12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test

1.
காலம் கடத்தும் பழமைவாத தொழில் முனைவோர் பற்றி சுருக்கமாக எழுதுக.
2.
மேலாண்மையின் முதன்மைப் பணிகளை பட்டியலிடுக.
3.
பல்வேறு வகையான முன்னுரிமைப் பங்குகளை சுருக்கமாக கூறுக. (ஏதேனும் 3)
4.
பின்வருவனவற்றிற்கு விரிவாக்கம் தருக.
i) STEP
ii) JAM
iii) SEED
5.
ஸ்டார்ட்டப் இந்தியா என்றால் என்ன?
6.
கட்டமைக்கப்பட்ட நேர்காணல் என்றால் என்ன?
7.
மன அழுத்த நேர்காணல் என்றால் என்ன?
8.
மனித வள மேலாண்மையின் வரைவிலக்கணம் தருக.
9.
செபி அமைப்பின் கட்டமைப்புகளை வரைக.
10.
புறத்தோற்றமற்ற பத்திரங்கள் என்றால் என்ன?
11.
காளை மற்றும் கரடி - விளக்குக.
12.
பங்குச் சந்தையின் குறைபாடுகளை விவரி. (ஏதேனும் 3)
13.
கருவூல இரசீதின் வகைகளை விவரி. (ஏதேனும் 3)
14.
கருவூல இரசீதின் பொது இயல்புகள் யாவை? (ஏதேனும் 3)
15.
மூலதனச் சந்தையின் ஏதேனும் இரண்டு பணிகளை விளக்குக.
16.
இரண்டாம் நிலைச் சந்தை- சிறு குறிப்பு வரைக.
17.
நிதிச் சந்தையின் பொருள் தருக.
18.
விதிவிலக்கு மேலாண்மையில் உள்ள செயல்முறைகள் என்ன?
19.
மேலாண்மையை நிர்வாகத்திலிருந்து வேறுபடுத்துக. (ஏதேனும் 3)
20.
மேலாண்மை வரைவிலக்கணம் தருக.
21.
உரிமைப் பங்குகள் என்றால் என்ன?
22.
டிஜிட்டல் இந்தியாவைப் பற்றி குறிப்பு வரைக.
23.
வியாபார தொழில் முனைவோரின் இதர பெயர்கள் என்ன?
24.
நுண்ணறிவுத்திறன் சோதனை என்றால் என்ன?
25.
நேர்காணல் என்றால் என்ன?
26.
பதவி உயர்வு என்றால் என்ன?
27.
ஆட்சேர்ப்பின் பொருள் தருக.
28.
மனித வளத்தின் சிறப்பியல்புகளில் ஏதேனும் இரண்டை குறிப்பிடுக.
29.
30.
செபியின் இரண்டு நோக்கங்களை எழுதுக
31.
செபி பற்றிய சிறுகுறிப்பு வரைக .
32.
தரகர் என்று யாரை அழைக்கப்படுகிறார்கள்?
33.
இந்தியாவில் உள்ள எதேனும் 5 பங்குச் சந்தைகளை பற்றி எழுதுக.
34.
ஏலமிடுதல் என்பதன் பொருள் யாது?
35.
அரசுப் பத்திரங்கள் சந்தை என்றால் என்ன?
36.
மூலதனச் சந்தையின் பங்கேற்பாளர்கள் யார்?
37.
மூலதனச் சந்தை என்றால் என்ன?
38.
இரண்டாம் நிலைச் சந்தையில் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?
39.
கடன் சந்தை என்றால் என்ன?
40.
முக்கிய முடிவுப் பகுதிகள் (KRA) என்பது என்ன?
41.
விதிவிலக்கு மேலாண்மையின் பொருளை எடுத்துக்கூறுக.
42.
மேலாண்மையின் துணைப் பணிகளை பட்டியலிடுக.
43.
திட்டமிடுதல் என்றால் என்ன?
44.
மேலாண்மைக் கருவிகளைப் பட்டியலிடுக.
45.
மேலாண்மை என்றால் என்ன?
1.
(i) பழமை தொழில் முனைவோர்கள் எதையும் புதிதாக புகுத்துவதில் தயக்கம் காட்டுபவர்கள். குறிப்பாக புதியது புகுத்தினால் இடர் வந்துவிடும் என அச்சம் கொள்பவர்கள்.
(ii) தொழில் சூழ்நிலைகள் மாறிவரும் போதிலும் மாறாத இவர்கள் மாற்றத்தை வேறு வழி இல்லாத நிலையில் ஏற்க தள்ளப்படுபவர்கள்.
(iii) அதாவது மாற்றத்தை உள்வாங்கவில்லை எனில் தொழிலை மூட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றால் மட்டுமே மாற்றத்தை பின்பற்றுவார்கள். காலம் காலமாக தங்களின் மூதாதையர்கள் வகுத்த பழமை முறைகளைப் பிசகாமல் பின்பற்றுபவர்கள்.
2.
1. திட்டமிடல்
2. அமைப்பாற்றல்
3. பணியமர்த்தல்
4. இயக்குவித்தல்
5. செயல் ஊக்கம் அளித்தல்
6. கட்டுப்படுத்தல்
7. ஒருங்கிணைத்தல்
3.
(i) குவிவு முன்னுரிமைப் பங்குகள்: அனைத்து பங்காதாய நடவடிக்கைகள் ஒரு சிறப்பான முறையில் செலுத்தி இறுதி வரையிலும் குறிப்பிட்ட காலம் முடியும் வரை பயன்படுத்தப்படும்.
(ii) குவியா முன்னுரிமைப் பங்குகள்: ஒருங்கிணைக்கப்பட்ட முன்னுரிமைப் பங்குகளுக்கு எதிராக இருப்பது ஒருங்கிணைக்கப்படாத முன்னுரிமைப் பங்குகள் ஆகும்.
(iii) மீள்தகு முன்னுரிமைப் பங்குகள் : ஒரு நிலையான காலம் (அ) தவணை நாள் முடிந்து பெறக் கூடிய பங்குகள் ஆகும்.
(iv) மீள்தகா முன்னுரிமைப் பங்குகள்: நிறுமத்தை கலைக்கும் போது (அ) சொத்துக்களை விற்று நீர்மைத் தன்மை ஆக்கும் போது பெறக் கூடிய பங்குகள் ஆகும்.
(v) மாற்றக் கூடிய முன்னுரிமைப் பங்குகள்: ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் சாதாரண பங்குகளை மாற்றக் கூடிய தன்மை கொண்ட பங்குகள் ஆகும்.
(vi) மாற்ற முடியாத முன்னுரிமைப் பங்குகள்: எந்த சூழ்நிலையிலும் சாதாரண பங்குகளாக மாற்ற இயலாத தன்மை கொண்ட பங்குகள் ஆகும்.
4.
(i) பெண்களுக்கு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான ஆதரவு Support to Training and Employment Programme for Women (STEP)
(ii) ஜன்தன் - ஆதார் - மொபைல் Jan-Dhan- Aadhar-Mobile (JAM)
(iii) விஞ்ஞான அடிப்படையில் அதிகாரமளித்தல் மற்றும் அபிவிருத்தி Science for Equity Empowerment and Development (SEED)
5.
(i) தொடக்க நிலையில் உள்ள தொழில்கட்கு ஆலோசனை வழங்குவது, வளர்ப்பது ஆதரவு அளிப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் அவற்றை வளர்க்கும் திட்டத்தினை 2016ம் ஆண்டு ஜனவரியில் துவங்கியது.
(ii) துவக்கக் காலம் முதலே பல தொழில் முனைவோர்கள் பலதரப்பட்ட தொழில் வினைகளை துவக்கி வெற்றி கண்டனர். நிதிகளின் நிதி (Fund of Fund) என்ற நிதியின் மூலம் தொடக்க நிலை தொழில் வினைகளுக்கு நிதி வசதி செய்து தரப்பட்டு வருகிறது.
6.
(i) இது முன் கூட்டியே திட்டமிட்டு நடத்தப்படுகிறது.
(ii) நேர்காணலில் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் முன் கூட்டியே தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் நடத்தப்படுகிறது.
(iii) நேர்காணலில் விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்படுகிறார்கள்.
7.
(i) மன அழுத்த நேர்காணலில் விண்ணப்பதாரரிடம் வேண்டும் என்றே மன அழுத்தம் தரும் வகையினை கேள்விகள் கேட்கப்படும், உணர்ச்சிகளை கட்டுப்படுத்துதல் மற்றும் மன அழுத்தத்தை சமாளிக்கும் திறனை சோதிக்க இத்தகைய நேர்காணல் நடத்தப்படுகிறது.
(ii) மன அழுத்த சூழ்நிலையில் விண்ணப்பதாரர் எவ்வாறு எதிர் வினையாற்றுகிறார், பதிலளிக்கிறார் என்பதை உற்று நோக்கி அப்பணிக்கு அவரின் பொருத்தப்பாடு சோதிக்கப்படுகிறது.
(iii) பெரும்பாலும் விற்பனைப் பிரதிநிதிகள் பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்கம் போன்ற துறைகளில் பணியமர்த்தப்படுபவர்களுக்கு இவ்வகையான நேர்காணல் நடத்தப்படுகிறது.
8.
ஈ.எப்.எல். ப்ரெச் அவர்களின் வார்த்தைகளில் மனிதவள மேலாண்மை என்பது "நிர்வாக செயல்பாட்டின் ஒரு பகுதியாகும். மேலும் அவை ஒரு நிறுவனத்தின் மனிதக் கூறுகளை முதன்மையாக கருத்தில் கொண்டுள்ளது".
9.
செபி அதன் உறுப்பினர்களால் நிர்வகிக்கப்படுகிறது. இதில் பின்வருவன அடங்கும்
10.
(i) புறத்தோற்றமற்ற பத்திரங்கள் உருவாக்கம் என்பது நிறுவன பதிவாளரால் காகித வடிவிலான பங்குச் சான்றிதழை அழித்து புறத்தோற்றமில்லாத வகையில் பத்திரங்களாக மாற்றல் என்பதாகும்.
(ii) முதலீட்டாளர்களின் வேண்டுகோளின் பேரில் புறத்தோற்றமற்ற பத்திரங்களாக உருமாற்றம் செய்யப்படுகிறது. முதலீட்டாளர்கள் முதலில் வைப்பக பங்கேற்பாளர்களுடன் (Depository Participant) கணக்கை தொடங்க வேண்டும்.
(iii) 1996 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் தேசிய பங்குச் சந்தை (NSE) முதன்முதலாக புறத்தோற்றமற்ற பத்திரங்கள் வர்த்தகத்தை தொடங்கியது.
(iv) அங்கு ரிலையன்ஸ் நிறுவனம் முதன்முதலாக 100 பங்குகள் விற்பனையில் ஈடுபட்டது. 1997 டிசம்பர் மாதம் மும்பை பங்குச் சந்தை புறத்தோற்றமற்ற பத்திரங்கள் வர்த்தகத்தை தொடங்கியது.
11.
காளை - தெஜிவாலா:
(i) பத்திரங்கள் எதிர்காலத்தில் விலையேற்றம் பெறும் என்று எதிர்பார்க்கின்ற ஊக வணிகர் காளை அல்லது தெஜிவாலா (Tejiwala) என்றழைக்கப்படுகிறார்.
(ii) ஒரு காளை தன்னுடைய கொம்புகளால் எதிரிகளை உயரே அல்லது மேல் நோக்கி தூக்கி ஏறிவது போன்று, இந்த வகை வணிக ஊக வணிகர் பிணையப் பத்திரங்களின் விலையை உயரச் செய்யும் நோக்கோடு செயல்படுவதால் காளை எனப் பெயரை பெற்றுள்ளார்.
(iii) இவர் எல்லாம் நன்மைக்காகவே நடைபெறும் (Optimism) என்ற மனப்பாங்கு கொண்டவர்.
கரடி - மண்டிவாலா:
(i) கரடி அல்லது மண்டிவாலா (Mandiwala) என்றழைக்கப்படும் ஊகவணிகர், எதிர்காலத்தில் குறிப்பிட்ட பத்திரங்களின் விலைகள் வீழ்ச்சி அடையும் என்று எண்ணுபவர்.
(ii) ஒரு கரடி வணிகர் எதிலும் பின்னோக்கிய மனப்பாங்கு(pessimism) கொண்டவர்.
(iii) ஒரு கரடி பொதுவாகத் தன்னுடைய எதிரியைத் தரையில் தள்ளி அழுத்துகிறது. அதேபோல் ஒரு கரடி ஊகவணிகரும் பங்குச் சந்தையில் பங்குகளின் விலையை கீழே தள்ளுவதற்கு வேண்டிய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்
12.
பங்கு மாற்றகங்களின் குறைபாடுகளை பின்வருமாறு கூறலாம்:
(i) பங்கு பரிவர்த்தனை சீரான மற்றும் கட்டுப்பாடு இல்லாதது.
(ii) பங்குச் சந்தைகளின் உறுப்பினர் மீது கட்டுப்பாடு இல்லாதது.
(iii) ஆரோக்கியமற்ற ஊகத்தை கட்டுப்படுத்துவதில் தோல்வி.
(iv) ஒரு இடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டணம் வசூலிக்க அனுமதிக்கிறது.
(v) பங்கு பரிவர்த்தனையின் விளிம்பு தேவைகள் அல்லது உற்பத்தி சந்தைகளின் விஷயத்தில் வலியுறுத்துவதில்லை.
(vi) பங்கு மாற்றகங்களில் பங்குகளை பட்டியலிட சரியான ஒழுங்குமுறைகள் இல்லை.
13.
கருவூல இரசீதின் வகைகள் :
கால வரையறை அடிப்படையில் இந்த இரசீதுகள் மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றன.
அவை பின்வருமாறு.
(a) 91 நாட்கள் கருவூல இரசீதுகள்;
(b) 182 நாட்கள் கருவூல இரசீதுகள்;
(c) 364 நாட்கள் கருவூல இரசீதுகள்
(i) 91 நாட்கள் கருவூல இரசீதுகள் ஒரு நிலையான 4 சதவீத தள்ளுபடி விகிதத்தில் ஏலத்தின் மூலம் வெளியிடப்படுகின்றன.
(ii) இந்திய ரிசர்வ் வங்கி 91 நாட்கள் மற்றும் 182 நாட்கள் கருவூல இரசீதுகளை ஒரு வாரம் முழுவதும் வடிகட்டும் அடிப்படையில் வெளியிடப்படுகிறது.
(iii) 364 நாட்கள் கருவூல இரசீதுகள் எவ்வித நிலையான விகிதமும் கொண்டு செயல்படுவதில்லை. இந்த தள்ளுபடி விகிதம் அதிகார அமைப்பின் இசைவினை பெற்று பங்கேற்பாளர்களுக்கு ஏலத்தில் தெரிவிக்கப்படுகிறது. இத்தகைய விகிதத்தையே தள்ளுபடி விகிதம் என்று குறிப்பிடப்படுகிறது.
14.
கருவூல இரசீது பின்வரும் பொதுவான இயல்புகளை உடையது. அவை பின்வருமாறு.
1. வெளியிடுபவர்
2. நிதி இரசீது
3. நீர்மைத் தன்மை
4. முக்கிய ஆதாரம்
5. பண மேலாண்மை
15.
சேமிப்பு மற்றும் மூலதன உருவாக்கம்
சேமிப்பு மற்றும் மூலதன உருவாக்கம் மூலதனச் சந்தையில் பல்வேறு வகையான பத்திரங்கள் பல்வேறு துறையைச் சார்ந்து மக்களிடமிருந்து (தனிநபர், நிறுமங்கள், அரசு முதலியன) சேமிப்பை திரட்டுவதற்கு உதவி செய்கின்றது. பத்திரங்கள் முதலீடு செய்யும் மக்களுக்கு நிச்சயமான ஊக்கத் தொகையாக பங்கு மாற்றகத்தின் இரட்டை சிறப்பியல்புகளான நியாயமான வருவாய் மற்றும் நீர்மைத் தன்மை கிடைக்கிறது. இது நாட்டில் மூலதன உருவாக்கத்தை முடுக்குகிறது.
உடனடி மற்றும் தொடர்ச்சியான சந்தை
பங்கு மாற்றகம் வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் பத்திரங்களை வாங்க மற்றும் விற்பதற்கு ஒரு வசதியான மையத்தை வழங்குகிறது. எளிய சந்தையிடுதல் பத்திரங்களில் முதலீடு செய்வதில் மற்ற சொத்துக்களுடன் ஒப்பிடும் பொழுது அதிக நீர்மைத் தன்மையை உருவாக்குகிறது.
16.
(i) இரண்டாம் நிலைச் சந்தை ஏற்கனவே வெளியீடு செய்யப்பட்ட பங்குகளுக்கான சந்தை இரண்டாம் நிலைச் சந்தை ஆகும்.
(ii) இரண்டாம் நிலைச் சந்தையில் பங்கு மாற்றகம் ஒரு முக்கியமான நிறுவனம் ஆகும்.
17.
1. எந்த ஒரு சந்தையில் நிதி கோருதல்கள், சொத்துக்கள் மற்றும் பத்திரங்கள் போன்ற நிதிக் கருவிகள் வியாபாரம் செய்யப்படுகின்றதோ அதுவே 'நிதிச் சந்தை' எனப்படுகிறது.
2. நிதி அளிப்பவர்களிடம் உள்ள உபரி நிதியை நிதி தேவை உள்ளவரின் நிதிப் பற்றாக்குறையை நோக்கி கடன் நிதியை எடுத்து செல்வது நிதிச் சந்தை எனவும் கூறலாம்.
18.
(i) முதன்மையாக, எதிர்பார்ப்பு அல்லது மதிப்பிடப்பட்ட முடிவுகளுடன் குறிக்கோள்கள் அல்லது நெறிமுறைகளை அமைப்பது அவசியமாகிறது. இந்த நிகழ்ச்சிகள் மதிப்பீடு செய்யப்பட்டு உண்மையான செயல்திறனுடன் சமமாக ஒப்பிடப்படுகின்றன.
(ii) அடுத்து, விலகல் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. முதுநிலை மேலாளர்கள் ஒரு சிறிய அல்லது எந்த விலகலும் இல்லாத போது, எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை. அவர்கள் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தலாம்.
(iii) உண்மையான செயல்திறன்கள் கணிசமாக விலகி விட்டால், "ஒரு விதிவிலக்கு ஏற்பட்டுவிட்டது" என்ற பிரச்சினையை முதுநிலை மேலாளர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.
(iv) இந்த "விதிவிலக்கு" உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என்பதே இறுதியான நோக்கமாகும்.
19.
| கோட்பாட்டின் அடிப்படை | மேலாண்மை | நிர்வாகம் |
|---|---|---|
| பொருள் | மேலாண்மை என்பது மற்றவர்களின் முயற்சி மற்றும் ஒத்துழைப்புடன் நோக்கங்களை எய்தும் ஒரு கலையாகும். | ஒரு குழுவால் ஒரு நிறுவனத்தை நிர்வகிப்பதற்கான செயல் முறையே நிர்வாகம் என்று அழைக்கப்படுகின்றது. |
| அதிகாரம் | மத்திய மற்றும் கீழ்மட்ட அளவில் | உயர் மட்ட அளவில் |
| பங்கு | நிறைவேற்றம் | முடிவெடுத்தல் |
| தொடர்பு தன்மை | கொள்கைகளை செயல்படுத்தல் | கொள்கைகளை உருவாக்குதல் |
| செயல்பாட்டு பரப்பு | நிர்வாகத்தின் கீழ் செயல்படுகிறது | நிறுவனத்தின் செயல்பாடுகள் மீது முழுக்கட்டுப்பாடு |
| செயல் | திட்டங்களையும், கொள்கைகளையும் செயல்படுத்தல் | திட்டங்கள் தீட்டுதல், கொள்கைகளைக் கட்டமைத்தல் மற்றும் இலக்குகளை நிர்ணயித்தல். |
20.
(i) ஹென்றி ஃபோயல் என்பவரின் கூற்றுப்படி, "மேலாண்மை என்பது முன்கணிப்பு செய்தல், திட்டமிடல், ஒழுங்கமைப்பது, கட்டளையிடுவது, கட்டுப்படுத்துவது." ஒருங்கிணைப்பது.
(ii) பீட்டர் F. டிரக்கர் என்பவரின் கூற்றுப்படி. மேலாண்மை என்பது பன்னோக்கு செயல். அது வியாபாரத்தை மேலாண்மை செய்கின்றது. மேலாளரை மேலாண்மை செய்கிறது. மேலும் பணியாளரையும், பணியினையும் மேலாண்மை செய்கிறது.
21.
(i) நிறுமத்தின் பங்களிப்பு மற்றும் பங்கு முதலை உயர்த்தும் நோக்கில் வெளியிடப்படும் பங்குகள் உரிமைப் பங்குகள் எனப்படும்.
(ii) இந்த உரிமைப் பங்குகளின் வெளியீடு செயல்முறை விதிகளுக்கு உட்பட்டு இருக்கும்.
22.
இத்திட்டத்தின் மூலம் அனைத்து அரசின் சேவைகளும் பயனாளிகளுக்கு மின்னணு முறையில் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் இந்திய பொருளாதாரம் மின்னணு பொருளாதாரமாக மாறி வருகிறது. உலகெங்கும் கிடைக்கும் பொருட்கள் மற்றும் பணிகளை மக்கள் மின்னணு முறையில் பெற வகை செய்திடும் அறிவு பொருளாதாரமாக இந்திய பொருளாதாரம் மாறி வருகிறது என்றால் மிகையாகாது.
23.
(i) உற்பத்தி தொழில் செய்யும் தொழில் முனைவோர்
(ii) வணிகத் தொழில் முனைவோர்
24.
நுண்ணறிவுத் திறன் சோதனை என்பது ஒருவகை உளவியல் ரீதியிலான சோதனை ஆகும். இது மூளையின் சிந்திக்கும் ஆற்றல், மனத்திறன் நுண்ணறிவு (IQ) போன்றவற்றை சோதிக்க பயன்படும். நுண்ணறிவு எண் என்ற அளவீட்டால் இது அளவிடப்படுகிறது. அந்நபரின் அறிவார்ந்த திறனை சோதிப்பது இதன் முதன்மை நோக்கமாகும்.
25.
(i) தேர்வு நடவடிக்கையில் அடுத்த நிலை நேர்காணல் ஆகும். இது 'வொயர்' எனும் பிரெஞ்ச் வார்த்தையிலிருந்து வந்ததாகும். இதன் பொருள் 'மற்றவரைக் காணல்' என்பதாகும்.
(ii) தேர்ந்தெடுப்பவர் மற்றும் தேர்ந்தெடுக்கப்படுபவர் இருவரும் முகத்திற்கு முகம் பார்த்து அறிந்து உரையாடுவதை குறிக்கிறது.
26.
பணி மூப்பு மற்றும் தகுதியின் அடிப்படையில், பணியாளர்கள் நிறுவன அமைப்பின் படிநிலையில் உள்ள கீழ்மட்ட நிலையிலிருந்து, மேல்மட்ட நிலைக்கு சென்று பணிபுரிய வாய்ப்பு அளிக்கப்படுகிறது.இதுவே பதவி உயர்வு எனப்படும்.
27.
ஒரு நிறுவனத்தில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு பொருத்தமான நபர்களைத் தேர்ந்தெடுக்கும் பணி செயல்முறை ஆட்சேர்ப்பு எனப்படுகிறது.
28.
(i) உற்பத்தி செய்யும் ஒரே காரணியாக மனித வளம் திகழ்கிறது.
(ii) பிற அனைத்து வளங்களையும் மனித வளம் உருவாக்குகிறது.
29.
30.
(i) பங்கு பரிவர்த்தனைகளின் ஒழுங்குமுறை : செபியின் முதல் நோக்கம் பங்குச் சந்தைகளை ஒழுங்குபடுத்துவதாகும்.
(ii) முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பு : முதலீட்டாளர்கள் இல்லாத நிலையில் மூலதனச் சந்தை அர்த்தமற்றதாகும்.
31.
(அ) நமது மூலதனச் சந்தையை ஒழுங்குபடுத்தவும் மற்றும் கட்டுப்படுத்தவும் இந்தியாவில் உருவாக்கப்பட்ட உயர் அமைப்பு இந்திய பத்திர மற்றும் மாற்றங்களின் வாரியம் செபி ஆகும்.
(ஆ) இது இந்திய அரசால் 1966 ல் உருவாக்கப்பட்டது ஆனால் 1992 ஆம் ஆண்டில் சட்டமுறை அதிகாரம் பெற்றது.
32.
(i) தரகர்கள், கழிவு முகவர் ஆவர். பத்திரங்களை வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்குமிடையே இடைநிலையாளர்களாகத் தரகர்கள் செயல்படுகின்றனர்.
(ii) இவர்கள் தனக்காகப் பத்திரங்களை வாங்கி விற்பதில்லை.
33.
இந்தியாவிலுள்ள பல்வேறு பங்குச் சந்தைகளின் பெயர்கள் பின்வருமாறு
(i) தி பாம்பே பங்குச் சந்தை.
(ii) அகமதாபாத் பங்குச் சந்தை சங்கம் லிமிடெட்.
(iii) ஜெய்ப்பூர் பங்கு பரிவர்த்தனை லிமிடெட்.
(iv) கல்கத்தா பங்கு பரிவர்த்தனை சங்கம் லிமிடெட்
(v) பெங்களூரு பங்குச் சந்தை லிமிடெட்.
34.
வர்த்தகர்கள் ஒருவர் ஒருவரோடு போட்டியிடும் முறையில் பத்திரங்களை அதிகபட்ச விலைக்கு விற்க மேற்கொள்ளப்படும் ஒரு வர்த்தக முறையே 'ஏலம் விடுதல்' என அழைக்கப்படுகின்றது.
35.
அரசு அல்லது தங்கமுனை பத்திரங்களை வாங்கவும் விற்கவும் கூடிய ஒரு சந்தைக்கு 'அரசு பத்திரங்கள் சந்தை' என்று பெயர்.
36.
மூலதனச் சந்தையின் ஈடுபடுபவர்கள் தனிநபர்கள், நிறுமங்கள், அரசு வங்கிகள், மற்றும் இதர நிதி நிறுவனங்கள் போன்றவர்களை உள்ளடக்கியுள்ளது.
37.
(i) மூலதனச் சந்தை என்பது நிதி பத்திரங்களான பிணையங்கள், மற்றும் பங்குகளின் வர்த்தகத்தில் ஈடுபடும் வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் கூடும் ஒரு சந்தை ஆகும்.
(ii) தனிநபர் மற்றும் நிறுவனங்கள் போன்ற பங்கேற்பாளர்களால் வாங்குதல் மற்றும் விற்றல் மேற்கொள்ளப்படுகிறது.
38.
வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் கலந்துரையாடுதல் மூலம் நிதி சார்ந்த சொத்துக்களின் விலையை நிர்ணயம் செய்ய நிதிச் சந்தை அனுமதிக்கின்றது. விலை கண்டுபிடிப்பு செயல்முறை மூலம் தேவை மற்றும் அளிப்பு அடிப்படையில் பொருளாதாரத்தில் நிதிகளை பங்கீடு செய்வதற்கு நிதிச் சந்தை சைகை வழங்குகிறது.
39.
கடன் கருவிகளை வர்த்தகம் செய்வதற்கான நிதிச் சந்தை கடன் சந்தை ஆகும். அரசு பத்திரங்கள் (அ) பிணையங்கள், நிறுவன கடனீட்டு பத்திரங்கள் போன்றன.
40.
முக்கிய முடிவு பகுதிகள்:
(i) அமைப்பின் குறிக்கோள்களின் அடிப்படையில் முக்கிய முடிவுப் பகுதிகள் நிர்ணயிக்கப்படுகின்றன.
(ii) முக்கிய முடிவுகள் பகுதிகள் (Key Result Area - KRA) முன்னுரிமை அடிப்படையில் அமைக்கப்படுகிறது.
(iii) முக்கிய முடிவுப் பகுதிகள் ஒரு அமைப்பின் வலிமையை குறிக்கிறது. இலாபம். சந்தை நிலவரம், புதிய கண்டுபிடிப்புகள் போன்றவை முக்கிய முடிவுப் பகுதிகளுக்கு உதாரணங்களாகும்.
41.
விதிவிலக்கு மேலாண்மை என்பது நெறிமுறையிலிருந்து விலகிப் போகும் நிகழ்வுகளை அடையாளம் காண்பதற்கும், கையாளுவதற்கும் கவனம் செலுத்துகின்ற வணிக நிர்வாகத்தின் ஒரு பாணியாகும்.
42.
1. புதுமைப்படுத்துதல்
2. பிரதிநிதித்துவம்
3. முடிவெடுத்தல்
4. தகவல் தொடர்பு
43.
1. திட்டமிடுதல் என்பது மேலாண்மையின் செயல்பாடுகளில் முதன்மையானது ஆகும். திட்டமிடுதல் இல்லாமல் எந்த ஒரு காரியமும் செய்ய முடியாது.
2. திட்டமிடுதல் என்பது வருங்கால தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு ஆக்கபூர்வமான மதிப்பீடு ஆகும்.
44.
1) கணக்கியல்
2) வணிகச்சட்டங்கள்
3) உளவியல்
4) புள்ளியியல்
5) பொருளியல்
6) தரவு செயலாக்கம் போன்றவை மேலாண்மைக் கருவிகளாகும்.
45.
ஒரு வணிக நிறுவனத்தின் மேலாண்மை செய்பவர்கள் மற்றும் விஷயங்களை நிர்வகிப்பதற்கான ஒழுங்கமைக்கப்பட்ட வழி மேலாண்மை என்று அழைக்கப்படுகின்றது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards