12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Maths Applications of Matrices and Determinants Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 12/09/2019
மின்னணு தரவு பரிமாற்றம்
12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
EDIFACT பதிப்புகள் _______ என்றும் அழைக்கப்படுகிறது.
செய்தி வகைகள்
துணை தொகுதிகள்
கோப்பகங்கள்
கோப்புறைகள்
2.
EDIFACT விரிவாக்கம் _______.
EDI for Admissible Commercial Transport
EDI for Advisory Committee and Transport
EDI for Administration, Commerce and Transport
EDI for Admissible Commerce and Trade
3.
EDI அடிப்படை நியமங்கள் _______.
தரவுத் தரநிலை
நெறிமுறைகள்
(அ) மற்றும் (ஆ)
(அ) மற்றும் (ஆ) இல்லை
4.
5.
EDI விரிவாக்கம் _____.
Electronic Details Information
Electronic Data Information
Electronic Data Interchange
Electronic Details Interchange
6.
EDIFACT கோப்பகங்கள் என்றால் என்ன?
7.
EDI யின் நான்கு முக்கிய கூறுகள் எவை?
8.
EDI மூலம் பரிமாற்றம் செய்யப்படும் சில வகை வணிக ஆவணங்களை பட்டியலிடுக.
9.
EDI பிரிப்பான்கள் பற்றி எழுதுக.
10.
UN/EDIFACT பற்றி குறிப்பு வரைக.
11.
EDI அடுக்குகளைப் பட்டியலிடுக.
12.
EDIFACT அமைப்பு பற்றி எழுதுக.
13.
பல்வேறு வகையான EDI வகைகளை விளக்குக.
1.
(c)
கோப்பகங்கள்
2.
(c)
EDI for Administration, Commerce and Transport
3.
(c)
(அ) மற்றும் (ஆ)
4.
(a)
5.
(c)
Electronic Data Interchange
6.
1. EDIFACT பதிப்புகள் கோப்பகம் என்றும் அழைக்கப்படுகின்றன.
2. EDIFACT கோப்பகத்தில் புதிய செய்திகளை சேர்க்க அல்லது புதுப்பிக்க ஏப்ரல் 1 ஆம் தேதி மற்றும் அக்டோபர் 1 ஆம் தேதி என வருடத்திற்கு இருமுறை திருத்தி அமைக்கப்படும்.
3. EDIFACT கோப்பகங்கள் D. 18B போன்ற பெயர்களைக் கொண்டுள்ளன.
7.
1. Standard Document Format
2. Translator and Mapper
3. Communication Software
4. Communication Network
8.
(i) டெலிவரி குறிப்புகள் (Delivery Notes)
(ii) விலைப்பட்டியல்கள் (Invoices)
(iii) கொள்முதல் ஆணைகள் (Purchase Orders)
(iv) செயல்பாட்டு ஒப்புகைகள் (Functional Acknowledgment)
9.
பின்வரும் நிறுத்தற்குறிகள் தரவு பிரிப்பான்களாக பயன்படுத்தப்படுகின்றன.
எ.கா: UNA :+.?'
| நிறுத்தற்குறி | பயன்கள் |
| உடைமைக்குறி ' | பிரிவு முற்று |
| கூட்டல் குறி + | பிரிவு குறிச்சொல் மற்றும் தரவு உறுப்பு பிரிப்பான் |
| முக்காற் புள்ளி : | தரவுக் கூறு பிரிப்பான் |
| கேள்வி குறி ? | விடுவிப்பு குறி |
| முற்றுப் புள்ளி . | தசமப் புள்ளி |
10.
1. United Nations / Electronic Data Interchange for Administration, Commerce and Transport (UN/EDIFACT) ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு சர்வதேச EDI தரநிலை ஆகும்.
2. 1987ல் சர்வதேச UN/EDIFACT தரப்படுத்தலுக்கான அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டது.
3. இது வணிக பரிவர்த்தனைகளுக்கு சர்வதேச தரத்திலான பல்-தொழில்துறை மின்னணு தரவு பரிமாற்ற தரப்பாடுகள் ஆகும்.
4. இதில் சர்வதேச அளவில் ஒப்புக்கொண்ட தரப்பாடுகள், அட்டவணைகள் மற்றும் தற்சார்பு கணினி அமைப்புகளுக்கிடையே உள்ள கட்டமைக்கப்பட்ட தரவுகளின் மின்னணு பரிமாற்றத்திற்கான வழிகாட்டுதல்கள் ஆகியவை அடங்கும்.
11.
மின்னணு தரவு பரிமாற்றக் கட்டமைப்பு நான்கு வெவ்வேறு அடுக்குகளைக் குறிப்பிடுகிறது
1. பயன்பாட்டு அடுக்கு
2. தரப்பாடுகள் அடுக்கு
3. இடமாற்று அடுக்கு
4. பரும அடுக்கு
12.
i. EDIFACT ஒரு படிநிலை அமைப்பாகும். EDIFACTன் மேல்நிலை அமைப்பு பரிமாற்றங்கள் என்று குறிப்பிடப்படுகிறது.
ii. பரிமாற்றங்களில் செயல்பாட்டு குழுக்கள் பல பிரிவுகளை உள்ளடக்கிய தகவல்களைக் கொண்டுள்ளன.
iii. பிரிவுகள் கலப்பு கூறுகளால் ஆனது.
iv. இறுதிநிலை அமைப்பு ஒரு தரவு கூறு.
1. EDI பரிமாற்றம் (Interchange):
i. பரிமாற்றங்கள் என்றும் உறை எனவும் அழைக்கப்படுகிறது.
ii. EDIFACT கட்டமைப்பின் உயர்மட்ட நிலை பரிமாற்றம் ஆகும்.
iii. ஒரு பரிமாற்றம் பல கூடுதல் தகவல் கூறுகளை கொண்டிருக்கக் கூடும்.
iv. UNBல் தொடங்கி UNZ உடன் முடிவடைகிறது.
2. EDIFACT தகவல் கூறு (Message):
i. EDIFACTன் அடிப்படை தரநிலை கருத்து United Nations Standard Message-UNSM எனப்படும் சீரான தகவல் கூறுகள் ஆகும்.
ii. துணைத்தொகுப்புகளில் துறையைப் பொறுத்து தகவல் வகைகளின் பண்புகளை ஆழமாகக் குறிப்பிடப்படலாம்.
iii. ஒவ்வொரு EDIFACT தகவலும் தனித்த 6 பெரிய ஆங்கில எழுத்துக்களால் குறிப்பிடப்படுகிறது.
iv. ஒரு EDIFACT தகவல் கூறு UNHல் தொடங்கி UNTல் முடிவடையும்.
v. EDIFACT தகவல் கூறுகளை சேவைத் தகவல்கள் மற்றும் தரவு பரிமாற்றம் என பிரிக்கலாம்.
சேவைத் தகவல்கள்:
ஒரு தகவலை உறுதிப்படுத்த நிராகரிக்க, சேவைத் தகவல்கள் அனுப்பப்படும்.
எ.கா.:
1. CONTROL:
சொற்றொடரியல் சரிபார்ப்பு மற்றும் தகவலின் வருகையை உறுதிப்படுத்தல்.
2. APERAK:
தொழில்நுட்ப பிழை செய்திகள் மற்றும் ஒப்புகை.
பரிமாற்றத் தரவு:
சேவைத் தகவல் தவிர பிற தகவல் கூறுகள்.
எ.கா.:
1. CREMUL:
Multiple Credit Advice
2. DELFOR:
விநியோகத்திற்கு முந்தைய முன்னறிவிப்பு
3. IFTMBC:
முன்பதிவு உறுதிப்படுத்துதல்.
3. EDIFACT பிரிவு (Segment):
i. தகவல் கூறின் பகுதியாகும்.
ii. பிரிவுகள் ஒன்று அல்லது பல தொடர்புடைய பயனர் தரவு உறுப்புகளைக் கொண்டிருக்கலாம்.
4. பிரிவு அட்டவணை (Segment Tables):
i. பிரிவு அட்டவணை தகவல் கூறுகளின் பட்டியல் ஆகும்.
ii. இதில் தகவல் கூறு பெயர், அதன் விளக்கம் Position, Tags, Tag Names, Requirements designator மற்றும் Repetition போன்றவை பட்டியலிடப்பட்டிருக்கும்.
iii. ஒரு தகவல் கூறு கட்டாயமா (M) (அ) (C) நிபந்தனையா என்பதை குறிக்கும்.
எ.கா: C10 என்பது இந்த பிரிவு நிபந்தனையானது என்றும் 0 முதல் 10 இடையே மடக்கிற்கான ஒரு எண்ணை குறிப்பிடலாம் என்பதையும் உணர்த்துகிறது.
5. EDIFACT கூறுகள் (Elements):
i. EDIFACT கூறுகள் என்பது தரவுகளின் துணுக்கு ஆகும்.
ii. இந்த தரவு உறுப்புகள் எளிமையாகவோ (அ) கலப்பு நிலையில் இருக்கலாம்.
எ.கா: DTM + 11:200 606 200 730:203'.
13.
தகவல் தொடர்பு இணைப்புகள் மற்றும் பரிமாற்ற ஊடகத்தின் அடிப்படையில் EDI கீழ்கண்டவாறு வகைப்படுத்தலாம்.
1. நேரடி EDI
2. VAN வழியாக EDI
3. FTP / VPN, SFTP, FTPS வழியாக EDI
4. இணையம் வழி EDI
5. கைப்பேசி வழி EDI
1. நேரடி EDI:
i. இது முனையம்-முனையம் EDI என்றும் அழைக்கப்படுகிறது.
ii. பல்வேறு வணிக கூட்டாளிகளுக்கும் இடையே நேரடித் தொடர்பை ஏற்படுத்துகிறது.
iii. தொடர் வணிக பரிவர்த்தனைகளுக்கும் பெரிய நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
2. VAN வழியாக EDI:
i. மதிப்புக் கூட்டப்பட்ட வலையமைப்பு வழியாக நடைபெறும் EDI ஆகும்.
ii. இங்கு EDI ஆவணங்கள் மூன்றாம் தரப்பு வலை சேவை வழங்குநர்களின் ஆதரவுடன் பரிமாற்றம் செய்யப்படுகின்றன.
iii. பல நிறுவனங்கள் வலையமைப்பு தொழில்நுட்பங்களின் புதுப்பித்தல் போன்ற சிக்கல்களைத் தவிர்க்க இந்த வகையை விரும்புகின்றன.
3. FTP / VPN, SFTP, FTPS வழியாக EDI:
FTP/VPN, SFTP மற்றும் FTPS போன்ற நெறிமுறைகளை பயன்படுத்தி இணையம் அல்லது அகஇணையம் அடிப்படையில் EDI ஆவணங்களை பரிமாற்றம் செய்வது பொதுவாக FTP/VPN, SFTP, FTPS வழியாக EDI என அழைக்கப்படுகிறது.
4. இணையம் வழி EDI:
(i) இணைய அடிப்படையிலான EDI, இணையம் வழியாக ஒரு உலாவியை பயன்படுத்தி நடைபெறுகிறது.
(ii) இங்கு நிறுவனங்கள் ஒரு உலாவியைப் பயன்படுத்தி தரவை தங்கள் வர்த்தகக் கூட்டாளிகளுக்கு பரிமாற்றம் செய்கின்றன.
(iii) சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஏற்ற எளிமையையும் மற்றும் வசதியையும் கொண்டது இணைய EDI ஆகும்.
5. கைப்பேசி வழி EDI:
திறன்பேசி அல்லது பிற கையடக்க சாதனங்களை EDI ஆவணங்களை பரிமாற்றம் செய்ய பயன்படுத்தப்படும் போது அது கைப்பேசி வழி EDI எனப்படுகிறது. கைப்பேசி வழி EDI பயன்பாடுகள், EDI பரிமாற்றங்களின் வேகத்தை கணிசமாக அதிகரிக்கிறது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards