12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 14/11/2019
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
குறித்த நேரத்தில் பொருட்களை நுகர்வோர் பெறவில்லையெனில் அதனால் ஏற்படும் இழப்பிற்கு பொறுப்பாக்குபவர் ______
உற்பத்தியாளர்
விற்பாண்மையர்
நுகர்வோர்
விற்பனையாளர்
2.
மேல்முறையீடு எத்தனை நாட்களுக்கு செய்ய வேண்டும்?
3
9
15
30
3.
ஒரு நபர் நிறுமத்தில் உள்ள இயக்குநர்களின் எண்ணிக்கை
1
2
3
15
4.
இந்திய பங்கு வைப்பு கழகம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு _______
1986
1956
1994
1992
5.
ஆட்சேர்ப்புக்கான காரணங்கள்
பணியாளர் ஓய்வு
பணியாளர் இறப்பு
பணியாளர் வேலை துறப்பு
இவை அனைத்தும்
6.
கடனுறுதி சீட்டின் சலுகை நாள் எத்தனை?
ஆறு
ஐந்து
மூன்று
இரண்டு
7.
பரிந்துரை சந்தை
பல்நோக்கு சந்தை
உள்ளடக்க சந்தை
மறைமுக சந்தை
8.
சந்தையிடுகையானது _________ மற்றும் _________ இணைக்கும் ஒரு தொடர் சங்கிலியாக செயல்படுகிறது.
உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர்
உரிமையாளர் மற்றும் நுகர்வோர்
மொத்த வியாபாரி மற்றும் நுகர்வோர்
இவற்றில் எதுவுமில்லை
9.
பயிற்சி பணியாளர்களிடையே _________ பற்றிய நல் மனப்பாங்கு, நம்பகத்தன்மை ஏற்படுத்தப்படுகிறது.
பணி
நடத்தை
சம்பளம்
இவற்றில் ஏதுமில்லை
10.
புதிது புனைதல் மற்றும் தொழில் முனைவோர் கலாச்சாரத்தை ஊக்குவிக்க இந்திய அரசு _______ முயற்சிக்கிறது.
அடல் புதுமை புகுத்தல் திட்டம் (AIM)
பெண்களுக்கு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான ஆதரவு.
விஞ்ஞான அடிப்படையில் அதிகாரமளித்தல் மற்றும் அபிவிருத்தி
அடல் இன்னோவேஷன் சென்டர்ஸ்
11.
ஸ்டார்ட் அப் இந்தியா இந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது.
1996
2016
2019
1992
12.
பொருளின் மீதான உரிமை என்பது
பொருளின் உடைமை
பொருளைப் பாதுகாத்தல்
பொருளின் மீதான உரிமை பாத்தியம் வைத்திருப்பவர்
இவற்றில் ஏதுமில்லை
13.
______ உரிமைகள் சர்வதேச மட்டத்தில் வலுவான அஸ்திவாரத்தின் காரணமாக தைரியமான மேலாண்மை முடிவுகளை எடுக்கின்றன.
தனியார்
பொது
கார்ப்பரேஷன்
NMC
14.
15.
"நுகர்வோரியல்" எனும் சொல் தோன்றிய ஆண்டு
1960
1957
1954
1958
16.
பங்கு பரிவர்த்தனை சந்தை இவ்வாறு அழைக்கப்படுகிறது.
களச்சந்தை
உள்ளூர் சந்தை
பத்திரங்களின் சந்தை
தேசிய சந்தை
17.
இந்தியாவில் மூலதனச் சந்தையை கட்டுப்படுத்த எந்த ஆண்டு செபி அமைக்கப்பட்டது?.
1988
1992
2014
2013
18.
19.
20.
அறிவியல் பூர்வ மேலாண்மை கோட்பாட்டை உருவாக்கி வளர்த்தவர்
ஃபோயல்
டேலர்
மேயோ
ஜேக்கப்
21.
புறத்தோற்றமற்ற கணக்கிற்கு தேவையான ஆவணங்கள் யாவை?
22.
ஊக்கப்பங்குகள் என்றால் என்ன?
23.
இயக்குனர்களின் பதிவேடு என்பது யாது?
24.
இணைய வழி நேர்காணல் - குறிப்பு வரைக.
25.
மனித வள மேலாண்மை ஒரு அறிவியலா? அல்லது கலையா? உன்னுடைய கூற்றை தருக.
26.
"மாற்றம்" - வியாபார உலகின் மந்திரச் சொல் - விளக்குக.
27.
முதலீடுகளை திரும்பப்பெறுதலின் நன்மைகள் யாவை?
28.
பயிற்சி அளிப்பவர் மற்றும் பயிற்சி பெறுபவர் பற்றி சிறு குறிப்பு எழுதுக.
29.
குறியிலக்கு மேலாண்மையின் இயல்புகளை எழுதுக.
30.
மேலாண்மையை நிர்வாகத்திலிருந்து வேறுபடுத்துக. (ஏதேனும் 3)
31.
நுகர்வோர் மன்றத்தின் தலையாய நோக்கம் யாது?
32.
இந்தியாவில் பங்கு மாற்றகத்தின் தோற்றம் குறித்து சிறு குறிப்பு வரைக
33.
வணிக சுற்றுச் சூழல் என்றால் என்ன?
34.
நேர்காணல் - வரைவிலக்கணம் தருக.
35.
மனித வளத்தை நிர்வகிப்பதற்கு முக்கியமானதாக கருதப்படுவது எது?
36.
காசோலையை பென்சிலால் எழுதலாமா? ஏன்?
37.
புதுமைப்படுத்துதல் என்றால் என்ன?
38.
இயக்குனர் என்பதை வரையறுக்க.
39.
மேலாண்மை என்றால் என்ன?
40.
மனித வள மேலாண்மையின் சிறப்பியல்புகள் யாவை?
41.
சந்தையிடுகை பணிகளில் வசதிப் பணிகளை விளக்குக. (அல்லது) சந்தையிடுகை பணிகளின் துணைப் பணிகள் யாவை?
42.
சந்தையிடுகையாளரின் பணிகளை விளக்குக.
43.
பலவகையான திறந்த மற்றும் இரகசிய வகையில் செய்யப்படும் வாக்கெடுப்பு முறைகளை விளக்குக.
44.
45.
ஊரக மற்றும் நகர்ப்புற தொழில்முனைவோரை வேறுபடுத்திக் காட்டுக.
46.
தொழில் முனைவோர் மற்றும் அகத்தொழில் முனைவோர் இவர்களை வேறுபடுத்துக. (ஏதேனும் 5)
47.
48.
நுகர்வோரின் உரிமைகள் யாவை?
49.
ஏதேனும் ஐந்து நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை எழுதுக.
50.
51.
மூலதனச் சந்தையின் சிறப்பியல்புகளை விவாதிக்க.
52.
நிதிச் சந்தையின் பங்கினை விவாதிக்கவும்.
53.
மேலாண்மைச் செயல்முறைகளை விரிவாக விளக்குக.
1.
(c)
நுகர்வோர்
2.
(d)
30
3.
(a)
1
4.
(a)
1986
5.
(d)
இவை அனைத்தும்
6.
(a)
ஆறு
7.
(c)
உள்ளடக்க சந்தை
8.
(a)
உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர்
9.
(a)
பணி
10.
(a)
அடல் புதுமை புகுத்தல் திட்டம் (AIM)
11.
(b)
2016
12.
(c)
பொருளின் மீதான உரிமை பாத்தியம் வைத்திருப்பவர்
13.
(a)
தனியார்
14.
(b)
15.
(a)
1960
16.
(c)
பத்திரங்களின் சந்தை
17.
(a)
1988
18.
(a)
19.
(c)
20.
(b)
டேலர்
21.
(i) பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கணக்கு துவக்க படிவத்துடன் அடையாள மற்றும் முகவரி சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும்
(ii) ஆவணங்களின் நகல் பிரதிகளை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் சரிபார்ப்புக்கு மூலச் சான்றிதழ்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்
22.
1. செயல்முறை விதிகளின்படி ஒரு நிறுமமானது தனது முதலில் ஏற்பட்ட இலாபத்தை பெருக்கும் நோக்கில் முழுவதும் செலுத்தப்பட்ட பங்குகளை ஊக்கப்பங்காக வெளியிடுகிறது.
2. நிறுமத்தின் உபரிகளையும் காப்புகளையும் முறையாக பயன்படுத்துதல் ஆகும்.
3. முந்தைய பங்குதாரர்கள் எவ்வித மறுபயன் எதிர்பார்க்காமல் இது வெளியிடப்படும்.
23.
1. இது பங்குதாரர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இயக்குனர் பட்டியல்.
2. பொதுவாக இதில் கம்பெனியின் கூட்ட நடவடிக்கை எழுதப்படும்.
3. இயக்குனர் பதவியிலிருந்து இறந்தவர்கள், பதவி விலகியவர்கள், நீக்கப்பட்டவர்களின் விவரமும் இருக்கும்.
24.
1. தகவல் தொடர்புத் துறையில் ஏற்பட்ட பிரமிக்கத்தக்க தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக வலைதளத்தின் மூலம் நடைபெறும் நேர்காணல் ஆகும்.
2. விண்ணப்பதாரர்களிடம் நேரடியாக காணொளிக்காட்சி உரையாடல் மூலம் நேர்காணல் செய்யப்படுகிறது.
3. இதன் மூலம் பணம், நேரம், உழைப்பு மிச்சப்படுத்தப்படுகிறது.
25.
1. மனித வள மேலாண்மை என்பது அறிவியல் மற்றும் கலை ஆகிய இரண்டுமாக இருத்தல் வேண்டும்.
2. இது சோதனைகள் மற்றும் உற்றுநோக்கல் அடிப்படையிலும் அத்துடன் திறம்பட மனித வளத்தைக் கையாள்வதின் அடிப்படையிலும் இவை அறிவியல் மற்றும் கலை ஆகிய இரண்டுமாக கருதப்படுகிறது.
26.
1. வியாபாரத்தில் தொடர்ச்சியான மாற்றங்கள் நிகழ்கின்றன.
2. புதுமைப்படுத்துதல் அல்லது மாற்றங்கள் மூலம் நுகர்வோர்கள் திருப்தி அடைகின்றனர்.
3. மாற்றங்கள் மூலம் நிறுவனத்தின் வளர்ச்சியும், இலாபமும் பெருகுகின்றது.
27.
1. பொதுக் கடன் குறைதல்
2. வணிக ரீதியான ஆபத்தை தனியார் துறைக்கு மாற்றுவது.
3. தனியார் மூலதனத்தை அதிகமாக ஊக்கப்படுத்துவது.
4. புதிய நிறுவனங்களை சந்தையில் நுழைவதற்கு அனுமதிக்கிறது.
28.
பயிற்சி அளிப்பவர்:
(i) பணியாளருக்குத் திறன்களை போதித்து பணியை சிறப்பாக செய்ய தயார் செய்யும் ஒரு நபர் பயிற்றுவிப்பாளர் ஆவார்.
(ii) பயிற்றுவிப்பவர் என்பவர் பயிற்சியாளர், ஆசிரியர் வழிகாட்டல், ஆலோசகர்,
ஆலோசகர் கையேடு, குரு, மேலாளர், கையாளுநர், ஆசிரியர் மற்றும் கல்வியாளர் போன்றோர்.
பயிற்சி பெறுபவர்:
(i) ஒரு வேலையின் திறனை கற்றுக் கொள்ளும் நபரே பயிற்சி பெறுபவர் ஆவர்.
(ii) பயிற்சி பெறுபவர் மனிதவள மேன்மைத் துறை அல்லது மேற்பார்வையாளரின் பரிந்துரையின் அடிப்படையிலும் தன் சுய ஆர்வத்தின் அடிப்படையிலும் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுகிறார்.
29.
(i) குறுகிய கால இலக்குகளுடன் நிறுவனத்தின் நீண்டகால இலக்குகளை இணைக்க குறியிலக்கு மேலாண்மை முயற்சி செய்கிறது.
(ii) சமுதாய குறிக்கோள்களுடன் அமைப்பின் குறிக்கோள்களை தொடர்புபடுத்த முயற்சி செய்கிறது.
(iii) குறியிலக்கு மேலாண்மை இலக்குகளை மட்டும் அடையச் செய்வதல்ல, திறமையான செயல்திறனையும் அடையச் செய்கிறது.
(iv) இது அனைத்து நிலைகளிலும் இலக்குகளை அடைவதற்கான அமைப்பின் திறனை அதிகரிக்கச் செய்கிறது.
(v) குறியிலக்கு மேலாண்மை மூலம் ஊழியர்களுக்கு அதிகபட்ச ஊக்கம் மற்றும் திருப்தி கிடைக்கச் செய்கிறது.
30.
| கோட்பாட்டின் அடிப்படை | மேலாண்மை | நிர்வாகம் |
|---|---|---|
| பொருள் | மேலாண்மை என்பது மற்றவர்களின் முயற்சி மற்றும் ஒத்துழைப்புடன் நோக்கங்களை எய்தும் ஒரு கலையாகும். | ஒரு குழுவால் ஒரு நிறுவனத்தை நிர்வகிப்பதற்கான செயல் முறையே நிர்வாகம் என்று அழைக்கப்படுகின்றது. |
| அதிகாரம் | மத்திய மற்றும் கீழ்மட்ட அளவில் | உயர் மட்ட அளவில் |
| பங்கு | நிறைவேற்றம் | முடிவெடுத்தல் |
| தொடர்பு தன்மை | கொள்கைகளை செயல்படுத்தல் | கொள்கைகளை உருவாக்குதல் |
| செயல்பாட்டு பரப்பு | நிர்வாகத்தின் கீழ் செயல்படுகிறது | நிறுவனத்தின் செயல்பாடுகள் மீது முழுக்கட்டுப்பாடு |
| செயல் | திட்டங்களையும், கொள்கைகளையும் செயல்படுத்தல் | திட்டங்கள் தீட்டுதல், கொள்கைகளைக் கட்டமைத்தல் மற்றும் இலக்குகளை நிர்ணயித்தல். |
31.
(i) நுகர்வோர் உரிமைகளை மேம்படுத்துதல்
(ii) நுகர்வோர் உரிமைகளை பாதுகாத்தல்
32.
(i) இந்தியாவில் முதல் பங்கு பரிவர்த்தனை "தி நேஷனல் பங்குகள் மற்றும் தரகர்கள்" ஆகும்
(ii) இது 1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி, இந்திய பங்குச் சந்தை ஒப்பந்தத்தின் (ஒழுங்குமுறை) சட்டம், 1956 ன் கீழ் அங்கீகரிக்கப்பட்டு, "தி பம்பாய் பங்குச் சந்தை" யாக மாறியது
33.
வணிகத்தை சுற்றியுள்ள அதே சமயம் வணிகத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற உட்புற மற்றும் வெளிப்புற காரணிகளின் தொகுப்பு.
34.
ஸ்காட் என்பவரது கூற்றுப்படி "நேர்காணல் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு இடையே நிகழும் குறிப்பிட்ட நோக்கத்திற்கான கருத்துப் பரிமாற்றம், வினாக்களுக்கு விடை பகர்தல் மற்றும் தகவல் தொடர்பாகும்.
35.
1. பணியாளர்களை ஊக்குவித்தல்
2. பங்கேற்கச் செய்தல்
3. ஒருங்கிணைத்தல்
36.
(i) காசோலையில் பென்சிலால் எழுதுவதற்கு சட்டம் தடை விதிக்கவில்லை
(ii) இருப்பினும் மோசடி செய்யும் வாய்ப்பை கருதி வங்கியர்கள் தாங்கள் அச்சிட்டு தந்த காசோலைகளில் பென்சில் வைத்து எழுத அனுமதிப்பதில்லை
37.
வியாபார உலகில் செய்யப்படும் மாற்றங்களை எதிர்கொள்ள ஊழியர்களையும், அமைப்பையும் தயார்நிலைப்படுத்தும் செயல்பாடு ஆகும்.
38.
" ஒரு நிறுமத்தை நிர்வகிக்கும் குழுவிற்காக நியமிக்கப்பட்டவர் இயக்குனர் ஆவார்".
39.
ஒரு வணிக நிறுவனத்தின் மேலாண்மை செய்பவர்கள் மற்றும் விஷயங்களை நிர்வகிப்பதற்கான ஒழுங்கமைக்கப்பட்ட வழி மேலாண்மை என்று அழைக்கப்படுகின்றது.
40.
(i) உலகளவில் பொருத்தமானது :
1. மனித வள மேலாண்மை உலகளவில் பொருந்தக்கூடியதாக உள்ளது.
2. நிறுவன அமைப்பின் தன்மையைப் பொறுத்து இதனின் அணுகுமுறை மற்றும் தோற்ற வடிவம் மாறுபடுகின்றது.
(ii) இலக்கு சம்பந்தமானது :
ஒரு நிறுவனத்தில் உள்ள மனித வளத்தை சிறந்த முறையில் பயன்படுத்துவதன் மூலம் அந்நிறுவனத்தின் குறிக்கோள்களை அடைவது சாத்தியமாகிறது.
(iii) திட்டமிட்ட அணுகுமுறை :
ஒரு நிறுவனத்தில் மனித வளத்தால் நிகழ்த்தப்படும் பணிகளை நிர்வகிப்பதில் ஒரு முறையான அணுகுமுறையை மனித வள மேலாண்மை வலியுறுத்துகிறது.
(iv) அனைத்திலும் பரவலானது :
திறன் மிக்க மேலாண்மை எங்கு இருக்கிறதோ அங்கெல்லாம் மனித வளம் இருக்கிறது,
(v) தொடர்ச்சியான செயல்பாடு :
மனித வளத்தின் மூலம் ஒரு நிறுவனம் நீண்ட காலம் இயங்கிக் கொண்டிருந்தால் அந்நிறுவனத்தில் மனித வளம் நிர்வகிப்பது தொடர்பான செயல்பாடுகளும் தொடர்ந்து நீடித்த நிலையில் இருக்கும்.
(vi) மாறுபடும் செயல்பாடு:
மனித வள மேலாண்மை மற்ற உற்பத்தி காரணிகளைப் போல அல்ல, ஏனெனில் அவைகள் உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளைக் கொண்டுள்ளன.
(vii) ஒருங்கிணைந்த கருவி :
மனித வளத்தை நிர்வகிப்பதற்கு முக்கியமானதாக கருதப்படுவது. கிடைக்கக்கூடிய பணியாளர்களை ஊக்குவித்தல், பங்கேற்கச் செய்தல் மற்றும் ஒருங்கிணைத்தலாகும்.
(viii) வளர்ச்சியின் மீதான கவனம் :
1. மனித வள மேலாண்மை, பயிற்சி மற்றும் மேம்பாடு திட்டங்களின் மூலம் மனித வள மேம்பாடு குறித்து கவனம் செலுத்துகிறது.
2. கிடைக்கப் பெற்ற மனித வளங்களைத் திறம்பட பயன்படுத்தி பயிற்சிகளை அதிகரிப்பதன் வாயிலாக மனித திறன்கள் பட்டை தீட்டப்படுகிறது.
(ix) மனித வள மேலாண்மை அறிவியல் மற்றும் கலை ஆகிய இரண்டுமாக இருத்தல் :
இது சோதனைகள் மற்றும் உற்றுநோக்கில் அடிப்படையிலும் அத்துடன் திறம்பட மனித வளத்தை கையாள்வதின் அடிப்படையிலும் இவை அறிவியல் மற்றும் கலை ஆகிய இரண்டுமாக கருதப்படுகிறது.
(x) துறைகளுக்கிடையே இணைப்பு :
மனித வள மேலாண்மை சமூகவியல், உளவியல், பொருளாதாரம் போன்ற பல்வேறு துறைகளின் கருத்தாக்கங்களைப் பயன்படுத்துவதன் மூலம் துறைகளுக்கிடையே இணைப்பினை ஏற்படுத்துகிறது.
(xi) கண்ணுக்குப் புலப்படாதது:
1. மனித வள மேலாண்மை என்பது ஒரு கண்ணுக்கு புலனாகாத செயல்பாடு.
2. இது முடிவுகளால் மட்டுமே அளவிட முடியும்.
(xii) புதிய உறவு :
முன்னதாக பணியாளர் மேலாண்மை என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில் பின்பு அதில் ஏற்பட்ட உத்வேகமான காரணமாக தற்போது மனித வள மேலாண்மை என்று அழைக்கப்படுகிறது.
41.
1. நிதியிடல்:
i. நீண்ட கால நிதியிடல்
ii. மத்திய கால நிதியிடல்
iii. குறுகிய கால நிதியிடல்
2. இடர் ஏற்றல்
i. கால இடர்பாடு
ii. இடம் சார்ந்த இடர்பாடு
iii. போட்டி இடர்பாடு
iv. தேவை மாற்று இடர்பாடு
v. இயற்கை சார்ந்த இடர்பாடு
vi. மனித தொடர்பான இடர்பாடு
vii. அரசியல் தொடர்பான இடர்பாடு
3. சந்தை தகவல்:
கிளார்க் மற்றும் கிளார்க் என்பவரின் கூற்றுப்படி, "சந்தை தகவல் என்பது பொருட்கள் சந்தையிடுவது தொடர்பாக உள்ள உண்மைகள், எதிர்பார்ப்புகள், எண்ணங்கள் மற்றும் அனைத்து இதர தகவல்களை உள்ளடக்கியது ஆகும்.
4. தரப்படுத்துதல்:
i. தரப்படுத்துதல் என்பது பொருட்களை இயல்பான தரத்தின் அடிப்படையில் பிரித்து அமைப்பது ஆகும்.
ii. பொருட்களை தரப்படுத்துவதில் பல காரணிகள் தீர்மானிக்கின்றன.
iii. பொருளின் அளவு, வண்ணம், சுவை மற்றும் அதன் தோற்றம் போன்றவையாகும்.
5. வகைப்படுத்துதல்:
நிர்ணயம் செய்யப்பட்ட தர அலகுகளின் அடிப்படையில் பொருட்களை பல வகைகளாகப் பாகுபாடு செய்தலே வகைப்படுத்துதல் எனப்படும்.
6. பெயரிடல்:
போட்டி பொருட்களிலிருந்து வேறுபடுத்தி காண்பதற்கு ஒரு பெயரோ அல்லது வணிக குறியோ இடப்படுகிறது. இதுவே பெயரிடல் எனப்படும்.
7. கட்டுமம்:
i. பொருட்களை விற்பனை செய்வதற்கு முன்னர் எளிதில் கையாளுவதற்கு ஏற்றவாறு உறையிடுவதே கட்டுமம் எனப்படுகிறது.
ii. பொருட்கள் உடைதல், வீணாகுதல், கசிவு ஏற்படுதல் மற்றும் சேதம் ஏற்படுதல் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பதற்காக கட்டுமம் செய்யப்படுகிறது.
8. விலையிடல்:
i. விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக முடிவெடுப்பது வணிகர்களின் ஒரு முக்கிய பணியாகும்.
ii. இத்தகைய முடிவானது அமைப்பின் வெற்றி அல்லது தோல்வியை நிர்ணயிப்பதில் அதிக அளவு சார்ந்துள்ளது.
42.
1. தூண்டுபவர்:
சந்தையின் மேம்பாடு கருதி அவ்வப்போது சந்தையிடுகையின் வாய்ப்புகள் மற்றும் சந்தையில் ஏற்படும் மாற்றங்களை உன்னிப்பாக கூர்ந்து கவனித்து அதற்கு ஏற்றவாறு சந்தையிடு கலவையில் மாற்றத்தை ஏற்படுத்தி ஒரு புதிய கோணத்தை சந்தையிடுகையாளர் ஏற்படுத்துகிறார்.
2. புதுமை புகுத்துநர்:
சந்தையிடுகையாளர் தனது பண்டங்கள் மற்றும் பணிகளை சந்தையில் தனக்கென ஒரு இடத்தை ஏற்படுத்துவதற்கு நடைமுறையில் இருந்து வரும் பொருட்களின் இயல்பை அதிகரித்தல், மதிப்பைக் கூட்டுதல், விலையில் மாற்றத்தை ஏற்படுத்துதல், பொருள் கொண்டு சேர்க்கும் முறை, தொழில் முறையில் மாற்றம் மற்றும் உற்பத்தி முறையில் மாற்றம் போன்றவற்றை செய்து வருகிறார்.
3. ஒருங்கிணைப்பாளர்:
பண்டங்கள் மற்றும் பணிகள் பற்றி நுகர்வோர் மற்றும் வாடிக்கையாளரின் மத்தியில் கருத்துக்களை பெற்றும் அதன் அடிப்படையில் அமைப்பின் ஒருங்கிணைப்பு பணியினை மேற்கொள்கிறார்.
4. செயல்பாட்டாளர்:
அமைப்பின் பல்வேறு பணிகளின் உதவியோடு பொருட்களை சந்தையிடுகை செய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் மாற்றங்களை உருவாக்குகிறார்.
43.
(I) திறந்த நடைமுறை: இம்முறையில் அனைத்து உறுப்பினர்களும் கூடியிருக்கும் கூட்டத்தில் ஒரு உறுப்பினர் யாருக்கு வாக்களிக்கிறார் என மற்றவருக்கு தெரியும் வகையில் வாக்கெடுப்பு நடத்தப்படும். இம்முறையில் வாக்கெடுப்பில் எவ்வித ஒளிவு மறைவும் இருக்காது இம்முறை வாக்கெடுப்பில் பின்வரும் முறைகள் உள்ளடங்கும்.
வாக்களிப்பின் வகைகள் :
(i) சத்தத்தின் வாயிலாக வாக்கெடுப்பு: பொதுவாக எந்தவொரு சர்ச்சைக்குரிய விஷயமாக இல்லாமல் அனைவருக்கும் சேர்ந்து வெளிப்படையாக தனது கருத்தை தெரிவிக்கும் வகையில் கைகளை தட்டியோ அல்லது மேசைகளை தட்டியோ ஓசையை எழுப்பி தங்களது ஆதரவை தெரிவிக்கும் வகையில் வாக்கெடுப்பு நடைப்பெறும்.
(ii) குரல் வாக்கெடுப்பு : இத்தகைய வாக்கெடுப்பு முறையை மிகவும் சிக்கலான அல்லது முரண்பாடுடைய விஷயங்களுக்கு முடிவு எடுக்க பயன்படுத்துவதில்லை. தலைவர் ஒரு முடிவை முன்மொழிந்து அதற்கு ஆதரவாக உள்ளவர் ஆம் என்று குரலை உயர்த்தி கூறவேண்டும். பின்னர் அம்முடிவிற்கு மறுப்பவர்கள் இல்லை என குரலை உயர்த்தி கூற வேண்டும். தலைவர் இவ்விரு வேறுபட்ட ஓசையையும் நன்கு கூர்ந்து கவனித்து தனது முடிவை தெரிவிப்பார்.
(iii) கைகளை உயர்த்துவதன் மூலம் வாக்கெடுப்பு : ஒரு முடிவை முன் மொழிந்து ஆதரவாக மற்றும் எதிராக உள்ளவர்களை கைகளை உயர்த்த சொல்லி வாக்கெடுப்பு நடத்துவது.
(II) இரகசிய வாக்குமுறை: ஒரு உறுப்பினர் அளிக்கும் வாக்கு மற்ற உறுப்பினர்களால் அறிந்துகொள்ள முடியாத வகையில் இரகசியமாக வாக்கெடுப்பு நடத்தப்படுவதை இரகசிய வாக்கு முறை என்கிறோம். சில சிக்கல்களுக்கு முடிவு எடுக்க இம்முறை பயன்படுத்தப்படுகிறது. ஒரு உறுப்பினர் அளிக்கும் வாக்கு மிகவும் இரகசியமாக பாதுகாக்கப்படுவதால் இரகசிய வாக்கெடுப்பு முறை ஒரு பிரபலமான முறையாகும்.
(i) வாக்குசீட்டு முறை: இம்முறையில் வரிசை எண் இடப்பட்ட வாக்கு சீட்டு ஒவ்வொரு உறுப்பினருக்கும் தரப்படும். அதில் உறுப்பினர் ஒரு இரகசிய அறையில் தனது விருப்பத்தை x அல்லது குறியிட்டு வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் போட வேண்டும். ஓட்டு எண்ணுபவர்கள் அல்லது வேட்பாளரின் முகவர்களின் முன்னிலையில் அப்பெட்டியை திறந்து வாக்குகள் எண்ணப்படும்.
(ii) அஞ்சல் வாக்கு :
பெரிய நிறுவனங்களின் உறுப்பினர்கள் பல்வேறு நாடு கடந்து இருப்பார்கள்.
வாக்களிக்க நேரில் வர இயலாததால் அஞ்சல் மூலமாக தனது வாக்குகளை பதிவு செய்வர்.
(III) இயந்திர வாக்குப்பதிவு:
இது ஒரு அதிநவீன முறையாகும்
வாக்குச் சீட்டுகளுக்கு பதிலாக மின்னணு இயந்திரங்கள் மூலம் வாக்குகள் பதிவு செய்யப்படும்.
பச்சை நிற விளக்கு எறிந்தால் சாதகமாக வாக்கு பதியப்படுகிறது என்றும்.
சிவப்பு நிற விளக்கு எறிந்தால் பாதகமாக வாக்கு பதியப்படுகிறது. என பொருள்.
44.
45.
| வ.எண் | வேறுபாடு | நகர்புற தொழில் முனைவோர் | ஊரக தொழில் முனைவோர் |
|---|---|---|---|
| 1. | அமைவிடம் | மாநில தலைநகரம், மாவட்ட தலைநகரம் பேரூராட்சிகளில் தொழிலை துவங்குவார். | கிராமப்புறங்களில் தனது தொழிலை துவங்குபவர். |
| 2. | அரசின் சலுகைகள் | ஊரக தொழில் முனைவோரை காட்டிலும் குறைவான அரசு சலுகைகளை பெறுகிறார். | கிராமப்புற வளர்ச்சிக்காக அரசு அதிகமான சலுகைகளை இவருக்கு வழங்குகிறது. |
| 3. | அமைப்பு | உற்பத்தி, சில்லறை அல்லது கூட்டு பங்கு நிறும தொழில் முனைவோராக இருக்கலாம். | உற்பத்தி மற்றும் சில்லறை தொழில் முனைவோராக இருக்கலாம். |
| 4. | உற்பத்தி செலவு | நகர்ப்புறங்களில் செயல்படுவதால் அதிகமான உற்பத்தி செலவு ஏற்படுகிறது. | கிராமப்புறங்களில் செயல்படுவதால் குறைவான உற்பத்தி செலவு ஏற்படுகிறது. |
| 5. | விலை | உற்பத்தி செலவு அதிகமாதலால் பொருளுக்கான விலையை அதிகரித்து விற்பனை செய்கிறார். | உற்பத்தி செலவு குறைவாக உள்ளதால் நுகர்வோருக்கு குறைவான விலையில் பொருட்களை விற்பனை செய்கிறார். |
46.
| வ.எண் | அடிப்படை | தொழில் முனைவோர் | அகத்தொழில் முனைவோர் |
| (i) | சிந்தனை | தொழில் முனைபவர் ஒரு தடையற்ற சிந்தனைவாதி | அகத்தொழில் முனைபவர் தன்னிச்சையான சிந்தனைவாதி, ஆனால் ஒரு தொழில் நிறுமத்தின் உள் செயல்படுபவர். |
| (ii) | சார்புநிலை | தன்னிச்சையான நபர் | தொழில் முனைவோரை சார்ந்து இருப்பவர். |
| (iii) | நிதி திரட்டல் | தொழில் முனைவோர் தன் சொந்த முயற்சியில் தொழிலுக்கான நிதியை திரட்ட வேண்டும். | இவருக்கு நிதி திரட்டும் பொறுப்பு இல்லை. ஆனால் திரட்டிய நிதியை கையாளும் பொறுப்பு உள்ளது. |
| (iv) | வெகுமதி | தொழில் முனைவோர் தங்களின் இடர் ஏற்பு பணிக்காக இலாபம் என்ற வெகுமதியை பெறுகின்றனர். | அகத்தொழில் முனைவோர்க்கு இலாபத்தில் பங்கு இல்லை. ஆனால் ஊதியம், ஊக்க ஊதியம் மற்றும் மேம்படிகள் பெற வாய்ப்பு உண்டு. |
| (v) | இடர் ஏற்றல் | தான் ஆரம்பித்த தொழிலின் இடரை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. | இவர் தொழில் தொடர்பாக எழும் இடர்பாட்டில் பங்கு பெறுவதில்லை. தான் மேற்கொண்ட செயல் திட்டம் தோல்வி நிலைக்கு பொறுப்பு ஏற்பதில்லை. |
| (vi) | தகுநிலை | தொழில் முனைபவர் உரிமையாளர் என்ற தகுநிலை படைத்தவர். | அகத்தொழில் முனைவோர் உரிமையாளர் அல்ல; ஆனால் ஊழியர் தான் மேற்கொண்ட செயலுக்கு தன்னுடைய மேல் அதிகாரிக்கு பதில் சொல்ல கடமையுடையவர். |
| (vii) | செயல்பாடு | தான் தொடங்கிய தொழிலின் புறத்தின் நின்று பெரும்பாலும் செயல்படும் நபர். | முழு நிறுமத்திற்கு உட்பட்டு இயங்கும் நபர். |
47.
48.
1. உடல்நல பாதுகாப்பு உரிமை மற்றும் பாதுகாப்பிற்கான உரிமை :
(i) சில தயாரிப்பு பொருட்கள் நுகர்வோரின் உடல்நலம், சொத்துக்கள் மற்றும் வாழ்வு முறையில் அபாயத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.
(ii) இன்றைய சூழலில் சட்டத்திற்கு புறம்பான மற்றும் பாதுகாப்பில்லாத பொருட்களை தயாரிப்பதோ அல்லது விற்பனை செய்யவோ கூடாது என்ற கடமை விற்பனையாளருக்கும் மற்றும் உற்பத்தி செய்வோருக்கும் உள்ளது.
2. தகவல் பெறும் உரிமை :
பொருட்களை வாங்கும் பொழுது நுகர்வோர் அதன் பெயர், கலவை, பயன்படுத்தும் அளவு, உற்பத்தி மற்றும் காலாவதியாகும் நாள், தயாரிப்பு பிரிவு மற்றும் எச்சரிக்கை பற்றிய அனைத்து தகவல்களையும் கேட்டுப் பெற வேண்டும்.
3. தேர்ந்தெடுக்கும் உரிமை :
(i) தேர்வு என்பது பரந்த வழிகளில் தரம், வியாபாரக் குறியீடு, நியாயமான விலை போன்றவற்றின் அடிப்படையில் பொருட்களை தேர்ந்தெடுப்பதாகும்.
(ii) ஒரு திறமையான விற்பனையாளர் நுகர்வோரை மன நிறைவு கொள்ள பரவலான பொருட்களின் தேர்வினை கருதுகிறார்.
4. செவிமடுக்கும் உரிமை :
(i) வணிக நிறுவனங்கள் நுகர்வோரின் புகார்கள் மற்றும் குறைகளை திறந்த மனதுடனும், கருணை மனப்பான்மையுடனும் செவிமடுக்க வேண்டும்.
(ii) அனைத்து நிறுவனங்களும் நுகர்வோரின் குறைகளைக் கண்டறிய தனியான துறை அல்லது பகுதி அல்லது பிரிவை ஏற்படுத்த வேண்டும்.
5. நிவாரணம் காணும் உரிமை :
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் உண்மையான கூற்றுகளுக்கு நியாயமான மற்றும் உறுதியான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை வணிக நிறுவனங்கள் ஏற்படுத்த வேண்டும்.
6. நுகர்வோர் கல்வி உரிமை :
(i) பல நுகர்வோர் அமைப்புகள் மற்றும் சில சிறப்பு பெற்ற தொழில்கள் நுகர்வோர் கல்வியினை வழங்குகின்றன.
(ii) இதன் மூலம் நுகர்வோர் வாழ்நாள் முழுவதும் தன்னுடைய உரிமையைப் பற்றி அறிந்தவராக இருக்கிறார்.
7. வாழ்க்கை தர உரிமை :
(i) வணிக நிறுவனங்கள் மனித வர்க்கத்திற்கான சமூகப் பொறுப்புடன் உற்பத்தி மற்றும் வெளியீடு செய்ய வேண்டும்.
(ii) உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தி கழிவுகள் மற்றும் கழிவுநீரை வெளியேற்றும்பொழுது அவை சுற்றுச் சூழல் மற்றும் மனிதர்களைப் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும்.
8. நுகர்வோர் பாதுகாப்பு உரிமை :
(i) நுகர்வோர் தனது பட்டறிவுடன், ஐ.எஸ்.ஐ (ISI) குறியீடு உள்ள உபகரணங்களை பயன்படுத்த வேண்டும்.
(ii) இதன் மூலம் நுகர்வோர்களுக்கு தரமான பொருட்களை மட்டுமே தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும்.
9. அடிப்படை தேவைகளுக்கான உரிமை :
(i) ஒவ்வொரு நுகர்வோருக்கும் அடிப்படை தேவைகளான உணவு, உடை மற்றும் சுத்தமான நீர், ஆரோக்கியமான சூழலை பெற உரிமை உண்டு.
(ii) இது புதிதாக சேர்க்கப்பட்ட நுகர்வோர் உரிமையாகும்.
(iii) இவை மனித வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்துகிறது.
49.
1. அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955 :
அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் செயற்கையாக விலையேற்றம் செய்யும் நோக்குடன் பொருட்களை பதுக்கி வைத்தல், செயற்கை பற்றாக்குறையை உருவாக்குதல், கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்தல் போன்றவற்றை தடைசெய்ய உருவாக்கப்பட்டது.
2. வேளாண் பொருட்கள் தரப்படுத்தல் மற்றும் விற்பனை சட்டம் 1937:
வேளாண்மை உற்பத்தி பொருட்களை நல்ல தரத்துடன் வழங்குவதாக உறுதி செய்கிறது.
3. உணவுப் பொருட்கள் கலப்பட தடைச்சட்டம் 1954 :
உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வதை பரிசோதித்து தரமான உணவுப் பொருட்களை வழங்குவதன் மூலம் நுகர்வோர் உடல்நலத்தை பாதுகாக்கிறது.
4. எடை மற்றும் அளவுகள் சட்டம் 1958:
(i) எடை குறைவு மற்றும் அளவு குறைபாடுகளை போக்கி நுகர்வோரை பாதுகாக்கிறது.
(ii) இச்சட்டம் அளவியல் சட்டம் 2009 ஆக திருத்தியமைக்கப்பட்டது.
5. இந்திய தர நிறுவனச் சட்டம் 1952:
உற்பத்தி பொருட்கள் பெற்றிருக்க வேண்டிய குறைந்தபட்ச தரநிலைகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்து நுகர்வோருக்கு தரமான பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்கிறது.
50.
51.
அ) பத்திரங்களின் சந்தை:
பங்குகள், கடனுறுதிப் பத்திரங்கள் போன்ற பத்திரங்கள் மூலதனச் சந்தையில் கையாளப்படுவதால் இது பத்திரங்களின் சந்தை என அழைக்கப்படுகிறது.
ஆ) விலை:
பத்திரங்களின் விலை மூலதனச் சந்தையில் பத்திரங்களின் தேவை மற்றும் அளிப்பை பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது.
இ) பங்கேற்பாளர்கள்:
மூலதனச் சந்தையின் ஈடுபடுபவர்கள் தனிநபர்கள், நிறுமங்கள், அரசு வங்கிகள், மற்றும் இதர நிதி நிறுவனங்கள் போன்றவர்கள் ஆவார்.
ஈ) இட அமைவு:
மூலதனச் சந்தைக்கான இடம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட்பட்டதில்லை, என்றாலும் பங்கு மாற்றகம் போன்ற நன்கு தெரிந்த இடமாக இருத்தல் வேண்டும்.
உ) நிதி சார்ந்த சொத்துக்களின் சந்தை:
மூலதனச் சந்தை நீண்ட கால நிதி சார்ந்த சொத்துக்களுக்கான ஒரு மேடையை வழங்குகிறது.
52.
நிதிச் சந்தையின் பங்கு:
நிதிச் சந்தையின் பங்கு பொருளாதாரத்தின் துரித வளர்ச்சியின் முக்கிய தேவைகளில் ஒன்று சுறுசுறுப்பான மற்றும் செழிப்பான நிதிச்சந்தை ஆகும். ஒரு நிதிச் சந்தை பின்வரும் வழிகளில் ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவி செய்வதால் அது மிகப்பெரும் பயனாக திகழ்கிறது.
(அ) சேமிப்பை பெருக்குதல் (Savings Mobilization):
சேமிப்பாளர்கள் (அ) தனிநபர்கள், வணிக நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு போன்ற உபரி அலகுகளிடமிருந்து நிதிகளை பெறுவதன் மூலம் நிதிச் சந்தை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
(ஆ) முதலீடுகள் (Investment):
நிதி முதலீடுகளை வசூலிப்பதிலும் அவற்றை தேவை உள்ளவர்களுக்கு வழங்குவதிலும் நிதிச் சந்தை' முக்கியப் பங்கு வகிக்கிறது.
(இ) தேசிய வளர்ச்சி (National Growth):
நிதிப் பற்றாக்குறை உள்ள நிறுவனங்களுக்கு உபரி நிதிகள் தடங்கலின்றி நடமாட்டம் செய்ய உறுதி செய்வதன் மூலம் ஒரு தேசத்தின் வளர்ச்சியில் நிதிச் சந்தை பங்களிப்பை வழங்குகிறது. நிதி ஆக்க பூர்வமான நோக்கில் பயன்படுத்த வழிவகை செய்கிறது. இது ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.
(ஈ) தொழில்முனைவோர் வளர்ச்சி (Entrepreneurship Growth):
தேவையான நிதி வளங்களை தொழில் முனைவோர்களுக்கு கிடைக்க பெறுவதன் மூலம் அதன் மேம்பாட்டிற்கு நிதிச் சந்தை பங்களிக்கிறது.
(உ) தொழிற்துறை மேம்பாடு (Industrial Development):
நிதிச் சந்தையின் பல்வேறு கூறுகள் ஒரு நாட்டின் தொழிற்துறையின் துரித வளர்ச்சி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவி புரிகிறது. இதன் மூலம் சமுதாயத்தின் வாழ்க்கை தரம் மற்றும் நல்வாழ்வை உயர்த்துகிறது.
53.
1. மேலாண்மை என்பது ஒருங்கிணைத்தல்:
மனித வளம், இயந்திரங்கள், பொருட்கள், மற்றும் பணம் ஆகிய நான்கு வளங்களையும் அதன் செயல்பாடுகளையும் திறம்பட ஒருங்கிணைக்க வேண்டும்.
2. மேலாண்மை ஒரு செயல்முறை:
திட்டமிடல், ஒழுங்கமைத்தல், பணியமர்த்தல், இயக்குவித்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் வளங்களை திறம்பட ஒருங்கிணைத்தல்.
3. மேலாண்மை என்பது ஒரு திட்டமிட்ட செயல்முறை:
முன்கூட்டியே திட்டமிட்ட நோக்கங்களையும், குறிக்கோள்களையும் அடைவதற்காக இயக்கப்படுகிறது.
4. மேலாண்மை என்பது ஒரு சமூக செயல்பாடாகும்:
மற்றவர்கள் மூலம் குறிப்பிட்ட பொருளைப் பெறுவதற்கான கலை ஆகும்.
5. மேலாண்மை என்பது ஒரு சுழற்சியான செயல்முறை:
மேலாண்மை - திட்டமிடல் - செயல்பாடு - கட்டுப்படுத்தல் - மறுதிட்டமிடல் ஆகிய சுழற்சியை பிரதிபலிக்கிறது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards