12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 13/09/2019
சுற்றுச் சூழல் காரணிகள்
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
______ சூழலில் வானிலை மற்றும் காலநிலை நிலைமைகள் உள்ளன.
நுண்தன்மை கொண்டது
பேரியல் தன்மை கொண்டது
குறைந்தபட்சமானது
அதிகபட்சமானது
2.
இரண்டு முக்கிய வாணிபச் சூழல்கள் _______ மற்றும் ______ ஆகும்.
அகம் மற்றும் புறம்
உட்புறச் சூழல் மற்றும் வெளிப்புறச் சூழல்
நல்லது மற்றும் கெட்டது
அனுமதிக்கத்தக்கது மற்றும் அனுமதிக்கமுடியாதது
3.
வணிகத்தின் பரந்த சூழல் ஒரு ______ காரணியாகும்.
கட்டுப்படுத்த முடியாத
கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது
சமாளிக்கக்கூடியது
சமாளிக்க முடியாதது
4.
ஒரு நிறுவனத்திற்குள் உள்ள காரணிகள் _______ சூழல் ஆகும்.
அக சிந்தனையாளர்
புற நோக்கியான்
சக மனிதர்கள்
மேற்கூறிய அனைத்தும்
5.
VUCA ______, _______, ______, ________.
மதிப்பு நிச்சயமின்மை சிக்கலானது தெளிவில்லாதது
மதிப்பு தவிர்க்க இயலாதது நிறுமம் மற்றும் அதிகாரம்
மாற்றம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது நிறுமம் ஏலம்
மேற்கூறிய அனைத்தும்
6.
கலப்பு பொருளாதாரம் என்றால் என்ன?
7.
VUCA -ஐ விரிவாக்கம் தருக.
8.
பெருநிறுவன நிர்வாகத்தின் பொருள் என்ன?
9.
தொழில்நுட்ப சூழலை விளக்குக.
10.
எதிர்கால வாணிபச்சூழலைப்பற்றி குறிப்பு வரைக.
11.
சரக்குகள் மற்றும் சேவைகள் வரி குழுவின் செயல்பாடுகள் யாவை?
12.
வியாபாரத்தின் நுண்ணிய சூழல் காரணிகளை விளக்கு. (ஏதேனும் 5)
13.
வணிகத்தின் பொருளாதார மற்றும் சமூக கலாச்சார சூழலை விளக்குக.
1.
(b)
பேரியல் தன்மை கொண்டது
2.
(b)
உட்புறச் சூழல் மற்றும் வெளிப்புறச் சூழல்
3.
(a)
கட்டுப்படுத்த முடியாத
4.
(a)
அக சிந்தனையாளர்
5.
(a)
மதிப்பு நிச்சயமின்மை சிக்கலானது தெளிவில்லாதது
6.
அரசு மற்றும் தனியார் துறை ஆகிய இரண்டின் பங்களிப்பு இணைந்ததாக இருக்கும் பொருளாதாரம் கலப்பு பொருளாதாரம் எனப்படும். (எ.கா: இந்திய பொருளாதாரம்)
7.
விரைவான தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக வணிகத்தின் எதிர்கால சூழலை சுருக்கமாக ஏற்ற இறக்கம், நிச்சயமற்ற தன்மை, சிக்கலானத் தன்மை மற்றும் தெளிவற்றத் தன்மை கொண்டவை என்று கூறலாம்.
8.
(i) பெருநிறுவன ஆளுகை என்பது ஒரு நிறுவனத்தை நிர்வகிக்கும் விதிகள் மற்றும் கொள்கைகள் ஆகும். ஒரு நிறுவனத்தை நிர்வகித்து அதன் குறிக்கோளை அடைவதற்கான ஒரு வடிவமைப்பை இது வழங்குகிறது. இது உட்கட்டுப்பாட்டு செயல்திறன் அளவீடு மற்றும் பெருநிறுவனத்தை வெளிப்படுத்துதல் ஆகியவற்றிற்கான வழிகாட்டுதல்களை வழங்குகிறது.
(ii) பெருநிறுவன ஆளுகை என்பது பயமின்மை, வெளிப்படைத்தன்மை, பொறுப்பு மற்றும் பொறுப்பு ஏற்பு (Accountability) போன்ற நான்கு தூண்களை அடிப்படையாக கொண்டது.
9.
கடந்த காலங்களில் தொழில் நுட்பத்தின் விரைவான வளர்ச்சி அனைத்து வியாபாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பின் வளர்ச்சி உலகளாவிய சந்தையை உருவாக்கியுள்ளது.
1. புதுமைகளை படைத்து வாடிக்கையாளர்களை கவர்தல் மூலம் வணிகத்தின் வாழ்வாதாரத்தை நிலைநாட்டிக் கொள்ள முடியும்.
2. வாடிக்கையாளர்களை நன்கு அறிந்து கொள்ள தகவல் ஆய்ந்தெடுத்தல் மற்றும் தகவல் பகுப்பாய்வு பயன்படுத்தப்படுகின்றன.
3. இவை பொருட்களை நிர்வகிப்பதற்கும் உற்பத்தி செய்த பொருட்களை கிடங்குகளில் சேமித்து வைக்கவும் பணம் பெறவும் பயன்படுகின்றன.
1. நாடுகளில் கிடைக்கும் தொழில்நுட்பத்தின் நிலை.
2. தொழில்நுட்ப மாற்ற விகிதம்
3. போட்டியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழில் நுட்பம்.
4. காலாவதியான தொழில்நுட்ப முறைகள்.
10.
1. விரைவான தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக வணிகத்தின் எதிர்கால சூழலை சுருக்கமாக ஏற்ற இறக்கம், நிச்சயமற்ற தன்மை, சிக்கலானத் தன்மை மற்றும் வெளிவற்றத் தன்மை என்றும் கூறலாம்.
2. இது 1980 களின் பிற்பகுதிகளில் அமெரிக்க இராணுவத்தில் உருவானது.
3. மாறிவரும் சூழ்நிலை, கணிக்க முடியாத பல்வேறு காரணிகள் வணிகத்தை பாதிக்கும் சக்திகளாக உருவெடுத்து வருகிறது.
4. மேலும் எந்தெந்த காரணிகள் எதிர்காலத்தில் வணிகத்தை தாக்கும் என்ற தெளிவற்ற நிலை வணிகத்தை பாதிப்படைய செய்கின்றன.
5. நிச்சயமற்ற தன்மையை திட்டமிடுதல் மூலம் எதிர்கொள்ள தயாராக வேண்டும்.
6. வியாபாரத்தை பாதிக்கும் சிக்கலான காரணிகளை புரிந்துகொண்டு அத்துடன் அச்சிக்கலை தீர்க்க மாற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
7. எந்த வியாபாரத்தின் வெற்றிக்கும், தடையற்ற, நிச்சயமற்ற சூழல் போன்றவற்றுடன் ஒத்துபோகுதல் அவசியமாகும்.
11.
சரக்குகள் மற்றும் சேவைகள் வரிக்குழு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பரிந்துரைகளை வழங்கும்.
அவை பின்வருமாறு:
1) சரக்குகள் மற்றும் சேவைகள் வரிகளில் உட்படுத்துக்கூடிய மத்திய, மாநிலங்கள் மற்றும் உள்ளூர் அமைப்புகளால் விதிக்கப்படும் வரி, செஸ் மற்றும் கூடுதல் கட்டணம்.
2) GST வரி விலக்கு, மேல்வரி விலக்கு அளிக்கப்பட பொருட்கள் சேவைகள் தொடர்பாக.
3) மாதிரி பொருட்கள் மற்றும் சேவைகள் வரிச்சட்டங்கள் சேவைகள் வரியில் உள்நாட்டிற்கு கொடுக்கப்பட வேண்டிய மூலதனத்தீர்வை, மாநிலங்களுக்கு இடையேயான விற்பனை மீது விதிக்கப்படும் வரி அல்லது வணிக வரிசட்ட பிரிவு 269A ன் படி வழங்கப்பட வேண்டிய மூலதனத் தீர்வை ஆகியவை.
4) GST இல் இருந்து விலக்கு அளிக்கப்பட பொருட்கள் மற்றும் சேவைகள் நுழைவுத் திறனின் எல்லை வரம்பு பொருட்கள் மற்றும் சேவைகள் வரிகளின் தரவரிசைகளின் தர விகிதங்கள் உட்பட.
5) ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான சிறப்பு வரிவிகிதம் பற்றி அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்தில் உள்ள வரி விகிதங்கள் இயற்கை பேரழிவு அல்லது அதன் போது கூடுதல் வளங்களை உயர்த்துதல் தொடர்பான.
6) அருணாச்சல பிரதேசம், அசாம், ஜம்மு காஷ்மீர், மனிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா, ஹிமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு குறித்த பரிந்துரைகளை GST குழு வழங்கும்.
12.
வியாபாரத்தின் செயல் திறனை உடனடியாக பாதிக்கும் சுற்றுச் சூழலாக இருக்கும் காரணிகளை நுண்ணிய சூழல் குறிக்கிறது. இதில் பின்வருவன அடங்கும்.
(அ) நிதி அளிப்பவர்கள்:
(i) கடனீட்டுப் பத்திரதாரர்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் வணிகம் சிறந்த முறையில் இயங்க முக்கிய பங்கினை வகிக்கிறார்கள்.
(ii) அவர்களின் நிதிதிறன், கொள்கை உத்திகள், இடர் பற்றிய அணுகுமுறை மற்றும் நிதிசாரா அமைப்புகளின் பங்கு முக்கியமாக உள்ளது.
(ஆ) சரக்கு விற்பனையாளர்கள் :
எந்தவொரு அமைப்பிலும் மூலப்பொருட்கள் மற்றும் இதர உள்ளீடுகளின் வழங்குநர்கள் மிகவும் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். விநியோகிப்பாளரிடமிருந்து பெறப்படும் பொருட்கள் உற்பத்திகளில் தொடர்ச்சியான செயல்பாட்டை செயல்படுத்துகிறது.
(இ) சந்தையிடுகை இடைநிலையர்கள்:
(i) உற்பத்தி பொருளை விற்பனை செய்யவும் நுகர்வோரிடம் கொண்டு சேர்ப்பதற்கும் விநியோகிப்பாளர்களின் உதவி தேவைப்படுகிறது.
(ii) இவர்கள் நிறுவனத்தையும், நுகர்வோரையும் இணைக்கும் திகழ்கின்றனர். மொத்த விற்பனையாளர்கள் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் முகவர்கள் பொருள்களை நுகர்வோரிடம் சேர்ப்பதை உறுதி செய்கின்றனர்.
(ஈ) பொது மக்கள்:
தொழிலில் தாக்கத்தை ஏற்படுத்தும் பின்வரும் குழுக்கள் பொது மக்கள் எனப்படுகிறது.அவையானவை ஊடகக்குழு, குடிமக்கள் குழு மற்றும் உள்ளூர் பொது மக்கள் போன்ற குழுக்கள் வியாபாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பொது மக்களிடம் ஒரு வியாபாரத்தை உருவாக்குவதற்கும் அல்லது அழிப்பதற்குமான திறமை உள்ளது.
(உ) வாடிக்கையாளர்கள்
ஒவ்வொரு வியாபாரத்தின் நோக்கமும் அதன் வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவேற்றுவதாகும். வாடிக்கையாளரே வணிகத்தின் மன்னராக கருதப்படுகிறார் மற்றும் அவர்களைச் சுற்றியே வணிகம் உள்ளது.
(ஊ) போட்டியாளர்கள்:
அனைத்து நிறுவனங்களும் எல்லா நிலைகளிலும் போட்டியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.உள்ளுர், தேசிய மற்றும் உலகளாவிய அளவில் ஒரே மாதிரியான பொருள் உற்பத்தி அல்லது தயாரிப்புகள் இருப்பதால் நிறுவனங்கள் பல்வேறு நிலைகளில் போட்டியிட கூடிய நிலை ஏற்படுகிறது.
13.
1. வளர்ச்சி கட்டத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தின் இயல்பு:
i. நாடுகளை வளர்ந்த, வளரும் மற்றும் பின்தங்கிய நாடுகள் என வகைப்படுத்தலாம்.
ii. வளர்ந்த நாடுகள் - அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, கனடா மற்றும் ஆஸ்திரேலியா. இவை பல கணினி சார்ந்த தொழில் நுட்பங்களை வெற்றிகரமாக ஒருங்கிணைத்துள்ளன.
iii. வளரும் நாடுகள் -இந்தியா, சீனா, பிரேசில், மெக்சிகோ, ஏற்றத்தாழ்வு, அதிக மக்கள் தொகை மெதுவாக தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ளுதல் போன்றவை இவற்றின் தன்மைகள்.
iv) பின்தங்கிய நாடுகள் -மிக குறைந்த அளவிலான தொழில்நுட்ப தத்தெடுப்பு, குறைவான வாழ்க்கை தரம்.
2. பொருளாதார அமைப்பு முறையின் இயல்புகள்:
முதலாளித்துவம் - நாட்டின் அனைத்து வளங்களையும் தனிநபர் அல்லது தனியார் நிறுவனங்கள் சொந்தமாக்கி கொள்ள அரசு கொள்ள அரசு அனுமதி அளித்தல்.
சமதர்மம் (அ) சோசலிசம் - தனியார் துறை மீது அதிக கட்டுப்பாடு.
3. தேசத்தின் பொருளாதாரக் கொள்கை:
நாணயக் கொள்கை, ஏற்றுமதி இறக்குமதிக் கொள்கை, தொழில்துறைக் கொள்கை, வர்த்தகக் கொள்கை, நிதிக்கொள்கை ஆகியவை பொருளாதார சூழலின் பகுதியாக உள்ளது.
4. பொருளாதாரக் குறியீடுகள்:
மொத்த உள்நாட்டு உற்பத்தி, மொத்த தேசிய உற்பத்தி, தேசிய வருமானம், தனிநபர் வருமானம், செலுத்துகை சமநிலை, சேமிப்பு விகிதம் மற்றும் முதலீடுகள் போன்ற பொருளாதார குறியீடு முக்கியமான பகுதியை உருவாக்குகிறது.
5. நிதிசந்தை அபிவிருத்தி:
தொழில்துறை வளர்ச்சி, பணச்சந்தை, மூலதனச்சந்தை, பங்குச்சந்தை, பத்திர சந்தை மற்றும் சிறந்த வங்கியில் அமைப்பு முறை போன்றவற்றின் வெளிப்பாடு.
6. பொருளாதாரக் கட்டமைப்பு:
மூலதன உருவாக்கம், முதலீட்டு முறை, வர்த்தக சமநிலை, தொழிலாளர் உழைப்பின் அழிப்பு மற்றும் தேசிய உற்பத்தியின் கட்டமைப்பு ஆகியவை உள்ளடக்கியது.
சமூக கலாச்சார சூழல்:
1. சமூக நிறுவனங்கள் மற்றும் குழுக்கள்.
2. சமுதாயத்தில் பரவலான குடும்ப அமைப்பு.
3. வணிகத்தில் திருமணத்தின் பங்கு.
4. சமூகத்தின் சாதி அமைப்பு முறை.
5. மக்களின் பழக்க வழக்கம், நம்பிக்கை (மற்றும்) சுயமரியாதை.
6. மக்கள் தொகை காரணிகள்.
7. மக்கள் வாழ்க்கைமுறை, சுவை, விருப்பம் மற்றும் முன்னுரிமைகள்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards