12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 13/09/2019
சரக்கு விற்பனைச் சட்டம் 1930
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
விலைபெறாத வணிகர் கீழ்க்குறிப்பிட்டுள்ள எந்த தகுநிலையில் சரக்கினை வைத்திருக்கும்போது பற்றுரிமை செலுத்த முடியும்.
பொருளின் உரிமையர்
வாங்குநரின் முகவர்
வாங்குநரிடம் ஒப்படைக்கப்பட்டவை
மேற்கூறிய அனைத்து தகுநிலையிலும்
2.
ஒப்பந்தத்திற்கு உறுதுணையாக இருக்கும் நிபந்தனை
நம்புறுதி
நிபந்தனைகள்
உரிமை
உடன்பாடு
3.
குறிப்பிட்ட சரக்கு என்பது விற்பனையின் எந்தக் காலகட்டத்தில் உள்ள சரக்கைக் குறிக்கிறது?
உடன்பாடு செய்யும்போது
ஒப்பந்தம்
ஆணையைப் பெறும்போது
விற்க கடமைப்பட்டபோது
4.
அறுதியிடப்படாத பொருளைப் பொறுத்தவரை வாங்குநருக்கு எப்போது உரிமை மாறுகிறது?
அறுதியிடப்பட்ட பின்பு
ஒப்பந்தத்தின் பேரில் சரக்கினை ஒதுக்கி வைக்கும் போதும்
நிறையிட்டு அளந்த பிறகு
அ மற்றும் ஆ
5.
சரக்கு விற்பனைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
1940
1997
1930
1960
6.
நம்புறுதி என்றால் என்ன?
7.
சரக்கு என்றால் என்ன?
8.
சரக்கு விற்பனை ஒப்பந்தம் என்றால் என்ன?
9.
எப்போது விலைபெறா வணிகர் வாங்குநரின் மீது தனிப்பட்ட முறையில் வழக்கு தொடுக்கலாம்?
10.
பொருள் விற்பனை ஒப்பந்தம் உட்கிடை நிபந்தனைகள் மற்றும் நம்புறுதிகளை விவாதிக்க.
11.
விற்பனை உடன்பாடு என்றால் என்ன?
12.
விலைபெறா வணிகரிடமிருந்து கிடைக்கும் சரக்கின் மீதான உரிமையை விளக்குக.
13.
விற்பனை ஒப்பந்தத்தின் அடிப்படை கூறுகளைக் கூறி விளக்குக.
1.
(a)
பொருளின் உரிமையர்
2.
(a)
நம்புறுதி
3.
(c)
ஆணையைப் பெறும்போது
4.
(b)
ஒப்பந்தத்தின் பேரில் சரக்கினை ஒதுக்கி வைக்கும் போதும்
5.
(c)
1930
6.
1. ஒப்பந்தத்தில் ஒரு பொருளுக்கு துணையாக உள்ள கூற்று நம்புறுதி எனப்படும்.
2. நம்புறுதிகளை மீறுதல் நட்ட ஈடு தருவதற்கு வழிகோலும்.
7.
சரக்கு என்ற சொல் பணம், அசையாச் சொத்து, மற்றும் உரிமைகோர் (Actionable Claims) சரக்கில் அடங்காது. சரக்கு என்ற சொல்லில் பணம், அசையா சொத்துக்கள் மற்றும் உரிமைக்கோர் போன்றவை அடங்காது. மேலும் சரக்கில் அனைத்து அசையும் சொத்துகளான பங்குகள், பயிர்கள் மற்றும் கண்ணுக்குப் புலனாகாத இனங்களான நற்பெயர், காப்புரிமை, பதிப்புரிமை, வணிகக்குறிகள், வியாபார சூத்திரம், போன்றவைகளும் உள்அடங்கும்.
8.
சரக்கு விற்பனை ஒப்பந்தம் என்பது எந்த ஒப்பந்தத்தின் வாயிலாகப் பொருளை விற்பவர் வாங்குநருக்கு விலை என்ற மறுபயன் பெற்றுக் கொண்டு பொருளின் மீதான உரிமையை மாற்றித் தருகிறாரோ அதுவே சரக்கு விற்பனை ஒப்பந்தமாகும்.
9.
1. வாங்குநர் பொருளுக்கான விலையை செலுத்த தவறும் பொழுது வழக்கு தொடரலாம்.
2. வாங்குநர் சரக்கை தவறுதலாக ஏற்க மறுக்கும் பொழுது நட்ட ஈடு கேட்டு வழக்கு தொடரலாம்.
3. சரக்கை ஒப்படைக்கும் நாளுக்கு முன்பாக வாங்குநர் ஒப்பந்தத்தை மறுத்துரைக்கும் பொழுது வழக்கு தொடரலாம்.
4. விற்பனை விலையை தராத பொழுது அதற்கான வட்டி கேட்கும் உரிமையை விற்பனையாளர் விற்பனை ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிட்டிருந்தால் விலை செலுத்திய நாளிலிருந்து வட்டியும் வசூலிப்பதற்கு வழக்கு தொடரலாம்.
10.
உட்கிடை நிபந்தனைகள் :
(i) உரிமை குறித்த நிபந்தனை : பொருளை விற்பவர் அந்தக் குறிப்பிட்டப் பொருளை விற்க உரிமை கொண்டவர். வாங்குபவர் பொருளை விற்பவர். அந்த பொருளை விற்பதற்கு உரிமையுள்ளவர் என்று கருதிக் கொள்ளலாம்.
(ii) விவரிப்பு குறித்த நிபந்தனை : விவரிப்பு மூலம் விற்பனை செய்யப்பட்ட சரக்கு விவரித்தபடியே இருக்க வேண்டும். அதாவது வாங்குபவர் வாங்க விரும்பும் பொருளின் உண்மை நிலையை சோதித்து அறியும் வாய்ப்பைப் பெற்றிருந்தால் அப்பொழுது இந்த விதி பொருந்தாது.
உட்கிடை நம்புறுதிகள் :
(i) இடையூறற்ற உரிமை: தான் வைத்திருக்கும் சரக்கைப் பிறர் இடையூறு இன்றி முழுமையாக அனுபவிக்க முடியும் என்ற நம்புறுதி உடன்பாட்டில் உண்டு. வேறு யாரேனும் தன்னை விட சிறந்த உரிமை இருப்பதாகக் கூறிக்கொண்டு பின்னர் சரக்கு உரிமைக்கு இடையூறு விளைவித்தால், விற்குநரிடம் வாங்குனர் நட்ட ஈடு பெறும் உரிமை பெற்றவர்.
(ii) வில்லங்கம் பற்றிய நம்புறுதி: தான் வாங்கிய சரக்கு மூன்றாம் நபரின் பிணையத்திற்கு உட்பட்டதல்ல என்ற வில்லங்கம் பற்றிய நம்புறுதி விற்பனை ஒப்பந்தத்தில் உண்டு.
11.
விற்பனை ஒப்பந்தம் என்ற சொல்லில் விற்பனையும் மற்றும் விற்பனை உடன்பாடும் உள்ளடக்கியது.
1. விற்பனை -பொருளின் உரிமையை உடனே மாற்றிவிடக்கூடிய நடவடிக்கைகள்.
2. விற்பனை உடன்பாடு - பொருளின் உரிமையை எதிர்காலத்தில் மாற்றும் நடவடிக்கைகள்.
12.
1. பற்றுரிமை"
1. விலை முழுவதையும் பெறும் வரை சரக்கை தன் வசம் வைத்துக் கொள்ளும் உரிமை விலை செலுத்தப்படா வணிகருக்கு உண்டு.
2. இவ்வுரிமையை பெற கீழ்க்கண்ட நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும்.
i) சரக்கின் உடைமையை விற்றவர் பெற்றிருக்க வேண்டும்.
ii) கடனுக்கு சரக்கை விற்றிருக்கக் கூடாது.
iii) வாங்குனர் நொடிப்பு நிலை அடைந்திருக்க வேண்டும்.
பற்றுரிமை இழப்பு:
i) விற்ற பொருளுக்கான விலையை தராத நிலையில் சரக்கை தான் நினைத்தபடி நிறுத்தி வைக்கவும். உரிமையை ஒப்பந்தம் போடும் பொழுதே எடுத்துக்கொள்ள தவறும் பொழுது.
ii) வாங்குநரோ அல்லது அவரின் முகவரோ பொருளின் உடமையை பெற்றுவிட்டால்.
iii) பற்றுரிமை செய்ய உரிமையை விற்பவர் விட்டுக் கொடுத்திருந்தால் மேற்கண்ட காரணங்களால் பற்றுரிமை இழக்கப்படுகிறது.
2. வழி இடைநிறுத்த உரிமை:
சரக்கு விற்பவரிடமிருந்து வாங்குபவரிடம் செல்லும் பொழுது அதை வழிமறித்து தன்வசம் கையகப்படுத்தும் உரிமை விலைபெறாத வணிகருக்கு உண்டு.
நிபந்தனைகள்:
அ) i) சரக்கு விற்பவரிடமோ அல்லது வாங்குபவரிடமோ இருக்க கூடாது.
ii) பொது சரக்கேற்றியிடம் பொருளை சேர்க்கும் நோக்குடன் ஒப்படைக்கப்பட்டு வழியில் சென்று கொண்டிருக்க வேண்டும்.
வழி இடைநிறுத்த உரிமை இழப்பு:
அ) சரக்கின் உடமையை வாங்குனருக்கோ அல்லது அவரின் முகவருக்கோ சரக்கேற்றி கொடுத்து விடும்பொழுது.
ஆ) பொருள் சேரவேண்டிய இடத்தில் சேர்ந்த பிறகு பொது சரக்கேற்றி நிறுவனம் வாங்குனருக்கோ அல்லது அவரின் முகவருக்கோ பொருள் வந்து சேர்ந்து விட்டது என்றும் அதனை எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற தகவல் தெரிவித்த பொழுது.
3. மறு விற்பனை உரிமை:
அ) விற்கப்பட்ட சரக்கு அழியும் தருவாயில் உள்ள போது
ஆ) பற்றுரிமை அல்லது வழிமறித்து பெறப்பட்ட சரக்கை வேறுநபருக்கு விற்கும் தனது எண்ணத்தை கூறிய பிறகும் வாங்குனர் அதற்கான விலையை செலுத்தாத பொழுது.
இ) மறு விற்பனை செய்யும் உரிமையை சரக்கு விற்பனை ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தால் வாங்குநருக்கு விற்பவர் அறிவிப்பு தர தேவையில்லை.
13.
விற்பனைச் சட்டத்தின் அடிப்படைக் கூறுகள்: ஒரு விற்பனை ஒப்பந்தச் சட்டத்திற்கு பின்வரும் கூறுகள் இன்றியமையாததாக கருதப்படுகிறது.
(i) இருதரப்பினர்: சரக்கு விற்பனைச் சட்டத்தில் இருதரப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் வாங்குனர் இன்னொருவர் விற்பனையாளர். ஒரு தனி நபர் தனக்கே பொருளை எடுத்துக் கொள்வதை விற்பனை என்ற சொல் குறிக்காது.
(ii) பொருளின் மீதான உரிமை மாற்றம்: விற்பனை என்று அழைக்க, விற்பவர் பொருளின் மீதான உரிமையை வாங்குபவர்க்கு மறுபயன் பெற்றுக் கொண்டு மாற்றித்தர வேண்டும். பொருளின் உடைமை மாற்றுவது என்ற செயல் விற்பனை ஆகாது.
(iii) சரக்கு/பொருள்: சரக்கு என்ற சொல் பணம், அசையாச் சொத்து மற்றும் உரிமைகோர் சரக்கில் அடங்காது. சரக்கு என்ற சொல்லில் பணம், அசையா சொத்துக்கள் மற்றும் உரிமைக்கோர் போன்றவை அடங்காது.
(iv) விலை: பொருளின் விற்பனைக்கு மறுபயனே விலை ஆகும். பொருளைப் பொருளுக்கு மாற்றாக பரிமாற்றம் செய்துக் கொள்வது விலையாகாது. பொருளைப் பகுதியாக பொருளுக்கும் மீதப் பகுதியாக விலைக்குமே மாற்றிக் கொள்ளும்போது, விலைக்கு மாற்றிய பகுதி மட்டும் விற்பனை நடவடிக்கை ஆகும்.
(v) விற்பனை மற்றும் விற்பனை உடன்பாடு:
பொருளின் உரிமையை உடனே மாற்றிவிடக் கூடிய நடவடிக்கைகள் விற்பனை என்றும், உரிமையை எதிர்காலத்தில் மாற்றும் நடவடிக்கைகளுக்கு விற்பனை உடன்பாட்டு நடவடிக்கைகள் எனவும் பொருள்படும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards