12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 13/09/2019
சந்தையிடுகை மற்றும் சந்தையிடுகையின் கலவை
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
கீழ்கண்டவற்றுள் கண்ணுக்கு புலப்படாத பொருள் எது?
கல்வி
கைபேசி
ஆடைகள்
வாகனங்கள்
2.
சந்தையிடுகை கலவை என்பது சந்தையிடுகை திட்டமிடல் மூலம் நிறுவனத்தின் குறிக்கோள் ______ தேவை மற்றும் மன நிறைவு மூலம் லாபம் பெறுகிறது.
மொத்த விற்பனையாளர்
சில்லறை விற்பனையாளர்
நுகர்வோர்
விற்பனையாளர்
3.
கீழ்கொடுக்கப்பட்டுள்ள கூறுகளில் சந்தையிடுகை கலவைக்கு தொடர்பு இல்லாத ஒரு கூறு எது?
இடக் கூறு
பொருள் கூறு
திட்டக்கூறு
விலை கூறு
4.
சந்தையில் உயர் நிலையில் இருப்பவர் யார்?
வாடிக்கையாளர்
விற்பனையாளர்
மொத்த விற்பனையாளர்
சில்லறை விற்பனையாளர்
5.
சந்தையிடுகை முறையின் ஆரம்ப நிலை _______
முற்றுரிமை முறை
பணத்திற்கு மாற்றுதல்
பண்டமாற்று முறை
தற்சார்பு உற்பத்தி
6.
பண்டம் / பொருள் வரையறு.
7.
பண்டங்கள் மற்றும் பணிகளின் விலையை பாதிக்கும் அக காரணிகள் இரண்டினைத் தருக.
8.
சந்தையிடுகை கலவையின் வரைவிலக்கணம் தருக.
9.
சந்தையிடுகை கலவை என்பது பற்றி நீவீர் அறிவது யாது? ஏதேனும் இரண்டு கூறுக.
10.
பொருளின் விலையை பாதிக்கும் காரணிகள் யாவை?
11.
சந்தையிடுகையின் நோக்கங்கள் யாவை?
12.
பண்டக காப்பாளரின் நன்மைகளில் இரண்டினை குறிப்பிடுக.
13.
சந்தை என்ற சொல்லை விளக்குக.
1.
(a)
கல்வி
2.
(c)
நுகர்வோர்
3.
(c)
திட்டக்கூறு
4.
(a)
வாடிக்கையாளர்
5.
(c)
பண்டமாற்று முறை
6.
1. பொருள் சந்தையின் ஒரு முக்கிய கூறு ஆகும்.
2. பொருள் இல்லையெனில் எந்த ஒரு சந்தையும் இயங்க இயலாது என கூறுகின்ற அளவிற்கு பொருள் சந்தையிடுகை கலவையில் முக்கிய இடம் வகுத்துள்ளது.
7.
1. மூலப்பொருட்கள் கிடைக்கும் அறை
2. உற்பத்திச் செலவு
3. பொருளின் தரம்
4. தேவை
8.
திரு.ஜெரோமி எம்சி கார்தோ அவர்களின் கூற்றுப்படி, "சந்தையிடுகை கலவை நான்கு கூறுகளைக் கொண்டுள்ளது. அவையாவன, பொருள் கூறுகள், விலை கூறுகள், விற்பனை மேம்பாட்டு கூறுகள் மற்றும் இடக்கூறுகள் ஆகும்". என்கிறார்.
9.
(i) சந்தையிடுகை கலவை மூலம் நிறுவனம் தனது நுகர்வோர்களை குறிவைத்து அதன் மூலம் லாபம் ஈட்டுவதே ஆகும். இத்தகைய சந்தையிடுகையின் செயல்பாடுகள் நான்கு வகை கலவை பொருட்களை கொண்டுள்ளது. அதாவது பொருட்கலவை, விலை கலவை. இடக் கலவை, மற்றும் மேம்பாட்டு கலவை போன்றவையாகும்.
(ii) பொருள் (Product) : பொருள் சந்தையில் ஒரு முக்கிய கூறு ஆகும். பொருள் இல்லையெனில் எந்த ஒரு சந்தையும் இயங்க இயலாது.
(iii) விலை (Place) : பிலிப் கோட்லர் அவர்களின் கருத்துப்படி “விலை என்பது பண்டங்கள் மற்றும் பணியின் மாற்று மதிப்பு ஆக பெறப்படும் ஒன்றாகும்" அல்லது நுகர்வோர்கள் நலன் கருதி பண்டங்கள் மற்றும் பணிகளுக்கு இணையான மதிப்பை மாற்றிக் கொள்ள தக்க ஒன்றுதான் விலை" என்கிறார்.
10.
1. வாடிக்கையாளர் மனப்பாங்கு
2. நுகர்வோரின் தேவை
3. வழங்கல் வழிகள்
4. வாடிக்கையாளரின் பொருளாதார சூழல்
11.
1. நவீன சந்தையிடுகை கொள்கையானது அறிவு தரத்தை பயன்படுத்த உதவுகிறது.
2. சந்தையிடுகை துறையில் மேம்பாட்டை ஏற்படுத்துகிறது.
3. கொள்கை வழிகாட்டல் மேம்பாடு மற்றும் நல்லதொரு பயனுள்ள முடிவினை செயல்படுத்துகிறது.
4. சந்தையிடுகை தொடர்புள்ள பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு காண வழிவகை செய்கிறது.
5. சந்தையிடுகை தொடர்பான பிரச்சனை குறித்து மேலும் தகவல்களை கண்டு உணருகிறது.
6. முன்னேற்ற செயல் குறித்து சரியான நடவடிக்கை மேற்கொள்கிறது.
12.
1. பொருட்களின் பாதுகாப்பு:
பண்டகக் காப்பாளர் பொருட்களை பாதுகாப்பாகவும், இயற்கை சீற்றங்களான மழை, தூசி போன்றவற்றிலிருந்து பாதுகாத்து பொருட்களை தேவை ஏற்படும் போது விற்பனைக்கு தயாரித்தல்.
2. பொருட்களின் தரம் / விலை:
பண்டகக் காப்பாளர் பொருட்களை தரப்படுத்துதல், கட்டுமானம் செய்தல் போன்ற பணியினை மேற்கொள்கின்றார். இதனால் அப்பொருளின் விலையேற்றம் காணப்படுகிறது.
3. சரக்கு இருப்புப் பட்டியல் தயாரித்தல்:
1. பண்டகக் காப்பாளர் பொருட்களின் இருப்புப் பட்டியலை தயார் செய்கிறார்.
2. இதனால் அப்பொருளின் தேவையை அறிந்து கொள்ள முடிகிறது.
4. தவறான மேலாண்மையை தடை செய்தல்:
பண்டகக் காப்பாளர் சரக்கு இருப்புப் பட்டியல் தயார் செய்வதன் மூலம் தவறான மேலாண்மைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிகிறது.
13.
1. சந்தை என்ற சொல் "மர்கட்டஸ்" என்ற லத்தீன் சொல்லிலிருந்து பெறப்பட்டது.
2. சந்தை என்பது வணிகம் நடைபெறும் இடத்தைக் குறிக்கிறது.
3. சந்தையின் பொதுவான பயன்பாடானது பொருட்களை வாங்குதல் மற்றும் விற்பனை செய்வதற்கான ஒரு இடமாக திகழ்கிறது.
4. கிளாக் மற்றும் கிளார்க் ஆகியோரின் கருத்துப்படி சந்தை என்பது ஒரு குறிப்பிட்ட பொருளுக்கான உரிமையை மாற்றி வழங்குவதற்கு வழிவகுக்கும் சக்தியாக விளங்குகிறது.
5. பல்வேறு அணுகுமுறையின் அடிப்படையில் சந்தையை பல்வேறு பகுதிகளாக பிரிக்கப்படுகிறது.
6. பண்டங்கள் மற்றும் பணிகளை மேற்கொள்பவர் "சந்தையிடுகையாளர்" ஆவார்.
7. தற்போது சந்தை தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியாலும், நவீன போக்குவரத்து வசதியாலும், தாராளமயமாக்குதல் என்பது உலகெங்கிலும் எளிதாக பயணிப்பதாலும் வணிகம் நாடுகளின் எல்லையைத் தாண்டி நடைபெறுகின்றது.
8. இதனால் உலகளாவிய சர்வதேச அளவில் பொருள்களை வாங்கவும், விற்கவும் சக்தியைப் பெற்றுள்ளது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards