12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 03/10/2019
மேலாண்மை செயல்பாடுகள்
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
"மாற்றம்" - வியாபார உலகின் மந்திரச் சொல் - விளக்குக.
2.
மேலாண்மையின் முக்கிய செயல்பாடுகள் யாவை?
3.
செயலூக்கமளித்தலின் நன்மைகளைக் குறிப்பிடுக.
4.
தொடர்புபடுத்துதல் செயல்பாட்டின் பங்கு யாது?
5.
முடிவெடுத்தல் முக்கியமென்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்?
6.
இயக்குதலின் முக்கியத்துவம் என்ன?
7.
குறிப்பு வரைக:
i) ஒழுங்கமைத்தல்
ii) பணிக்கமர்த்துதல்
8.
மேலாண்மையின் துணை செயல்பாடுகளை விளக்குக.
9.
மேலாண்மையின் பல்வேறு பணிகளை விளக்குக. (ஏதேனும் 5)
1.
1. வியாபாரத்தில் தொடர்ச்சியான மாற்றங்கள் நிகழ்கின்றன.
2. புதுமைப்படுத்துதல் அல்லது மாற்றங்கள் மூலம் நுகர்வோர்கள் திருப்தி அடைகின்றனர்.
3. மாற்றங்கள் மூலம் நிறுவனத்தின் வளர்ச்சியும், இலாபமும் பெருகுகின்றது.
2.
1. திட்டமிடுதல்
2. ஒழுங்கமைத்தல்
3. பணிக்கமர்த்துதல்
4. இயக்குவித்தல்
5. கட்டுப்பாடு காத்தல்
6. ஒருங்கிணைத்தல்
7. செயலூக்கமளித்தல்
3.
1. செயலூக்கமளித்தல் மூலமே நிறுவனத்தின் நோக்கங்களை அடைய முடியும்.
2. ஒரு பணியை விரைவாக செய்து முடிப்பதிலும், பணியாளர்களின் பணியின் மீதான விருப்பத்தை வளர்ப்பதிலும் செயலூக்கமளித்தல் பயன்படுகிறது.
3. ஒரு வளமிக்க தலைமையின் கீழ் செயல்படுவதால் மேலாண்மையின் இலக்கை எளிதில் அடைய முடிகிறது.
4.
1. தொடர்பு என்பது மனித எண்ணங்களை, கண்ணோட்டங்களை அல்லது கருத்துக்களை ஒரு நபர் மற்றொரு நபருக்கு பரிமாற்றம் செய்வது ஆகும்.
2. வேலையை ஒழுங்குபடுத்துவதற்கும், நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கும் தொடர்புபடுத்துதல் உதவுகிறது.
3. இலக்குகளை எளிதில் அடைவதற்கும் தொடர்புபடுத்துதல் பயன்படுகிறது.
5.
1. முடிவெடுத்தல் என்பது மேலாண்மையில் ஒரு முக்கியமான பணியாகும்.
2. ஒரு அமைப்பின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு ஒவ்வொரு பணியாளரும் பல்வேறு எண்ணிக்கையிலான முடிவுகளை எடுக்கின்றனர்.
3. ஒரு அமைப்பு இலகுவாக செயல்படுவதற்கு முடிவெடுத்தல் உதவுகிறது.
6.
1. இலக்குகளை சாதிக்கும் பொருட்டு தொடர்ச்சியான அடிப்படையில் செயலூக்கமளித்தல், முன்னையிலிருத்தல், வழிகாட்டுதல் மற்றும் கீழ்நிலைப் பணியாளர்களுடன் தொடர்புபடுத்துதல் போன்றவற்றிற்கு இயக்குதல் பயன்படுகிறது.
2. அமைப்பின் இலக்குகளை நிறைவேற்றுவதற்கு பணியாளர்களை இயக்கும் பொருட்டு சுற்றறிக்கைகள், செய்தி மடல்கள், கூட்டம் ஆகியவற்றின் மூலமாக அனைத்து விபரங்களும், உரிய தகவல்களும் தெரிவிக்கப்படுகின்றன.
7.
i) ஒழுங்கமைத்தல்:
ஒரு அமைப்பின் உறுப்பினர்களுக்கு இடையில் இணக்கமான உறவை ஏற்படுத்துவதாலும், ஒரு வலைப்பின்னல் போன்ற அமைப்பை அவர்களது உறவுகளுக்கு இடையில் உருவாக்கும் செயல்முறையே ஒழுங்கமைத்தல் ஆகும்.
ii) பணிக்கமர்த்துதல்:
பணியாளர்களை தேர்வு செய்தல் மற்றும் திறமையான பணியாளர்களுக்கு பணியிடமளித்தல் செயல்பாடுகளை பணிக்கமர்த்துதல் என்றழைக்கிறோம்.
8.
1. புதுமைப்படுத்துதல்:
i. வியாபார உலகில் செய்யப்படும் மாற்றங்களை எதிர்கொள்ள ஊழியர்களையும், அமைப்பையும் தயார்நிலைப்படுத்தும் செயல்பாடு புதுமைப்படுத்துதல் எனப்படும்.
ii. நுகர்வோர்கள் புதுமைப்படுத்துதல் மூலம் திருப்தி அடைகின்றனர்.
2. பிரதிநிதித்துவம்:
i. ஒரு மேலாளர் ஒரு நிறுவனத்தின் பிரதிநிதியாக செயல்பட வேண்டும்.
ii. வாடிக்கையாளர்கள், பொருட்கள் மற்றும் சேவையை அளிப்பவர்கள், அரசாங்க அதிகாரிகள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் இதைப் போன்றவர்களுடன் ஒரு மேலாளர் தொடர்புடன் இருக்க வேண்டும்.
3. முடிவெடுத்தல்:
i. ஒரு அமைப்பின் ஒவ்வொரு பணியாளரும் பல்வேறு எண்ணிக்கையிலான முடிவுகளை ஒவ்வொரு நாளும் எடுக்கின்றனர்.
ii. ஒரு அமைப்பு இலகுவாக செயல்படுவதற்கு முடிவெடுத்தல் உதவுகிறது.
4. தகவல் தொடர்பு:
i. தொடர்பு என்பது மனித எண்ணங்களை, கண்ணோட்டங்களை அல்லது கருத்துக்களை ஒரு நபர் மற்றொரு நபருக்கு பரிமாற்றம் செய்வது ஆகும்.
ii. வேலையை ஒழுங்குபடுத்துவதற்கும், நடவடிக்கையை ஒருங்கிணைப்பதற்கும் தொடர்பு உதவுகிறது.
9.
மேலாண்மை பணிகளை இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தலாம் அவை முக்கிய பணிகள் மற்றும் துணைப்பணிகள் ஆகும்.
முதன்மைப் பணிகள்:
(i) திட்டமிடுதல்:
திட்டமிடுதல் என்பது மேலாண்மையின் செயல்பாடுகளில் முதன்மையானது ஆகும். திட்டமிடுதல் என்பது வருங்கால தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு ஆக்கபூர்வமான மதிப்பீடு ஆகும்.
(ii) அமைத்தல் :
பணியாளர்களுக்கு பணிகளை ஒப்படைவு செய்வதும் அப்பணிகளை நிறைவேற்றுவதற்கு போதிய அதிகாரங்களை வழங்குவதும் மேலும் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு பணியாளரே பொறுப்பேற்க செய்வதும் அமைத்தல் பணி எனப்படுகிறது.
(iii) பணியமர்த்தல் :
பணியமர்த்தல் என்பது பணியாளர்களைத் தேர்வு செய்தல் மற்றும் திறமையான பணியாளர்களுக்கு பணியிடமளித்தல் செயல்பாடுகளை பணியமர்த்தல் உள்ளடக்கியுள்ளது.
(iv) இயக்குவித்தல் :
தற்போதைய இலக்குகளை சாதிக்கும் பொருட்டு தொடர்ச்சியான அடிப்படையில் செயலூக்கமளித்தல், முன்னணியிலிருத்தல், வழிகாட்டுதல் மற்றும் கீழ்நிலைப் பணியாளர்களுடன் தொடர்புபடுத்துதல் போன்றன இயக்குதலைக் குறிக்கிறது.
(v) கட்டுப்படுத்துதல் :
ஊக்க ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு அளிக்கும் முடிவுகளை எடுப்பதற்கும் பணியாளர்களின் செயல்திறனை மதிப்பிடுவதற்கும் கட்டுப்படுத்துதல் செயல்பாடு பயன்படுகிறது.
(vi) ஒருங்கிணைத்தல் :
ஒரு நிறுவனம் தனது குறிக்கோளை அடைவதற்கு பல்வேறு திறன்கள் கொண்ட பணியாளர்களை ஒருங்கிணைப்பது ஒருங்கிணைத்தல் எனப்படுகிறது. நிறுவனத்தின் ஒவ்வொரு மேலாண்மை பணிகளிலும் ஒருங்கிணைத்தல் பணி உள்ளடங்கியுள்ளது.
(vii) செயலூக்கமளித்தல் :
செயலூக்கமளித்தல் மூலமே நிறுவனத்தின் நோக்கங்களை அடைய முடியும். ஒரு பணியை விரைவாக செய்து முடிப்பதையும், பணியாளர்களின் பணியின் மீதான விருப்பத்தை வளர்ப்பதையும் செயலூக்கமளித்தல் என்ற சொல் உள்ளடக்கியுள்ளது.
துணைப்பணிகள் :
(i) புதுமைப்படுத்துதல் :
வியாபார உலகில் செய்யப்படும் மாற்றங்களை எதிர்கொள்ள ஊழியர்களையும் அமைப்பையும் தயார் நிலைப்படுத்தும் செயல்பாடு புதுமைப்படுத்துதல் என்பதைக் குறிக்கிறது. வியாபாரத்தில் தொடர்ச்சியான மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
(ii) பிரதிநிதித்துவம் :
ஒரு மேலாளர் ஒரு நிறுவனத்தின் பிரதிநிதியாக செயல்பட வேண்டும். வாடிக்கையாளர்கள், பொருட்கள் மற்றும் சேவையை அளிப்பவர்கள். அரசாங்க அதிகாரிகள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் இதைப் போன்றவர்களுடன் மேலாளர் தொடர்புடன் இருக்க வேண்டும்.
(iii) முடிவெடுத்தல் :
ஒரு அமைப்பின் ஒவ்வொரு பணியாளரும் பல்வேறு எண்ணிக்கையிலான முடிவுகளை ஒவ்வொரு நாளும் எடுக்கின்றனர்.ஒரு அமைப்பு இலகுவாக செயல்படுவதற்கு முடிவெடுத்தல் உதவுகிறது.
(iv) தகவல் தொடர்பு:
தொடர்பு என்பது மனித எண்ணங்களை, கண்ணோட்டங்களை அல்லது கருத்துக்களை ஒரு நபர் மற்றொரு நபருக்கு பரிமாற்றம் செய்வதைக் குறிக்கிறது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards