12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 10/10/2019
பங்கு மாற்றகம்
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
தேசிய பங்குச் சந்தை விளக்குக.
2.
தேசிய பங்குச் சந்தை முறை (NSMS) பற்றி விளக்குக.
3.
மான் மற்றும் முடவாத்து - விளக்குக.
4.
காளை மற்றும் கரடி - விளக்குக.
5.
பங்குச் சந்தையின் குறைபாடுகளை விவரி. (ஏதேனும் 3)
6.
லம்பார்டு தெரு மற்றும் வால் தெரு - விளக்குக.
7.
பங்கு பரிவர்த்தனைக்கும் பண்ட மாற்றுப் பரிவர்த்தனைக்கும் உள்ள வேறுபாடுகளைத் தருக
8.
பங்குச் சந்தையின் பயன்களை விவரி.
9.
பங்குச் சந்தை தன்மைகளை விவரி. (ஏதேனும் 5)
10.
பங்குச் சந்தை பணிகளை விவரி.(ஏதேனும் 5)
1.
(i) தேசிய பங்குச்சந்தை நவம்பர் 1992 ல் அமைக்கப்பட்டது.
(ii) இது தேசிய அளவில் திரை சார்ந்து இணை வழியாக ஆணை பெரும் வியாபார அமைப்பாகும்.
(iii) இந்த அமைப்பு செயற்கைகோள் இணைப்பு மூலம் நாடு முழுவதும் பரவியுள்ள உறுப்பினர்களிடையே பங்குகளை, பத்திரங்களை வியாபாரம் செய்கிறது.
(iv) கடன் பிரிவு மூலதனப் பிரிவு என்றுள்ளது.
2.
(i) தேசிய பங்குச்சந்தை அமைப்பு ஸ்ரீ எம்.ஜே. பெர்வானி தலைமையில் (பிரபலமாக பெர்வானி குழு) உயர் அதிகாரம் கொண்ட அமைப்பினால் ஏற்படுத்தப்பட்டது.
(ii) இந்தியாவில் உள்ள தேசிய பங்குச்சந்தைகள் பின்வருமாறு:
1. இந்தியாவின் தேசிய பங்குச்சந்தை
2. இந்திய பங்கு வைப்பு குழு லிமிடெட்
3. தேசிய தீர்வை மற்றும் வைப்பு முறை
4. இந்திய பங்கு பத்திரங்கள் விற்பனைக் கழகம்.
3.
கலைமான் முனைம வேட்பாளர்:
(i) கலைமான் ஊக வணிகர் முன்னெச்சரிக்கை உடையவர்.
(ii) ஒரு நிறுமத்தின் பங்குகள் முனைமத்தில் (at premium) விற்கப்படும் என்று அறிந்தவுடன், புதிய விடுப்புகளில் பங்கு கோரி விண்ணப்பம் செய்வார். தனக்கு பங்குகள் ஒதுக்கப்பட்டால் அவற்றை முனைமம் பெற்றுக்கொண்டு விற்றுவிடுவார்.
(iii) இவர் ‘முனைம வேட்டையாளர்’ என்று அழைக்கப்படுகிறார்.
முடவாத்து (Lame duck) - போராடும் மனம் கொண்டவர்:
(i) தற்போதைய, தம் நடவடிக்கைகளில் உள்ள இடர்பாடுகளைத் தீர்ப்பதில் போராடிக் கொண்டிருக்கின்ற, ஒரு கரடி ஊக வணிகரே முடவாத்து என்று அழைக்கப்படுகிறார். கரடி ஊக வணிகர் பின்னர் கொடுப்பதற்காகத் தற்போது பத்திரங்களை விற்பார்.
(ii) மேலும் பங்குகளை இவரிடமிருந்து வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்தவரும் ஒப்பந்தத்தின் தீர்வைத் தள்ளி வைக்க விரும்பாததால் இவ்வகை ஊக வணிகர் போராட வேண்டியதாகிறது.
4.
காளை - தெஜிவாலா:
(i) பத்திரங்கள் எதிர்காலத்தில் விலையேற்றம் பெறும் என்று எதிர்பார்க்கின்ற ஊக வணிகர் காளை அல்லது தெஜிவாலா (Tejiwala) என்றழைக்கப்படுகிறார்.
(ii) ஒரு காளை தன்னுடைய கொம்புகளால் எதிரிகளை உயரே அல்லது மேல் நோக்கி தூக்கி ஏறிவது போன்று, இந்த வகை வணிக ஊக வணிகர் பிணையப் பத்திரங்களின் விலையை உயரச் செய்யும் நோக்கோடு செயல்படுவதால் காளை எனப் பெயரை பெற்றுள்ளார்.
(iii) இவர் எல்லாம் நன்மைக்காகவே நடைபெறும் (Optimism) என்ற மனப்பாங்கு கொண்டவர்.
கரடி - மண்டிவாலா:
(i) கரடி அல்லது மண்டிவாலா (Mandiwala) என்றழைக்கப்படும் ஊகவணிகர், எதிர்காலத்தில் குறிப்பிட்ட பத்திரங்களின் விலைகள் வீழ்ச்சி அடையும் என்று எண்ணுபவர்.
(ii) ஒரு கரடி வணிகர் எதிலும் பின்னோக்கிய மனப்பாங்கு(pessimism) கொண்டவர்.
(iii) ஒரு கரடி பொதுவாகத் தன்னுடைய எதிரியைத் தரையில் தள்ளி அழுத்துகிறது. அதேபோல் ஒரு கரடி ஊகவணிகரும் பங்குச் சந்தையில் பங்குகளின் விலையை கீழே தள்ளுவதற்கு வேண்டிய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்
5.
பங்கு மாற்றகங்களின் குறைபாடுகளை பின்வருமாறு கூறலாம்:
(i) பங்கு பரிவர்த்தனை சீரான மற்றும் கட்டுப்பாடு இல்லாதது.
(ii) பங்குச் சந்தைகளின் உறுப்பினர் மீது கட்டுப்பாடு இல்லாதது.
(iii) ஆரோக்கியமற்ற ஊகத்தை கட்டுப்படுத்துவதில் தோல்வி.
(iv) ஒரு இடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டணம் வசூலிக்க அனுமதிக்கிறது.
(v) பங்கு பரிவர்த்தனையின் விளிம்பு தேவைகள் அல்லது உற்பத்தி சந்தைகளின் விஷயத்தில் வலியுறுத்துவதில்லை.
(vi) பங்கு மாற்றகங்களில் பங்குகளை பட்டியலிட சரியான ஒழுங்குமுறைகள் இல்லை.
6.
லம்பார்டு தெரு (Lombard Street):
(i) இலண்டன் நகரத்தின் வணிகம், வங்கி, காப்பீட்டுத் தொழில் மற்றும் இடைக்கால நீட்சியாக குறிப்பிட்டளவு தொடர்பு ஏற்படுத்தியுள்ளது.
(ii) இந்த தெருவின் மொத்த நீளம் 260 மீட்டராகும்.
(iii) இது நியூயார்க் நகரின் வால் தெரு போன்று உள்ளது.
வால் தெரு (Wall Street):
(i) லோயர் மன்ஹாட்டனில் நியூயார்க் பங்குச்சந்தையின் உண்மையான இல்லாமல் வால் தெரு இருக்கிறது.
(ii) அமெரிக்க தரகு மற்றும் முதலீட்டு வங்கிகளின் சிறப்புமிக்க தலைமையகமாகவும் உள்ளது.
(iii) நிதி மற்றும் முதலீட்டுக் குழுவின் ஒருங்கிணைந்த பெயராக உள்ளது.
7.
| வ.எண் | சிறப்பியல்புகள் | பங்கு பரிவர்த்தனை | பண்டமாற்று பரிவர்த்தனை |
|---|---|---|---|
| 1 | பொருள் | பங்குச் சந்தை என்பது தொழில்துறை மற்றும் நிதிப் பாதுகாப்பின் கொள்முதல் மற்றும் விற்பனைக்கான ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சந்தை. | ஒரு பண்டமாற்று பரிமாற்றம் என்பது பண்டங்கள் வர்த்தகம் செய்யப்படும் பரிமாற்றமாகும். |
| 2 | பணிகள் | எளிதான சந்தைப்படுத்துதலை வழங்குதல் | பத்திரங்களுக்கு தேவை ஏற்படுத்துதல் அல்லது பத்திரங்களுக்கு விலைக் காப்பீடு சேவைகள் மற்றும் நீர்மை தன்மை ஏற்படுத்துதல். |
| 3 | பங்கேற்பாளர்கள் | முதலீட்டாளர்கள் மற்றும் ஊக வணிகர்கள் | தயாரிப்பாளர்கள், முகவர்கள், நிறுவனங்களின் வியாபாரிகள் மற்றும் ஊகவணிகர்கள் |
| 4 | ஒப்பந்தங்களின் காலம் | ரொக்கம், உடனடி வழங்கல் மற்றும் பதினைந்து நாட்களுக்கான ஒப்பந்த கணக்கு | எதிர்கால சந்தை ஒப்பந்தங்களுக்கான 2 அல்லது 3 மாதங்கள் கால செலுத்துகை மற்றும் உடனடி பண ஒப்பந்தங்கள் |
| 5 | முன் ஒப்பந்தம் | பத்திரங்கள் முழுமையாக தரநிலையாக்கப்படுவதால் முன்னோக்கு ஒப்பந்தங்கள் எளிமைப்படுத்தப்படுகின்றன. | எதிர்கால ஒப்பந்தத்தை எளிதாக்குவதற்கு தரநிலை வகுப்புகளுக்கு நியமங்கள் இருக்க வேண்டும். |
| 6 | விலை புள்ளி | முன்னோக்கிய ஒப்பந்தங்களைப் பொறுத்தவரை ஒரு முனை புள்ளிகள் மட்டுமே சாத்தியமாகும். | எதிர்கால ஒப்பந்தங்களுக்கான பலமுனை புள்ளிகள் சாத்தியமாகும். |
| 7 | பணிகள் | எளிதான சந்தைப்படுத்துதலை வழங்குதல் | பத்திரங்களுக்கு தேவை ஏற்படுத்துதல் அல்லது பத்திரங்களுக்கு விலைக் காப்பீடு சேவைகள் மற்றும் நீர்மை தன்மை ஏற்படுத்துதல். |
| 8 | நோக்கம் | பொருள் மூலதன உருவாக்கம் மற்றும் மூலதன ஆதாரங்களை சிறந்த முறையில் பயன்படுத்துதல் ஆகியவற்றை எளிதாக்குகிறது | ஆபத்து குறைப்பு மூலம் பொருட்கள் விற்பனையை அதிகரிக்க உதவுகிறது |
8.
அ. சமுதாயத்திற்கான பயன்கள்:
i) பொருளாதார வளர்ச்சி:
உற்பத்தித் தேவைகளுக்காக நிலையான சேமிப்புகளை உறுதிப்படுத்துவதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது.
ii) நிதி திரட்டல் தளம்:
நன்கு நிர்வகிக்கப்பட்ட இலாபத்தை உருவாக்கும் நிறுவனங்கள் புதிய பங்குகளின் மூலம் வரம்பற்ற நிதியைத் திரட்ட உதவுகிறது.
iii) வளங்களை மாற்றுதல்:
நிறுவனத்தை செம்மையாக இயக்குவதற்கு வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்தி பகிர்ந்தளிக்கப்படுகின்றன.
iv) மூலதன உருவாக்கம்:
பங்குச்சந்தை வாயிலாக மூலதன உருவாக்கத்தை ஊக்கப்படுத்துகிறது.
v) அரசாங்கத்திற்கான நிதி திரட்டல்:
நிதி பங்குச்சந்தை மீதான பத்திரங்களின் விற்பனை மூலம் திட்டங்களை மேற்கொள்வதற்கு நிதி திரட்ட உதவுகிறது.
ஆ. நிறுவனத்திற்கான பயன்கள்:
i) நிறுவனத்தின் மீதான நன்மதிப்பு உயருதல்:
பங்கு மாற்றகங்களில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் அதிகப்படியான நற்பெயரையும், கடன் பெறும் தன்மையையும் பெற்றுள்ளது.
ii) விரிவான சந்தை:
பங்குகளுக்கு விரிவான சந்தை தயாராக உள்ளது.
iii) பெரும் நிதி திரட்டப்படுதல்:
பங்குகள் மற்றும் கடனீட்டுப் பத்திரங்களின் மூலம் பங்குச்சந்தை எளிதில் பெரிய நிதியை பெருக்க முடியும்.
iv) பேரம் பேசும் வலிமையை அதிகரிக்கிறது:
கூடுதல் விரிவாக்கம், இணைப்பு அல்லது ஒருங்கிணைத்தல் காரணமாக அதிக பேரம் பேசும் சக்தி பெற்று நிறுவனங்களின் பங்குகள் விற்பனை எண்ணிக்கையை அதிகரிக்கிறது.
இ. முதலீட்டாளர்களுக்கான பயன்கள்:
i) நீர்மைத் தன்மை:
முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை விரைவாக பணமாக மாற்றுவதற்கு பங்கு மாற்றகம் உதவுகிறது.
ii) பாதுகாப்பு இணை மதிப்பு சேர்க்கை:
வங்கிகளில் கடன் பெரும் பொழுது பங்கு பத்திரங்களுக்கு பங்கு பரிமாற்ற நிலையங்களில் வழங்கப்படும் பாதுகாப்பு மதிப்பு சேர்க்கப்படுகிறது.
iii) முதலீட்டாளர் பாதுகாப்பு:
பங்குச்சந்தை பரிவர்த்தனைகள், முதலீட்டாளர்கள் வட்டி, விதிமுறைகள் ஆகியவற்றை கடுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் நியாயமான ஒப்பந்தத்தை உறுதிப்படுத்துகிறது.
iv) பங்கு பத்திரங்களின் உண்மையான மதிப்பை மதிப்பீடு செய்தல்:
பத்திரங்களின் உண்மையான மதிப்பை தினசரி பத்திரிக்கைகள், வலைத்தளங்களின் உதவியுடன் சந்தையில் எளிதாக மதிப்பீடு செய்யலாம்.
v) பத்திரங்களின் வியாபாரத்திற்கான கருவி:
பங்கு மாற்றகம், பட்டியலிடப்பட்ட பங்குகளை ஒரு சில நிமிடங்களிலேயே விற்பனை செய்வதற்கான முறைகளையும், வாங்குவதற்கான நடைமுறைகளையும் கொண்டுள்ளது.
9.
பங்குச் சந்தையின் பல்வேறு குணாதிசயங்கள் கீழே விளக்கப்பட்டுள்ளன:
(1) பத்திரங்களுக்கான சந்தை (Market for Securities)
பங்கு பரிவர்த்தனை என்பது ஒரு சந்தை, இது பெருநிறுவனங்கள், அரசு மற்றும் அரசுக்கு இணையான நிறுவனங்கள் ஆகியவற்றின் பத்திரங்கள் வாங்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
(2) மறுவிற்பனை பத்திரங்களுக்கான சந்தை (Deals in Second Hand Securities)
(i) நிறுவனங்களால் ஏற்கனவே வெளியிடப்பட்ட பங்குகள், கடனீட்டு பத்திரங்கள் மற்றும் பத்திரங்கள் விற்பனையில் இது ஈடுபடுகிறது.
(ii) கருத்துக்கூறின் இது ஏற்கனவே வெளியிடப்பட்ட அல்லது மறுவிற்பனை பத்திரங்களைக் கையாளுகிறது.
(3) தனிநபர்களின் அமைப்பு (Association of Persons)
ஒரு பங்கு மாற்றகம் என்பது தனிநபர்களின் அல்லது குழுக்களின் பதிவு செய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்படாத அமைப்பாக இருக்கலாம்.
(4) மத்திய அரசின் அங்கீகாரம் (Recognition from Central Government)
பங்கு மாற்றகம் என்பது ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட சந்தையாகும். அரசின் அங்கீகாரம் இதற்கு தேவைப்படுகிறது.
(5) விதிகளின்படி செயல்படுதல் (Working as per Rules)
(i) பங்குச் சந்தையில் பங்குகளை வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவை பங்கு மாற்றகம் மற்றும் SEBI வழிகாட்டுதலின் படி அவை கொண்டுள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளால் நிர்வகிக்கப்படுகின்றன.
(ii) எந்த சூழலிலும் விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களிலிருந்து எந்தவொரு விலகலும் அனுமதிக்கப்படவில்லை.
(6) பத்திர வர்த்தகத்தை ஒழுங்குபடுத்துதல்: பங்கு மாற்றகம் அதன் சொந்த கணக்கில் எந்தப் பத்திரங்களையும் வாங்குவதோ விற்பதோ இல்லை. பத்திர வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் பங்கு மாற்றக உறுப்பினர்கள் மற்றும் தரகர்கள் ஆகியோர் பத்திரங்களை வர்த்தகம் செய்வதற்கு தேவையான உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை அது வழங்குகிறது.
(7) பட்டியலிடப்பட்ட பத்திரங்களில் மட்டும் வணிக நடவடிக்கைகள் மேற்கொள்ள அனுமதியளித்தல் : உண்மையில் பங்கு மாற்றகம் அனுமதி பட்டியலில் இடம் பெற்றிருக்கும் பத்திரங்களை மட்டுமே வாங்கி விற்க அனுமதிக்கிறது. பங்கு பரிவர்த்தனைகளின் பட்டியலில் காணப்படாத பத்திரங்கள் பட்டியலிடப்படாத பத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
(8) உறுப்பினர்களால் மட்டும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் (Transactions Effected only through Members) :
பங்கு மாற்றகத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து வகை பத்திர நடவடிக்கைகளும் அதன் அங்கீகரிக்கப்பட்ட தரகர்கள் மற்றும் உறுப்பினர்கள் மூலமாக மட்டுமே செயல்படுத்தப்படுகின்றன. பங்குச் சந்தையில் வெளிநபர்கள் அல்லது நேரடி முதலீட்டாளர்கள் பங்கு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதியில்லை.
10.
ஒரு பங்குச் சந்தையின் பல்வேறு செயல்பாடுகளை கீழே விளக்கப்பட்டுள்ளன.
1. உடனடி மற்றும் தொடர்ச்சியான சந்தை:(Ready and Continuous Market)
(i) பங்கு பரிவர்த்தனை உண்மையில், ஏற்கனவே இருக்கும் பத்திரங்களுக்கு ஒரு சந்தை.
(ii) ஒரு முதலீட்டாளர் தனது பத்திரங்களை விற்க விரும்பினால், அவர் எளிதில் விரைவாக பங்குச் சந்தைகளில் அவற்றை விற்பனை செய்யலாம்.
(iii) வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர் தனது பங்குகளை பணமாக மாற்றலாம். அதே போல் அவர் தன் பணத்தை பத்திரங்களில் மாற்றலாம்.
2. பத்திரங்கள் சரியான மதிப்பீடு: (Correct Evaluation of Securities)
(i) பத்திரங்கள் வாங்குதல் மற்றும் விற்பனை செய்யப்படும் விலைகள் பதிவு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன.
(ii) இதன் விலைகள் "சந்தை மேற்கோள்கள்" என்று அழைக்கப்படுகின்றன.
(3) மூலதன உருவாக்கத்திற்கான உதவி (Aid to Capital formation)
(i) பங்குச் சந்தை பரிமாற்றம் பல்வேறு தொழில் துறை பத்திரங்கள் மற்றும் அவற்றின் விலைகள் மற்றும் அவர்களின் கொள்முதல் மற்றும் விற்பனைக்கு வழங்கிய வசதிகள் ஆகியவற்றை மக்களுக்கு சேமித்து, முதலீடு செய்ய தூண்டுகிறது.
(ii) பங்கு பரிமாற்றங்கள், ஒரு நிலையான மூலதனத்தை தொழில்துறையில் உறுதிப்படுத்துகின்றன மற்றும் தொழில் துறை வளர்ச்சிக்கு உதவும்.
(4) ஊக வணிகத்திற்கான வசதிகள் (Facilities for Speculation)
(i) ஊகவணிகம் என்பது பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகளின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.
(ii) ஊக வணிகத்தின் விளைவாக, பத்திரங்களின் தேவை மற்றும் வழங்கல் சமமாகிறது.
(ii) இதேபோல், விலை நகர்வுகள் சுமூகமாக அளிக்கப்படுகின்றன.
(5) பருவகால பத்திரங்கள் (Seasoning of Securities)
(i) புதிய நிறுவனங்கள் பங்குகள் வெளியிடும் பொழுது, ஊக வணிகர்கள் மற்றும் பொறுப்புறுதியாளர்கள் தற்காலிக கால வணிகத்தில் ஈடுபடுகின்றனர்.
(ii) புதிய வெளியீடுகளை சந்தை ஈர்க்க தயாராகும் பொழுது அவர்களுக்கு அவைகள் சந்தையை திறந்து விடுகின்றன.
(6) மூலதனத்தை சரியான முறையில் வழிப்படுத்துதல்: மக்கள் நல்ல லாபத்தை ஈட்டக் கூடிய அத்தகைய நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்ய விரும்புகிறது. ஆனால் பங்குச் சந்தைகளுக்கு இந்த சேமிப்புக்கள் இலாபமற்ற அலகுகள் பங்குகள் மீது வீணடிக்கப்படக்கூடும்.
(7) முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பு : ஒரு பங்கு பரிவர்த்தனையில் அனைத்து ஒப்பந்தங்களும் நன்கு வரையறுக்கப்பட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு ஏற்ப உள்ளன. உதாரணமாக, தங்கள் சேவைகளுக்கான அதிகமான கமிஷன்களை புரோக்கர்கள் வசூலிக்க முடியாது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards