12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set C
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set C

Published on: 17/01/2020
12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
கீழ்கண்ட எந்த செயற்கூறானது ஒரு கோப்பிலுள்ள அனைத்து உள்ளடக்கத்தையும் படிக்கின்றது.
fgets()
file – get-contents()
fread()
readfile()
2.
வியாபாரிகளுக்கு கம்ப்யூட்டர் வலையமைப்புகளில் சவால் விடுவிப்பது எது?
ஹேக்கிங்
வைரஸ்கள்
அ மற்றும் ஆ
மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை
3.
இணைய தொடர்பின் __________ குரல், தரவு, படங்கள் மற்றும் உரைச்செய்திகளால் உருவாக்கப்பட்டுள்ளது
சமூக ஊடகம்
மொபைல் வலையமைப்பு
வாட்ஸ்ஆப்
மென்பொருள்
4.
கூற்று (A): IPv6 முகவரி முறையில் பயன்படுத்தப்படும் முகவரிகளின் எண்ணிக்கை 128.
காரணம் (R): IPv6 என்பது 128 பிட் தனிப்பட்ட முகவரியாகும்.
கூற்று சரி ஆனால் காரணம் தவறு
கூற்று தவறு ஆனால் காரணம் சரி
கூற்றும் காரணமும் சரியே. மேலும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமாகும்
கூற்றும் காரணமும் சரியே. ஆனால் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.
5.
பிரத்தியேகமாக அணிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் மடக்கு ______.
While
Do while
for
for each
6.
பொருத்துக
| 1. | ஈத்தர் நெட் | தொடர்பி |
| 2. | RJ45 இணைப்பி | ஈத்தர் நெட் |
| 3. | RJ45 ஜாக் | பிளக் |
| 4. | RJ45 வடம் | 802.3 |
| A | B | C | D |
| 1 | 2 | 4 | 3 |
| A | B | C | D |
| 4 | 1 | 3 | 2 |
| A | B | C | D |
| 4 | 3 | 1 | 2 |
| A | B | C | D |
| 4 | 2 | 1 | 3 |
7.
பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
< ?php
\($\)a= “” ;
if (\($\)a)
print “all”;
if else
print “some”;
? >
All
some
பிழை
வெளியீடு ஏதும் இல்லை
8.
PHP-ல் – (இரட்டை அடிக்கோடு) தொடங்கும் செயற்கூறினை _________ என அறியப்படுகிறது?
function
__def
def
functiondef
9.
PHP ஸ்கிரிப்ட்டை இயக்க உங்கள் கணினியில் பின்வருவனவற்றை எவற்றை நிருவ வேண்டும்?
Adobe
windows
Apache
IIS
10.
பொருத்துக
கடன் அட்டை எண்னில்
| 1. | முதல் இலக்கம் | கணக்கு எண் |
| 2. | 9 முதல் 15 வரை இலக்கங்கள் | MII குறியீடு |
| 3. | முதல் 6 இலக்கங்கள் | BIN குறியீடு |
| 4. | கடைசி இலக்கம் | சோதனை இலக்கம் |
| A | B | C | D |
| 4 | 3 | 2 | 1 |
| A | B | C | D |
| 2 | 1 | 3 | 4 |
| A | B | C | D |
| 2 | 3 | 4 | 1 |
| A | B | C | D |
| 2 | 4 | 3 | 1 |
11.
______ விளக்கப்படம் தரவுதளத்தை தருக்க கட்டமைப்பு வரைபடமாக தருகிறது.
(E – R (Entity – Relationship)
உருப்பொருள்
கட்டமைப்பு குறிப்பு
தரவுதளம்
12.
PGP யின் விரிவாக்கம் _______.
Pretty Good Privacy
Pretty Good Person
Private Good Privacy
Private Good Person
13.
EDI அடிப்படை நியமங்கள் _______.
தரவுத் தரநிலை
நெறிமுறைகள்
(அ) மற்றும் (ஆ)
(அ) மற்றும் (ஆ) இல்லை
14.
எந்த பட்டியில் New கட்டளை இடம் பெற்றுள்ளது?
File menu
Edit menu
Layout menu
Type menu
15.
GIF பயன்படுத்தும் வண்ண தேடல் அட்டவணை _______.
8 பிட்
13 பிட்
8 MB
13 MB
16.
பயனாளர் சேவையக கட்டமைப்பு வகைகளை விவரி.
17.
இணையம், ஆக இணையம் மற்றும் புற இணையப் பயன்பாடுகளை ஒப்பிடுக
18.
கணினி வலையமைப்பு வளர்ச்சி வரலாற்றை விவரி.
19.
நவீன கடன் அட்டையின் உடற்கூறை விவரி.
20.
கோப்பினைக் கையாளும் செயற்கூறுகளை பற்றி விரிவாக விளக்குக.
21.
DNS எவ்வாறு வேலை செய்கிறது என்பதை விளக்குக.
22.
மடக்கு கட்டமைப்பை விவரி.
23.
நுகர்வோருக்கு மின்-வணிகத்தின் நன்மைகள் யாவை ?
24.
பொருத்தமான எடுத்துக்காட்டுடன் துணை வினவல்கள் (Sub queries) பற்றி விரிவாக விளக்கவும்.
25.
பல்லூடக கோப்பில் உள்ள பல்வேறு கோப்பு வடிவங்களை விவரிக்கவும்
26.
நுண் மின்செலுத்தல் முறை பரிவர்த்தனையில் படிநிலைகளை விளக்குக.
27.
WAV பற்றி குறிப்பு வரைக.
28.
URL இன் வகைகள் யாவை?
29.
கிளிப்பிங் கருவி பயன்படுத்துவது என்ன?
30.
Open NMS சிறுகுறிப்பு வரைக.
31.
புறத்திறனீட்டம் பற்றிச் சிறு குறிப்பு வரைக.
32.
மின்-வணிகத்தின் பல்வேறு வகையான பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை பட்டியலிடுக.
33.
தொடர்புள்ள உரை என்றால் என்ன?
34.
EDI யின் நான்கு முக்கிய கூறுகள் எவை?
35.
சுட்டெண்கள் கொண்ட அணி மற்றும் தொடர்புருக்கு அணியை விவரி.
36.
MySQLi என்றால் என்ன?
37.
ஈத்தர்நெட் அட்டையின் வகைகளை விவரி.
38.
EDI தரப்பாடு - குறிப்பு வரைக.
39.
இணையம், அக இணையம், புற இணையம் ஒப்பிடுக?
40.
if elseif else கூற்றின் பயன்களை எழுதுக
41.
வலை சேவையகத்தின் பயன்களை எழுதுக
42.
3D பாதுகாப்பு பண பரிவர்த்தனை நெறிமுறைகளை விளக்கி எழுதவும்.
43.
பேஜ்மேக்கரில் உள்ள ஏதேனும் மூன்று கருவிகளின் குறும்படங்களையும், அதன் பயன்களையும் கூறு.
1.
(b)
file – get-contents()
2.
(c)
அ மற்றும் ஆ
3.
(b)
மொபைல் வலையமைப்பு
4.
(b)
கூற்று தவறு ஆனால் காரணம் சரி
5.
(c)
for
6.
(c)
| A | B | C | D |
| 4 | 3 | 1 | 2 |
7.
(c)
பிழை
8.
(a)
function
9.
(c)
Apache
10.
(b)
| A | B | C | D |
| 2 | 1 | 3 | 4 |
11.
(a)
(E – R (Entity – Relationship)
12.
(a)
Pretty Good Privacy
13.
(c)
(அ) மற்றும் (ஆ)
14.
(a)
File menu
15.
(a)
8 பிட்
16.
மூன்று வகை பயனாளர் சேவையகக் கட்டமைப்பு :
1. ஒற்றை அடுக்கு கட்டமைப்பு
2. இரண்டு அடுக்கு கட்டமைப்பு
3. பல/மூன்று அடுக்கு கட்டமைப்பு
1. ஒற்றை அடுக்கு கட்டமைப்பு :
(i) சேவையகம் பயன்படுத்துகின்றது. பயனாளரால் அணுகப்படுகின்றது.
(ii) பயனாளர் பயன்பாடு சேவையக கணிப்பொறிக்குள்ளேயே இயங்குகின்றது.
2. இரண்டு அடுக்கு கட்டமைப்பு
(i) இந்த கட்டமைப்பைச் சேவையகம் பயன்படுத்துகின்றது.
(ii) இரண்டு அடுக்கு ஊடாடுதலை கொண்டு பயனாளரால் அணுகப்படுகின்றது.
(iii) அதாவது பயனாளர் அடுக்கு ஒன்றிலும் சேவையகம் அடுக்கு இரண்டிலும் இயங்குகின்றன.
3. பல/மூன்று அடுக்கு கட்டமைப்பு :
(i) இந்த கட்டமைப்பைச் சேவையகம் பயன்படுத்துகின்றது.
(ii) ஒன்றிற்கு மேற்பட்ட அடுக்கு ஊடாடுதலைக் கொண்டு பயனரால் அணுகப்படுகின்றது.
(iii) நிரலர் வணிக ரீதியான அடுக்குகளின் எண்ணிக்கையை மென்பொருளின் தேவையைப் பொறுத்து தீர்மானிக்கிறார்.
(iv) இந்த காரணத்தினால் இந்த மாதிரியை பல/மூன்று அடுக்கு கட்டமைப்பு என்கிறோம்.
17.
| இணைய பயன்பாடுகள் | அக இணைய பயன்பாடுகள் | புற இணைய பயன்பாடுகள் |
| நிரல் மற்றும் கோப்புகளை பதிவிறக்கம் செய்தல் | நிறுவனத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பகிர்தல். | வாடிக்கையாளர்கள் தொடர்பு |
| சமூக ஊடகம். | பணியாளர் தரவுத்தளத்தை அணுகுதல் | நிகழ்நிலைக் கல்வி பயிற்சி |
| மின்னஞ்சல் | சுற்றறிக்கைகள் / அலுவலக கட்டளைகளை விநியோகித்தல் | கணக்கு நிலை விசாரணை |
| மின் வங்கிச் சேவை | கட்டளைகளை விநியோகித்தல் | பொருள் இருப்பு விசாரணை |
| ஒலி மற்றும் ஒளி கலந்துரையாடல் | வாடிக்கையாளர் தரவு மற்றும் தயாரிப்புகளை அணுகுதல் | நிகழ்நிலை விவாதம் |
| மின் வணிகம் | பொதுவான ஆர்வமுள்ள தகவலைப் பகிர்தல் | விநியோக மேலாண்மை |
| கோப்பு பகிர்தல் | தனிப்பட்ட / துறை சார்ந்த முகப்புப் பக்கங்களைத் தொடங்குதல் | தேவை நிலை விசாரணை |
| தகவல் பெற உலாவுதல். | அறிக்கைகளைச் சமர்பித்தல் | உத்திரவாதத்தைப் பதிவு செய்தல் |
| தேடுபொறிகள் மூலமாக இணைய முகவரிகளை தேடுதல் | பெருநிறுவன தொலைபேசி அடைவுகள் | உரிமைக் கோரிக்கை |
| அளவளாவுதல் | விநியோக முன்னேற்றம் |
18.
(i) 1950 ஆம் ஆண்டில் பிற்பகுதியில் யு.எஸ். இராணுவ ரேடார் அமைப்பு SAGE பயன்படுத்தப்பட்டது.
(ii) 1960 ஆம் ஆண்டில் SAGE வர்த்தக விமான முன்பதிவு அமைப்பிற்கான இரண்டு முன்பதிவு அமைப்பிற்கான இரண்டு முதன்மை கணினிகளுடன் தொடர்புடையது.
(iii) இங்கே பாக்கெட் சுவிட்ச் முறையில் பாக்கெட்டுகள் என அழைக்கப்படும் ஒரு சிறிய பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அதன் இலக்கு அடையும் போது அனைத்தும் இணைக்கப்படும்.
(iv) 1965 ஆம் ஆண்டில் தொலைபேசி சுவிச் பரவலாக பயன்படுத்தப்பட்டது. இது வெஸ்டர்ன் எலட்க்ரிக் என்னும் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. உண்மையான கணினி கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்தப்பட்டது.
(v) 1966 ஆம் ஆண்டில் WAN (Wide Area Network) நேரப் பகிர்வுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
(vi) 1969-1970 ஆம் ஆண்டு ARPANET உருவானது.
(vii) 1973 ஆம் ஆண்டில் TCP/IP ஐ பயன்படுத்தி X.25 வணிக சேவைகளைபி பயன்படுத்தியது. பின்னர் TCP/IP வலையமைப்புகளை விரிவாக்குவதற்கான உள்கட்டமைப்புகளைப் பயன்படுத்தியது.
(ix) ARCNET டோக்கன் - பாஸிங் வலையமைப்பு முதலில் 1976 ல் சேமிப்பு சாதனத்தைப் பகிர உதவியது.
(x) 1995 ஆம் ஆண்டில், ஈத்தர்நெட் தொழில் நுட்பத்தின் பரிமாற்ற வேக திறன் 10 Mbit / s லிருந்து 100 Mbit வரை அதிகரித்தது.
(xi) 1998, ஈத்தர் நெட்டின் பரிமாற்ற வேக திறன் 100 Gbit/s வரை அதிகபட்ச வேகம் அதிகரித்துள்ளது. ஈதர்நெட்டில் புதிய FIBER OPTIC கேபிள் வேகங்கள் போன்ற எளிதாக மேம்படுத்தும் திறன் உள்ளது.
19.
நவீன கடன் அட்டையில் உள்ள விவரங்கள்:
1. வழங்குபவர்: வழங்கும் வங்கியின் சின்னம் (துணை பிரிவு அல்லது திட்டம் ஏதேனும் இருப்பின் அதனுடன் சேர்த்து)
2. கடன் அட்டை எண்: நவீன கடன் அட்டை எண் 16 இலக்க தனித்துவ அடையாள எண்.
3. வாடிக்கையாளர் பெயர்: அட்டையின் முன்பக்கத்தில் புடைப்பு எழுத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் மேலும் காந்த பட்டையிலும் சேமிக்கப்படும்.
4. EMV சில்லு: இது காந்தப் பட்டைக்கு கூடுதலாக அட்டையின் தகவல்களைச் சேமிக்க உள்ள ஒரு உட்பொதிக்கப்பட்ட ஒருங்கிணைந்த சில்லு. EMV என்பது Europay - Mastercard - Visa என்பதன் சுருக்கமாகும். இந்த மூன்று பெயர்களும் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கிய நிறுவனங்களின் பெயர்களைக் குறிக்கிறது. இது சில்லுடன் பின் கையொப்பம் மற்றும் சில்லுடன் - (PIN) என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
5. RFID சின்னம்: சாய்ந்த Wi-Fi சின்னம் போன்ற வலதுபுற நோக்கி நான்கு வளைவு கொடுக்கல் இருக்கும். இது ஒரு தொடர்பு இல்லாத சூட்டிகை அட்டை (Contactless Smart Card) என்பதைக் குறிக்கிறது.
6. காலாவதி மாதம் மற்றும் ஆண்டு: அட்டையின் முன்பக்கத்தில் இருக்கும். அச்சிடப்பட்ட மாதத்தின் கடைசி நாள் வரை அட்டை செல்லுபடியாகும்.
7. அட்டை நிறுவன அடையாள சின்னம்: இது கடன் அட்டை அமைப்பின் பெயர். விசா மற்றும் மாஸ்டர்கார்டு முன்னணி கடன் அட்டை நிறுவனங்கள் ஆகும். RUPAY என்பது 2012 ல் தொங்கப்பட்ட இந்திய உள்நாட்டு திறந்த வளையக் கடன் அட்டை அமைப்பு ஆகும்.
9 முப்பரிமாணப் ஒளிப்படிமம்: நகலெடுத்தலை தடுக்கும் ஒரு பாதுகாப்பு அம்சம். ஒளி கற்றையின் குறுக்கீட்டால் உருவாக்கப்படும் முப்பரிமாண உருவமாகும்.
10 கையொப்பம் பலகம்: அட்டையின் பின்புறத்தில் வாடிக்கையாளரின் கையொப்பம் இருக்கும். இது வாடிக்கையாளரை அடையாளம் காணும் முயற்சியாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் அட்டை எண்ணின் கடைசி 4 இலக்கங்களையும் கொண்டிருக்கும்.
11. CVC/CVV: அட்டை சரிபார்ப்பு குறியீடு/மதிப்பு (Card Verification Code/Value) என்பது வழக்கமாக கையொப்ப பலக்கத்தின் இடதுபுறம் அச்சிடப்படும் 3 இலக்க குறியீடு ஆகும். CVC2 தோலை பரிவர்த்தனைகளில் பயன்படுத்தப்படுகிறது. மேலே குறிப்பிட்டவை தவிர, ஒவ்வொரு கடன் அட்டையும் வழங்குனரின் பொறுப்புத் திறப்பு செய்தி, முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றையும் கொண்டிருக்கும்.
20.
1. PHP கோப்பினை திறத்தல்:
1) fopen ( ) என்பது PHP ல் உள்ள ஒரு அமைப்பு செயற்கூறாகும்.
2) இந்த செயற்கூறானது.
3) இரண்டு அளவுருக்களைக் கொண்டுள்ளது.
4) கோப்பின் பெயரைக் குறிப்பிட ஒன்று மற்றொன்று எந்த முறைமையில் (mode) கோப்பினைத் திறக்க வேண்டும் என்று குறிப்பிடப் பயன்படுகின்றது.
கட்டளை அமைப்பு:
$file _ Object= fopen(" File Name " ", "Read/ WriteMode") or die("Error Message! ");
எ.கா:
< ?PHP
$myfile = fopen("Student. txt", "r") or die("Unable to open file! ");
? >
2. PHP கோப்பினை படித்தல்: fread ( ) செயற்கூறு திறந்துள்ள கோப்பிலிருந்து படிக்க உதவுகின்றது. File object என்பது fopen செயற்கூறிலிருந்து பெறப்படுகின்றது.
கட்டளை அமைப்பு:
fread($file _ Object,filesize("FileName"));
எ.கா:
< ?php
fread($myfile,filesize(" Student. txt"));
? >
3. PHP கோப்பினை மூடுதல்:fclose ( )
செயற்கூறானது திறக்கப்பட்ட ஒரு கோப்பினை மூடுவதற்கு உதவுகின்றது File object என்பது fopen செயற்கூறிலிருந்து பெறப்படுகின்றது.
கட்டளை அமைப்பு: fclose($file _Object);
எ.கா:
< ?php
$myfile = fopen("student.txt", "r");
// some code to be executed ....
fclose($myfile );
? >
4. PHP கோப்பினை எழுதுதல்: fwrite ( ) செயற்கூறானது கோப்பில் எழுத உதவுகிறது.
கட்டளை அமைப்பு:
fwrite($myfile, $txt);
எ.கா:
< ?php
$myfile = fopen("new_school_file. txt","W")
or die("Unable to open file! ");
$txt = "School Name\n";
fwrite($myfile, $txt);
$txt = "Student Name\n";
fwrite($myfile, $txt);
fclose($myfile );
? >
5. PHP கோப்பினை சேர்த்தல்:
file_put_contents ( ) செயற்கூறானது ஒரு கோப்பினைச் சேர்க்க உதவுகின்றது.
கட்டளை அமைப்பு :
file_put_contents(file,data,mode,context)
எ.கா:
< ?php
$txt="student id";
$myfile =file_put_contents('logs.txt',
$txt.
PHP_EOL, FILE_APPEND |LOCK_EX);
? >
21.
களப்பெயர் முறைமை வேலை செய்யும் விதம்:
(i) பயனர் உலாவியில் URLஐ தட்டச்சு செய்யும் பொழுது, கணினியானது முதலில் தொடர்புடைய IP முகவரியை அக்கணிப்பொறியின் DNS இடைத்தேக்கத்தில் (Cache) தேடுகிறது.
(ii) இடைத்தேக்கத்தில் IP முகவரி கண்டுபிடிக்கப்பட்டால், அதைப் பற்றிய தகவல் அங்கிருந்து மீட்கப்படும். இல்லையெனில், கணினி தீர்வியிடம் DNS வினவலை (DNS query) தொடங்க வேண்டும்.
(iii) இந்த தீர்வி (Resolver) இணைய வழங்குநரின் (ISP) சேவையகத்தில் இடம் பெற்றிருக்கும்.
(iv) ஒவ்வொரு தீர்வியும் தனக்கென்று இடைத் தேக்கத்தை (cache) பெற்றிருக்கிறது.
(v) அதில் ஐபி முகவரி போன்ற தகவல்கள் கண்டறியப்பட்டால் அந்த தகவல்கள் மீட்டெடுக்கப்படும். இல்லையெனில் வினவல் அடுத்த பெயர்ச்சேவையகத்திற்கு (Domain NameServer) அதாவது, TLD (உயர்நிலைகளம்) க்கு அனுப்பப்படுகிறது. TLD அந்த வினவலை மதிப்பாய்வு செய்து குறிப்பிட்ட களத்துடன் தொடர்புடைய பெயர் சேவையகங்களுக்கு வினவலை அனுப்புகிறது.
(vi) IP முகவரி கிடைக்கும்வரை அடுத்தடுத்த பெயர் சேவையகங்களுக்கு வினவல் அனுப்பப்படுகிறது.
(vii) இறுதியில் IP முகவரி கண்டறியப்பட்டு அதற்கான பதிவுகள் தீர்விக்கு (Resolver) அனுப்பப்படுகிறது.
(viii) பின்னர் தீர்வி இந்த பதிவுகளை கணினி உலாவிக்கு (Browser) வழங்குகிறது.
(ix) இப்பொழுது, கண்டறியப்பட்ட IP முகவரிக்கான வலைப்பக்கங்களை பயனரால் பார்க்க முடியும்.
22.
PHPன் மடக்கு கட்டமைப்பு என்பது ஒரு சுழற்சி கட்டுப்பாட்டு கட்டமைப்பாகும். இது ஒரு நிரல் தொகுதியை குறிப்பிட்ட தடவைகள் மீண்டும் மீண்டும் செயல்படுத்தும். குறிப்பிட்ட தடவைகள் மீண்டும் மீண்டும் செயல்படுத்தும் மடக்குகளை ”வரம்புடை மடக்குகள்” (Bounded Loops) என்றும் அழைக்கலாம். PHP நான்கு வகையான மடக்குகளை வழங்குகிறது.
மடக்கு அமைப்பின் வகைகள்:
1. for மடக்கு
2. foreach மடக்கு
3. while மடக்கு
4. do-while மடக்கு
1. for மடக்கு: நிரலர் முன்னதாகவே எத்தனை முறை மடக்கினை செயல்படுத்தப்பட வேண்டும் என்பதை அறிந்திருந்தால் இம்மடக்கினைப் பயன்படுத்தலாம்.
2. foreach மடக்கு: foreach மடக்கு PHP-ல் மிகவும் பிரத்தியேகமான ஒன்றாகும். இது அணிகளுடன் மட்டுமே செயல்படுகிறது. மடக்கின் சுழற்சியானது அணியில் உள்ள ஒவ்வொரு திறவு இணை மதிப்பை பொறுத்தது. மடக்கின் ஒவ்வொரு சுழற்சியின் போதும் நடப்பு அணி உறுப்பின் மதிப்பானது $value மாறியில் இருத்தப்படுகிறது மற்றும் அணியின் சுட்டு ஒவ்வொரு மதிப்பாக அணியின் உறுப்பின் இருந்து வரை நகர்த்தப்படுகிறது.
3. while மடக்கு : While மடக்கு கொடுக்கப்பட்ட நிபந்தனையின் மதிப்பு மெய் என இருக்கும்வரை ஒரு நிரல் தொகுதியை மீண்டும் மீண்டும் செயல்படுத்தும்
4. do-while மடக்கு: do while மடக்கு எப்பொழுதும் மடக்கினை முதல் முறை செயல்படுத்தும் போதே மடக்கின் உடற்பகுதியில் உள்ள கூற்றுகளை ஒரு முறை செயல்படுத்தும். ஆனால், கொடுக்கப்பட்ட நிரல் தொகுதியை நிபந்தனை சோதிப்பதற்கு முன்னர் ஒரே ஒரு முறையேனும் செயல்படுத்தும். அதாவது, இங்கே நிபந்தனை, மடக்கின் இறுதியில் மட்டுமே சோதிக்கப்படுகிறது.
23.
(i) மின் வணிக அமைப்பு வாரத்தின் எல்லா நாட்களிலும் எல்லா நேரங்களிலும் இயக்கப்படுகிறது. மின்னணு முறையில் வணிகம் செய்ய , நுகர்வோர் அல்லது விற்பனையாளருக்கு இயல்நிலை கடை திறந்திருக்கத் தேவையில்லை . மக்கள் தங்கள் தேவைக்கேற்ற நேரங்களில் வணிகங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.
(ii) வேகம், மின் வணிகத்தின் ஒரு முக்கிய நன்மை, மேம்பட்ட மின்னணு தகவல் தொடர்பு அமைப்புகள் செய்திகளை உடனடியாக உலகம் முழுவதும் சென்றடைய அனுமதிக்கிறது. இணையம் அல்லது மின் - வணிக உலகில் தகவல் தொடர்பு தாமதம் என்பதே கிடையாது
(iii) இணையத்தின் மூலம் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறுவது, விலை குறைவானது மற்றும் எளிதானதாகும். இது நுகர்வோருக்குக் குறைந்த செலவில் வாங்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. நேரடியாக உற்பத்தியாளரிடமிருந்தே குறைந்த விலையில் பொருட்கள் வாங்க முடியும்.
(iv) இன்றைய நுகர்வோர்களுக்கு உலகமே ஒரு சந்தையாக மாறியுள்ளது. வாங்குவதற்கான முடிவை எடுப்பதற்கு முன்பு பல்வேறு வலைத்தளங்களில் அதே பொருட்களை ஒப்பிட்டு, மதிப்பிடுவதன் மூலம் அவர்கள் பரவலான விருப்பத்தைப் பெற முடியும்
(v) வாடிக்கையாளர்கள் வீட்டிலோ (அ) தங்கள் வசதிக்கேற்ப எங்கு வேண்டுமானாலும் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம். அதற்கான கட்டணத்தையும் மின் - செலுத்துதல் மூலம் செய்யலாம்.
24.
துணை வினவல்கள்:
(i) இதில் முதன்மை வினவலுக்கு உள்ளே SQL வினவல் எழுதப்படுகிறது. இது பின்னலான அல்லது துணை வினவல் எனப்படும். துணை வினவல்கள் முதலில் இயக்கப்படுகின்றன.
(ii) இதனுடைய விடையானது நிபந்தனையாக முதன்மை வினவலுக்கு அமைகிறது. துணை வினவல் கீழே உள்ள விதிகளை பின்பற்ற வேண்டும்.
1. துணை வினவல்கள் அடைப்புக் குறிக்குள் எழுதப்படவேண்டும்.
2. ஒப்பீட்டு செயற்குறிக்கு வலது புறத்தில் துணை வினவல் அமையவேண்டும்.
3. ORDER BY பிரிவு துணை வினவலில் பயன்படுத்தவில்லை, ஏனெனில் துணை வினவல்கள் அதனுள்ளேயே விடைகளை கையாள முடியாது.
(iii) EMPLOYEE அட்டவணையை கருத்தில் கொண்டால் EMPID, Name, Age D Salary ஆகிய புலங்கள் உள்ளன. மாதிரி தரவுகள் கீழே உள்ள அட்டவணை-ல் கொடுக்கப்பட்டுள்ளன
| EMPID | Name | Age | Salary |
| 101 | Ram | 35 | 15000 |
| 102 | Gopal | 41 | 30000 |
| 103 | Priya | 32 | 13000 |
| 104 | Hari | 37 | 20000 |
(iv) பின்வரும் வினவலில் SELECT கூற்றில் துணை வினவல் பயன்படுத்தப்பட்டுள்ளது. SELECT * From Employee where EMPID IN (SELECT EMPID from Emplooyee WHERE Salary < 20000);
(v) முதலில் அடைப்புக்குறிக்குள் உள்ள வினவல் இயக்கப்படும். அதன் விடையாக EMPID 101 மற்றும் 103 மீட்டெடுக்கப்படும்.
(vi) இப்பொழுது வெளியே உள்ள வினவல் இயக்கப்படும். இப்பொழுது வினவல் பின்வருமாறு : SELECT* from Employee where EmpID IN (101, 102)
(vii) இதன் வெளியீடு பின்வரும் அட்டவணையில் உள்ளது.பின்வரும் வினவலில் SELCT கூற்றில் துணை வினவல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
| EMPID | NAME | Age | Salary |
| 101 | Ram | 35 | 15000 |
| 103 | Priya | 32 | 13000 |
(viii) இதைப்போல துணை வினவல்களானது INSERT, UPDATE மற்றும் DELETE உடன் பயன்படுத்தப்படுகிறது.
25.
(i) உரை வடிவங்கள் :
1. RTF (Rich Text Format) :
மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் 1987 ஆம் ஆண்டு குறுக்கு பணித்தள ஆவணங்களின் பரிமாற்றங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட முதன்மைக் கோப்பு வடிவம்.
2. Plain Text :
Notepad, Gedit போன்ற உரை பதிப்பான்களின் இக்கோப்புகளைத் திறக்கலாம். படிக்கலாம் மற்றும் பதிப்பாய்வு செய்யலாம்.
(ii) நிழற்பட வடிவங்கள் :
1. TIFF (Tagged Image File Format): கணிப்பொறி பதிப்பக உலகில் பொதுவான வடிவம் மற்றும் கணினிகளுக்கிடையே பெரிய கோப்புகளை அனுப்புவதற்கு வசதியான வடிவமாகும்.
2. BMP (Bitmap) : மிகவும் பெரியது மற்றும் குறுக்கமற்றது. எனவே அதிக தெளிவுத்திறன் (அ) பெரிய நிழற்படங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
3. DIB (Device Independent Format) : கோப்புகளை பல்வேறு சாதனங்களில் காண்பிக்க அனுமதிக்கிறது.
4. GIF (Graphics Interchange Format) : குறுக்கப்பட்ட நிழற்பட வடிவம் மற்றும் குறைந்த அளவு வண்ணங்களைப் பயன்படுத்தும் வரைகலைக்கு மிகச் சிறந்த பொருத்தமான வடிவம்.
5. JPEG (Joint Photographic Experts Group) : அதிகபட்ச நிழற்பட குறுக்கத்தை அடைவதற்கான வடிவம் ஆகும்.
புகைப்படம், இயற்கை கலை வேலைப்பாடு மற்றும் அதைப் போன்றவற்றுடன் நன்றாக வேலை செய்யும்.
6. TGA (Targa) : அதிகத் தெளிவுத்திறன் நிழற்படங்களுக்கான முதல் பிரபலமான வடிவமாகும். பெரும்பான்மையை ஒளிக்காட்சி பிடிப்புப் பலகைகள் இதை ஆதரிக்கின்றன.
7. PNG (Portable Network Graphics) : குறைந்த இழப்பு, சிறியது மற்றும் நன்கு குறுக்கப்பட்ட செவ்வக நிழற்படங்களாகச் சேமிக்கப்படும். சிறந்த திரையிடும் தேர்வுகளுடன் முழுவதுமாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
(iii) இலக்க ஒலிக் கோப்பு வடிவங்கள் :
1. WAV (Waveform Audio File Format): விண்டோஸில் குறுக்கப்படாத ஒலிக் கோப்புகளைச் சேமிக்கும் பிரபலமான வடிவம்.
2. MP3 (MPEG Layer -3 Format) : இசையை சேமிக்கவும், பதிவிறக்கம் செய்யவும் மிகவும் பிரபலமான வடிவம்.
3. OGG : சிறந்த ஓட்டத்தினை அடைவதற்காக வடிவமைக்கப்பட்ட இலவச திறந்த மூல கொள்கலன் வடிவம்.
4. AIFF (Audio Interchange File Format) : Apple நிறுவனம் பயன்படுத்தும் தரமான ஒலி வடிவம்.
5. RA (Real Audio Format) : RA வடிவம் இணையத்தில் ஒலியின் ஓட்டத்திற்காக வடிவமைக்கப்பட்ட வடிவம்.
(iv) இலக்க ஒளிக்காட்சி கோப்பு வடிவங்கள் :
1. AVI (Audio Video Interleave): விண்டோஸிற்கான ஒளிக்காட்சிக் கோப்பு வடிவமாகும். ஒலி மற்றும் படத்தின் கூறுகளைக் கோப்பில் மாற்று நெடுவரிசைத் தொகுப்பில் சேமிக்கப்படுகிறது.
2. MPEG (Moving Pictures Experts Group) : இலக்க ஒளிக்காட்சி மற்றும் ஒலிக் குறுக்கத்தை ISO குழுவினரால் உருவாக்கப்படும் ஒரு தர நிலை ஆகும்
26.
(i) படி 1: செயலாக்குபவர் வாடிக்கையாளரின் அடையாளத்தை உறுதிசெய்த பின் பணத்துக்கு மாற்றாக நுண் பணம் வழங்குகிறார்.
(ii) படி 2: வாடிக்கையாளர், நிகழ்நிலைச் சேவை வழங்குநரிடம் நுண் கட்டணங்களை செலுத்தி விரும்பிய பொருட்கள் அல்லது சேவைகளை அவர்களிடமிருந்து பெறுகிறார்
(iii) சேவை வழங்குநர் வடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்ட நுண் கட்டணங்களை செயலாக்குபவர்களிடம் கொடுத்து பணத்தைப் பெறுகிறார்.
27.
WAV (Waveform Audio File Format) :
1. விண்டோஸில் குறுக்கப்படாத ஒலி கோப்புகளைச் சேமிக்கும் மிகவும் பிரபலமான ஒலி கோப்பு வடிவமாகும்.
2. குறைக்கப்பட்ட கோப்பின் அளவைப் பெறுவதற்காக MP3 போன்ற மற்ற கோப்பு வடிவங்களுக்கு மாற்றி அமைக்க முடியும்.
28.
URL இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1. முழு நிலை URL (Absolute URL): இணையத்தில் உள்ள ஒரு கோப்பின் முழுமையான முகவரி ஆகும்.
2. சார்பு நிலை URL (Relative URL): இணையத்தில் உள்ள ஒரு கோப்பின் முழுமையற்ற முகவரி ஆகும்.
29.
கிளிப்பிங் கருவி: வடத்துடன் ஈத்தர்நெட் இணைப்பியை இணைக்கப் பயன்படும் ஒரு கருவி
1. வடத்தை தேவையான நீளம் வெட்டிக்கொள்ளவும்.
2. வடத்தின் இருபுறமும் இருந்து 1 அங்குல அளவிற்கு பாதுகாப்பு உறையை நீக்கவும். இதனால் முறுக்கப்பட்ட இணை கம்பிகள் வெளியே தெரியும்.
3. கம்பி அகற்றப்பட்ட பிறகு, சிறிய கம்பிகளை அவிழ்த்து, சரியான வயரிங் அமைப்பில் வைக்கவும். (T568 B பொதுவாக விரும்பப்படுகிறது).
30.
Open NMS (Open Network Management System) என்பது இலவச மற்றும் திறந்த மூல வசதியுடன் வெளிவந்த தொடக்க காலத்திய தரமான வலையமைப்பு கண்காணிப்பு மற்றும் மேலாண்மை அமைப்பு ஆகும்.
31.
ஒரு நிறுவனம் தனது வேலையின் ஒரு பகுதியை செய்ய மற்றொரு நிறுவனத்தை பணியமர்த்தினால், அது புறத்திறனீட்டம் என்று அழைக்கப்படுகிறது.
32.
(i) குறியாக்கத் தொழில்நுட்பம் (Encryption technology)
(ii) அங்கீகார தொழில்நுட்பம் (Authentication technology)
(iii) பாதுகாப்பு அங்கீகார நெறிமுறைகள் (Authentication protocols)
33.
தொடர்புள்ள உரை : உரைத்தொகுதிகளுக்கு இடையே உள்ள உரையை இணைக்கும் செயல்முறை.
34.
1. Standard Document Format
2. Translator and Mapper
3. Communication Software
4. Communication Network
35.
சுட்டு எண்கள் கொண்ட அணிகள் :
அணி மாறியியல் உள்ள மதிப்புகள் எண்களைச் சுட்டெண்களாகக் கொண்ட அணிகளாக இருப்பின் திறவிற்கு இணை மதிப்புகள் இருத்தப்படும். பயனர் இந்த திறவுகளைப் பயன்படுத்தி மதிப்புகளை எடுத்துக்கொள்வர்.
தொடர்புருத்த அணிகள் :
(i) பெயரிடப்பட்ட திறவுகளை இருத்தி வைக்கப்பயன்படுத்தப்படும்.
(ii) திறவும், மதிப்பும் இணைந்த தரவுக் கட்டமைப்பாகும்.
(i) PHP செயற்கூறுகளின் நன்மைகளைப் பட்டியிலிடு.
1. போலிக் குறிமுறைகள் வருவதை குறைக்கும்.
2. சிக்கலான கணக்கீடுகளை (அ) தீர்வுகளை எளிய பகுதிகளாக மாற்றுகிறது.
3. குறிமுறையை மேம்படுத்த உதவுகிறது.
4. குறிமுறையை மறுபயனாக்கம் செய்ய உதவுகிறது.
5. குறிமுறையை மேம்படுத்த உதவுகிறது.
(ii) PHP உள்ள செயற்கூறுகளின் வகைகளைக் பட்டியிலிடு.
1. பயனர் வரையறுத்த செயற்கூறுகள்.
2. முன் வரையறுக்கப்பட்ட (அ) அமைப்பு (அ) உள்ளிணைந்த செயற்கூறுகள்.
3. அளபுருக்களை கொண்ட செயற்கூறுகள்.
36.
(i) MySQLi என்பது PHP மொழியின் நீட்டிப்பு ஆகும்.
(ii) இது MySQLi தரவுத்தளத்தை அணுகப் பயன்படுகிறது.
(iii) MySQLi என்பது MySQLi Improved என்பதைக் குறிக்கும்.
(iv) இதன் தற்போதைய பாதிப்பு 5.0.0
37.
(i) ஈத்தர்நெட் அட்டை ஒரு விரிவாகக் அட்டை (அ) உள்ளிணைந்த அட்டையாக இருக்கலாம்.
(ii) விரிவாக்க வகை அட்டை (தனி மின்சுற்றுப் பலகை) என்பது PCI ஈத்தர்நெட் அட்டை எனவும் அழைக்கப்படுகிறது.
(iii) கணினியின் மதர்போர்டில் உள்ள PCI ஸ்லாட்டுக்குள் செருகப்படுகிறது.
(iv) தற்போது பெரும்பாலான கணினிகளில் அட்டைகள் உள்ளன.
(v) தற்போது ரேடியோ அலைகள் மூலம் தரவுகளைப் பரிமாறும் கம்பியில்லா ஈத்தர்நெட் அட்டைகளும் பயன்பாட்டில் உள்ளன
38.
1. தரநிலை என்பது ஒட்டுமொத்த EDIல் மிக முக்கியமான பகுதியாகும்.
2. EDI தரவு பரிமாற்றம் என்பது ஒரு ஒப்புக்கொண்ட செய்தி வடிவமைப்பின் வடிவத்தில் இருப்பதால், ஒரு ஒருங்கிணைந்த EDI தரத்தை உருவாக்குவது முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
3. மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் EDI தரப்பாடுகள், ஐக்கிய நாடுகள் சபையின் UN/EDIFACT மற்றும் ANSI X12.
39.
| வகை | வரையறை | எடுத்துக்காட்டு |
| இணையம் | ஒரு உலகளாவிய வலையமைப்பு, உலகெங்கிலும் பில்லியனுக்கும் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் பொதுவான TCP/IP வலையமைப்பை கொண்டதாகும். | நண்பருக்கு மின்னஞ்சல் அனுப்புதல் |
| அகஇணையம் | ஒரு நிறுவனத்தில் இருக்கும் உறுப்பினர்களுக்கு அணுகல் அனுமதி தடை செய்யப்பட்ட TCP/IP வலையமைப்பைக் கொண்டதாகும். | பணியாளர்களின் தனிப்பட்ட கோப்பில் ஒருவருடைய பதிவை அணுகுதல். |
| புறஇணையம் | உறுப்பினர்களுக்கு அணுகல் அனுமதி மறுக்கப்பட்ட TCP/IP வலையமைப்பைக் கொண்டதாகும். | புற வணிகர்களிடமிருந்து பொருளின் இருப்பு நிலையைச் சோதனை செய்தல். |
40.
1. if-elseif-else கூற்று என்பது if-else கூற்றுகளின் கலவையாகும். ஒன்றுக்கு மேற்பட்ட கூற்றுகள் நிபந்தனையின் அடிப்படையில் பயனாளர்களின் தேவைக்கு ஏற்ப செயல்படுத்தப்படுகிறது.
2. else-க்கு பிறகு மற்றொரு நிபந்தனை சோதிக்கப்பட வேண்டுமெனில் else கூற்றைத் தொடர்ந்து if கூற்று இருக்கும்.
41.
1. சேவையகம் சார்ந்த ஸ்கிரிப்டிங் மொழிகளின் தொகுத்தல் மற்றும் இயக்குவதற்கானப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்கின்றது.
2. சேவையகப் கணிப்பொறியில் இயங்கும் வலை சேவையக மென்பொருள் சேவையகம் சார்ந்த ஸ்கிரிப்டிங் தொகுத்தலை இடைநிலை பைட் குறிமுறைகளாக மாற்றுவதை நிர்வகிக்கின்றது. இந்த குறிமுறையானது இயக்க நேர இயந்திரம் மூலம் மொழி பெயர்க்கப்படுகின்றது.
3. இது வலைப்பக்கங்களை உருவாக்கும் கோப்புகளை வழங்கப் பயன்படுகிறது
42.
1. 3D பாதுகாப்பு என்பது இணையத்தில் ஒரு பாதுகாப்பான கட்டணம் செலுத்த உதவும் நெறிமுறை ஆகும்.
2. பரிமாற்ற பாதுகாப்பின் அளவை அதிகரிக்க VISA ஆல் உருவாக்கப்பட்டது.
3. பின்னர் இது Mastercard ஆல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
4. வலைத்தளம் மூலம் கொள்முதல் செய்யும் போது கட்டண அட்டை வைத்திருப்பவரின் சிறந்த அங்கீகாரத்தை வழங்குகிறது.
5. இந்த நெறிமுறையின் அடிப்படைக் கருத்து, நிதி அதிகாரமளித்தல் செயல்முறையை ஒரு நிகழ்நிலை சான்றளிப்பு அமைப்புடன் இணைப்பதாகும்.
6. இந்த சான்றளிப்பு மாதிரி மூன்று (3 Domains) களங்களை உள்ளடக்கியது. எனவே 3D என்று பெயர் பெற்றது. அவை:
1. பெறுநர் களம்
2. வழங்குநர் களம்
3. இயங்குதன்மை களம்.
43.
| கருவியின் பெயர் | கருவிப் பெட்டியிலுள்ள பணிக்குறி | சுட்டுக் குறி | பயன் |
|---|---|---|---|
| க்ராப்பிங் டூல் | ![]() |
![]() |
வரைகலைகளை ஒழுங்கமைக்க பயன்படுகிறது. |
| லைன் டூல் | ![]() |
![]() |
நேர்கோடு வரைய பயன்படுகிறது. |
| கன்ஸ்ட்ரெய்ன்டு லைன் டூல் | ![]() |
![]() |
கிடைமட்டமாகவும், செங்குத்தாகவும் கோடுகள் வரைய உதவுகிறது. |
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set C
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards