு உண்டு.
43.
(i) நிறுமத்தின் பங்களிப்பு மற்றும் பங்கு முதலை உயர்த்தும் நோக்கில் வெளியிடப்படும் பங்குகள் உரிமைப் பங்குகள் எனப்படும்.
(ii) இந்த உரிமைப் பங்குகளின் வெளியீடு செயல்முறை விதிகளுக்கு உட்பட்டு இருக்கும்.
44.
நிறுமத்தை உருவாக்குதல் என்பது நான்கு நிலைகளை கொண்டது.
i) நிர்வாகம் (Promotion)
ii) பதிவு செய்தல்
iii) முதல் போடுதல்
iv) வியாபாரத்தை தொடங்குதல்
45.
(i) வேளாண் தொழில் முனைவோர் வேளாண் பொருட்களை விளைவித்து சந்தையிடும் தொழிலை முனைகின்றனர்.
(ii) இவர்கள் பல்வேறு இயற்கை சார்ந்த உள்ளீட்டு பொருட்களான உரம், விதை, தண்ணீர், பூச்சிக்கொல்லி மருந்துகள், உழைப்பு போன்ற இடுபொருட்களை கொண்டு உணவு பொருட்களை உற்பத்தி செய்கின்றனர்.
46.
உட்புறச் சூழல் என்பது நிறுவனத்தின் உட்புறத்தோடு தொடர்புடைய காரணிகளாகும். எனவே இவற்றைக் கட்டுப்படுத்துதல், மாற்றி அமைத்தல், போன்றவற்றை நிறுவனங்கள் எளிதில் மேற்கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக கொள்கைகள் மற்றும் திட்டங்கள், நிறுவன கட்டமைப்பு, ஊழியர்கள், நிதி மற்றும் வளங்கள் போன்றவை ஆகும்.
47.
(i) பணியமர்த்தல் என்பது புதிய பணியாளர்களை பணியில் நியமித்தல், பதவி உயர்வு, பணியிட மாறுதல் அல்லது ஏற்கனவே உள்ள பணியாளரை பதவி இறக்கம் செய்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
(ii) சரியான நபருக்கு சரியான வேலைவாய்ப்பை அளிக்கும் செயல்முறையே பணியமர்த்தல் என்று அழைக்கப்படுகிறது.
48.
(i) இந்தியாவில் பங்குச் சந்தைகள் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மூடப்படும்.
(ii) தேசிய விடுமுறை நாட்களிலும் சந்தைகள் மூடப்படும்.
(iii) சாதாரண பங்குகளுக்கான வர்த்தக நேரம் காலை 9.15 முதல் பிற்பகல் 3.30 வரை செயல்படும்.
(iv) பொருட்கள் சந்தைக்கான வர்த்தக நேரம் காலை 10 மணி முதல் 11.20 மணி வரை திங்கள் முதல் வெள்ளி வரை செயல்படும்.
(v) விவசாய பொருட்களுக்கான சந்தை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
(vi) சந்தை வியாபாரத்தின் போது உணவு இடைவேளையோ அல்லது தேநீர் இடைவேளையோ இல்லை.
49.
அரசு அல்லது தங்கமுனை பத்திரங்களை வாங்கவும் விற்கவும் கூடிய ஒரு சந்தைக்கு 'அரசு பத்திரங்கள் சந்தை' என்று பெயர்.
50.
1. திட்டமிடுதல் என்பது மேலாண்மையின் செயல்பாடுகளில் முதன்மையானது ஆகும். திட்டமிடுதல் இல்லாமல் எந்த ஒரு காரியமும் செய்ய முடியாது.
2. திட்டமிடுதல் என்பது வருங்கால தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு ஆக்கபூர்வமான மதிப்பீடு ஆகும்.
51.
இ. வலைத்தளக் கடையை மெய்நிகர் கடை எனவும் அழைக்கலாம்.
52.
அ. நவீன மேலாண்மை - ஹென்றி ஃபோயல்
53.
3. செயலூக்கமளித்தல் மூலமே நிறுவனத்தின் நோக்கங்களை அடைய முடியும்.
54.
இ) (A) மற்றும் (R) சரியானது, (A) ஐ (R) விளக்குகிறது
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards