12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 13/09/2019
தொழில் முனைவோர்களின் வகைகள்
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
கீழ் குறிப்பிடப்பட்டவையில் எது தொழில் நுட்பத்தை அடிப்படையாக கொண்டது
நவீன தொழில் முனைவு
தொழில் துவக்கும் மற்றும் வளர்க்கும் தொழில் முனைவு
கூட்டுறவு தொழில் முனைவு
தொழிற்சாலை தொழில் முனைவு
2.
தெளிவான தொழில்முனைவோரின் நோக்கம்
சேவை புரிதல்
இலாபம் ஈட்டல்
தகுதிநிலை எட்டுதல்
ஆ மற்றும் இ
3.
சேவை புரியாத தொழில் முனைவோரைக் கண்டுபிடி
உணவு விடுதி நடத்துபவர்
வங்கித் தொழில் செய்பவர்
வான்வழி போக்குவரத்து செயல்பாட்டாளர்
கால்நடை பராமரிப்பாளர்
4.
கோழிப்பண்ணை, மலர்வணிகம், பழஉற்பத்தி போன்ற வகை செயல்கள் கீழ் குறிப்பிடப்பட்ட துறையில் எதனைச் சார்ந்த செயல்.
கூட்டுப்பங்கு நிறுமம்
சில்லறை வணிகம்
வணிகம்
வேளாண்மை இயல்
5.
கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள தொழில் முனைவோரில் பணிசாரா தொழில் முனைவோரைத் தேர்ந்தெடுக்க.
புதினம் புனையும் தொழில் முனைவோர்
பாரம்பரிய தொழில் முனைவோர்
காலங்கடந்தும் பழமைவாத தொழில்முனைவோர்
ஆண்தேனி தொழில் முனைவோர்
6.
கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வினைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
a. இலாப நோக்கிற்காக ஆரம்பிக்கப்பட்ட வினை
b. அரசால் துவங்கப்பட்ட வினை
c. தனியாரும் அரசும் இணைந்து துவங்கும் தொழில் முனைவு
d. குடும்ப வியாபாரமாகத் துவங்கப்பட்ட வினை
7.
வேளாண் தொழில் முனைவோர் என்பவர் யார்?
8.
கூட்டு பங்கு தொழில் முனைவோரின் மற்றொரு பெயர் என்ன?
9.
வேளாண் தொழில் முனைவோரைப் பற்றி சுருக்கமாக எழுதுக.
10.
தொழில் முனைவையே தொழிலாகக் கொண்ட முனைவோர் எப்படி செயல்படுகிறார்?
11.
அரசியல் சூழல் என்றால் என்ன?
12.
ஊரக மற்றும் நகர்ப்புற தொழில்முனைவோரை வேறுபடுத்திக் காட்டுக.
13.
பணிசார் தொழில் முனைவோரின் தன்மையை விவரி.
1.
(b)
தொழில் துவக்கும் மற்றும் வளர்க்கும் தொழில் முனைவு
2.
(d)
ஆ மற்றும் இ
3.
(d)
கால்நடை பராமரிப்பாளர்
4.
(d)
வேளாண்மை இயல்
5.
(c)
காலங்கடந்தும் பழமைவாத தொழில்முனைவோர்
6.
a. இலாப நோக்கிற்காக ஆரம்பிக்கப்பட்ட வினை - தனி உரிமை தொழில் முனைவு
b. அரசால் துவங்கப்பட்ட வினை - அரசு தொழில் முனைவு
c. தனியாரும் அரசும் இணைந்து துவங்கும் தொழில் முனைவு - இணை தொழில் முனைவு
d. குடும்ப வியாபாரமாகத் துவங்கப்பட்ட வினை - தனி உரிமை தொழில் முனைவு
7.
(i) வேளாண் தொழில் முனைவோர் வேளாண் பொருட்களை விளைவித்து சந்தையிடும் தொழிலை முனைகின்றனர்.
(ii) இவர்கள் பல்வேறு இயற்கை சார்ந்த உள்ளீட்டு பொருட்களான உரம், விதை, தண்ணீர், பூச்சிக்கொல்லி மருந்துகள், உழைப்பு போன்ற இடுபொருட்களை கொண்டு உணவு பொருட்களை உற்பத்தி செய்கின்றனர்.
8.
தோற்றுவிப்புப் பணியாளர்.
9.
1. வேளாண் பொருட்களை விளைவித்து, நேரடியாகவோ அல்லது கூட்டுறவு அமைப்புகள் மூலமாகவோ சந்தையிடும் பணியை மேற்கொள்பவர்.
2. இவர்கள் பல்வேறு இயற்கை சார்ந்த உள்ளீட்டு பொருட்களான உரம், விதை, தண்ணீர், பூச்சிக்கொல்லி மருந்து, உழைப்பு போன்ற இடு பொருட்களை இட்டு உணவு பொருட்களை உற்பத்தி செய்கின்றனர்.
3. மேலும் மாட்டுப்பண்ணை, ஆட்டுப்பண்ணை, கோழி வளர்ப்பு, மீன் பூ வளர்த்தல், இறால் வளர்த்தல் மற்றும் வேளாண் கருவிகளை உற்பத்தி செய்தல் போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.
10.
1. எந்த ஒரு தொழிலையும் நிரந்தரமாக நடத்த மாட்டார்.
2. புதிய தொழிலை நடப்பு சூழ்நிலைக்கு ஏற்ப சிந்தித்து உருவாக்கி வளர்த்து பின் அத்தொழிலை விட்டு வெளியேறுவது இவரின் பலம்.
3. இவரை தொழில் முனைவு வித்தகர்கள் எனவும் அழைக்கலாம்.
11.
1. எந்த ஒரு அரசியல் காரணங்கள் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தவும், பாதிக்கவும் செய்கிறதோ அதுவே அரசியல் சூழல் எனப்படும்.
2. அந்த ஊக்கம் அல்லது பாதிப்பு ஊரக, தேசிய அளவில் கூட இருக்கலாம்.
3. தொழில் முனைவோர் அந்த அரசியல் காரணிகளை நன்கு ஆராய்ந்து செயல்பட வேண்டும்.
12.
| வ.எண் | வேறுபாடு | நகர்புற தொழில் முனைவோர் | ஊரக தொழில் முனைவோர் |
|---|---|---|---|
| 1. | அமைவிடம் | மாநில தலைநகரம், மாவட்ட தலைநகரம் பேரூராட்சிகளில் தொழிலை துவங்குவார். | கிராமப்புறங்களில் தனது தொழிலை துவங்குபவர். |
| 2. | அரசின் சலுகைகள் | ஊரக தொழில் முனைவோரை காட்டிலும் குறைவான அரசு சலுகைகளை பெறுகிறார். | கிராமப்புற வளர்ச்சிக்காக அரசு அதிகமான சலுகைகளை இவருக்கு வழங்குகிறது. |
| 3. | அமைப்பு | உற்பத்தி, சில்லறை அல்லது கூட்டு பங்கு நிறும தொழில் முனைவோராக இருக்கலாம். | உற்பத்தி மற்றும் சில்லறை தொழில் முனைவோராக இருக்கலாம். |
| 4. | உற்பத்தி செலவு | நகர்ப்புறங்களில் செயல்படுவதால் அதிகமான உற்பத்தி செலவு ஏற்படுகிறது. | கிராமப்புறங்களில் செயல்படுவதால் குறைவான உற்பத்தி செலவு ஏற்படுகிறது. |
| 5. | விலை | உற்பத்தி செலவு அதிகமாதலால் பொருளுக்கான விலையை அதிகரித்து விற்பனை செய்கிறார். | உற்பத்தி செலவு குறைவாக உள்ளதால் நுகர்வோருக்கு குறைவான விலையில் பொருட்களை விற்பனை செய்கிறார். |
13.
பணிசார் வகைப்பாடு :
(i) புதுமை படைக்கும் தொழில் முனைவோர் : ஒரு புதுமை புகுத்திக் கொண்டே இருப்பவர். இவர்கள் எப்போதும் வியாபாரச் சூழல்களை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டே இருப்பவர்கள். அதன் அடிப்படையில் நுகர்வோருக்கு எந்தெந்த தேவை நிறைவேறாமல் இருக்கிறது என்பதைப் பகுத்து ஆய்ந்து அதனை தங்களுடைய பொருட்களின் மூலம் நிறைவேற்றுவார்கள்.
(ii) மாதிரியை பின்பற்றும் தொழில் முனைவோர்:
மாதிரியை பின்பற்றும் தொழில் முனைவோர்கள் தற்போது சந்தையில் கிடைக்கும் பொருள்களை தங்களின் அறிவு, ஆற்றல், வல்லமையை வைத்துக்கொண்டு வேறுமுறையில் வடிவமைப்பவர்கள். இவர்கள் மேலைநாடுகளில் வடிவமைக்கப்பட்ட பொருட்களை தங்களின் உள்ளூர் தேவைக்கு ஏற்றபடி உருமாற்றி வெளியிடுபவர்கள்.
(iii) காலம் கடத்தும் பழமைவாத தொழில்முனைவோர் :
பழமை தொழில் முனைவோர்கள் எதையும் புதிதாக புகுத்துவதில் தயக்கம் காட்டுபவர்கள். குறிப்பாக புதியது புகுத்தினால் இடர் வந்துவிடும் என அச்சம் கொள்பவர்கள். தொழில் சூழ்நிலைகள் மாறிவரும் போதிலும் மாறாத இவர்கள் மாற்றத்தை வேறு வழி இல்லாத நிலையில் ஏற்க தள்ளப்படுபவர்கள்.
(iv) மந்தமான தொழில் முனைவோர் (அ) ஆண் தேனி தொழில் முனைவோர் :
மந்தமான தொழில் முனைவோர்களும் பழமைவாத தொழில் முனைவோருக்கு நிகராக மாறுதல்களை ஏற்க விரும்பாதவர்கள். இவர்கள் யாரும் நுழைய விரும்பாத அல்லது பெரிய நிறுமங்களால் புறக்கணிக்கப்பட்ட ஒரு சிறிய சந்தையில் செயல்படுபவர்கள். அதாவது சிறிய குட்டையில் பெரிய மீனாக அரசாள்பவர்கள். அந்த சிறுசந்தையில் எவ்வித மாற்றமும் செய்யாமல் அப்படியே இயங்குபவர்கள்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards