12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 20/01/2020
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
நுகர்வோர் ஒரு பொருளை வாங்கும் பொழுது எவ்வாறு வாங்கக்கூடாது?
2.
ஒரு நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் மனுவை தாக்கல் செய்யும் முன் செய்ய வேண்டியவை யாவை?
3.
விளம்பரத்தின் முக்கிய நோக்கம் யாது?
4.
ஒரு நிறுமம் 15 இயக்குனர்களுக்கு மேற்பட்ட இயக்குனர்களை நியமனம் செய்து கொள்ளலாமா?
5.
ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்து மகளிரும் நிதியுதவி பெற முடியுமா?
6.
நிறும செயலர் வரைவிலக்கணம் தருக.
7.
தூண்டப்பட்ட தொழில் முனைவோர் என்பவர் யார்?
8.
விலை என்பது யாது?
9.
"வர்த்தக வட்டம்" என்றால் என்ன?
10.
சுற்றுச்சூழல் பகுப்பாய்வு செய்ய உதவும் காரணிகள் யாவை?
11.
நேர்காணல் - வரைவிலக்கணம் தருக.
12.
இந்தியாவில் 1986 வரை கிடைத்த பணச் சந்தையின் ஆவணங்களைக் கூறு.
13.
ஒரு நிறுவனம் தமக்கு தேவையான பணியாளர்களை எந்த வழிகளில் தேர்வு செய்யலாம்?
14.
பரஸ்பர நிதி வணிகத்தில் ஈடுபடும் சில நிறுவனங்களைக் கூறுக
15.
மனித மேலாண்மை என்பது கண்ணுக்குப் புலப்படுமா? அது ஏன்?
16.
முதல் நிலைச் சந்தை என்றால் என்ன?
17.
இந்திய மகளிர் தொழில் முனைவோர் கூட்டமைப்பு பற்றி கூறுக
18.
எதன் அடிப்படையில் குறிக்கோள்கள் கட்டமைக்கப்படுகின்றன?
19.
சரக்குகளை பெறுவதற்காக மாற்றுச்சீட்டு தயாரிக்கலாமா? ஏன்?
20.
பசுமை சந்தைப்படுத்தல் என்றால் என்ன?
21.
வகைப்படுத்துதல் என்றால் என்ன?
22.
சந்தையிடுகை கலவையின் வரைவிலக்கணம் தருக
23.
சந்தையிடுகையாளர் வரைவிலக்கணம் தருக.
24.
மேற்பார்வை வீச்செல்லை என்பதன் பொருள் யாது?
25.
மேலாண்மைக் கருவிகளைப் பட்டியலிடுக.
1.
1. பொருளை வாங்கும் போது உறையுடன் கூடியதான நிகர எடையாக வாங்கக்கூடாது
2. அதன் எடை மற்றும் அளவை கண்காணிக்க வேண்டும்
2.
புகார் மனுவை பொருள் தயாரித்த நிறுவனத்திற்கோ அல்லது பொருள் விற்ற நிறுவனத்திற்கோ சட்டப்படி அறிவிப்பை நுகர்வோர் அனுப்ப வேண்டும்
3.
நுகர்வோர் மற்றும் பொருளை பயன்படுத்துபவருக்கு பொருள் அல்லது சேவை குறித்த தகவலை அளிப்பது
4.
ஒரு நிறுமம் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி 15 இயக்குனர்களுக்கு மேற்பட்ட இயக்குனர்களை நியமனம் செய்யலாம்.
5.
1. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினை மகளிர் மட்டுமே ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் பயன் பெற முடியும்.
2. நிதி வசதி 10 லட்சம் முதல் 1 கோடி வழங்கப்படுகிறது.
6.
"ஒரு நிறுமத்தின் அமைச்சராக (அல்லது) நிர்வாக பணிகளை செய்து முடிக்க தேவையான அனைத்து தகுதிகளும் பெற்றுள்ள தனிநபர்". - நிறும சட்டம் 2013 பிரிவு 2 (14)
7.
அரசு வழங்கும் சலுகைகள், மானியங்கள் மற்றும் வரிவிலக்கு போன்ற தொழில் முனைவுக்கு சாதகமான செயலால் கவர்ந்திழுக்கப்பட்டு தொழில் முனைவில் இறங்குபவர்.
8.
1. பொருளின் விற்பனைக்கான மறுபயனே விலை எனப்படும்.
2. பொருளை மற்றொரு பொருளுக்கு மாற்றாக பரிமாற்றம் செய்து கொள்வது விலை ஆகாது.
9.
பங்குச் சந்தைக்கு அங்கீகரிக்கப்பட்ட தரகர்கள் தினசரி வருகை தந்து ஒன்றுகூடி வணிக நடவடிக்கைகளின் ஈடுபடும் ஒரு குறிப்பிட்ட சந்தை பகுதி "வர்த்தக வட்டம்" என்று அழைக்கப்படுகிறது
10.
1. வணிகத்தின் பலம்
2. பலவீனம்
3. வாய்ப்புகள் மற்றும்
4. அச்சுறுத்தல்கள்
11.
ஸ்காட் என்பவரது கூற்றுப்படி "நேர்காணல் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு இடையே நிகழும் குறிப்பிட்ட நோக்கத்திற்கான கருத்துப் பரிமாற்றம், வினாக்களுக்கு விடை பகர்தல் மற்றும் தகவல் தொடர்பாகும்.
12.
(i) கருவூல சீட்டுகள்
(ii) வணிக ரசீதுகள்
(iii) குறுகிய கால அறிவிப்பு மற்றும் அழைப்புப் பணம்
(iv) உறுதிமொழிப் பத்திரம்
13.

14.
1. ஆயுள் காப்பீட்டு கழகம்
2. UTI
3. வணிக வங்கிகள்
4. SBI - பாரத ஸ்டேட் வங்கி
5. கனரா வங்கிகள்
15.
1. மனித வள மேலாண்மை என்பது ஒரு கண்ணுக்குப் புலனாகாத செயல்பாடு.
2. இது முடிவுகளால் மட்டுமே அளவிட முடியும்.
16.
நிறுமங்கள் முதன் முதலில் பத்திரங்களை விற்பனை செய்வதில் பங்குபெறும் அனைத்து நிறுவனங்களையும் உள்ளடக்க பயன்படுத்தப்படும் சொல் முதல் நிலைச் சந்தை எனப்படும்
17.
(i) 1996 ஆம் ஆண்டு அரசு சார்புடைய தோற்றுவிக்கப்பட்டது
(ii) இந்திய தேசிய வாரியம் மற்றும் சிறு, நடுத்தர தொழில் அமைச்சகத்தின் உறுப்பினராகவும் செயல்படுகிறது.
(iii) ஊரக வளர்ச்சி அமைச்சகத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறது
18.
1. கிடைக்கக்கூடிய வளங்களின் அடிப்படையில் குறிக்கோள்கள் கட்டமைக்கப்படுகின்றன.
2. சில வளங்கள் போதுமானதாக இல்லை என்றால், அமைப்பின் குறிக்கோள்கள் அதற்கேற்றபடி மாற்றம் செய்யப்பட வேண்டும்.
19.
(i) தயாரிக்க இயலாது
(ii) மாற்றுச் சீட்டில் இடப்படும் கட்டளை பணம் கொடுக்குமாறு மட்டுமே இருக்க வேண்டும்
20.
1. சுற்றுச் சூழலுக்கு எவ்வித தீங்கும் விளைவிக்காமல் சுற்றுப்புறச் சூழலுக்கு பாதுகாப்பாக சந்தைப்படுத்துவதை பசுமை சந்தைப்படுத்துதல் எனலாம்.
2. சுற்றுச் சூழல் சந்தைப்படுத்தலுக்கு சூழல் நட்பு சந்தைப்படுத்தல் எனவும் பெயர் உண்டு.
21.
நிர்ணயம் செய்யப்பட்ட தர அலகுகளின் அடிப்படையில் பொருட்களை பல வகைகளாகப் பாகுபாடு செய்தலையே வகைப்படுத்துதல் எனப்படும்.
22.
அமெரிக்கா சந்தையிடுகை கழகத்தின் கூற்றுப்படி, "சந்தையிடுகை என்பது மக்கள் மற்றும் அவர்களின் நடவடிக்கைகளை உள்ளடக்கி பண்டங்கள் மற்றும் பணிகளை உற்பத்தியாளரிடமிருந்து நுகர்வோருக்கு கொண்டு சேர்ப்பதையே சந்தையிடுகை ஆகும்".
23.
தொழில் அகராதியின் கூற்றுப்படி "யார் ஒருவர் ஒரு குறிப்பிட்ட நுகர்வோருக்கான பண்டங்கள் மற்றும் பணிகளின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல் நிறுவனங்கள் சார்பாக பண்டங்கள் மற்றும் பணிகளை சந்தையிடுகை செய்கிறாரோ அவரே சந்தையிடுகையாளர் ஆவார்”.
24.
ஒரு உயர் அலுவலரால் திறமையாக மேலாண்மை செய்யப்படும் கீழ்ப்பணியாளர்களின் எண்ணிக்கையை மேலாண்மையின் வீச்செல்லையை குறிக்கின்றது. மேலாண்மையின் பரப்பளவு என்பது மேலாளரின் கீழ் நேரடியாகப் பணியாற்றும் கீழ்பணியாளர்களின் அளவு ஆகும்.
25.
1) கணக்கியல்
2) வணிகச்சட்டங்கள்
3) உளவியல்
4) புள்ளியியல்
5) பொருளியல்
6) தரவு செயலாக்கம் போன்றவை மேலாண்மைக் கருவிகளாகும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards