12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 17/10/2019
களப்பெயர் முறைமை
12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
வலை முகவரி மற்றும் URL ஐ வேறுபடுத்து
2.
களப்பெயர்ப் பற்றி குறிப்பு வரைக.
3.
முழுமையான URL சார்பு URL இவற்றிற்கு இடையில் உள்ள வேறுபாடுகள் யாவை?
4.
IPv4 மற்றும் IPv6 வேறுபடுத்துக
5.
DNS பற்றி குறிப்பு வரைக.
6.
DNS எவ்வாறு வேலை செய்கிறது என்பதை விளக்குக.
7.
களப்பெயர் வெளி என்பது யாது? விளக்குக.
8.
பெயர் சேவையகத்தை அதன் வகைகளுடன் விளக்குக
9.
IP முகவரியை அதன் வகைகளுடன் விளக்கவும்.
10.
டிஎன்எஸ் கூறுகளை சுருக்கமாக விளக்குக.
1.
| வலை முகவரி | URL |
| வலைத்தளத்தை அடையாளம் காட்டக்கூடிய தனித்த முகவரி. எ.கா: www.tnschools.gov.in |
வலைதளத்தின் பொருளை அணுகுவதற்குத் தேவையான இணைய நெறிமுறைகளை உள்ளடக்கிய வலைத்தளத்தின் முகவரி. எ.கா: http://www.tn.gov.in |
2.
1. களப்பெயர் என்பது சிட்டைகளின் வரிசையாகும்.
2. களப்பெயரில் சிட்டைகள் புள்ளி (.) மூலம் பிரிக்கப்படுகிறது.
3. களப்பெயர் எப்போதுமே கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை படிக்கப்படுகிறது.
4. வேர்முனை எப்போதும் வெற்று சரத்தை குறிப்பதால் எல்லா பெயர்களும் புள்ளியில் முடிவடைகின்றன.
3.
| முழுமையான URL | சார்பு URL | |
| 1 | இது இணையத்தில் உள்ள ஒரு கோப்பின் முழுமையான முகவரி. | இது இணையத்தில் உள்ள கோப்பின் முழுமையற்ற முகவரி. |
| 2 | இது இணையத்தில் கோப்பினைத் தேடித் கண்டுபிடிக்கத் தேவையான அனைத்து தகவல்களையும் கொண்டுள்ளது. | இது கோப்புப் பெயர் அல்லது கோப்புறையுடன் கூடிய கோப்புப் பெயரைக் கொண்டது. |
4.
| IPv4 | IPv6 | |
| 1 | IPv4 முகவரி என்பது வலையமைப்பில் உள்ள ஒரு கணினிக்கு வழங்கப்படும் 32 பிட் தனித்த முகவரி ஆகும். | IPv6 முகவரி என்பது வலையமைப்பில் உள்ள ஒரு கணினிக்கு வழங்கப்படும் 128 பிட் தனிப்பட்ட முகவரி ஆகும். |
| 2 | IPv4 முகவரியில் 232 முகவரிகளை உருவாக்க முடியும். | IPv6 ஐ பயன்படுத்தி 2128 முகவரிகளை உருவாக்க முடியும். |
| 3 | (எ.கா) : 0011100110001001 0011100000000111 |
(எ.கா) : 2001:0000:3231: DFE1 :0063:0000:0000: FEFB |
5.
1. களப்பெயர் முறைமை (DNS) என்பது பயன்பாட்டு அடுக்கில் உள்ள பயன்பாடுகளில் ஒன்றாகும்.
2. இணையம், IP முகவரியின் அடிப்படையில் செயல்படுகிறது.
3. ஆனால் நீண்ட எண்களைக் கொண்ட IP முகவரிகளை விட களப்பெயர்களைப் பயன்படுத்துவது எளிதானது.
4. ஒரு வலையமைப்பில் களப்பெயரை அனுமதிக்க, களப்பெயர் முறைமை (DNS) பயன்படுத்தப்பட வேண்டும்.
5. DNS ஆனது, பெயர் சேவையகங்கள் (Name servers) மூலம் அழைக்கப்படும் களப்பெயரிலிருந்து IP முகவரி பொருத்துதலைச் செய்கிறது.
6.
களப்பெயர் முறைமை வேலை செய்யும் விதம்:
(i) பயனர் உலாவியில் URLஐ தட்டச்சு செய்யும் பொழுது, கணினியானது முதலில் தொடர்புடைய IP முகவரியை அக்கணிப்பொறியின் DNS இடைத்தேக்கத்தில் (Cache) தேடுகிறது.
(ii) இடைத்தேக்கத்தில் IP முகவரி கண்டுபிடிக்கப்பட்டால், அதைப் பற்றிய தகவல் அங்கிருந்து மீட்கப்படும். இல்லையெனில், கணினி தீர்வியிடம் DNS வினவலை (DNS query) தொடங்க வேண்டும்.
(iii) இந்த தீர்வி (Resolver) இணைய வழங்குநரின் (ISP) சேவையகத்தில் இடம் பெற்றிருக்கும்.
(iv) ஒவ்வொரு தீர்வியும் தனக்கென்று இடைத் தேக்கத்தை (cache) பெற்றிருக்கிறது.
(v) அதில் ஐபி முகவரி போன்ற தகவல்கள் கண்டறியப்பட்டால் அந்த தகவல்கள் மீட்டெடுக்கப்படும். இல்லையெனில் வினவல் அடுத்த பெயர்ச்சேவையகத்திற்கு (Domain NameServer) அதாவது, TLD (உயர்நிலைகளம்) க்கு அனுப்பப்படுகிறது. TLD அந்த வினவலை மதிப்பாய்வு செய்து குறிப்பிட்ட களத்துடன் தொடர்புடைய பெயர் சேவையகங்களுக்கு வினவலை அனுப்புகிறது.
(vi) IP முகவரி கிடைக்கும்வரை அடுத்தடுத்த பெயர் சேவையகங்களுக்கு வினவல் அனுப்பப்படுகிறது.
(vii) இறுதியில் IP முகவரி கண்டறியப்பட்டு அதற்கான பதிவுகள் தீர்விக்கு (Resolver) அனுப்பப்படுகிறது.
(viii) பின்னர் தீர்வி இந்த பதிவுகளை கணினி உலாவிக்கு (Browser) வழங்குகிறது.
(ix) இப்பொழுது, கண்டறியப்பட்ட IP முகவரிக்கான வலைப்பக்கங்களை பயனரால் பார்க்க முடியும்.
7.
களப்பெயர் வெளி:
1. களப்பெயர்களை ஒரு படிநிலை மற்றும் தருக்க மர அமைப்பில் கொண்டுள்ள ஒரு பெயரிடும் அமைப்பு.
2. படிநிலை பெயர்வெளியை அடைய களப் பெயர்வெளி வடிவமைப்பில் குறிக்கப்படுகிறது.
3. இதில் பெயர்கள் தலைகீழ் மர வடிவமைப்பில் குறிக்கப்படுகிறது.
4. இதன் வேர் உறுப்பு மேலிருக்கும் வகையில் அமைந்திருக்கும்.
5. இந்த மர அமைப்பு, மட்டங்கள் 0 முதல் 127 வரை மொத்தம் 128 மட்டங்களைக் கொண்டிருக்கும்.
6. மேற்காண் படம் களப்பெயர்வெளியை குறிக்கிறது. இங்கு வேர் உறுப்பு மிக உயர்ந்த மட்டத்தில் அதாவது மட்டம் 0 வில் உள்ளது.
7. வேர் உறுப்பு எப்போதும் NULL சரத்தைக் குறிக்கிறது.
8. வேர் உறுப்புக்கு அடுத்த மட்டத்தில் முனைகள் (வேர் உறுப்புகளின் குழந்தைகள்) உள்ளன.
9. மர அமைப்பில் ஒவ்வொரு முனையும் ஒரு சிட்டை/ அடையாளம் மற்றும் களப் பெயரைக் கொண்டிருக்கும்.
8.
பெயர் சேவையகம்:
(i) பெயர் சேவையகம் என்பது களப்பெயர் வெளியின் மிக முக்கிய அங்கமாகும்.
(ii) இது களப்பெயரை ஐபி முகவரியாக மாற்றுகிறது.
(iii) உலகளாவிய பயன்பாட்டிற்காக அதிக எண்ணிக்கையிலான களப்பெயர்களை தேக்கி வைக்க வேண்டிய தேவை இருப்பதால் பல சேவையகங்கள் படிநிலை முறையில் இணைக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன.
பெயர் சேவையகங்களின் வகைகள்:
முழு களப்பெயர் முறைமையையும் கட்டுப்படுத்துவதற்கு மூன்று வகையான பெயர் சேவையகங்கள் உள்ளன.
(i) மூலப் பெயர் சேவையகம் (Root Nameserver) - இது முழு DNS மர அமைப்பை கொண்டிருக்கும் (Top level server) ஆகும். இது ICANN என்ற அமைப்பின் மூலம் பராமரிக்கப்படுகிறது. இதில் மொத்தம் 13 சேவையகங்கள் உள்ளன.
(ii) முதன்மை பெயர் சேவையகம் (Primary/ Nameserver) - இது மண்டல வளப் பதிவுகளைக் (Zone resource records) . இந்த பதிவுகள் களப்பெயர் உரிமையாளர்களால் புதுப்பிக்கப்படுகிறது.
(iii) இரண்டாம்நிலை பெயர் சேவையகம் (Secondary Nameserver) - இந்த சேவையகம் புதுப்பிக்கப்படுவதில்லை. ஆனால் முதன்மை சேவையக கோப்புகளை நகலெடுக்கிறது. இது வினவல்களைப் பகிர்வதன் மூலம் முதன்மைச் சேவையகத்தின் பணிச்சுமையை குறைக்கிறது.
9.
IP (Internet Protocol) முகவரி என்பது வலையமைப்பில் உள்ள ஒரு கணினியைத் தனிப்பட்ட முறையில் அடையாளம் காண உதவும் ஒரு தருக்க முகவரி ஆகும்.
1. ஒரு வலையமைப்பில் உள்ள ஒரு கணினியைக் கண்டறிய IP முகவரி பயன்படுத்தப்படுகிறது.
2. வலையமைப்பில் பயன்படுத்தப்படும் கணினிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அதிக எண்ணிக்கையிலான முகவரிகள் தேவைப்படுகின்றன.
3. இது இரண்டு வகையான முகவரி முறைகளுக்கு வழிவகுத்து உள்ளது.
i. IPv4
ii. IPv6
IPv4 முகவரி:
(i) IPv4 முகவரி என்பது வலையமைப்பில் உள்ள ஒரு கணினிக்கு வழங்கப்படும் 32 பிட் தனித்த முகவரி ஆகும்.
(ii) இரண்டு கணினிகளுக்கு ஒரே IP முகவரி இருக்க முடியாது.
(iii) ஒரு வலையமைப்பில் P இணைப்புகள் இருந்தால், அங்கே P முகவரிகளும் இருக்க வேண்டும்.
(iv) முகவரி வெளி (Address space) என்பது நெறிமுறையால் (IP) உருவாக்க முடிகின்ற மொத்த விலை முகவரிகளின் எண்ணிக்கையைக் குறிக்கும்.
(v) இது நெறிமுறை பயன்படுத்துகின்ற பிட்டுகளின் எண்ணிக்கையைப் பொருத்தது.
(vi) ஒரு நெறிமுறையானது n பிட்டுகளைப் பயன்படுத்தினால் அந்த நெறிமுறையின் முகவரி வெளியானது 2n முகவரிகளை கொண்டிருக்க முடியும்.
(vii) எனவே IPv4 வகையில் 232 முகவரிகளை உருவாக்கலாம்.
(viii) இந்த IP முகவரிகளை குறிப்பதற்கு இரண்டு முறைகள் உள்ளன.
(1) இரு நிலை குறியீடு (Binary Notation)
(2) புள்ளி -தசம குறியீடு (Dotted Decimal Notation)
(ix) இரு நிலை குறியீட்டு முறையில் முகவரியானது 32 பிட் இரு நிலை எண்ணாகும்.
(x). புள்ளி -தசம குறியீட்டில் புள்ளிகளால் (.) பிரிக்கப்பட்ட தசம வடிவத்தில் முகவரி எழுதப்படுகிறது.
எ.கா: 128.143.137.144
IPv6 முகவரி:
(i) IPv6 முகவரி என்பது வலையமைப்பில் உள்ள ஒரு கணினிக்கு வழங்கப்படும் 128 பிட் தனிப்பட்ட முகவரி ஆகும்.
(ii) இந்த முறையில் 2128 முகவரிகளை உருவாக்க முடியும்.
(iii) இந்த 128 பிட்டுகள் எட்டு 16 பிட் தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
(iv) ஒவ்வொரு தொகுதியும் நான்கு இலக்க பதினறும நிலை எண்களாக மாற்றப்பட்டு முக்காற்புள்ளியால் பிரிக்கப்பட்டுள்ளது.
எ.கா: 2001: 0000: 32313: DFE1: 0063: 0000 :0000:FEFB
10.
களப்பெயர் முறைமையில் 4 முக்கிய கூறுகள் உள்ளன. அவை
1. பெயர்வெளி
2. பெயர் சேவையகம்
3. மண்டலம்
4. தீர்வி
1. பெயர்வெளி: களப்பெயர்கள் மிகவும் தனித்துவமானவையாகவும் மற்றும் பொருத்தமானவையாகவும் இருக்க வேண்டும். பெயர்வெளி இரண்டு வழிகளில் ஒருங்கமைக்கப்படலாம்.
i. கிடைப்பெயர்வெளி
ii. படிநிலை பெயர்வெளி
i. கிடைப்பெயர்வெளி : ஒரு IP முகவரிக்கு ஒரு பெயர் ஒதுக்கப்படுகிறது.
ii. படிநிலை பெயர்வெளி :
1. பெயர் பல பகுதிகளில் ஆனது. இதனை அடைய களப் பெயர்வெளி வடிவமைக்கப்பட்டது.
2. களப் பெயர்வெளி என்பது உயர் மட்டத்தில் மூல உறுப்பை கொண்ட ஒரு தலை கீழ் மர அமைப்பாகும். இந்த மர அமைப்பு மட்டங்கள் 0 முதல் 127 வரை மொத்தம் 128 மட்டங்களைக் கொண்டிருக்கும்.
3. சிட்டை என்பது ஒரு சரம், இது அதிகபட்ச 63 எழுத்துக்களை கொண்டிருக்கலாம். ஒரு மட்டத்தில் உள்ள ஒவ்வொரு முனையும் தனிப்பட்ட சிட்டைகளைக் கொண்டிருக்க வேண்டும்.
4. களப்பெயர் புள்ளியால் (.) பிரிக்கப்பட்ட சிட்டைகளின் வரிசையாகும். களப்பெயர் எப்போதும் இலை முனையிலிருந்து வேர் முனைவரை படிக்கப்படுகிறது. வேர் முனை எப்போதும் சரத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. எனவே அனைத்து டொமைன் பெயரும் புள்ளியில் முடிவடையும்.
5. களப்பெயர் வெளி மர அமைப்பில் களங்களை துணை களங்களாக பிரிக்கலாம்.
2. பெயர் சேவையகள்: ஒரு கணினியில் இயக்கப்படும் நிரல்கள் மற்றும் அனைத்து மண்டலத் தரவையும் சேமிக்கின்றன. அவைகளில் வினவப்படும் போது இதனை நுகர்வுகளுக்கு வழங்குகிறது.
3. மண்டலம்: சேவையகம் அணுகக் கூடிய தொடர்ச்சியான பகுதியாகும். ஒரு மண்டலத்தில் ஒரே ஒரு களம் இருந்தால், அங்கு களமும், மண்டலமும் ஒன்றே.
4. தீர்வி: தீர்வி ( Resolver) என்பது ஒரு களப்பெயரை ஐபி முகவரியாக மொழிபெயர்க்கும் பணியை துவக்கும் நிரலாகும். தீர்வி புரவலன் கணினியிலேயே சேமிக்கப்பட்டு இருப்பதால், தீர்விக்கும் பயனர் நிரலுக்கும் இடையேயான தொடர்பை உருவாக்க எந்த நெறிமுறையும் அவசியமில்லை. ஒரு கிளையண்ட் /சர்வர் பயன்பாடு, இது களப் பெயர்களைத் தீர்க்கும் செயல்முறையைத் தொடங்குகிறது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards